Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87984
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20007
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10098
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/02/25 in all areas

  1. நாடு இந்தபாடு படுகிறது, சேர்ந்து கைகொடுப்போமென்றில்லாமல் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டுகொண்டு வெளியேறுதுகள் மந்தைக்கூட்டம். எதிர் பேரணி என்றவுடன், திருடர் பிடிபட்டவுடன் ஒன்று கூடி தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டம் பண்ணி நாட்டை பிளவுபடுத்துதுகள். இதுகளெல்லாம் ஒன்று கூடி இதைவிட பேரழிவை ஏற்படுத்தத்தான் முயற்சி பண்ணுவார்கள். இதே தமிழருக்கெதிரான கலவரம் என்றால்; கட்சி பேதமின்றி ஒன்றுகூடி கைகொடுத்து அழிப்பார்கள், வீரவசனம் பேசுவார்கள். வரலாறு காணாத, நாடு தழுவிய வெள்ளம். இதற்குள் புலிகளை அழித்த படையினர், கொரோனாவை விரட்டிய படையினர், வெள்ளத்தையும் கடப்பர் என்று வீரவசனம் பேசியிருப்பார் மஹிந்தாவாக இருந்திருந்தால்.
  2. அரசியல்வாதி ஆகிவிட்டால் வெட்கம் மானம் ரோசம் ஒன்றுமே இருக்காது.
  3. கடந்த வியாழக்கிழமை படுபட்சி நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் (கனடாவில் வாங்க விரும்புகின்றவர்கள் காலம் செல்வம் அண்ணையிடம் இருந்து வாங்க முடியும்). அவலமும் சுவாரசியமும் நிரம்பிய ஒரு நாவல். இலங்கையில் முதலாவது விமானத்தை செய்ய எத்தனித்த ஒரு தமிழ் இளைஞன் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் எவ்வாறு அணுகப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, வாழும் நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு, இன்னொரு தேசத்தில் அகதியாக தன் கனவை தொலைத்து விட்டு, தன் மகளின் கனவாவது நனவாகட்டும் என்று மிச்சக் காலத்தை வாழ்கின்றான் என்பதைச் சொல்லும் நாவல். இதனை எழுதிய டிலுக்ஸன் மோகன் இவ் நாவலை Autofiction என்றே குறிப்பிட்டு இருக்கின்றார். கற்பனையும் சுய அனுபவமும் இணைந்த ஒரு நாவல் என. ஆனால் இவர் இப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்கலாம். பேட்டிகளிலும், புத்தக வெளியீடுகளிலும் இந்த நாவல் முற்றிலும் தன் சுயசரிதை என அடித்து விட்டமையே இங்கு பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் மற்றும் நெடுமாறன் சொல்வது (இருவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) சரியாகவே எனக்கு தோன்றுகின்றது. அத்துடன் நாவல் முழுதும் காலப்பிழைகள் பல உள்ளன. இறுதி யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படும் கதையில், இறுதி யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் நிகழ்ந்தவையும் கலந்துள்ளன. ந.செ. இதனைக் குறிப்பிட்டும் உள்ளார். இலங்கை அரசு இராவணனின் புஷ்பக விமானத்தை தேடப் போவதாகவும், அது தொடர்பான தகவல்கள், வரலாற்று குறிப்புகள், ஆதாரங்கள் வைத்துள்ளவர்களின் உதவிகள் தேவை எனவும் அறிவித்தது, என் நினைவுகளின் படியும் கூகிள் ஆண்டவரின் தேடல் விடைகளின் படியும் 2009 இன் பின். 2016 இல் நிகழ்ந்த கருத்தரங்கின் பின், 2020 இல் இவ்வாறு அறிவித்தது. ஆனால், டிலுக்ஸன் 2009 இன் முன் நிகழ்ந்த தன் கதையில் இதனை இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல் 1980 இல் முதல் விமானம் Pazmany PL-2 உம் தயாரிக்கப்பட்ட பின் 2009 இன் பின் Lihiniya MK (விமானியற்ற,unmanned aerial vehicle (UAV)), Lihiniya MK II எனும் Medium-range tactical unmanned aerial vehicle (UAV) உம் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞனது கனவு எவ்வாறு இனவாதத்தால் காவு கொள்ளப்பட்டது என்பதையும், அதன் போது நிகழ்ந்த சித்திரவதைகளையும் பேசும் இந்த நாவல், இலக்கிய நேர்மையற்று சொல்லப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. அந்த உண்மையை ந.செ கேள்வி கேட்பது காலத்துக்கு தேவையான ஒன்று. ஒருவர் இரவல் அனுபவங்களின்படி ஒரு நாவலை படைத்து விட்டு, அது தன் சொந்த அனுபவம் என்று சொல்வதை ஏற்க முடியாது.
  4. மேல்வரியில் உள்ள பிரபலங்களும் சரி கீழ் வரியில் உள்ள ஆறுகளும் அரசியலில் சிக்கித் தவிக்கிறார்கள்.
