Leaderboard
-
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்13Points12678Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்11Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87986Posts -
வீரப் பையன்26
கருத்துக்கள உறவுகள்9Points16477Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/01/25 in all areas
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
42 வது கேள்வியில் யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா என்று கேட்டிருந்தேன். Ashleigh Katherine Gardner 115 ஒட்டங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்றார். 13 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 5 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 5 புள்ளிகள் 3)கிருபன் - 5 புள்ளிகள் 4)புலவர் - 5 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 5 புள்ளிகள் 6)வாதவூரான் - 5 புள்ளிகள் 7)அகஸ்தியன் - 5 புள்ளிகள் 8)நியூபேலன்ஸ் - 5 புள்ளிகள் 9)ரசோதரன் - 5 புள்ளிகள் 10)வீரப்பையன் - 5 புள்ளிகள் 11) சுவி - 4 புள்ளிகள் 12) கறுப்பி - 3 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 3 புள்ளிகள் 14)வாத்தியார் - 1 புள்ளி 15)வசி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 2, 41 , 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.5 points
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
4 pointsஇவர்கள் பெங்களூரில் இருந்து கிளம்புமுன் தத்தமது ஜாதகத்தைக் கணித்திருக்க வேண்டும் ...........! 😇4 points -
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி அண்ண ஜக்கம்மாவை பற்றி உங்களுக்கு தெரியாது , நவம்பர் 2ம்திகதி கோப்பைய இந்தியா வெல்லுது அவுஸ்ரேலியாவை ஜக்கம்மா ஓட ஓட விரட்டி அடிக்க போரா லொள் யாழில் விளையாட்டு திரிகளில் எழுதுவது என்றால் பிடிக்கும்..................ஒரு மாதத்துக்கு இந்த திரியில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது😁🥰👍......................... அப்படி அடிக்கிறது என்றால் இந்த இரண்டு மகளிர்களால் தான் முடியும் , இவை தான் முரட்டுதனமாய் அடிக்கும் மகளிர்கள்.................3 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
3 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 2) 59 ஓட்டங்களினால் இந்தியா அணி இலங்கையை தோற்கடித்து இருக்கிறது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 4 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 4 புள்ளிகள் 3)கிருபன் - 4 புள்ளிகள் 4)புலவர் - 4 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 4 புள்ளிகள் 6)வாதவூரான் - 4 புள்ளிகள் 7)அகஸ்தியன் - 4 புள்ளிகள் 8)நியூபேலன்ஸ் - 4 புள்ளிகள் 9)ரசோதரன் - 4 புள்ளிகள் 10)வீரப்பையன் - 4 புள்ளிகள் 11) சுவி - 3 புள்ளிகள் 12) கறுப்பி - 2 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 14)வாத்தியார் - 1 புள்ளி 15)வசி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 2, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.3 points
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎2 points
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
தமிழ்நாட்டு காவல் துறை கரூர் பிரிவு இங்கு மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது. காவல்துறை dossier இல் உள்ள அதிகபட்ச High Risk பிரிவையும் தாண்டிய uncivilized hooligan mobs எனும் பிரிவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த instruction உம் அவர்களிடம் இல்லை. உண்மையாகவே இது imposition of Section 144 of the Code of Criminal Procedure (CrPC) in India, போன்ற ஒரு Procedure ஐ பாவித்து கையாளப்படவேண்டிய mobs. உண்மையிலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய இந்த stampede கரூர் இல்லாவிட்டாலும் வேறு எங்கேயாவது மிக விரைவில் நடந்திருக்கும்.2 points
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இல்லாத எந்தக் கட்சியும், சிறிதோ பெரிதோ புதிதோ பழையதோ, ஆளும் கட்சியையும் அரசையும் எதிர்த்தே அரசியல் செய்யும். புதிய தமிழகம் கூட திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. இந்த விடயத்தில் திமுகவின் மேல் முற்று முழுதாக குற்றமும் சுமத்தியிருக்கின்றது. அன்புமணி பிரிவு பாமகவும் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. அன்புமணி கரூரில் நின்று கொண்டே இரவு நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனைகள் செய்தீர்கள் என்று பத்திரிகையாளர்களின் முன் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். ஆளும் கட்சியையும், அரசாங்கத்தையும் எதிர்க்காமல் பிற