Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19557
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88721
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20307
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    39247
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/12/26 in all areas

  1. முதலமைச்சர் @வீரப் பையன்26 க்கு வாழ்த்துக்கள். பல் நாள் கனவு நனவாகி இருக்கு. இன்று அப்கானிஸ்தானை தெரிவு செய்த உறவுகளுக்கும் பாராட்டுக்கள். போராடித் தோற்றது தோல்வியே இல்லை. சுமைதாங்கியை பார்த்துக் கொண்டு போகாமல் முடிந்தவர்கள் தண்ணீர் தெளித்து குளுக்கோஸ் கொடுத்து விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தில் எப்படி உசாராக இருந்தாரோ அதேமாதிரி @goshan_che னும் இருக்கணும்.
  2. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிறிலங்கா அணி, பவன் ரத்னாயக்கவின் புயல்வேக 60 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் மின்னல்வேக 50 (20 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் அதிரடியான 61 (45 பந்துகள்) ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து இத் தொடரின் தற்போதைய அதிகூடிய 225 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் மொஹமட் நடீம் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 53 (56 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 105 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம் அணியின் வீரர்கள் ஒருவரும் நிலைத்து ஆடாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, சகோதரர்களான அந்தனி மொஸ்காவின் புயல்வேக ஆட்டமிழக்காத 62 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் அதிரடியான ஆட்டமிழக்காத 60 (44 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணியின் இஷான் கிஷனின் மின்னல்வேக 61 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹார்டிக் பாண்டியாவின் புயல்வேக 52 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பந்துவீச்சில் நமீபியா அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்ததனால் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  3. கடைசி பெஞ்ச் இத்தாலிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தும் இத்தாலி வென்றிருக்கின்றது என்றால், அப்புறம் கடைசி பெஞ்சிற்கு என்ன மரியாதை............🤣.
  4. இங்கே டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் பல்லாயிரக்கணக்கான தடவைகள் பெயர் குறிப்பிடபடவில்லை என்பது போலவும்…. டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வாகவில்லை என்பது போலவும்… பலர் எழுதுவது நகைப்புக்கிடமானது. இங்கே முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது அல்லது தோல்வி அடைய வைக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் நலன் மட்டுமே. ஈயூ வெற்றி தோல்வி இல்லாத டிரா நிலையில் இருக்கிறது. அமெரிக்கா விலகியதும், ஈயூ+யூகே நடுநடுங்கி விடும் என்ற புட்டின் எதிர் பார்ப்பை, உக்ரேனிலும், கிரீன்லாந்திலும் ஈயு தவிடுபொடியாக்கி உள்ளது. உக்ரேனின் 1/3 பகுதி நீங்கலாக மீதம் ஈயூவில் இணையும் எனில் - குறிப்பாக கருவாகி கொண்டிருக்கும் ஈயூ ஆர்மியில் உக்ரேன் இணையும் எனில் - அது ஈயூவின் நீண்டகால வெற்றியாக அமையும். கூடவே சீனாவோடு ஈயூ நெருங்குவதும், ரஸ்யாவுக்கு ஆப்பாகவே முடியும். அமேரிக்கா இல்லாமல் கூட ரஸ்யாவை விரட்ட, ஈயு அரசியல், இராணுவ, பொருளாதார முறைகளில் தயாராகி விட்டது. இது நல்ல விடயமே. மேலும் ஜேர்மனி இராணுவ மயபடும் போது, பிரான்ஸ்சின், யூகே யின் அணு ஆயுத வல்லமையோடு சேர்த்தால் - ரஸ்யா வாலட்ட முடியாதபடி செய்ய கூடிய இடத்துக்கு (அமெரிக்கா இல்லாமலே) ஐரோப்பா வந்து விட்டது. ரஸ்யாவுக்கு உக்ரேன் இராணுவ ரீதியில் 4 வருட 1 மாத மூக்குடைவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல், ராஜதந்திர ரீதியில் கூட மாற்றம் ஏதுமில்லை. ஆனால் உளவு ரீதியில் டிரம்பின் தேர்வு பாரிய வெற்றி. இதில் முழு வெற்றி எண்டால் அது உக்ரேனுக்கே. செலென்ஸ்கி மட்டும் இல்லை என்றால். இப்போ உக்ரேன் என்று ஒரு நாடு உலக வரைபடத்தில் இருந்து நீங்கி 4 வருடம் ஆகி இருக்கும். செலென்ஸ்கி ஒரு உக்ரேனிய கிராமத்தை தக்க வைத்திருந்தாலே அது வெற்றிதான். ரஸ்ய இராணுவத்தின் மூக்கை உடைத்ததில் இராணுவ வெற்றியும். அத்தனை வல்லரசுகளை டீல் பண்ணும் விதத்தில் இராஜதந்திர வெற்றியும். தன் மக்களை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் அரசியல் வெற்றியும் அடைந்துள்ளவர் செலன்ஸ்கி மட்டுமே.
