Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39247
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88721
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33735
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19557
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/07/26 in all areas

  1. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  2. சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மூலமாக ஒப்பந்தம் செய்து 2.5 லட்சம் முற்பணமும் வழங்கி வேலையை தொடங்கச் சொன்னால் அவர் தொடங்காது காலந்தாழ்த்திக்கொண்டிருந்தார். காலதாமதமாவதால் அதிருப்தி அடைந்த வைத்தியர் தனது கொழும்பு றோயல் கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஊடாக பிரதமர் ஹரிணியின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இப்பிரச்சனையை சொன்னபோது அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு கட்டும்படி கூறியிருக்கிறார். அவ்வாறு தான் இந்த பாடசாலை கட்டப்பட்டது. இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல் இப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த பிரிவில் 30 மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மேலும் 5 லட்சத்தை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வாங்கிவிட்டார். அப்பாவின் தாய் மாமாவின் மகன் தான் இந்த வைத்தியர். 2010 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்தியருடைய அம்மாவின் இறுதிச்சடங்கின் போது அப்பா அவரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தவர். டொக்ரர் ஆறுமுகம் இராசையா நினைவாக அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யும்படி. அதனை ஞாபகம் வைத்திருந்தாரோ என்னவோ இந்த அரும்பணியை செய்து முடித்துள்ளார்.
  3. இது ஒரு நகைசுவைக்காக (விளையாட்டு திரி கலகலப்பிற்காக), டோனி = பாபர் பெண் = செம்பாட்டான் / வீரப்பையன் ஆண் = செம்பாட்டான் / வீரப்பையன் இந்த காணொளி ஒரு முன் தயாரிப்பிலான காணொளி போல உள்ளது, அவர்களும் நகைசுவைக்காகவே இதனை தயாரித்துள்ளார்கள்.🤣 விளையாட்டுத்திரியில் எந்த மனஸ்தாபமும் இல்லாமல் நகைசுவையாக கடந்து போவோம்.
  4. ஜாலியன் வாலா பக் படுகொலையில் ஜெனரல் டயர் தான் உத்தரவிட்டவன் மிகுதி எல்லாம் படுகொலையை அரங்கேற்றியவர்கள் இந்திய பிரிட்டிஷ் கை கூலிகளே சொந்த மக்களை கொன்றாலும் அடிமையாக இருப்பதே சுகம் என்று வாழ்பவர்கள் . அதே பிரிட்டிஷ் இராணுவம் கிழக்கு ஆசியா பக்கமும் ஆட்சி பரம்பலை செய்தது அங்கு எல்லாம் இந்தியா போலவோ ஸ்ரீ லங்கா போலவோ அடிமை படைகள் அவர்கள் நாட்டுக்கு எதிராக பெரிதாக சேரவில்லை .இது வரலாறு . இங்கு என்னவென்றால் எப்போதோ மவுனித்த அமைப்பு மேல் சிங்களவனை விட கேவலமாய் காறி உமிழும் தொடற்சியான வண்மம் என்ன ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓட வைப்பம் என்று சொன்னவர்களிடம் கேள்வி கேட்க வக்கற்று குறுகிய மனப்பான்மையில் புலிகளை வசைபாடுவது ஒன்றே முழு நேர தொழில் போல் யாழை உபயோகிப்பது சரியா என்று தெரியவில்லை .
  5. இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ... அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்
  6. நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் ரசோதரன் இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 21 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து நிலாமதி நந்தன் இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  7. இங்கே இது பெரும் பேசுபொருளாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைவர்களே வெறுத்து பேசுமளவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று தலைவர் ரம் பேசியுள்ளார். அனேகமாக இது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கும்.
  8. அரசியல் கட்சிகளுக்கு பின்னால் திரிந்து, அவர்களின் சிபாரிசில்… ஆசிரியர் வேலை, தாதியர் வேலை, மற்றும் அரச வேலைகளை பெறுபவர்களிடம்… அந்தப் பதவிக்கு உரிய நற்பண்பும், கண்ணியமும், பொறுப்புணர்வும் அறவே இருக்காது. தமது காவாலித்தனத்தை காட்டவே செய்வார்கள். இப்படி.. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்களின் சிபாரிசில் வந்தவர்களால் வடமாகாணத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது.
