நாங்கள் மகிந்த மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் விடுதலை கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடினோம். நாங்கள் சோனியா மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடினோம் அதனை ஏவிவிட்டு எம்மில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று எமது பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கக் காரணமான ரஜீவைக் கொன்றோம், ஜே ஆர், பிரேமதாச, சந்திரிக்கா, ரணில், டிங்கிரி பண்டா, சிறிமா, பண்டாரநாயக்க, கோத்தாபய என்று எவரையுமே குற்றம் சாட்ட முடியாது, ஏனென்றால் நாங்கள்தான் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினோம். எங்களுக்கெதிராக எம்மை அழித்தவர்கள் எல்லோருமே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வழக்குகள் போட்டுப் பயங்கரவாதிகள் என்று நாமமும் இட்டு அழித்து, அடக்கி விட்டார்கள். ஆனால் நாம் மட்டும் எதுவுமே பேசக் கூடாது, ஏனென்றால் நாம்தான் எமக்கு நடந்த அனைத்து அழிவுகளுக்கும் காரணம் ! இவ்வளவு கேவலமான உணர்வு தமிழரில் இல்லாமல் வேறு எந்த இனத்திலும் இருக்கமுடியாது.