கட்சிகளுக்கு அரசியலே கிடையாது. தவெக ஓடி ஒழிந்ததிற்கு அவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்தது அரசியல் செய்தார்கள் என்பது காரணம் அல்ல. விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும், நிர்மலும் தங்களின் செல்ஃபோன்களை ஆஃப் செய்து விட்டு தலைமறைவானது அவர்களுக்கு இந்த சூழ்நிலையை கையாளும் திராணி கிடையாது என்பதனாலேயே. தவெகவின் அந்த மாவட்டச் செயலாளரும் தலைமறைவாகினார். இதற்கு மேல் தவெகவில் ஒரு கட்டமைப்பும் கிடையாது. விஜய்யின் ரசிகர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு போயிருப்பார்கள். தவெகவிற்கு தொண்டர்களோ அல்லது ஒரு கட்டமைப்போ இருந்திருந்தால், அதில் சிலராவது மக்களுடன் நின்றிருக்கவேண்டும். இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருந்தால், எப்போது மக்களுடன் நிற்கப் போகின்றீர்கள்....... திமுக உங்களை அழித்து விடும் என்றால், இதற்குப் பிறகு திமுக ஓய்ந்து விடப் போகின்றதா......... இன்னுமொரு சூழ்நிலையில் மீண்டும் ஓடி ஒழியப் போகின்றீர்களா........... தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்தக் கட்சியாவது இப்படி முற்றாகப் பதுங்கிய வ்ரலாறு இருக்கின்றதா.................... முக்கியமாக நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லிய கட்சி ஒன்று, அது சம்பந்தப்பட்ட அனர்த்தம் ஒன்றில் இருந்து இப்படி ஓடிப் பதுங்கி இருந்தது உண்டா............2 points
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
2 pointsஆதவ் அர்ஜூனாவும் ஐந்து வயதிலேயே தாயை இழந்து விட்டதாகவும், அதே துக்கத்தையே இங்கேயும் அனுபவிப்பதாகவும் சொல்லிக் கொண்டு மறைந்திருக்கின்றார். ஆனாலும் அப்படியே 'புரட்சி...........புரட்சி...........' ஒரு ட்வீட் போட்டு விட்டு, அதை எதிர்ப்புக் காரணமாக அழித்தும்விட்டார். இவை ஒரு தலைமைக்குரிய ஒரு பண்பே கிடையாது. சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடும் தன்மைகளே இவை. மருத்துவக் காரணங்கள் இருந்தால், ஒரு தேசத்தையே அழிக்காமல், இவர்கள் இப்பவே ஒதுங்கிக் கொள்வது நலம். இப்பொழுது கூட இவர்கள் தங்களின் தவறுகளை உணராவிட்டால், இவர்கள் இறுதி வரை நிற்கப் போவது ஒரு சிறு வட்டம் ஆகவே இருக்கப் போகின்றது.2 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா 269 ஒட்டங்களை இலங்கைக்கு எதிரான போட்டியில் எடுத்திருந்தது. 41 வது கேள்வியில் இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? என்று கேட்டிருந்தேன். 12 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 2 புள்ளிகள் 2) ஆல்வாயன் - 2 புள்ளிகள் 3)கிருபன் - 2 புள்ளிகள் 4)புலவர் - 2 புள்ளிகள் 5)செம்பாட்டான் - 2 புள்ளிகள் 6)வாதவூரான் - 2 புள்ளிகள் 7)கறுப்பி - 2 புள்ளிகள் 8)அகஸ்தியன் - 2 புள்ளிகள் 9)நியூபேலன்ஸ் - 2 புள்ளிகள் 10)ரசோதரன் - 2 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 12)வீரப்பையன் - 2 புள்ளிகள் 13)வாத்தியார் - 1 புள்ளி 14) வசி - 1 புள்ளி 15) சுவி - 1 புள்ளி இதுவரை வினாக்கள் 1, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் 5) ஆரம்ப சுற்று போட்டிகளில் மழை காரணமாக போட்டிகள் நடைபெறாவிட்டால் அப்போட்டிகளுக்கான புள்ளிகள் எல்லோருக்கும் வழங்கப்படும் 6) அதிக ஒட்டங்கள், குறைந்த ஓட்டங்கள் பெறும் அணிகள், வீராங்கனை தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள், வீராங்கனைகள் சமமான ஓட்டங்கள் பெற்று இருந்தால் அவ்வணிகள், வீராங்கனைகளில் எதாவது சரியான பதிலை எழுதியவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். ( ஓட்ட விகிதப்படி புள்ளிகள் வழங்கப் படவில்லை). இதே போல பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். உ+ம் பாகிஸ்தான் வீராங்கனை ஒரு போட்டியில் 28 ஓட்டங்கள் வழங்கி 5 விக்கேற்றுகளை பெற்றார். அவுஸ்திரேலியா வீராங்கனை 30 ஒட்டங்களை வழங்கி 5 விக்கேற்றுக்களை பெற்றார். ஏதாவது ஒரு போட்டியில் வீராங்கனை ஒருவர் பெற்ற அதிக விக்கேற்றுக்கள் 5 எனில் 45 வது கேள்விக்கு பாகிஸ்தான் அல்லது அவுஸ்திரேலியா அணியை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்1 point
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 3) 89 ஒட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 7 புள்ளிகள் 2)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 3)கிருபன் - 7 புள்ளிகள் 4)புலவர் - 7 புள்ளிகள் 5) வாதவூரான் - 7 புள்ளிகள் 6) அகஸ்தியன் - 7 புள்ளிகள் 7) நியூபேலன்ஸ் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 5 புள்ளிகள் 12) கறுப்பி - 5 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 14)வாத்தியார் - 3 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 3, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