  5. தம்பி அது 2025 இல் சொன்னது. இப்போ 2026.
  6. சிறியர் தண்ணியடி விட்டாச்சு என்டார் ஆனால் இங்கை என்ன என்டால்.😄
  7. 😂 பாவம் அந்த பெண்மணி. சொந்தகாரரோ யாரோ ஆர்வமிகுதியால் செய்த அதிகபிரசங்கிதனத்தால்…. அவரின் தனிப்பட்ட சாதனை கூட மதிப்பிழக்கிறது. இந்த திரியை வாசித்தால் செய்தி வெளியிட்டவருக்கு இந்த பெண் செவிலில் இரெண்டு விடுவார் என நினைக்கிறேன். #நான் சிவனேன்னு தானேடா பிஎச்டி செய்து கொண்டிருந்தேன்😂
  8. நான் அந்த நேரம்..இந்திராகாந்தி பட ஆர்ட்டிஸ்ட்....கிளிநொச்சி உருத்திரபுர வாசிகசாலையில் நான் வரைந்தபடம் மாட்டப்பட்டிருந்தது ... பின்னர் இந்தியன் ஆமியிடம் சித்திரவதையும் ...அடியோடையும் இந்தியா வெறுப்பு....இந்திய கிரிகட் வீரர்களின் தனி விருப்பாலும் ....இலங்கை அணி மீதான வெறுப்பாலும் இப்ப இந்திய அணி ஆதரவாளன்
  9. கள்ள மாடு உட்பட திருட்டுக்கு சிங்கள தேசத்தில் தினமும் சிங்கன பொலிஸ் சிங்களவரை சுடுகுதா??? வாகனம் நிற்காமல் போனால் துரத்தி பிடிக்கலாம். தீவகத்துக்க வர போக ஒற்றை வீதி தானே இருக்கு. அதில தடை போட்டு வாகனத்தை பிடிக்க முடியாதோ? சரி ... அதுக்கு சிங்கள பொலிஸ்ஸுக்கு திறனில்லை என்றால்.. 4 ரயரில 1 யாவது சுட்டு வாகனத்தை நிறுத்த ஏலாதோ?? 16 வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கு வாகன மேற்பகுதி நோக்கி. இது வாகனத்தை நிறுத்த அல்ல.. வாகனத்தில் இருந்தோரை கொல்வதையே நோக்காக கொண்டிருக்கு. இதை சிங்கள தேசத்தில் தமிழ் பொலிஸ் செய்திருந்தால்....??? இப்படி சாதாரணமாக போய் இருக்குமா??? அண்மையில் அமெரிக்காவில் ICE ஏஜென்டுகள் இரண்டு வெள்ளயரை சுட்டதால்... என்ன நடந்தது..BBC breaking news வரை ஆனது...! அந்த வகையில்...1. நீதிமன்ற உத்தரவின்றி சொறிலங்கா பொலிஸுக்கு சுடுவதற்கு அனுமதிக்க கூடாது. ( சொறிலங்கா பொலிஸை தாக்க வந்தால் அன்றி) தமிழர் பகுதிகளில் இனப்படுகொலை சிங்கள பொலிஸ் கடமையில் இருக்க கூடாது. சொறிலங்கா பொலிஸ் மற்றும் ஆயுதம் தரித்த தரிக்காத சொறீலங்கா அரச கூலிகள் கடமை நேரம் முழுக்க Operational Body camera அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  10. குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?