  5. புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக .........! 😍
  6. 🤣................. ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மனைவியும் திரும்பிப்போக வேண்டிய ஒரு சூழல். மனைவி சில மாதங்கள், நாலோ ஐந்து மாதங்கள், கர்ப்பமாக இருந்தார். அவர்கள் உடனே திரும்பிப் போகவில்லை. சில மாதங்களின் பின் அவன் மட்டுமே திரும்பிப் போனான். மனைவி இங்கேயே தனித்து இருந்தார். பின்னர் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவி குழந்தையுடன் இந்தியாவுக்கு திரும்பிப் போனார். இவை மொத்தமுமே அவர்களின் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிகழ்ந்தது. மருத்துவ காரணங்கள் எதுவுமில்லை. 'அமெரிக்கர்கள் பெரிய திருட்டுப் பயல்கள், சார்.................' என்று சொல்லிக் கொண்டே இங்கு நான் இருக்கும் இடத்திலேயே இரண்டு வீடுகளும், ஒரு வியாபாரமும் வாங்கும் இந்தியர்கள் பலர். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உருப்படியற்றவை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த உடனேயே, இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்களுக்கு எப்படி அனுமதியைப் பெற்றுத் கொள்வது என்ற ஆராய்ச்சியிலும், முயற்சிகளிலும் இறங்கிவிடுவார்கள். இவர்களில் ஒருவர் கூட மாஸ்கோ பல்கலைக்கழகம் பற்றி அதன் பின்னர் பேசமாட்டார்கள். இந்தியர்கள் கோவிட் தொற்றின் போது ஸ்புட்னிக் வக்சீனுக்காக வரிசையில் நின்றார்களா, இல்லையே, ஃபைசர் வக்சீன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். இங்கு எவராவது ஸ்புட்னிக் வக்சீன் போட்டார்களா................... இங்கு களத்திலேயே சில மாதங்களின் முன் ரஷ்யா புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்தி வந்தது. களம் ஆராவாரமாகவும் இருந்தது. உலகில் ஆயிரம் புற்றுநோய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் இந்த மருந்து எந்த புற்றுநோய்க்கு என்ற கேள்வி கூட வரவில்லை. ரஷ்யாவை நண்பர்கள் என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் இந்த மருந்தை இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்து விடுவார்களா.............. டி. ராஜேந்தரே இங்கு சன் ஃபிரான்சிஸ்கோ வந்து தான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தார். ஏன், நாங்களும் தான் ரஷ்ய மருந்தை எங்கள் உடலுக்குள் செலுத்த அனுமதிப்போமா................... இந்தியாவினதும், இந்தியர்களினதும் நட்பும், நடைமுறையும் இவ்வாறு முரண்பட்டதே.............. அவர்களின் கனவு மாஸ்கோவிற்கு போவதல்ல................... அவர்களின் கனவு சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு போவதே........... புதிதாக மதம் மாறியவர்கள், அது வேறு ஒரு வகை. எம்ஜிஆர் ரசிகராக இருந்த ஒருவர் திடீரென்று சிவாஜி ரசிகர் ஆனால் என்ன நடக்குமோ அதையே தான் இந்த மதம் மாறியவர்களும் செய்கின்றார்கள். பழையதை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக தூற்ற வேண்டும்; புதியதை எவ்வளவு போற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக போற்ற வேண்டும். இந்த வகையில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து புதுக் கடவுளே பயந்து போய் பதுங்கிவிடுவார்.....................🤣. இது அரசியலில் கட்சி மாறுபவர்களைப் போன்ற ஒன்று.............. இது விசுவாசம் தான்................. அவர்கள் இன்னொன்றை கண்டு கொள்ளும் வரை............................
