Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87988
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2951
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    11531
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/28/25 in all areas

  1. கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள். இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster Love Parade அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக் காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார். அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன, "பாதுகாவல் போர்வையிலே ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்" இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை. விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது. கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் உலகில் முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும். பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று.
  2. படம் : இதயத்தில் நீ ( 1963 ) யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன தெரிவது என்றும் தெரியவரும் மறைவது என்றும் மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில்தோன்றும் நிழல்கள்போல நிலையில்லாமல்போகலாம். பூந்தென்றல் புயலாக மாறலாம் பொன் வெயில் நிலவாக மாறலாம் வருவது ஒன்று பிரிவது ஒன்று மெய்யன்பு பொய் என்று தோன்றும்போது
  3. ஏண்டா மனுசன் ஏய்க்கிறான் .......... ஜோதிலட்சுமி & வெ .ஆ .நிர்மலா .........! எஸ் . எஸ் . ஆர் . .....! 😍
  4. நிமிசத்தில் சுலபமாய் வாழைப்பூவை சுத்தம் செய்யலாம் . .........! 😀
  5. பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 27 செப்டெம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 27 செப்டெம்பர் 2025, 02:01 GMT (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.) 'அடுத்த ஸ்பீல்பெர்க்' ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு தலைப்புடன், இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இடம்பெற்றிருந்தார். எந்தவொரு இயக்குநருக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம், காரணம் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்களால் மதிக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ், ஷிண்ட்லர்'ஸ் லிஸ்ட், ஈ.டி என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர். அது மட்டுமல்லாது, மனோஜ் நைட் ஷியாமளனின் முன்மாதிரியும் அவரே. மனோஜ் நைட் ஷியாமளனின் திரைப்பயணம் குறித்த பதிவான 'The Man Who Heard Voices' புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் பாம்பெர்கர் இந்த சம்பவம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார். "அந்த அட்டைப்படம் வெளியான பிறகு, ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய மனோஜ், 'நியூஸ்வீக் இதழில் அந்தத் தலைப்பை எழுதியவர்கள் அறியாவிட்டாலும் கூட எனக்கு நன்றாகத் தெரியும், நான் அடுத்த ஸ்பீல்பெர்க் அல்ல' எனக் கூறினார்". பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படம். இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில், ஆகஸ்ட் 6, 1970ஆம் ஆண்டு பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். அவரது தந்தை, டாக்டர் நெல்லியாட்டு சி. ஷியாமளன், மாஹேவைச் சேர்ந்தவர், தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். மனோஜ் பிறந்த சில வாரங்களில், அவரது குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு புலம்பெயர்ந்தது. பென்சில்வேனியாவில் வளர்ந்த போது தங்களைப் போல ஷியாமளனும் ஒரு மருத்துவர் ஆவார் என்றே அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர். "அப்பா, நான் நியூயார்க்கில் உள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். அதுதான் சிறந்த திரைப்படப் பள்ளி. எனக்கு உதவித்தொகையும் கிடைக்கும்' என்று என் தந்தையிடம் கூறினேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு நான் என் அம்மாவிடம் சொன்னேன், அவருக்கு சிறுவயதில் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்." என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் ஷியாமளன். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தனது 21வது வயதில், 'பிரே வித் ஆங்கர்' (1992) என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் ஷியாமளன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. ஆனால் அந்தப் படம், பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது. "என்னுடைய முதல் திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும். நான் அதில் இந்திய அமெரிக்கராக நடித்திருப்பேன். ஆனால் அந்தப் படத்தை என் குடும்பத்தரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அப்போது என் அப்பா ஒரு ஆலோசனை வழங்கினார், 'உன் படத்தில் வெள்ளையர்களை நடிக்க வை, அதன் பிறகு பார்' என்றார். அதை பின்பற்றினேன், வெற்றி கிடைத்தது" என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் மனோஜ் நைட் ஷியாமளன். இயக்குநர் ஷியாமளனை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால், அது 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' (The Sixth sense). 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என இத்திரைப்படத்தில் கோல் சியர் என்ற 9 வயது சிறுவன் பேசும் வசனம் இன்றுவரை அமெரிக்காவில் மிகவும் பிரபலம். "சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் வெளியானவுடன், 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என்ற வரி டி-சர்ட்களில், விளம்பரங்களில், மேடை நாடகங்களில், புத்தகங்களில் என எங்கும் இருந்தது. இரவில் மக்கள் உணவகங்களில் அமர்ந்துகொண்டு, 'நானும் இறந்தவர்களை பார்க்கிறேன்' என கிசுகிசுப்பார்கள்." என்று 2006இல் வெளியான 'The Man Who Heard Voices' புத்தகத்தில் விவரித்துள்ளார் மைக்கேல் பாம்பெர்கர். பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 1991இல் சென்னையில் நடைபெற்ற 'பிரே வித் ஆங்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷியாமளன். குறிப்பாக 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்தின் எதிர்பாரா முடிவு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்றும், மனோஜ் நைட் ஷியாமளனுக்கென ஒரு பிரத்யேக திரைப்பட பாணியையும், அவரது திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் இப்படம் உருவாக்கியது என்றும் மைக்கேல் பாம்பெர்கர் குறிப்பிடுகிறார். "உலகளாவிய டிக்கெட் விற்பனை, டிவிடி விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் சாதனை படைத்தது." "மனோஜ் நைட் ஷியாமளன் அதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். அவர் நடிக்கவும் செய்திருந்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்திற்குப் பிறகு, மக்கள் நைட்டை 'அடுத்த ஹிட்ச்காக்' என்று அழைத்தனர், அவருக்கு அப்போது முப்பது வயது கூட ஆகவில்லை. நடிகர்களிடம் திறன்பட வேலை வாங்கும் ஒரு இயக்குனராக அவர் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸிடமிருந்து ஒரு சிறப்பான நடிப்பை அவர் பெற முடிந்ததால். 1999இல், நைட் ஒரு 'ராக் ஸ்டார்' போல மக்களால் கொண்டாடப்பட்டார்." என மைக்கேல் பாம்பெர்கர் எழுதியுள்ளார். ஹாலிவுட்டில் தொடர் வெற்றிகள் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு, ஷியாமளன் இயக்கி அடுத்தடுத்து வெளியான, அன்பரேகபிள் (Unbreakable- 2000), சைன்ஸ் (Signs- 2002), தி வில்லேஜ் (The Village- 2004) ஆகிய மூன்று திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன என மைக்கேல் பாம்பெர்கர் கூறுகிறார். 'இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் திரைக்கதைத் திருப்பங்களை உள்ளடக்கிய உளவியல் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படங்கள்'- இதுவே மனோஜ் நைட் ஷியாமளனின் பாணி என்ற பிம்பம் உருவானது. "விமர்சகர்கள் தான் அத்தகைய பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களின் இறுதியிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைத்து நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு தான் எனக்கு பயமே. அதனால் தான் லைஃப் ஆஃப் பை (Life of Pi) போன்ற திரைப்படத்தை இயக்குவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஷியாமளன். ஆங் லீ இயக்கத்தில் 2012இல் வெளியான 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் நாயகன் இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்தவனாக இருப்பான். லைஃப் ஆஃப் பை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு ஒருமுறை கிடைத்ததாகவும் ஷியாமளன் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 'அடுத்த ஸ்பீல்பெர்க்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. ஆனால், அதற்கு அடுத்த நான்கு திரைப்படங்கள் 'தி லேடி இன் தி வாட்டர்' (2006), 'தி ஹாப்பனிங்' (2008), 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' (2010), 'ஆஃப்டர் எர்த்' (2013) ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. தனது வழக்கமான 'எதிர்பாரா திருப்பங்கள்' என்ற பாணியிலிருந்து சற்று விலகியே அவர் இந்த நான்கு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார். குறிப்பாக 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்திற்காக, மோசமான திரைப்படங்களை பகடி செய்து வழங்கப்படும் 'கோல்டன் ராஸ்பெர்ரி விருது' வழங்கப்பட்டது. 'மோசமான இயக்குநர்', 'மோசமான துணை கதாபாத்திரம்' இரு விருதுகள் மனோஜ் நைட் ஷியாமளனுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, 'தி ஹாப்பனிங்' திரைப்படத்திற்கு மோசமான திரைப்படம், மோசமான நடிகர், மோசமான இயக்குநர், மோசமான திரைக்கதை என நான்கு 'கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள்' வழங்கப்பட்டன. 'அடுத்த ஸ்பீல்பெர்க்', 'அடுத்த ஹிட்ச்காக்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். "ஒரு திரைப்படத்தை எழுதும்போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் யோசித்தே எழுத வேண்டும். 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்தில் அதை நான் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்தேன். ஆனால் இன்றும் கூட மக்கள் அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, மனோஜ் நைட் ஷியாமளனின் தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்' என்ற பிரபல அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆசியர்களின் கதாபாத்திரங்களுக்கு 'வெள்ளையின' நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இதை இயக்குநர் ஷியாமளனும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது. அதற்கு பிறகு, ஷியாமளன் இயக்கத்தில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான 'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது. நடிகர் வில் ஸ்மித் 2015இல் அளித்த ஒரு நேர்காணலில், "'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் என் திரை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி. என்னுடைய பையனையும் அதில் நடிக்க வைத்தது தான் இன்னும் வேதனையானது. நான் ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதையே நிறுத்திவிட்டேன்." எனக் கூறியிருந்தார். 'தி விசிட்' மீட்டுக்கொடுத்த அடையாளம் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 2015இல் வெளியான 'தி விசிட்' திரைப்படம் "என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'மெயின்ஸ்ட்ரீம்' திரைப்பட பாணியில் பொருந்திப் போவதற்கு சில திரைப்படங்களை எடுத்தேன். அது தவறு என பின்னர் புரிந்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்கள் அவை அல்ல என்பதும் புரிந்தது" என தனது தோல்விப் படங்கள் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். தனக்கு கிடைத்த தோல்விகளால், தனது அடுத்த திரைப்படத்தை சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்த ஷியாமளன், ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை இயக்கினார். 2015இல் வெளியான 'தி விசிட்' என்ற அந்த திரைப்படம் மூலம் மீண்டும் தனது 'எதிர்பாரா திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ்' என்ற பாணிக்கு திரும்பினார் ஷியாமளன். தங்கள் அம்மா வழி, தாத்தா- பாட்டியின் பண்ணை வீட்டில் 5 நாட்கள் விடுமுறையைக் கழிக்க, பெக்கா ஜேமிசன் என்ற சிறுமியும் அவளது தம்பி டைலரும் வருகிறார்கள். முதல் முறையாக தங்கள் தாத்தா- பாட்டியை சந்திக்கும் பெக்கா மற்றும் டைலர், அவர்களுடன் தங்கும்போது சில அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் 'தாத்தா பாட்டி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையையும் கண்டறிகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை. 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட 'தி விசிட்' திரைப்படம், 98.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய அளவிலான வசூலைக் குவித்தது. அதன் பிறகு, அவர் எடுத்த 'ஸ்ப்ளிட்' (2016), 'கிளாஸ்' (2019) திரைப்படங்கள் மீண்டும் ஷியாமளனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தின. "ஹாலிவுட்டில் என்னைப் போல புகழையும் ட்ரோல்களையும் பார்த்த இயக்குநர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை. 'தி விசிட்' திரைப்படம் எடுக்கும்போது, 'நான் அனைத்தையும் இழக்கப் போகிறேன்' என்ற பயமும் இருந்தது, மறுபுறம் காமெடியும் ஹாரரரும் கலந்த ஒரு கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வெற்றி என்பது எப்போதும் ஒரு கத்தி முனையில் நிற்பது போல தான்" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். மனோஜ் நைட் ஷியாமளன், இந்திய இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். "இந்தியர்கள் என்றாலே காதல், 5 பாடல்கள் அல்லது நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் நிலவும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் மிக எளிய த்ரில்லர் கதைகளால் பிரபலமடைந்தவர் மனோஜ். 'சைன்ஸ்', 'தி வில்லேஜ்' போன்ற திரைப்படங்களில், நம் நாட்டு கதைகளையே ஹாலிவுட்டுக்கு ஏற்றார் போல வடிவமைத்திருப்பார். 'ஒரு இந்தியராக இருப்பது' என்ற தடையையே தனது பலமாக மாற்றி ஹாலிவுட்டில் வெற்றி பெற்றவர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்தியக் கலைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி தான்" என்று ஜா.தீபா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ed01yv466o
  6. இது ஒன்றும் முதல் தடவை நடக்கும் விபத்தல்ல இதற்கும் முன்னரும் நடந்துள்ளது என்பதுதான் நிலமையின் தீவிரத்தினை உணர்த்துகிறது. ஒரு கூட்டத்தினை கூடவா பாதுகாப்பாக நடத்தமுடியவில்லை இவர்களுக்கு? ஆனால் தமிழக அரசியல் சாக்கடையில் இது ஒரு சாதாரண விடயமாக போய்விடும், பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களுக்கு வழமையான வருத்தம், உதவி தொகை என கடந்து விடுவார்கள், ஆனால் அந்த குடும்பங்கள் மட்டும் மீள முடியாத இழப்பில் இருந்து கொண்டே இருக்கும். இன்னும் சில காலங்களின் பின்னர் இன்னொருவர் வருவார் மாற்றம் கொண்டுவருகிறேன் என, ஆனால் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இருக்காது, ஆனால் அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் இருக்கும். தலமை பண்பு என்பது இயல்பாக வரும் விடயமாக இருந்தாலும் அதற்கான கற்கை நெறிகைகளினூடாகவும் பயிற்றுவிக்கிறார்கள், முதலில் தேர்தல் ஆணையகம் தேர்தலில் ஈடுபடும் அனைவருக்கும் இந்த கற்கை நெறியினை கட்டாயமாக்க முற்படவேண்டும். முதலில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு காணப்பட்டபோதும் குறித்த கட்சி கூட்டம் நடத்த அனுமதித்த அரசும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும், பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் (எதிர்காலத்தில் இவ்வாறு ஒரு தவறு நிகழாது), அதுதான் ஒரு நல்ல அரசிற்கு அடையாளம்; அவ்வாறு நிகழாவிட்டால் அந்த அரசு கூட இந்த நிகழ்விற்கு காரணகர்த்தாக்களே.
  7. Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்.
  8. 8. படமின்றி அமையாது பயணம் -------------------------------------------------- பயணம் போனால் அங்கங்கே படம் எடுத்து அங்கே இங்கே போடுவது இன்றியமையாதது. ஆனாலும் கடந்த வருடங்களுக்கு இந்த வருடம் மானிடர்களிடையே இந்தப் போக்கு கொஞ்சம் குறைந்தது போலத் தெரிகின்றது. பூமியில் குப்பை, எவரெஸ்டில் குப்பை, விண்வெளியில் குப்பை என்பது போல டிஜிட்டல் குப்பை என்றும் ஒன்று உள்ளதா என்று தெரியவில்லை. இந்த 1 அல்லது 0 என்ற எண்களின் தொகுப்பாக இருக்கும் மொத்தத்தையுமே உடனடியாகவே பூமியில் இருந்து அழிக்க வேண்டிய அவசரம் ஒன்று வந்தால், அதை எப்படிச் செய்யலாம் என்ற யோசனையும் வந்தது. விமானத்தில், இருட்டில், சுற்றிவர எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கொட்டக் கொட்ட முழித்திருந்தால், இப்படியான யோசனைகள் வரத்தான் செய்யும். வேற்றுக் கிரகவாசிகளையும், என்னுடைய டிஜிட்டல் குப்பை யோசனையையும் கலந்து ஒரு கதை வந்தால், அது இயக்குனர் ஸ்பீல்பேர்க்குக்கு அடுத்த ஒரு படத்திற்கு ஒரு உதவியாகக் கூட அமையலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து பற்றியும் ஒரு யோசனை வந்தது. விசாரணையின் முடிவு என்னவானது என்று தெரியவில்லை. ஒரு விமானியின் மேல் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிங்கம் மற்றும் பல காட்டு மிருகங்கள் தங்களின் இறுதி முடிவும், அந்த நாளும் தெரிந்தவுடன், கூட்டத்தை விட்டு தனியே போய் விடுமாம். அப்படியே தனியே எங்கோ போய், அவை தங்கள் வாழ்க்கைகளை தனியே முடித்துக் கொள்ளுமாம். பல வருடங்களின் முன் ஒரு நாள் காலையில் இங்கு வீட்டின் பின் வளவுக்குள் நிற்கும் கொய்யா மரமொன்றின் அடியில் ஒரு கறுப்பு பூனை படுத்திருந்தது. நான் அதன் அருகே போய்ப் பார்த்தேன். அது அசையாமல் கண்ணை மட்டும் மெதுவாகத் திறந்து பார்த்தது. நான் அதை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் மனைவியும் அதைப் பார்த்தார். என்ன, பூனை ஒன்று அசையாமல் படுத்திருக்குதே என்றார். இன்று அல்லது நாளை அதன் காலம் முடியப் போகுது போல, அதை அப்படியே விட்டு விடுங்கள் என்றேன். அடுத்த நாள் காலை அதன் காலம் முடிந்திருந்தது. அது ஏன் தேடி இங்கே வந்தது என்று தெரியவில்லை. அந்த இந்திய விமானியும் தன் முடிவை முன்னரே அறிந்திருந்தார் என்றால், அவர் மட்டும் தனியே எங்காவது போயிருந்திருக்கலாம். இப்படியே இருந்தால் 14 மணி நேரப் பயணத்தில் 14 ஆயிரம் யோசனைகள் வரும், அதனால் ஏதாவது சில படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று சின்னத்திரையில் தேடினேன். 'Nebraska (நெப்ராஸ்கா)' என்ற படத்தை பற்றிய சிறிய விவரம் வித்தியாசமாக இருந்தது. 2013 ம் ஆண்டில் வெளியான அது ஒரு கறுப்பு - வெள்ளை படம். நெப்ராஸ்கா என்றவுடன் மனதில் வரும் பெயர் Warren Buffett. உலகப் பணக்காரராக மாறி மாறி வந்து போகின்றவர்களில் இவரும் ஒருவர். இப்பொழுது 95 வயது. நெப்ராஸ்காவிலிலேயே வசிக்கின்றார். முன்னர் அவரிடம் அலைபேசி இருக்கவில்லை என்றார்கள். இப்பொழுதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை.இவரை விட இவரின் தனிப்பட்ட செயலாளர் அதிக வரிகள் கட்டுவதாகச் சொல்லி, அமெரிக்காவின் வரி முறைமையை கேள்விக்கு உண்டாக்குபவர்களும் உண்டு. இவரின் வீடு கூட ஒரு சிறு ஊரில் இருக்கும் சாதாரண ஒரு சிறு வீடாகவே படங்களில் இருந்தது. அவருக்கு ஒரு தனிப்பட்ட செயலாளரும், பங்குச் சந்தையில் பங்குகளும் உண்டு என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், என் வாழ்க்கையும் அவர் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. நான் அவரை விட அதிகமாக அமெரிக்க அரசுக்கு வரி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் போல. நெப்ராஸ்கா படம் போல நான் சில படங்களை முன்னரேயே பார்த்திருக்கின்றேன். ஒரு மிகவும் வயதான தந்தையும், மகனும் ஒரு நீண்ட பிரயாணம் போவதே கதை. படத்தின் ஆரம்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும், குடும்பத்துக்கும் இடையே மன விலகல்கள், மனஸ்தாபங்கள் என்பன இருக்கும். முதலில் மகன் தந்தையுடன் பயணம் போக மறுப்பார். பின்னர் வேறு வழியின்றி போவார். வழி வழியே நிகழும் சில நிகழ்வுகளால் தந்தையை மகனும், மகனை தந்தையும் புரிந்துகொள்வார்கள். இப்படியான முன்னர் பார்த்த ஒரு படத்தில் ஒரு தந்தையும் மகனும் பிரான்ஸிலிருந்து மெக்காவிற்கு போகின்றார்கள். இறுதியில் மெக்காவில் தந்தை இறந்து போகின்றார். நெப்ராஸ்காவில் தந்தை இறக்கவில்லை, ஆனால் இப்படியான ஒரு கதைக்கு இப்படியான சில நிகழ்வுகள் இருந்தே ஆக வேண்டும் என்பது போல காட்சிகள் வந்து கொண்டிருந்தன. படம் பரவாயில்லாமல் இருந்தது. சில காட்சிகளில் நடிகர்கள் நன்றாகவே ஒன்றிப் போய் இருந்தார்கள். சில இடங்களில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது போலவும் இருந்தது. சில நாட்களின் பின்னர் இந்தப் படத்தை பற்றிய விபரத்தை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தூக்கி வாரிப் போட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்தப் படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்ககான விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் பற்பல விருதுகள் உலகெங்கும். நான் தான் படத்தை சரியாகப் பார்க்கவில்லை போல. எனக்குள்ளும் ஒரு புளூ சட்டை மாறன் தூங்கிக் கொண்டிருக்கின்றார், அவர் அன்று விமானப் பயணத்தில் என்னுடன் சேர்ந்து முழித்து இருந்து இந்தப் படத்தை பார்த்திருக்கின்றார் போல. அடுத்த படமாக மிகவும் பிரபலமான, விருதுகள் வாங்கிய 'லிங்கன்' படத்தை தெரிவுசெய்தேன். நல்ல படம், சிறந்த இயக்குனர், பல விருதுகள் வாங்கிய படம் என்று எனக்கு நானே சொல்லி, புளூ சட்டை மாறனை இல்லாமல் ஆக்கினேன். படம் நன்றாகவே இருந்தது. சிரிக்காதீர்கள்.......... உண்மையிலேயே நல்ல ஒரு படம். ஆபிரகாம் லிங்கன் மீது பெரும் விருப்பம் எப்போதும் உண்டு. அவர் தெருவிளக்கில் படித்தார் என்ற தகவலும் (உண்மையோ பொய்யோ), அவரது கனிந்த முகவெட்டும், அதனுடன் ஒட்டிப் போகும் தாடியும் அவர் உண்மையில் என்ன செய்தார் என்பதையும் மீறி அவர் மீது மிக நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது. லிங்கனாக நடித்திருந்தவர் அபாரம், நான் நினைத்திருந்தத லிங்கனையே கண் முன் நிறுத்தினார். இக்கட்டான சூழ்நிலைகளில் லிங்கன் சின்னச் சின்ன கதைகள் சொல்லுகின்றார். நிகழ்வுகளையே கதையாகச் சொல்லுகின்றார். அந்தக் கதைகளில் சிரிப்பும் இழையோடுகின்றது. எந்தச் சுழ்நிலையையும் தாண்டி, செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கின்றார். ஒரு தலைவன் எனப்படுபவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றது. இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகின்றார். நல்ல தலைவர்கள் இப்படித்தான் இறக்க வேண்டும் போலவும். இனிமேல் இந்தப் பயணத்தில் எந்த படமும் பார்க்க முடியாது. லிங்கன் மனதை விட்டு இப்போதைக்கு போகமாட்டார். எப்படியோ நேரம் ஓடி, ஒரு காலத்தில் லிங்கனின் நாடாக இருந்த நாட்டில் விமானம் இறங்கியது. (முற்றும்.) ** அனபான கள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆதரவும், தொடர் வாசிப்பும், கருத்துகளுமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது.....................🙏.
  9. https://www.facebook.com/share/17374e3Pc1/ தான் இருந்த வாகனத்திற்குள் விளக்கை அணைத்து மீண்டும் போட்டு மக்கள் ஆரவாரம் செய்து தெரிந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் செய்தத ரசித்திருக்கிறது இந்த நடிக மாமேதை....
  10. நாங்கள் விலங்குகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை. எங்களிடமும் வடக்கிருந்து மரணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போ எல்லாம் மருந்து மாத்திரைகளில் வாழ்வு போய்க் கொண்டிருப்பதால் திசைகளை எல்லாம் மறந்துவிட்டோம். “கப்பலில் வந்த கொண்டையினரை திறக்க கதாநாயகன் வெளிப்படுவார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பார்த்தால் அவர் அந்த நாட்டு மொழி பேசுவார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்க்க”, சும்மாதானே கொண்டையினருக்குள்ளே இருக்கிறேன் என்று நாலு நாளா உங்கள் மொழியை படித்தேன் என்று அவர் சொல்லுவார்”.புஸ்பா 2 படத்தில் இந்தக் காட்சியைச் சொல்லி “யாருக்கு கதை விடுறீங்கள்?” என்று புளூச் சட்டை மாறன் டைரக்டரை வாங்கியிருப்பார். படத்தைப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு கனவுக் காட்சி. ஆக படங்களை பார்க்க வைக்க ஒரு புளூச்சட்டை மாறன் தேவைதானே. நீங்கள் கதை சொன்னவிதத்தில் கூடவே நானும் உங்களுடன் பயணித்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். நன்றாகச் சொன்னீர்கள். பலதையும் கோர்த்து ஆக்கபூரவமான விசயங்களையும் சேர்த்துச் சொன்னீர்கள். ஏன் எங்களையும் கூட உங்களுடன் சேர்ந்து எழுத வைத்தீர்கள். நன்றி யசோதரன். ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை
  11. பூனையாயினும் ஒரு நல்ல ஆத்மா தான் நிம்மதியாய் வாழ்வை முடிக்க ஒரு இடத்தை தெரிந்துவைத்திருக்கும் . .......அதன் கணிப்பு வீண் போகவில்லை . .....நிஜமாகவே ஒரு நல்ல இடத்தைத்தான் தெரிந்தெடுத்து வைத்திருக்கு ......கதையும் மிக மிக நன்றாய் இருந்தது . ......! 👍
  12. இதில் எல்லோரையும் விட மிக நுட்பமாக அரசியல் செய்பவர் சீமான் தான். இப்போது அணைப்பது போல அணைத்து அடுத்த சனிக்கிழமை வெளியே வராமல் வந்தாலும் சனத்தை சேர்க்க முடியாதநிலையை அல்லது இப்படியே அரசியலில் இருந்து ஒதுங்கிப்போகும் வலையமைப்பை அன்புக்கரம் கொண்டு வடிவமைக்கிறார். இதனால் ஒரு கல்லில் பல மாங்காய்கள்.
  13. இரண்டு சோற்றுப்பானையே இருக்கு.
  14. சுவியர் வெள்ளிக்கிழமை தான் வாழைப்பூ வாங்கி கொத்து கொத்தென்று கொத்தி வறுத்து சாப்பிட்டோம். இன்னமும் மிச்சம் இருக்கிறது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.
  15. செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்குற இந்த தம்பிக்கு தவெக கூட்டத்தில் என்ன வேலை குணசேகரன் சார்? சீமான் ஒழிக சீமான் சாகனும் சீமானை வர சொல்லுங்க சீமான குத்தி கொல்லணும் சொன்னவன் எவனும் வரல... சங்கு சுட்டாலும் வெண்மைதான் 🙌"
  16. இது ஒரு திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிது.கரூரில் செய்தில்பாலாஜியின் தொகுதிக்குள் செந்தில் பாலாஜி எந்த எல்லைக்கும் போகக் கூடிய அரசியல்வாதி.கடந்த தேர்தலில் மக்களை அடைத்து வைத்து உதயநிதி படத்தைப்போட்டு மாற்றுக்கட்சிகளின் பிரச்சாரக்கூட்டத துக்கு போகவிடாது தடுத்தவர்.தலைமைக்கு நெருக்கமானவர்.விஅஅஜை வெளியில் வந்து பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்காவிட்டால் விஜையின் அரசியல் இருப்பு மட்டுமல்ல சினிமா இருப்பும்கேள்விக்குள்ளாக்கப்படும்.ஆகவே விஜை தனித்துப்போட்டி என்பதை விடுத்து திமுக வைத் தோற்கக்கூடிய சக்திகளுடன் கூட்டணி சேரவேண்டும்.
  17. “ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார் 28 Sep, 2025 | 09:12 AM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்துள்ளார். இலங்கை - சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 - 21 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்தில் நடைபெற்றது. இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இச்செயலமர்வில் பங்கேற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வேளையிலேயே நிஹால் அபேசிங்கவின் கருத்தை மறுத்ததுடன் தாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருவதாகவும் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்தார். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்குத் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்து இயங்கவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார் https://www.virakesari.lk/article/226278
  18. சுவியர்... வாழைப் பூவின் நரம்பு எடுக்கின்ற ரெக்னிக் அருமை. (காணொளியின் 3:30´வது வினாடியில் உள்ளது.) அடுத்தமுறை வாழைப்பூ வாங்கும் போது இதே முறையில் செய்து பார்க்க வேண்டும்.
  19. இரண்டு பேரும் ஒரே கடையில்தான்... சோறு சாப்பிடுகின்றவர்களாம். 😂
  20. [ நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும். ] சரியான கருத்து
  21. https://www.facebook.com/share/v/1B5J2FpzDu/ https://www.facebook.com/share/1BchKSNCU6/ தூக்கம் தொலைந்த இரவானது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல. திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்? ஊடகங்களுக்கு ஏதாவது கொஞ்சம் அறிவுண்டா? ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேமரா கிளம்பிட்டார், கார் இங்கே, பஸ் இங்கே. சிரிக்கிறார், கை அசைக்கிறார் , மாஸ் என்று ஏகத்திற்கு hype செய்த உங்களுக்கு வெறும் டி ஆர் பி வெறி . கால தாமதமாக புறப்பட்ட விஜய் . காத்திருக்கும் ரசிகர்கள் . அவதியில் அல்லாடும் மக்கள் என்று செய்தி வந்திருக்க வேண்டும் ! இல்லை சரி , நாமக்கலில் சிலர் மயங்கி விழுந்தனர். பெயர் பலகை பெயர்ந்து நொறுங்கி சிலர் காயம் . அதை எழுதி அடுத்த இடத்திலிருக்கும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தீர்களா?இல்லை கரூர் கூட்டத்தில் நெரிசல், வாகனம் செல்ல இயலவில்லை. மேலும் கூட்டம் வேண்டாம் என்று எச்சரிக்கையாவது செய்தீர்களா? இல்லை உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்! அப்படி ஏதும் இருக்க வாய்பில்லை . இந்தப் பதிவிற்கு, “ நேரலையில் முகத்தை காட்டும் ஆசையைத் தூண்டிய ஊடகங்களைப் பொறுப்பாக்கி வழக்குப் பதிய வேண்டும்” எனப் பின்னூட்டம் போட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தேன். வீட்டில் இருக்கும் நாட்களில் மாலை ஆறு மணிக்குச் சன் தொலைக்காட்சியின் செய்திகளோடு உணவுநேரத் தலைப்புச் செய்திகளைப் பார்ப்பதும் கேட்பதும் தவறுவதில்லை. அதல்லாமல் உணவுநேரத் தலைப்புச் செய்திகள் மூன்றும் கேட்கும் பட்டியலில் உண்டு. தமிழ்த்தொலைக்காட்சி அலைவரிசைகளில் புதியதலைமுறையும், சன்செய்திகளும் தவறாமல் கேட்கும் பட்டியலில் இருக்கின்றன. வாரத்தில் சில நாட்கள் கேட்கும் அலைவரிசைகளாகப் பாலிமர், தந்தி, நியூஸ் 18. காலையில் ஒன்பது மணிக்கு முன்பு சாப்பிட உட்கார்ந்தால் ஒன்பது மணித் தலைப்புச் செய்தியைக் கேட்பது வழக்கம். பிற்பகலில் இரண்டு மணி தலைப்புச் செய்தி; இரவு உணவின் போது 8 மணிக்குரிய தலைப்புச் செய்திகள். விஜயின் மதுரை மாநாட்டு நேரலைகளைப் பார்த்தபின்பு, “சனிக்கிழமை” நேரலைகளைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்ததால் நேற்று பகலில் நாமக்கல், கரூர் பயணங்களைப் பார்க்கவில்லை. பகலெல்லாம் கோவில் திருவிழாக்களை நேரலையாக வருணிக்கும் பட்டிமன்றப்பேச்சாளர்கள் போல ‘விஜயின் வருகைக்குக் கட்டியங்கூறிய அலைவரிசைகள், திரும்பவும் நேரலையாக மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்து நடந்த ஒவ்வொன்றும் இரவு முழுவதும் தூக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டன. கூட்டத்தை நடத்திவிட்டுப் பொறுப்பில்லாமல் போய்விட்ட அந்த நடிகன் மீதும், அவனைப் பார்க்கவும் தலைவனாக ஆக்கவும் வந்த கூட்டத்தின் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தபோது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட முட்டாள்களின் கூச்சல்கள். ஆளுங்கட்சியைக் குறைசொல்லித் திசை திருப்பும் வாதங்கள் எனத் தமிழ்நாட்டைப் பைத்தியக்காரர்களின் சிறைச்சாலையாக ஆக்காமல் ஓயமாட்டார்கள் என்று தோன்றியது. அதற்கு இடம் தர முடியாது எனக் காட்டத் தொடங்கினார் தமிழ்நாட்டரசின் முதல்வர். அரசு நிர்வாகம் என்ன செய்யும் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிநார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கரூர் நோக்கிக் கிளம்புகிறார் என்ற செய்திக்குப் பின் எல்லாம் மாறத்தொடங்கின. கரூரின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் மருத்துவமனைக்குப் போய்விட்டார். இன்னொரு அமைச்சர் அன்பில் மகேஸ் வந்துகொண்டிருந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர்,காவல்துறை, மருத்துவத்துறை எல்லாம் களம் இறங்கியபின் தொலைக்காட்சிகளின் நேரலைக் காட்சிகளும் த்வனியும் மாறத்தொடங்கியது. கணினித் திரையில் முகநூலும் தொலைக்காட்சியில் நேரலை ஓட்டங்களும் என மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் நள்ளிரவு தாண்டி விட்டது. படுக்கப் போனால் தூக்கம் வரவில்லை திரும்பவும் தொலைக்காட்சியைத் திறந்தால் சென்னையிலிருந்து காவல்துறையின் உயரதிகாரியின் செய்தியாளர் சந்திப்பு. சொல்ல வந்ததைச் சொல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளை அனுமதித்ததில் கொஞ்சம் பதற்றம். முதல்வர் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அவற்றைக் கேட்டுவிட்டுப் படுத்தால் தூக்கம் வரவில்லை. திரும்பவும் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களையும் வாசித்துக்கொண்டிருந்தபோது முதல்வர் வருகையும் மருத்துவமனையில் இறந்தோர்களுக்குச் செலுத்திய அஞ்சலிக் காட்சிகளும் உலுக்கி விட்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அவர் பேசிய அந்த உரை பக்குவமான அரசியலின் அடையாளம். ******** இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் கட்சி மட்டுமே காரணமல்ல; அவரைப் பின்னின்று இயக்கும் சக்திகளும் தான் காரணங்கள். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நேரலையில் காட்டித் தங்கள் வியாபாரத்தையும் அரசியல் தந்திரங்களையும் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதல்ல; ஆனால் அவர்களால் அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பதுதான் எப்போதும் நான் சொல்லும் வாதம். தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தான் பேசுகிறார். அவர் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல். அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளிவிடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது. தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக் கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள். அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்றார். விஜய்காந்த் எனது முன்னோடி என்றார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய் - மூவரும் நம்பியது மதுரை மண்ணை. இவர்களின் ஆசைகளுக்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள் அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள், நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள். நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.
  22. மகிந்த, கோத்தா, ரணில் ஆட்சியில்…. போதை கும்பல்களிடம் இருந்து கைப்பற்றிய கஞ்சாவை மீண்டும் சந்தையில் விற்பனைக்கு விடுவதும், வாள் வெட்டு கோஷ்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அதுகள் செய்யும் அட்டகாசங்களை கண்டு கொள்ளாமல் இருந்ததும் இந்த கேடு கெட்ட போலீஸ்தான்.
  23. இறந்தவர்களுக்கு அஞ்சலி ...இது ஒருவகையில் பொதுமக்களின் அறியாமை என்றுகூட சொல்லலாம். வீட்டில் நேரலையில் பார்க்க முடியாதா ? பசி ,நேரம் செலவிட்டு ,குடிக்க நீர் கூட இல்லாமல் சன நெரிசலால் அவஸ்தைப்பட்டு விஜய்யின் உரையைக் கேட்க வேண்டும் என்பது கடடாய மா ? ஜன நடமாடடம் உள்ள இடங்களில் நோய்த்தொற்று கூட ஏற்படலாம். கர்ப்பிணிகள் வயோதிபர் சிறுகுழந்தைகளை தவிர்த்திருக்கலாம். வரும் மக்களுக்கு என்ன முன்னேற்பாடுகள் செய்தார்கள். விஜய் பதில் சொல்ல வேண்டும். .
  24. இரான். இதில் முழுமையாக ஈரானை அக்கிரமிப்படத்திற்கு அமெரிக்கா இராணிவதுக்கு உள்ள அக்கறை பற்றி அறிவது. (அனால், இரானுக்கு உள்ளே இராணுவத்தை அனுபவது அமெரிகவ்வின் மேலாண்மை கேந்திர . அடிப்படையில் பின்னடைவு அல்லது பகுதியாக தேய்வு) தாய்வான், மற்றும் சீனாவின் விமந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து நவீன போர்விமானானங்களை நவீன தொழில் நுட்பத்தால் (EMAL) ஏற்றுவது, இறக்குவது முழுமை அடைந்து உள்ளது. அத்துடன் சீன விமானங்களும் மேற்கிற்கு சளத்தவை அல்ல என்பதை மேற்கு இப்போது அறிகிறது. இதுவே அமெரிக்கா தூது குழு (இதுவரையில் எந்த கவலையும் இன்றி இருந்த), சீனாவுட இராணுவ மட்டத்தில் நிலையான, திறந்த தொடர்பாடல் வேண்டும் என்று கேட்டு சென்று இருக்கிறது. இது அமெரிக்கா / மேற்கின் ஆழ்கடல் மேலாண்மை கணக்கை பாதிக்கிறது.
  25. வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு. நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST] தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்... மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார். விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது. சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது. அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே. ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது. ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம். சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள். அப்படியே நடந்துள்ளது. இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.
  26. ஒரு நடிகனை கடவுளாக பார்க்கும் சினிமா பைத்தியங்களை என்னவென்பது? மற்றும்படி விஜய் அரசியலுக்காக வந்த கூட்டம் அல்ல இது. சீமானின் அரசியல் கூட்டங்களில் நடக்கும் ஒழுங்குகளை பார்த்தாவது விஜய் கட்சியின் தொண்டர்கள் எனப்படும் ரசிகர்கள் பாடம் படிக்க வேண்டும்.
  27. நீங்கள் அப்பாவி, அப்படியே நம்பிவிட்டீர்கள் அவரை. எதுக்கு? உடனேயே குளியலறைக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு முக்கு முக்கி எடுத்து விடுங்கள் ஆளை, வேண்டுமென்றால் கொஞ்சம் நெருப்புத்தண்ணியையும் கலந்து விடுங்கள் . ஆள் கொஞ்சம் திமிறுவார் விடாதைங்கோ. அதைச்சொல்லுங்கோ! எதுக்கு பாவம் சிவன் கோவில் சாத்திரியாரை அழைக்கிறீர்கள்? அவரோடு என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உங்களுக்கு?
  28. காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=819010344143838 👈 யூடியூப் சமையல் பரிதாபங்கள்😁🤣
  29. அததெரண கருத்துப் படங்கள்.
  30. என் ஆசை என்னோடு ...........! 😍
  31. @குமாரசாமி //மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂 வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄// வாற கிழமை... உங்களுடைய அந்த பொன்னான ஐடியாவை கேட்க ஆவலாக உள்ளேன். 🙂 ஏனென்றால்.... குரங்குகளின் தொல்லை பெருந் தொல்லையாக கிடக்கு. 🤥 ஒரு குரூப் வந்தால் காரியமில்லை. கருங்குரங்கு, செங்குரங்கு, மந்தி, ஒரங்குட்டான், கொரில்லா என்று... பன்றி போலை கூட்டமாக வருகுதுகள். அதுகளை பிடித்து.... யாழ்ப்பாண முறையில் நலம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று திட்டமும் இருக்கு. 😂
  32. எல்லோரையும் இலவசமாக அவுஸ் கொண்டுபோய் பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.
  33. மீண்டும் பூனையா? அதுவும் கறுப்புப்பூனையா? உங்களின் வீட்டில் பூனைகள் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்கின்றன? உதுதான் சொல்லுறது இரவில் பயணம் செய்யக்கூடாதென்று. எல்லோரும் தூங்கும்போது நாமும் தூங்கி விட வேண்டும். இல்லையென்றால் உப்பிடித்தான் பகலில் வராத நினைவுகள் எல்லாம் வந்து பயமுறுத்தும்.
  34. இறந்த சிறுவர்களில் ஒருவர் ஓன்றரை, இரண்டு வயது இருக்கும் குழந்தை இறந்து விட்டது.அவரது தாயார் வாய் பேச முடியாதவர் அந்த தாய் போகும் வாகனத்தின் ஜன்னலில் அடித்து அழும் காட்சி பார்க்கவே முடியாமலிருந்தது.
  35. Published By: Vishnu 28 Sep, 2025 | 06:44 PM ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226346
  36. கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு! குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார். இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர். ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அவர்களில் அடங்குகின்றனர். மேலும், சில பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைபெற்றுவந்த பிக்குகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த உள்நாட்டு பிக்குகளின் இறுதி கிரியையகள் நேற்று இடம்பெற்றதுடன் உயிரிழந்த வெளிநாட்டு பிக்குகளின் உடலங்கள் அவர்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1448742

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.