  11. அமெரிக்கா நல்ல‌ அணி தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ந்து வீச்சு ஓக்கே நெத‌ர்லாந்தும் ந‌ல்லா விளையாடுது வெற்றி வாய்ப்பு அமெரிக்காவுக்கு அதிக‌ம் இண்றையான் நாள் நெத‌ர்லாந்துக்கு ந‌ல்ல‌ நாளாக‌ இருந்தால் நெத‌ர்லாந் வெல்லும்................இர‌ண்டு அணிக‌ளையும் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்...........................
  12. ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.
  13. என்ன இந்த வசனம் நம்ம யாழ்களத்தில்,மற்றும் ஏனைய அரசியல் கருத்து ஜான்பவான்களின் கருத்து போல இருக்கு..சிவப்பு கட்சி பிரதமரும் இப்படி கருத்தை சில காலங்களுக்கு முன் சொல்லியிருந்தார் (விகாரை விடயத்தில்).இப்ப பொலிசாரும் அரசியல் கருத்துக்களை அன்பான ஆனால் மிறட்டல் பாணியில் சொல்லுகின்றனர்
  14. அல்லைப்பிட்டியில் பொலிஸாரினால் சிறுவன் ஒருவன் சு*ட்டு கொ*ல்லப்பட்டமையை... நியாயப்படுத்த இராணுவ புலனாய்வார்கள் முதல் சமூக மயப்படாத ஜேவிபி உறுப்பினர்கள் வரை பலரும் முயற்சிக்கின்றார்கள். இராணுவ புலனாய்வாளன்... அருண் சித்தார்த், பொலிஸ் அதிகாரிகளை நியாயப்படுத்த கொ*ல்லப்பட்ட சிறுவன் போ*தைப்பொருள் பாவனையாளன் என வெளியிட்ட அறிக்கையை Capital TV வெளியிட்டு இருக்கின்றது. இதில் இருக்கும் உண்மை பொய்களுக்கு அப்பால் 2017-ம் ஆண்டு, காக்கைத்தீவு பகுதியில், க*ஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட (யாழ்ப்பாண MC நீதிமன்றம் வழக்கு இலக்கம் 292/17) புலனாய்வாளன் அருண் சித்தார்த்துக்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? திரு ரணில் விக்கிரமசிங்கே அதிகாரத்திலிருந்து போது 1,000 kg 'குஷ்' ரக போ*தை பொருள் கடத்திய Capital TV உரிமையாளர் திரு வின்சேந்திரராஜன் அவர்களின் மகனுக்கு இருக்கும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? குடி போ*தையில் வாகனத்தை மோதி பெண் மற்றும் குழந்தையை காயப்படுத்திய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அசோகா ரன்வாலா (முன்னாள் சபாநாயகர்) விற்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? இது போதாதாதென்று மறுபுறம் குறித்த சிறுவனை கள்ள மாடு கடத்துபவன் என Narrative set பண்ண ஜேவிபி தரப்பு முயற்சிக்கின்றது. மட்டக்களப்பில் மாதவனை மயிலத்தமடுவை ஆக்கிரமித்து நீதிமன்ற உத்தரவுகளை மீறி நுற்றுக்கணக்கான மாடுகளை சிங்கள குடியேற்றவாசிகள் சு*ட்டு கொ*ன்று இருக்கின்றார்கள். ஜேவிபி அதிகாரத்தில் ஒரு வருடம் கடந்து விட்ட பின்னரும் கூட இந்த தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வாதார நெருக்கடிக்கு தீர்வு இல்லை. இந்த அவலங்கள் பற்றியெல்லாம் பேசாத ஜேவிபி புத்திசாலிகள் நேற்றும் இன்றும் பசு மாடுகளுக்காக உருகின்றார்கள். நூற்றுக்கணக்கான மாடுகளை கொ*ன்று மட்டக்களப்பு 1000 ற்கு மேற்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த சிங்கள குடியேற்றவாசிகள் மீது நீட்டப்படாத துப்பாக்கிகள் வெறும் 17 வயது சிறுவன் மீது கள்ள மாடு கடத்துபவன் என்கின்ற பெயரில் நீட்டப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இங்கே கொல்லப்பட்ட சிறுவன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கூடாது என யாரும் சொல்ல வில்லை. அவர்கள் போதை வியாபாரிகளாகவோ அல்லது , மாடு கடத்துபவர்களாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக நிறை மாத பசு மாடுகளை திருட்டு தனமாக கொன்று கடத்துபவர்களாக இருந்தால் மன்னித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இங்கு பொலிஸ் தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு மாறாக எழுந்தமனாக ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று இருப்பதே கேள்விக்கு உட்படுத்த படுகின்றது. குறிப்பாக பல இடங்களில் சமூக குற்றவாளிகளுக்கு துணை நின்று பாதுகாக்கின்ற பொலிஸ் 17 வயது சிறுவனை சுட்டு கொன்றது தான் சர்ச்சையாகி இருக்கின்றது. தங்களுடைய தேவைகளுக்காக