Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19869
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    33926
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1610
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39465
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/25/26 in all areas

  1. இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!
  2. எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)
  3. ஏ எல் சோதனை முடிச்சு போட்டு, ஒரு இரெண்டு மாசம்… வெறும் இரண்டே மாசம்… அடுத்து என்ன செய்யலாம் (செகண்ட் ஷை எடுப்பதில்லை, விரும்பாத யூனி டிகிரியும் படிப்பதில்லை என தெளிவாக முடிவு எடுத்த பின்) என நினைக்கும் காலப்பகுதியில்…. வழமையாக கிரிக்கெட் அடிக்கும் கிரவுண்டில்/தெருவில்…. கடற்கரை கல்லு கும்பத்தில்…. கதிரேசன் கோவில் முற்றத்தில் என எல்லா இடத்திலும்… வழமையாக வரும் தோஸ்துகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது… மச்சான் ஒஸ்ரேலியா ஸ்டூடன் விசா ஓகே டா…. பவளோ ஸ்கொல் கிடைச்சிட்டுடா… கனடாவுக்கு ஏஜென்சி நாளைக்கு ஏத்திறாண்டா… யூனிக்கி போக முன் கெல்ட் கோர்ஸ் போய் இங்கிலீஸ் படிக்கோணும்டா… வாப்பா பெட்டா ஷொப்ப என்னிய பார்க்க சென்னார்டா… தினுசு தினுசான காரணங்களுடன் ஒவ்வொருவராக போய் விட… கடைசியில் நானும் என நண்பன் கிசோவும் ஒரு கடற்கரை கல்லில்… மச்சி இனி இங்க வாறேல்ல…எதாவது செய்யோணும்டா… என முடிவெடுத்து கொண்டோம். சற்றேற குறைய 30 வருடங்கள் ஓடிவிட்டன… ஒரே மாற்றம்… அன்று நானும் கிசோவும்… இன்று…. நானும் வாதவூரனும்😂 பிகு அன்று எதிர்காலம் எம் கையில் இருந்தது, இன்று 8 நாடுகளின் கையில்😂 கதையின் சூழமைவுக்கு 👇
  4. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களுடனுன் இருந்தபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் புயல்வேக 47 (26 பந்துகள்), கோல் மக்கொஞ்சியின் ஆட்டமிழக்காத 31 (23 பந்துகள்) ஓட்டங்கள், மற்றும் ரச்சின் ரவீந்திராவின் வேகமான 32 (22 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். நியூஸிலாந்து அணியின் 17 சுழல்பந்து ஓவர்களுக்கு அடித்தாடமுடியாமல் தடுமாறி, கமிண்டு மெண்டிஸின் 31 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், டுனித் வெல்லலகேயின் 29 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் சுருண்டனர். ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: நியூஸிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இன்று சுமைதாங்கிக் கல்லுக்கு @வாதவூரான் நகர்ந்துள்ளார். @Ahasthiyan இரண்டாம் இடத்திற்கும் முன்நகர்ந்துள்ளார்!
  5. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
  6. வாற சனிக்கிழமை.. இவரை கறி வைக்க வேணும். பிடிச்சு கட்டி வையுங்கோ. 😂
  7. @அல்வாயன் இப்ப புரியுதா உங்களுக்கு ......... இதுதான் கமலும் T . ராஜேந்திரரும் கதைப்பது . ........! 😂
  8. கல்யாணத்தில் முடிவதல்ல காதல்.. கடைசி வரை வருவதே காதல்,,
  9. நானும் பேரப்பிள்ளை சாம்ராஜ்யத்தில் பிரவேசித்து 9 மாதங்களாகின்றது. உங்கள் பதிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடிகின்றது . எனக்கு இரு புதல்விகள் மாத்திரம் என்பதால் பேரன் என்பது கூடுதல் விசேடம் . எனது நண்பன் ஒருவனின் பேரனுக்கு ஆறு வயது . மியூசிக் நோட்ஸுகளை செவிமடுத்து , குறைந்த நேரத்தில் கூடிய ம்யூசிக் ஆக்கியோரை ( பீத்தோவன் , எல்விஸ் etc ) அடையாளம் காண்பதில் கின்னஸ் சாதனை அண்மையில் ஏற்படுத்தியிருக்கிறார் .
