Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    39297
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19638
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88786
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3115
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/26 in all areas

  1. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, யுவ்ராஜ் சம்ராவின் செஞ்சுரி விளாசலான 110 (65 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வாவின் நிதானமான 36 (39 பந்துகள்) ஓட்டங்களுடன் விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 76 (36 பந்துகள்) ஓட்டங்களுடனும், ரச்சின் ரவீந்திரவின் ஆட்டமிழக்காத புயல்வேக 59 (39 பந்துகள்) ஓட்டங்களோடும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது ஸிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பல்லேகலவில் தொடர்ச்சியான மழை காரணமாக கைவிடப்பட்டதையடுத்து ஏற்கெனவே ஓமான், அவுஸ்திரேலியாவை வென்ற ஸிம்பாப்வே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. மறுபக்கமாக ஸிம்பாப்வே, சிறிலங்காவிடம் தோல்வியடைந்திருந்த அவுஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது! முடிவு: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. அயர்லாந்து, ஸிம்பாப்வே அணிகள் தலா ஒரு புள்ளி பெற்றன. ஸிம்பாப்வே அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. யாழ் களப் போட்டியாளார்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, மைக்கல் ஜோன்ஸ்ஸின் வேகமான 71 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் முன்சீயின் நிதானமான 27 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி திபேந்திரா சிங் ஐரீயின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், குஷால் பூர்டெலின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நேபாளம் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  2. கிரிகெட் ஆத்தா கண்ணை குத்தி போட்டா😂. இதுக்கு ஒரே பரிகாரம் மொத்த டீமும் திருப்பதிக்கு மொட்டை போடுவதே😂. மழை அவுசின் உலக கோப்பை கனவுகளை….சுத்தமாக கழுவி, கழுவி ஊத்திவிடும் போல இருக்கு😂.
  3. அவர்களின் கூட்டு சரியில்லை, ஆனால் அவுஸ்ரேலியாவுடன் கூட்டணியில் இருந்தவர்களுக்கு அடிச்ச அதிர்ஸ்டம் போல அவர்களுக்கு இல்லை!🤣 (இந்த கருத்தினை ஒரு பயத்துடன் பதிகிறேன், என்னை ஜக்கம்மா தான் காப்பாற்ற வேண்டும்.)🤣
  4. 🤣............... இரண்டாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, மூன்றாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது என்று ஞாபகம் இருக்கின்றது, சுவி ஐயா................... முதலாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, அது எவ்வளவு என்று தன்னடக்கம் காரணமாக சொல்ல இயலாமல் இருக்கின்றது.......................🤣. பெர்னாட் ஷா இப்படி ஒரு தடவை சொல்லியிருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன்...............🤣. சூப்பர் எட்டிலிருந்து உங்களின் காட்டில் மழை தான், பையன் சார்.............. ஆப்கான் பாலைவனத்தில் என்னை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.....................🤣.
  5. கேள்வித்தாள் முதலே அவுட் ஆனது போல, முழு வகுப்புமே ஒரே பதில்களையே எழுதியிருக்கின்றதே................... நான் எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருக்கும் போது மரவேலை என்று ஒரு பாடத்தை ஹாட்லியில் அறிமுகப்படுத்தினார்கள். வல்வை சிதம்பரக் கல்லூரியில் ஏற்கனவே இந்தப் பாடம் பல வருடங்களாக ஒரு திறமையான ஆசிரியரால் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவருக்கு மாணவர்கள் 'ஒட்டப்பா' என்று ஒரு செல்லப் பெயரும் வைத்திருந்தார்கள். உடைந்த எதையும் சரி செய்து விடக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்பதால் போல. முதலாவது மரவேலை தேர்வில் என்று நினைக்கின்றேன். சிதம்பரக் கல்லூரியில் மரவேலை பாடத்திற்கான பரீட்சை ஒரு நாள் முந்தி நடந்துவிட்டது. ஒட்டப்பா அவர்கள் தயாரித்த அதே கேள்வித்தாளே அடுத்த நாள் ஹாட்லியிலும் வரப் போகின்றது என்றார்கள். வல்வெட்டித்துறையிலிருந்து வரும் மாணவர்கள் எல்லோரும், நான் உட்பட, கேள்விகள் பதில்கள் எல்லாவற்றையும் இரவிரவாக பாடமாக்கினோம். அடுத்த நாள் அதே கேள்வித்தாளே வந்தது..................🤣.