ரவுடி தனங்களில் ஈடுபடும் அருண் சித்தார்த்தின் ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத குழுக்களை வளர்த்து விடும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை பாதுகாத்து கொண்டு ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று நியாயம் பேச முடியாது. அதாவது போதை பொருள் வியாபாரிகளுக்கு அரணாக இருக்கும் கடற்படை கட்டமைப்புகளை பாதுகாத்து கொண்டு, வாகனத்தை நிறுத்தவில்லை என்கின்ற ஒற்றை காரணத்திற்காக ஒரு சிறுவனை சு*ட்டு கொன்று விட்டு அவன் போ*தை பொருள் பாவித்த (?) ஆள் என சப்பை காரணங்களை சொல்ல முடியாது. இனமொன்றின் குரல்
  15. நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு.. இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன். 1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024) நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024 ⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். ⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். ⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ⚖️ வழக்கின் தற்போதைய நிலை: இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த வழக்குத்தவணை April 4, 2026. --------------------------------------------------- 2. ரம்புக்கனை சம்பவம் (2022): எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது. அடுத்த வழக்குத்தவணை February 27, 2026. ⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு. பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன. --------------------------------------------------------------- இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு 1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting) 2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. --------------------------------------------------------------- நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்: ⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made. கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது. ⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது. Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது. Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது. ------------------------------------------------------------------- ⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும். சுருக்கமாகக் கூறினால், மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை, நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்... சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது. இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க, மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும். எடுத்ததும் சுடவும், நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம்... விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப் புரட்சி நாட்டில் வாழவில்லை. சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது. நம்ம யாழ்ப்பாணம்
  16. இங்கிலாந்துடன் நேபாளம் விளையாடிய விளையாட்டினை பார்த்து இன்று நேபாளம் இலகுவாக வெல்லும் என நினைத்தேன்
  17. மொஸ்கா சகோதரர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்।😁
  18. முதலாவது இப்ப ஞாபகம் வருகிறது...நல்ல விளக்கம் நன்றி ....இரண்டாவது விடுமுறைக்கு நான் கனடாவில்
  19. சமூக வலைத்தளங்கள், வட்ஸப் எல்லாம் பிழையான தகவல்கள் வருகின்றன. நம்பகத்தன்மையானவர்களே பிழையான தகவல்களை பரப்புகின்றனர். பையனுக்கு 17 வயதுதான்.. அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்! அவதூறு பரப்பப்படுவதாக கவலை! adminFebruary 11, 2026 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. காவற்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவற்துறையினர் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். அது தொடர்பில் 10ஆம் திகதி காவற்துறையினர் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள். அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன. அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ? அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவற்தறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை காவல் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார். அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம். இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அல்லைப்பிட்டி சம்பவம் – உயிரிழந்த சிறுவன் தொடர்பில் அவதூறுகள் பரப்பபடுவதாக வீட்டார் கவலை! எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்றே அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார். ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால் , வாகனத்தை கொடுத்தார். காவற்துறையினர் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டான். ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை. அந்த கோவத்தில் , மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டான். அது தொடர்பில் அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள். அது மாத்திரமே அவனுக்கு எதிரான காவற்துறை முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன என வீட்டார் தெரிவித்துள்ளனர் https://globaltamilnews.net/2026/228929/ சவப்பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம் Janu / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:18 அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பு.கஜிந்தன் https://www.tamilmirror.lk/செய்திகள்/சவப்-பெட்டியுடன்-வீதியில்-ஆர்ப்பாட்டம்/175-372375
  20. இந்த விமானப்பறப்பு முயற்சியை நான் காணவில்லை. ஆனால் போய் பார்த்து வந்தவர்களின் நேரடி விபரிப்பை கேட்டுள்ளேன். VW வான்/பஸ் ஒன்றின் இயந்திரமே பயன்பட்டது என சொன்னார்கள். மீனவரின் வலையில் அகப்பட்ட ஹெலியை புலிகள் பார்வைக்கு வைத்த போது பள்ளிக்கூடத்தால் நேரே போய் பார்த்தேன். அப்போதே இயந்திர பகுதி அகற்றபட்டிருந்தது. பாசிபடிந்து ஒரு வித கடல் மணம் வீசியது. புலிகள் இதை திருத்தியதும் முதலாவது அடி கோட்டைக்குத்தான் என நாம் நண்பர்கள் (பிரைமறி பெடியள்) எமக்குள் பேசி கொண்டோம்😂. டெலோ இப்படி எதுவும் செய்யதாக ஒரு நியாபகமும் இல்லை.
  21. நீங்களா இப்படி எழுதுவது என சந்தேகமாக உள்ளது. அண்மையில் அமெரிக்காவில் ஒரு பெண்ணை ICE கொலை செய்தது போலத்தான் இதுவும். மாடு திருடுவதோ, அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதோ, பொலிஸ் மறிக்கும் போது நிப்பாட்டாது போவதோ மரண தண்டனைக்குரிய குற்றம் அல்ல. இந்த வாகனத்தால் பொலிசுக்கு ஆபத்தும் இல்லை. ஆகவே தற்காப்பு சூடும் இல்லை. வாகனத்தை நிறுத்த எத்தனையோ இடங்களில் சுட்டிருக்கலாம். உடற்கூராய்வு நெற்றியில் சுட்டதாக சொல்கிறதாம். வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ரவைகள் உள்ளே போன துளைகள் தெரிகிறன. இது நிச்சயமாக ஒரு execution தான். இலங்கை பொலிஸ் மேற்கு நாடுகள் போல இல்லைத்தான். ஆனால் இலங்கை பொலிஸின் அளவுகோலின் படி கூட இது அராஜகம்.
  22. எனது ஆதரவு நிலை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தே. 1987 வரை இந்திய அணி ஆதரவு. 1987-2009 வரை இலங்கை. 2009 இற்கு பின் ஆப்கானிஸ்தான். அப்போ எம்மை அடிக்காத ஒரு அணியை தேடியபோது, லீக் போட்டிகளில் ஆப்கான் சிறப்பாக ஆடுவதாக என் நண்பி ஒருவர் சொன்னார். அப்போ ஜேர்சி போன்ற சிறிய நாடுகளுடம் ஆப்கான் மோதி மேலே வந்து கொண்டிருந்த காலம். அப்போதிருந்து ஆப்கானிஸ்தான் ரசிகர். 2019 உலக கோப்பை இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் Cardiff வரை போய் ஆப்கானிஸ்தானை ஆதரித்தேன்😂.
