Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88402
    Posts
  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    16538
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    1579
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33045
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/03/26 in all areas

  1. முன்பு வாடகை கார்கள், பீட்சா டெலிவரி, உணவு விடுதிகளில் காசு கொடுக்காமல் விட பாலியல் சீண்டல்கள் குற்றச்சாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள், குறிப்பாக லத்தீன் மற்றும் கறுப்பின ஒருசில பெண்கள்தான் இதில் ஈடுபடுவது அதிகம், தாங்களாகவே கையை பிடித்துவிட்டு காசு வேணுமா இல்லை ஏற்கனவே நமக்கிடையே வாய்க்கால் தகராறு இருக்கும்போது நீ கையை பிடிச்சு இழுத்தாய் என்று பொலிசுக்கு அடிக்கவா என்று கேக்க, மானம் மருவாதை பயம் கருதி ஆத்தா காசு வேணாம் ஆளைவிடுனு ஓடிதப்பிய குறித்த துறையில் பணியாற்றிய தமிழர்கள் அதிகம். அதேநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட/ஈடுபடும் பொறுப்பான பதவிகள், தொழில்களில் உள்ள நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  2. ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர். இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!
  3. எப்படியும் கட்டின விகாரையை எந்த சிங்கள அரசும் இடிக்கப் போவதில்லை. நயினாதீவு நாகவிகாரை பிக்கு பக்கத்தில் தான் உண்மையான விகாரை இருந்தது. அது தனக்குத்தான் சொந்தம் என்கிறார். ஆகவே அந்த விகாரையையும் புதுப்பித்து 2 விகாரைகள் வரத்தான் போகிறது. இதற்குள் அர்சுனா பொன்ற அரை லூசுகள் விகாரையை அகற்றப் போராடாமல் நல்லூர் கந்தசுவாமி கோவிலை இடிக்க வேணும் என்று புதுப்புரளியை கிளப்பி விட்டிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையால் தமிழ்மக்கள் அனுராவுக்கும் அர்ச்சுனாவுக்கும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். இது தமிழர் அரசியலில் மிகவும் ஆபத்தான போக்காக இருக்கிறது.
  4. ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.
  5. இதுவரை, ஏழு அணிகள், உலகக்கிண்ணத்தில் விளையாடும் அணிகளை அறிவித்துள்ளனர். இந்தியா அவுஸ்ரேலியா ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்கா சிம்பாப்வே இங்கிலாந்து ஓமான்
  6. முதலாவதும் இரண்டாவதும் சரியாக வருமா என்று தெரியவில்லை. உதவி செய்ப்பவர்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்புவதை விரும்புவார்களா என்பது ஒரு கேள்வி. அங்கெ அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தெரிய வரலாம் மூன்றாவது சரியாக இருக்கும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய வங்கிக்கணக்கு இருந்தால் உதவி செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் உதவி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரியப்படுத்தலாம் இல்லையா ? பெயர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு நல்ல தமிழ்ப் பெயராக இருக்கின்றது. நல்லதொரு தெரிவு 👌 மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்போம் பலரும் முன்னோடிகளாக இருப்பதை விரும்புவார்கள்
  7. சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/
  8. 1970 களில் நிக்சனால் தங்க உத்தரவாத நாணயகொள்கை கைவிடப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட பெட்ரோடொலருக்கு அச்சானியாக இருந்த சவுதி உடன்பாடு 2024 இல் முடிவிற்கு வந்துள்ளது, வெனிசுலாவில் ஒரு மாற்று அரசியல் தலைமை உருவாக்கப்பட்டால் அது பெட்ரோல்டொலருக்கு புத்தியிர் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம்.
  9. @ஈழப்பிரியன் ஐயா, ஆறு கேள்விகளுக்கு (எல்லாம் குழுவில் இறுதியாக வரும் அணியைக் கணிப்பது) பதில் தரவில்லை. புள்ளிகள் குருட்டு இலக்கில் கிடைக்கவேண்டும் என்றால் பதில்களைத் தாருங்கள் 😄
  10. ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம் என்பதும் நம்ப முடியாத ஒற்றுமையாக இருக்கின்றது. எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களும் இன்னும் அதிக அழிவுகளையும், அவலங்களையும் அன்றி வேறு எதையும் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் வழங்குவதில்லை. அந்த நாடுகளின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டுதல் அன்றி, இங்கு வேறு எதுவுமே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் அல்ல. ஆக்கிரமிப்பை அந்த நாட்டு மக்களே விரும்பினார்கள், அந்த நாட்டின் அதிபர் ஒரு சர்வாதிகாரி, அந்த நாடு போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது, அந்த நாட்டினால் எங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றெல்லாம் காரணங்களை இட்டுக் கட்டிக் கொண்டே ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அடிமைத்தளையும், அடக்குமுறையும் சொல்லொணா துன்பங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் ஒரேயொரு வாழ்வையும் இவை அழித்துவிடுகின்றன. இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், இவை எவ்வடிவில் வந்தாலும் அவற்றை ஆதரிக்காமல் விடுவதும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் நிச்சயம் செய்ய வேண்டியவை. ஐநா பொதுச் செயலாளரே அவ்வளவு தான் செய்கின்றார், அவரால் கூட அவ்வளவு தான் செய்யமுடியும்.