  7. இன அழிப்பிற்கு மட்டும் தான் சிங்களவன் ஒற்றுமையானவன்.. இதர கொசுறு வேலைகளுக்கெல்லாம் தமிழனுக்கு நிகரானவன்கள்.😂
  8. வணக்கம் உறவே, நான் மருது பாண்டியன் சென்னையில் வசிக்கிறேன்.எனக்கு சாத்தானின் படை என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் நகல் வேண்டும்.சுமார் மூன்று வருடங்களாக இந்த புத்தகத்தை பற்றி தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை என் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகள் இந்தியா ஈழத்த்திற்கு செய்த துரோகத்தை தெரிந்து கொள்வது சாத்தியம் அற்றதாக மாறி விட்டது.எனவே தயவு செய்து எனக்கு அந்த புத்தகத்தின் நகல் இருந்தால் கொடுத்து உதவுங்கள் உறவே........🙏🏽 யாராவது இந்த புத்தகத்தின் தமிழ் நகல் கிடைத்தால் சற்று கொடுத்து உதவவும்.......‌‌🙏🏽
  9. கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally manufactured aircraft is the result of years of hard work in designing, manufacturing and test flying. Pazmany PL2 aircraft project was started in year 1977 and the aircraft made its maiden test flight on 11th April 1980. This twin seater aircraft has taken part in many a fly-past since entering the Sri Lanka Air Force service. Pazmany PL2 aircraft was built by the Aircraft Engineering Wing of the Sri Lanka Air Force, under the personal supervision of Wing Commander N. Gunarathnam. This was the first instance in the history that an aircraft has been completely built in Sri Lanka. இதற்கு முதல் பரீட்சார்த்தமாக பறந்த விமானங்களை உருவாக்கியவர் பிலிப் றே விஜயவர்த்தன இவரது விமானங்கள் பறந்திருந்தாலும் சிவில்/ இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் குணரத்தினத்தின் விமானம் வான் படையால் பயன்படுத்தப்பட்டதால் இவரே இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். உண்மை வரலாறு இப்படி இருக்க இப்போது சோபாசக்தி முற்றிலும் தன் ஆக்கத்தை எழுதிக்கொடுத்த படுபட்சி என்கிற திருட்டு இலக்கியப்பிரதி மூலம். “ நாவலாசிரியர்” அவதாரம் எடுத்துள்ள டிலுக்சன் மோகன் அடித்து விட்டுள்ள அண்டப்புழுகுகள், ஆகாசப்புழுகுகளை ஒவ்வொன்றாக ஆதாரங்கள், தரவுகள், தருக்கங்களுடன் அம்பலப்படுத்துகிறோம். ரமணன் சந்திரசேகரமூர்த்திக்கு வெடிப்புழுகன் டிலுக்சன் வழங்கிய யூரியுப் பேட்டிதான் அண்மையது. அதில் ரத்மலானையில் தான் Aeronautical Engineering படித்து முடித்தேன் என்று சொல்லியுள்ளார். முன்னதாக Jaffna Monitor க்கு வழங்கிய பேட்டியில் தான் Ratmalana Aeronautical Engineering College ல் படித்ததாகச் சொல்லியுள்ளார். அப்படி ஒரு Engineering கொலீஜே இலங்கையிலில்லை. இலங்கையில் இன்று வரைமும் Aeronautical Engineering ல் BSe பட்டம் பெற இரண்டே இரண்டு இடங்களே உண்டு. 1. Kotelawela Defence University (KDU) 2. மொரட்டுவப் பல்கலைக்கழகம். இந்த இரண்டு இடங்களிலும் இவர் படித்திருக்க வாய்ப்பே இல்லை. இவர் அப்படிச் சொல்லவும் இல்லை. இவரின் LinkedIn பக்கத்தில் Skyline Aviation Sri Lanka வில் படித்ததாகவும் ஒரு Associate Degree பெற்றதாகவும் பதிவு உள்ளது. அங்கு டிப்ளோமா பட்டங்களே உண்டு. BSc இல்லை. ஆனால் தனது இணையத்தில் தனக்கு ஒரு BSc( Aeronautical Engineering) உண்டு என்னு அண்டப்புபுழுகை அவிட்டுவிட்டுள்ளார். இனிமேல் தான் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் வகையான டிலுக்சனின் அண்டப்புழுகு கொமடிகளுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம். சிரிக்க தயாராகிக் படிக்க வாருங்கள். காமெடி 1. ஈழயுத்தம் முடிந்தபின் தான் Ratmalana Aeronautical Engineering College ல்( அப்படி எதுவுமே ஈழத்தில் இல்லை) படித்துக்கொண்டிருக்கும்போது தான் விமானம் செய்யும் யோசனையை சொன்னதால் நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடித்து விசாரித்தாங்களாம். பிறகு