Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்17Points87986Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்14Points33600Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்3Points20008Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்3Points31947Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/17/25 in all areas
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points2 points
- மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
பட மூலாதாரம், MANSI THAPLIYAL படக்குறிப்பு, இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்திகள் 17 ஆகஸ்ட் 2025, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை உலுக்கும் கோடைகாலத்தில், மும்பையைச் சேர்ந்த முன்னணி நீரிழிவு நிபுணர் ராகுல் பாக்ஸியிடம் நோயாளிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி, "மாம்பழம் சாப்பிடலாமா?" என்பது தான். "மாம்பழம் அதன் இனிப்பு சுவையாலும், பலவித வகைகளாலும் இந்தியாவின் கோடைகாலத்தில் முக்கியமான பழமாக இருக்கிறது. மக்கள் ஏன் அதை விரும்பிச் சாப்பிட விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் ," என்கிறார் ராகுல் பாக்ஸி. ஆனால், இந்த எளிய கேள்வி பல தவறான எண்ணங்களை உள்ளடக்கியது. சிலர் மாம்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். மறுபுறம், சிலர் "அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகிவிடும்" என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டு எண்ணங்களுக்கு இடையிலும் வேறொரு உண்மை உள்ளது. அதேபோல் இந்தக் குழப்பமும் கோடைகாலத்துடன் முடிவதில்லை. "மாம்பழப் பருவம் முடிந்த பிறகு, பல நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில், இதற்குக் காரணம் மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டதுதான்," என்கிறார் மருத்துவர் ராகுல் பாக்ஸி. இந்தத் தொடர்ச்சியான குழப்பம், நீரிழிவு நோயாளிகளை "பழங்களின் ராஜா" என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது. ஆனால், புதிய ஆராய்ச்சிகள் மாம்பழம் தவறான பழமல்ல என்று கூறுகின்றன. இந்தியாவில் நடந்த இரண்டு புதிய மருத்துவ ஆய்வுகள், பழைய உணவு நம்பிக்கைகளை மாற்றியுள்ளன. ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக, குறைவாகவும் கட்டுப்பாட்டுடனும் மாம்பழம் சாப்பிடுவது, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகின்றன. கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும்போது டைப்-1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது, அதே நேரத்தில் டைப்-2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் எதிர்க்கிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) கூற்றின்படி, உலகளவில் 90% க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு டைப்- 2 நீரிழிவு நோய் உள்ளது. இது உலகில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளில் எட்டாவது முக்கிய காரணமாக உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் இது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிக உடல் எடை, வயது, இனம் மற்றும் குடும்பத்தில் நீரிழிவு வரலாறு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவதன்படி, இந்தியாவில் சுமார் 7.7 கோடி பேருக்கு டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது. கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், HINDUSTAN TIMES VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் தொடங்கப்பட்டு, அதன் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் இத்தகு சவால்களுக்கு மத்தியிலும், புதிய ஆய்வுகள் மாம்பழ பிரியர்களுக்கு ஆச்சரியமான நம்பிக்கையை அளிக்கின்றன. கிளினிகல் நியூட்ரிஷன் என்ற ஐரோப்பிய இதழில் இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று விரைவில் வெளியாகிறது. 95 பேரை உள்ளடக்கிய அந்த ஆய்வில் இந்தியாவின் பிரபலமான மாம்பழ வகைகளான சஃபேடா, டாஷேரி, மற்றும் லாங்ரா ஆகியவை வெள்ளை ரொட்டியை விட குறைந்த அல்லது அதனை ஒத்த ரத்த சர்க்கரை உயர்வை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. (ரத்த சர்க்கரை உயர்வு என்பது, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக, எந்த அளவில் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.) டைப்- 2 நீரிழிவு நோயாளிகளையும், நீரிழிவு இல்லாதவர்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்த போது, நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இந்தக் குறைவான ஏற்ற இறக்கங்கள், நீண்ட காலத்திற்கு உடலுக்கு நன்மை தரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "மாம்பழம் அனைவராலும் விரும்பப்படும் பழம், ஆனால் இது ரத்த சர்க்கரையையும் உடல் எடையையும் அதிகரிக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்," என்கிறார் இரண்டு ஆய்வுகளிலும் பிரதானமாக அங்கம் வகித்த மருத்துவர் சுகந்தா கெஹர். "பரிந்துரைக்கப்பட்ட உணவு முறைகளுக்குள், மாம்பழம் சாப்பிடுவது ரத்த சர்க்கரைக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக நன்மையைத் தரலாம் என்று இந்த ஆய்வுகள் காட்டுகின்றன," என்று அவர் கூறுகிறார். டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் சி-டிஓசி மருத்துவமனையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வு, இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் என்ற இதழில் வெளியாகியுள்ளது. டைப்- 2 நீரிழிவு உள்ள 35 பேர் , தங்கள் காலை உணவில் ரொட்டிக்குப் பதிலாக 250 கிராம் மாம்பழம் சாப்பிட்டனர். இதன் விளைவாக, சாப்பிடுவதற்கு முன்பான அவர்களின் ரத்த சர்க்கரை, HbA1c (சராசரி இரத்த சர்க்கரை அளவைக் காட்டும் பரிசோதனை), இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை, இடுப்பு அளவு, மற்றும் HDL (நல்ல) கொழுப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். இவை நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. "காலை உணவில் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக சிறிய அளவு மாம்பழம் சாப்பிடுவதன் நன்மைகளை முதல் முறையாக இரண்டு விரிவான ஆய்வுகளில் நிரூபித்தோம். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தவறான கருத்துகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தோம்," என்கிறார் ஆய்வின் மூத்த ஆசிரியரும் தலைவருமான பேராசிரியர் அனூப் மிஸ்ரா. "ஆனால், மிதமாக சாப்பிடுவதும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் முக்கியம். மாறாக, எவ்வளவு வேண்டுமானாலும் மாம்பழம் சாப்பிடலாம் என்று அர்த்தம் அல்ல" என்று அவர் எச்சரிக்கிறார். பட மூலாதாரம், BLOOMBERG VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் 77 மில்லியன் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாம்பழத்தை மிதமாக சாப்பிடுவது என்றால் என்ன என்று பேராசிரியர் அனூப் மிஸ்ராவிடம் கேட்டேன். "ஒரு நாளைக்கு உங்கள் கலோரி எல்லை 1,600 ஆக இருந்தால், மாம்பழத்தின் கலோரிகள் அதற்குள் அடங்க வேண்டும், கூடுதலாக இருக்கக் கூடாது. 250 கிராம் மாம்பழம், அதாவது ஒரு சிறிய பழம் சுமார் 180 கலோரிகளைக் கொண்டது. ஆய்வில் கூறியபடி, அதேபோன்ற முடிவுகளைப் பெற, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக மாம்பழத்தை உண்ண வேண்டும்," என்று அவர் என்னிடம் விளக்கினார். மருத்துவர் பாக்ஸியும் தனது நோயாளிகளுக்கும் இதே போன்ற அறிவுரையைச் சொல்வதாகக் கூறுகிறார். "ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், என் நோயாளிகளை குறைந்த அளவு மாம்பழம் (அதாவது 15 கிராம் கார்போஹைட்ரேட் தரும் அளவு) , நாளொன்றுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பாதி பழத்தை சாப்பிட ஊக்குவிக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மாம்பழத்தை இனிப்பாக அல்லாமல், உணவுக்கு இடையில் சாப்பிட வேண்டும். புரதம் அல்லது நார்ச்சத்து மிக்க உணவுகளுடன், அதனை சேர்த்து சாப்பிடுங்கள். மாம்பழத்தை ரொட்டி, சாறு அல்லது மில்க் ஷேக் போன்ற சர்க்கரை உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதைத் தவிருங்கள் என்று மருத்துவர் பாக்ஸி தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தியர்களுடைய வாழ்விலும் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. இது கலாசார, சமூக, மற்றும் ராஜ தந்திர ரீதியில் முக்கியத்துவம் கொண்ட ஒரு பழம். "மாம்பழ ராஜ தந்திரம்" என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமான சொல். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழப் பெட்டிகள் அரசியல் ஒப்பந்தங்களை எளிதாக்கலாம், கூட்டணிகளை வலுப்படுத்தலாம், அல்லது பதற்றமான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக்கலாம். பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவின் போது, முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென், அப்போதைய அமெரிக்க வேளாண் செயலாளர் மைக் ஜோஹன்ஸுக்கு இந்திய மாம்பழங்களின் கூடையை வழங்குகிறார். இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு , இந்தப் பழத்தின் கலாசார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டாடப்படுகிறது. இந்தப் பழம் விரும்பப்படும் உணவாகவும், சக்தி வாய்ந்த சமூக மதிப்பைக் காட்டுவதாகவும் உள்ளது. "பெரும்பாலான இந்தியர்களுக்கு மாம்பழத்தின் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது. தங்கள் ஊரின் மாம்பழம் தான் சிறந்தது என்று பலர் வாதிடுவார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் சமையல் நிபுணருமான புஷ்பேஷ் பந்த். "நல்ல மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. அவை நகைகளைப் போன்ற அழகும் மதிப்பும் கொண்டவை. "சிறந்த மாம்பழங்கள், அதிக பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்களிடம் சென்று சேர்கின்றன" என்று Mangifera indica: A Biography of the Mango என்ற புத்தகத்தில், இந்தப் பழத்தையும் அதன் ரசிகர்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார் சோபன் ஜோஷி. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் மாம்பழங்கள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்று ஜோஷி குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு வகைகளான லாங்ரா, டாஷேரி, சௌசா, மற்றும் ஹிம்சாகர் ஆகியவை மிகவும் இனிப்பாக உள்ளன, அதே நேரத்தில் தெற்கு வகைகள் மென்மையான இனிப்பு-புளிப்பு சுவையைத் தருகின்றன. மேற்கு இந்தியாவின் அல்போன்சா மாம்பழம், சர்க்கரை மற்றும் அமிலத்தின் தனித்துவமான சமநிலையால் தனித்துவமான சுவையைப் பெறுகிறது. இந்தியர்களின் வாழ்க்கையில் மாம்பழம் மிகவும் முக்கியமானது. ஒரு ஆண்டின் தொடக்கமே பல இடங்களில் மாம்பழம் பூக்கும் காலத்துடன் ஆரம்பிக்கிறது. கவிஞர் காலிப் மாம்பழத்தை "மூடிய தேன் குவளை" என்று அழைத்தார். அதன் வசீகரத்தைக் கொண்டாடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. மாம்பழம் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது, மறு பக்கம் அடையாளமாக விளங்குகிறது. எப்போதும் மக்களை மகிழ்விக்கும் பழம், தற்போது ஆச்சர்யமளிக்கும் விதமாக அறிவியலின் ஆதரவையும் பெற்றுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70x9x80pd2o1 point- பலஸ்தீனம்: அங்கீகரித்தலின் அரசியல்