1 pointஇலங்கைக்கு வருகைதரும் இந்தியர்கள் இலங்கை வரும்போது சில்லறை பொருட்கள், புடவை, பட்டுதுணிகள், வேட்டி, இத்தியாதி, இந்திய உற்பத்திகளை இலங்கையில் விற்பது முன்னைய காலங்கள் தொடக்கம் நடைபெற்றே வந்தது. இவர்கள் சாதகம், கைரேகை பார்ப்பது மட்டுமன்றி, தமது அமைப்புக்கள் சார்பான பிரச்சாரங்களும் செய்வார்கள். நான் சிறுவயதில் எனது தாயாருடன் இவர்கள் தங்கிநிற்கும் கோயில் மடங்களுக்கு சென்றுள்ளேன். சூட்கேசுகளில் புடவைகள் தொடக்கம் விற்பனைக்கு வைத்துள்ள பலவித பொருட்களை காண்பிப்பார்கள். எவசில்வர்/சில்வர் தட்டுக்கள், குவளைகள் என பல்வற்றையும் வாங்குவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இவர்களிடம் வரும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆட்களும் வருவார்கள். 1983 பிரச்சனைகளுடன் இவர்களின் வருகை நின்றுவிட்டது என நினைக்கின்றேன். இப்போது மீண்டும் இலங்கை - இந்திய பயணங்கள் இலகுவாக்கப்பட்டு உள்ளதால் முன்னைய காலம் திரும்புகின்றது.1 point -
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சினிமாவில் சீமான் எத்தனை தசாப்தங்கள் இருந்தார்? தம்பி, பாஞ்சாலங்குறிச்சி தவிர அவர் இயக்கி சுமாராகவேனும் ஓடிய படங்கள் யாவை? அரசியலுக்கு வரும் முன் சீமான் சொந்தமாக கார் வைத்திருந்தாரா? நீலாங்கரையில் 6 கோடி பங்களா? மலைநாட்டில் பல ஏக்கரா காணி? சினிமாவில் சிங்கிள் டீ க்கு சிங்கி அடித்தபடி, திராவிட, கம்யூனிச மேடைகளில் ஏறி வாயை வாடகைக்கு விட்டு வாழ்க்கைபாட்டை ஓட்டியவருக்கு, முள்ளிவாய்க்கால் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. மட்டகளப்பில் தங்க-சுனாமி என்பார்கள். அத்தனை அழிவிலும் கூட தப்பிய பலர் வெளிநாட்டு உதவிகளை பகிர்கிறோம் என அளவுக்கு அதிகம் சொத்து குவித்தார்கள். சீமானுக்கு தங்க முள்ளிவாய்க்கால்.1 point
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 30 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பிராமணர் கோயில்களை இடிப்பது என்ற கருத்து மகாசேன மன்னரிடமிருந்து தொடங்கியதா?' மகாவம்சத்தின் கடைசி அத்தியாயம் மகாசேனனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாசேனன் மன்னன், சங்கமித்ரர் தேரரின் ஆலோசனையின் பேரில், மகாவிகாரையின் பிக்குகளுக்கு எதிராகச் சென்றார், அதனால், அது ஒன்பது ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. 'மன்னர் நிலம்' என்ற கருத்து [Crown land concept] இவரது காலத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பின்னர் மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப் படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. இதன் தொடர்ச்சியையே அல்லது நீட்சியே இன்றும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த அரசன் பகலில் ஆட்களையும், இரவில் பேய்களையும் அமர்த்தி பல பெரிய செயல்களைச் செய்தான் என்று மகாவம்சத்திற்கு மாறாக இராசவலிய கதை கூறுகிறது. இன்றும் அதன் தொடர்ச்சியை வேறு ஒரு கோணத்தில் காணுகிறோம். அதாவது பேச்சில் நீதியும் சமாதானமும் காணப்படுகிறது, ஆனால் செயலில் அதற்குத் எதிராக தனியார் காணிகள் கூட வலிந்து எடுக்கப்படுகிறது. அன்பும் பண்பும் போதித்த புத்தரின் சிலைகள் அல்லது ஆலயங்கள் கூட அங்கு வலிந்து நிறுவப் படுகின்றன. அவர் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் (மற்ற இரண்டு நூல்களைப் போல இருபத்தி ஏழு அல்ல) மற்றும் அவரது திறமையான பணியின் காரணமாக தெய்வீக உலகத்திற்குச் [சொர்க்கத்துக்கு / divine world] சென்றார். மகாவம்சத்திற்கும் இராசவலியக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்? ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. இலங்கையில் மகாசேனன் காலம் முதல் சைவ கோவில்கள் இடித்து புத்த ஆலயங்கள் கட்டப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்றாலும் இவை காலப்போக்கில் அதிகரித்தும், அரச ஆதரவு பெற்றும் இன்று வடக்கு கிழக்கில் பலவந்தமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. உதாரணமாக, வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தச் செயல் வகைகள் மாற்றப்பட்ட வடிவங்களில் தொடர்கின்றன – குறிப்பாக இனமத அடிப்படையிலான அதிகார நிலைப்பாடுகள், பௌத்தமயமாக்கல், மற்றும் பழமையான தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிகள் என அவையை பிரித்துக் கூறலாம். இந்தவகையில், அண்மைய எடுத்துக்காட்டாக முக்கியமான இரண்டைக் கூறலாம். முதலாவது நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆயுத படையினரின் உதவியுடன், அரச நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் குருந்தூர்மலை, முல்லைத்தீவில் பலவந்தமாக கட்டப்பட்ட புத்த விகாரை மற்றது யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில், எந்தவித அனுமதியும் இன்றி, மீண்டும் முன்னையபாணியிலேயே, காணி உரிமையாளர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் கட்டப்பட்ட புத்த விகாரை ஆகும். இவ்வளவிற்கும் இந்த இரண்டு பகுதியும் முற்றிலும் தமிழர் வாழும் இடம் ஆகும். ஒன்று மட்டும் விளங்குகிறது. புத்த மதம் பற்றி பேசுபவர்கள் பலருக்கு புத்தரின் போதனைகளில் விளக்கம் அல்லது அறிவு இல்லை என்பதே, அது ஆகும், முக்கியமாக அதன் தலைவர்களுக்கும் குருமார்களுக்கும்! Part: 30 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did the concept of demolishing Brahminical temples begin with King Mahasena?' The last chapter of the Mahavamsa is dedicated to Mahasena. The king Mahasena, on the advice of the thera Samghamitta, went against Bikkhus of the Mahavihara, and it was unoccupied for nine years. The Crown land concept came into effect during his time. The king later demolished three temples of the Brahminical (Hindu temples) gods, one at Gokanna (Trincomalee), and another at Erakaville, and the other at the Brahmin village Kalanda (Kanthalai). Mahasena seems to be busy with destroying the seven stories high Lohapasada, and later with demolishing the Brahminical temples as per the Mahavamsa. The Rajavaliya, in contrast with the Mahavamsa, says that this king did many great deeds by employing men in the daytime and demons in the night time. He reigned twenty-four years (not twenty-seven as in the other two chronicles) and went to the divine world because of his meritorious work, what a contrast between the Mahavamsa and the Rajavaliya. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 30 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 30 A https://www.facebook.com/groups/978753388866632/posts/31577049141943655/?1 point
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂 சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.1 point
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
1 pointஇந்திய றோ புலனாய்வு அமைப்பினரும்…. ஜோதிடர்கள், புடவை வியாபாரம் செய்வது போன்ற போர்வையில் இலங்கையில் தங்கி உளவு பார்க்கின்றவர்கள். முன்பு அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது.1 point -
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமானின் விருப்பம் தனி தமிழ் நாடா? அப்படியானால் அதை வெளிப்டையாக அறிவித்து இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டை பிரிப்பதற்கான போராட்டடதை தொடக்க அவருக்கு என்ன தடை உள்ளது? எந்த தடையும் இல்லையே! அதை செய்ய அவருக்கு என்ன பைத்தியமா! அவரது உண்மையீன விருப்பம் தமிபிமாரை உசுப்பேற்றி அரசியலில் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதே. அந்த நோக்கத்தில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.1 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point
- ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
தோழர்கள் நடைமுறைக்கு ஒவ்வாத இடதுசாரிக்கொள்கைகளை கைவிட்டு கனகலாம் ஆகிவிட்டது ( 2015 இருந்து ), அப்படி செய்தபடியால் தான் அவர்களை மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த சொத்துக்கள் வெளியிடும் பிரகடனத்தில் பல தோழர்கள் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் 😋. https://ads.ciaboc.lk/1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையா உங்களின் பூஸ்ட் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது . ......கந்தப்புவே எதிர்த்தாலும் முதலாவதா வந்து கல்லா கட்டுறம் .........! 👍1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- மனதுக்கு பிடித்த BGM Background Music
1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வயது கூட தான் ஆனால் இவான்ட பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடிச்சு இருக்கு...................இந்த உலக கோப்பையோட பல இலங்கை மகளிர் ஓய்வை அறிவிப்பினம் 19வயதுக்கு உள் பட்ட இலங்கை மகளிர் நல்லா விளையாடுகினம் ஆன படியால் அடுத்த வருடம் இவர்களின் இடத்தை இளம் மகளிர் பிடிப்பினம்👍.............................1 point- கருத்து படங்கள்
1 point1 point- அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?
