Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    88127
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3001
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46850
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19253
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/22/25 in all areas

  1. தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்.. தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன் ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது. நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில் நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன். தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம். ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான். இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.
  2. காவி உடைதரித்த வேலன் சுவாமிகள் தமிழன் என்பதால் கைதும் அடி பிடிகளும்.இதுவே ஒரு பௌத்த பிக்கு என்றால் நடக்குமா? இதே காவி உடை தரித்த இனவாத சிங்கள பிக்கு என்றால் எம்மவர்களுக்கு கவிதை வருமா? சித்திரம் வருமா? கட்டுரைகள் வருமா? கட்டுமான கருத்துக்கள் வருமா? சிங்களம் என்றால் பக்குவம் பவுத்திரம் பாக்கியம் மௌனம்.
  3. 2016 இல் அச்சில் வந்த ஒரு புத்தகம், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த எழுத்தாளர் பில் பிறைசனுடையது (Bill Bryson) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தரும் தகவலின் படி பிரிட்டனில் 1800 களில் இருந்தே ஒரு சட்டம் நகர அமைப்புத் தொடர்பாக இருக்கிறதாம். எந்த வகையான நகர அபிவிருத்தியின் போதும் ஒரு பசுமை வலயம் (Green Belt) நகரைச் சூழப் பேணப் பட வேண்டும் என்ற சட்டம் அது. இதனால் தான் லண்டனில் இருந்து 20 - 30 கிமீ தூரத்திலும் பசுமையான வனங்களையும், வெளிகளையும் காண முடிகிறது என்கிறார். ஐரோப்பாவின் ஏனைய சில நகரங்களும் அப்படியாகத் தான் இருக்கின்றன போலும். மத்திய பேர்லினில் பரபரப்பான வீதியில் இருந்து விலகி அடர் மரங்கள் கொண்ட பிரதேசங்களுக்குள் இறங்கி நடந்து மீண்டும் இன்னொரு பர பரப்பான நகர மத்தியை அடையலாம். போலந்தின் வட கிழக்கில் பாதுகாக்கப் பட்ட ஒரு பிரதேசத்தில் இருக்கும் வனப் பகுதியை நாசிகள் தங்கள் பரிசோதனைகளுக்காக ஆரம்பித்தார்கள். போலந்து அரசு இன்னும் அந்த அடர் காட்டை (Black forest) வாகனங்கள் நுழைய முடியாத பிரதேசமாகப் பேணி வருகிறது. பழைய பூங்கா காக்கப் பட வேண்டிய நகர வனமாக (Urban forest) உருவாக வேண்டும். சுமந்திரன் காக்க முனைந்தார் என்பதற்காக இனி அனுர காவடிகள் வந்து மற்றப் பக்கம் சார்ந்து "ஆடுவார்கள்" என நினைக்கிறேன்😎.
  4. பாலியல் குற்றச்செயல்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக பாலியல் கல்வி மிகவும் அவசியமானது
  5. வழிபாட்டின் காரணம் ,எங்கே புத்த சிலை வைக்க முடியும் என ஆராச்சி செய்யத்தான்....பிற்கு தொல்லியல் தினைக்களத்திற்கு கடித்ம் எழுதுவினம் அது பெளத்த விகாரை இருந்த இடம் ஆராச்சி செய்ய சொல்லி..
  6. ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு தொடர் காவியம் இன்னும் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். 18 ஆம் நாள் போர் முடிந்து துரியோதனன் மனிதர்கள் நுழையாத காலகம் என்னும் அடர்காட்டினுள் ஒரு ஏரிக்குள் மறைந்திருக்கின்றான். அவனை ஒரு நாளுக்கு மேலாக தேடி கிருஷ்ணனுடன் வரும் பாண்டவர்கள் ஏரிக்குள் இருந்து துரியோதனனை வெளிவரச் செய்து பீமனுடனான கதைப் போருக்கு தயாராகும் இடத்தில் நிற்கின்றேன். துரியோதனன் 18ஆம் நாளிலா அல்லது 19ஆம் நாளிலா மரணமடைந்தான் என்பது மயக்கமாக உள்ளது. தொடர்ந்து மகாபாரதத்தைப் படிக்காமல் கிடைக்கும் இடைவெளியில் சிறுகதைகள், தத்துவங்களைப் படிக்கின்றேன். ஆனால் எல்லாம் புரிவதில்லை! படிப்பவற்றில் சிலவற்றைத்தான் யாழில் பதிவதுண்டு..😃
  7. பிரபாகரனை பற்றி கொஞ்சம் இழுத்து விட்டது உங்களுக்கு பிடிக்கேல்ல போல.....😎 யார் யாரெல்லாம் பிரபாகரனையும் ,போராளிகளையும்,மாவீரர்களையும் போற்றி பாடவேண்டும் என ஒரு வரையறை வைத்திருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அந்த பட்டியலை இங்கு இணைத்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் உதவியாக இருக்கும்.😋
  8. வெளியேற்றம் பற்றி தலைவர் அறிக்கை விட்ட பின்னரும்.... முஸ்லீம்களின் வெளியேற்றம் இன சுத்திகரிப்பு என சமாந்திர சுமந்திரனார் அறிக்கை விட்டதெல்லாம் கண்களுக்கு தெரியவில்லையோ? 😂
  9. //மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப் பட்ட நிகழ்வில்... சிங்கள காவல்துறை கீழே தள்ளி விழுத்துகின்றது.// - இதுதான் செய்தி. - அதற்கு, "தற்குறித்தனமாக" ஓவியம் வரைந்த உங்களை நினைக்க பரிதாபமாக உள்ளது. சிலரது செயல்பாடுகள்... அவர்கள் எப்படிப்பட்ட வக்கிரபுத்தி உடையவர்கள் என்பதை... அவர்களை அறியாமலே வெளிப்படுத்தி விடுவார்கள். உங்களுடைய சுத்துமாத்து சுமந்திரன்... இப்படியான மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல், எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருக்கின்றார்? இதற்குள்... வட மாகாண முதலமைச்சராகும் ஆசையும் இருப்பது கேவலம்.
  10. சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
  11. தற்குறி என்றால் கை எழுத்து வைக்க தெரியாத படிப்பு இல்லாதவர் கைவிரல் அடையாளம் இடுபவர் தானே ஓவியர் மட்டுமல்ல யாழ்களத்தில் தற்குறிகளே யாரும் இல்லை தவத்திரு வேலன் சுவாமிகள் என்று சொல்லுங்கோ 😂 பார் சிறி ஆசிரியராக இருந்து யுத்தம் முடிவடைந்த பின்பு கேடீஸ்வரர் ஆனவர் தள்ளாடி விழுந்தாலும் அடுத்த செக்கனிலே எழுந்துவிடுவார்
  12. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ் 22 Dec, 2025 | 04:01 PM இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இராமதாஸ் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும். ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் 20.12.2025 அன்று எனது இல்லத்திற்கு வந்து என்னைச் நேரில் சந்தித்திருந்தார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் கடந்த 2009 மே மாதம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழர் தேசத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வருவதை தெளிவுபடுத்தினார்கள். இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை எண்ணிப் பார்க்கும்போது வேதனைக்குரியதாக உள்ளது. இந்நிலை இலங்கையில் தொடர்வதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாததே காரணமாகும். 1987ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒட்டி இதுவரை அதிகாரங்களை மாகாணங்களுக்கு இலங்கை அரசு வழங்கவில்லை. ஒற்றையாட்சி அரசியல் விதியில் 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் 38 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி தமிழர்கள் மீதான இன அழிப்பையும் தடுக்க முடியவில்லை. 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஒன்றிய அரசு பல முறை இலங்கை அரசாங்கங்களை வலியுறுத்தி வந்துள்ளபோதும் ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகாரங்கள் எதனையும் வழங்க முடியாதென இலங்கை உச்ச நீதிமன்றம் 32 தடவைகள் தீர்ப்பளித்துள்ளது. இதனால் இந்தியாவின் கோரிக்கைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. தமிழர்களின் இந்நிலையை‌ போக்க தற்போது இலங்கையில் தொடரும் அரசியல் கட்டமைப்பை மாற்றவேண்டும். இன அழிப்பிலிருந்து தமிழர் தேசத்தை பாதுகாக்க, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதே ஒரே வழியாகும். தமிழர்களுக்கு தீர்வு வழங்குகின்றோம் என்ற போர்வையில் கடந்த 2015 – 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றாட்சி அரசியல் விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) தற்போது பதவியில் உள்ள அனுரகுமார அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு விதியை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது. அந்த அரசியல் அமைப்பு விதி வரைபானது கடந்த 76 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது போன்ற சிங்கள பௌத்த பெரும்பான்மையினரது கைகளில் அதிகாரத்தை வழங்கும் ஒருமித்த அரசியல் அமைப்பு விதி. எனவே அத்தகைய ஓர் அரசியல் சட்டம் கொண்டு நிறைவேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட மேலே குறிப்பிட்டது போன்று கூட்டாட்சி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நோக்கமும் நிறைவேறும். இதுவே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகவும் உள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234110
  13. நன்றி. செயல் சொல்லும்படி இல்லை எனிலும் கொள்கையளவிலாவது ஈழ தமிழர் விடயத்தை சரியாக அணுகுபவர் ராம்தாஸ்.
  14. பழைய பூங்கா ஒரு பசுமைத் திட்டத்தின் கீழே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி . அதில் இதுவரை எந்த ஒரு ஆட்சியாளர்களும் கை வைக்கவில்லை ....... ஆனால் இப்போது சுமந்திரனின் வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்டது அரசாங்கத்திற்கு ஆதரவாக முடிந்துவிட்டது மக்களுக்கு சுமந்திரனால் நன்மை கிடைக்கும் என்பவர்களுக்கு....... இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂
  15. ஓம்…brown belt, green belt என சொல்வார்கள். ஏலவே கட்டிடம் அல்லது கார்பார்க் இருந்தால் அது பிரவுன் பெல்ட். பிரவுன் பெல்டில் புதிய கட்டிடங்களை கட்ட அனுமதி கிடைப்பது இலகு. ஆனால் கிரீன் பெல்டில் கட்ட அனுமதி எடுப்பது மிக கடினம். கிரேட்டர் இலண்டனின் புறநகரில் கூட இந்த கிரீன்பெல்ட் அதிகம் உண்டு. போக்குவரத்துக்காக இலண்டன் 1-6 வலயங்களாக பிரிக்கப்பட்டுளது. 1,2,3 இல் கிரீன்பெல்ட் குறைவு ஆனால் சாலையோர மரங்கள், பாரிய நிலப்பரப்பை கொண்ட பூங்காக்கள் உள்ளன. இதில் சில பூங்கா என்பதை விட meadow எனப்படும் பற்றைகள் போலவே இருக்கும். வலயம் 4 இல் கணிசமாக ஆரம்பிக்கும் கிரீன் பெல்ட்டின் அளவு,5,6 என கூடி அதற்கு அப்பால் கிரீன் பெல்ட்த்தான் அதிகம் இருக்கும். அடுத்த நகரை அல்லது ஊரை அடையும் வரை. போன அரசும், இந்த அரசும் கிரீன்பெல்டில் கட்டுவதை கொஞ்சம் இலகுவாக்க முயல்கிறார்கள் ஆனால் பலத்த எதிர்ப்பு உள்ளது.
  16. நிதானமான, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்👍. உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் பலனை எதிர்பார்த்து ஏமாறாதீகள் என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை😂! பொய்ச் செய்திகளிலும், சில சமயங்களில் "எந்த செய்தியும்" இல்லாமலே ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை - அவர்களை தாயக மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்த வேளையில்- கேவலமாகத் திட்டியபடி இருந்த இருவர் தான் உங்களுக்கு நாகரீகம் கற்பிக்க முயல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.
  17. தரமான சரியான தருணத்தில் வெளிப்பட்ட கருத்து 😎
  18. 2009 போர் முற்றுபெற்ற பின் நல்லிணக்கம், சமாதானம் என்று சொன்னாங்கள். அடாத்தாக பிடித்து எடுத்த சனங்களின் காணிகளில் புத்தர் விகாரை கட்டியெழுப்பி கும்பாவிசேகம் செய்ததுதான் உந்த நல்லிணக்கம் என்று இப்பத்தான் விளங்குது.
  19. இது கடைசியாக இந்த வருடத்தில் A/L சிறப்பு சித்தியடைந்தவர்களுக்கு(3A) மட்டும் என்று தான் நினைக்கிறேன் அக்கா.
  20. பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி! தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக ஈடுபட்டு வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்நிலையில் , போராட்ட களத்தில் வைத்து , பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் , மத தலைவரான வேலன் சுவாமி மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு , அவரை பொலிஸ் வாகனத்தினுள் தூக்கி வீசிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். https://athavannews.com/2025/1456948
  21. நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு! நாட்டின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 130 மாணவர்களை நைஜீரிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். நைஜீரியாவின் மிக மோசமான கூட்டுக் கடத்தல்களில் ஒன்றிற்குப் பின்னர், அண்மைய மீட்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என்று நாட்டின் கூட்டாட்சி அரசாங்கம் விவரித்துள்ளது. நவம்பர் 21 அன்று பெப்ரவரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஊழியர்களும் கடத்தப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் சுமார் 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மைய விடுவிப்புடன், ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 230 ஆக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் பயோ ஒனனுகா ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தினார். எனினும், கடத்தப்பட்டதிலிருந்து, எத்தனை பேர் அழைத்துச் செல்லப்பட்டனர், எத்தனை பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், அரசாங்கம் அண்மைய மீட்பினை எவ்வாறு மேற்கொண்டது- அல்லது ஏதேனும் மீட்புக்கு ஏதெனும் பணம் கொடுக்கப்பட்டதா என்பது முறையாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. https://athavannews.com/2025/1456945
  22. இல்லை! நான் நினைக்கிறேன், இலங்கை அரசு செய்த சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகள், இன்னொரு 3 ஆம் நாடு தலையிடும் பட்சத்தில் இலங்கை நிலமை மோசமாகும், பர்மாவிற்கெதிரான கம்பியாவின் சட்ட நடவடிக்கை போன்றது. அவர்கள் ஆப்பிழுத்த குரங்குகள். தமிழர் பிரச்சினை இப்படி ஒரு 3ஆம் நாட்டின் உதவியுடன் இது வரை நகரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் (ஒரு சிறிய நாட்டின் உதவி கிடைத்தாலே போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்).
  23. வணக்கம் சகோதரம் வாங்கோ. சுகங்கள் எல்லாம் எப்படி? கண்டு கனகாலம்.
  24. மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡
  25. விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை எதிர்த்த/எதிர்க்கும் சுமந்திரனை தோளில் சுமந்து திரிவது கேவலத்திலும் கேவலம். கடந்த 10 வருடங்களில் சுமந்திரர் ஈழத்தமிழர் சம்பந்தமாக என்ன செய்தார் என கேட்டுப்பாருங்கள். அனைவரும் அந்த நிமிடம் தொடக்கம் பல நாட்களுக்கு கோமா நிலைக்கு சென்று விடுவர்.🤣
  26. சுமத்திரன் என்பவர் கபட வேட தாரி அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது .
  27. நகரத்தை அண்மித்துள்ள பழைய பூங்காவில் உள்ள நூறாண்டு கால மரங்களை அழித்து... காங்கிரீட் காடாக்குவது பிழை.
  28. வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார். எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது. வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர். வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல. ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக் கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல. ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப் பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது. கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார். சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது. இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத் தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன. ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப் புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன. https://www.nillanthan.com/8018/
  29. சுத்துமாத்து சுமந்திரனும், நாமல் ராஜ பக்சவும்... ஒரே சட்டக் கல்லூரியில் படித்து, பின் கதவால் பாஸ் பண்ணிய ஆட்கள் போலுள்ளது. 😂 ஒரு வழக்கை தாக்கல் செய்வது எப்படி, அதனை வாதாடுவது எப்படி என்று தெரியாத சுத்துமாத்து சுமந்திரனுக்கு... அப்புக்காத்து வேலையும் சரிவராது. 🤣 நீதிமன்றம் கொடுத்த செருப்படியின் பின்னராவது.. சுமந்திரன் சட்டப் புத்தகங்களை வடிவாக மீண்டும் மீண்டும் திரும்ப வாசிக்கவும்.
  30. யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது! யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று (21) காலை அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவியது. இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. https://athavannews.com/2025/1456885
  31. பகலில் நைட்டி அணிந்தால் 2000 ரூபா தண்டம்.
  32. இவரின் அண்ணந்தான் முதலில் கவிதை சொல்கிறேன் என வந்து… பின்னர் கோவிகளை மீட்கிறேன் என காசு சேர்த்து… அதன் பின் சங்கி தனமான நடவடிக்கைகளை யாழில் செய்து… கடைசியில் ரவிராஜ் மனைவிக்காக அரசியலில் குதித்த …. உமாகரன் இராசையா…. இந்த குடும்பத்துக்கே எவருக்கும் இல்லாத அதீத வாய்ப்பு, வரவேற்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. சிறிதர் வேம்பு எனும் சங்கியை கண்டு கொண்டது போல…. இவர்கள் மீதும் ஒரு கண்வைக்க வேண்டும். பிகு இருவருமே தலைவர், போராளிகளை வாயாரப் புகழ்வார்கள். சீமானை போல. இப்போதெல்லாம் யாரேனும் இப்படி பேசினாலே முதலில் சந்தேக படவேண்டும் என்பது பொதுவிதி போல் ஆகி விட்டது.
  33. இறங்க வேண்டிய இடம் .ஏரங்குடி ஏறங்கடி ஏறங்கடி ஏறங்கடி
  34. ஓம்…அப்போதே இந்த கட்டுரையை பகிர்ந்த்தேன். ஆனால் அப்போ சில திரிகளில்….எப்படி எண்டாலும் உழைத்தால் போதும்… உலகில் களவு செய்யாதவன் யார்… அப்படி இருந்தால் அவன் பிழைக்க தெரியாதவன்…. என்ற ரீதியில் கருத்துக்கள் பதியபட்டு கொண்டிருந்ததல்லவா…. அதில் ஒன்றில்தான் இந்த தம்பதிகள் உதாரண புருசர்களாகினர். லைக்காவையும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்கள் ஆரம்பம் பற்றி எழுதி - அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டேன் 🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.