இரண்டாம் விசாரணை Air Force வைத்ததாம். தான் இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னபோது இலங்கையின் முதல் விமானத்தை இராவணற் தான் உருவாக்கியதாக Air Force சொன்னதாம். பிறகு மூன்றாம் விசாரணையை Air Force Wing Commander செய்தாராம். அவர் தன் ஆசையைக் கேட்டபின் இலங்கையின் முதல் விமானத்தை புலிகள் செய்து விட்டார்கள் என்று சொன்னாராம். உண்மையிலேயே இலங்கை வான்படை தளபதிகளோ உத்தியோகத்தர்களோ விசாரணை செய்திருந்தால் இந்த காமெடிகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இலங்கையின் முதல் விமானத்தை யார் உருவாக்கியது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அவர்களுடைய மியூசியங்களில் தமிழ் Wing Commander குணரத்தினம் உருவாக்கிய Pazmany PL‑2 light aircraft ஐ மட்டுமல்ல பிலிப் றே விஜயவர்த்தன உருவாக்கிய பல விமானங்களை மட்டுமல்ல அதற்கு முதல் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்ட பறந்த , பறக்க எத்தனித்த பல நூறு விமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஆக இவை டிலுக்சனதும் ஆட்டிலறியை தோளில் வைத்து அடித்ததாக கதை எழுதிய சோபாசக்தியினதும் அண்டப்புழுகுகள். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம். Archive
  10. வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
  11. இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்! இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார். அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கையில் பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செய்தி வந்துள்ளது. https://athavannews.com/2025/1454770
  12. அவருடைய. கட்சியின். பெயர். நாம். தமிழர். என்பது. எந்தக்கட்சியும். வைக்க. துணியவில்லை. பெரும்பாலன. தமிழருக்கு. இரத்தம். ஒடுவது. சீமானின். பேச்சைக் கேட்டுத் தான். இல்லையேல். அவர்களுக்கு. இரத்தம். ஒடாது. ஒடாவிடில். உடலில். கலங்களுக்கு. உணவு. சக்தி. எடுத்துச்செல்லப்படாது. அவர்கள். சோம்பேறிகளாத் தான். இருப்பார்கள். சீமான். வீட்டில். தெலுங்கில். பேசலாம். பிள்ளைகள். ஆங்கிலத்தில். படிக்கலாம். ஆனால். சீமான். உணர்ச்சி வசப்பட்டு. பேசாவிடில். தமிழர்களின். ஒரு. பகுதியினர். இயக்கமற்றுப் போவார்கள். ஆகவே. அவர். பேசட்டும். ஒரு. இந்தியா. கடவுச்சீட்டு. வைத்துள்ள. நபர். நான். தமிழன். என்று. சொல்வதா ? இல்லை. நான். இந்தியன். என்பதா. ? உண்மை.
  13. ஆலங்குடி சோமு எழுதிய பாடல். “கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?” என்ற வரிகள் அன்று பலராலும் பாராட்டப்பட்டது. இந்த உவமையை T.ராஜேந்தர் தனது பாடல் ஒன்றில் பயன்படுத்தியதாக ஞாபகம்.
  14. 02 Dec, 2025 | 06:18 PM வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..... உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள். வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் 2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார். இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk
  15. செய்தியே சித்தியடயவில்லை. பெயில் க்கு தமிழ் இல்லையா? இங்கே லண்டன் இல் தமிழ் திரைப்படத்துக்கு வரும் தமிழ்நாடு இளம் சந்ததியை பார்க்க கவலையும், கோபமும் வருகிறது. அநேகமானவர்களுக்கு, தமிழில் உரையாடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால், ஆங்கிலத்தில் தமிழ் வராமல் உரையாட முடியாத நிலை. நான் நினைக்கிறன், தமிழ்நாடில் அந்த மட்டத்தில் (பொருளாதாரம் உட்பட) இருபவர்கர்களே இங்கே பெரும்பான்மையாக வருகிறார்கள். (மாறாக, இலங்கையில் இருந்த்து எல்லா மட்டங்களில் இருந்த்தும் வந்தனர்.) இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் இளம் சந்ததி, இவர்களை விட தமிழில் உரையாடும். அதே போல ஆங்கிலம் என்றால், தனியே ஆங்கிலம் மட்டுமே.