  6. நாளை புதன் 18 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் நிச்சயமாகக் கிடைக்குமா? 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானைப் பதம் பார்க்குமா? 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் இந்தியா அதிகூடிய எண்ணிக்கை எடுக்குமா அல்லது நெதர்லாந்து அதிகுறைந்த எண்ணிக்கை எடுக்குமா?
  7. கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ! பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள். 1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை). 2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி). 3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி). 4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்). 5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி). 6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி). 7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்). ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்). 9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி). 10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்). 11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்). 13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்). 14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி). 15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்). 16) ஆதி கணபதி(பல் வைத்தியர்). 17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்). 18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்). 19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்). 21) சுரேஷ்(spicyland உரிமையாளர்). 22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்). 23) பாலா(கணக்காளர்). 24) செந்தில்(மின்னல்). 25) பாபு(பாபு உணவகம்). பெயர் பட்டியல் தொடரும் ............. https://www.ilankainet.com/2019/02/25.html
  8. அப்படியே சொன்னாலும் பரவாயில்லை ........நாங்கள் மாடு இல்லாமலே ஏர் ஓட்டுவம் , ஸ்டியரிங்க் இல்லாமல் கார் ஓட்டுவோம் தெரியும்தானே .........! 😂
  9. ஆனால் நானும் அதையே தெரிவு செய்துள்ளேனே!!😜
  10. 🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு கண்ணீரிலும் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்களை நினைவில் கொள்கிறோம்! 🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும் 🕯️ உங்கள் உண்மை உயரட்டும் 🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “A Lamp for Every Soul” O spirits of Mullivaikkal, restless in the wind, gentle in the waves we bow our heads before you. May your suffering never be forgotten. May your names never fade from memory. May your dreams live through us. To the mothers who shielded their children, to the babies who never saw the sunrise, to the youth who carried only hope we light this lamp. May this flame guide you where the world failed you. May peace hold you in the embrace we could not give. O souls of Mullivaikkal we honour you. We speak for you. We remember you in every lamp, every tear, every heartbeat. 🕯️ Let your light endure. 🕯️ Let your truth rise. 🕯️ Let your memory shine forever. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”] https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?
  11. போர்த்திகிட்டு படுத்துகவா? படுத்துகிட்டு போர்த்திக்கவா? ஒருவர் விழுந்தடித்து ஓடிஓடிப் போவார். இடையில் வந்தவர் அண்ணை எங்க இந்த ஓட்டம்? தம்பி வீடு எரியுதாமடா. அண்ணை உன்ரை வீடு மாத்திரமல்ல ஊரே எரியுது. விழுந்தடித்து ஓடிப் போனவர் ஓஓஓ அப்படியா என்று ஆறுதலாக நடந்து போகிறார். ஓடிப்போனவர் =அவுசை தெரிவு செய்தவர்கள்.
  12. சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். ஆஸ்திரேலியா வெளியே போனது எல்லோர் வீடுகளிலும் களவு போனது போல தானே........... அதனால் பரவாயில்லை............. ஆனால் ஆப்கான் வெளியே போனது என்னுடைய வீட்டில் மட்டும் களவு போனது போல....................🤣.
  13. கேள்வித்தாள் வந்தது சரி , நீங்கள் எத்தனை மார்க் எடுத்தீர்கள் ....... அதை சொல்லவில்லையே ......! 😉
  14. அடங்கப்பா ...இன்றைக்கும் நாமதானா....கிருபன்சார் ...நன்றி
  15. 10 ல வியாழந்தான் பதிய விட்டு கிளப்புமாம்… நான் 10ம் பக்கத்தில்….செவ்வாய் கிழமை பதிலை பதிந்தாதால் - 9 தில குரு எண்டு எல்லே தப்பா நினைச்சேன்😂
  16. பனையால் விழுந்தவன் மழை வெள்ளத்தில் அடிபட்டும் போகின்றான்................ அவனை ஓமானும் ஓடிப் போய் அடிப்பதா.................🤣.
  17. இன்னும் மூன்று அணிகள்தான் ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. ஓமான், கனடா, நமீபியா. ஓமான் அவுஸ்ரேலியாவுக்கு அடிப்பதன் மூலமும் கனடா ஆப்கானிஸ்தானுக்கு அடிப்பதன் மூலமும் நமீபியா பாகிஸ்தானுக்கு அடிப்பதன் மூலமும் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யலாம். அது நடக்குமா. நடந்திடுமா.
