Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points89120Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33926Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்4Points39465Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்3Points19869Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/07/26 in Posts
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி நடாத்துபவரின் விதிகளுக்கமைய போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பு நடாத்தும் உரிமை கிடையாது! அத்தோடு விதி 240, துணை விதி 3034, உபவிதி 1003 இன்படி போட்டி நடாத்துபவரின் அதிகாரங்களுக்கு அமைய ஏற்கனவே குறிக்கப்பட்ட வகையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்🤪3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமோம். அதுக்குள்ள தலை"விதி" யும் ஒன்று. அந்த விதியின்ர இலக்கம் தெரியவில்லை. 🤣2 points
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
எங்களில் ஒராள் இப்படி முன்னுக்கு வந்து விடக்கூடாதே!🤣2 points
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
1 pointபிள்ளையார் பிடிக்க போய் குரங்கான வரலாறு ஈரான் விவகாரத்தில் அமெரிக்க இங்கிலாந்து நாடுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த ஈரான் போரை பெரிதாக பின் தொடரவில்லை, ஆனால் தற்போது அதன் தாக்கம் இரஸ்ஸிய உக்கிரேன் போரினை விட அதிகமாக உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆரம்பித்த போர் சரியான முறையில் செல்ல்லவில்லை போல உள்ளது, ஈரானில் தரைப்படை இறங்காமல் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியாது, ஆனால் தரைப்படையினை அனுப்ப அமெரிக்கா விரும்பவில்லை போல தெரிகிறது. இந்த போர் அமெரிக்க தரப்பின் பலவீனத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது போல உள்ளது, ஒரு வாரத்திற்கு மேலாகவும் தொடரும் போர் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உலக மனித குலத்திற்கு இன்னொரு சிரமமான போராக மாறியுள்ளது.1 point
-
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது! யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணியே காணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 போத்தல் நெய் போத்தல்களும் கலப்படம் நிறைந்தது என அவற்றையும் கைப்பற்றியுள்ளார். கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி கரைசல் மற்றும் கலப்பட நெய் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில் விற்பனையாளரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொது சுகாதார பரிசோதகர் , விற்பனையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். https://athavannews.com/2026/14674741 point
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
1 pointஇதுதான் உண்மை! மனித நேயம், அணுகுண்டு தயாரிப்பு குற்றச்சாட்டெல்லாம் சும்மா கூறப்பட்ட காரணங்கள். அந்த கறுப்பாடு பிடிபடாமல் இருந்திருந்தால்; அதுதான் ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும்.1 point
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே குண்டுகளை தூவுகின்றார்களோ எண்ட சந்தேகமும் இருக்கு. எண்டாலும் நோன்புக்காலம் களைகட்டுது.😂1 point
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மன்னிப்பு கேட்டு விட்டு… சில மணித்தியாலத்துக்கு முன்பு, உலகின் இரண்டாவது பெரிய பயணிகள் விமான நிலையமான… டுபாய் விமான நிலையத்தின் மீது, தாக்குதல் நடத்தி உள்ளார்கள் போலுள்ளது. அல்லது… இஸ்ரேல் கோத்து விட்டு, சந்திலை சிந்து பாடுதோ தெரியவில்லை. 🤣1 point
-
உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
உக்ரைன் போர் ஆரம்பித்த சில நாட்களிலேயே…. வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் மற்றும் ஆயுத தளபாடங்களில் பெரும் ஊழல் நடப்பதாக செய்திகள் வந்தது. அதில் செலென்ஸ்கி கூட சம்பந்தப் பட்டு இருந்ததாக கூறி இருந்தார்கள். கடந்த நான்கு வருடங்களில்… எவ்வளவு பில்லியன் பணம் திருடப் பட்டிருக்கும் என்று ஊகிப்பது கடினம் அல்ல. போரை… வைத்தே மகிந்த ராஜபக்ச குடும்பம் பணக்காரர் ஆகிய மாதிரி, செலென்ஸ்கியும் அதே… செயலைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்.1 point
-
உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
செலென்ஸ்கி Black Mail பண்ணி... 90 பில்லியன் ஐரோ வாங்குகின்ற பிளான் போலுள்ளது.1 point
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