அங்கீகரித்தலின் அரசியல் sudumanal பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரித்தல் என்பதே ஓர் வரலாற்றுக் கேலிதான் என்றபோதும், அதை பேசவேண்டியிருக்கிறதுதான் வரலாற்று அவலம். இஸ்ரேல் என்ற நாடு போலன்றி பலஸ்தீனம் என்ற நாடு 1948 வரை வரைபடத்தில் இருந்த ஓர் நாடு. அதை அங்கீகரிக்கிறோம் என சொல்ல வருமளவுக்கு அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் யார். பலஸ்தீனத்தை காலனியாக்கி வைத்திருந்த பிரித்தானியர்கள்தான். 1947 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதிகார நிழலில், சியோனிஸ்டுகளின் தொடர் முயற்சியில், இஸ்ரேல் என்ற நாடு முளைத்தெழும்பியது. உலகத்திலேயே இன்றுவரை தனக்கான நிரந்தர எல்லையை வகுத்துக் கொள்ளாத ஒரேயொரு நாடு இஸ்ரேல்தான். அதை ஓர் அரசாக அங்கீகரித்த உலகம், ஏற்கனவே அரசாக இருந்த பலஸ்தீனத்தை அரசற்றவர்களாக ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. அந்தளவுக்கு இஸ்ரேலிய சியோனிச ஆட்சியும் அமெரிக்காவிலுள்ள சியோனிச லொபியும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக, அதேநேரம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்ளையை தமக்கேற்ப தகவமைக்குமளவுக்கு செயற்பட்டு வந்தன. இந்த சியோனிச அரசு பலஸ்தீன இனவொதுக்கலையும் மண் ஆக்கிரமிப்பையும் குடியேற்றத்தையும் இனவழிப்பையும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாகப் பேணி இன்று இனப்படுகொலை என்ற அளவுக்கு உயர்த்தி வெறியாட்டம் ஆடுகிறது. வரலாறு இவ்வாறாக நகர்ந்துவர ஐரோப்பியர்களும் அமெரிக்காவும் அவர்தம் பச்சை எடுபிடிகளும் ஒக்ரோபர் 7 கமாஸின் தாக்குதலை பூதாகாரமாக்கி படம் காட்டினர். இஸ்ரேல் என்ற நாடு தோன்றி 1948 இல் இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கெதிராக அவர்கள் ஒருபோதுமே பேசியது கிடையாது. அந்த சியோனிசப் பயங்கரவாத செயற்பாட்டின்போது ஏழு இலட்சம் பலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டார்கள். 15’000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களை 530 கிராமங்களிலிருந்து விரட்டியடித்து, அரக்கிப் பெற்ற நிலத்தில் இஸ்ரேல் அகலக் கால்வைத்தது. 78 வீதமான பலஸ்தீன நிலப்பரப்பை கைப்பற்றி அமைந்ததுதான் இன்றைய இஸ்ரேல் என்ற நாடு. மேற்குலகுக்கு இது பயங்கரவாதமாகத் தெரியவில்லை. அவர்களது காலனிய வரலாற்றுக்கு இது புதியதுமல்ல. விரட்டப்பட்ட பலஸ்தீனர்களுக்கு தம் பிரதேசத்தின் மீதான உரிமை குறித்து பேசாத மேற்குலகினர் ஹமாஸின் ஒக்ரோபர் தாக்குதலின்போது “இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது” என ஒருதலைப்பட்சமாக தத்துவம் பேசினர். இவர்கள் யார். இவர்கள்தான் இதுவரை பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்காமல் இருப்பவர்கள். இப்போ ஐரோப்பியத் தெருக்களில் காஸா படுகொலைக்கு எதிராகவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக நடக்கும் பிரமாண்டமானதும் உயிர்ப்பானதுமான ஆர்ப்பாட்டங்கள் தமது அரசியல் இருப்பை ஆட்டிவிடும் என்ற அச்சத்தில் “பலஸ்தீனத்தை அஙகீகரிக்கப் போகிறோம்” என பிரான்சும் ஜேர்மனியும் பிரித்தானியாவும் கடைசியாக அவுஸ்திரேலியாவும் கனடாவும் சொல்லவந்திருப்பது முக்கிய செய்தியாக இடம்பிடித்திருக்கிறது. 15 நவம்பர் 1988 அன்றைய பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத் அவர்கள் பலஸ்தீனத்தை இறைமையுள்ள ஓர் அரசாக பிரகடனப்படுத்தினார். அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலம் எனவும் அறிவித்தார். அதை அல்ஜீரிய நாடு முதலில் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் 82 நாடுகள் அங்கீகரித்தன. அதாவது 1988 நவம்பரிலிருந்து டிசம்பருக்குள் 83 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் இந்தியா, சீனா, ரசியா, துருக்கி, பாகிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளும் அடக்கம். தொடர்ந்து 2000 வது ஆண்டிற்குள் மேலும் 20 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் தென்னாபிரிக்கா, பிலிப்பைன், றுவண்டா, கென்யா, எத்தியோப்பியா என்பனவும் அடக்கம். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000 இன் பின் 2012 வரையில் மேலும் 30 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. அவை பெரும்பாலும் தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள் ஆகும். பிரேசில் ,வெனிசுவேலா, பெரு, ஆர்ஜன்ரீனா, சிலி போன்ற நாடுகளும் தாய்லாந்து, லெபனான், சிரியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் இதற்குள் அடங்குகின்றன. இத்தாலி இதுவரை கள்ள மௌனம் காக்கிற போதும்கூட, 2013 இல் ஐநாவில் அங்கம் வகிக்காத வத்திக்கான் பலஸ்தீனத்தை அங்கீகரித்தது. 2013 இலிருந்து இன்றுவரை மேலும் 10 நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இவ்வாறாக உலகின் 193 நாடுகளில் 143 நாடுகளும் வத்திக்கனும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது. 2014 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்தது. 2012 இல் ஐநா இல் 138 நாடுகள் பலஸ்தீனம் ஓர் உறுப்பு நாடாக வர வாக்களித்திருந்தபோதும், இன்றுவரை தொடர்ச்சியாக ‘வீட்டோ’ அதிகாரத்தை வைத்து அதை அமெரிக்கா இல்லாமலாக்கியபடிதான் வந்திருக்கிறது. 