சரி, உங்களையாவது நினைவில் வைத்திருந்தாரா? வெளியே உரத்துச் சொல்லிப்போடாதேயுங்கோ பிடிச்சுக்கொண்டுபோய் பரிசோதனை எலியாக்கி விடுவார்கள் உங்களை.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டிகள் முடிய சிட்னியில் இரவு நேரம். மறுநாள் காலையில் புள்ளிகள் வழங்குவேன்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
1 pointபொதுவாக உடல், உள பிரச்சனைகளை வைத்து நாம் ஒருவரை ஒரு தொழில் அல்லது சேவையில் இருந்து ஒதுங்க சொல்லமாட்டோம். ஆனால் இதற்கு அரசியல் விதிவிலக்கு. நாளைக்கே ஒரு பெருவெள்ளம் அல்லது சுனாமி வந்து சில நூறு உயிர்கள் போனதும், முதல்வர் போய் வீட்டுக்குள் பூட்டி கொண்டால் அது சரிவராது.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம். முதல் 6 விக்கட்டும் 126 ஓட்டங்களுக்கே விழுந்துவிட்டது - 27வது பந்துப் பரிமாற்றத்தில். அதே நிலையில், இலங்கை, 5 விக்கட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவைப் போல் துடுப்பர்கள் அவர்களிடம் இல்லை. டீப்தியும் அமன்ஜோத்தும் இன்றைய நாயகிகள்1 point- 'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
மிகவும் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இந்த இழப்பிலும் சகலரும் அரசியல் அனுகூலங்களை கணக்குப் போடுகின்றார்களோ தவிர, இழந்து நிற்கும் குடும்பங்களுக்காக ஒரு தார்மீக ஆதரவைக் கூட காட்ட முன்வருகின்றார்கள் இல்லை. இங்கு யாழ் களத்தில் கூட ஒவ்வொரு பக்கங்களிலும் இருந்து வரும் இணைப்புகளும் தங்களின் பக்கத்தை இந்தப் பாதகத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் ஒரு தலைப்பட்ச நியாயங்களும் மற்றும் இதில் ஆதாயம் தேடும் ஒரு போக்குமே அன்றி, ஒரு நடுநிலையான பார்வையினூடு நிகழ்வுகளை ஆராய்வதாக இல்லை. இத்தனைக்கும் இங்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களும் இணையத்திலேயே இருக்கின்றது. இந்தப் பாதகத்தை திட்டமிட்டவர்கள், அப்படி யாராவது இருந்தால், மேல் வரும் அதே அருவருப்பும் கோபமுமே, ஓடி ஒழிந்த விஜய் மீதும், அவரது இரண்டாம் கட்ட தலைவர்களின் மீதும் வருகின்றது. 'த்தூ..............' என்று விஜய்காந்த் ஒரு தடவை பேசியதும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் நினைவில் வருகின்றது.1 point- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
1 pointஎது எப்படி இருப்பினும் கரூர் அசம்பாவிதத்தை வைத்து ஏனைய தமிழ்நாட்டு கட்சிகள் நல்ல அறுவடை செய்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இவர் கைது செய்யப்பட வேண்டியவர்தான்.ஏனென்றால் சம்பவம் நடந்த உடனேயே எவ்வித ஆதாரமும் இல்லாமல் தேவையில்லாத குற்றங்களை மற்றவர்கள் மீது அடுக்கிக்கொண்டிருந்தார்.1 point- 'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதையும் அவருடன் சேர்ந்திருக்கும் யாருமே சரியான ஒரு அரசியல் பாதையை விஜய்க்கு வகுத்துக் கொடுக்க முடியாதவர்களுமாக இருப்பதையும் இந்த ஒளிந்து இருக்கும் நிலை காட்டுகின்றது ஆனாலும் அரசியலுக்கு வந்துவிட்டால் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு முன்னேறலாம் என்பது விஜயிக்குத் தெரியாமலா இருக்கும் விஜய் என்ற ஒரு மக்கள் ரசிக்கும் நபரை அரசியலில் யாருமே எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் அப்படியான நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்து நேரடியாகவே ஆழும் தரப்பினரை குறி வைத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா ? அல்லது அந்த விஜயின் கட்சியையே கருவிலே அழிக்க நினைப்பார்களோ? ஆகவே தான் விஜயின் குஞ்சுகளுக்கு கொஞ்சம் புத்தி இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.1 point- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
விகடனின் இந்த கட்டுரையை முன்பு வாசித்தேன். ஐபில் வெற்றிவிழாவின் போது இடம்பெற்ற சனநெரிசல் சாவும் நினைவுகூறத்தக்கது. இந்தியா போன்ற சனத்தொகை நிறைந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகம். விஜய் அவர்கட்கு தனது பகுதியால் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லை என்பது ஒருபுறம் போக அல்லது அவரது வழக்கறிஞர்கள் அறிவுரையாகவும் அமையலாம்; இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்களை சென்றடைய இப்போது நவீன தொழில்நுட்ப உலகில் வேறு பல அம்சங்கள், வழிமுறைகள் உள்ளன. நேரடி ஒன்றுகூடல்களுக்கு பதிலாக இதர மாறீடுகள் பயன்படுத்தப்படுவது அவசியம்.1 point- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!" கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்ச நட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். விஜய் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்' என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார். 