  9. இதனை நிராகரிக்கிறேன். "நரி" ரணிலால் தங்கள் இருப்பிற்கே ஆபத்து என்று கண்டு கொண்ட பின்னர் புலிகள் எடுத்த முடிவு மகிந்தவைக் கொண்டு வருவது என்பது. அப்படிக் கொண்டு வந்த பின்னர் 2005 இல் "அவர் யதார்த்தமாக நடப்பவர் என்கிறார்கள்" என்று அது வரை எந்த சிங்களத் தலைவர் பற்றியும் சொல்லாத கருத்தை மாவீரர் தின உரையிலேயே பிரபாகரன் சொன்னார். இந்தப் பின்னணியில், "எவர் வந்தால் அதிக தீமை மக்களுக்கு?" என்று புலிகள் சீர்தூக்கிப் பார்த்ததாக எங்கேயும் பதிவுகள் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இங்கே பகிருங்கள், பேசலாம். புலிகளின் இலக்கு, 2004/05 இல் தங்கள் அமைப்பிற்கு இருந்த existential threat இனை நீக்குவது மட்டும் தான். யுத்தம் ஆரம்பித்த பின்னர், வன்னியில் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்த போது, மக்கள் இழப்பைப் பற்றி புலிகள் பெரிதாகக் கரிசனை கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர். இதையெல்லாம் நான் உங்களுக்குப் பதிலாக எழுதுவது நீங்கள் வாசித்து, யோசிப்பீர்கள் என்பதால் அல்ல! உங்கள் போன்றவர்களுடைய பக்தியும், மயக்கங்களும் எதிர்கால சந்ததிக்கு வரலாறாக காவப் படும் ஆபத்து இருக்கிறது (ஏற்கனவே AI நாங்கள் செவி மடுக்க விரும்பும் வரலாற்றை எழுதும் படி கேள்வி கேட்கும் பணியை ரஞ்சித் ஆரம்பித்து விட்டார்!). இதைத் தடுப்பது மட்டுமே என் நோக்கம்!
  10. கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!
  11. என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.
  12. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்! இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் இந்த அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 ஆம் ஆண்டு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை ஒத்திவைக்கக் கோரினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய வைகோ பின்வருமாறு கூறினார், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நானே நேரில் முன்னிலையாகி இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன். மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு: “புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பது. இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன். தலைவர் பிரபாகரனின் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை. ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம். மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது. ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன். ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது. மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது. ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide). அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது – என்றார். https://athavannews.com/2026/1463517
  13. நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬
  14. sordSetonp:2alga0tif6,161rt tgéga1hr052600imefu1av0t35c 581f · அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார். "என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர். "போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார். "அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா. #anna57
  15. குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை. ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது. https://noolaham.net/project/190/18958/18958.pdf page 9 கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது: "பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."
  16. இங்கே வெளிநாடுகளில் புலிவால்களாக இருந்த பலர் இப்போ ஒன்றரை வருடமாக அனுரகுமார திசநாயக்கவின் தீவிர இரசிகர்களாக மாறியதை போன்று அந்த ஆமை கறி விருந்து புளுகு மோசம் துணிந்து புளுகி இருக்கின்றார் தானே
  17. இதில் உள்ள தெரிவுகளில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிகிறது. ஏதோ செல்வச் சந்நதி முருகனுக்கு நேர்த்தி வைச்சு தேர்வு செய்த மாதிரி இருக்கு😁 நல்ல அனுபவங்கள் போல கிடக்கு. நகைச்சுவையான காணொளி என்றாலும் இப்படியான இடங்களில் இருந்து ஓடிப்போவது தான் புத்திசாலிக்கு அழகு
  18. @ஈழப்பிரியன் ம‌ங்ல‌ இசையோட‌ வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ருக்கு வாழ்த்து சொல்லும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜ‌யாவை காணும் லொள்😛😁...................
  19. எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.
  20. ஆண் ஒருவர் சாட்சிக்கு அழைக்கும் போது துண்டைக்காணோம் துணியக்காணோம் என எஸ்கேப் ஆவார், அவர்தான்.🤣
  21. @suvy என்ர‌ த‌லைவ‌ர் முத‌ல் ப‌ரிட்சையில் பிழை எடுத்து விட்டார்😁😛..........................
  22. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறந்த தொடக்கத்துடன் ஆரம்பித்தாலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களோடு இருந்தது. எனினும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 ஓட்டங்களுடன் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் வேகமாகப் பின்தொடர முடியாததாலும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
  23. யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு! adminFebruary 7, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2026/228569/
  24. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷிம்ரொன் ஹிட்மெயரின் அதிரடியான 64 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் 17 ஓவரில் ரொமாரியோ ஷெப்பேர்ட் எடுத்த ஹற் ட்ரிக்காலும் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. ரொமாரியோ ஷெப்பேர்ட் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முடிவு: மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய மூவருக்கும் புள்ளிகள் இல்லை!