2012 இலிருந்து இன்றுவரை பலஸ்தீனம் ‘பார்வையாளர்’ நாடாகவே ஐநா இல் குந்தியிருக்கிறது. இதுவரை அங்கீகரிக்காத மிகுதி 50 நாடுகளில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மட்டுமல்ல, பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் உட்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. அப்படியிருக்க, பலஸ்தீன அரசை பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி நாடுகள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் ஐநா வில் அங்கீகரிக்கப் போவதாக முன்னோட்டமிட்டதை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஐநா பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விட்டால் பலஸ்தீனம் ஓர் அரசாக மிகப் பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்படும் என்பது உறுதி. அது பாதுகாப்புச் சபைக்குப் போகும்போது அது அமெரிக்காவினால் வீட்டோ கொண்டு அடித்து வீழ்த்தப்படும் என்பதும் தெரிந்த ஒன்றுதான். இது மக்ரோனுக்கும் தெரியும், இப்போ இந்தா அங்கீகரிக்கிறோம் என குரல்விடும் மேற்குலக நாடுகளுக்கும் தெரியும். இங்குதான் அரசியல் இருப்பை காப்பாற்ற வெகுண்டெழும் மக்களை சமாதானப்படுத்த செய்யும் நாடகமா இது என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. எது எப்படியோ இராஜதந்திர ரீதியில் இவர்களின் அறிவிப்பை சாதகப்படுத்திக் கொள்ளலாம், சந்தேகத்தோடு!. இந்தச் சந்தேகத்தை தீர்க்கவேண்டியது அவர்கள்தான். அவர்களது செயற்திறன்தான். அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை இதுவிடயத்தில் பயன்படுத்தாமலிருக்க செய்துகாட்டும் முயற்சிகள்தான் அந்த செயற்திறன் ஆகும். 1988 இல் தொடங்கிய பலஸ்தீன அரசுப் பிரகடனத்தை இன்றுவரை 143 நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வரையான அவர்களின் மௌனத்துக்கு காரணம்தான் என்ன. அதற்கான சுயவிளக்கம்தான் என்ன. சுயவிமர்சனம்தான் என்ன என்பதை அவர்கள் பேசட்டும். கேட்போம். இஸ்ரேல் என்ற அரசை ஏற்கனவே அங்கிகரித்ததால், “இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என சொன்ன இவர்கள், இப்போதாவது பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்கிறோம் என வரும்போது “பலஸ்தீனத்துக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என இதுவரை அறிவிக்க முடியாமல் இருப்பது ஏன்?. இங்குதான் அவர்கள் ஹமாஸிடம் வருகிறார்கள். “ஹமாஸ் ஆயுதத்தை கீழே வைத்துவிட வேண்டும். அவர்கள் அரசியலுக்குள் வரக்கூடாது” என்பன போன்ற நிபந்தனைகளை உருவாக்குகிறார்கள். இதற்குள் தெரிவது அவர்களின் சூழ்ச்சிதான். ஹமாஸ் அரசியல் அதிகாரம் பெறுவது பெறாதது என்பதெல்லாம் பலஸ்தீன மக்களின் தெரிவுக்கானவை. இவர்களது தெரிவுக்கானதல்ல. அதை உச்சரிக்க இவர்கள் யார். அது இஸ்ரேலின் குரல். அதை இவர்களும் ஒலிக்கிறார்கள். காஸாவிலும் மேற்குக் கரையிலும் முதலில் ஆயுதத்தை கீழே வைக்க வேண்டியது -தாக்கும் நிலையிலுள்ள- இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் சியோனிச குடியேற்றவாதிகளும்தான். பாதுகாப்பு நிலைக்குள் தள்ளப்பட்ட ஹமாஸ் அல்ல. ஹமாஸ் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போன்றதல்ல. சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல் புரிந்த அமைப்புமல்ல. ஹமாசுடன் உடன்படுவதா இல்லையா என்ற விடயம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்னால் எழும் கேள்வி அவர்களின் இருப்பை சாத்தியப்படுத்துவது எது என்பதே. அவர்கள்தான் இன்று நடைமுறையில் பலஸ்தீன அரசின் காஸா பகுதியை பிரதிநிதிப்படுத்தக் கூடிய, பாதுகாக்கும் உரிமையை செயற்படுத்தக்கூடிய சிறிய சக்தியாக இருக்கின்றனர். அவர்களிடம் வான்படை இல்லை. கடற்படை இல்லை. ஏன் இராணுவமும் இல்லை. வெறும் கெரில்லாக் குழு வடிவில் சுருங்கிப் போயிருப்பவர்கள் அவர்கள். அவர்களை வளர்ப்பது இஸ்ரேலிய அரச பயங்கரவாதம்தான். அப்படியிருக்க ஹமாஸை ஆயுத நீக்கம் செய்ய அல்லது அரசியல் நீக்கம் செய்யக் கோருவதானது, மக்கள் பக்கம் முகம் காட்டும்போது பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது போலவும், இஸ்ரேல் பக்கம் முகம் காட்டும்போது ஹமாஸை அங்கீகரிக்கவில்லை என்பதுபோலவும் நடத்தும் இரட்டை வேடம் ஆகும். ஹமாஸை அஙகீகரிக்கவில்லை என்பதன் மூலம் பலஸ்தீன அரசு உருவாவதை இல்லாமல் செய்து, அதற்கான பழியை ஹமாஸிடம் போடுவது சுலபமானது. இன்னொரு பக்கம் தமது மக்களை அவர்களது வீதிநிரம்பும் போராட்டங்களை காயடிக்கும் வேலையை இதன் மூலம் செய்யலாம் என அவர்கள் நம்புகிறார்கள். மேற்குலகம் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என நெத்தன்யாகுவின் வார்த்தைகளில் உச்சரிக்கிறார்கள். காஸா மக்கள் அல்லது முழு பலஸ்தீன மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என நமக்குத் தெரியாது. அது அவரவர் தெரிவாக, தவிர்க்க முடியாதவையாக அல்லது நியமங்களை வைத்து அளப்பவையாக அல்லது பிரச்சார உத்தி கொண்டவையாக இருக்கும். அரச பயங்கரவாதம் சட்டங்களால், ஆட்சியதிகார நிறுவனங்களால் இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அரச பயங்கரவாதத்தையோ எதிர்ப் பயங்கரவாதத்தையோ இயல்பாக்கம் செய்வது ஆபத்தானது. அதேநேரம் அவை நிகழ்த்தப்படுதலின் மீதான ஆதரவு, எதிர்ப்பு அல்லது இரண்டுக்கும் இடையிலான மூன்றாவது நிலைப்பாடு என்பது அவரவர் சார்ந்த கண்ணோட்டத்தில் வேறுபடவே செய்கிறது. யூத இன புத்திஜீவியான நோர்மன் பின்கல்ஸ்ரைன் அவர்கள் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என