Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87988
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31956
    Posts
  3. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11881
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/16/25 in all areas

  1. எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். இது ஒரு முக்கியமான நகர்வு - ரொம்ப காலமாக மருத்துவர்கள் இதை ஏற்கத் தயங்கினார்கள். இருபதாண்டுகளுக்கு முன் என் அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டு இச்சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போது மருத்துவர்கள் கொழுச்சத்து அதிகமான மாமிசம், குறிப்பாக மாட்டுக்கறி, காரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் சொன்னார்களே தவிர மாவுச்சத்துதான் புற்றுநோய் அணுக்களுக்கு தூண்டுதல் அளிப்பது எனும் புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்று மெல்லமெல்ல அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இதை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்து மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும். ஏனென்றால் என் நண்பருக்கு முதலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோதே அவரிடம் டயட் விசயத்தை அறிவுறுத்தியிருந்தால் புற்றுநோயால் முழுக்க பாதிக்கப்பட்டிருக்க மாட்டார். புற்றுநோய் குறித்து atavistic கோட்பாடு ஒன்றுள்ளது - அதாவது இந்த புற்று அணுக்கள் நம் உடலில் ஏற்படும் கடும் அழுத்தத்தால் அணுக்களின் ஆதி நினைவைத் தூண்டப்படுவதால் தோன்றுபவை என்று. ரெண்டரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் உயிர்வளி குறைவாக இருந்த காலத்தில் பெருகியிருந்த ஒற்றை அணு உயிரிகள் காற்றிலி (aneorobic) உயிரிகள் என அழைக்கப்பட்டன. இவை மாச்சர்க்கரையை (குளூகோஸை) உயிர்வளி இன்றி உடைத்து ஆற்றலை உருவாக்கின. ஆனால் உயிர்வளியைக் காற்றில் பெருக்குகிற கிருமிகள் தோன்றி அவை புதுவகையாக (உயிர்வளியைப் பயன்படுத்தி) ஆற்றலை உற்பத்தி பண்ண ஆரம்பித்தன. பழைய ஓரணு உயிரிகள் (உயிர்வளி தேவையற்றவை) அருகிட, அல்லது புதிய வகை கிருமிகளுடன் கலந்து புதுவகையான கிருமிகள் தோன்றிட நம் பிரபஞ்சமே மாறியது. பல்லணு உயிரிகள் தோன்றிப் பெருகி, மனித இனமும் தோன்றிட நமது அணுக்களுக்குள் கிருமிகளின் மரபணுக்கள் உறைந்திருந்தன. இந்த மரபணுவுக்குள் ரெண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காற்றிலி உயிரிகளின் நினைவுகளும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக மாவுச்சத்து மிகுந்த துரித உணவுகளை உட்கொண்டும், வேதியல் நச்சுக்களால், மாசுக்களால் பாதிக்கப்பட்டும் உடலைப் படுத்தி எடுக்கும்போது இந்த உடலால் இனிப் பயனில்லை என அணுக்கள் முடிவெடுக்கின்றன. அவை உடனே ஒரு பக்கம் தற்கொலை செய்கின்றன, இன்னொரு பக்கம் அவை வேகமாகத் தமக்குள் பிரிந்து இந்த உடலுக்குத் தேவையில்லாத சுயாதீனக் குழுமங்களாகின்றன. அவையே புற்று அணுக்கள். உடல் அழியுமுன் வேகமாகத் தோன்றி வளர்ந்து அழிவதே அவற்றின் நோக்கம். உதாரணமாக, இந்த புற்று அணுக்கள் மூளையில் தோன்றினால் அவை மூளையின் பணியைச் செய்து உடலுக்கு உதவாது. மூழ்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போல அவை நடந்துகொள்ளும். சீக்கிரமாகத் தின்று பெருகிவிட்டு தப்பித்து ஓடப் பார்க்கும். ஆனால் உயிர்வளியைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி பண்ணும்போது வேகமாக இந்த அணுக்களால் தோன்றவோ வளரவோ முடியாது. அதற்காக இவை காற்றிலி உயிரிகளின் மரபணு நினைவை மீட்டெடுக்கின்றன. அவை பல்லணு உயிரிகளாக அல்லாமல் ஒற்றை அணு உயிரிகளாகத் தம்மைக் கருதிச் செயல்படுகின்றன. உயிர்வளி இன்றியே குளூகோஸைக் கொண்டு ஆற்றலை உற்பத்தி பண்ணுகின்றன. ஆற்றலைக் குறைவாகவே அவ்வாறு பெருக்க முடியும் என்பதால் அவற்றுக்கு மிக அதிகமாக குளோகோஸ் தேவைப்படுகிறது. புற்று அணுக்களில் நாம் காணும் முக்கியமான பண்பு அவற்றில் உயிர்வளி மிகக்குறைவாகவும் குளோகோஸ் அதிகமாகவும் உள்ளன என்பது. இதை 1920களில் ஓட்டோ வார்பெர்க் என்பவர் கண்டறிந்ததால் இது வார்பெர்க் விளைவு என்று அழைக்கப்படுகிறது. முதுமரபை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்குக்கும் புற்றுநோயின் வளர்ச்சிக்குமான தொடர்பைப் பற்றி இந்த ஆகையால்தான் இப்போது மருத்துவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையை இன்னும் முழுக்க ஏற்கவில்லை என்றாலும் இது கூட ஒரு கவனிக்கத்தக்க மாற்றம்தான். இந்தப் புதிய அணுகுமுறையைக் குறித்து Travis Christofferson எழுதியுள்ள நூலும் (Tripping Over the Truth: The Return of the Metabolic Theory of Cancer) பால் டேவிஸ் பேசியுள்ள கருத்துக்களும் முக்கியமானவை. வாயைக் கட்டுப்படுத்தி, குடலில் நல்ல நுண்ணுயிர்களை வளர்த்து, சரியாக ஓய்வெடுத்து மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே புற்றுநோய் அருகிவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று விரைவில் வரும். Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_14.html @Justin அண்ணை உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.
  2. எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] From Jaffna’s soil to London’s skies, A journey of hope, where your spirit flies. Through trials and loss, you stood so tall, A guiding light, admired by all. A healer’s heart, both kind and true, The world is brighter because of you. A son, an Engineer and a matured father, Each year you grow, we hold you near. Though your mother now rests above, She sends her blessings, her endless love. From heaven’s gate she smiles today, “Happy Birthday, my son,” she’ll say. May health and peace forever stay, Happy Birthday, my son, on this special day. [Appa, Kandiah Thillaivinayagalingam] எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/31335919739389931/?
  3. யாரது காட்டிற்கு கைட் வேணும் என்று கேட்டது ........! 😂
  4. அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா? ஏதோ இலங்கைப்படை சாதித்ததாக எழுதியுள்ளனர். விநாயக மூர்த்தி முரளிதரன் இராணுவ கூட்டிலேயே இருந்துள்ளான். தலைவருடன் ஒன்றாக இருந்து உண்டு, குடித்து அவரையே காட்டிக்கொடுத்த துரோகி, அவரை அடையாளம் காட்ட வந்தானாம். சரத் பொன்சேகா சொன்னது, நாங்கள் கிளிநொச்சியுடன் எங்கள் போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம், ஆனால் இந்தியாவே எங்களை வற்புறுத்தி போரை தொடரச்செய்தது. மஹிந்தா அறிவித்தது, நாங்கள் கேட்க்காமலேயே இந்தியா போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. நாங்கள் செய்தது இந்தியாவுக்கான போர். ஏன், அமெரிக்கா, பாகிஸ்தான்,பலஸ்தீன், இஸ்ரேல் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். அதைவிட நாடு முழுவதும் கடனால் நிறைந்திருக்கிறது. ஆனால் புலிகள் தங்கள் சொந்த முயற்சியினால் முப்பது ஆண்டுகள் தமிழருக்கெதிரான வன்முறையை கட்டுபாட்டில் வைத்திருந்தனர். ஒரு விடுதலை போராட்டம் துரோகத்தினாலேயே முடிவுக்கு வந்தது. இனிமேல் துரோகத்தின் பலனை அனுபவிக்கும் போது அதன் வலி புரியும். என் தலைவன், குளிரூட்டிய அறையிலிருந்து போர் புரியவில்லை, போராளிகளின் இழப்பில் புகழ் தேடவில்லை, பிள்ளைகளை வெளிநாட்டில் சுகம் தேட அனுப்பவில்லை. தானும் குடும்பமும் சேர்ந்தே போராடினார். உலகிலேயே சிறந்த எடுத்துக்காட்டு.
  5. நீங்கள் யாருடைய கருத்திற்குப் பதிலாக எழுதியிருந்தாலும் அதற்கான எனது பதில் இதுவாகத் தான் இருக்கும் ஒருவருக்கு எழுதும் பதிலை ஆயிரம் பேர் வாசிப்பார்கள் சசி🙏 அதனால் தான் தான் சபை அடக்கம் கருதி சிலர் யோசித்து எழுதுவார்கள்
  6. சேடம் இழுக்கும் நிலை என்று சொல்வது அபத்தம் பொருளாதார வீழ்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் அவ்வப்போது வரும் போகும் . ஆனால் அந்த வீழ்ச்சி தொடர்ந்தால் பிரச்னை வரும் . அப்போது அதை நெருக்கடியான நிலை என்பார்கள். அது இப்போது ஜெர்மனியில் நடக்கின்றது . கடந்த அரசாங்கம் மூன்று கட்சிகளின் கூட்டணியாக அமைந்து ஒரு நிலையற்ற....... எப்போதும் ஆட்சி கவிழும்.... என்ற நிலையில் இருந்ததும் ஒரு முக்கியமான காரணி. யாரும் முதலீடு செய்ய பலமுறை யோசித்தார்கள். அதைவிட கொரோனா காலம் ஒரு காரணி பல நிறுவனங்கள் மூடப்பட்டன- உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார போட்டி இதுவும் ஒரு காரணம் உக்கிரையின் ரஷ்யப் போர் காரணமாக எரிசக்தி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை என இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு பல இணைந்த காரணிகள் உள்ளன இப்படி இருந்தும் ஐரோப்பாவில் ஜெர்மனி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான் உள்ளது . இன்றைய நிலையில் வலதுசாரிகள் ஜெர்மனியில் ஒரு மக்கள் கட்சியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படுகின்றன . ஜெர்மனி அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் மட்டும் இல்லாமல்...... வெளி நாட்டு மக்களின் உழைப்பினாலும் தான் உலகப் போரின் பின்னர் மீண்டு வந்தார்கள், இனியும் மீண்டு வருவார்கள்
  7. கூடியம் குகைகள் ( vikatan ) இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிலவியல் ஆராய்ச்சியாளர்களும், இந்திய தொல்லியல் துறையும் இதன் பழைமையை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல், வரலாற்று ஆய்விதழ்கள் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. லெமூரியா, கீழடி என நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அத்தனை ஆதார வரலாறுகளுக்கும் முந்தைய, பரிணாமத்தின் தொடக்கநிலை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் குகைகள், தமிழ் நிலத்தின் தொன்மைக்குச் சான்றுசொல்லி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கின்றன. கூடியம் குகைகள் உலகில் எழுத்துச்சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய வரலாற்றை, 'தொல் பழங்காலம்' அல்லது 'பழங்கற்காலம்' என்பார்கள். எழுத்துச்சான்றுகள் தோன்றிய பிறகான காலம் வரலாற்றுக்காலம். கற்காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவில் பல்வேறு படிநிலைகளை எட்டினார்கள். உலோகங்களின் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினார்கள். மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 'Paleolithic Age' எனப்படும் கற்காலத்தின் தொடக்கத்தில்தான் தங்கள் அறிவைப்பயன்படுத்தத் தொடங்கினார்கள். கைகளில் கிடைத்த கற்களை எரிந்து விலங்குகளை வீழ்த்துவதில் இருந்த சிக்கலைக் கலைய, அவற்றைக் கூர்மையாகச் செதுக்கி, கோடரிகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுதான் மானுட குல வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய பரிணாமம். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் கருவிகளைக் கொண்டே அப்பகுதியில் வாழ்ந்த மனித இனம் பற்றியும் காலம் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அல்லிக்குழி மலைப்பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சிகளும், இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் உறுதி செய்திருக்கிறது. ஆதிமனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள அல்லிக்குழி மலையில், இன்னும் பல ஆயிரம் கற்கருவிகள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கிக் கற்களைத் துளாவினாலே ஐந்தாறு கற்கருவிகளைக் கண்டெடுத்து விடமுடிகிறது. கூடியம் குகைகள் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பிரதான சாலையில், 18 கி.மீ தொலைவில் உள்ளது சித்தஞ்சேரி. இங்கிருந்து, பிளேஸ்பாளையம் செல்லும் இடதுபுறச் சாலையில் திரும்பி 12 கி.மீ பயணித்தால் மரங்களடர்ந்த 'கூடியம்' என்ற கிராமம் வரும். இதுதான் அல்லிக்குழி மலையின் வாசல். கூடியம் கிராமமே அமானுஷ்யமாக இருக்கிறது. பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய கரடுமுரடான மண்சாலைதான். உள்ளே 20 வீடுகள் மட்டுமே உள்ளன. பெரும்பகுதியாக இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருக்கும் வீடுகளே மிகப்பழைமையானவையாக இருக்கின்றன. வட்ட வடிவத்தில் புல்கூரை வேயப்பட்டு மண்ணால் பூசப்பட்ட அந்த வீடுகளின் தன்மையே நம்மை தொன்ம வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. கூடியம் கிராமம் வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குமேல் நடந்துதான் போகவேண்டும். 6 கிலோ மீட்டர். இருபுறமும் செடிகளடர்ந்த ஒரு ஒற்றையடிப்பாதை. தொடக்கத்தில், சற்று அகலமாக இருக்கிறது. கீழே முனை நீட்டி நிற்கும் சரளைக்கற்கள். ஒரு கிலோ மீட்டரில் இந்தப் பாதை முடிவுக்கு வருகிறது. எரிமலை வெடித்துக் கொதித்தெழுந்து வந்து உறைந்து நிற்பதைப் போல ஆங்காங்கே பெரிய பெரிய கற்குவியல்கள்... பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன. இடையிடையே கூழாங்கற்கள் பொதிந்திருக்கின்றன. கூடியம் குகைகள் பரபரப்புக்குத் தொடர்பில்லாத, உறைந்த நிலப்பரப்பில் நிற்பதுபோன்ற உணர்வு... அந்த இடமே அமானுஷ்யமாக இருக்கிறது. மனதை மெல்லிய அச்சம் கவ்வுகிறது. அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, சாகசப் பயணம். செடிகளை விலக்கி, விலக்கி மனிதர்கள் நடந்த தடமறிந்து கால் வைக்க வேண்டும். ஓரடி விலகினாலும் முற்கள் கால்களைக் கோர்த்துக்கொள்கின்றன. 'பின்செல்...', 'பின்செல்...' என்று கால்களைத் தள்ளுகின்றன கூர்முனைகொண்ட சரளைக்கற்கள். கூடியம் குகைகள் காட்டுப்பன்றிகள், முயல்கள், பாம்புகளின் தடங்கள் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட, நுழைந்தும் தவழ்ந்தும் செல்லக்கூடிய ஒற்றைக்காலடிப் பாதையில் 4 கிலோ மீட்டர் நடந்தால் முதல் குகை கண்முன் விரிகிறது. உயர்ந்த மலையிலிருந்து ஒரு பகுதி, கிருஷ்ணருக்குக் காளிங்கன் விரித்த தலைபோல அகலக் குவிந்து நிற்கிறது. 200 பேர் வசதியாக அமரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். எங்கும் காணவியலாதப் பாறை அமைப்பு. சரளைக்கற்களை உள்ளே வைத்து மண் கொண்டு இறுக்கிப்பூசி இயற்கை நெய்த விசித்திர மலை. மேலே ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கிற கற்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் 13 கோடி ஆண்டுகளாக அதன் நிலையிலேயே நிற்கின்றன கற்கள். கோடரி கொண்டு வெட்டினாலும் சிதையாத உறுதி. குகையின் முன்னால் சாம்பல் குவிந்திருக்கிறது. நம் மக்கள் சமைத்துச் சாப்பிட்ட தடம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதைகளுக்குக் குடிலாக இருந்த இந்தக் குகையின் மகத்துவம் அறியாமல் குகையெங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைத்து சிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். குகையின் ஒரு பகுதியில் மத்திய தொல்லியல்துறை அகழ்வு செய்த தடம் தெரிகிறது. தன் நண்பர்களோடு குகையைக் காண வந்த, பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் காந்திராஜன், இந்தக் குகை குறித்து சிலாகித்துப் பேசினார். கூடியம் குகைகள் "மானுட வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்சின்னம் இது. உலகின் மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று. மானுட வரலாறு என்பது, அவர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. முதல் கற்காலம் என்பது, 5 லட்சம் ஆண்டுகள் முதல் 2.50 லட்சம் ஆண்டுகள்வரை. இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை 'ஹோமினாய்ட்' (Hominid) என்று அழைப்பார்கள். இவர்கள், கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் தலைமுறை மனிதர்கள். கென்யா, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் இந்தக் குகைகளிலும், அருகில் கொற்றலை ஆற்றுப்படுகையில் உள்ள அதிரம்பாக்கம் கிராமத்திலும், பல்லாவரத்திலும் கிடைத்துள்ளன. 'கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள்' என்பதுதான் இதுவரை நம்மிடமிருக்கும் தியரி. ஆனால். இந்தக் குகையில் கிடைக்கும் தரவுகள், 'இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும்' என்ற புது வரலாற்றை உருவாக்குகின்றன. அல்லது ஆப்பிரிக்காவில் மனிதர்கள் உருவான அதேக் காலக்கட்டத்தில் இங்கும் மனிதர்கள் உருவாகியிருக்க வேண்டும். தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே கண்டமாக இருந்ததாக நிலவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இந்தக்கருத்து இன்னும் வலுப்படும். தற்போது டி.என்.ஏ சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்..." என்கிறார் அவர். கூடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote). 'தொல்லியலின் தந்தை' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவியலாளராகப் பணியாற்றிய ப்ரூஸ்க்கு, தென்னிந்தியாவில் நிலக்கரி, கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்கும்பணி தரப்பட்டது. தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ப்ரூஸ், பல்லாவரம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, உலகின் ஆதி தொல்குடி பயன்படுத்திய கல் ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டாரத்தில் ஆய்வுசெய்தபோது, இந்தக்குகையின் வடிவம் அவரை ஈர்த்தது. அல்லிக்குழி வனப்பகுதியில் தங்கி தீவிரமாக ஆய்வுசெய்து, 'தொல் மனிதன் வாழ்ந்த இடம் இதுதான்' என்பதையும் இந்தக்குகை, 'டைனோசர்கள் வாழ்ந்த ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தது' என்றும் பதிவு செய்தார். இது நடந்தது 1864-ல். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு, தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. வி.டி.கிருஷ்ணசாமி, பீட்டர்சன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியாளர்கள் தன்னார்வத்தில் சிறுசிறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்பிறகு, 1962 முதல் 1964 வரை, மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர். டி. பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன. கூடியம் குகைகள் அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, 'இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்' என்பதை உறுதி செய்தது மத்திய தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 'சென்னைக் கோடரிகள்' (மெட்ராஸ் ஆக்ஸ்) என்று வகைப்படுத்தபட்டன. மேலும் அருகில் உள்ள பூண்டி நீர்தேக்கம் அருகே ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாநில தொல்லியல்துறை அவற்றையெல்லாம் பாதுகாக்கிறது. இந்தியாவிலேயே பழங்கற்கால அகழ்வுப் பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான் என்கிறார்கள். ஆனால், குகையை கைவிட்டுவிட்டது மத்திய தொல்லியல் துறை. மாநில அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. வனத்துறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, எளிதில் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது. பத்தோடு பதினொன்றாகிப் போனது இந்த மலையும் குகையும். பாலித்தீன் குப்பைகளாலும், மதுப்பாட்டில்களாலும் நிறைந்திருக்கிறது குகை. குகைக்கு மேலே கரடுமுரடான பாறைகளின் வழி ஏறினால், நடுவில் அழகிய ஒரு சுனை. எக்காலமும் இதில் நீர் வற்றுவதேயில்லையாம். அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அருந்த சுவையாக இருக்கிறது. அதைக்கடந்து மேலே ஏறினால், உலகின் ஒரு அரிய நிலக்காட்சி கண்முன் விரிகிறது. நான்கு புறமும் பச்சை... எதிரில் புதர்களால் மறைந்துபோன ஒரு பிரமாண்ட குகையின் தோற்றம். ஒரு சிறுகோடாக மனிதத்தடம் தெரிகிறது. மேலே விதவிதமான கற்கள். எல்லாம் கனிமங்கள். நான்கைந்து வண்ணங்கள் கொண்டவை, சுட்ட செங்கலைப் போல செக்கச் சிவப்பாக இருப்பவை, பளீரென்ற வெள்ளைக்கல் என திறந்தவெளிக் கண்காட்சியைப் போல இருக்கிறது. ஆங்காங்கே நுனி கூராகவும், அடி கனத்தும் காணப்படும் கோடரிக்கற்கள். லேசாக பட்டாலே கிழித்துவிடும் அளவுக்கு கூராக்கப்பட்ட சிறு சிறு கல் ஓடுகள்... என ஒரு கல்லாயுதத் தொழிற்சாலை போலவே இருக்கிறது. "உண்மைதான். இதை 'கல்லாயுதத் தொழிற்சாலை' என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக கீழே குனிந்தபடி நடந்தால் பத்து கோடரிகள், ஐந்து கிழிப்பான்களை கண்டுபிடிக்கலாம். கூடியம் குகைகள் இந்த மாதிரிப் பாறைகள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்த மலைகளும், குகைகளும் எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நிலவியலாளர்கள், பெருமழைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கின் விளைவாக பாறைகள் திரண்டுவந்து இறுகியே குகைகளும் கற்களும் மலையும் உருவானது என்று தீர்க்கமாக கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். வெறும் கல்லை விட்டெரிந்து விலங்குகளை வேட்டையாடப் போராடிய மனிதன், அறிவு விருத்தியடைந்து கல்லைச் செதுக்கி, கூராக்கி ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி. தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் செய்யும் கற்கள் இங்கே கிடைப்பதால்தான் இந்தப்பகுதியை தங்கள் வாழிடமாக தொல்மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவில்லை. அல்லிக்குழி மலையில் 16 குகைகள் இருப்பதாக பிரிட்டிஷ் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு குகைகளுக்குத்தான் நாம் செல்லமுடிகிறது. அந்தக் குகைகளையும் கண்டறிந்து, ஆய்வு செய்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்..." என்கிறார் ரமேஷ் யந்த்ரா. சென்னை ஓவியக்கல்லூரியில் படித்த ரமேஷ், கூடியம் குகைகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அந்தப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில், குரும்படப் பிரிவில் திரையிடப்பட்டது. அதன்பிறகே ஊடகங்கள் இந்தக் குகைகளை ஏறெடுத்துப் பார்த்தன. இன்றும் தீவிரமாக இந்தக்குகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் ரமேஷ். முதல் குகையிலிருந்து, இரண்டாவது குகைக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது. மிகவும் குறுகலாகவும் முற்கள் அடர்ந்ததாகவும் இருக்கிறது. விதவிதமான பூரான்கள், பாம்புகள், சிலந்திகள், தேள்கள், செய்யான் போன்ற ஆபத்தான பூச்சிகள் ஊர்ந்து பீதி கிளப்புகின்றன. வழியில் பெரிய உருண்டைக்கல். மஞ்சள், குங்குமமிட்டு அதை வழிபடுகிறார்கள், கூடியம் மக்கள். கோழி அறுத்துப் பலியிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. அதைக்கடந்து, நடந்தால் பிரமாண்டமான இரண்டாவது குகை. 500 பேர் வசதியாகத் தங்கலாம். அகன்று விரிந்து, குடை மாதிரி நிற்கிறது. ஆங்காங்கே நீர் சுரந்து சொட்டுச்சொட்டாக வழிகிறது. ஒரு சூலாயுதம் நட்டு, அம்மன் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். கூடியம் குகைகள் - மணாச்சியம்மன் மணாச்சியம்மன் என்கிறார்கள். அவ்வப்போது வந்து கிடா வெட்டி பூஜை போடுவார்களாம். ஆனால், மலையின் அமைப்பும், அந்த நிலக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன. நம் மூதாதைகள் நடந்து திரிந்த அந்தத் தடத்தின் நிற்க சிலிர்ப்பாக இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த காடு. பாறைகளில் கண்படும் இடமெல்லாம் தேன்கூடுகள். தேனிக்களின் ரீங்காரமும், தேன்கூடுகளில் அலகு நுழைந்து உரிஞ்சத் துடிக்கும் தேன்கிளிகளின் குதியாட்டமும் அந்த சூழலை வாழ்வின் உன்னதமான தருணமாக்குகின்றன. இந்த மலையின் தொடர்ச்சியாக, உயர்ந்து நிற்கிற கூழாங்கல் மலைகள் அதிசயமாக இருக்கின்றன. அடுத்த குகைக்கு நடக்கும் முயற்சியை தேனிக்களும், விதவிதமான பூச்சியினங்களும், குத்தீட்டி போல நீட்டி நின்று கொக்கி போல குத்தியிழுக்கும் முட்களும் கைவிடச் செய்கின்றன. தேனீக்களின் சத்தமும், பறவைகளின் ஒலியையும் தவிர ஓர் இறுக்கமான மௌனம் அந்த வெளியைச் சூழ்ந்திருக்கிறது. அங்கு உலவும் அதிசுத்தக் காற்றில் ஆதிமனிதனின் அழியாத ஆன்மா உறைந்திருப்பதை உணரமுடிகிறது. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் குமரகுரு, பல்வேறு நிலவியல் ஆய்வுகளின் முடிவில் இந்தக் குகை 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மத்திய தொல்லியல் துறையில் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த ஆர்.டி.பானர்ஜியும் அதையே கூறியிருக்கிறார். காலங்களைத் தின்று செரித்துவிட்டு சிறிதும் பங்கமின்றி உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கிறது இந்தக்குகை. இந்தக் குகையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்திரம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு ஒரு அகழ்வாய்வு மேற்கொண்டார். அங்கு 3000 கல்லாயுதங்கள் கிடைத்தன. அவற்றை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்தது. இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் எழுதினார். அதன்பிறகே உலகம் அறிவியல்பூர்வமாக இந்தக்குகையின் பழைமையை உணர்ந்தது. உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட மானுட வரலாற்று ஆராய்ச்சி நூல்களில் இந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழில் தொல்லியல் துறை வெளியிட்ட மிகச்சிறிய நூலைத்தவிர இதுபற்றிப் படிக்க எதுவுமே இல்லை. கூடியம் குகைகள் "70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். கூடியம் குகைகளும் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளும் அந்த தியரியை மாற்றுகின்றன. கூடியம் குகைகளைப் போல தமிழகத்தில் ஏராளமான தொன்மையான இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் வரலாறு மாறும்" என்கிறார் தொல்லியலாளர் சாந்தி பப்பு. "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க. இதுவே அமெரிக்காவுலயோ, இங்கிலாந்திலயோ இருந்திருந்தா இதை உலகத்தோட வரலாற்றுச் சின்னமா மாத்தி கண்காட்சியே வச்சிருப்பாங்க. நாம அதை குடிக்கிற இடமா மாத்தி வச்சிருக்கோம். பொழுதுபோக்காக வர்ற பசங்க, குகையில பெயின்ட்ல பேரு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற இந்த மண்ணுல உலகத்தோட முதல் மனுஷன் நடந்து திரிஞ்சிருக்கான்னு நினைக்கிறபோதே நெகிழ்ச்சியாயிருக்கு. இதை அரசுகள் பாதுகாக்கணும்..." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமலக்கண்ணன். இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதோ, நமக்கு அருகாமையில், தலைநகரலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச்சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு வரலாற்றை மீட்டிருவாக்கம் செய்ய வேண்டிய பணியை எவரும் முன்னெடுக்கவில்லை. உலகின் முதல் ஆதிப்பெருங்கலை, ஆயுதத் தயாரிப்புதான். கூடியம் மலைப்பகுதி மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு, இடது கையாளர்களுக்கு என வகைவகையாக இங்கே கற்கருவிகள் செய்திருக்கிறார்கள். தகுதிவாய்ந்த கற்களைத் தேர்வுசெய்து சூடாக்கி தட்டிப் பெயர்த்து கைபிடி அகன்றும் முனைப்பகுதி கூர்மையாகவும் அவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வடிவத்தில் ஏராளமான ஆயுதங்கள் இங்கே கிடக்கின்றன. கூடியம் குகைகள் சில பெரிய கற்களில் ஒருவித குறியீடுகள் இருக்கின்றன. இவை காலம் கிறுக்கியதா, ஆதி மனிதன் கிறுக்கியதா என்று தெரியவில்லை. இன்னும் 10க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக பதிவுகள் இருப்பதால் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தால் ஆதி மனிதனின் எலும்புகள், கிறுக்கல்கள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்நிலமும் தமிழ்க்குடியும் என்பது வெறும் வார்த்தைகளில்லை... வரலாறு என்பது தெளிவாகும்...! கூடியம் குகைகள் : ஒரு திக் திக் பயணம்! | Know the history and secrets of the Gudiyam Cave - Vikatan
  8. உண்மை கடந்த மாதம் நேரடியாகவே இழப்பை சந்தித்தேன் .
  9. எங்களுக்கு ஏற்ற நேரகாலம். அமெரிக்க கண்டத்திலிருந்து போகிறவர்கள் தண்டனையாகவே எண்ணுகிறேன். 3-4 மணிநேரம் விமானநிலையம். மத்தியகிழக்கு போய்சேர 12 மணிநேரம். இடைத்தங்கல் 2-6 மணிநேரம். கொழும்பு போய்சேர 5 மணிநேரம். வாகனத்தில் ஊர்போய் சேர 7-8 மணிநேரம். மொத்தமாக எறத்தாள 35 மணிநேர தொடர் பயணம். ரொம்பவும் தளர்வடைய செய்கிறது. இதனாலோ என்னவோ அமெரிக்க கண்டங்களில் இருந்து போகிறவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
  10. அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் பாடசாலைகள் தொடங்கி விட்டன. எனவே இனிவரும் மாதங்களில் இது வீழ்ச்சியாக இருக்கும்.
  11. 16 Sep, 2025 | 06:49 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல் மற்றும் தாதியியல் துறைகளில் மூன்று பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இங்கு மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல், தாதியியல் மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பாடத்துறைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 952 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டு துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பீடத்திற்கு மோசமான உட்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக, விரிவுரை மண்டபங்கள், ஆய்வகம், ஆய்வுக்கட்டுரை அறை, பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடம் ஆகிய வசதிகளைக் கொண்ட ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம் | Virakesari.lk
  12. யாழ்ப்பாண புகையிரத நிலையம். படம் எடுத்த ஆண்டு 1908. Francis P Welangoda
  13. சீனத் தூதுவர்.... மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சேனநாயக்க போன்ற முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்க, இருப்புக் கொள்ள முடியாத இந்தியத் தூதுவர்... ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை மாதிரி, நாமலை சந்தித்து... தமது "அரிப்பை" போக்கியுள்ளார்.
  14. நான் எப்போதும் இங்குதான் இருப்பேன் ஆனால் யாரும் என்னை சிறையிட முடியாது ........! 😂
  15. அவருடைய வீட்டில் வருடத்தில் 365. நாளும் மழை தான் வீட்டை பாலைவனத்தில் வேண்டினால் கூட. மழைக்கு குறை இருக்காது அங்கேயும். தினமும் பெய்யும் 🤣
  16. அததெரண கருத்துப் படங்கள்.
  17. அப்போ, இவர் கட்சியின் கட்டுப்பாட்டை, விதிமுறைகளை மீறி கருத்துச்சொல்லும்போது, பதவிகளை இறுக்கப்பற்றிக்கொண்டிருக்கும்போதும், தனக்காக இல்லாத புது பதவிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதும் இவருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பது? ஒன்று, உவர் தானாக கட்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் உவரை விட்டு மற்றவர்கள் வெளியேறவேண்டும். கறையான் புற்றெடுக்க விஷ கரு நாகம் இடையில் புகுந்திருந்து புற்றையே கலைக்குது. இவ்வளவு அவமானப்பட்டும் திருந்தவில்லை, என்ன ஜென்மமோ? இதில சட்டத்தரணி வேற.
  18. அரபு நாடுகள் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உதாசீனம் செய்தால் ஒரு துளி எண்ணை கூட நிலத்திலிருந்து எடுக்க முடியாது.அந்த அளவிற்கு அவர்கள் நிலமை என கேள்விப்பட்டுள்ளேன். எனினும் சீனாவின் வளர்ச்சியும் அதனுடனான ரஷ்யா,இந்தியாவின் கூட்டுறவும் இனிவரும் காலங்களை மாற்றிப்போடலாம்.அப்படி மாறும் நிலை வந்தால் இஸ்ரேலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார்கள்😂
  19. இஸ்ரேல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்களை நடாத்த முடியாதபடி ஏதோ நடவடிக்கை எடுப்பார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இந்த அரபு கூட்டமைப்பிலேயே ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லை. தவிர ஆளாளுக்கு அவர்கள் அமெரிக்கா, மற்றும் மேற்கையே எல்லாவற்றுக்குமான தேவைகளுக்கு தங்கி உள்ளார்கள். கண்டன அறிக்கைகள் தவிர வேறு ஏதும் இவர்களால் இஸ்ரேலுக்கு எதிராக செய்யமுடியாது என்றே தோன்றுகின்றது. அரபு நாட்டில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேல் விமானங்களுக்கு எதிராக செயற்பட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்டது என ஒரு செய்தி பார்த்தேன். இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கும். ஆனால், அரபு நாடுகளுக்கு அமெரிக்காவை கைவிட்டால் வேறு கதி உள்ளதாக இப்போதைக்கு தெரியவில்லையே.
  20. கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு. வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂? இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!
  21. அதற்காக எங்கள் எல்லோரையும் வயோதிபர்கள் என விழித்தது பெரிய வன்முறை..... இதை யாம் கண்டிக்கின்றோம் 😂 ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்கத் தாத்தாக்களை விட ஜெர்மன் தாத்தாக்கள் இன்றும் இளமை எனும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள் 🤣 என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்😂
  22. 15 Sep, 2025 | 05:43 PM பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று திங்கட்கிழமை (15) தீர்மானித்துள்ளனர். பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலைமையில் நகர வர்தகர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225154
  23. அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂 அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣
  24. வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல் 15 Sep, 2025 | 01:44 PM தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/225134
  25. கருனா அந்த உடலைப் பார்த்ததும் “மோடன்கள்” என்று கூறியதை வீடியோவுடன் பார்த்த ஞாபகம் உள்ளது. வேறு பலரும் இதனைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.
  26. கண்ணீரின் இன்னொரு முக்கியமான நன்மை, அதில் இருக்கும் நுண்ணியிர்களுக்கெதிரான பதார்த்தங்கள். Lysozymes எனப்படும் நொதியங்கள், பல பக்ரீயாக்களின் மேல்படையான கலச்சுவரை அழிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவை. இதனால் தான், உணர்ச்சிகளால் மட்டுமல்லாமல் கண்ணுக்குள் தூசு விழுந்தாலும் உடனடியாக கண்ணீர் சுரந்து கண்களைப் பாதுகாக்கிறது.
  27. Mind Your Language · Lawrence Nwabukwu ·roSntodpseu4a2a6se012 446g4ge3057:phftrf02m9btm271e61i,43c 3 · A teacher entered the classroom and found the chair he was to sit on hung on the ceiling. He looked at the students and smiled. Without saying a word, he proceeded to the blackboard and wrote: Test - 15 min, 30 marks. Q1. Calculate the distance between the chair and the floor in centimeters (1 Mark). Q2. Calculate the angle of inclination of the chair to the ceiling, and show your workings (1 Mark) Q3. Write the name of the student who hung the chair on the ceiling and the friends who helped him. (28 Marks). 🤣" “The teacher caught the student who hung the chair.” ✅" ........ !
  28. இந்தியாவில் 'இந்துத்வா' வும் தமிழகத்தில் 'சாதி' அரசியலும் உள்ளவரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழா? மாற்றத்திற்காகவேணும் வாக்குப் புரட்சியைக்கூடத் துணிந்து செய்யமுடியாத மனநிலைகொண்டோராகத் தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் மனநிலை நுகர்வு மனநிலையாகிவிட்ட காலத்தில் யாராண்டால் என்ன என்ற எண்ணப்போக்கு, வாக்களித்த மக்கள் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்படும் ஏமாற்றம், சிறிய கட்சிகளால் என்னத்தை செய்துவிடமுடியும் என்ற பார்வை எல்லாம் தாக்கம் செலுத்துகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சீனா சுயபொருண்மியத்தில் முன்னேறிய நாடு. ஆனால் சுற்றியிருக்கும் மற்ற நாடுகள் இந்த இருநாடுகளிடமும் கையேந்தும் நிலையானபடியால் நிம்மதி வராது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  29. ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு August 20, 2025 10:37 am A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன. ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன். வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒருமுறை என்னுடைய பறக்கும் கெமரா (Drone) மூலம் மகிழங்குளம்- றம்பைக்குளம் சந்தியில் இருந்து குறிப்பிட்ட அளவு உயரம் உயர்த்தி தெற்குநோக்கி கெமராவைத் திருப்பிய போதுதான் இந்த 7.5km பிரம்மாண்டத்தை கண்ணால் கண்டுகொண்டேன், அதாவது குறிப்பிட்டளவு உயரத்திலேயே நொச்சிமோட்டையின் வளைவு மகிழங்குளத்தில் Drone மூலம் நேர்சாலையாகப் பார்க்கமுடிகிறது. வடக்கில் அதிக விபத்துக்கள் நிகழும் ஓமந்தையின் A9 வீதியானது கிட்டத்தட்ட 7.5 km நீளமான நேர்பாதையாகும். எந்த வளைவுகளும் இல்லாத வடக்கின் நேர்வேகப் பாதையின் நுழைவாயில் இதுவாகும். இதே போன்று முறிகண்டி தொடக்கம் ஆனையிறவு வரையான A9 பாதை 28 km நேர்நீளமானது. இங்கு ஏற்படாத விபத்துக்கள் ஓமந்தையில் ஏற்படப் பல பௌதிக-உளவியல் காரணங்கள் உள்ளன. ஓமந்தையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 60% ஆனவை தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற போது ஏற்பட்டவையாகும். கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் நேரடியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு A9 வீதி என்று பெயர். இச்சாலை இலங்கையின் சகல மாவட்டங்களையும் யாழ்ப்பாணத்துடன் இணைத்துப் பயணத்திற்கு உதவுகிறது. தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்பவர்கள் தம்முடைய பயணத்தில் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் வவுனியா நகரை அடைந்துவிடுகின்றனர். வவுனியா நகருக்கும் கண்டிக்கும் இடையில் பலநூறு வளைவுகளைச் சந்தித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். வவுனியா நகரில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் போது மிக வேகமாகச் செல்லக்கூடிய முதலாவது நேர்ப்பாதை நுழைவாயில் என்றால் ஓமந்தையிலுள்ள 7.5 km நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த 7.5 km நீளமான நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கடந்த எட்டுமாதங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர், பல வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்துள்ளன. இதற்குப் பிரதான காரணங்கள் 1. பல வளைவுகள் கொண்ட ஏனைய மாவட்டங்களின் பாதைகளைக் கடந்துவரும் சாரதிகள் வடக்கின் முதலாவது நேர்பாதை நுழைவாயிலில் நுழைந்ததும் ஓட்டுநர் கவனம் சிதறல் (Driver Distraction) ஏற்பட்டு நீண்ட, நேராக செல்லும் சாலைகள் சலிப்பை ஏற்படுத்தி, ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறச் செய்துவிடுகிறது. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படலாம். அத்துடன் நேராக இருக்கும் சாலைகள் ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல தூண்டும். இதனால் வாகனங்களின் மீது கட்டுப்பாடு இழக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகின்றது. குறிப்பாக, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, எதிர் வரும் வாகனங்களுக்கு சரியான எதிர்வினையாற்ற முடியாமல் போவது போன்ற காரணங்களால் விபத்துக்களை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஆனால் சாலைகளை நேராக அமைப்பது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்பதனை இங்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும். 2. கண்டி தொடக்கம் வவுனியா இரட்டைப் பெரியகுளம் வரையும் பலநூறு வளைவுகள் சாரதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது. தூக்கம் போன்ற காரணங்களைத் தவிர்த்து அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவது மிகக் கடினமாகும். ஆனால் ஓமந்தையின் 7.5 km நீளமான பாதை அவ்வாறானதல்ல. Travel Shock இனை அளிக்கும் வகையில் ஓமந்தைப் பகுதியிலுள்ள பௌதிகக் காரணிகள் உள்ளன. இந்த 7.5km நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குப் பாதைகள் உள்ளன. அறுபதிற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளுக்கான வழிப்பாதைகள் உள்ளன, அந்தக் குறுக்குப் பாதைகளுக்கு உள்ளாக வரும் உள்ளூர் வாசிகள் பலர் பிரதான A9 வீதியில் நுழையும் போது வாகனங்களைக் கவனிக்காமலே பிரதான சாலையில் நுழைகின்றனர், இதனால் 7.5 km நீளமான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. 3. அண்மையில் ஓமந்தை வாகன விபத்தில் கொல்லப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் கூட குறித்த காரினை ஓட்டிய குறித்த உத்தியோகத்தரின் தூக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான், ஆனால் அவர் கொழும்பில் இருந்து இவ்வளவு தூரம் வந்தபோது ஏற்படாத தூக்கம் ஓமந்தைப் பகுதியின் நீள்சாலையில் ஏற்படக் காரணம் இந்த தடுப்புகளற்ற நீளமான சாலைதான். 7.5 km சாலையின் கால்வாசிப் பகுதியில் நுழையும் போதே குறித்த கார் விபத்துக்குள்ளாகி அவர்களின் மரணம் சம்பவித்துள்ளது. 4. அண்மையில் கூட குறித்த ஓமந்தை சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். சென்ற மாதம் இந்திய தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கும், அதற்கும் முதல்மாதம் வைத்தியர் ஒருவர் அவரது Hilux இல் சென்றபோது விபத்தில் இறந்த இடத்திற்கும் இடையிலுள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 7.5 km நீளமான சாலையாக இருப்பது போக்குவரத்தை வினைத்திறனாக்கும் என்றாலும், சாரதிகளின் கவனயீனம் மற்றும் உள்ளூர் வாசிகளின் அலட்சியம் என்பவற்றால் இந்த விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கின்றன. அந்த கவனயீனங்கள் அதிகம் இந்தப் பகுதியில் நிகழ்வதுதான் துன்பியல் சம்பவமாகும். இவற்றைத் தடுக்க இனி என்ன செய்யலாம்? 1. நொச்சிமோட்டை- பறனட்டகல் வளைவில் தொடங்கி மகிழங்குளம்- இறம்பைக்குளம் பகுதிக்கு இடையில் இந்த 7.5km நீளமான விபத்து வழக்கமாக நடைபெறும் நேர் பாதை அமைந்துள்ளது. இந்த நேர்சாலையை தூரப்பிரதேசங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெறும் நான்கரை நிமிடங்களில் கடந்துவிடுகின்றன, அதாவது 100km/h வேகத்தில் செல்கின்றன. உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கூட ஏழு நிமிடத்திற்குள் கடந்துவிடுகின்றன. இவை அவ்வீதியில் கட்டுப்படுத்த முடியாத வேகமாகும். முறிகண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நேர்ச்சாலையானது ஆனையிறவில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 28 km நேரான தூரமாகும். இதனைக் கடக்க முதல் இளைப்பாறும் நிலையம் ஒன்றை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் அமைத்துள்ளனர், விபத்துக்களைத் தவிர்க்க இது ஒரு உளவியல் செயற்பாடாகக் கருதமுடியும். ஆனால் வடக்கிற்கான நுழைவாயிலில் உள்ள 7.5km நீளமான நேர்சாலையில் அதாவது நொச்சிமோட்டைக்கும் ஓமந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தங்கல் இளைப்பாறல் நிலையம் ஒன்று அமைக்கப்படாமை இவ்விபத்துக்கள் நிகழ ஒரு காரணமாக இங்கு முன்மொழியலாம், அப்படி ஒன்றை அமைத்துவிடுவது இதனைக் குறைக்க ஒரு தீர்வாக இங்கு குறிப்பிடலாம். அத்துடன் 28km நேர்ச் சாலையை விடவும் 7.5 km நேர்ச்ச்லையில் நிகழும் விபத்துக்களும் மரணங்களும் அதிகம் என்பதனை நாம் உணர வேண்டும். 2. இந்த 7.5km தூரத்திற்குள் மூன்று அதிவேக மட்டுப்படுத்தல் முறைமைகளை (Overspeed Board) அமைப்பது விபத்துக்களைத் தவிர்க்க ஒரு வழியாக இருக்கும். A. நொச்சிமோட்டை வளைவுக்கும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு இடையிலும், B. ஓமந்தை காவல் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கு இடையிலும், C. ஓமந்தை பாடசாலைக்கும் மகிழங்குளம்-இறம்பைக்குளம் சந்திக்கு இடையிலும் (ஏற்கனவே உண்டு- இதில் விபத்துக்கள் தற்போது ஓரளவு குறைவு) அமைப்பதுவும் அதில் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்துவதும் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க மற்றொரு வழியாக அமைந்திருக்கும். 3. ஓமந்தை அம்மாச்சிக்கும், அருகில் அமைந்துள்ள மதுபான சாலைக்கும் இடையில் மஞ்சள் கடவை ஒன்றை இடுவதும், அதில் வீதிக்கரையில் வழிவியாபாரங்கள் மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தலும் பிரதானமாகும், இப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த 7.5 km நீளமான நேர்ச்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முறிகண்டியில் அமைக்கப்பட்டது போன்று ஒரு இடைத்தங்கல் நிலையத்தை நொச்சிமோட்டைக்கும் பறனட்டகல் சந்திக்கும் இடையில் அமைப்பதும், மூன்று வேகத்தடுப்பு பலகைகளை (Overspeed Board) பொலிசாரின் பங்கேற்புடன் கொண்டுவருவதும், இதற்கும் மேலாக இந்த 7.5km நேர் தூரத்தைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் மனநிலை அதற்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதும் மிக முக்கியமாகும். (குறித்த ஓய்வு நிலையங்களை அமைக்க வாய்ப்புகள் இல்லையென்றால் பயணம் செய்யும் நபர்களாவது குறித்த இடங்களுக்கு முன்னதாகத் தரித்துச் செல்வது நல்லது) வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த இடங்களைப் பார்வையிட வடக்கிற்கு வெளியிலுள்ள ஒன்றரைக் கோடிப் இலங்கையரும் ஆர்வமாக இருப்பர். அதனால் தினமும் ஓமந்தை நேர்ச்சாலையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், ஆகவே எதிர்வரும் விபத்துக்களைத் தவிர்க்க முயன்று பார்ப்போம். வழக்கமான காரணங்களை விடுத்து விசேடமான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையுமே இங்கு என் அனுபவத்தில் இங்கு எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் இணைத்தது போல வள்ளுவர் கூறுவார் “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்” வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கேற்ப தன்னை காத்துக் கொள்ளும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது என்பது அதன்பொருள்! தொகுப்பு – சுயாந்தன் https://oruvan.com/accidents-on-the-omanthai-a9-road-are-increasing-a-study/
  30. இரண்டு பேர் மட்டும் இருக்கும் ஒரு கட்சியை வைச்சுக் கொண்டு தேர்தலில் தனக்கு ஒரு சீற் வெல்லலாம் என்று முன்மாதிரி காட்டியிருக்கிறாரே ஒரு அரசியல் வாதி? யாரென்று தெரிகிறதா😎?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.