  11. ஈழத்தமிழர்கள் போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் பேசுபொருள் ஆக்கப்படக்குடாது என்று திட்டமிட்டு தமிழர்கள் தம் வரலாறு இருக்ககூடாது என்று திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தால் திரையரங்குகள் வழங்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ள சல்லியர்கள் திரைப்படத்தை உலகெல்லாம் பரந்து வாழும் இந்திய, ஈழத்தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெறச்செய்து நம்சக்தியை காட்டுவோம்.. இதற்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இனிமேல் இன்னுமொருவர் எமது வரலாற்றையும் தமிழர்கள் வாழ்வியலையும் பேசும்படங்களையும் எடுக்க வரும்பொழுது நம்பிக்கையையும் ஊக்கத்தைய்யும் துணிவையும் தரும்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ள ottp தாலத்தில் சென்று பார்த்து எம் ஆதரவை கொடுப்போம்.. தமிழரை, தமிழை பேசுபவர்களை வளர்த்துவிடுவோம்..
  12. 4 வது நிமிடத்தில் இருந்து இன்றைய சனலில் சவுக்கு சல்லியர்கள் படத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி 👇
  13. 43-NAM 46-OMA 49-ITA 52-UAE 67-WI 70-IRE மற்றும் முடிந்தால் வினா 76க்கு அபிசேக் சரமா என்றும் வினா 78 க்கு வருன்சக்கரவத்தி என்றும் மாத்தி விடவும்.நன்றி.
  14. முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு. அண்ணை, பயனாளிகளுடன் கதைக்க தேவையில்லை. சரியான பயனாளியின் வங்கி விபரம் தந்தால் அதற்கு பணத்தை வைப்புச் செய்யலாம்.
  15. கெஜம் முழம் அடி அங்குலம் காதம் என்று நீட்டல் அளவைகளை மக்கள் பயன்படுத்திய காலத்தில் வந்த அரசு அறிவிப்பு இது! 1955ம் ஆண்டில் நீட்டல் அளவைகளுக்கு பொதுவான வழிமுறையாக மெட்ரிக் அளவைகளை பயன்படுத்த அரசு மக்களுக்கு பரிந்துரை செய்தது!
  16. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
  17. போட்டி திகதி நெருங்கும் போது இங்கு நிற்க கூட இடம் இருக்காது.🤣
  18. இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??! இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????! இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...! இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும். இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன. இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும். மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும். இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!
  19. 2009 இல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சபாரட்ணம் அருள்குமரன் இதே வகையான நைற் கௌரவம் பெற்று விட்டார். அவர் தான் நிபுணர்கள் பட்டியலில் நைற் கௌரவம் பெற்ற முதல் ஈழத்தமிழராக இருப்பார் என நம்புகிறேன். https://en.wikipedia.org/wiki/Sabaratnam_Arulkumaran சேர் அருள்குமரன் யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர். எப்பவாவது "once in a blue moon" யாழ் மத்திய கல்லூரி ஓரிருவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும்😎. அப்படி மருத்துவராக வருபவர் ஏனைய பிரபல கல்லூரிகளில் இருந்து சென்றோரை விட உச்சமான தர நிலைக்கு வருவார்! மத்திய கல்லூரியின் கிணற்றுத் தண்ணீரில் தான் ஏதோ இருக்கிறது என நினைக்கிறேன் (அதனால் தான் Upper school இல் இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றை நாம் இறைப்பதில்லை😂!)
  20. அதேநேரம் இப்போது பலதுறைகளிலும் இப்படியான குற்றச் சாட்டுக்களை வைத்து பணம் பண்ணுவதை குறிக்கோளாக கொண்டு களம் இறங்குகிறார்கள். தீர விசாரித்தாலே நடந்த உண்மைகள் தெரியவரும்.
  21. பாடினாள் ஒரு பாட்டு .........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.