  23. கூட்டணியில் சீட் இல்லாவிட்டாலிம் இதயத்தில் இடமுண்டு 😂
  24. 83 இல் உலக ஒருநாள் சாம்பியன் இந்தியா . அணித்தலைவர்- கபில் தேவ் 84/85 இல் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட்போட்டி விளையாடியது. இங்கிலாந்து 2 :1 இல் வென்றது. அசாருதீன் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் 100 ஒட்டங்கள் ( இச்சாதனை இன்னும் முறியடியக்கப்படவில்லை) . அணித்தலைவர்- கவாஸ்கர் பிறகு இலங்கைக்கு கபில் தேவ் தலைமையில் இந்தியா சென்றது
  25. நானும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அடுத்த டெஸ்ட் போட்டியில் Javed Miandad விஸ்டன் புத்தகத்தை கொண்டுவந்து இலங்கை நடுவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு விதிகளை விளங்கப்படுத்த சிங்கள சனம் சிங்களத்தில் கூச்சல் போட்டது நினைவுக்கு வருகிறது.
  26. எனக்கு மட்டும் ஏன் இந்த அனுபவம் வரவில்லை? குருட்டாம் போக்கில் தெரிவு செய்வதோடு சரி. அடுத்த முறை எனது அட்மினை தெரிவு செய்ய சொல்லவேண்டியதுதான்.🤣
  27. நான் இதே கருத்தை உக்ரேன்,ரஷ்யா சம்பந்தப்பட்ட திரிகளில் உறுதிபட எழுதியுள்ளேன்.ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன். ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிசக்தி கிட்டங்கி.அதை வெறுத்து ஒதுக்கினால் மல்லாந்து படுத்து காறிதுப்புவதற்கு சமன். ஐரோப்பிய ஒன்றியம் என்பதை அமெரிக்கா எதிரியாகவே என்றும் பார்க்கும். இதை இன்று கண்கூடாகவே பார்க்கின்றோம். இந்த மனப்பான்மைக்காகவே நான் பிரான்ஸ் நாட்டை அன்று தொடக்கம் அதிகம் நேசிக்கின்றவன். அழிவுகள் இல்லாத நேரடி பேச்சுவார்த்தைகள். நல்லது கெட்டது எவர் பக்கம் இருந்தாலும் போர் தேவையற்றது. இன்றைய மக்ரோன் கொள்கையைத்தான் இரண்டாம் உலகப்போரில் அன்றைய பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் கடைப்பிடித்தார்கள்.
  28. போர் நிறைவடைந்த பின் நான் பல தடவைகள் இலங்கை சென்று வந்துள்ளேன். பல தடவைகள் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடியுள்ளேன். நான் வாகனம் ஓடியபோது போலிசார் என்னை மறித்த தருணங்களில் பல தடவைகள் தமக்கு காசு உதவி செய்யுமாறு/காசு தருமாறு நேரடியாகவோ/மறைமுகமாகவோ கேட்டார்கள். அனைத்து தருணங்களிலும் என்னிடம் தேவையான ஆவணங்கள் காணப்பட்டன. நான் வீதி நடைமுறைகளை அனுசரித்து வாகனம் ஓட்டினேன். வாகனத்தை மறிக்கும் போது காசு கேட்கிறார்களேயென நான் இவர்களின் ரோதனை தாங்க முடியாமல் மறிக்கும்போது நான் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டினால் என்னை போலிசார் தலையில் சுட்டு கொலை செய்ய வேண்டுமா? வாகனத்தை மறிக்கும்போது நிறுத்தாவிட்டால் மறித்தது ஒரு தடவையாகட்டும், அல்லது பத்து தடவைகள் ஆகட்டும் வாகனம் ஓடுபவரை சுட்டு கொலை செய்யவேண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமா? சிறுவனை சுட்டு கொலை செய்த சம்பவம் போலிசாரின் ஆணவ கொலை என்பது தவிர வேறு ஏதாக அமையமுடியும்? யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாய் ஒரு கிழமையில் போலிசார் சிறுவனை சுட்டு கொலை செய்து சிறுவனுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டார்கள்.
  29. உண்மையில் இங்கே “விருப்பின்” அடிப்படையில் நீங்கள் தெரிவுகளை மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. நான் முழுக்க முழுக்க ஒரு போட்டியில் எந்த அணி வெல்லும் என நான் நினைக்கிறேனோ அதை மட்டுமே தேர்வு செய்கிறேன். அந்த கணிப்பு தலைகரணமாக போவது வேறு விடயம் 😂. மீதி ஆட்களும் இப்படித்தான் என்றே கருதினேன். அக்காவுக்கும் எனக்கும் 4 புள்ளி வித்தியாசம். நாளைக்கு சமனாக வந்தாலும் அக்கா என்னை விட முன்னுக்கு பதில் போட்டதால் எனக்கு eviction நோட்டிஸ் தர முடியாது என நினைக்கிறேன். வாதவூரார் எண்ட வீட்டின் மீது ஒரு கண் வைப்பது போல உள்ளது.
  30. psoeotrnSd1vlg9 m3ra94fé1meliit2fcmuf:,g9a4r0h96t91fc3hf471 · " பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார். சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா? " = இயக்குனர் ஸ்ரீதரின் , ' திரும்பிப் பார்க்கிறேன் ' நூலிலிருந்து . முகநூல் பதிவு - பிரசாந்த் !
  31. இலங்கை படைகள் தொழிலுக்கு சென்ற சாதாரண தமிழ் பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு அவர்களுக்கு இராணுவ உடை அணிவித்து விடுதலை புலிகள் உறுப்பினர்கள் என ரூபவாஹினியில் காட்டி பெருமை கொண்டாடிய காலம் முன்பு காணப்பட்டது. இதே படைகளுக்கு சாதாரண பொதுமக்களை சுட்டுக்கொன்றுவிட்டு வாள்வெட்டு கோஷ்டி அல்லது மாட்டுக்கள்ளர் என நிறுவுவது எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய வித்தைகள். சிறீ லங்கா போலீசை கண்டிக்காமல் கொல்லப்பட்ட சிறுவன் மீதும், அவன் சார்ந்தோர் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றார்கள் பாருங்கள் சிலர். இவர்கள்தான் உண்மை தமிழர்கள்!
  32. அத தெரண கருத்துப்படங்கள்.
  33. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் கம்பனிகள் கூடுதல் வேலைவாங்க முயற்சி செய்வதாகவும் ஒரு செய்தி வந்தது. அதையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
  34. மோகன் அவர்களே! இதுவும் கடந்துபோகும் என்று சொல்வார்கள். ஆனால் வாழ்நாளில் கடக்கவே முடியாத துன்பங்களும் உண்டென்பதை மறுக்கவே முடியாது. அத்தகைய ஒரு துன்பம் உங்களையும் சூழ்ந்துவிட்டதை எண்ணிக் கலங்குகிறோம். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு ஆறுதல்கூற வார்த்தைகள் இல்லை. தமிழினம் அழிவுகளைச் சந்தித்துவந்த வேளையில் யாழ்களத்தை ஆரம்பித்து எங்கள் மனதுயருக்கு ஆறுதல்தந்து ஆற்றுவதற்கு வந்த ஒருவராகவே உங்களை எங்கள் மனங்களில் பதியவைத்தோம். அந்தப்பதிவு அழியாது. என்றும் உங்களுக்கு ஆதரவு தரவே மனம் விரும்புகிறது. ஆறுதல்கூற முடியாத உங்கள் துணைவியாரின் இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!!🙏
  35. கொல்லபட்டவரின் சித்தி கவலை தெரிவித்து பேசியதால் அவாவையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஜேவிபி தமிழ் ஆதரவாளர்கள் எழுதுகின்றனராம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.