  10. பேரன்மீது பேரன்பேரன்பு கொண்டால் ...இப்படி அன்பான ...அருமையான பேரன்தான்..கிடைப்பான் ...அது ஆண்டவன் தந்த கொடை...வாழ்க
  11. 🤣........... இரண்டு மாதங்களே இப்படி என்றல் இரண்டரை வருடங்கள் என்றால் எப்படியிருக்கும் என்கின்றீர்கள்.................... 87ம் ஆண்டில் ஏ லெவல் எடுத்து பல்கலை அனுமதி கிடைத்தது. இலங்கை அரசு ஜேவிபி பிரச்சனையை தற்காலிகமாக இல்லாமல் ஆக்கி தெற்குப் பல்கலைகளை மீண்டும் திறக்கும் போது 90ம் ஆண்டு ஆகிவிட்டது......... அவ்வளவு நாட்களும் ஊரிலேயே இருந்தேன். நண்பர்கள் கனடா, லண்டன், ஜேர்மனி, கப்பல் என்று போய்க் கொண்டேயிருந்தார்கள். கடைசி ஆளாக ஓரிருவர் நின்று கொண்டிருந்தோம். வழியே இல்லை என்று தான் நினைத்தேன். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம், இயக்கங்கள் என்று வாழ்க்கை ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தது. மினி சினிமாவில் நிறையப் படங்கள் பார்த்தேன். அதற்காகவே ஒரு மினி சினிமாவில் வேலை செய்தேன்................😜. ஊரில் உள்ள சில வாசிகசாலைகளின் சாவிகள் கூட என்னிடம் இருந்தன..................🤣. 90ம் ஆண்டுக்கு பின் நடந்தது அதை விட விசித்திரம். முன்னைய நாட்களில் எங்கள் ஊரவர்கள் கடல் கடந்து கோடியாக்கரைக்கு போய் படம் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்கள். என் அம்மா கூட அவரின் சிறு வயதில் தானே படம் பார்க்க கோடியாக்கரைக்கு வள்ளத்தில் போனதாகச் சொல்லியிருக்கின்றார்...............🫢. பல்கலைக்கு போய் சில நாட்களிலேயே இந்தியாவில் இருந்து ஒரு கடிதம்.......... இந்தியாவில் இருந்து நமக்கு யாரடா கடிதம் போடுகின்றது என்று பார்த்தால்................ படம் பார்க்க இந்தியா போகின்ற கோஷ்டி குடும்பமாக ஊரையே காலி செய்து விட்டு, தமிழ்நாட்டுக்கு போய்ச் சேர்ந்து விட்டார்கள்....................... அதை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்கள். செய்தியை புறாவின் காலில் கட்டி அனுப்பாமல் விட்டார்களே..............🤣. ஆனாலும் களத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பது போலவே, என்னுடைய தெரிவுகள் அப்பப்ப சரியாக வேலை செய்தன.............. அம்மா செய்த புண்ணியங்கள் போல................ இங்கு அமெரிக்காவில் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். வயதானவர். இந்தியர். நான் கோவிலுக்கு போவதில்லை என்பதையும், என் மனைவி எப்போதும் கோவிலுக்கு போவதையும் அவதானித்து இருந்தார். ஏன் போவதில்லை என்று கேட்டார். பெரிதாக நம்பிக்கை இல்லை என்றேன். நீ அங்கே கும்பிட வேண்டாம், ஆனால் நன்றி சொல்ல வேண்டும், யாருக்காவது நீ நன்றி சொல்ல வேண்டும்.................. இப்படி ஒரு வாழ்க்கை எத்தனையோ கோடி மக்களுக்கு இந்த உலகில் கிடைப்பதில்லை என்றார்................... போகும் போதெல்லாம் 'மிக்க நன்றி கடவுளே.............' என்று சொல்லுகின்றேன்.............
  12. பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
  13. பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்
  14. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  15. வெளிநாடு போவதற்கு 77 களில் கொம்பனித்தெருவில் நின்ற நேரம் பிற்பகலில் தொடரூந்து ஏறி வெள்ளவத்தை தெகிவளை போய் திரும்ப வருவோம். கொஞ்ச நாளில் வெளிநாடு போகாவிட்டாலும் பரவாயில்லை பிற்பகலில் இந்த தொடரூந்து பயணம் மட்டும் கைவிட முடியவில்லை. அப்படி என்ன தான் பார்த்திருப்பேன். ஊரில் இருந்து வந்த புதிதில் கற்பாறைகளுக்குள் தாழம் பற்றைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள் வெளிநாட்டை விட சொர்க்கமாக தெரிந்தது. கடைசிவரை சலிக்கவே இல்லை.