  25. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி அதிரடியான துவக்கத்துடன் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதி இரு ஓவர்களில் 29 ஓட்டங்கள் எடுக்கும் நிலையில் இருந்தது. 19 வது ஓவரில் ஃவகீம் மூன்று சிக்ஸர்களுடன் 24 ஓட்டங்களை எடுத்ததால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய இருவருக்கும் புள்ளிகள் இல்லை!
  26. பாகிஸ்தான் வெல்லுது. 19 வது ஓவரில் 24 ரண்ஸ்!
  27. ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.
  28. அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றனர். பெற்றோரை பிள்ளைகள் முன் திட்டுவது ஒரு பொறுப்புள்ள ஆசிரியரின் கடமையா?
  29. அதாவது வடக்கு கிழக்கு மக்களுக்கு தீங்கு விளைவித்தது "தமிழ் பாராமிலிட்டரி" மட்டுமே ....அதற்கான விசாரனையை அனுரா மாத்தையா கோஸ்டி முடுக்கி விட்டுள்ளது ...அதிரடியாக கைது செய்யப்பட்டு மெல்ல மெல்ல விசாரணை செய்து ராஜமரியாதை அவர்களுக்கும் கொடுக்க படும்...
  30. இராணுவத்தினருக்கு வரவேற்பு அளித்த இந்தப்பாடசாலைக்கு அண்மையிற்தான் பறாளை முருகன் ஆலயம் உள்ளது, வசதியாக போய்விட்டது. பாடசாலைக்கு அருகில் விகாரை!
  31. பெரும் பகிடி. இவர்களால் முடிந்ததா அவர்களின் மனங்களை வெல்ல? அப்படியிருக்கும்போது இந்த விமர்சனம் அபத்தமானது. சரி சிங்களவரே உங்களை இனி தமது அரசியல் தலைவராக தெரிந்தெடுக்க மாட்டார்கள். அது நமது மக்களின் சாபம். முடிந்தால் முயன்று பாருங்கள்! உங்களை தவறை மற்றவர் மேல் சுமத்தி உங்களை புனிதர்களாக காட்ட முயல்கிறீர்கள், உங்கள் தவறு மக்கள் முன் வெளிப்படுத்தப்படும்வரை. அதற்காகவே சில பொய்களை பரப்பி அரசாங்கத்தின்மீது உளவியல் போராட்டம் நடத்துகிறீர்கள், உங்களை பிடித்து உள்ளுக்குள் போடும்வரை துடிப்பீர்கள். ஒன்று, அனுரா அழிவு இல்லை நீங்கள் அழிவு. அதோடு முடியும் இந்தப்போர். மல்லி! நீங்கள் ஜனாதிபதியாகவே வரமுடியாது, வீணாக கனவு கண்டு அழிந்து போகாதீர்கள். தமிழரை அழித்து ஒழித்தீர்கள், இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால், சிங்கள இனமே அழியும்!
  32. 😂செய்தால் அதை சொல்லி காட்டி படம் காட்ட வேண்டிய தேவை இல்லை...இந்த இராணுவத்தினர் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த சம்பளத்தில் கட்டி கொடுக்கின்றனர் ....ஏதோ உருகி செய்த மாதிரி கதை விட்டு நல்ல பிள்ளை சேர்டிவிக்கேட் எடுக்க நிற்கினம் ....அதை வைத்து சமாதான் புறாக்கள் பறக்க போகுதாம் போராட்டம் தொடங்கிய காலத்தில இருந்து நாங்கள் நொட்டை தானே கதைக்கிறோம் ... பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்...
  33. ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம். அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன? அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?
  34. இராணுவம் இந்த மக்களை அழித்து, பொருளாதாரத்தில் நசுக்கி, உறவுகளை கொன்று, அவர்களின் தொழில் வளங்களை அபகரித்து வாழ விடாமல் செய்து ஏதிலிகளாக்கியது, அதையே சுட்டிக்காட்டுகிறோம். செலவு செய்தது தமிழன், அதை யாரும் நொட்டை சொல்லவில்லை. இராணுவத்தின் அடாவடிகளை, அவர்களால் காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் குடும்பத்தினர் தெருவில் அலைகின்றனர் நிஞாயம் தேடி. இன்னொருபுறம் அவர்களுக்கு மாலை, மரியாதை, ஆரத்தி, தமிழரின் நிலங்களில் இராணுவம். நேற்று ஒரு செய்தி படித்தேன், இராணுவம் வெளியேறுவதை வடக்கு கிழக்கு மக்கள் விரும்பவில்லையாம். அதற்கு ஆதாரமாக இந்தச்செய்தி இன்று. ஏழை மக்களின் நிலங்கள் விடுவிக்க சந்தர்ப்பமே இல்லைப்போலுள்ளது.