  16. வணக்கம் வாத்தியார் . .........! பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக } (2) ஆண் : கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக ஆண் : கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக ஆண் : { நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு } (2) ஆண் : இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு ஆண் : உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் ஆண் : { பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை } (2) ஆண் : மனம் என்ற கோயில் பிறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் ஆண் : அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை ஆண் : ஒருவனுக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை .......! --- புத்தன் இயேசு காந்தி பிறந்தது ---
  17. Suguna Muthusamy · Suivre derotoSnps53159a0g:2eh7m67601124tit5rh01 02g1H5g07 à6ac55m,0 · எதிர்பாராத அன்பு என்னசெய்யும்... திக்குமுக்காட செஞ்சு நாம் இதற்கு தகுதியானவர்களா னு தோண வைக்கும்... இனியும் இனியும் மக்களிடம் அன்பு மிகுதியாக காட்ட வேண்டும் என்று நினைக்கத் தோன்றிய தருணங்களில் இதுவும் ஒன்று.... எப்போதும் பச்சை கடலை வந்தால் முதலில் பஸ் இறங்கியவுடனேயே நமது வீட்டுக்கு வந்து விடுவார்...கல்லைக்காய் நல்லா இருக்கு...உனக்கு புடிக்குமே என்று கொண்டு வந்தேன் என்பார்... நேற்று கண்ணு னு சத்தம் போட்டுட்டு வரும்போதே கைகளில் இந்த பனங்குச்சி கிழங்கு வைத்திருந்தாராம்....இவர் திண்ணை பெஞ்சில் அமர்ந்து இருந்தார்..இது அம்மாவிற்கு காசு வேண்டாம்.. என்னோட பரிசு அம்மாவிற்கு என்றராம்...உள்ளே வந்து உன்ற தோழி வந்து இருக்காங்க.. இந்த குச்சி கிழங்கு உனக்கு கிப்ட் ஆமா என்றார்... பாவம் பா என்று கூறி கொண்டு வெளியே வந்தால் நானு அதுக்கு காசு வாங்க மாட்டேன்... நீங்க மட்டும் எனக்கு எல்லா கொடுக்கறீங்க...நானு இதை உனக்கு கொடுக்ககூடாதா னு ....நீ எனக்கு எதுக்கு கொடுக்கிற ...நானு பாசமாக கொடுக்கறேன் னு கூற நானு பிரியத்துக்கு கொடுக்கறேன் சரியா...கடலைக்கு மட்டும் காசு கொடு னு வாங்கி போனார்.... இந்த மாதிரி மக்கள் மேன்மக்களாகி விடுகின்றனர் ஒரு சில நொடியில்...... சிரித்து கொண்டே சாப்பிட்டீங்களா னு கேட்க மழை பெய்ஞ்சுட்டே இருந்ததா வரவேண்டாம் னு பாத்தா மழை ஓய்ஞ்சதா...நாம காலு ஊட்டுலே தங்கதல்லா... அதனால் வெறுஞ்சோறு எடுத்துட்டு அதா அந்த பாக்கெட்டில நயிரு வாங்கி கொண்டு வந்து உள்ளேன்.... நீ ஊறுகாய் வைச்சிருந்தா கொஞ்சுண்டு கொடு னு கேட்க மாங்காய்.. எலுமிச்சை ஊறுகாய் கொடுத்தேன்.... எடுத்து கொண்டு வியாபாரம் செய்ய போய் விட்டார்.. பெண் இப்படி சுமையைத்தூக்கிட்டு போகவேண்டாம் என்று திட்டுகிறராம்...எனக்கு தா ஊட்டுல இருக்க முடியலை...ஏதோ ரெண்டு காசு சம்பாரிசாசா யாருகாசையும் எதிரு பாக்கமா நாம பாட்டில நம்ம பொழைப்ப பாக்கலாமல்ல என்றார்... சரி தா மா..பத்திரமாக போய் விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பினேன்...வாரமோருமுறை...கூடையும் அம்மாவும் ஒன்றே...அவ்வப்போது பொருட்கள் மாறும்....மீன்..வெள்ளரி..தக்காளி.. காய்க என்று ஏதாவது ஒரு பண்டம் வாங்கி வந்து ஊருக்குள் சுற்றி விட்டு விற்பனை செய்து விட்டு தான் போவாரே.....அடுத்த நாள் அடுத்த ஊரு..... வாழ்க்கை படிப்பினைகள்... உழைப்பு உயர்வுதரும்... வாழ்தல் இனிது அனைவரோடும்.....!
  18. சீனன் வருவதற்கு முன் முதல் கதிரையை பிடிக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்... ஆனாலும் தமிழனை விட சிங்களத்திற்கு நன்கு தெரியும் கிந்தியன் யாரென..... காரியம் முடிய கடந்து விடுவான்.அவன் எப்படியோ இவனும் அப்படியே...
  19. 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படை கப்பல் Published By: Digital Desk 3 01 Dec, 2025 | 03:09 PM இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளது. இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர். இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார். "சமுத்திரத்தில் தோழமை" (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232145
  20. Mantras and Miracles · Suivre ersotnSopd2brh951 n1924e7fl2m02l9cuh 1gm6e5vft08t6i,of9c:262 · அஹோபிலம் மடத்தில் அழுத முஸ்லீம் மூதாட்டி! நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள தேரழுந்தூர் அக்ரஹாரம் , அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், ஒரு காலத்தில் விண்ணைப்பிளக்கும் வேத பாராயணம் விழாக்கள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள் என்று கல கலப்பாக இருந்தது . இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும் அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது ! சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது இந்த அஹோபில மடம் .கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மட்டும் மடத்தை சேர்ந்த வைஷ்ணவ அய்யங்கார் வகுப்பை சேர்ந்த மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து அந்த ஊரிலிருந்து சென்று விட்டவர்கள் , அங்கு தங்கி ஊர் வேலை செய்வர். ஆமருவிப் பெருமாள் கோவில் உற்சவம் தான் என்றாலும் உற்சவங்கள் அஹோபில மடத்தின் திண்ணையில் இருந்தே பெரியவர் களால் தீர்மானிக்கப்படும், கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்படும். இது சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. பல நூறு ஆண்டு காலக் கோவிலுக்கும், மடத்துக்கும் வருமானம் இல்லையா ? என்று பல முறை பலர் கேட்டதுண்டு. நாற்பது வேலி நிலம் உள்ளது பெருமாளுக்கு. சொந்தமாக நிலங்கள் ஆனாலும் அவர் பக்தர்களை நம்பியே உள்ளார் என்றால் நம்பவா முடிகிறது ? ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம். மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் சில நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. வெளியூர் வாசிகள் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து விட்டு பிழைப்பு வேண்டி வெளியூர் செல்ல வேண்டும். ஒரு வாரத்தில் நில அளவைகள் செய்ய முடியாது.அவை எங்குள்ளது என்று தேட அவகாசம் இல்லை! ஒரு நாள் கணக வழக்கு சரிபார்க்க சில மட ஊழியர்கள் ரஸீதுகளைத் துழாவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘சாமி, இங்கெ கொஞ்சம் வரீங்களா ?’, என்றது அந்தக் குரல். தூரத்தில் இருந்து பார்த்த போது வெள்ளை துப்பட்டி முக்காடு போட்ட வயதான் பெண் போல் தெரிந்தது. வாசலில் ,வந்திருந்தது 75 வயது மதிக்கத் தக்க முஸ்லீம் பெண்மணி. மடத்தில் இந்த அம்மாளுக்கு என்ன வேலை என்று யோசித்தபடியே மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தால் அந்த பெண்மணி, ‘சாமி, பெரியவங்க யாராது இருக்காகளா ?’, என்றார் அவர். மடத்தில் ஒரு பெரியவர் யாரென்று கேட்டபடியே வந்தார். ‘யாரும்மா நீ?’, என்று கேட்டார். ‘மடத்து ஐயா நீங்க தானே, கொஞ்சம் பேசணும்’, என்றார். வாசல் திண்னையில் அமர்ந்தார். மடத்தின் உள்ளே இருந்து சில வயதான பிராமணர்கள் எட்டிப் பார்த்தனர். அவர்கள் அனைவரும் ஸேவார்த்திகள். உற்சவத்திற்காக வந்திருந்தனர். ‘சாமீ, முடியலெ சாமீ’, என்று அழ ஆரம்பித்தார் அந்த அம்மாள். மடத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னன்னு சொல்லும்மா. யாராவது ஏதாவுது சொன்னங்களா ?’, என்று கவலையுடன் கேட்டார் மடத்து பெரியவர் ! ‘அதில்லீங்க. கொஞ்ச நாளா தூக்கமே இல்லீங்க. சொப்பனம் ஒண்ணு வருது. தினம் அதுவே வருது. சிங்கம் ஒண்ணு வந்து மூஞ்சீலெ அறையுது. என்னுது, எங்கிட்டே குடுத்துடுன்னுது. ஒண்ணும் புரியலீங்க’, என்றார் அந்த அம்மாள். மட சிப்பந்திகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த அம்மாள் காணும் கனவுகளுக்கும், மடத்துக்கும் என்ன சம்பந்தம் ? ‘சரிம்மா, தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்குங்க. நான் என்ன செய்ய முடியும் ?’ என்றார் மடப்பெரியவர் . ‘அப்பிடி சொல்லப் பிடாது சாமி. நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரணும் சாமி. இங்கெ பலரு இருக்காங்க, சில விஷயங்கள் இங்கெ சொல்ல தோதுப்படாதுங்க ஐயா’, என்றார் அந்த அம்மாள். யோசிச்சுச் சொல்வதாக பெரியவர் சொன்னார். கோவில் தேர் ஓடி, அதன் பின் புஷ்பப் பல்லாக்கு நடந்து முடிந்தது. உற்சவங்கள் முடிந்தன அன்று கொடி இறக்கப்பட்டது. அன்று இரவு சென்னை செல்ல ரயில் டிக்கெட் எடுத்த வெளியூர் வாசிகளுக்கு 11 மணிக்கு ரயில். 9 மணி அளவில் கிளம்பி வாசலில் வந்து கோபுரம் நோக்கிக் கை கூப்பி னார் மடப் பெரியவர் திரும்பிப்பார்த்தால் எதிரே அந்த முஸ்லிம் அம்மாள். ‘சாமி, வரேன்னு சொன்னீங்களே’, என்றார். அப்போதுதான் அவர்களுக்கும் நினைவு வந்தது. ‘ஊருக்குக் கிளம்பிட்டீங்க போல. பயணம் தொடருங்க. சித்தே அஞ்சு நிமிஷம் திண்ணைலெ அமருங்க’, என்று சொல்லித் தன் கையில் கொண்டுவந்திருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துத் திண்ணையில் பரப்பினார். ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பெரியவர் .அப்போது அவரே பேசினார். ‘சாமீ, நான் சின்ன புள்ளையா ஒரு 7–8 வயசு இருந்தப்ப எங்க வாப்பா வருஷம் தோறும் ‘மடத்துக் கிரையம்’ன்னு சொல்லி பத்து மூட்ட நெல்லு எடுத்து வெப்பாரு. அவுங்க வாப்பா காலத்துலே ஐயமாருங்க சில பேரு மடத்தும் பேர்ல இருந்த நஞ்சை நாலு ஏக்கரா நிலத்த எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. அப்பொலேர்ந்து வருஷம் தவறாம எங்க தாத்தாவும், வாப்பாவும் விளைச்சல்ல நாலுல ஒரு பங்கு மடத்துக்குக் கொடுப்பாங்க. எங்க புருஷங்ககாலத்துல அது மாறிப்போச்சு. இப்போ எனக்கு வயசானப்புறம் இது நினைப்பு வந்துது. ஆனாலும் அப்பிடியே உட்டுட்டேன். ரெண்டு மாசமா தூக்கத்துல சிங்கம் வந்து அறையுது. தூக்கமும் வரல்லே. ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். மடத்து வாசல்லெ சிங்கம் முகம் இருக்கற சாமி சிலை தெரிஞ்சுது. பொட்டுல அறஞ்ச மாதிரி இருந்தது. ‘என்னுது என்னுது’ன்னு சிங்கம் சொன்னது இது தான் போலன்னு உங்ககிட்டே அன்னிக்கி வந்தேன். ஆனாலும் பல பேர் இருந்தாங்க. அப்பிடியே போயிட்டேன். தேடிப் பார்த்ததுல, எங்க வாப்பாவோட பெட்டில இந்த பத்திரங்கள் கெடைச்சுது. இது என்னான்னு வக்கீல் ஐயர் கி்ட்டே கேட்டேன். அவுருதான் சொன்னாரு 100 வருஷம் முன்னாடி நடந்த கிரையம் பத்தி. அப்பவே உங்க கிட்டே குடுத்துடணும்னு நெனைச்சேன். பாருங்க, அப்பலேர்ந்து சொப்பனம் நின்னு போச்சு’, என்று கதறிக் கதறி அழுதார் அந்த அம்மாள். பத்திரங்கள் யாவையும் வெள்ளைக்கார அரசாங்கப் பத்திரக் காகிதங்கள். துரைசாமி ஐயங்கார் என்பவர் 1908-ம் வருஷம் ஜனாப் அப்துல் வஹாபுக்குக் குத்தகை கொடுத்த விபரம் இருந்தது. அவர் இந்தப் பாட்டியின் தாத்தா. சுமார் 40 வருடம் குத்தகை நெல் வந்துள்ளது. பின்னர் நின்றுவிட்டது. அஹோபில மடத்தின் வழிபடு தெய்வம் நரசிம்மப் பெருமாள் தன் சொத்தை கனவில் அந்த முஸ்லீம் மூதாட்டிக்கு உணர்த்தி மீட்டுள்ளார் என்று அங்குள்ள மடத்து சிப்பந்திகளுக்கு புரிந்து விட்டது ! இந்த முறை மடத்திலிருந்து ஒருவர் தேரழுந்தூர் சென்றபோது அந்த அம்மாளின் வீட்டைத்தேடிச் சென்றார். அவரது பேரனும் மனைவியும் இருந்தனர். அந்த அம்மாள் பத்திரங்களை ஒப்படைத் தவுடன் மிக நிம்மதியாக இருந்ததாகவும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்துக் காலமா னதாகவும் சொன்னார்கள். சுவற்றில் தெரிந்த படத்தில் அவரது முகம் சாந்தமாகத் தெரிந்தது. பெருமாள் சொத்து பொல்லாதது ........!
  21. எமது பாடசாலை குழுமத்தில் அரசாங்கம் வழங்கிய வங்கி விபரம் பற்றிய தகவலை இணைத்தார்கள். நானும் இதைத்தான் கூறினேன். பாதிக்கப்பட்ட எமது உறவுகள், சொந்தங்களிற்கு நேரடியாகவே நாம் உதவி செய்யலாம். அரசாங்கம் ஊடாக செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு செல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அபாய அறிவிப்புக்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரமே வழங்கப்பட்டதாக ஒரு செய்தி சில தினங்கள் முன் பார்த்தேன்.
  22. பாடினாள் ஒரு பாட்டு .........! 😍
  23. கிரிதரன் பதிவு 'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி... எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா? ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம் ஏற்படவில்லை. அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு: "படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்‌ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது. .. இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்‌ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால் அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே....தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல், யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது. ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்...யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்‌ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான் உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காதுஅலட்டும் அரைகுறை 'அறிவுஜீவி'களுக்கு) சொல்லிவிடுகின்றேன். .. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த, அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும் என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு." கதாசிரியரின் நாவலின் நம்பகத்தன்மையை எல்லாம் சுட்டிக்காட்டும் இளங்கோவுக்கு ஏன் நாவலே கட்டமைக்கப்பட்ட கற்பனை என்ற எண்ணம் தோன்றவில்லை? மிகவும் நியாயமாக உருவாகியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் இக்கேள்வி அவரிடத்தில் எழவில்லை. நூலைச் சரியாக விமர்சனரீதியில் அணுகியிருக்கும் இளங்கோவுக்கு ஏன் இச்சந்தேகம் எழவில்லையென்பது ஆச்சரியமானதுதான். கதாசிரியர் தனக்கு இழைக்கப்பட்டதாகக்குறிப்பிட்ட எந்தவொரு சம்பவம் பற்றியும் நான் ஊடகச் செய்திகள் எவற்றிம் வாசித்ததாக நினைவில்லை. அப்படி வந்திருந்தால் அறியத்தாருங்கள். என் கருத்தை மாற்றிக்கொள்கின்றேன். உண்மையில் இக்கதையே தமிழ் மக்களின் துயரைப் பாவித்து , தமிழகத்து இலக்கிய வியாபாரிகளின் நலன்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட விற்பனைப் பண்டமென்றால் அது மிகவும் பாரதூரமானது. கண்டிக்கப்பட வேண்டியது. தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றில் பொய்யைப் புகுத்துமொரு செயலாகவே அது கருதப்படும். அது உண்மையான துயர்மிகு வரலாற்றின் நேர்மையைக் களங்கப்படுத்துமொரு செயலாகவே அமையும். இளங்கோவின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் எழுப்பியிருக்கும் முக்கிய கேள்விகள் -உண்மையில் இந்நூலில் குறிப்பிட்ட , நூலாசிரியருக்கு இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா? அவர் அவற்றுக்காக ஒருபோதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லையா? அப்படி எடுத்திருந்தால் அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டா? இவற்றுக்கான பதில்கள் தெரியாமல் இந்நூலைச் சரியாக அணுக முடியாது. இனிமேல் இளங்கோவின் நூல் பற்றிய முக்கிய் விமர்சனக் குறிப்புகளை வாசியுங்கள். அவை வருமாறு: 1. இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது. "காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143). நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும். 2. டிலுக்‌ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்>> இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ, அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை. அது என்னவெனில்.. டிலுக்‌ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின் கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை ஆட்டோபிக்‌ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும். அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம் நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம். 3. இது ஒரு ஆட்டோபிக்‌ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றாய் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம். ஆனால் நாவல் முன்னட்டையில் விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்‌ஸன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமைகோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம். 4. மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்‌ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது. Facebook Profileஇல் பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்‌ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல், Jan 2011- Jan 2014 இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3]. அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில் 2011-2014 வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்? திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்‌ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது. 5. டிலுக்‌ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன். ஆனால் இப்போது டிலுக்‌ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க் நூலில் காலம் மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது. அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது, கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்‌ஸனிடம் என்ன பதில் இருக்கும்? இளங்கோவின் முகநூற் பதிவை முழுமையாக வாசிக்க - https://www.facebook.com/elanko.dse/posts/pfbid024jMs7sRK7f5Dq9NnASSkQXveZJHt5gEnnLzb3sQKb42z5LD7C7UL6P14w3qzwTxal [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
  24. மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் ........ சிவாஜி & பத்மினி .......! 😍
  25. அன்ரி வணக்கம் 🤪
  26. இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்
  27. மணப்பெண் ஓரிடம் மாப்பிள்ளை ஓரிடம் என இப்பொழுது கலியாணமே இப்படி நடக்கும்போது கருமாதி மட்டும் விதிவிலக்கா என்ன, அதுவும் தன் பாட்டுக்கு நடந்துட்டு போகுது . .......போகட்டும் ........!
  28. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!!
  29. வணக்கம் வாங்கோ. சுவிசில் இருந்து நிறைய பெண்கள் இணைந்திருந்தார்கள். சுதந்திர பறவைகள் என்று ஏதோ குழுவாக இயங்கிய ஞாபகம். அவுசிலிருந்து தூயா என்ற பிள்ளை சாப்பாட்டு கடையை கலக்கி கொண்டிருந்தா. கடைசியாக லண்டனில் இருந்து ரதி இணைந்திருந்தா. எல்லோரும் திருமண வாழ்வில் இறங்கிவிட்டால் நேரமே இருக்காது. @Niththila
  30. வணக்கம். எழுதுங்கள். வாசிக்கிறோம்.
  31. வணக்கம் ...பெயர் கேள்விப்படட ஞாபகம் இருக்கு . வெண்ணிலா ஜமுனா காலத்தில் ...கலகலப்பாக கலந்து கொண்டவர் என நினைக்கிறேன் .
  32. வணக்கம்.வாங்கோ.உங்கள் மீள் வருகையுடன் தொடர்ந்திருங்கள்.உங்களை நன்றாகவே ஞபகம் இருக்கிறது.நீங்கள் வக்கீல் தானே
  33. Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது.
  34. அப்படியாயின் 'வாருங்கள்.............. வணக்கம்...............' என்று நான் உங்களை வரவேற்பது முறையில்லை................... நீங்கள் தான் என்னை வரவேற்க வேண்டும்..................🤣. வணக்கம் நித்தி. நான் இங்கு களத்தில் போன வருடம் இணைந்தேன்...............
  35. தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே ! சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் 57, உடற்கல்வி இயக்குநர் 102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும். ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html டிஸ்கி : இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும் அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.