  16. பிரமிளுக்கு வேற வேலை இல்லை. இப்பிடியா போட்டுக் கலாய்க்கிறது. இவங்களிட்ட மாட்டுப் பட்டு அந்தாள் (சிவனார்) படும் பாடு. சிவராத்திரியில் போட்ட குத்தாட்டம் காணுமே.
  17. 🤣............... 👍.............. சனங்களுக்கு சாமியும் வேண்டும், பூசாரிகளும் வேண்டும்.....................🤣. சாமி - பையன் சார் பூசாரிகள் - வசீ, கோஷான், செம்பாட்டான் 'சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும், பூசாரிகள் விட மாட்டார்கள்............' என்று நேற்று இதையே குறிப்பிட்டிருந்தேன்................🤣. பிரமிளின் தாக்கம். இந்த வரியை நேற்று எழுதும் போது பிரமிளின் 'மேல் நோக்கிய பயணம்' கவிதை மனதில் வந்து அடக்க முடியாத சிரிப்பு: ......... ஜடையில் கங்கையின் இமயப் பனிமூச்சு அனலாய் அடிக்கிறது நதிநாக்கு வரண்டு அவள் நீர்கேட்டுத் தவிக்கிறாள். அர்த்த நாரிஇவள் பாரிச வாதத்தில் பின்னே இழுக்கிறாள். ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து விவேகப் பித்தம் கோஷப் புயலில் கலைந்து புத்தி தெளிந்து பிழைக்கும் வழிதேட இடிஒலி எழுப்பிய உடுக்கை பொத்தல் விழுந்து 'பொத் பொத்' என்றொலிக்க திரிசூலம் துருப்பிடித்து கையைக் கடிக்க மறுகையில் மானின் கால் எலும்பும் இன்னொரு கைநெருப்பு அணைந்து புகைந்து அரனார் இருமவும் பின்தொடர்வோர் கல்லடியில் படம் ஒடுங்கி பாதிசெத்த பாம்புமாலை புழுவாகிப் புரள ஊழித்தீ தீவரண்டு நெற்றிக்கண் குழிவிழுந்து திருதிரு எனவிழிக்க அறந்து பறக்கும் பூணூலை பொடிமட்டையில் சுருட்டி பொத்திப் பிடித்தபடி அரனார் ஓடுகிறார்............ ...................
  18. இதுக்குப் போய் கெஞ்சிக் கூத்தாடி மினி சினிமா போயிருக்கிறீங்கள் என்பதை அறியும் போது..எனக்கு இரத்தக் கண்ணீர் வருகிறது😂!
  19. அகமதாபாத்திலும் சென்னையிலும் மழை வருமா. குடை கொண்டு போகச் சொல்லுங்க. மழை வருது மழை வருது குடை கொண்டுவா - மானே உன் மாராப்பிலே
  20. ஒருவரை மிரட்டுறது சட்டத்துக்கு முரணானது. கிருபனின் அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டி வரலாம். எதுக்கும் வக்கீலைப் பார்த்து வையுங்க.
  21. அட.... கடைசியா இப்பிடி வந்து நிக்குதா. நாளைக்கு ஒரே அதகளம்தான். இந்தியாவுக்கு மிக முக்கிய போட்டி.
  22. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் 26 பெப் இரு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், மேற்கிந்தியத் தீவுகள் (X3) எதிர் தென்னாபிரிக்கா (X4) WI எதிர் SA மூன்று பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் WI ஏராளன் SA வசீ SA புலவர் SA சுவைப்பிரியன் IRE அல்வாயன் SA ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் SA வாத்தியார் SA கறுப்பி SA வாதவூரான் AFG வீரப் பையன்26 WI சுவி WI கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் SA கந்தப்பு SA நியாயம் SA எப்போதும் தமிழன் SA ரசோதரன் SA பிரபா SA நிலாமதி SA நந்தன் SA இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, இந்தியா (X1) எதிர் ஸிம்பாப்வே (X2) IND எதிர் ZIM 15 பேர் இந்தியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை! 8 பேர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் IND வாத்தியார் AUS கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
  23. முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள். சுமைதாங்கி @வாதவூரான் க்கு வாழ்த்துக்கள்.
  24. ஏற்கனவே மூன்றாவது தடவையும் தோத்தாச்சு (சிம்பாவேயுடனானதும் சேர்த்து). தோற்கிறதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கும் இலங்கையணி
  25. வெட்டி ஒட்டத்தெரிந்த எனக்கு எழுத வராதாமே அண்ணை! கள உறவுகள் எழுத தொடங்கிவிட்டார்கள்.
  26. இலங்கை முதலாவது அணியாக அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
  27. நூறடித்து தங்கள் மானத்தைத் தாங்களே காத்துக் கொண்டார்கள்.