  35. இராணுவத்தை ஈடுபடுத்தாமல் நீங்கள் மானிப்பாயில் இப்படி ஒரு காரியத்தை செய்யும் போது அதை இதை விட இரு மடங்கு பாராட்டுவோம் அண்ணா😂. #நொட்டைக்கு குறையில்லை 😂
  36. எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
  37. இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.
  38. மகத்தான சேவை . ....... மக்களுக்கு அவசியமானதும் கூட ........! 🙏 நன்றி ஏராளன் .........!
  39. இன்னயாவிலும் புண்ணியம் கோடி… நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.
  40. உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.
  41. விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும். இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள். உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல, 1. UTHR 2. கூல் சகோதரர்கள் 3. அங்கிலிக்கன் திருச்சபை - இதற்கு பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //அத்துடன் முக்கியமாக - முறையாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்த ஆவணத் தொகுப்பைப் பார்த்தபோது எப்ஸ்ரெயினின் குரூர வக்கிரத்திற்கு அங்குள்ள நம்மவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது. பரமேஸ்வரா பள்ளி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்…// நன்றி: Thiru Thirukumaran SANGU-சங்கு
  42. நீங்கள் இன வெறிக்கும் இன அழிப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மேற்குலக நாடுகளில் அரசியல் எல்லோருக்கும் பொதுவாவனது. தென்னிந்திய அரசியலில் அப்படியா? தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இருக்கும் உரிமைகளை பற்றி நீங்கள் தெரியாமல் இருப்பதையிட்டு மிக வருத்தமடைகின்றேன். அல்லது அது பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. புலம்பெயர்ந்தவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் மேற்குலகம் ஏன் அவர்களின் சொந்த நாட்டின் உரிமைப்பிரச்சனைகளை அங்கீகரிக்கவில்லை?
  43. "தேர்தலைப் பெருமளவு தமிழ் மக்கள் புறக்கணித்தால், யாருக்கு வாக்கு ரீதியில் அனுகூலம்?" என்று உய்த்துணர இயலாத, சாதாரண எண் கணிதக் கணக்குப் பார்க்க இயலாத தலைமை தான் அந்த நேரம் தேர்தல் புறக்கணிப்பை ஊக்குவித்தது என்கிறீர்கள்? "சரி தான்" என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.😇 ரணிலும் புலிகளை அழித்திருப்பார், ஆனால் கருணா பிரிப்புப் போல மேலும் செய்து அழித்திருப்பார். ஆனால், மகிந்தவைத் தேர்வு செய்து புலிகள் எதிர்பார்த்தது, பெரும் போர் நிகழ்ந்து "உலக நாடுகள் தட்டிக் கேட்டு, ஈழம் பெற்றுத் தரும்" என்ற எதிர்பார்ப்பில். இந்த எதிர்ப் பார்ப்பிற்கு எதிராகத் தான் மேற்கு நாடுகளின் எச்சரிக்கை இருந்திருக்கிறது. பாலசிங்கத்தாரை ஓரங்கட்டாமல் இருந்திருந்தால் இது விளங்கியிருக்கும். எப்படியானாலும், கர்மா போல வந்து புலிகளின் வினோதமான "மகிந்த ஆதரவு" நிலையே அவர்களை அழித்து விட்டது. அநியாயமாக புலிகள் தங்களுடன் தடுத்து வைத்திருந்த வன்னி மக்களும் அழிந்தார்கள். உங்களைப் போன்ற புலத் தமிழர்களோ "மோட்டுச் சிங்களவனுக்கு புலிகள் டிமிக்கி கொடுத்தார்கள்" என்ற கஞ்சா மயக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை😂.
  44. அதென்ன சுமந்திரனை பற்றி கதைச்சால் மட்டும் நானாவுக்கும் அவரின் அனுதாபிக்கும் பின்பக்கம் வேர்க்குது? உடனேயே புலிவாந்தியோட வருகினம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.