1 pointசோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை : அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு [சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க! சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்] *************************************** ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை! ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ? இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும். ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும். பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?” ************************************ தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு? தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள். எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம். மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே? அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது. என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது. தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள். என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”. இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”. திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள். ********************************************* அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி? சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி. கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின. இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது. தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள். இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல. இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?” உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது. ‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே! ***************************************** கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா! தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது. (supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது? போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே…. அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!1 point
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
1 point
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இவர்கள் கொல்லப்படும்போது அவரவர் நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இவர்கள் கேட்க முடியாது. ஒரு நாட்டில் பலாத்காரமாக உள்நுழைந்து, அவர்களது வளங்களை சுரண்டி, மக்களையும் அரசியற்தலைவர்களையும் கொன்று, நிர்வாகத்தை, நாட்டை சிதைத்து, செய்வது பயங்கரவாதம், சொல்வது மனிதநேயப்போர். அவர்கள் நாட்டிற்குள் அடாத்தாக புகுந்து இவ்வளவு கோரத்தையும் செய்யும் ட்ரம்ப் தன் நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு தடை விதிக்கிறார், காரணம் பயம். அயத்துல்லா அலி கமெனி தங்கியிருந்த இடத்தில ஏவப்பட்ட குண்டு, தரையை தொட்டவுடன் வெடிக்காமல் பல அடி ஆழமுள்ள சீமெந்து மற்றும் பாறைகளை துளைத்துக்கொண்டு உள்ளே சென்ற பிறகுதான் வெடிக்குமாம். நிலத்துக்கடியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு பிறகு தரைப்பகுதி உள்வாங்கப்படுமாம், இதற்கு பங்கர் பஸ்ரர் என்று பெயராம். போராட்டகாலத்தில், நமது ஊர், அண்டைய பல ஊர்களில் இப்படியான பல குண்டுகள் விடியற்காலையில் மக்கள் தூக்கத்திலிருக்கும்போது வீசப்பட்டன. தரை, பல அடி ஆழத்திற்கு கிணறு போல் தோன்றி நீரும் வந்துவிடும், அதற்குள் வீடு முழுதாக அமிழும். இது பல கிராமங்களில் நடந்திருக்கு. தூக்கத்திலிருந்தவர்கள் அதற்குள்ளேயே மாண்டனர். அப்போ, அந்த குண்டுகளை இலங்கைக்கு அளித்தது இஸ்ரேல்! வைத்தியசாலை, சிறுவர் விடுதிகளிற்கு குண்டுகளை வீசிவிட்டு, அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்ததனால் தாக்கி அழித்தோம் என்று கூறினார்கள். அதே சம்பவம் காஸா, ஈரானில் இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனையை இஸ்ரேலே வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. இன்று இஸ்ரேலை இலங்கை கண்டிப்பது, மனித நேயம் பேசுவது வியப்பாக இருக்கிறது. தன்னை புனிதன் என்று அறிவிக்கிறதா?1 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointnepodStros87hul80129f94c 4i3a138616c9lfmta50c3mai741c56uf755 · கேள்வியும் பதிலும் தமிழரைப் பொறுத்தவரை மனித வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை என்ன? பெற்றோலும், டீசலும். யாழ். குடாநாட்டில் இப்போது அதிகம் காணக்கூடிய வாகனங்கள் எவை? பெற்றோல் பௌசர்கள் குடாநாட்டு மக்களின் பிரதான தொழில் என்ன? எரிபொருள் பதுக்குதல் அவரகளது பொழுதுபோக்கு....? பெற்றோல் செற் கியூவில் நிற்றல் இலங்கையில் அதிகம் எரிபொருள் பாவனையாளர்கள் யார்? குடாநாட்டு மக்கள்தான். யாழ்ப்பாணத்தின் வளம் என்ன? எரிபொருள் சேகரிப்பு இவ்வளவு யுத்தக் கலக்கத்திலும் நமது ஜனாதிபதி மனம் தளராமலிருப்பது எதனால்? குடாநாட்டிலுள்ள பெற்றோலை வைத்து இன்னும் பல ஆண்டுகள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கைதான்......!1 point
-
குட்டிக் கதைகள்.