'தைரியத்தோடு மீண்டும் வருவோம்' என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் பறிபோனதற்கு எதோ ஒரு விதத்தில் தானும் காரணம் என்கிற தார்மீக பொறுப்பை விஜய் எங்கேயும் ஏற்கவில்லை. தன்னையும் பாதிக்கப்பட்டவனாகவே காட்டிக் கொள்கிறார். உயிர்களைப் பறிகொடுத்து நிற்கும் குடும்பங்களோடு சேர்ந்து பரிதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அந்தப் பரிதாபத்தைப் பெற்றுக்கொள்ள விஜய் தகுதியானவர்தானா? கரூர் சம்பவத்துக்கு தவெக-தான் காரணம், காவல்துறைதான் காரணம் என இரண்டு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்தப் பெருந்துயருக்கு தவெக கட்சியும் விஜய்யுமே தார்மீக பொறுப்பைக் கட்டாயம் ஏற்றிருக்க வேண்டும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பிறகும் தன்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள முயலும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை இங்கே கேள்வி கேட்டே ஆக வேண்டும். அரசியல் ஒரு அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை இது நாள் வரைக்கும் விஜய் உணரவில்லை. பனையூரில் அவ்வபோது நிர்வாகிகள் கூட்டமென ஒன்றை விஜயை நடத்துவார். பெரிதாக தகவல் வெளியே தெரியாது. நிருபர்கள் மட்டும் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே நிற்போம். எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு விஜய்யைப் பார்க்க நூறு, இருநூறு தொண்டர்கள் கூடியிருப்பார்கள். பவுன்சர்கள் சூழ விஜய் வருவார். தளபதி... தளபதி... கடவுளே... கடவுளே... எனத் தொண்டர்கள் தொண்டைக் கிழிய கத்துவார்கள். எந்தக் குரலும் விஜய்க்குக் கேட்காது. கார் கண்ணாடியைக் கூட இறக்கமாட்டார். கண்ணாடியில் கருப்பு கவர் வேறு போட்டிருப்பார். உள்ளே இருப்பது விஜய்தானா என்பது கூட தெரியாது. அந்த காரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு முடிந்தால் அந்த கார் மீது பாய்ந்து தொட்டுப் பார்த்து விட்டு அந்தத் திருப்தியோடு பனையூர் கடல் காற்றைச் சுவாசித்துவிட்டு தொண்டர்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். நிர்வாகிகள் கூட்டத்துக்குள் செல்லும் விஜய் அங்கே, 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என அண்ணா கூறியதைப் பின்பற்ற போகிறேன் என வசனம் பேசுவார். மீண்டும் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு பனையூர் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். கட்சி அலுவலகத்தின் வெளியே நிற்கும் தொண்டனைப் பார்த்து கையசைத்தால் கூட தன்னுடைய நட்சத்திரத்தன்மை மங்கிவிடும் என நினைப்பவர் எப்படி மக்கள் தலைவனாக மாற முடியும்? வினோதமாக சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரசாரத்தை வகுத்ததும் அந்த நட்சத்திரத்தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான். TVK Vijay விஜய் எப்போது வருவார் எப்போது வருவார் என அவரின் பட ரிலீஸைப் போல அவரின் அரசியல் உரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி ஒரு நாள் வெளியே வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். தொண்டர்கள் விஜய்யை கடவுளைப் போல பார்ப்பார்கள். அதுதான் விஜய்க்குத் தேவை. கால்ஷீட் ஒதுக்கி மக்களைச் சந்திக்காமல், அரசியலை மதித்து அன்றாடம் மக்களைச் சந்தித்து மக்களோடு நின்றிருந்தால் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்திடம் இத்தனை வெறித்தனம் இருக்காது. நட்சத்திரத்தன்மையை நம்பாமல் கொள்கையை நம்பி மக்களை நம்பி களத்தில் இறங்கும் நம்பிக்கை விஜய்க்கு இல்லை. அதற்காக ஒரு நட்சத்திரத்துக்காக சாமானியன் இரையாவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போல விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் பெருந்துயர் நிகழ்ந்ததற்கு அவரின் காலதாமதமும் மிக முக்கிய காரணம். விஜய் நாகப்பட்டினத்தில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் பேசுவார் என தவெக தரப்பில் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக செய்தி அனுப்பப்பட்டது. அதையே தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிட்டனர். ஆனால், விஜய் சென்னையிலிருந்தே 8:45 மணிக்கு மேல்தான் தனி விமானத்தில் திருச்சி கிளம்பினார். நாமக்கலில் விஜய் மைக் பிடிக்கையில் மணி 2:30-யைத் தாண்டிவிட்டது. 