  28. கோஷானின் சுமை இன்றைக்கு அகலும் போலிருக்கிறதே! Sri Lanka vs New Zealand, 46th Match, Super Eights, Group 2 at Colombo, T20 World Cup, Feb 25 2026 - Live Cricket Score Live 46th Match, Super Eights, Group 2 (N), Colombo (RPS), February 25, 2026, ICC Men's T20 World Cup PrevNext New Zealand 168/7 Sri Lanka (14.6/20 ov, T:169) 77/7 Sri Lanka need 92 runs in 30 balls.Stats view Current RR: 5.13 • Required RR: 18.40 • Last 5 ov (RR): 33/3 (6.60) Win Probability SL 0.18%NZ 99.82%
  29. ஆரோ தலகுளி + பச்ச தண்ணிய ஒண்டா குடுத்துட்டானுகள் 😂 நியூசீ நிண்ட நிலையில்தான் இவையும் நிக்கினம். ஆனால் scoreboard pressure மடக்கி போடும்.
  30. அவர் முறை செஞ்சி, பரிசமும் கட்டிவிட்டு போய்ட்டார்😂
  31. இந்த t20 உலககோப்பைக்கு முதல் நடந்த தொடர்களில் இலங்கையை இங்கிலாந்து இலங்கை மண்ணில் 3-0 கணக்கில் வீழத்தியது. பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் பல முக்கிய அவுஸ்திரேலியா வீரர்கள் விளையாடவில்லை இந்தியா மண்ணில் நியூசிலாந்து இந்தியாவிடம் 4-1 கணக்கில் தோற்றது. இதனால் இந்த சூப்பர் 8 குழு 2 இல் முதலிடம் இங்கிலாந்தும் இரண்டாம் இடம் பாகிஸ்தானும் தெரிவு செய்து விடைகளை எழுதினேன். நியூசிலாந்து இலங்கையை விட பலமான நாடாக இருந்தும் இலங்கையில் போட்டி நடப்பதினால் இலங்கையை 3 வது நாடாக தெரிவு செய்தேன். இதே போல ஆரம்ப சுற்று போட்டிகளிலும் ஒவ்வொரு குழுக்களில் அணிகளை வரிசைப்படுத்தினேன்.
  32. நீங்க வேற. இதையெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக் கொண்டு. 🤣
  33. உலகில் சில விடயங்களை நம்ப மாட்டோம் என அடம் பிடிச்சாலும் இறுதியில் நம்ப வேண்டிய நிலைக்கு காலம் எங்களை அழைத்து சென்றுவிடுகிறது
  34. நல்லதொரு பகிர்வு விசுகர். இந்தக்காலத்து குழந்தைகளுக்கு அறிவு அதிகம். எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், ஏதோரு ஒரு ரூபத்தில் மரணத்தின் பின்னரும் வாழ்க்கை தொடரும் என நம்புகின்றேன்.
  35. மிகவும் நன்றாக இருக்கின்றது, விசுகு ஐயா.....................👍. ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவங்களும், அறிவுகளும் தங்கி இருக்கின்றன என்று சொல்பவர்கள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் இதை அடிக்கடி குறிப்பிடுவார். ஒரு தலைமுறையின் தாய்மொழி மாறிப் போவதால் உண்டாகும் பாதகமான விளைவுகளை விளக்க இந்தக் கூற்றை உபயோகிப்பவர்களும் உண்டு. உங்கள் பேரனின் செய்கைகளும், கதைகளும் அந்த அறுபடாத நீண்ட தொடர்பையே சொல்லுகின்றன என்று நினைக்கின்றேன்................❤️.
  36. ம்ம்ம்… அதொண்டுதான் இல்லாத குறை😂
  37. @ வேலை செய்யுதண்ணை… இந்த கணிப்புகள் தான் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யுதில்லை😂
  38. நமக்கு 6 பேர். எப்படி இருக்கும்? என்னது உங்களுக்கும் பேரன் பேத்தியா?
  39. நம்ம நிலைமையும் உப்பிடிதான் அண்ணை. நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
  40. அவர் மயிலேறி சுத்துறார் . ...... நாங்கள் நால்வர் எலிக்குமேல ...... ம் .....! 🙃
  41. கந்தப்புவ இனிப் பிடிக்கேலாது
  42. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் அதிரடியான 63 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், இன்னும் மூவரின் 20க்கு மேலான ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து சவால் குறைந்த 164 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் நிலைத்து ஆடாவிட்டாலும், அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் மின்னல்வேக செஞ்சுரியான 100 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷகீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் நாற்காலியிலும், சுமைதாங்கிக் கல்லிலும் மாற்றங்கள் இல்லை. @Ahasthiyan மூன்றாம் இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார்!
  43. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):
  44. பழைய நண்பர்கள் லிஸ்டில் சுமந்திரனை சேர்த்தேன். பின் நீக்கி விட்டேன்….. யாழில்….திரிகளுக்கு கவனத்தை ஈர்க்க என சில பொது உத்திகள் உண்டு…. அவற்றில் ஒன்று சுமந்திரனை இழுக்க வேண்டிய இடத்தில் இழுக்காமல் விடுவது 😂. யாழ் களத்தில் சுமந்திரன் உப்பு மாரி… கூட போட்டாலும், குறைய போட்டாலும், அளவா போட்டாலும், போடாமல் விட்டாலும் எதிர்வினை வரும்😂. இதில் நான் சுமந்திரனை போட்டு இருந்தால் எக்ஸ்ராவா ஒரு லைக் கிடைச்சிருக்கும்… ஆனா இப்போ 3 கொமெண்ட்ஸ் கிடைச்சிருக்கு… இனி வியூசும் எகிறும்…. இதெல்லாம் #தொழில் ரகசியம்😂
  45. பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் மிகவும் சிந்திக்கத்தக்க ஒரு சுய மதிப்பீடு ........! sooStrnepd6m:9172u4393l0c7av821f74im3e1i,h1t9r r0ua3805 21éh · அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!" - இந்தியப் பயணத்தில் மனம் திறந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போது இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுடெல்லியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகள் குறித்தும், தனது தனிப்பட்ட ஆசைகள் மற்றும் காதல் குறித்தும் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "எப்போதெல்லாம் எனக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்ததோ, அப்போதெல்லாம் நான் தவறுகளைச் செய்திருக்கிறேன்; அதுவும் மிகப்பெரிய தவறுகளைச் செய்திருக்கிறேன்," என்று அதிபர் மக்ரோன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு உதாரணமாகத் தனது மேடைப் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், "நாம் நினைத்ததை எல்லாம் பேசிவிடலாம் என்று கருதிப் பேசும்போது, அது பல நேரங்களில் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பின்பு அதற்காக நாம் பெரிதும் வருந்த நேரிடுகிறது. நமது பேச்சை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கவனிப்பு குறையும்போதுதான், இந்த அதீத தன்னம்பிக்கை தலைதூக்குகிறது," என்று தனது முந்தைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். "உங்களுக்கு இப்போது 25 வயதாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?" என்ற சுவாரஸ்யமான கேள்விக்குச் சற்றும் தயங்காமல் பதிலளித்தார் அதிபர். "கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் எனது திறமைகளை வளர்த்துக்கொண்டிருப்பேன். முற்றிலும் தனித்துவமான ஒன்றைச் செய்திருப்பேன்," என்று கூறிய அவர், பல ஆண்டுகளாகத் 'தரவு அறிவியல்' (Data Science) படிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், ஆனால் அதை இன்னும் தொடங்கவில்லை என்றும் புன்னகையுடன் குறிப்பிட்டார். இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை குறித்துத் தனது ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். "பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் அழிவு, உலகெங்கும் நடக்கும் போர்கள், நாடுகளுக்கிடையே இல்லாத ஒற்றுமை மற்றும் அசுர வளர்ச்சியடையும் தொழில்நுட்பங்கள் எனப் பலவிதமான அழுத்தங்களுக்கு இன்றைய இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களின் இளமைக்காலத்திற்கே உரித்தான கள்ளங்கபடமற்ற தன்மை தொலைந்துவிட்டது வருத்தமளிக்கிறது," என்றார். முடிவாக, "உங்கள் காதல் கதையை 60 விநாடிகளில் சொல்ல முடியுமா?" என்று நெறியாளர் கேட்டபோது, அதிபரின் பதிலில் கவித்துவம் எட்டிப்பார்த்தது. "காதல் என்பது முற்றிலும் எதிர்பாராமல் நடப்பது; அது முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டதல்ல. அதை மிக ஆழமாக, முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்லும் மிக முக்கியமான உணர்வு அதுதான். ஒவ்வொருவரின் காதலும் முற்றிலும் தனித்துவமானது; அதை வேறெந்தக் காதலுடனும் ஒப்பிட முடியாது," என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்து நேர்காணலை நிறைவு செய்தார் அதிபர் மக்ரோன் .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.