Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87988
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12678
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    15789
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/10/25 in all areas

  1. இந்த சொல் எதனை மறைமுகமாக குறிக்கின்றது என்பது புலவர் உங்களுக்கு நூறு வீதம் தெரியும். ஆனாலும் இந்த தரக்குறைவான வார்த்தையை மீண்டும் மீண்டும் யாழில் வந்து எழுதுகின்றீர்கள். தரம் தாழ்ந்த தமிழக அரசியல்வாதிகளும், அவர்களின் காவாலிக் கூட்டங்களும் பயன்படுத்தும் இத்தகைய தரங்கெட்ட வார்த்தைகளை யாழில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.
  2. மீண்டும் மீண்டும் நாம் உரத்து சொல்லவேண்டிய கருத்து. ஜூலை கலவரமல்ல... இனஅழிப்பு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.
  3. வினா 12) 100 ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. 13 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 23 புள்ளிகள் 2) ஏராளன் - 21 புள்ளிகள் 3) கிருபன் - 21 புள்ளிகள் 4) ரசோதரன் - 21 புள்ளிகள் 5) வீரப்பையன் - 21 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 19 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 19 புள்ளிகள் 8) சுவி - 18 புள்ளிகள் 9) புலவர் - 17 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 17 புள்ளிகள் 11) வாதவூரான் - 17 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள் 13) வசி - 15 புள்ளிகள் 14) கறுப்பி - 15 புள்ளிகள் 15) வாத்தியார் - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 12, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  4. ஜேவிபியில் கடை நிலை உறுப்பினர்களாக இருந்தவர்கள், தமிழர்களைத் தாக்கி, அதை வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் அவதானித்திருக்கலாம், இந்த அனுபவங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், ஜே.ஆர் "ஜேவிபியின் சதி தான் கறுப்பு ஜூலை" என்று ஒரு முழுப் பொய்யைக் கூறி ஜேவிபியையும், ஏனைய இடதுசாரி அமைப்புகளையும் தடை செய்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கீழே ஒரு மாதிரி லயனல் போபகேயின் 2024 கட்டுரையில் இருந்து காணலாம். Groundviews - Journalism for CitizensMisconceptions About the 1983 Riots - GroundviewsPhoto courtesy of The Island A recent statement attributed to Prasanna Ranatunga, the Urban Development and Housing Minister of Sri Lanka, blaming the JVP for the July 1983 riots and posted on the A5ஆனால், ஜேவிபி தலைமையோ, உள்ளூர் அமைப்பாளர்களோ கறுப்பு ஜூலையைத் திட்டமிட்டார்கள், அல்லது ஆரம்பித்த பின்னர் நடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் நான் இது வரை காணவில்லை.
  5. ஈழப்பிரியன் அவர்கள் டாக்டர் மத்ருபூதம் போல ஏதாவது மன ஆலோசனை(Counseling) யாருக்கோ வழங்குகிறாரோ??
  6. டில்வின் ப்ரோ, 1983 இல் முன்னுக்கு நிண்டு தமிழர்களை அடித்ததில் ஜேவிபிக்கு என்ன பங்கு என்பதை மறந்து விட்டீர்களா ப்ரோ? ஜே ஆர் அதன் சூத்திரதாரி… ஆனால் அதில் ஜேவிபியின் பங்கும் கணிசமானது. 52 தொடக்கம் நடந்த திட்டமிட்ட இன வன்முறைகளின் உச்ச புள்ளியே 83. அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் இரு பகுதிகள் மாறி மாறி அடித்து கொள்வது. 83 ஒரு இனம், இன்னொரு இனத்தை தாக்கிய இனவன்முறை (pogrom). அதற்கு ஒட்டு மொத்த சிங்கள இனமுமே பாத்திரவாளிகள்.
  7. 🤣................. நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.
  8. ஜேவிபி, என் சொந்த அனுபவத்தில் ஆளவந்தான் கமல்ஹாசன் போல "கடவுள் பாதி மிருகம் பாதி" கலவை என்று சொல்லலாம்😂! முதன் முதல் ஜேவிபி அமைப்பின் தீவிர உறுப்பினர்களோடு பரிச்சயமானது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த பின்னரான, பேராதனைப் பல்கலையில். அவர்களது நிலைப்பாடு "தமிழர்களுக்கு என்று விசேடமான பிரச்சினை இல்லை, இருப்பது வர்க்கப் பிரச்சினை (class struggle), அதைத் தீர்த்தால் தமிழர் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்ற இடது சாரி (சோசலிச) வாதமாக இருந்தது. பின்னர், இந்திய எதிர்ப்பும், மேற்கு எதிர்ப்பும், சில ஜேவிபி தரப்புகளின் சிங்கள இனவாதமும் சேர்ந்து நான் கண்ட ஜேவிபி 90 களில் "தேசிய சோசலிசம் - National socialism" என்ற நிலைக்குப் போனார்கள் - இது தான் தமிழர்களுக்கு பாதகமான நிலைப்பாடு. ஆனால், பேராதனையில் மாணவர் சங்க தலைமையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். பொலிஸ் கெடுபிடி அதிகம். தமிழ் மாணவர்களைச் சும்மா பிடித்துக் கொண்டு போய் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் வாங்கில் உக்கார்த்தி வைத்து விடுவார்கள். தகவல் கிடைத்ததும், உடனே பொலிஸ் நிலையம் போய் அவர்களோடு முரண்டு பிடித்து தமிழ் மாணவர்களைக் கூட்டி வருவது ஜேவிபி மாணவர் சங்கத் தலைவர், செயலாளராக இருப்பார்கள். தலதா மாளிகை தாக்கப் பட்டதற்கு அடுத்த சில நாட்கள். நான் ஹில்டா விடுதியில் இருந்தேன். நமக்குத் தான் வவுனியா கடப்பதற்குப் பாஸ் வேண்டுமே? எனவே வார இறுதியாகிய போதும் நான் விடுதியிலேயே இருந்தேன். எந்த அசுமாத்தமும் தாக்குதலுக்கு அடுத்த நாள் இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த நாள் பொலிஸ் வந்து அனைத்து தமிழ் முஸ்லிம் மாணவர்களின் அறைகளைச் சோதித்து விட்டுச் சென்றார்கள். மரியாதையாக நடந்து கொண்டார்கள். அன்று மாலை தான் நமக்குத் தெரியாமல் நடந்த சில விடயங்கள் தெரியவந்தன. சிஹல உறுமய அமைப்பின் மாணவர்கள் குழு, ஹில்டாவில் இருக்கும் தமிழ் மாணவர்களைத் தாக்குவது என்று முடிவெடுத்து தயார் செய்த போது, விடயமறிந்த ஜேவிபி மாணவர்கள் உறூமய மாணவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்துத் தடுத்திருக்கிறார்கள். அதே வேளை, உறுமய தரப்போடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து கண்டி பொலிஸ் வந்து தமிழ் மாணவர்களின் அறைகளைச் சோதனையிடலாம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்ப இவங்கள் நல்லவங்களா?...வெயிற் போர் இற்😂.... தலதா மாளிகை தாக்கப் பட்ட அதே நாளில், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கட்டுக்கல பிள்ளையார் கோயில் ஒரு கும்பலால் தாக்கப் பட்டு பாரிய சேதத்திற்குள்ளானது. இந்தத் தாக்குதல் குழுவில், ஹில்டாவில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய அதே ஜேவிபி மாணவர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள். எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது! ஆனால், தமிழர்களின் தாயகக் கனவிற்கு வன்முறை சாராத நீதிமன்ற வழிமுறை மூலம் முதல் சவப்பெட்டி ஆணியை அடித்தது ஜேவிபி என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை!
  9. புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர் கௌரவிப்பும் நான்காம் ஆண்டு நிறைவு விழாவும் 10/10/2025. மரக்கன்றுகள் வழங்கலில் உதவிகள் புரிந்த திரு ந.கோபிக்குமரன், செல்வன் யது ஆகியோருக்கும் வீட்டுத்தோட்டம் செய்வதற்காக விதைகள் வாங்க உதவிய திரு து.வினோதரன் ஆகியோருக்கும் எமது நன்றிகள். ஒளிப்பதிவு திரு ஜெ.ரஞ்சித். வீட்டுத்தோட்டம் செய்ய விதைகள் வழங்கப்பட்டது.
  10. அடடா.. அது மனோரஞ்சனா? காற்றுள்ள பக்கம் சாயும், நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் மனிதர். அப்படி சாய்ந்து சாய்ந்து தமிழர்களின் நலனை அடகுவைக்கும் அரசியல் புரோக்கர். நான் சரிநிகரில் எழுதிக்கொண்டு இருந்த காலத்தில் சில தடவைகள் இவரை சந்தித்து இருக்கின்றேன். சந்திரிக்காவுக்கு வால் பிடித்துக் கொண்டு, புலிகளை தூற்றிக் கொண்டு திரிந்தார்.
  11. அதே நேரம், பல நூற்றுகணக்கான தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்த நல்ல மனசுள்ள சிங்கள மக்களும் இருந்தனர் அந்த காலப்பகுதியில். இவ்வாறு அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட தமிழ் குடும்பங்களில் என் குடும்பமும் உண்டு. அண்மையில் ஒரு காணொளி வெளியாகி இருந்தது. கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னையும் தன் குடும்பத்தையும் இனவழிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து, தம் சிறு வீட்டில் அடைக்கலம் கொடுத்த குடும்பத்தை பார்க்க சென்ற காணொளி. அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண் இன்று மிக வயதாகி இருந்தார். கனடாவில் சென்றவர் தன்னை அறிமுகம் செய்த போது அப் பெண்ணின் முகம் மலர்ந்த காட்சி ஒரு கவிதை. நானும் அந்த காலப்பகுதியில் குருணாகலில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் ரோகணவை நேரில் கண்டு உள்ளேன். அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கே வாக்களித்தும் இருந்தனர்,
  12. எனக்கும்தான் விளங்கவில்லை , நான் கேட்டேனா .......! 😂
  13. விளையாட்டு திரிக‌ளில் நீங்க‌ள் ஒரு ஆளே போதும் ப‌ல‌ர‌ சிரிக்க‌ வைக்க ஹா ஹா.....................இந்தியா நேற்று தோக்க‌ நான் நினைச்சேன் , என்னையும் ஜ‌க்க‌ம்மாசையும் ர‌சோத‌ர‌ன் அண்ண‌ போட்டு பில‌க்க‌ போகிறார் என‌ ஆனால் நீங்க‌ள் அப்ப‌டி செய்ய‌ வில்லை ஹா ஹா 😁😁😁 அண்ணோய் உங்க‌ளுக்கு த‌ங்க‌ ம‌ன‌சு🥰😁..............................
  14. கந்தப்பு மேலுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பிரச்சனையை எழுதுங்கள். நிச்சயம் சரி செய்வார்கள். அக்கா ஒரு வயது வந்தால் இதே பிரச்சனை தான்.இதையும் கடந்து போக நாங்கள் தான் பழக வேண்டும்.அதையோ யோசித்துக் கொண்டிருக்காமல் நல்லதே நடக்கும் என்று மனதை திடமாக வைத்திருங்கள். எனது மின்னஞ்சல்:-mkirupananthan@gmail.com ஆனபடியால் தொடர்ந்தும் கழிவோயிலை எதிர்பார்க்கலாம்.
  15. இந்தியா இதை அன்று தொடக்கம் செவ்வனே செய்து வருகின்றது. இதனால் தான் இந்தியனே இந்தியாவை நம்புவதில்லை.
  16. வினா 11) 3 விக்கேற்றுக்களினால் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியா அணியை தோற்கடித்தது. ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை . 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 11, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  17. ட்ரம்ப் அவர்களுக்கு முப்பத்திரண்டும் விழ்ந்து முடிந்ததும் அவருக்கு “நோ பல்” பரிசு வழங்கி அவரையும், பாகிஸ்தான் தலைவர் அவர்களையும் மகிழ்விக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.🥱
  18. என்னே ஒரு கரிசனை என்று பார்த்தேன். முன்னாடி வருபவர்கள், களநிலைமையைக் கணித்து, பின்னாடி வருபவர்களுக்குச் சொல்லுவினம் போல. அதைச் சொல்லுவதற்காகவே, சீக்கிரமாக ஆட்டமிழந்து வேறு செல்கினம் போல.
  19. அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா வரிசையில் வங்காளதேசத்திலும் தற்போது ஆடிக்கொண்டு இருக்கும் Rabeya Khan , Fatima ஆகியோர் சிறப்பாக விளையாடிகொண்டு இருக்கினம்
  20. ஈழப்பிரியன் அவர்கள் டாக்டர் மத்ருபூதம் போல ஏதாவது மன ஆலோசனை(Counseling) யாருக்கோ வழங்குகிறாரோ? நிலாமதி அக்கா சுகவீனமாக இருப்பதாக தனிமடலில் எழுதியிருந்தா. அவவுக்கு பதில் எழுதிவிட்டு அப்படியே அழுத்திவிட்டேன்.
  21. இன்னும் ஒரு வருசத்துக்கு.... இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா -உக்ரேன், இந்தியா - பாகிஸ்தான்.... போன்றவற்றை, சண்டை பிடிக்காமல் ஒழுங்காக இருக்கச் சொல்லி வெருட்டி வைத்திருக்கிறது லேசுப் பட்ட காரியம் இல்லை கண்டியளோ. 😂
  22. (எம்.நியூட்டன்) வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கழிவகற்றல் பெரும் சவாலாக உருவாகியிருப்பதால் கொழும்பு மாநகர சபையால் கழிவுபொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின் உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டு அத்தகைய திட்டங்களின் சாத்தியபாடுகளை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களை கேட்டுக்கொண்டார். வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல் | Virakesari.lk
  23. அததெரண கருத்துப் படங்கள்.
  24. 83 ஜூலைக் கலவரத்தில் ஜே.வி.பியின் பங்கு தொடர்பாக இன்று வரைக்கும் உறுதியான ஆதாரங்களை நான் காணவில்லை. ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வன்முறை கும்பல்களாலும், ரவுடிகளாலும், பொலிசாராலும், இராணுவத்தினராலுமே இவை நிகழ்த்தப்பட்டன என்றும், அந்த பழிகளை எல்லாம் ஜேவிபி மீது போட்டு அவர்களை தடை செய்தனர் என்றுமே அறிந்துள்ளேன்.
  25. நோபல் கிடைக்காட்டி ஒண்டாச்சு…, நீ வா தல…நாங்க உனக்கு… ஜேர்மன்-யூகே தமிழர் சார்பாக… No balls பரிசுதாறம் என கேட்டுப்பாப்பமா, தம்பர🤣. பிகு இந்த பரிசுக்கான நாமினேஷன் ஜனவரியோடு குளோசாம். இப்பதானே காசா தீர்வு சூடு பிடிக்குது, அடுத்த வருடம் தம்பருக்குத்தான்🤣
  26. ஓம் கோசான். நிறைய எழுதும் போது வாசிப்பவர்களுக்கும் அலுப்பு அடிக்கும் என்பதுடன், பலர் நுனிப்புல் மேய்ந்து விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதால், முக்கிய சமாச்சாரத்தை... சின்ன வரியாக இடைவெளி விட்டு எழுதும் போது... பலரும் ஆர்வத்துடன் வாசிப்பார்கள். நிறைய எழுதி பெரும்பாலானோர் வாசிக்காமல் போனால், மினைக்கெட்டுஎழுதியதில், அர்த்தம் இல்லாமல் போகும். 🙂 டிஸ்கி: உங்களைப் போல் நிறைய எழுத... என்னிடம், சரக்கும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக தெரிவித்துக் கொள்கின்றேன். 😂 உலகத்தில் உள்ள பெரும்பாலானோர்.. ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும், அப்படிக் கிடைத்தால் அது கேலிக் கூத்தாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது.... திருவாளர் ட்ரம்ப் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை... தனக்குத்தான் அப் பரிசு கிடைக்கும் என நம்பிக் கொண்டு இருந்தார். பல வழிகளில்... அவர் வாய் விட்டுக் கேட்டும், பரிசு கிடைக்காதது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவும், பயங்கர ஆத்திரமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன். இதன் பின் விளைவுகளாக சில வேளை அவர் நோபல் பரிசுக்கு ஈடாக... அமெரிக்க மேற்பார்வையில், இன்னும் ஒரு பரிசு கொடுக்க ஒரு அமைப்பை உருவாக்கலாம் என நினைக்கின்றேன். 😂
  27. தினமும் ஒரு வரி தத்துவம் · வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று கொண்டு இருந்தார்... அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்தால்.. நம்மாளுக்கு செம குஷி... அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் உட்டார்... அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தார்... அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு....இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்... அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ.... அதே மாதிரி அப்படியே எழுதி காட்டினாளாம்... அத வாங்கி பாக்கெட்ல வச்ச பின்னாடி நம்மாளு மெதுவா சொன்னாரு.... இப்போ கத்துடி பாக்கலாம்...!!! 😜" நீதி:" *PROOF OF DOCUMENTATION IS VERY VERY IMPORTENT*" எதுக்குமே ரெக்கார்டு தான் ரொம்ப முக்கியம். படித்ததில் பிடித்தது. Voir la traduction
  28. வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .......! 😍
  29. 😂 இல்லை…. ஒரு கருத்தை சொல்லும் போது….. பத்தி பத்தியாக எழுதாமல்…. இப்படி ……போட்டு இடைவெளிவிட்டு எழுதும் பாங்கு. ஏதோ நிறைய எழுதினமாதிரியும் தெரியும் 🤣. அதைவிட முக்கியமாக வாசிப்பவர் கவனம் தேவையான புள்ளியில் படியும். சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவின் எதிர்கட்சி அரசியல்வாதி மாரினா மச்சாடோ வுக்கு போயுள்ளது.
  30. நன்றி கோசான். 🙏🏽 தடித்த எழுத்தில் எழுதுதல், பெயின்ற் அடித்தல் இவற்றை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😁 😂 🤣
  31. "பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!" நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன். என்பது கிஸ்ணன் வாக்கு. உண்மையை தெளிவூட்டவும், தரவுகளை நிலைநாட்டவும், நான் திரிகள் தோறும் அவதரிக்கிறேன் என்பது ஜஸ்டின் வாக்கு 😂. #ஆதாரபுருஷர்❤️ நன்றி 🙏
  32. உள்ளக மட்டத்தில் ஒரு ஆட்சியலகாகத் தோற்றம் பெற்றதும் எந்த நேரமும் கலைத்துவிடக்கூடியதுமான வட-கிழக்கு இணைந்த மாகாண அலகை வழக்குப்போட்டுப் பிரித்தமை... சுனாமிக் கட்டமைப்பை நடைமுறைப்பட்டுத்தவிடாது தடுத்தமையெனத் தமிழருக்கு எதிரான விடம் கக்கும் வேலைகளை செய்த அணியினது முக்கியமான பெரும்புள்ளி இப்போது இப்படிக் கொக்கரிக்கிறார். அவரே ஐ.நா விலிருந்து தமிழரது பிரச்சினையை வெளியே எடுப்பதுதான் தமதரசின் நோக்கமென்று சொல்லியுள்ளார். இதைவிட வேறென்ன விளத்தம் தேவை. எந்த சிங்கள அரசாயினும் அவை இனவாத அரசுகளே. தமிழரை அழிப்பதும், தமிழரென்று ஒரு இனமே இல்லையென்று நிறுவுவதும் முழு ஈழத்தீவையும் ஈற்றில் சிங்கள மயமாக்குதலே அவர்களது இலக்கு. யே.வி.பி யின் மறுவடிவான என்.பி.பி வாக்களித்த தமிழர்களின் மயக்கம் இந்த இனவாத முழக்கங்களைக் கண்டாவது தெளியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  33. சாருகேசி இராகங்களில் பாடல்கள் .......! 😍
  34. 🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂? 2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு. The HinduMadras High Court dismisses Seeman’s plea to quash rape caseMadras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார். ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!
  35. 🤣............. டென்மார்க்கில் இருந்து எறியப்பட்ட கற்கள் இலக்கு தவறி இந்திய வீராங்கனைகளின் தலைகளில் விழுந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.................. இந்தியாவை நம்பியோர் கைவிடப்படுவார்..................🤣.
  36. இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள். தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும். சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.
  37. வினா 10) 107 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 10, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  38. விதூஷனி கிரிதாஸ் Scripted & edited என்று குற்றம்சாட்டப்படும், கிளிஷே டிராமாக்களாகவே இருக்கும் நீயாநானா நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு sensible ஆன விஷயத்தை பகுதி பார்க்க முடிந்தது. சண்முகத்தம்மாள். What a மாமியார்?!!! திருமணமான முதல்மகன் இறந்துவிட, அவரது மனைவியான (தன் மருமகளை) வீட்டைவிட்டு அனுப்பாமல், தானே படிக்க வைத்து, தனது இளையமகனுக்கு திருமணம் செய்துவைத்து, அந்தப்பெண்ணை ஒரு டீச்சராக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கும் எழுபத்தியைந்து வயது மாமியார் சண்முகத்தம்மாளின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. ரிதன்யாக்கள் வரதட்சணை மற்றும் இன்னப்பிற கொடுமைகளால் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், சண்முகத்தம்மாளும் அவரது இளைய மகனும் ரோல்மாடலாக போற்றப்பட வேண்டியவர்கள்...பின்பற்றப்பட வேண்டியவர்கள்.. இளையமகன் ஏன்? இன்னமும் தனது மனைவியான அண்ணியை, "வாங்க போங்க" என்றே அழைக்கிறார். பாதுகாவலாக இருப்பது மட்டுமே வேலையன்று. பொட்டிழந்தவளுக்கு மரியாதையும் கொடுக்கும் ஆண்கள் ரொம்ப ரொம்ப குறைவு எல்லாம் இல்லை, அல்மோஸ்ட் ஸீரோ.! நவீனத்துவம் என்பது என்னவோ மாநகரங்களின் ஏகபோக குணம் என்பது போன்ற மாயபிம்பங்கள் சுக்குநூறாக உடைந்து போனது. தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் சண்முகத்தம்மாளை போன்ற புரட்சி பெண்மணிகள் சத்தமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் உண்மையான வீரத்தமிழச்சிகள்...போலி திரைபிம்பங்களை , போலி புரட்சியாளர்களை கொண்டாடும் இளைய தலைமுறை இவர்களை பார்த்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்.. எளிமையான மனிதர்களின் வாழ்வியல் முறை என்பது எப்போதுமே மனதால் நிரம்பிய உணர்வுகளால் உந்தப்பட்டிருக்கும். இவர்கள் செய்வதெல்லாம் மாபெரும் புரட்சி என்பதை கூட அறியாதவர்கள். காமிரா வெளிச்சம் இவர்களை மாற்றாதிருக்கட்டும்.. அதுசரி, பலூன் அக்காவையும் மெண்டல் டாக்டரையும் வைத்து பிக்பாஸ் நடத்தும் விஜய்டிவி, இதுபோல் சில அரிதான நிகழ்வுகளால் புண்ணியம் கட்டிக்கொள்ளட்டும்.......! Writer Charithraa's Voir la traduction
  39. வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!!!முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  40. வினா 9) 4 விக்கேற்றினால் இங்கிலாந்து அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 19 புள்ளிகள் 2) ஏராளன் - 17 புள்ளிகள் 3) கிருபன் - 17 புள்ளிகள் 4) ரசோதரன் - 17 புள்ளிகள் 5) வீரப்பையன் - 17 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 15 புள்ளிகள் 7) வாதவூரான் - 15 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 15 புள்ளிகள் 9) சுவி - 14 புள்ளிகள் 10)புலவர் - 13 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 13 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 13 புள்ளிகள் 13)வாத்தியார் - 11 புள்ளிகள் 14)வசி - 11 புள்ளிகள் 15)கறுப்பி - 11 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 9, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  41. @Ahasthiyan க்கு மீண்டும் பாராட்டுக்கள்.
  42. எனக்கு... அமைதிக்கான நோபல் பரிசு தாராவிடில், நோபல் பரிசு கொடுபவர்களுக்கு... அமைதி இருக்காது. ஆமா.... இப்படிக்கு, தம்பர். 😂
  43. எதோ மனிதன் பிறந்து விடடான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்து விடடான் நாயாய் மனிதன் பிறந்திருந்தால்நன்றி என்னும்குணம் நிறைந்திருக்கும் நரியை உருவெடுத்தாலும் தந்திரமாவது தந்திரமாவது இருந்திருக்கும். காக்கை குலமாய் அமைந்திருந்தாலே ஒற்றுமையாவது நிலைத்திருக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.