அழைப்பதை ஏற்கவில்லை. அது குறித்து அவர் கூறுவது இதுதான். “2006 இல் காஸாவிலும் மேற்குக் கரையிலும் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மை வெற்றியை ஈட்டி அதிகாரத்துக்கு வந்தனர். இவ்வாறு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இனை நிராகரித்து இஸ்ரேல் ‘முற்றுகையை’ செயற்படுத்தியது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. காஸாவுக்குள் வரும் உணவுப் பொருட்களின் அளவையும் நீரின் அளவையும் மருந்தின் அளவையும் மற்றும் எல்லா அத்தியாவசிய பொருட்களையும் இஸ்ரேல்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. (இன்றும் அதேதான் நீடிக்கிறது) காஸாவுக்குள் எவருமே உள்நுழைய முடியாது. அதேபோல் காஸாவிலிருந்து எவருமே வெளியே செல்ல முடியாது. இந்த 19 (2006-2025) வருடத்திலும் இளையோர்கள் இந்த 5×25 சதுர மைல் பரப்பளவுக்கு வெளியே தம் வாழ்வில் எதையும் கண்டதில்லை. முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் காஸாவை ஒரு “திறந்தவெளிச் சிறைச்சாலை” என வர்ணித்தார். இஸ்ரேலின் முன்னணி சமூகவியலாளர் Baruch Kimmerling ஹிப்ரூ மொழியில் (2003) எழுதிய “ஆரியல் ஷரோனின் பலஸ்தீனத்துக்கு எதிரான போர்” என்ற தனது நூலில் காஸாவை இதுவரை தோன்றியிராத மிகப் பெரும் “கொன்சன்றேசன் முகாம்” (கொ.மு) என வர்ணித்தார். அரைவாசிப் பேர் இந்த கொ.மு க்குள் பிறந்து குழந்தைகளாகி சிறுவர்களாகி இளையோர்களாகி வளர்ந்தவர்களாகினர். அவர்களது அனுபவங்கள் இந்த கொ.மு எல்லைக்குள்தான் இருந்தது. இந்த கொ.மு இல் பிறந்த அதே மனிதன் ஒக்ரோபர்-7 இல் அந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றதை, அதற்காக அவர்கள் என்னவிதமான தந்திரோபாயத்தை வழிமுறையை உபயோகித்தார்கள் என்பதை யார்தான் விமர்சிக்க முடியும்?. அப்படியொரு கொ.மு இனுள் நானும் பிறந்து 20 வருட வாழ்வை அங்கு வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என எனக்குத் தெரியாது” என்றார். இந்த யதார்த்தத்தை மறுத்து மேற்குலகின் ஜனநாயக மதிப்பீடுகளும் அரசியல் சார்புகளும் நலன்களும் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என வரையறை செய்கின்றன. சரி கனவான்களே. அப்படியேதான் இருக்கட்டும். ஓர் அரசாக அங்கீகரிக்கப் போவதாக நீங்கள் சொல்லும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் காஸா படுகொலைக்கு எதிராகவும்தானே உங்களது நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாக போராடுகிறார்கள். உங்கள் குரலுக்கு எதிராக அல்லவே. அவர்களை ஏன் கைதுசெய்ய வேண்டும். அடித்து நொருக்க வேண்டும். சட்டங்களை இயற்றி சிறை வாழ்வுக்குத் தள்ள வேண்டும். அவர்கள் அமைதியாகத்தானே போராடுகிறார்கள். நேட்டோ என்ற மிகப் பெரும் வன்முறை இயந்திரத்தை இயக்கி எத்தனை போர்களை செய்தீர்கள். மில்லியன் மக்களை கொன்றீர்கள். அரசுகளை வீழ்த்தினீர்கள். தலைவர்களை கொலை செய்தீர்கள். மில்லியன் குழந்தைகளை கொலை செய்தீர்கள். எல்லாமும் நெத்தன்யாகுவுக்கும் தெரியும். 2022 ஒக்ரோபரிலிருந்து இன்றுவரை கள்ள மௌனம் சாதித்துவிட்டு, இப்போ காஸா குழந்தைகளை கொல்வதை முன்னிறுத்திப் பேசும் உங்கள் அறத்தின் போலிமையை நெத்தன்யாகுவும் அறிவார். அதனால்தான் உங்கள் குரல் மீது அவர் உமிழ்ந்துவிட்டு நகர்ந்து போகிறார். பலஸ்தீனம், இஸ்ரேல் என்ற “இரு அரசு” (two state) தீர்வு என்பது ஒரு வகைப்பட்ட அரசியல் தீர்வு. அது சரியா, தவறா, சாத்தியமா என விவாதங்கள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. சரியென்றே எடுத்துக் கொள்வோமே. அதை உறுதியாக்க அந்த மண்ணில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். தேக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். சந்ததிகள் தப்பிப் பிழைக்க வேண்டும். அவர்கள் கடந்த 22 மாதங்களாக பசிக்கு எதிராக போராடுகிறார்கள். எலும்புக் கூடுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதற்கான உங்களது தீர்வு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதை செயற்படுத்த இஸ்ரேலின் மீது நீங்கள் செயற்படுத்தும் அழுத்தம் என்ன என்பதும் தெரியவில்லை. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை ஏதும் இல்லை. ஆயுத ஏற்றுமதித் தடை ஏதுமில்லை. ஒப்பந்த இடைநிறுத்தங்கள் ஏதுமில்லை. உக்ரைன் பிரச்சினையில் இரசியா மீது 27’000 பொருளாதாரத் தடைகளை விதித்த அந்த அளவுகோல் இங்கு ஏன் வளைந்து நெளிந்து கொண்டது? ஐநாவின் அங்கீகாரத்தோடுதானா நீங்கள் நாடுகளின் இறைமையை மதிக்காமல் உட்புகுந்து போர் நடத்தி மக்களை கொன்றீர்கள். இஸ்ரேல் சர்வதேச மக்களின் குரலையும் கேளாமல், ஐநா வினது தீர்மானங்களையும் குரலையும் கேளாமல், ஓர் இனப்படுகொலையை கண்முன்னே நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று அதே அதிகாரத்தை எடுத்து இஸ்ரேலை புறந்தள்ளி, காஸாவுக்குள் புகுந்து உணவு தண்ணீர் மருத்துவம் என உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், அந்த மக்களுக்கு இஸ்ரேலிய கொலைப்படையிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்கவும் முடியாமலிருப்பதற்கான விளக்கம்தான் என்ன. சும்மா விமானத்திலிருந்து உணவுப் பொதியை ஓரிரு முறை வீசி படம் காட்டியதற்கு அப்பால் எதுவரை சென்றிருக்கிறீர்கள். உலக மக்களின் கண் முன்னால் இஸ்ரேல் நடத்தும் ஓர் பட்டினிப் படுகொலையை விடவும், இனப்படுகொலையை விடவும், 20’000 குழந்தைகளின் மரணத்தை விடவும் இஸ்ரேலின் ‘இறைமை’ உங்களுக்கு முக்கியமானதாகப் போய்விட்டது. உங்கடை ஜனநாயகம் மனித உரிமை அறம் எல்லாமும் புல்லரிக்க வைக்கிறது. போங்கள்! - Ravindran Pa https://sudumanal.com/2025/08/15/அங்கீகரித்தலின்-அரசியல்/#more-73371 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
திங்கள்கிழமை ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி சந்திப்பில் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக உருசுலா வொன்டலைன் கலந்து கொள்வதாகவும் தன்னுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளார். உருசுலா அமெரிக்க எரிபொருளை சந்தை விலையினைவ்ட பலமடங்கு அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் கைசாத்திட்டிருந்தார், ஜேர்மன் அதிபரும் திங்கள்கிழமை நடைபெறும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது. இரஸ்சியாவின் மீதான பொருளாதார தடையின் அவசியம் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது, புட்டின் ட்ரம்ப் சந்திப்பின் பின்னர் ட்ரம்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் செலன்ஸ்கியுடன் ட்ரம்ப் தொலை தொடர்பு உரையாடலில் ஈடுபட்டிருந்தார் எனும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் ட்ரம்புடனான திங்கள்கிழமை சந்திப்பில் உக்கிரேன் சார்பான பார்வையினை ட்ரம்பிடம் வலியுறுத்த விரும்புவதாக கூறிய்ள்ளனர். கடந்த 3 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த கொள்கைகளே பல உயிரிழப்பு பொருளிழப்பு என்பவற்றிற்கு காரணமாக அமைந்து உக்கிரேன், இரஸ்சியா, ஐரோப்பா, ஒட்டு மொத்த உலகிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பழைய பாதையில் தொடர்ந்து பயணிக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் நிலைப்பாடாக உள்ளது. இந்த நிகழ்வில் புகழ்பெற்ற ஓவல் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதியும் (ஜெ டி வான்ஸ்) கலந்து கொள்ளவுள்ளார், கடந்த ஐரோப்பிய ஒன்றிய மானாட்டில் அவர் பேசிய மக்கள் விருப்பிற்கெதிராக மக்களால் தெரிவு செய்யப்படும் ஐரோப்பியநாடுகளின் தலைவர்கள் நீக்கப்படுவது ஜனநாயக விரோத போக்கு என கூறியிருந்தார். ஐரோப்பாவில் பலவீனமான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சிகளின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக கருதுகிறேன், அதன் மூலம் தனது அதிகாரத்தினை பேண முயற்சிக்கும் ஒரு முயற்சியாக இதனை பார்க்கமுடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த போரை தொடர விரும்புவது கூட அதன் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம், இந்த சந்திப்பில் பின்லன்ட் அதிபர் அலெக்சான்டர் ஸ்டப் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது, ருமேனிய அதிபர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போரை தொடர முயற்சிக்க இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவதன் மூலம் போரை வெல்லலாம் எனும் அடிப்படையில் மேலதிக பொருளாதார தடை பற்றி விவாதிக்க விரும்புகின்றார்கள், அத்துடன் உக்கிரேனிற்கான பாதுகாப்பு உறுதியினை அமெரிக்காவிடம் கோரவும் முடிவு செய்துள்ளார்கள். இந்த முயற்சி ஒரு புறமிருக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோஸிங்டனில் புடின், ட்ரம்ப், செலன்ஸ்கி என ஒரு முத்தரப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருப்பது போல தெரிந்தாலும் திங்கள்கிழமை சந்திப்பின் பின்னரே போரா சமாதானமா என்பது தெரியவரும்.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
அண்ணை, நேற்று மருத்துவ நிபுணர் சிவன்சுதனிடம் மருத்துவம் செய்ய போனபோது நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிடலாம் என கூறினார்.1 point- மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
எங்கே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்களோ என்று யோசித்தேன் ........இப்பதான் நிம்மதியாய் இருக்கு . ......... ! 😀1 point- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லையாம்! 17 AUG, 2025 | 07:43 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்க முடியாது. ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும். அதன் பின்னரேயே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும். இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவுகோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம், அதற்கு துணை போகவும் மாட்டோம். மேலும் பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/2227521 point- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற உண்ணாவிரத சாதனையை முறியடிக்கும் விதமாக… காலை 4 மணியிலிருந்து, காலை 8 மணிவரை ஹர்த்தால் நடைபெறும். Inuvaijur Mayuran1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/CNqT7kR7JSs?si=VZzBgSxf7RTuHJ40 ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே1 point- சுமந்திரனின் கர்த்தால்? - நிலாந்தன்
இப்போ அவர் கண்முன் தெரிவதெல்லாம் முதலமைச்சர் பதவி மட்டுமே.1 point- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
உங்களுடைய டிரம்ப் தமிழருக்கு என்ன நன்மை விளைவிப்பார் என்று வாய்பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? இவ்வளவு விரிவாக டிரம்பிற்கு வக்காளத்து வாங்கும் நீங்கள் அவரது தமிழர் சார்பான நடவடிக்ஐகளையும் விரிவாச்சொல்லுங்கோவன்😂1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
இதன் அர்த்தம் உக்ரைன் தனியே இல்லை என்பதை சொல்வதாகும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஆடி மாத சிரிப்புகள்.
1 pointஆடி மாசம் முடிந்தது. இனி புது மாப்பிளைகள்... மனைவியை தாய் வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு போகலாம். 😂1 point- கருத்து படங்கள்
1 point1 point- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனும், சிவஞானமும் சேர்ந்து தீக்குளித்தால்…. எனது ஆதரவு உண்டு. 👍🏽😀1 point- ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு
ஓரினச்சேர்க்கை வத்திக்கான் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகத்தானே தெரிகின்றது. இங்கு பேராயர் வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளாரா?1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ஈழத்தமிழர் பிரச்சனையை.....உலகில் உள்ள எல்லா ஆக்கிரமிப்பு பிரச்சனைகளுடனும் ஒப்பிட நினைப்பதால் தான் நாம் இன்னும் ஒரு படி கூட நகர முடியாமல் இருக்கின்றது.1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
எங்களது தமிழ் யுரியுப்பர்கள் பாணியை அப்படியே சர்வதேச ஊடகங்களும் பின்பற்றி கடந்த வராரத்தில் இருந்து ரம்பின் அலாஸ்கா நாடகம் பற்றி செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தன ரம்பின் அதிரடி யுத்த நிறுத்தம் புடின் ஒப்பு கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் ரம்பின் கடும் எச்சரிக்கை கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை புடின் தொடர்ந்து நடத்துகின்றார்1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
போரின் ஆரம்பத்திலேயே… உக்ரைனுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று, ஒரு சில யாழ் கள உறுப்பினர்கள் தீர்க்கதரிசனமாக முற்கூட்டியே கூறியதையும் பொருட்படுத்தாமல், உக்ரேனுக்கு கொம்பு சீவி விட்டவர்கள் இப்போ… எந்த பதுங்கு குழிக்குள் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆயுதங்களை கொடுத்து உசுப்பேற்றாவிட்டால் உக்ரேன் வழிக்கு வரும். இவ்வளவு காலம் உக்ரேனா சண்டை பிடித்தது?1 point- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ஐயா, இந்த அநீதியான உலகிலே அப்படியொன்று இருக்கிறதா? உலக நீதிமன்று 77ஆண்டுகளாக அழிக்கப்பட்டுவரும் தமிழினத்துக்கான நீதியைத் தருமா? போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாக நீதியைக் காணவில்லை. கேட்டால் சிறிலங்காவின் சிங்கள அரசுகள் கட்டிவைத்துள்ளதாகச் சாட்டு. பலஸ்தீனர்கள் பேரழிவுக்குள்ளாகி வருகிறார்கள். உலக நீதிமன்றை அங்கேயும் காணவில்லை. ஓரச்சுலகுக்கான போரில் மேற்கும் ரஸ்யாவும் உக்ரைனூடாக மோதுகின்றன.(யாழில் பலரும் சுட்டியதே) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கியின் கையில் எதுவுமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கைகளிலேயே உள்ளன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இலங்கையின் சிறந்த வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் ஆன்மீகப் பரிமாணம்
இந்த கட்டுரையை வாசிக்கும்போது எனக்கு பளிச்சென ஒரு விடயம் விளங்குகின்றது. ஆளுமை மிக்க ஒரு தமிழரை எப்படி சிங்களத்து தலைவி தன்பற்றிய கதிர்காமர் அவர்களது முன்னைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாது தன்பக்கம் இழுத்துள்ளார். அதேசமயம் தமிழ் தலைமை இந்த விடயத்தில் கோட்டை விட்டுள்ளது. ஆளுமை மிக்க தமிழர்கள் சிங்கள தரப்புடன் இணைந்தது தமிழர்கட்கு மிகப்பெரியதொரு இழப்பு.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா ......... ! அழகான வில்லனும் (நம்பியார் ) அழகிய ராட்சசியும் (எம் . என் . ராஜம் ) கனிவுடன் பாடும் ஜோடிப்பாடல் ....... கண் மூடி ரசிக்கையில் விண்மேவிச் சிறகடிக்கும் நினைவலைகள் .........! 😍1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointhttps://www.facebook.com/reel/1068324721492941 சடடென யாழ் கள நண்பர் ஒருவர் நினைவு வந்தார்.. யாராக இருக்கும் ? ஈழத்தின் மீது பிரியமானவராக இருக்குமோ? 😃1 point- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அமெரிக்காவில் அதிகாரத்தில் இருந்த பைடனும், ஹிலாரியும், ஜோன் கெரியும் "இடதுசாரிகள்" என்று நம்பும் அளவுக்கு உங்கள் அறிவு இருக்கிறது 😂- ஆனால் உங்கள் வாசிப்பு பற்றி நீங்களே இங்கே அறிக்கையிட்டிருப்பதால் இதில் அதிசயமில்லை! ஒபாமா, ஹிலாரி, பைடன், கெரி: இவர்கள் இருந்த காலத்தில் தான் ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஈழத்தமிழர் மீதான குற்றங்கள் பற்றிய தீர்மானங்கள் வந்தன (அந்த வேளையில் எதிர்த்து வாக்களித்த புரினின் ரஷ்யவைத் தான் இங்கே தமிழ் தேசியப் போர்வை போர்த்தியபடி உலாவரும் சில "யாழ் கள நடிகர்கள்" 😎விருப்பம் என்று எழுதியிருக்கிறார்கள்). ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்த மனித உரிமைகள் எல்லாம் பின் தள்ளப் பட்டு விட்டன. ட்ரம்புக்கும் ருபியோவுக்கும் சிறிலங்கா எங்கே இருக்கிறது என்பதே தெரியுமோ என்பது சந்தேகம். இனியென்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் புரிதலில் "இடது சாரிகளான" ரஷ்யாவிடமும், சீனாவிடமும் நீதி கேட்பீர்களா?1 point- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அண்மைக்காலத்தில் அமெரிக்காவை ஆண்ட ஜனாதிபதிகளில் கிளின்ரனும் ஒபாமாவும் குறிப்பிடத் தக்கவர்கள். பொஸ்னியர்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பை முடிவிற்குக் கொண்டுவந்ததில் கிளின்ரனின் பங்கு குறிப்பிடத் தக்கது. அவ்வாறே ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் நடந்துவந்த போர்களை நிறுத்தவேண்டும் என்று நடவடிக்கைகளில் இறங்கியதுடன், 2001 இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலினை நடத்தி, மூவாயிரம் அமெரிக்கர்களைப் பலியெடுத்த சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதியான பின்லாடனைத் தேடி, வேட்டையாடி, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினை ஒபாமா பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன் ஈரானின் முல்லாக்களுடன் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட்டு, பொருளாதாரத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்திருந்தார். ஈழத்தமிழர் படுகொலையில் ஒபாமாவோ அல்லது ஹிலரியோ எதனையும் செய்யவில்லை என்பது உண்மையே. இறுதிநேரத்தில் அமெரிக்கர்கள் செய்யமுயன்றதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகளை இந்தியா முன்னின்று தடுத்துவிட்டதென்பதை அன்றிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிவ் சங்கர மேனன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.1 point- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
இலங்கையில் பிள்ளையானுடன் இணைந்து, பலநூற்றுக்கணக்கான தமிழர்களைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த இனியபாரதி எனும் நபருக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் சாதாரணக் குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகூடிய கெளரவங்களான தேசமான்ய, தேசாபிமான என்கிற விருதுகளைக் கொடுத்து மகிழ்ந்தபோது, உலகில் நடக்கும் போர்களை 24 மணிநேரத்திற்குள் நிறுத்துவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, ரஸ்ஸிய உக்ரேன் போரில் உக்ரேனியர்களைப் பலவீனப்படுத்தி, ரஸ்ஸியாவின் சர்வாதிகாரிக்குக் கொம்பு சீவி, பலஸ்த்தீனத்தில் இனக்கொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலினை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இனக்கொலையினை நடத்தும் நெத்தன்யாகுவே நோபல் பரிசை சிபாரிசு செய்வதொன்றும் புதினமில்லை.1 point- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
இடது சாரிகளை விட வலதுசாரிகள் உங்களை சுரண்டாமல், சொகுசாக நடத்துகிறார்கள் என்கிறீர்களா? மண்ணிறத்தோலோடு உங்கள் போன்றோர் வலதுசாரிகளிடம் கூழைக் கும்பிடு போட்டால் கூட உங்களை ஒரு தூரத்தில் தான் வைத்திருப்பர். ஏனெனில் வலது சாரி வாத்தின் உள்ளீடே xenophobia தான். இது புரியாமல் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போட்ட கோழிகள்" போன்ற அமெரிக்க பலஸ்தீனர்கள் போல பலர் இருக்கிறீர்கள்😎. மிஷேல் ஒபாமா என்ன சொன்னார் என்பது விளங்காமல் தான் "அவர் ஒபாமாவை வறுக்கிறார்" என்றிருக்கிறீர்கள் என்பது புரிந்ததால், அவர் சொன்னதை அப்படியே பிரசுரித்த கார்டியனை செய்தியை இணைத்தேன். "வாசிப்பு, தேடல், விளங்கிக் கொள்ளல்" என்பன ட்ரம்ப் பக்தர்களின் strong suit அல்ல! 😂 என்பதை அறிந்ததால் நீங்கள் கடந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன். ஒபாமா ஜனாதிபதியாக வர முதலே உலகின்/அமெரிக்க சமூகத்தின் தீவிரவாதப் போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒருவர் , ஐரோப்பிய நாடுகளில் இருந்த முற்போக்கு சக்திகளுக்குக் கூட அதனால் நன்மைகள் விளைந்தன. இதற்காகத் தான் கொடுத்தார்கள்.இதைப் பற்றியும் வாசிக்காதீர்கள்😎! சோசியல் மீடியாவில் தலையைக் கொடுத்து விட்டு சும்மா அலட்டிக் கொண்டிருங்கள்!1 point- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Zameen Prabu est avec அழகுதேவன் நெல்லை et 5 autres personnes . · குந்தவை காலத்துலயே மின்விசிறி இருந்துருக்கு.. இத சொன்னா நம்பள பைத்தியக்காரன்னு சொல்வானுக..1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை