Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3313
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/14/25 in Posts

  1. என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂
  2. நான் அனைத்து போட்டிகளிலும் கடைசியாகத்தான் வருவதுண்டு, அதனை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அதனாலேயே எந்த டென்சனும் இருக்காது, அத்துடன் எந்த அணியினை தெரிவு செய்தோம் என்பதே நீங்கள் கூறும்போதுதான் தெரியும். நான் கடைசியாக வருவதால் ஏற்கனவே கடைசி இடம் எனக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் எனும் நம்பிக்கையினால் பலருக்கு நான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு உத்வேகமாக உள்ளேன். 🤣 மேலே போறது என்பது இயற்கைக்கு விரோதம் அனைவரும் கீழே இலகுவாக வரலாம் (புவியீர்ப்பு).🤣 இல்லை ஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்து பின்னர் நம்பிக்கை துரோகம் செய்துவிடும்🤣.
  3. யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி! சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
  4. வினா 16) மழை காரணமாக நியூசிலாந்து இலங்கைக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 31 புள்ளிகள் 2) ஏராளன் - 29 புள்ளிகள் 3) ரசோதரன் - 29 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 27 புள்ளிகள் 5) கிருபன் - 27 புள்ளிகள் 6) வீரப்பையன் - 27 புள்ளிகள் 7) புலவர் - 25 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 25 புள்ளிகள் 9) சுவி - 24 புள்ளிகள் 10) வசி - 21 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 21 புள்ளிகள் 12) வாதவூரான் - 21 புள்ளிகள் 13) கறுப்பி - 21 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் 15) வாத்தியார் - 19 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 16, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  5. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்
  6. அரிய பூமி காந்தத் தட்டுப்பாடு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில் நெருக்கடிகளை ஏற்படுத்தும். சீனா அதிக காலம் கட்டுப்பாடுகளை நீடித்தால் இக் காந்தங்களுக்கான மாற்றீடு அதிகரித்து அதன் சந்தையைப் பாதிக்கும். காந்தங்களின் மீதான சீனாவின் ஆதிக்கம் உணரப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான மாற்றீடுகள் ஆராயப்பட்டுள்ளன. அரிய பூமி தனிமங்கள் இல்லாமலே சூழலை மாசுபடுத்தாத வகையில் காந்த உற்பத்தி செய்யும் Niron நிறுவனம் 2024 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் 5 தொன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 2026 இல் இந் நிறுவனம் விரிவாக்கப்பட்டு வருடத்துக்கு 1500 தொன் காந்தங்களை உற்பத்தி செய்யும் திறனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Niron MagneticsNiron Magnetics is reshaping tomorrow’s technologies with the world’s only high performance, rare-earth-free permanent magnets.
  7. இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம். இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.
  8. வினா 15) 3 விக்கேற்றுக்களினால் தென்னாபிரிக்கா அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 29 புள்ளிகள் 2) ஏராளன் - 27 புள்ளிகள் 3) ரசோதரன் - 27 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 25 புள்ளிகள் 5) கிருபன் - 25 புள்ளிகள் 6) வீரப்பையன் - 25 புள்ளிகள் 7) புலவர் - 23 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 23 புள்ளிகள் 9) சுவி - 22 புள்ளிகள் 10) வசி - 19 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 19 புள்ளிகள் 12) வாதவூரான் - 19 புள்ளிகள் 13) கறுப்பி - 19 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 19 புள்ளிகள் 15) வாத்தியார் - 17 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 15, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  9. நீங்கள் அமைதியாக தூங்கலாம் ...... ஈழத்தமிழர்கள் உள்ளவரை விதுசா அக்காவின் வீரம் போற்றப்படும்!
  10. கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆகஸ்ட் 11, 2025 அன்று, மூன்று சிறிய ஆய்வாளர்கள், தாத்தா கந்தையா தில்லையின் பேரப்பிள்ளைகள் - ஜெயா, கலை, மற்றும் இசை - கனடாவின் ஒட்டாவாவில் இருந்து விமானத்தில் தங்கள் தாத்தாவுடன், ஜெர்மனியின் ஊடாக, பறந்து சென்று, இலங்கையில் தரையிறங்கினர். “ஆஹா, இங்கே மிகவும் சூடாக இருக்கிறது, தாத்தா!” அவர்கள் பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜெயா முகத்தை விசிறிக் கொண்டாள். “ஏனென்றால் இது வெப்ப மண்டலப் பகுதி, என் அன்பே. கனடாவை விட இங்கு சூரிய ஒளி சற்று குறும்புத்தனமானது,” தாத்தா சிரித்தார். உலகில் கண்களைக் கவரும் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்கு செல்வ தென்றால் மிகவும் பிடிக்கும். எனவே, ஒரு வாடகை வேனில் [Van] ஒரு நட்பு ஓட்டுநருடன், முதலில் கடற்கரை நகரமும் மற்றும் தலைநகரமான கொழும்புக்கு சென்று இருநாள் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். எனவே பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு [ Governor of British Ceylon, Sir Henry George Ward (1797–1860)] என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவான காலிமுகத் திடலுக்கு (Galle Face Green) முன்னால் அமைந்த ஹோட்டல் ஒன்றில் தங்க முடிவு செய்தனர். சில்லென்ற கடல் நீர், இதமான தென்றல் காற்று, கடல் அலையின் ஓசை, கொஞ்சி விளையாடும் பறவைகள் என யாவும் தமக்கு மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும், பயணக் களைப்பையும் போக்கும் என்பதாலும் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக களிக்கலாம் என்பதாலும், தாத்தா அந்த ஹோட்டலை தெரிந்து எடுத்தார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அதே வாடகை வேனில் தம்புள்ளை [Dambulla] வழியாகச் யாழ் நகரை நோக்கிச் செல்லும் போது, தங்கச் சிலைகளால் மின்னும் குகைக் கோயில்களைப் பார்த்து வியந்தது, "இது ஒரு கதைப்புத்தகக் குகை போல நான் உணர்கிறேன்!" என்று கலை மூச்சுத் திணறினான். தம்புள்ளையை தாண்டும் பொழுது தாத்தாவின் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைக் கவனித்த ஜெயா, தாத்தாவைத் தட்டி என்ன நடந்தது என்றாள்? யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அன்று பல ஆண்டுகளாக அமைந்து இருந்த ஒரேயொரு தமிழ் இந்து ஆலயமான தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், புத்த பிக்குவின் தலைமையில் பல முறைதாக்குதல் நடத்தப்பட்டு, இறுதியாக அக்டோபர் 28, 2013-ம் நாள் ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது எதையம்மா காட்டுகிறது ?. ஆனால், இந்த முன்னைய தம்புள்ளை பொற்கோவிலில் தெய்வங்களுக்குரிய 4 சிலைகள் காணப்படுகின்றன. இதில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் விநாயகர் சிலைகளாகும் என்பது வரலாற்று உண்மையாகும் என்று தாத்தா ஜெயாவுக்கு ஒரு சரித்திரமே கூறினார். அவள் அதைக் கவனமாகக் கேட்டாள். இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டார்கள் என தன் உரையாடலை முடித்தார். அன்று இரவு, அவர்கள் இறுதியாக தாத்தாவின் குழந்தை மற்றும் வாலிப பருவத்தின் வாழ்விடமான கரையோர நகரமான யாழ்ப்பாணத்தை அடைந்தனர். அங்கே, தாத்தாவின் பிறப்பு இடமான அத்தியடிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில், ஒரு சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். அந்த ஹோட்டலை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் அமைந்திருந்தது. அந்த யாழ் ரயில் நிலையத்தின் பின்பக்கம் தான் தாத்தா, தாத்தாவின் அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்த பெருமைமிக்க அத்தியடி அமைந்துள்ளது. "நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே அன்று இல்லை. "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், ஹோட்டலில் இருந்து, அரை மையிலுக்கும் குறைவான தூரத்தில், தாத்தா குடும்பத்தாரின் முன்னைய வீட்டின் பின்பக்கத்தில் தான் அமைந்திருந்தது. அங்கு தான் தாத்தா இளம் வயதில் பந்தடித்து விளையாடினார். பொதுவாக யாழ்ப்பாண நகர், யாழ் கோட்டை , சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown."எனவும் கூறலாம். யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள் மத்தியிலும் ஆங்ககாங்கே இருந்தது. ஜெயாவும் கலையும், முதல் முதல், அந்த முன் இரவிலும் யாழ் நகரைப் பார்த்து ரசித்து ஆச்சரியப்பட்டனர். இசை தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டான். ஜெயாவையும் கலையையும் தன் அருகில் அழைத்த தாத்தா, 'பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் மற்றும் துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக் குணத்தை கொண்டிருந்தனர்' என ஒரு பெரும் விளக்கம் கூறினார். மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர் விடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31646004468381455/?
  11. சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' பகுதி: 03 - திருகோணமலை திருகோணமலையை நாம் அண்மித்ததும், “தாத்தா! தாத்தா! நாம் இன்னும் வந்துட்டோமா?” என மூத்த பேரன் ஒரு 'சிள்வண்டு' போல துள்ளிக் குதித்தான். அவனது தம்பி, அண்ணாவின் கையை பிடித்து இழுத்து, தனது சிறிய கைகளைத் தட்டிக்கொண்டு: “அண்ணா, கடற்கரை! கடற்கரை! மீன்!” என்றான். மூத்தவள், தன் சூரிய தொப்பியை சரிசெய்து, ஒரு ராணியைப் போல, “பாய்ஸ் [Boys], அமைதியாக இருங்கள். டால்பின்கள் உங்களுக்காக அல்ல, எனக்காகக் காத்திருக்கின்றன.” என்று குறும்பாகச் சொன்னாள். எல்லோரும் வெளியே ஒன்றாக நடந்தார்கள். திருகோணமலையின் உப்புக் காற்று அவர்களை அணைத்துக் கொண்டது. கடலின் நீல நிறம், உருகிய நீலக்கல் [sapphire.] போல பிரகாசித்தது. கடற்கரையில், குழந்தைகள் ஓடினர். இசை வெள்ளை மணலில் ஒரு நண்டைத் துரத்தினான், ஆனால் கடல் அலையால் ஈரமான மணலை அணுகிய பொழுது, அங்கே வழுக்கி தண்ணீரையும் சிதறச் செய்து விழுந்தான். அனைவரும் சிரித்தனர். "பாருங்கள், பாருங்கள்!" என்று ஜெயா அடிவானத்தை சுட்டிக் காட்டினாள். டால்பின்களின் [Dolphin] ஒரு குவியல் தண்ணீரிலிருந்து குதித்தது, காலை சூரியனின் கீழ், அவை பார்ப்பதற்கு வெள்ளி வளைவுகள் [silver arcs] போல் நடனமாடின. "ஆஹா! அவை சிலிர்க்க வைக்கின்றன," என்று கலை கத்தினான். நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் கலை பாட சலங்கை ஒலிக்க ஜெயா ஆட சங்கு பொருக்கி இசை மகிழ்ந்தான்! "இல்லை, இல்லை ," என்று ஜெயா பதிலளித்து, "அவர்கள் என்னை வரவேற்கிறார்கள். ஏனென்றால் நான் டால்பின் இளவரசி, கடல் இராணி ." என்று கர்வமாகச் சொன்னாள். சின்னஞ்சிறு இசை, "நான் இளவரச மீன்!" என்று கத்தி என் மடியில் துள்ளிக் குதித்தான். நான் சிரித்தேன், ஆனால் எனக்குள் மற்றொரு அலை எழுந்தது. தாத்தா, "திருகோணமலை என்பது வெறும் டால்பின்களும் கோவில்களுமல்ல. எனக்கு நினைவுக்கு வருகிறது – 1960கள். அப்போது அரசாங்கங்கள் வரைந்த வரைபடங்கள் கடல்களின் வரைபடமல்ல, மக்களின் வரைபடம். “வளர்ச்சி” என்ற பெயரில், மகாவலி திட்டங்கள் போன்ற சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தெற்கிலிருந்து சிங்களக் குடும்பங்கள் இங்கே குடியேற்றப் பட்டார்கள். ஆனால் அதற்காக தமிழர் விவசாயிகள் தங்கள் வயல்களை இழந்து வெளியேற்றப் பட்டார்கள். அரசாங்கம் இதை “வளர்ச்சி” என்று கூறியது. ஆனால் எங்கள் மக்களுக்கு அது உயிர்வாழ்வின் நிலம் அழிந்தது என்பதே உண்மை." இலங்கை வரலாற்றை சுருக்கமாக கூறினார். அப்பொழுது பேத்தி, தாத்தாவின் கையை இழுத்தாள்: “தாத்தா, சாலையில் துப்பாக்கிகளுடன் இவ்வளவு வீரர்கள் ஏன் இருக்கிறார்கள்? டால்பின்களுக்கு அவர்கள் பயப்படுகிறார்களா?” அவள் கண்கள் அவளுடைய வயதிற்கு மிகவும் கூர்மையாக இருந்தது. கடல் காற்று அமைதியாக வீசிக்கொண்டு இருந்தது. தாத்தா சற்று மென்மையான சத்தத்தில், “இல்லை கண்ணா. துப்பாக்கி ஏந்துவது அமைதியைப் பாதுகாக்கும் என்று சில அரச அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான அமைதி ... மக்கள் ஒருவரையொருவர் நம்பும்போது, யாரையும் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றாத போது வரும்.” என்றார். அவள் ஒரு கணம் யோசித்து, பின்னர் தலையசைத்தாள்.“பிறகு, நான் வளர்ந்ததும், எப்படி ஒருவரையொருவர் நம்புவது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.” என்று உறுதியாகக் கூறினாள். நாங்கள் கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏறினோம், அங்கு யாத்ரீகர்களை விட குரங்குகள் அதிகமாக இருந்தன. “அடடா! இந்தக் குரங்கு என் பிஸ்கட்டைத் திருடிவிட்டதே!” என்று சிறுவன் இசை கத்தினான். அப்பொழுது, ஜெயா, தன் கைகளை மடக்கி, “பாருங்கள் தாத்தா , குரங்குகள் கூட ஆண்களை மதிப்பதில்லை.” என்றாள் கேலியாக, தன் கையில் பிஸ்கட்டை பிடித்தபடி. தாத்தா பாறைக்குக் கீழே உள்ள புனிதக் கடலை உற்றுப் பார்த்தார். ஒருமுறை, போர்த்துகீசிய வீரர்கள், 1622 ஆண்டு கோயில் சிலைகளை கடலுக்குள் தள்ளினர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1981 இல், சிங்கள அரச கும்பல்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர். தீ, இழப்பு, அமைதியிமை - மீண்டும் மீண்டும் நிகழ்ந்த வரலாறு அவர் கண் முன் வந்தது. யாழ் நூலகத்தின் படியில் புத்தரின் சடலம் குருதியில் சிவில்உடை அணிந்த காவலர் நூலகத்துடன் சத்தியமும் எரித்தனர் இரவுஇருளில் அமைச்சர்கள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவர் இல்லையே இவரைச் சுடாமல் எரிக்க முடியாதே சத்தியம் மறந்தே மனிதம் எரித்தோம்! ஆனால் மூன்று பிஞ்சு கைகளைப் பிடித்துக் கொண்டு நின்ற தாத்தாவுக்கு, அவர்களின் கள்ளங் கபடமற்ற புன்னகை ஒரு தெம்பை, நம்பிக்கையை கொடுத்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31791210493860851/?
  12. 1) அகஸ்தியன் - 31 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  13. குண்டுத்தோசையும் இடித்த சம்பலும் இதேதான் ..........! 😀 சமீபத்தில் ஒரு திரியில் இதன் சுவை பற்றி எழுதி இருந்தேன் . ........தற்செயலாக இது எனக்கு கிடைத்தது .......நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் .......என்ன , சம்பலுடன் தோசையைப் கலந்து பிரட்டி வைத்து 3 மணித்தியாலத்துக்கு மேல் சாப்பிடும்போது அந்தமாதிரி இருக்கும் ........(வாழையிலை இல்லாவிடின் அலுமினிய தாளில் சுற்றிவைத்தும் சாப்பிடலாம் ........ மாவை கரைக்கும்போது அரை தே.கரண்டி ஆப்பசோடாவும் கலந்தால் கெதியாய் புளிக்கும் + சுவையாயும் இருக்கும்) .........! குண்டுத் தோசையும் இடித்த சம்பலும் / How to make kundudosa batter? kundu dosa Recipe in tamil #jaffna
  14. வணக்கம் வாத்தியார் ..........! பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே பெண் : வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே பெண் : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே பெண் : வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே ஆண் : யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா ஆண் : அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா பெண் : தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் பெண் : மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக { உலகை விலை பேசுவார் } (2) பெண் : சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா பெண் : கனவில் நினையாத காலம் இடை வந்து { பிரித்த கதை சொல்லவா } (2) ஆண் : கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா ஆண் : இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா பெண் : அன்பே ஆரிராராரோ.......! --- மலர்ந்தும் மலராத---
  15. மேலே உள்ள செய்தியில் எத்தனை பிழைகள் உள்ளன என பார்த்த போது…. எனது கண்ணில் பட்டவை. வெளிநாட்டு அனுப்புவதாக — வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரியவருகையில் — தெரிய வருகையில் ஏற்கனே — ஏற்கனவே அந்தவகையில் — அந்த வகையில் நேற்றையதினம் — நேற்றைய தினம் விளக்கம்மறியலில் — விளக்க மறியலில் தமிழில் ஒரு சிறிய பந்தியை… பல எழுத்துப் பிழைகளுடன், பிரசுரிக்கும் போக்கு அதிகரித்து காணப் படுகின்றது. அதில் 100 ஆண்டுகளை கடந்த பிரபல பத்திரிகைகளில் இருந்து இணையம் மூலமாக செய்திகளை வெளியிடும் தளங்கள் வரை அதிகரித்து காணப்படுகின்றது. மற்றைய மொழிகளில் இப்படி அதிகப் படியான பிழைகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை. தமிழில் இப்படி இவர்கள் அதிக பிழை விடுவதற்கு இவர்களின் அரைகுறை படிப்பா….. அல்லது, இவர்களுக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சரி இல்லையா என்று தெரியவில்லை.
  16. இவர் கடைசி சனிக்கு எள் எண்ணை எரிக்கேல்ல என்று நினைக்கிறேன் ........! 😇
  17. விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது? 12 Oct 2025, 7:00 AM பாஸ்கர் செல்வராஜ் கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும். அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள். விஜய் அரசியலின் குழப்பம் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை. இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது. வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும் இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது. தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது. திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின் பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல் பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது. அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள் பெரும்பாலும் பிற்போக்கு குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம். இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது) இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும். பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள் நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது. 1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது 2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது 3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி. சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி. அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார். இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம். விஜய் அரசியலின் சாதியக் கோணம் காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது. எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல் இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக, விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது. திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது. பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள். முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது. இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது. ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம். https://minnambalam.com/who-is-vijays-politics-for-and-whose-votes-is-targeting/
  18. கோகிலா விடயம்தான் லிபாராவின் ஆரம்பமுமா என்பது உண்மையில் எனக்கு தெரியாது. லைக்காவில் வேலை பார்த்த ஆட்கள், சம்பளத்துக்கு வேலை செய்யாமல், தாமே தொடங்கிய வியாபாரம் என ஒரு நம்பகூடிய கதையையாவது backstory யையாவது செட் பண்ணி வைத்துள்ளார்கள். ஆனால் லைக்காவின் கதை படையப்பாவில் ரஜனி மலையை பிக்கானால் உடைத்து வித்து பணக்காரன் ஆனது போல் இருக்கும்🤣. பரிசில் போய் கேட்டால் வேற மாதிரி சொல்வார்கள். யூகேயில் இப்படி ஒரு ஐந்து வருடத்தில் சிங்கிள் டீக்கு சிங்கி- அடித்து விட்டு, தீடீரென ஜாவா சுந்தரேசன் ஆகி லம்போவில் வருவோர், தமிழர்கள் மத்தியில் அதிகம். கேட்டால் அவர்கள் சொல்லும் கதை விட்டலாச்சார்யா படம் போல இருக்கும்🤣. ஏன்?
  19. அமெரிக்க இராணுவ தளபாடங்கள் 70 சதவிகித அரிய மூலப்பொருள் மற்றும் காந்தங்களில் சீனாவில் தங்கியுள்ள நிலையில் இவ்வாறான தேசிய வளங்களை தேசிய மயப்படுத்தியமையின் பின்விளைவாக பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் அமெரிக்க மற்றும் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் நீட்சியாக இரஸ்ஸிய உக்கிரேன் போர் நிகழும் நிலையில் சீனாவின் இந்த முயற்சி கிழக்காசியாவில் இன்னொரு போர் அரங்கு ஒன்றினை திறக்கப்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றதா?
  20. இந்தியா எங்களுக்கு எப்பதான், எதிலதான் நம்பிக்கை தந்திருக்கு .......இப்ப தாறதுக்கு .......நானும்தான் ஏமாந்துட்டன் .......!
  21. லட்டு மாதிரி வந்த கேட்சை விட்டால் எப்படித்தான் வெல்வது? அதிக வேலைப்பளு காரணாமாக இரண்டுகிழமைகள் யாழை பார்க்கவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது!
  22. இதனால் இந்தியாவுக்கு என்ன இலாபம்? மறைமுகமாக தாங்கள் இவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்று சொல்லவோ? அல்லது அமெரிக்கா கடன் தந்தால் டொலரில் திருப்பி கொடுக்க வேணும் எங்களிடம் எடுத்தால் இந்தியா ரூபாவில் ...கடனை அடைக்கலாம் என சொல்ல வருகின்றனரா? பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்கா டொலருக்கு எதிராக புதிய நாணயம் உருவாக்க போயினம் என்று சொல்லிச்சினம் கடைசியல் இந்திய நாணயத்தில் கடன்... சீனாவும் இரண்டு நாடுகளுக்கு அவையின்ட நாணயத்தில் கடன் கொடுப்பினம் ....அதிகமா பாகிஸ்தானுக்கும்,மாலைதீவுக்கும்...
  23. பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன். கண்களை கவனி காமம் என்றனர். வைரமுத்து-
  24. இதுதான் என் கருத்தும். இருந்தாலும் இப்படியான வரலாற்று நன்றி நவிலல்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மனம் கொதித்துக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை தொடாத அரசியல்வாதிகளும் இல்லை.அரசியல் கட்சிகளும் இல்லை. இதில் சீமானும் விதி விலக்கு அல்ல.ஏன்.........சினிமாக்களில் கூட ஈழத்தமிழர் பிரச்சனையின் ஆதிக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது.... எனக்கு பிடிக்கவில்லை என்றால் உனக்கும் பிடிக்கக்கூடாது என்ற தத்துவம் குண்டுச்சட்டிகளுடன் நிற்கக்கடவது.
  25. முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  26. உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது. BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்? இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான். இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை ....... இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது. மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது. உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது. எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.
  27. Paranji Sankar · ஒரு பொண்ணும் ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.. அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் 'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள். மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய், இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர். இப்பதான் கதையில் திருப்பம்.... மூன்று நாள் கழித்து அந்த பெண் தானாக, பையன் இல்லாமல் வருகிறாள். வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும். அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?" அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே.. இப்ப எங்கடி வந்த?" அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?" மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர். அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த மூன்று பேர் மட்டும் அல்ல... சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்தனர்.. அந்த பதில் என்ன? "என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா." கதை நீதி : நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும்.......! Voir la traduction மூணு நாள் சார்ஜ் நிக்கும் போனை எறிந்து போட்டு புதுமாடல் போன் வாங்கி தினமும் சார்ஜ் போடும் சிறியருக்காக ......! 😇
  28. இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்…. மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை. ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.
  29. அததெரண கருத்துப் படம்
  30. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 12 அக்டோபர் 2025, 01:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது. வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும். இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம் கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு? குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது. மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை" என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார். "சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி? மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது. இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர். உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி. "சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை." என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார். "ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். "இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன." என்றார். "நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்" என்று அறிவுரை கூறுகிறார். நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. பட மூலாதாரம், Getty Images சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா? சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. "நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்," என 'டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே'வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார். அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார். நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mxmejj58vo
  31. நாம் சில சமயங்களில் கேள்விப் படும் இளவயது மட்ட மாரடைப்பு மரணங்களோடு சில கதைகளும் சேர்ந்து கேள்விப் படுவோம்: ஆள் ஓடியாடித் திரிந்தவர், சாப்பாட்டில் கவனம், அவ்வளவு குடி இல்லை..இப்படியான நல்ல விடயங்கள் சொல்வார்கள். ஆனால், இறந்தவரின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தால் மனப் பதற்றம் (stress) அதிகரித்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவரும். இந்த மனப்பதகளிப்பு இதய குருதிக் கலன் நோய்களுக்கு மூன்றாவது முக்கியமான காரணி (முதல் இரண்டும் ஆரோக்கியமற்ற உணவு, உடல்பயிற்சியின்மை என்பன). சுவாரசியமான விடயம், தூக்கக் குறைவும் மனப்பதகளிப்பும் உடலில் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எனவே, தூக்கம் ஒழுங்காக இல்லாதோரில் இதய குருதிக் கலன் நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பது ஆச்சரியமில்லை. எனவே, தூக்கத்தை முறையாகக் கையாள்வதின் மூலமும் இதய குருதிக் கலன் நோய்கள் வராமல் சிறிது தடுக்கலாம். இதன் நரம்பியலைப் புரிந்து கொண்டால் தூக்கத்தை குழப்பாமல், உரியமுறையில் கையாளுவது இலகுவாக இருக்கக் கூடும். எங்கள் உடலில் பதகளிப்பிற்குக் காரணமாக இருக்கும் நரம்புத் தொகுதி பரிவு (sympathetic) நரம்புத் தொகுதி. இது தூண்டப் பட்டால் இதயம் வேகமாகத் துடித்தல், சுவாசக் குழாய்கள் விரிவடைதல், அதிக விழிப்பு நிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். நாம் அறியாமலே, ஒரு ஆபத்தும் எங்களை நோக்கி வராத போது கூட உணர்வுகளால் மூளை இந்த பரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டி இந்த மாற்றங்களைத் தூண்டும். உதாரணமாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் தூங்குவதற்கு முதல் வீட்டில் சி.என்.என் செய்தியைப் பார்த்தால், என் பரிவு நரம்புத் தொகுதி உச்சமாக தூண்டப் படுவது நான் அவதானித்த ஒன்று😂. இந்த பரிவு நரம்புத் தொகுதிக்கு எதிராக வேலை செய்யும் இன்னொரு நரம்புப் பிரிவு, பரபரிவு (parasympathetic) நரம்புத் தொகுதி எனப் படுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் போது, இந்த நரம்புத் தொகுதி வேலை செய்து, இதயத் துடிப்பைக் குறைத்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து (இதனால் தான் தூங்கும் போது ஒரு கட்டத்தில் ஆண் குறி தானாகவே எழுச்சி நிலையை அடைவது நடக்கிறது), கண்ணைச் சுழட்ட வைக்கும். எனவே, மன-உடல் ஓய்வு நிலையை எந்த வழியிலாவது தூண்டுவதால் பரபரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டினால் தூக்கம் வருவதற்கு ஏதுவான நிலை ஏற்படும். தம்பதிகளாக இருப்போர் உடலுறவில் ஈடுபடும் போதும் இதே பரபரிவு நரம்புத் தொகுதி தூண்டப் படுவதால், அதுவே கூட தூக்கத்திற்கு ஏதுவான நிலையை உருவாக்கும் (@பிழம்பர் இப்ப நிமிர்ந்து உக்கார்ந்திருப்பார் என நினைக்கிறன்! 😂)
  32. :) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.
  33. வணக்கம் @kandiah Thillaivinayagalingam , யாழ் இணையம் தமிழுக்கு முதலிடமும் முன்னுரிமையும் கொடுக்கும் தளம் என்பதால், உங்கள் சொந்த ஆக்காமாயிருப்பினும் கூட, முற்றுமுழுதான ஆங்கில பதிவுகளை இணைப்பதனை தவிர்க்கவும். தமிழ் மக்களுக்கு தேவைப்படும் ஆங்கிலத்தில் அமைந்த செய்திகள், செய்திகள் தொடர்பான கட்டுரைகள், விவரணங்கள் போன்றவை - அது எம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் நோக்கத்தை கொண்டிருப்பின் யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கலாம். நன்றி
  34. கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02 பகுதி: 02 - நல்லூர் திருவிழா 'யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன. வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது. இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்! மாலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்" [நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!! அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!!' தாத்தா காலை எழும்பியதும் சாளரத்தின் ஊடாக வெளியே பார்த்து முணுமுணுத்தார். இது நல்லூர் முருகன் கோயில் திருவிழா காலம் என்பதால், யாழ்ப்பாணம் - விளக்குகள், மணி ஓசைகள், மேள தாளங்கள் மற்றும் தூப வாசனையால் நிறைந்திருந்தன. அதே நேரத்தில் காவி நிறக் கொடிகள் [saffron flags] அந்தி வானத்தில் நெருப்பு நாக்குகளைப் போல பறந்தன. 15 / 08 / 2025, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான கார்த்திகை திருவிழாவாகும். தாத்தாவும் மூன்று பேரப்பிள்ளைகளும் பாரம்பரியமான உடைகளுடன் அங்கு சென்றனர். அன்று முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பரத்தில் ஊர்வலம் வந்தார். பண்பாடு கலாசாரம் காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர் மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! குழந்தைகள் ஜெயா, கலை மற்றும் இசை ஆகியோருக்கு, அவர்களின் மூதாதையர் நிலத்தில் இவ்வளவு வண்ணமயமான மற்றும் ஆன்மீக விழாவை அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். ஊர்வலத்திற்கு சற்று முன்பு, மூன்று குழந்தைகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்கள் காவடி எடுக்க விரும்பினர்! “தாத்தா, நாங்களும் காவடி எடுத்துச் செல்லலாமா?” ஜெயா ஒளிரும் கண்களுடன் கேட்டார். “நீ இன்னும் சிறியவள், கண்ணா. காவடி கனமானது,” என்று தாத்தா கொஞ்சம் தயங்கினார். ஆனால் விரைவில், பூசாரிகளும் உதவியாளர்களும் மயில் இறகுகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய குழந்தைகளின் காவடியைக் கொண்டு வந்தனர். கூட்டம் கைதட்டியது, குழந்தைகளின் முகங்கள் பிரகாசித்தன. கலை காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு கத்தினான்: “முருகனுக்கு அரோகரா! .. கந்தனுக்கு அரோகரா!” மூவரிலும் இளையவரான 'இசை', தனது சகோதரனைப் பின்பற்றி, இரண்டு கைகளாலும் காவடியை சமநிலைப்படுத்த முயன்றான். சிறுவனின் கால்கள் நடுங்க, அனைவரும் அன்பாக பார்த்து மகிழ்ந்தனர், ஆனாலும் அவனது மனம் தாளத்துடன் நடனமாடியது. மூத்தவள் ஜெயா, கோயில் மேளங்களின் தாளத்தில் அழகாக, "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர" என, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப் பிடித்து நடனமாடினாள், அவளுடைய கணுக்கால்கள் (Ankle) சத்தமிட்டன. அவள் முருகனின் சிறிய தேவதாசி போல இருந்தாள், அதே நேரத்தில், மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களைக் கொண்ட - கலை, புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், சுழன்றும் தன்னை ஒரு தவில் வித்வான் போல நடித்து வட்டமாக சுழன்று சுழன்று ஆடினான். காவடி தூக்கி ஆடு - அவன் காலடி பணிந்து பாடு - நம் பாவங்கள் தீர்க்கும் குமரன் - அவன் திருவடி நாடு தினம்! ஆறுபடை வீடு பாரு - அது ஆறுதலைத் தரும் கேளு - ஓம் சரவணபவ எனும் - மந்திரம் வினைகள் தீர்க்கும் புரிந்திடு! நூற்றுக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்பட்ட தங்க வேல் சப்பரம் கோவிலிலிருந்து வெளியே வந்த போது, வளிமண்டலம் மின் ஒளி மயமானது. வெப்பமண்டல மாலையில் காற்றோடு கலந்த மல்லிகை, கற்பூரம் மற்றும் தூப வாசனை எங்கும் பரவியது. ஜெயா: “நான் இங்கேயே என்றென்றும் இருக்க விரும்புகிறேன், தாத்தா. முருகன் நம்மைப் பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது.” என்றாள். கலை: “நான் பெரியவனானதும், பெரியவர்களுடன் சேர்ந்து சப்பரம் இழுப்பேன்.” என்றான். இசை: (சிரித்துக்கொண்டே) “அம்மா... ஐஸ்கிரீம்!” என்று துள்ளினான். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தெய்வீக பக்தியின் நடுவிலும், ஒரு குழந்தையின் இதயம் இன்னும் ஐஸ்கிரீமுக்காக ஏங்கியது இயல்பான உண்மை நிலையைக் காட்டியது. அதனால்த்தான் அங்கு சனக் கூட்டம்! அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தை சுட்டிக்காட்டி, “பிரகாசிக்கும் கடவுள்!” என்று கத்தினான் குட்டி 'இசை'. “இது முழு அலங்காரத்தில் இருக்கும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகன், அலங்காரக் கந்தன்.” என்று கூற, கலை, 'தாத்தா தாத்தா .. முருகன் கதை ஒன்று சொல்லுங்க' என்று பிடிவாதமாக வெள்ளை மண்ணில் உருண்டான். 👴 தாத்தா : நல்லூரான், முருகப்பெருமான் கதை கேட்டுக்கொள்ள விரும்புகிறாயா, குட்டி? 👦 பேரன் : ஆமாம் தாத்தா! முருகன் கதை சொல்றீங்களா? என்று கேட்டபடி, மணலில் இருந்து எழும்பினான். 👴 தாத்தா : சரி. ஒருநாள் நாரத முனிவர், சிவபெருமானிடம் ஒரு பொன் மாம்பழம் கொண்டு வந்தாராம். அந்த மாம்பழம் யாருக்குக் கிடைக்கும்னு போட்டி ஒன்று போட்டாராம். 👦 பேரன் : யாரெல்லாம் போட்டில கலந்துகிட்டாங்க? 👴 தாத்தா : முருகப்பெருமான், மற்றும் கணேசப்பெருமான் மட்டுமே இசை சிரித்தான், 👴'தொப்பை வயிருடன், மோதகம் சாப்பிடுபவரா ?' தாத்தா தொடர்ந்தார், 👴ஆமாம் , சிவபெருமான் சொன்னாராம் – “யாரு மூன்று தடவை உலகத்தைச் சுற்றிகிட்டு வருகிறாரோ, அவங்கத்தான் மாம்பழம் சாப்பிடலாம்.” என்று 👦 பேரன்: அப்போ முருகன் என்ன பண்ணாரு? 👴 தாத்தா: அவன் தன் மயிலின் மேல் ஏறிக்கிட்டு – “வீய்ய்… வீய்ய்…”ன்னு உலகத்தையே சுற்றிப்பார்த்துட்டாராம். 👦 பேரன்: ஹா ஹா! எவ்வளவு வேகமா பறந்திருக்கும் அந்த மயில்!, எலியில் கணேசப்பெருமான் பாடு ... பாவம் ... பாவம் 👴 தாத்தா: ஆமாம். ஆனா கணேசர் என்ன பண்ணினாரு தெரியுமா? 👦 பேரன் [ஆச்சரியத்துடன்] : என்ன பண்ணினாரு தாத்தா? 👴 தாத்தா: “அவன் யோசிச்சான் – என் அம்மா அப்பா தான் எனக்கு உலகமே. அவர்களைச் சுற்றினால் போதும்.” ன்னு. அவன் மூன்று தடவை சிவபெருமான் – பார்வதியம்மா இருவரையும் சுற்றினாராம். 👦 பேரன்: ஐய்யோ! அதான் பெரிய புத்திசாலித்தனம்! 👴 தாத்தா: சரியாக சொன்னாய் குட்டி. அதனாலே சிவபெருமான் மகிழ்ந்து அந்த மாம்பழம் கணேசருக்கே கொடுத்தார். 👦 பேரன்: அப்போ முருகன் கோவம் பண்ணினாரா? 👴 தாத்தா: ஆமாம்! 😄 அவன் மயிலோட கோபத்துல பறந்துட்டு பழனி மலையிலே போய்ச் சேர்ந்தான். “இனிமேல் நான் இங்குதான் இருப்பேன்” ன்னு சொல்லிக்கிட்டான். 👦 பேரன்: ஹா ஹா! முருகனுக்கு கூட - என்னை மாதிரியே சின்னச் சின்ன விஷயத்துக்கே கோவம் வந்துடுது ? 👴 தாத்தா : 😄 சரியாகச் சொன்னாய்! ஆனா, அந்தக் கோபத்துக்குள்ளேயும் பாசம் தான் இருந்தது. அதனால் தான் முருகன் எப்போதுமே குட்டிகளுக்கு பிடித்த தெய்வம் என்று கதையை முடித்தார். நல்லுரைச் சுற்றி எல்லா இடங்களிலும் இனிப்புகளும் சிற்றுண்டிகளும் நிரம்பி வழிந்தன. "இனி என்னால் லட்டு சாப்பிட முடியாது!" என்று கலை முனகினான், அவனது கன்னங்கள் டிரம் [drum] போல இருந்தது, அனைவருக்கும் சிரிப்பைக் கொடுத்தது. ஆகஸ்ட் 18, 2025 அன்று, யாழ் நகரின் குறிப்பாக நல்லூரின் மற்றும் இடைக்காடு, தொண்டைமானாறு, பண்ணைக்கடல், புங்குடுதீவு என .... யாழ் நகருக்கு வெளியே உள்ள இடங்களும் - நினைவுகளில் இன்னும் இதயங்களில் இருக்க, அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு கடற்கரைக்குப் புறப்பட்டனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31682603474721554/?
  35. அமெரிக்கர்களோடு ஒப்பிடும் போது பிரிட்டிஷ் பிரபலங்கள், நிபுணர்கள் பலரிடம் நான் காணும் ஒரு பண்பு படாடோபம் இல்லாத அமைதி. குடாலின் இயல்பும் இதே போன்றது தான். கீழே, நேச்சர் இதழில் இன்று வெளியான ஜேன் குடாலின் நினைவுக் கட்டுரையை இணைத்திருக்கிறேன். https://www.nature.com/articles/d41586-025-03227-w அவரது 60 ஆண்டு காலப் பணி இன்னும் ஒரு 60 ஆண்டுகளுக்குப் பயன் தரக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. "வேர்களும் தளிர்களும் - Roots & Shoots" என்ற ஒரு சிறுவர்/இளையோர் மட்ட அமைப்பை உருவாக்கியதன் மூலம் வனப் பாதுகாப்பு, உயிர்களின் பல்லினத் தன்மையின் (biodiversity) பாதுகாப்பு என்பவற்றை இன்னும் 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தியிருக்கிறார். ஏன் 60 ஆண்டுகள் என்றால், இனிப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அக்கறைகளைப் போதிக்கும் முன்மாதிரியான பெரியவர்கள் அருகி வருகிறார்கள். "தொழிலைத் தேடு, பணத்தை உழை, சேமித்து இளைப்பாறு, அப்படியே சத்தம் சந்தடியில்லாமல் ஒரு நாள் உலகை விட்டு நீங்கு" என்று ஆலோசனை கொடுக்கும் பெரியவர்களும், இணைய பிரபலங்களும், ஜேன் குடால் போன்றோரின் முன்மாதிரிகளை உருவாக்கப் போவதில்லை என அஞ்சுகிறேன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.