12 மணி எனக் கூறிய கரூருக்கு விஜய் 7 மணிக்குதான் வந்து சேர்ந்தார். தவெக 12 மணிக்கு விஜய் வருவார் எனக் கூறியதைக் கேட்டு காலை 9 மணியிலிருந்தே அந்த வேலுசாமிபுரத்தில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்க்க வந்த கூட்டங்கள் தண்ணீரின்றி விக்கி மூச்சுத்திணறி இறந்த பரிதவிப்பு கதைகளை களத்தில் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தக் கால தாமதத்துக்கும் மாநில அரசும் காவல்துறையும் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா விஜய்? மக்களோடு நெருங்கி வந்து அன்றாடம் மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டாலே அலர்ஜி. சரி, உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கம் காட்டினால் கூட களத்திலுள்ள பல தகவல்கள் தெரியவரும். சுற்றுப்பயணங்களையும் முறையாக ஒருங்கிணைக்க முடியுமே. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என விஜய் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் எந்த மாவட்டத்திலும் மா.செக்களை அழைத்து அவர் தனியாகப் பேசியதில்லை. மா.செக்களும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விஜய்யை நோக்கி துண்டை வீசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியா? இதுதான் கட்டமைப்பா? 'இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது' என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. '10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல...' என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, 'சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்' எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங். திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்? தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்? கரூர் பெருந்துயரின் பழி மொத்தத்தையும் விஜய் மீது சுமத்த முடியாது. அரசும் காவல்துறையும் இதில் பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால், அதற்காக விஜய் தன்னையும் பாதிக்கப்பட்டவனைப் போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்சநட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. பகுத்தறியும் சிந்தனையை மலுங்கடித்து ரசிக வெறி ஊட்டப்பட்ட ஒரு பெரும் கும்பலோடு அரசியலிலும் நட்சத்திரமாகவே உச்சத்தில் இருக்க விரும்புகிறார். அரசியல்வாதிகள் தெருவில் நிற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய பிரச்னைகளாக தோளில் சுமக்க வேண்டும். கரூர் பெருந்துயர் மூலம் விஜய் அந்தப் படிப்பினையைப் பெற வேண்டும். சினிமா வசனம் மட்டும் பேசாமல் இனியாவது கள அரசியலைப் படிக்க முயலுங்கள் விஜய்! TVK Vijay speech: 'மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!' - கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: 'Stand With the People, Vijay!' – Karur Deaths Raise Tough Questions - Vikatan1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
தலைவன் எனப்படுகின்றவன் எல்லாருக்கும் முன்னே செல்ல வேண்டியவன், கோழை மாதிரி பயந்து மூன்று நாட்கள் ஒழிந்து இருந்து விட்டு மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோவில் வந்து நடிப்பவன் அல்ல.1 point- 'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointநிம்மதியாய் நீரருந்தக்கூட முடியாத காட்டு வாழ்க்கை .......... ஒருவாய் நீரருந்தும் போது கூட எவ்வளவு உசாராய் இருக்க வேண்டி இருக்கு ........! 😗1 point- 'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
இங்கே நான் விஜய்க்கு செம்பு தூக்க வரவில்லை ஆனாலும் எல்லாமே அறிந்த..... அறிந்து கொண்டிருந்த.... அல்லது இப்படி நடக்கலாம்..... ஆபத்தாக முடியலாம்.... என்று எச்சரிக்கை செய்த அந்தக் காவல் துறை.... எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் த வெ க பொறுப்பாளர்களிடம் மட்டுமே மேற்கூறிய பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்திருப்பது சரியா? தாமாகவே ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க முடியாதா? அந்த இடத்தின் கொள்ளளவு தெரிந்தும் மேலதிகமான அளவிற்கு மக்களை அனுமதித்த காவல் துறையின் செயல் சரியானதா? விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால்..... (மக்களுடன் மக்களாக நிற்கிறேன் என்ற நிலையில்) இன்னும் பல இழப்புக்கள் அங்கே ஏற்பட்டிருக்கலாம் சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை மக்களுக்கானது1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இந்தியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா அவுஸ்ரேலியா இங்லாந் தென் ஆபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) இந்தியா அவுஸ்ரேலியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? Indore 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேஸ் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? இலங்கை 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேஸ் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? Yes 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? Yes 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1)தென்னாபிரிக்கா 2)இலங்கை - இந்தியா இலங்கை 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் பாகிஸ்தான் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இலங்கை 14)அவுஸ்திரேலியா - இந்தியா இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து இலங்கை 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இங்கிலாந்து 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து இங்கிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? தென்னாபிரிக்கா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) தென்னாபிரிக்கா இலங்கை இந்தியா அவுஸ்திரேலியா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) தென்னாபிரிக்கா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகபட்டணம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? மும்பை 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இங்கிலாந்து 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாபிரிக்கா1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டிகளை நடத்துவதற்கு மிக்க நன்றி @கந்தப்பு .............. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இந்தியா 2)இலங்கை - இந்தியா இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் பாகிஸ்தான் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா அவுஸ்திரேலியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அவுஸ்திரேலியா 25)இந்தியா - நியூசிலாந்து இந்தியா 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்களாதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? அவுஸ்திரேலியா, இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா1 point- பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்
தந்தையுடன் செல்லம் விளையாடும் வயதை தொலைத்த ஒரு மகளின் ரணவலி… பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்… தமிழ் தேசியத்தின் பெயரால் நாலு குறுப்,நாலுபேர் வாழ்வுக்கு சிறைவாசம் இருக்கும் கைதியின் பிள்ளையின் கோவம்… தமிழர்கள் விழா என தென்னிந்திய கூத்தாடிகளை கூப்பிட செலவு செய்யும் பணத்தில் ஒருவீதம் இவர்களுக்கும் செலவு செய்யலாம்… எவரிடமும் பதில் இல்லாத கேள்விகள் 👌 https://www.facebook.com/share/v/1A1pbW9429/?mibextid=wwXIfr சிறுமியின் சிற்றுரையை சிறிதுநேரம் செவிமடுத்து கேழுங்கள்.1 point- இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
காத்தன்குடி வான் பரப்பில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முஸ்லீம் மக்கள் மகிழ்ச்சி1 point- இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த 'ராஜேந்திர சோழன்'
1 pointஇன்றும் தொடர்கிறது அன்று சோழர்கள் இன்று சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அன்று அதிகாரத்தில் உள்ள சோழர்கள் செய்தனர் இன்று அதிகாரத்தில் உள்ள சிங்கள இராணுவம் செய்கின்றது அன்றைய சோழ எகாதிபத்தியவாதிகள் இன்றைய அமெரிக்கா எகாதிபத்தியவாதிகள் போல நட்ந்து கொண்டனர்🤣 😅🤣1 point- மனதுக்கு பிடித்த BGM Background Music
எல்லாம் மிக மிக அருமையாய் இருக்கு .......! 👍 நன்றி பையா & மற்றைய அனைவருக்கும் ......!1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு