Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    32306
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88127
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19253
    Posts
  4. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    5
    Points
    35984
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/31/25 in all areas

  1. @goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன் நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன். மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர். ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்! இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை. (இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.) இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்: வீரவேங்கை யோகன் - 16.08.1987 வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987 நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு வீரவேங்கை டென்சில் - 02.09.1987 பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987 குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987 பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987 குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987 தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987 ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை தாஸ் - 02.10.1987 கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை பாபு - 07.10.1987 கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
  2. துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.
  3. இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.
  4. நல்லது அண்ணா. சில தகவல்களைப் பகிர்கிறேன், செய்யமுடியுமா எனப்பாருங்கள். நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்.... நல்லது அண்ணா. 1) காரைநகரில் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு மலசல கூடம் கட்டித்தருமாறு எமது அமைப்பிடம் பிரதேச செயலகம் ஊடாக வாய்மொழியாக கேட்டுள்ளார்கள். வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 2) பொன்னாலையில் 3 பேர் எழுந்து நடமாடமுடியாத சகோதரர்களின் கொமட் உடைந்துவிட்டது, மலசலகூடக் குழி(பிற்) மூடப்பட்ட பிளாற் உடைந்துள்ளது, பாத்றூம் பிளாற் உடைந்துவிட்டது. புனரமைத்து தருமாறு அவசர வாய்மொழி வேண்டுகோள் வந்துள்ளது. வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 3) அராலியிலும் மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டவர்கள். போதிய விபரம் கிடைக்கவில்லை. முழு விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன். மேலும் சில விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.
  5. யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் . இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். கோஷான் 👍🙏
  6. https://www.karainagar.org/about-us முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம். இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம். ஊர்கள் காரை நகர் சுழிபுரம் வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில், ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம். தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும். அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே. வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம். உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன். பிகு சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.
  7. ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏
  8. மேலும் நான் இலங்கை கடற் தொழில் அமைச்சில் [கொழும்பு] கடல் பொறியியல் விரிவுரையாளராக சில ஆண்டு கடமையாற்றிய பொழுது, 1983 க்கு முதல், அங்கு, குறுநகரில் அமைந்துள்ள கடல் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சில தடவை போய் உள்ளேன். அங்கு பயிற்சி, குருநகர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய படகுகள் தங்கி இருக்கும் ஜெட்டிகளில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகுகளில் தான் நடந்தன - அங்கு பெரிய கப்பல்கள் அல்லது கிரேன்கள் இருக்க வில்லை என்பது நான் நேரடியாக பார்த்தது
  9. சுத்து மாத்து சுமந்திரனின்... வளர்ப்பு எப்பிடி இருக்கு என்று பாருங்கோவன். தமிழரசு கட்சியை... சல்லியாய் நொருக்க, ஆபிரகாம் சுமந்திரன் படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கெனவே... நொருக்கி, பாடையில் ஏத்தி வைத்திருக்கிறதை, இந்த வருஷ கடைசி "டார்கெட்" ஆக "4 கிலோ கஞ்சா அசைன்மென்ட்" கொடுத்துள்ளார் சுத்துமாத்து. சென்ற கிழமை சுமந்திரனின் "அல்லக்கை" ஒன்று... கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இருந்த நிலையில்.. அது, ஆளும் கட்சி ஊத்திக் கொடுத்த சாராயத்தில் "நிறை வெறியில்" குப்புற கவுண்டு, ஆளும் கட்சிக்கு வாக்களித்த கேவலத்த்தால், தமிழரசு கட்சி தனது தவிசாளர் பதவியை ஆளும் கட்சியிடம் இழந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. இப்போ.... கஞ்சா கேசில், சுமந்திரனின் இன்னுமொரு தமிழரசு கட்சி அல்லக்கை உறுப்பினர் கைது. சுமந்திரன்... தொட்டதெல்லாம், சர்வகுலநாசம். சிங்களத்துக்கு செம்பு அடிக்கத்தத்தான் சுமந்திரன் லாயக்கு. வக்கீல் தொழிலும் தெரியாது, அரசியலும் தெரியாது.... என்ன இழவுக்கு கோட்டு, சூட்டுடன்... தான் ஒரு ஆள் என்று திரியுது தெரியவில்லை. இதற்குள் மாகாண சபை முதல்வர் கனவு வேறை.
  10. காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தற்போது உரையாடியபோது 55 குடும்பங்களுக்கு(புதிதாக திருமணமானவர்கள், பழைய வீட்டுத்திட்ட நிதிப்பற்றாக்குறையால் கட்டமுடியாதவர்கள்) புதிதாக மலசல கூடம் அமைக்க வேண்டும் என்ற தகவலை தெரியப்படுத்தினார். மேலும் 12 குடும்பங்களிற்கு மலசலகூடம் திருத்தவேலை செய்யவேண்டும் எனவும் கூறினார். முதலில் 5 குடும்பங்களின் விபரங்களை கோரியுள்ளேன்.
  11. நீன்ட காலத்துக்குப் பின் யாழில் நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்.
  12. நான் எழுதுவது ஒரு அனாதையான இனத்துக்கு மீட்பார் என்று சொல்லி பின்கதவால் வந்த வல்லூறு ஒன்றின் கதை . உங்களை போன்றவர்களுக்கு கிரிகெட் விளையாட்டாய் நக்கலாய் போய் விட்டது அந்த மக்களின் மவுன வலி. இந்த சுமத்திர வல்லூறு வடகிழக்கு தமிழருக்கு கடந்த 14 வருடங்களில் ஒன்றையும் கிழித்து போடவில்லை இனியும் கிழிப்பார் என்று பள்ளிக்கூடம் போனவர்கள் நம்ப மாட்டார்கள் .
  13. என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.
  14. நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா? இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா? கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 100 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.
  15. நல்ல விடையம் ஏராளன் மிகவும் சுறுசுறுப்பாகத் தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார். கோஷன் எழுதியதைப்போல முன்னோட்டமாக 10 வீடுகளுக்கான வசதி செய்து கொடுக்கலாம் 5 சுழிபுரம் , 5 காரைநகர் , இடையே திருத்த வேலைகள் பொன்னாலை யில் செய்யலாம். அடுத்த கட்டமாக முதலில் பொன்னாலையில் நடமாட முடியாத அந்தச் சகோதரர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என அறிய விரும்புகின்றேன் ஏராளன் அடுத்த கட்டமாக ஒரு வீட்டில் கழிவறை அமைத்துக் கொடுக்க என்ன செலவாகும் என்பதையும் அறியாத தந்தால் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஒருவரிடம் மட்டுமல்லாது பலரிடம் கேள்விப் பத்திரம் மூலம் மொத்த செலவைக் கேட்டு ஒரு ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவதும் நல்லது என நினைக்கின்றேன் ஏராளன் ஏற்றுக் கொண்டால் அவரை இந்தத் திட்டத்திற்கான பொருளாளராக நான் பிரேரிக்கின்றேன் அவரால் கட்டாயம் நம்பிக்கையான முறையில் நிதி கையாளப்படும் உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் உங்கள் ஆதரவிற்கு நன்றி தங்கை யாயினி கட்டாயம் நிழலி இந்தத் திட்டம் 2026 இல் யாழின் ஒன்றிணைந்த ஒரு உதவித் திட்டமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .
  16. https://www.google.com/search?q=ipkf+operation+gurunagar&oq=IPKF+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBECMYJzIGCAAQRRg5MgYIARAjGCcyFAgCECMYExgnGIAEGIoFGPAFGJ4GMgYIAxBFGDsyBggEEEUYQDIJCAUQABgTGIAEMgkIBhAAGBMYgAQyCQgHEAAYExiABNIBCzUwODQ4M2owajE1qAIIsAIB8QXbeXB0ATCm7PEF23lwdAEwpuw&sourceid=chrome&ie=UTF-8
  17. நல்லது அண்ணா. நாளை புதிய வருடப்பிறப்பில் புதிய திரியை துளித்துளியாய் பகுதியில் @goshan_che அண்ணை திறவுங்கோ. நான் சரியான பயனாளிகளை இனம் கண்டு முடிந்தால் நேரில் சென்று உறுதிப்படுத்தி சொல்கிறேன். இது யாழ் இணைய உறவுகளின் கூட்டு முயற்சியாகும்.
  18. இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.
  19. நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம். நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  20. யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது! யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1457695
  21. கோசான் யாருடைய குறூப் என்பதைவிட ஏன் இப்படிப்பட்டவர்கள் உள்வாங்கப்பட்டார்கள்? கடந்த தேர்தலிலும் கட்சிக்காக வேலை செய்தவர்கள் கட்சி விசுவாசிகளை புறம்தள்ளி தமது சொல் கேட்கக் கூடியவர்களை தராதரம் பார்க்காது போட்டியில் நிறுத்தியதை அவதானித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். போதாக்குறைக்கு டக்ளஸ் கைது என்றவுடன் சிறீதர் படமாளிகையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சிவிகே சிவஞானம் எங்கே என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். ரணில் கைது செய்யப்பட்டவுடன் குரல் கொடுத்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாற்றிய டக்ளஸ் கைதின் போது ஏன் மெளனமாக இருக்கிறார் என்றும் எழுதுகிறார்கள்.
  22. 📌 What Happened on 21 October 1987? On 21 October 1987, during Operation Pawan — the military campaign by the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka — a special operation was carried out against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) base at Gurunagar, in the Jaffna Peninsula. Wikipedia+1 ⚓ Attack by Indian Navy MARCOS The Indian Navy’s Marine Commandos (MARCOS — then known as Indian Marine Special Forces) were tasked with neutralizing LTTE’s small naval/boat assets and disrupting their supply routes to Jaffna. Wikipedia A team of about 18 commandos led by Lt. Arvind Singh conducted an amphibious raid on LTTE positions at Gurunagar. They swam long distances and used small assault craft and floating rafts laden with explosives to approach their targets stealthily. Daily News Archives+1 The commandos rigged explosives on the jetty and on LTTE speedboats moored there and detonated them. They then disengaged and returned under fire without suffering casualties among their own team. Daily News Archives 📌 Important Clarification: This was not a large-scale strike on a “major port infrastructure” — Gurunagar did not have a formal harbour with large concrete port buildings or shipping docks comparable to Colombo or Trincomalee. It was essentially a fishing and small-boat landing area/jetty used by LTTE marine elements and local fishermen, not a fully developed commercial port. Daily News Archives 📌 Were Ships or Civilian Boats Hit? The primary targets were LTTE speedboats and small craft which were being used for logistic movement and potentially for attacks. These were destroyed as part of the demolition charges placed by the commandos. Daily News Archives ✔ No evidence exists in reliable military histories that large freight ships, civilian passenger vessels, or commercial port facilities were attacked in this operation. ✔ The operation was a military raid on LTTE assets, not a naval bombardment of port infrastructure. 📌 Casualties & Damage Indian MARCOS — according to mainstream military histories — did not suffer casualties during this specific operation because the team withdrew successfully after detonating their charges. Wikipedia There are no credible official records confirming that hundreds of Indian troops were killed in this particular strike — such figures (e.g., “600 killed”) appear only in unverified online sources and should not be treated as factual. The LTTE’s naval assets at the beach/jetty were destroyed (speedboats and small craft), and the jetty structures sustained explosive damage. 📌 Context: Operation Pawan This raid was part of a larger phase of fighting between IPKF and the LTTE: 📌 Operation Pawan (11–25 October 1987) was the Indian Peace Keeping Force’s campaign to seize and control the Jaffna Peninsula from LTTE control as part of the Indo-Sri Lanka Accord of 1987. Wikipedia Who was involved overall: Indian Army units (various infantry brigades, paratroopers) Indian Navy and Coast Guard blockading coastal supply routes Indian Air Force providing air support LTTE fighters (Sea Tigers, ground forces) Casualties in Operation Pawan (overall, not just Gurunagar): Indian losses: over 200 killed, hundreds wounded in fighting around Jaffna. Wikipedia LTTE losses: estimated thousands overall in the broader Jaffna campaign. Wikipedia This reflects intense urban and jungle warfare over several weeks — not solely the commandos’ beach raid. 📌 Was There a “Port” at Gurunagar? 📍 Gurunagar (Jaffna) was historically a fishing and small-boat landing zone, not a major commercial harbour. Footpaths and basic jetties existed for fishing and small craft — not large ships or cranes — especially during the war period when movement of large vessels was restricted. Daily News Archives ✔ So calling it a “thuramukam” (port) in the sense of a major harbour is inaccurate; it was a jetty/small coastal landing used locally and militarily by the LTTE Sea Tigers. 📌 Aftermath & Impact Short-term Impacts: LTTE speedboats and jetty facilities at Gurunagar were destroyed, disrupting some of the group’s coastal logistics. Daily News Archives The IPKF was able to restrict LTTE maritime movement, contributing to the larger campaign to push rebels out of Jaffna’s urban areas. Wikipedia Longer-term Consequences: Operation Pawan as a whole was strategically costly for India — heavy casualties, political controversy, and eventual Indian withdrawal in 1990. Wikipedia The war further deepened mistrust between the LTTE and IPKF, eventually leading to the assassination of Indian Prime Minister Rajiv Gandhi in 1991, claimed by the LTTE. Wikipedia Civilian consequences: The broader Jaffna operations were part of intense urban warfare affecting civilians in and around Jaffna — shelling, displacement, and casualties — but these were not limited to the Gurunagar raid itself and reflected the larger conflict. Wikipedia 📌 Summary Aspect What Really Happened Target on Oct 21, 1987 MARCOS raid on LTTE boats and jetty at Gurunagar, Jaffna. Daily News Archives Type of place Small jetty/landing area, not a large port. Daily News Archives Ships attacked? LTTE small speedboats and jetty facilities, not big naval or civilian ships. Daily News Archives Casualties (MARCOS) No reported commandos killed in that specific raid. Wikipedia Casualties in campaign IPKF losses in Jaffna operations numbered in the hundreds overall. Wikipedia Aftereffects Disruption of LTTE coastal logistics; part of wider conflict that shaped Sri Lanka’s civil war and India-Sri Lanka relations. Wikipedia
  23. தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது. ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும். இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும். அதன் பின் என்னவானதோ அறியேன். பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன். இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும். பிகு மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது. அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள். சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.
  24. நன்றி தம்பி. குசா அண்ணை, வாத்தியார் அண்ணை, நீங்கள், நான் ஒரு குழுவாக செயல்படுவோம். அனைத்து தகவல்களையும் இதே திரியில் பகிர்வோம். முடியுமானளவு. முதல் இலக்கு - காரைநகரில் 5, மூளாய், பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் 5 என 10 பயனாளர்களை இனம் காணல்.
  25. அத தெரண கருத்துப்படங்கள்.
  26. இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார். உயரிய விருது உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார். இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் சிறுவன் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார். பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார். இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  27. மேல் உள்ள செய்திகள் தமிழ் பிபிசியில் போடமாட்டர்கள் .
  28. கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்! ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று குற்றாம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட 2019 ஈரானிய சட்டம், வொஷிங்டனின் வழியைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒட்டாவாவின் ரோயல் கனடிய கடற்படையை இந்தச் சட்டத்தின் எல்லைக்குள் வருவதாகக் தெஹ்ரான் கருதுவதாகவும், இதன் விளைவாக, அதை ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. Athavan Newsகனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறி
  29. இந்தியாவுடனான ரி20 தொடரில் முழுமையாகத் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது இலங்கை Published By: Vishnu 31 Dec, 2025 | 03:46 AM (நெவில் அன்தனி) திருவனந்தபுரம் கிறீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) இரவு மின்னொளியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 15 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. இதற்கு அமைய 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5 - 0 என முழுமையாகக் கைப்பற்றி 2025ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவுசெய்தது. அதேவேளை, இலங்கை வெறுங்கையுடன் நாடு திரும்பவுள்ளது. இன்றைய போட்டிக்கான இரண்டு அணிகளிலும் தலா இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியாவின் ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனாவுக்குப் பதிலாக தமிழகத்தின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை 17 வயதுடைய குணாளன் கமளினி அறிமுக வீராங்கனையாக அணியில் இடம்பெற்றார். அத்துடன் ரெணுகா சிங்குக்கு பதிலாக சகலதுறை வீராங்கனை ஸ்னேஹ் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் காவியா காவிந்தி, சுழல்பந்துவீச்சாளர் மல்ஷா ஷெஹானி ஆகியோருக்குப் பதிலாக இனோக்கா ரணவீர, மல்கி மதாரா ஆகிய இருவரும் மீள இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள் இருவரும் நான்காவது போட்டியில் விளையாடவில்லை. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அத்துடன் இந்தத் தொடரில் இந்தியாவின் மூன்றுக்கு மேற்பட்ட விக்கெட்களை இலங்கை கைப்பற்றியது. இதுவே முதல் தடவையாகும். கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச் சதங்கள் குவித்த ஷபாலி வர்மா இந்தப் போட்டியில் 5 ஓட்டங்களையே பெற்றார். அறிமுக வீராங்கனை கமலினி 12 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 13 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 5 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 7 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழக்க 11ஆவது ஓவரில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், ஆமன்ஜோத் கோர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினர். ஆனால் அவர்கள் இருவரும் 4 ஓட்டங்கள் இடைவெளியில் களம் விட்டு வெளியேறினர். (142 - 7 விக்.) ஆமன்ஜோத் கோர் 21 ஓட்டங்களையும் ஹாமன்ப்ரீத் கோர் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 68 ஓட்டங்களையும் பெற்றனர். மல்கி மந்தாரா வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 19 ஓட்டங்கள் குவிக்கப்பட, இந்தியா பலமான நிலையை அடைந்தது. 18ஆவது ஓவரில் 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஹாமன்ப்ரீத் கோரின் விக்கெட்டைக் கைப்பற்றிய கவிஷா டில்ஹாரியை பொருட்படுத்தாமல் கடைசி ஓவரில் மல்கி மந்தாராவை பந்துவீச அழைத்தது பெருந்தவறு என்பதை புரிந்துகொள்ள சமரி அத்தபத்தவுக்கு வெகு நேரம் சென்றிருக்காது. டில்ஹாரிக்கு 2 ஓவர்களும் அனுபவசாலியான சமரி அத்தபத்தவுக்கு ஒரு ஓவரும் மீதம் இருந்தன. கடைசி ஓவரில் 19 ஓட்டங்களை விளாசிய அருந்ததி ரெட்டி 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஸ்நேக் ராணா ஆட்டம் இழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரஷ்மிக்கா செவ்வந்தி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 176 ஓட்டங்கள் என்ற சற்று சிரமமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இலங்கையின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. அணித் தலைவி சமரி அத்தபத்து வெறும் 5 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களுடன் 2ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் ஹசினி பெரேராவும் இமேஷா துலானியும் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். இமேஷா துலானி தனது 6ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அவர் 8 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார். ஹசினி பெரேரா தனது 89ஆவது போட்டியில் கன்னி அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட 19 வயதான ரஷ்மிக்கா செவ்வந்தி மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். அவர் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இந்திய பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 6 பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகி: ஹாமன்ப்ரீத் கோர் தொடர் நாயகி: ஷபாலி வர்மா https://www.virakesari.lk/article/234799
  30. எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .
  31. மதமும் அரசியலும் கலக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தும் (உலாமா சபைக்கும்). ஆனால் சங்கிகள் தனியே மதம் சம்பந்தபட்டோர் மட்டும் அல்ல, அவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஜென்ம வைரியான இந்திய தேசியத்தின் கூறுகள். ஆகவே சங்கிகளை இனம் கண்டு எதிர்ப்பது அரசியல் தத்துவார்த்த ரீதியானது.
  32. கிறிஸ்துவ பாதிரியார்கள், பெளத்த துறவிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவை ஆதரிக்கப்படுவதும், வேலவன் சுவாமிகள் என்றதும் அது ஆதரிக்கப்பட முடியாமல் போவதும், சங்கி என பட்டம் கட்டப்படுவதும் போராட்டத்தை எந்த மத துறவி செய்கின்றார் என்பதை பார்த்தே ஆதரவு கொடுக்கப்படுகின்றதா என ஐயம் ஏற்படுகின்றது. வேலவன் சுவாமிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கிறிஸ்தவ துறவிகளுக்கு கூற முடியுமா? பெளத்த துறவிகளுக்கு கூற முடியுமா? தலாய் லாமாவுக்கு கூற முடியுமா?
  33. சர்வதேசம் எப்போதும் தனது நலன்களை முன்னிலைப்படுத்தியே செயற்படும் என்று கூறும் வேலன் அவர்கள், அதே சர்வதேச சமூகத்திடம் தங்களது போராட்டத்தை எடுத்துச் சென்று, அதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துவது எனக்குப் புரியவில்லை. சர்வதேசம் நலன் மட்டுமே பார்க்கும் என்றால், அதிலிருந்து நமக்கான நியாயம் எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி என்னிடம் எழுகிறது. தான் “காவி உடுத்திய துறவி” என வேலன் அவர்கள் கூறுகின்றார். துறவி என்பவர், உலகியல் ஆசைகளைத் துறந்தவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் அரசியல் ஆசையும் அதிலிருந்து விலகியிருக்க வேண்டாமா? இங்கே பட்டினத்தார் கதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை வயல் வரப்பில், தலைக்கு கை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பட்டினத்தாரைக் கண்ட இரண்டு பெண்களில் ஒருவர், “பார், துறவி எவ்வளவு சுகமாக படுத்திருக்கிறார்” என்று கூறினாராம். அந்த வார்த்தை பட்டினத்தாரின் காதில் விழுந்ததும், “இன்னும் நான் துறக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று உணர்ந்தாராம். அந்தக் கதையின் தொடர்ச்சியை இங்கே விரிவாக எழுதத் தேவையில்லை. அதன் பொருளைப் புரிந்துகொள்ளலாம். வேலன் அவர்கள் ஆன்மீகப் பாதையிலேயே நிலைத்து நிற்பது அவருக்கும் சமூகத்திற்கும் உகந்ததாக இருக்கும் என்பதே என் கருத்து. அரசியல் அவருக்கு அவசியமான துறை அல்ல. ஏற்கனவே எங்கள் மதகுருக்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கிடையாது. அந்தச் சூழலில், போராட்டம், அறம், வீரம் என மக்களின் உணர்வுகளைத் தூண்டி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தால், இருக்கிற மதிப்பும் மெல்ல மெல்லக் குறைந்து போகும். அதையும் மீறி அரசியலில் ஈடுபடுவேன் என்று வேலன் அவர்கள் அடம் பிடித்தால், இன்னொரு “அர்ச்சுனா” அவதாரம் எடுத்து வருவதற்கான வாய்ப்பை நாம் அடுத்த தேர்தலில் பார்க்கலாம். “பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்களில் …”தலைப்பு வேறு ….
  34. துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார். யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
  35. இந்தியப் படையுடனான போர் தொடங்குவதற்கு முன் ஆயுதமில்லாத புலிகள் 22 பேர்வரை இவர்களது கையாட்களால் கொல்லப்பட்டார்கள் என எண்ணுகிறேன். ( எண்ணிக்கை சரியாக தெரியவில்லை)
  36. அத தெரண கருத்துப்படம்.
  37. 3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை….. ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂. எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம். பிகு மனமுண்டானால் மார்க்கபந்து.
  38. போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉
  39. எல்லாம் நல்லதான் போய்கிட்டு இருந்திருக்கும், ஆன அவசரதில்ல Parking கியரை மாற்றி பிடிச்சு இழுந்திட்டா போல இருக்கு☹️
  40. மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சற‌த்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உற‌ங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவ‌னுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.
  41. குறைந்தது 60 தமிழ் மாணவர்கள் வரையில் அந்த முஸ்லீம் மாணவனால் அடையாளம் காணப்பட்டோம். வெகு சில தமிழ் மாணவர்களே அந்த அடையாள அணிவகுப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். அடையாளம் காணப்பட்ட எம்மை கட்டுப்பாட்டு அறையினுள்ளிருந்து வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலீஸ் வாகனங்களுக்குள் ஏற்றுவதற்காக பொலீஸார் இழுத்து வந்தபொழுது அங்கு சுற்றியிருந்த சிங்கள மாணவர்களும் பொதுமக்களும் வெற்றிக்களிப்பில் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். கட்டுப்பாட்டு அறையினுள் நடந்தது நாம் புலிகளா இல்லையா என்கிற விசாரணை என்றும், எம்மை பொலீஸார் வாகனங்களில் ஏற்றியதன் மூலம் நாம் புலிகள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் எம் முன்னாலேயே பேசினார்கள். அறுபது புலிகளைக் கைதுசெய்துவிட்ட மகிழ்ச்சியும் , "இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாமல் இத்தனை புலிகளும் இங்கு கல்விபயின்று வந்திருக்கிறார்களே?" என்கிற எரிச்சலும் ஒன்றுசேர அவர்கள் ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டார்கள். நாம் மெதுமெதுவாக பொலீஸ் வாகனங்களில் ஏறத் தொடங்கினோம். பல்கலைக்கழகத்தில் இருந்து மொறட்டுவைப் பொலீஸ் நிலையம் செல்லும் வழியில் எனக்கருகில் இருந்த சக தமிழ் மாணவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி, எங்கே வைத்து, யார் உங்களைப் பிடித்து வந்தார்கள் என்கிற கேள்விகளும், விடைகளும் எமக்கிடையே பரிமாறப்பட்டன. கூடவே முஸ்லீம் மாணவன் எப்படி இதற்குள் சிக்கினான், அவனுக்கு என்ன நடந்தது? அவன் எதற்காக அடையாளம் காட்டும்படி வற்புறுத்தப்பட்டான்? என்கிற எனது கேள்விகளுக்கும் அந்தச் சிறிய பயணத்தில் விடை கிடைத்தது.
  42. நாம் மண்டப வாயிலை அடைந்தபோது, சத்தமாகக் கூக்குரலிட்டபடி வந்த கூட்டமும் அப்பகுதியினை அடைந்திருந்தது. சுமார் 40 அல்லது 50 பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த முகங்களில் பெரும்பாலானவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் என்னுடன் கூடவே கல்விகற்கும் இறுதியாண்டின் சிங்கள மாணவர்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் கட்டில்ச் சட்டங்கள், பொல்லுகள், கதிரைகளின் கால்கள் என்று ஏதாவதொரு ஆயுதம் காணப்பட்டது. முன்னால் வந்தவன் காலியைச் சேர்ந்தவன். மின்னியல்க் கற்கை நெறியில் பயின்றுவருபவன். பல்கலைக்கழகத்தில் நான் இருந்த நான்கரை ஆண்டுகளில் என்னுடன் பலமுறை பேசியிருக்கிறான். மிகவும் பரீட்சயமானவன். ஆகவே, என்னதான் நடக்கிறது என்று அறிய அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்ன நடக்கிறது? ஏன் கைகளில் பொல்லுகளுடன் திரிகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்" என்று சிங்களத்தில் சகஜமாகக் கேட்டேன். அவனது முகம் கோபத்தில் அமிழ்ந்திருந்தது தெரிந்தது. எனது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மன நிலையில் அவன் இருக்கவில்லை. எனது கையை இறுகப் பிடித்துக்கொண்ட அவன், தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "அப்பகுதியில் வேறு யாரும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்" என்று சிங்களத்தில் கத்தினான். அப்போதுதான் அவனும் அவனது தோழர்களும் வந்திருப்பது எம்மைத் தேடித்தான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் "எதற்காக எனது கையைப் பிடித்திருக்கிறாய், எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?" என்று என்னை இழுத்துக்கொண்டு சென்ற அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டேன். "ஒன்றுமில்லை, பல்கலைக்கழகத்தின் முன்றலுக்கு எங்களுடன் வா, உன்னையும் உனது தமிழ் நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று ஒரு குற்றவாளியுடன் பேசுவது போலக் கூறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "மச்சான், என்னைத் தெரியவில்லையா உனக்கு?" என்று நான் அதிர்ச்சியுடன் கேடபோது, "தெரியாது" எனுமாப்போல் தலையை ஆட்டிவிட்டு என்னை தொடர்ந்தும் இழுத்துக்கொண்டு செல்ல, அவனின் நண்பர்களில் சிலர் இன்னும் நான்கு அல்லது ஐந்து தமிழ் மாணவர்களை இழுத்து வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்களுடன் கூடவே படித்துவந்த எம்மை, ஏதோ குற்றவாளிகளைப் பிடித்து விட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டது எமக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி விட்டது. என்னதான் ஒன்றாகப் படித்து, சிங்களத்தில் எவ்வளவுதான் பேசினாலும் இனவாதம் என்று வரும்போது எவருமே விதிவிலக்கல்ல என்பதும், தமிழர்கள் எல்லோருமே எதிரிகள்தான் என்று நடந்துகொள்வதும் அவர்களின் இயல்பு என்று எனக்குப் புரிந்தது. நான் பேசும் எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்கப்போவதில்லை. என்னை சக மனிதனாக நடத்தக்கூடிய மனநிலையிலும் அவனோ அவனுடன் கூடவிருந்தோரோ அன்று இருக்கவில்லை. புலிகளை உயிருடன் பிடித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு பல்கலை வாயிலை நோக்கி எம்மை இழுத்துக்கொண்டு சென்றது எம்முடன் கூடவே படித்த சிங்கள மாணவர் கூட்டம்.
  43. பிரஜைகள் குழு இந்திய இராணுவ காலத்தில் உருவாக்கப்பட்டதாக கருதுகிறேன் (சரியாக நினைவில்லை), இந்த பிரஜைகள் குழு பெரிதும் அந்தந்த ஊரில் உள்ள பிரபலமானவர்களை கொண்டது என கருதுகிறேன், 90 களில் இலங்கை இராணுவத்துடன் போர் ஆரம்பித்த போது இலங்கை இராணுவம் கிழக்கில் இடங்களை புலிகளிடமிருந்து கைப்பற்றி வந்த போது இந்த பிரஜைகள் குழுவினர் முஸ்லீம் மக்களுக்கு இணையாக வாள்களுடன் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறையில் கிழக்கில் ஈடுபட்டதாக கேள்விப்பட்ட நினைவுள்ளது (நீண்டகாலமானதால் நினைவில்லை). வடமராட்சியில் ஒரு பிரபலமான ஒரு ஆசிரியர் ஒரு ஊரின் பிரஜைகள் குழு தலைவராக இருந்தார், அவர் இந்திய இராணுவத்துடன் நல்ல உறவு நிலையில் இருந்தார், இந்திய இராணுவ வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டிருந்த வேளை 1989 இறுதியில் அல்லது 1990 ஆரம்பத்தில் (சரியாக நினைவில்லை) ஈரோஸ் அமைப்பு புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்த முயற்சி செய்தனர் (கடுமையான முரண்பாடு ஏற்பட்டிருந்தது அக்காலகட்டத்தில்) அப்போது அவரது வீட்டில் வைத்தே அந்த உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை இந்திய இராணுவ கெடுபிடிகளுக்கிடையே இடம்பெற்றிருந்தது, அப்போது அந்த பிரஜைகள் குழு தலைவரை 4 வருடத்திற்கு முன்னர் கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை (அவர் அப்போது வடமாராட்சி பொறுப்பாளராக இருந்த போது) அவரை எச்சரித்திருந்தாக கதைத்தார்கள் (அது ஒரு டெலோ விவகாரம் என நினைக்கிறேன் மறந்துவிட்டேன்), பின்னாளில் இந்திய இராணுவம் படுகொலை பற்றி புத்தகம் ஒன்றும் எழுதியதாக கேள்விப்படேன். மக்கள் பிரச்சினையினை பேசுவதற்காக பிரஜைகள் குழுவினரை புலிகள் தான் உருவாக்கினார்கள் என நினைகிறேன், ஆனால் அவர்களது ஆதரவாளர்கள் என்றில்லாமல் மக்களிடம் பிரபலமானவர்களை உள்ளடக்கியிருந்தார்கள் என நினைக்கிறேன்.
  44. பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.
  45. டேனிஷ் அஞ்சல் சேவை டிசம்பர் 30 அன்று தனது கடைசி கடிதத்தை விநியோகிக்கிறது, இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடித விநியோகத்தை நிறுத்துவது குறித்த முடிவை அறிவித்த, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் அஞ்சல் சேவைகள் 2009-ல் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட போஸ்ட்நார்ட் நிறுவனம், டேனிஷ் சமூகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் டென்மார்க்கில் 1,500 வேலைகளைக் குறைத்து, 1,500 சிவப்பு அஞ்சல் பெட்டிகளை அகற்றப்போவதாகக் கூறியது. டென்மார்க்கை "உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று" என்று விவரித்த அந்த நிறுவனம், ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடிதங்களுக்கான தேவை "கடுமையாகக் குறைந்துவிட்டது" என்றும், இதன் காரணமாக பார்சல்கள் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தது. ஏற்கனவே அகற்றப்பட்ட, தனித்துவமான வடிவமைப்பு கொண்ட 1,000 தபால் பெட்டிகள், இந்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வந்தபோது, வெறும் மூன்று மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. நல்ல நிலையில் உள்ள பெட்டிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 2,000 டேனிஷ் குரோனர் (235 பவுண்டுகள்) என்றும், சற்றுப் பழுதடைந்தவற்றுக்கு 1,500 டேனிஷ் குரோனர் (176 பவுண்டுகள்) என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் 200 பெட்டிகள் ஜனவரி மாதம் ஏலம் விடப்பட உள்ளன. சுவீடனில் தொடர்ந்து கடிதங்களை விநியோகிக்கவிருக்கும் போஸ்ட்நார்ட் நிறுவனம், பயன்படுத்தப்படாத டேனிஷ் தபால் தலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணத்தைத் திரும்ப வழங்கும் என்று தெரிவித்துள்ளது. https://www.theguardian.com/world/2025/dec/21/denmark-postnord-postal-delivery-letters-society
  46. குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான‌ ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவ‌ருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவான‌வர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.