  18. எங்களுக்கு முட்டைகள் கிடைத்தாலும் எதிரணியை வாழ்த்தும் அந்த மனது தான் கடவுள், பையன் சார்......................🤣. நல்ல ஒரு போட்டி...............👍.
  19. மூன்றாவ‌து பாட்ன‌ சிப்பின் அடி அமோக‌ம் வாழ்த்துக்க‌ள் நேபால் அணிக்கு................................
  20. என்ன இன்று உங்க காட்டில மழை போல. கோசானை பதியவிட்டு கிழப்பிவிட்டது.
  21. சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வலு உள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் யாராவது இவரைச் சந்தித்துப் பேச முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் மூலம் சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுவதையாவது சுட்டிக் காட்டலாம்.
  22. அண்ணை, வள்ளுவர் தந்த குறளை நன்றாக படித்திருக்கிறார்களோ! இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். "இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருக்குறள் (621) ஆகும். இதன் பொருள்: துன்பம் வரும்போது கலங்காமல், அதை கண்டு சிரித்து மகிழ்ந்து எதிர் கொள்ள வேண்டும். அத்தகைய மன தைரியத்தை விட, துன்பத்தை வெல்லக்கூடிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இது இடுக்கண் அழியாமை அதிகாரத்தைச் சேர்ந்தது.
  23. காங்கிரசுக்கு…. வாக்கு வங்கி இப்பவும் உள்ளதா. இளைய தலைமுறை… காங்கிரசை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஈழத்து மருமகன்…. தளபதி விஜைக்கு, ஏழரைச் சனி... காங்கிரஸ் ரூபத்தில், பிடிக்க போகுது. 🤣
  24. ரம் இன்னமும் 2020 தேர்தலில் நான் தான் வென்றேன். வாக்குகளை பெட்டிகளை மாற்றி ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார். அதோடு நிற்காமல் தனக்கு வேண்டியவர்களை வைத்து ஜோர்ஜியா மாநிலத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிக் கொண்டு போய்விட்டனர். இனி இதை ஏதாவது சுத்துமாத்து பண்ணி தான் வென்றதாக அறிவிக்க சொல்லுவாரோ தெரியவில்லை.
  25. சூப்பர் 8 க்கு சிம்பாவே தெரிவாகி உள்ளதால் 2028 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெறவுள்ள t20 உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 12 நாடுகளில் ஒன்றாக சிம்பாவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
  26. போட்டி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்கள். சிம்பாவே சூப்பர் 8 க்கு தெரிவாகியுள்ளது.
  27. செயற்கை நுண்ணறிவிடம் திம்பு கோட்பாடுகள் எவை என்று கேட்டபோது : திம்பு கோட்பாடுகள் – 4 அடிப்படை முன்வைப்புகள் தமிழர் ஒரு தனித்த இனமாக அங்கீகாரம் பெறுதல் (Recognition of the Tamils of Sri Lanka as a distinct nationality) வடகிழக்கு பகுதிகள் தமிழர் தாயகமாக அங்கீகாரம் பெறுதல் (Recognition of the existence of a traditional homeland for the Tamils in the North and East) தமிழர் தன்னாட்சியுரிமை (Self-determination) பெறுதல் (Recognition of the right of self-determination of the Tamil nation) இலங்கையில் வாழும் அனைத்து தமிழருக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் உறுதி செய்யப்படுதல் (Recognition of full citizenship and other fundamental democratic rights of all Tamils who look upon the island as their country) இவற்றில் மூன்றாவதான 'தமிழர் தன்னாட்சியுரிமை' என்பதைச் சிங்களவர் ஒருபோதும் தரப் போவதில்லை என்று நினைக்கிறேன். குறைந்தபட்சத் தீர்வு ஒன்று வேண்டுமானால் இதற்கு மாற்றீடாகத் தமிழர்களுக்கு மேலதிக உரிமைகள் கிடைக்கத்தக்கவாறு வேறு கோரிக்கைகளை முன்வைக்கலாம். இல்லாவிட்டால் சரணாகதி அரசியலை மேலும் பல தசாப்தங்களுக்குத் தொடர வேண்டி வரும்.
  28. rtdsSpoeon2it06cicfi0 cf1g871e1l7tf21rlu4lH714f,9u3h à38771: · கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி. திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார். பிறகு நடந்தவை: “குட் ஈவினிங் குமார் சார்!” - இது கேட்கீப்பர். உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்? குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம். பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?. குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்…. அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா? ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?... (குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....)......!
  29. கனடா விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள்
  30. நன்றிங்க... செம்பாட்டார்..உதவி தேர்தல் ஆணையாளராக..வருகின்றார் ..வாழ்த்துகள்..
  31. நான் அவுஸ் கப்பைத் தூக்கும் என்று கணிச்சன் இப்படிப் பெரிய ஈப்பா சொருகிட்டாங்களே.இனி என்க்கும் சுவியருக்கும்தான் போட்டி .
  32. பிஸ்கெட் செலவு எகிறுமே😂 இலங்கையின் அத்தனை சூப்பர் 8 இம் இலங்கையிலாம். யாழ்கள போட்டியில்… முதல் முறைகாக… திரைக்கு வந்து சிலமாதங்களே ஆன… “நாங்களும் வெல்லும்வோம் கிரிகெட் கணிப்பில்” திரைப்படம்… காணத் தவறாதீர்கள்! வாழ்வில் முதல் முறையாக இன்று எனக்கு 3/3. ஈரோமில்லியன் எத்தனையோ மில்லியனாம். ஒரு டிகெட்ட எடுதுள்ளேன். விழுந்தால் பிரைவேட் ஜெட்டில் போய் பைனல் பார்க்கலாம்😂
  33. நான் வாதாவூரனுக்கு பயந்து நாயை அவிழ்த்து விட, சுவி அண்ணாஃ நாய்க்கு பிஸ்கெட்டை போட்டுட்டு, வீட்டுக்குள்ள பூந்திட்டார்😂 அதே 😂
  34. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார். சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!
  35. sonertSdop8f4cg128 u16201iem27lhr096à mcH9m:,481625t7f6tmh3h · ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான். பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது. கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் உண்டாகியது.. எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான். கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இது வரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம். நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தாருக்கு அனுப்பிடுவோம்னு பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார். தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது. கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான். கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புன்னு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார். அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு.. ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்.. அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார். கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார். அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும் அந்த அனுபவத்தின்படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை.. ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து.. மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து.. மாவட்ட கலெக்டரிடமிருந்து தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து விஏஓக்கு வந்து.. விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது... #Repeated multiple times....!
  36. ஆரம்பவீரர்கள் நல்லா இருப்பதால் ஸ்மித்துக்கு இடம் இல்லை என்பது லொஜிக்கலாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்த மட்டில் ஸ்மித் ஒரு கிரிகெட் அசுரன். வெட்ட வெட்ட புதிய ஆளாய் உருவாகும் வல்லமை உண்டு. போலராக, கடைநிலை பேட்ஸ்மேனாக வந்து, முதல் நிலை டெஸ்ட் பேட்ஸ்மேனாகி, போலிங் போடுவஐதையே விட்டு விட்டார், டெஸ்ட் மட்டுமே ஆடல்கூடியவர் என சொன்ன போது ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். இத்தனைக்கும் பார்க்க வெறுப்புவரும் ஆட்டம். அவரின் T20 அண்மைய form ஐ இதன் தொடர்சியாகவே நான் பார்க்கிறேன். சகல எதிர்பார்ப்புக்களையிம் உடைத்து இதிலும் ஒரு கடைசி காட்டு காட்ட அவரால் முடியும் என நான் நம்புகிறேன். ஆனால் மார்ஷ்சுக்கு உண்மையில் காயம் என்றால் தான் அவர் உள்ளே வரமுடியும் என்பதையும் ஏற்கிறேன்.
  37. இன்று 250 கிலோமீற்றர் மழைக்குள் பயணம் செய்யவேண்டியிருந்ததால் ஒரு மட்ச்சும் பார்க்கவில்லை! திரும்பவும் 250 கிலோமீற்றர் ஓடி, வந்த கையுடன் முதல்வேலையாகப் புள்ளிகளைத்தான் கணக்கிட்டேன்.☺️ ஆவலுடன் காத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் 🤩 அதுதானே!😜
  38. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். குறிப்பு: ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 28 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 28 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் இணையம் 28 அகவைக்கு எனத் தனித்துவமாக/பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். எனினும் பலரது படைப்புத் திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதால் பத்துக்கு மேலாகவோ, தினம் ஒன்றாகவோ பதியாமல் தவிர்ப்பது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். வேறு தளங்களில், சமூகவலைத் தளங்கள் உள்ளடங்கலாக, பிரசுரிக்க விரும்பினால் குறைந்தது இரு நாட்கள் தாமதித்துப் பிரசுரிக்கலாம். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  39. அவர்கள் கள்ளமாடு பிடிக்கும் கும்பல்தான்.இரவு 1.30 மணிக்கு அவர்களுக்கு அங்கே என்ன வேலை?ஆனால் பொலிஸ் அவர்களைத் துரத்திப் பிடித்திருக்க வேண்டும்.வாகனத்தில் இருந்து எதிர்த்தாக்குதல் வந்திருந்தால் அவர்கள் சுட்டது நியாயமாகி இருக்கலாம்.ஆனால் அவர்களைத்துரத்திப்புடிக்காமல் நெற்றிப் பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.இது சட்டப்படி குற்றம்.மாட்டைப் பறிகொடுத்த மாட்டு உரிமையாளர்கள் இது சரி என்றே சொல்கிறார்கள்.
  40. எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர். ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா. மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர். ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர். அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல். ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை. இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும். சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும். கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார். பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது. பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம். -------- என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார். ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம். Wishing you long life Ilayarajah
  41. ஏ.ஆர்.ரகுமான் இசையில் மட்டுமல்ல இப்படியான விடையங்களிலும் கெட்டிக்காரர் (இவரது மனைவி சட்டம் படித்தவர் என கேள்விப்பட்டுள்ளேன்). தன் முதல் படத்தில் இருந்து இன்றுவரைக்கும் இது தொடர்பாக சரியான ஒப்பந்தங்களை போட்டுள்ளார். அதனால் அவரது இசையை/ பாடலை எவரும் அவரது அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது. ஆனால் இளையராஜாவுக்கு இப்படியான சட்டம் மற்றும் ஒப்பந்தங்கள் போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட ஆரம்பத்தில் இருக்கவில்லை. மிகச் சாதாரணமாக தயாரிப்ப்பாளருடன் மட்டும் சம்பளம் / உரிமை தொடர்பாக ஒப்பந்தங்களை போட்டுள்ளார். பின்னாட்களில் தான் அவர் சுதாகரித்துக் கொண்டார். முக்கியமாக மலேசியாவில் இருக்கும் ஒரு இசை வெளியீட்டு நிறுவனம் இவரது பாடல்களை திருப்பி திருப்பி சிடி போட்டு விற்கும் போதுதான் உணர்ந்து கொண்டார் என்று சொல்வர்.
  42. இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன். இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன? இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.
  43. இசை மூலம் / காப்புரிமை மூலம் பெறப்படும் பணத்தை பெற்று இசையமைப்பாளருக்கும் ஏனையவர்களுக்கும் பகிர இந்தியாவில் IPRS என்ற அமைப்பு உள்ளது. இதனையே அங்குள்ள அனேகமான இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இளையராஜா இதனை பயன்படுத்துவதில்லை. தன் இசை மூலம் கிடைக்கும் ராயல்டி பணத்தை நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கான ஒரு அமைப்பின் மூலமே பெறுகின்றார் என கூறுகின்றனர். அதாவது இளையராஜா ராயல்டியின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பெரும் பங்கை நலிவுற்ற கலைஞர்களுக்கு பகிர்கின்றார்.
  44. நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும். Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம். ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள். இது வேண்டும் என்றே செய்த தவறு. இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.
  45. நீங்கள் சொல்வது உண்மைதான். இளையராஜாவிற்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என தெரியாது.ஆனால் மேடையில்லாத அவர் வாழ்க்கை மிக மிக நாகரீகமானது. தமிழ்நாட்டு திரையுலகை பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் மேடையில் நாகரீகமாக இருந்து விட்டு மேடை பின் நடக்கும் இருட்டு வாழ்க்கையும் அசிங்க வாழ்க்கையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை என்பதை இந்த ஊர் உலகமும் அறியும் தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன். எந்த வாழ்க்கை சிறந்தது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அதை நீதிமன்றங்கள் தான் சட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும். ஏனைய இசை அமைப்பாளர்களுக்கு சட்டரீதியாக இசையுரிமை பணம் போகின்றது. இளையராஜா முன்னரெல்லாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் தனது பாடல்களுக்கு உரிமம் கோரும் போது இளையராஜா ஏன் வாய் மூடிக்கொண்டிருக்க வேண்டும்? அதை அவர் மேடைகளிலேயே நேரடியாக சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் மிக தெளிவாக சொல்லியுள்ளார். ஏனைய இசையமைப்பாளர்கள் அப்படி பொது வெளியில் சொல்லியதாக தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.