1 pointpSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i · ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள். கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். அங்கிள்... அங்கிள்.... என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்.... அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் prescription கொண்டுவந்தாயா குழந்தை???? அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா???? எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள். "காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது. சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன????? குழந்தை மென்று விழுங்கி சொன்னது " மெரிக்கள்" கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார். நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு????? மெரிக்கள் அங்கிள்... அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது????? குழந்தை கண்ணீருடன் சொன்னது.... டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார். அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார். வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார். அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்..... டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற அதற்க்கு மருத்துவர் இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஆம், கிருமி தன்மை வழமையானது - ஒப்பீட்டளவில் அதிகாரம் கூட இருக்கும் போது எந்த சக்தியும் அப்படியான தன்மையை எடுக்கும் என்பதும் - சோழர் கூட அப்படியே பார்க்கப்பட்டனர் என்பதும். ஆனால், இரானில், விவிலிய பிரளையத்தை நம்பி - ஆக குறைந்தது cognitive dissonance ஆக. கவனமாக தான் சொல்லின் பிரயோகம் - முழு மேற்கையும், us, இஸ்ரேல் ஐ (இதுவரையில்) குறிக்கவில்லை. இதன் ஆபத்து தன்மை ஒருவருக்கும் புரியவில்லை. வெனிசுவேலாவில் நடந்தது நலன்கள் / வளங்களை / மேற்கு கோளத்தில் ஏகபோகம் போன்றவற்றுக்காக கைப்பற்றுவது (வழமையான கிருமி தன்மை) ஈரானில் விவிலிய பிரளய நம்பிக்கையை அதனுடன் சேர்த்து. இரான் சரி வந்தால், மத்திய கிழக்கை கட்டுடப்படுத்தும் சக்தி உலகை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையயையும், அனுபவமும் இருப்பதால், அதை தந்தது விவிலிய பிரளய நம்பிக்கையில் இரானை கைப்பற்றியது என்ற யதார்ததமே என்பது செய்தவர்களுக்கு மீளுறுதிப்படுத்தப்படும். அதே விவிலிய பிரளய நம்பிக்கையோடு மிகுதி உலகத்துக்கும் இப்படி செய்யலாம் , செய்வது சாத்தியமாகும் என்ற அதீத நம்பிக்கை பிறக்கும். அண்மையில் அமெரிக்கா ராஜாங்க செயலாளர் (Munich security conference) காலனித்துவதை மீண்டும் நாடவேண்டி இருப்பதாக சொல்லியது. அதில் அவர் பிரயோகித்த மொழி, கிட்டத்தட்ட ஹிட்லர் / நாசிகள் (கேபெல்ஸ்) பாவித்த மொழி (எமது நாகரிகம். கலாசாரம் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத உன்னதமானது .... we are the defenders of western civilisation ...) இதுக்கு, ஐரோப்பிய நாடுகள் (பிரதிநிதிகள்) செய்தது, கைதட்டி வரவேற்றது (standing ovation). ஈரான் (அழிந்தாலும்), சமாளித்தால் , உலகமே நன்மை அடையும் (மற்ற திரியில் இரான் அதிகாரி சொல்லி இருப்பது, இதை முன்பே நான் இங்கு சொல்லி இருக்கிறேன்). வேடிக்கை, இங்கே (சட்டம், ஒழுங்கில் இயங்கும்) இரானை பற்றி தெரியாமல், அல்லது தெரிந்து, குறிப்பிட்ட சிலரின் குறிப்பிட்ட நாட்டுக்கான வாஞ்சையில். கரிச்சு கொட்டப்படும் இரானின் ஆட்சி, கரிச்சு கொட்டுபவர்களின் சந்ததி நன்மைக்கு (மறைமுகமாக) போராடுகிறது. அவர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் (விவிலிய பிரளயக் கிருமிகள் இயக்கும்) அரசாங்கங்கள் , அவர்களின் சந்ததியை புதைக்க பாரிய சண்டை செய்கிறது ஈரானுடன் . ஈரானில் விவிலிய பிரளய நம்பிக்கை: 1) அமெரிக்கா இஸ்ரேல் தூதுவர் - அகன்ற இஸ்ரேல், முழு மத்திய கிழக்கும் இஸ்ரேல் விவிலியத்த்தின் அடிப்படையில் உரிமை உள்ளது. - tucker carlson உடனான பேட்டியை பார்க்கவும். 2) டிரம்ப் ஓ, ராஜாங்க செயலாளரோ எந்த கண்டிப்பும் இல்லை , இரண்டு கட்சிகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை 3) இரான் மீது யுத்தம் முழு பொய்யின் அடிப்படையில் ( அதன் காரணத்தை ... இரானின் முழு சமூகத்தை அழிப்பது ... என்ற விளக்கத்தை பல இடங்களில் சொல்ல்லிவிட்டேன்). அதுக்கு முன்னுதாரணம் இருக்கிறது, 4) ஓமான் வசதிப்படுத்தனர் / மத்தியஸ்தர், steve விட்கொப் , jarred ஐ நம்பாது (இதுக்கு வேறு முக்கிய நிகழ்வும் இருக்கிறது), தொலைக்காட்சியில் பகிரங்காக இணக்கம் எட்டப்பட்டு விட்டது என்று அறிவித்து, அதை ஒப்பந்த வடிவில் ஆக்குவதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கேட்டு இருந்தார். 5) steve witkoff அவரின் வாயாலேயே சொன்னது, இவ்வளவு இராணுவ பலத்தை காட்டி கட்டி எழுப்பியும், ஏன் இரான் காலில் விழவில்லை என்பது டிரம்ப் க்கு புதிராக இருப்பதாக. பேரம் என்றுபேச்சுவார்த்தை தொடங்கி இரான் காலில் விழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இரான் காலி விழுவதே நான் சொல்லிய சமூகத்தை அழித்து ... என்ற அதே விளைவு , இரானுவ பலத்தை பாவிக்காது பெறுவது. 6) ஆனால், அதை விட பெரியது, டிரம்ப் எந்த காரணமும் சொல்ல முடியாது இருப்பது. 7) அமெரிக்கா படை துறை தலைமை மத்தியில் விவிலிய பிரளய நம்பிக்கை, படைகளை உசுபேற்றுவதில், கட்டளை பிறப்பிப்பு சங்கிலியில் 8) இஸ்ரேல் சொல்வது அடுத்த இலக்கு, துருக்கி, பாகிஸ்தான், அதுவும் ஈரானை போன்றே என்றும். அதன் அர்த்தம் என்ன ? அமரிக்காவும் இஸ்ரேல் உடன் சேரும். 9) Lindsey Graham (இங்குள்ள குறிப்பிட்ட ஒருவர் அதை நீட்டி , அகட்டி விளக்கம் கொடுத்தாலும்) வெளிப்படையாக சொல்லி இருப்பது, புனித யுத்தம் 10) இதை நான் மட்டும் நம்பவில்லை https://www.thenation.com/article/politics/trump-iran-religious-war-crusades/1 point- அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
1 point- ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
இது என்ன வம்பாய் போச்சுது. அமெரிக்காவின் சொல்லை கேட்கிறதா, இல்லை… ஈரானின் சொல்லை கேட்கிறதா. எப்படியும் ஆரோ ஒருத்தன் கோவிக்கப் போகிறான் என்பது நிச்சயம். இலங்கையின் உள் விவகாரத்தில்… அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று…. விமல் வீரவன்சவையும், அஸ்கிரிய தேரரையும், காத்தான்குடி போராளிகளையும் திரட்டி ஒரு போராட்டம் பண்ண வேண்டியதுதான். 😂1 point- இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன். 👍🏽1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
குமாரசாமி, கோசான் சொன்னது சரிதான். சம்பிராதய முறைப்படியான திருமணம் சிறீலங்காவில் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு, எனது தந்தை இறந்தது 1962இல். அப்பொழுது பென்ஷனுக்கு விண்ணப்பித்த பொழுது, திருமணம் சம்பிராதய முறைப்படி நடந்தது என்றே குறிப்பிட்டார்கள். ஐயரின் ஒப்புதலும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. அப்பொழுது (50-60 ஆண்டுகளுக்கு முன்னார்) பிறப்புப் பதிவில் பெற்றோர்கள் திருமணமானவர்களா? பதிவுத் திருமணமா? சம்பிராதயத் திருமணமா? என்ற கேள்வி இருந்தது. இப்பொழுதும் விண்ணப்பப்படிவத்தில் அப்படியான கேள்வி இருக்கிறதா தெரியவில்லை. சம்பிராதயத் திருமணமானாலும் பதிவுத் திருமணத்தில் எப்பொழுதும் சிக்கலில்லை.1 point- இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இதன் பலாபலன் தானே இந்திய கப்பல் பற்றி எரிகிறது. முதுகில் குத்துவது எப்படி என்று இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அண்ணை வர வர நீங்களும் தமிழ் ஆய்வாளர்கள் போல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இந்தியா போ என்று சொன்னதாய் எந்த தகவலும் இல்லை. விசாகபட்டினத்தில் இருந்து கொச்சிக்கு மாறும் போதே அடி விழுந்ததாக சிலர் சொல்கிறனர். இப்போ இரெண்டாம் கப்பல் இலங்கையிடம் சரண் அடைந்தது போல் இந்த கப்பலும் இந்தியாவிடம் சரண் அடைந்திருந்தால், இந்தியா சர்வதேச சட்டத்துக்கு அமைய கப்பலையும், மாலுமிகளையும் intern பண்ணி இருக்கும். போர்காலத்தில் நடுநிலை நாடுகள் கப்பல்கள் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சட்டம் நன்றாக விபரிக்கிறது. இந்தியாவுக்கும் எண்ணை கப்பல் போகலாம் என ஈரான் கூறியுள்ளதாம்.1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஒரு விசயம் தெரியாட்டில் சும்மா இருக்க வேணும் அண்ணை. இவை மூட நம்பிக்கை திருமணம் அல்ல. Customary marriage இவற்றுக்கு ரிஜிஸ்தர் மரேஜுக்கு உரிய அதே அந்தஸ்து உள்ளது. ஆதாரம் வேணும் எண்டால் சொல்லவும். தரலாம். சீமான் செய்த அநீதியை கண்டபின்னும் இதை ஏற்காமல் இருக்க முடியுமா? பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா? இது நீதி விசாரணையில் விஜி அண்ணியிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அதே போல் ஏலவே நிச்சயமான பெண்ணுடன் ஏன் மாலை மாற்றி, கணவன்-மனைவி போல் வாழ்ந்தார் என உங்கள் அண்ணனிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதி விசாரணையைதான் அண்ணன் அடித்து நூத்து விட்டாரே.1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இதில் எது இழிவு? அவர்கள் செய்வதை , அதன் யதார்த்தத்தை கருத்தில் எடுத்து. சொல்கிறேன். ( மேட்ற்கு, யுஸ், இஸ்ரேல் விவிலியாக் கிருமிகளின் நோக்கம் அந்த சமூகத்தைஅழித்து, கோறையாகி. நொண்டியாக்கி. உள்நாட்டு கலவரம், குழப்பம், யுதவிளிம்பில் வைத்து. வளங்களை சூறையாடி , தமது கட்டுபட்டில், சரணடையும் நிதி அமைப்பு, எந்த சொந்த பாதுகாப்பும் அற்ற அம்மணமாநிலையை உருவாக்கி, பொம்மை கோறை நிர்வாகத்தை கொண்டுவர்வதும் , இஸ்ரேல் எப்போதும் தக்க கூடிய நிலையிலும், இரான் ஒருபோதுமே திருப்பி அடிக்க முடியாத நிலையிலும் ,வைத்த காட்டுவது தாம் செய்தது மனிதகுல நன்மைக்கும், தாம் International do-gooders, உள்ளிருந்து அரிக்கும் கிருமிகள். ) இதை இப்போது வெளிப்படையாகவே அமெரிக்கா சொல்கிறது - death, destruction ... குர்திஸ் கிளர்ச்சி ... டிரம்ப் 'பொம்மையை நான் தான் தெரிய வேண்டும, நியமிக்க வேண்டும்' இரான் அதன் எல்லைகள் மட்டும் நின்று அதை பாதுக்காக்கிறது - கிருமி வேலை, நோக்கம் அல்ல.1 point- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்தியா... எவனுக்கும் உண்மையாக இருந்தது இல்லை. அவன் எமக்கு செய்த, இப்போதும் செய்து கொண்டு இருக்கும் துரோகங்கள்.... எண்ணில் அடங்காதவை. வெட்கம் கெட்டவர்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இன் இறுதிப் போட்டி நாளை மறுதினம் ஞாயிறு (08 மார்ச்) நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத் நியூஸிலாந்து அணி எதிர் இந்திய அணி NZ எதிர் IND ஒருவரும் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. 14 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 09 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு வாய்க்குமா அல்லது எல்லோருக்கும் நியூஸிலாந்து அணி முட்டைகளைப் பரிமாறுமா? குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2026 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!1 point- குட்டிக் கதைகள்.
1 pointntreSpsoodit98c4ugg2i0tm350h38c90 48673m2130uih334ia01619igg · பாரிஸின் பரபரப்பான வீதிகளுக்கு மத்தியில், 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியின் இருண்ட ரகசியங்களையும், உலகை மாற்றிய சரித்திர நிகழ்வுகளையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு ரகசிய சந்துதான் Cour du Commerce-Saint-André. இந்த குறுகலான கல் பதிக்கப்பட்ட பாதையில் நடந்து செல்வது, ஒரு வரலாற்றுத் திரைப்படத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும். பிரெஞ்சுப் புரட்சி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது 'கில்லட்டின்' (Guillotine) எனப்படும் தலையைத் துண்டிக்கும் இயந்திரம் தான். அந்த கொடூரமான இயந்திரம் முதன்முதலில் உருவானது இந்தச் சந்தில் தான்! மரண தண்டனையை வலியின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டாக்டர் கில்லட்டின் என்பவர் ஒரு கருவியை வடிவமைக்கச் சொன்னார். இந்தச் சந்தில் எண் 9-ல் வசித்து வந்த 'டோபியாஸ் ஷ்மிட்' (Tobias Schmidt) என்ற ஜெர்மானிய பியானோ தயாரிப்பாளர் தான் முதல் கில்லட்டின் இயந்திரத்தை மரத்தால் உருவாக்கினார். மனிதர்கள் மீது பயன்படுத்துவதற்கு முன்பு, இந்த இயந்திரம் சரியா வேலை செய்கிறதா என்பதை அறிய, இதே சந்தில் வைத்துத் தான் ஆடுகள் மற்றும் கன்றுகளின் மீது முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது. அமைதியான இந்தச் சந்தில் இப்படி ஒரு ரத்த சரித்திரம் அரங்கேறியது பலருக்கும் ஆச்சரியம்! இந்தச் சந்து பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் ரகசியக் கூடாரமாகச் செயல்பட்டது. பிரெஞ்சு புரட்சியின் தீவிரவாதத் தலைவரான Jean-Paul Marat இங்குள்ள 8-ஆம் எண் வீட்டில் தான் வசித்து வந்தார். இங்கு வைத்துதான் அவர் தனது "L'Ami du Peuple" (மக்களின் நண்பன்) என்ற புகழ்பெற்ற செய்தித்தாளை அச்சிட்டார். இந்தச் செய்தித்தாள் தான் பிரெஞ்சு மக்களிடையே மன்னராட்சிக்கு எதிரான கோபத் தீயை மூட்டியது. இதே சந்தில் தான் புரட்சியாளர்கள் கூடி ரகசியத் திட்டங்களைத் தீட்டினார்கள். இந்தச் சந்தின் மற்றொரு மிகப் பெரிய பொக்கிஷம், 1686-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'லு புரோகோப்' (Le Procope). இதுவே பாரிஸின் செயல்படும் மிகப்பழமையான கஃபே (Coffeehouse) ஆகும். இது வெறும் உணவகம் அல்ல, உலக வரலாற்றை மாற்றிய பல மேதைகளின் விவாத மேடை! பிரான்சின் புகழ்பெற்ற தத்துவஞானிகளான வால்டேர் (Voltaire), ரூஸோ (Rousseau) போன்றோர் இங்குத் தான் மணிக்கணக்கில் அமர்ந்து விவாதிப்பார்கள் (வால்டேர் தினமும் 40 கப் கோப்பி குடிப்பார் என்று ஒரு கதை உண்டு!). அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) பிரான்சுக்கு வந்திருந்தபோது இங்கு அமர்ந்துதான் அமெரிக்க அரசியலமைப்பின் சில பகுதிகளை எழுதினார். இளம் இராணுவ அதிகாரியாக இருந்த நெப்போலியன் போனபார்ட், ஒருமுறை இங்கு சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால், தனது தொப்பியை (Bicorne hat) அடமானமாக வைத்துவிட்டுச் சென்றார். அந்தத் தொப்பி இன்றும் இந்த உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! இன்று நீங்கள் இந்த இடத்திற்குச் சென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட அதே கற்களின் (Cobblestones) மீது நடக்கலாம். பழமையான இரும்பு விளக்குகள், சிறிய புத்தகக் கடைகள், தேநீர் விடுதிகள் என இந்த இடம் 18-ஆம் நூற்றாண்டின் அழகை அப்படியே பாதுகாத்து வருகிறது. லெ புரோகோப் உணவகத்தில் இன்றும் நீங்கள் சென்று உணவருந்தலாம். வரலாறும், புரட்சியும், கலையும் ஒருங்கே கலந்த ஒரு அரிய இடம் இது......!1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
எல்லாம் எம்பெருமான் இஸ்ரேல் சித்தம். அது நடக்கோணும் எண்டு அவரவர் தலையிலை எழுதியிருந்தால்......அதுவும் நடக்கும். 😂 அரோகரா....வழி விடுங்கோ எண்டு சொல்லுறதுதான் இப்ப இருக்கிற ஒரே நல்ல வழி. மீறினால் விசா இல்லாமல் அமெரிக்காவில ராணுவமரியாதையோட கூட்டிக்கொண்டு போவினம் 😎1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
படித்த மாணவர்கள் லிபரல்கள் பெண்ணியவாதிகள் கம்யூனிஸ்டுகள் இந்த கொடுமையான முஸ்லிம் கொமேனி முல்லாக்களுடன் சேர்ந்து போராடியது மிகவும் தவறு 😟1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஆக்கிரமிப்பு இல்லையென்றால் இன்றைய அமெரிக்காவும் இல்லை,கனடாவும் இல்லை,அவுஸ்ரேலியாவும் இல்லை. ஆக்கிரமிப்புடன் தான் இந்த உலகு இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதனுடன் சேர்ந்து பயணித்தால் மட்டுமே உங்களுக்கோ எனக்கோ வெற்றி கிடைக்கும். நடு வீதியில் நின்று அவர்களை எதிர்த்தால் சாம்பல் கூட மிஞ்சாது. இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம். நீங்கள் எல்லோரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர் என்பதால் இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன்.உலகில் இருக்கும் மூட நம்பிக்கைகளை விட அப்பாவி மக்களை தினசரி கொன்றொழிக்கும் நாகரீக மனிதனின் போர் உயர்ந்ததா? இல்லையேல் மூட நம்பிக்கையுடன் தாமும் தம் வாழ்வும் என வாழும் பாமர மக்களின் வாழ்வு சிறந்ததா? 🙂1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும்.1 point- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் இங்கே இனம் மதம் சார்ந்து தூவும் விசம் கண்டிக்கத்தக்கது 😡1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
(இது பொதுவான பதிவு) தனிப்பட்ட அடிப்படையில் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நீங்கள் கவனிக்கவில்லை போலும். என்னுடைய எல்லா பதிவுகளிலும் ஒரு பக்கம் பார்ப்பது இல்லை. மற்ற பக்கத்தையும் பார்த்தே. மற்றது, உணர்ச்சிகள் அற்ற ஆய்வின் / தரவின் அடிப்படையிலேயே எனது பதிவுகள். அந்த தலைவரை பற்றி சொல்வதற்கு இங்கே எவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அது சரி, ஹாமெனி கிருமி என்றால், உங்களக்கு ஏதாவது தீங்கு செய்தாரா? ( மேற்கு சொல்லும் எள் என்பதற்கு எண்ணையாக ஹாமெனி மாறி இருந்தால், ஹாமெனியின் வழியாக அல்லா இரான் மக்களுக்கு தேனும், பாலும் கொடுத்து , காணாது என்று அல்லா அமிர்தம் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று மேட்ற்குபிரச்சாரம் செய்து இருப்பார்கள். (அனால், அதையும் கூட நான் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்)) எங்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்களு க்கு அவர் உயரானவர். உ.ம். இரானின் இறந்த ஹாமெனி நீங்கள் சொல்லும், மேற்கு பிரச்சாரம் சொல்லும் கிருமி என்றால், எப்படி குண்டு வீச்சுக்கு மத்தியிலும் 1000 கணக்கில், பல்வேறு நகரங்களில் கூடுகிறது அஞ்சலி, இறுதி மரியாதைக்காக? அனால், படத்தை பார்த்தால் அது 50, 000 கணக்கில். இதுவே தகுதி அவர் தலைவர் என்பதற்கு. உங்களின் பதிவு, மேற்கு பிரச்சாரத்தை பொதுவாக ஏற்றுக்கொள்ளும், அல்லது அதனை கேள்விக்கு உள்ளாக்காதது நீங்கள் சொல்வதின் படி, மேற்றகில் உள்ள, வேறு நாடுகளுக்கு'பிடிக்காத தலைவர்களை போட்டு தள்ளலாம் என்ற கருத்தும் உருவாக இடம் இருக்கிறது. விவிலிய பிரளய கிருமி என்பது கூட ஆய்வு / தரவின் அடிபடையில் அமைந்தது.1 point- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
உங்கடை கதையைப்பார்த்தால் ...அடியானையும் ...துரையையும் இசுரேலில் பார்க்கலாம் போலயிருக்கு1 point- ` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
1 pointநல்ல விடயம். திலீபன் வழிகாட்டி…. நல்லகண்ணு திசை காட்டி… அற்புதம்மாள், பேரறிவாளன் வாழும் உதாரணம். பிகு நான் 27 வருடம் முன்பே ஒப்புதல் எழுதி கொடுத்து விட்டேன். ஏனையோரும் செய்ய வேண்டும்.1 point- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
களமுனையில் நேரடி மோதலில் வீரச்சாவடைந்த அடுத்த சில நொடிகளிலேயே மகளிர் போராளிகளின் ஆடைகளைக் களைந்து அவ்விடத்திலேயே புணர்ந்த நிகழ்வுகளும் உண்டு. லெப். கேணல் தாட்சாயினியின் வித்துடலிற்கு களமுனையில் இவ்வாறு நடந்ததை ஏனையை மகளிர் போராளிகள் கண்ணுற்று செய்த சிங்களப் படைவீரனை சுட்டுக் கொன்றனர், அவ்விடத்தில். இது தொடர்பில் பின்னாளில் வெளிவந்த ஒரு விடுதலைப் பாடலில் ஒருவரியை புலிகள் சேர்த்திருந்தனர்: "பிறந்த குழந்தை பிறந்த நொடியில் இறக்கும் நிலமை இன்னும் இருக்கு! மரணம் மீதில்... வீழ்ந்த பின்னர்... புணரும் பகைவர் கொடுமை நடக்கு!"1 point- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
இந்த வயசில எங்கய்யா எழுச்சி வரப்போகுது.1 point - ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.