Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3479
    Points
    89518
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    1536
    Points
    20335
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    1482
    Points
    34145
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    1122
    Points
    20607
    Posts

Popular Content

Showing content with the highest reputation since 04/11/25 in all areas

  1. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
  2. இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!
  3. 1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.
  4. யாழின் 28வது அகவையை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய பாடல் song01.mp3.b69e6075a681396cde4d95c3bd303d57.mp3
  5. போன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…
  6. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
  7. எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)
  8. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  9. நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.
  10. 2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)
  11. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்: T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது! இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல. விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!
  12. சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு. ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை. கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன். எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது. மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன், இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன். காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன். ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை. அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன் செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன். நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார். இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா. வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார். அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன். பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன். 2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன் வருகிறது. என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன். அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம். “நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா? “நான் யாழில்தான் நிக்கிறன்” “அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்” “சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி” ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி என்றுவிட்டு உடனேயே அறைக்குச் சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன். போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன். போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார். இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார். அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது. ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். 3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார். வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன். இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது. அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது. இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன். நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர், சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார். கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என் விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார். நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன். நேரம் 12 என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர். நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள். நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார். நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன். நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார். என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.
  13. பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்
  14. உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.
  15. பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில் நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும். ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன். பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை. ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை. இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன. நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே. பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன. காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன். 'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............' 'அதைப் பிடித்து விடுகிறது தானே................' 'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............' மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது. பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.
  16. மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகாரம்தான்” என்றே சொல்லி போரிடும் நாடுகளைக் கேட்க ஆருமின்றியே அவலங்கள் தொடர்கின்றன மந்தாகினி
  17. அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்! ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀 அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர, ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான். அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை! சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன். முதலில் AI tools களைப் பார்ப்போம். பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools: Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம் Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன. பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools: Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம். படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilot படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம். பாடல்வரிகளை உருவாக்குதல்: நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்! கொடுத்த Prompt: Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை. Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா? அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன. மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல் Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு.. [Intro] [Seductive Flute with Deep Bass] [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 1] நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ... வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...! மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...! என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..! [Build Up] என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை! [Pre-Chorus] செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே... ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள... தழல் உடலோடு அவள் என்னை நோக்க... பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 2] மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க… மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…! மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….! வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…! [Verse 3] இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….! நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…! செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென… செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….! [Bridge] அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…! என் ஆண்மை சிறகு விரித்தது…! காம நெருப்பின் கலசமே…! என் தாகம் தீர்க்கும் நதியே…! உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Outro] தழல் உடலே...! ஆஹா...! பனித்துளியே...! ம்ம்ம்...! வைரம் தகிக்கும் கனலே...! என் உயிரே...! உன் விரிந்த விழிகளில்.. நான் வீழ்ந்தேனே...! [Fade out: Sensuous flute and echoing vocals] Styles: Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics பாடலை உருவாக்குதல்: Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன. Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும். சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க , காற்புள்ளி - இடைவெளி விட ! ஆச்சரியக்குறி - நிறுத்த … (ellipses) - நீட்டிப் பாட பாவித்திருந்தேன். இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம். Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும். பின்னர் Advanced Options இல்: Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 0 10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல. பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம். இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர், Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை உருவாக்கினேன். படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁 Prompt: Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன். கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊 ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள் Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள் Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc
  18. நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
  19. 3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகளின் ஆரம்ப காலங்களில் கவனிக்காமல் விடப்படுவது அல்லது உதாசீனப்படுத்தப்படுவது வழமையே. எங்கள் இனத்தில் இந்தப் போக்கு இன்னும் கொஞ்சம் அதிகமோ என்று இடையிடையே தோன்றுவதுண்டு. ஆனால் பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று சொன்னதற்காக கலீலியோ கலிலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அப்படியே இறந்து போனார் என்பது போன்ற நிகழ்வுகளால், உலகில் ஒருவர் இன்னொருவருக்கு குறைவில்லை போல என்று சமாதானம் அடைவதும் உண்டு. சில சமூகங்கள் கால நதியில் வேகமாக நீந்தி முன்னே போய்விட்டன. வேறு சில பழம் பெருமைகள் பேசிக் கொண்டே சிறிது பின்தங்கிவிட்டன. மலை வேம்பு என்னும் மரத்தை, அதை ஒரு விருட்சம் என்றே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே முதன் முதலில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னரேயே ஊர் வேப்ப மரங்களில் நுனி வரை ஏறி வேப்பம் பூ பிடுங்கும் வேலையில் சிறப்பு தேர்ச்சி அடைந்து இருந்தேன். எங்கள் ஊரில் வேப்பம் மரங்களின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நீலக் கடல் தொடுவானம் வரை எல்லையில்லாமல் தெரியும். இவையெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. வேப்பம் பூ பிடுங்கி, மரச் சொந்தக்காரருக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு, மிகுதியை சில வீடுகளுக்கு விற்போம். வடகம் செய்வதற்காக வாங்குவார்கள். கடலின் அழகை ரசிப்பதை விட, அதிக வேப்பம் பூ சேர்ப்பதிலேயே கவனம் இருந்தது. ஆனால் மலை வேம்பு பூக்கவில்லை, அதனால் அந்த விருட்சத்தின் மீது ஏறும் தேவை ஏற்படவில்லை. மலை வேம்பு ஊர் வேப்பம் மரத்தை விட கடுமையான நிறம் கொண்டதாகவும், உறுதியானதாகவும் தெரிந்தது. அந்தக் காலங்களில் திருகோணமலை சல்லியில் இருந்து ஒரு உதைபந்தாட்ட அணியினர் எங்களூருக்கு போட்டிகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் அணி மிகவும் திறமையானது, ஆனால் அவர்களின் விளையாட்டில் முரட்டுத்தனம் சிறிது அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதனாலும், மலை என்னும் பெயராலும், மலை வேம்பு திருகோணமலையிலேயே அதிகமாக இருக்கின்றது என்று நானாகவே முடிவெடுத்து வைத்திருந்தேன். பல வருடங்களின் பின்னர் திருகோணமலையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு ஒரு மலை வேம்பையும் நான் காணவில்லை. ஆனால் சிட்னியில் ஒரு மலை வேம்பைக் கண்டேன். பல வருடங்களின் முன்னே ஒரு நாள் வெறுமனே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு சிட்னியின் புறநகர்ப் பகுதியான அந்த சிற்றூரில் நடந்து கொண்டிருந்தேன். அந்த விருட்சம் அங்கே நின்று கொண்டிருந்தது. இது எனக்குத் தெரிந்த மரமே என்று அதன் அருகில் போனேன். அது அதுவே தான். அப்படியே பார்த்து கொண்டு அதனுடன் இருந்த ஒரு சிறிய ஒற்றை தள கட்டிடத்தினுள் போனேன், நூலகம் என்று எழுதியிருந்ததால். நூலகத்தின் நடுவே நூலகப் பணியாளர்களுக்கான இடம் இருந்தது. வலதுகைப் பக்கமாக பல வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடதுகைப் பக்கமாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இருந்தன. அதனுடன் நூலகத்துக்கு வருபவர்கள் இருந்து வாசிப்பதற்கு வசதியாக கதிரைகளும், மேசைகளும் சில நிரல்களில் அங்கே இருந்தன. மிகவும் வசதியான இருக்கைகள் கொண்ட கதிரைகள் மற்றும் அகண்ட மேசைகள். இவை எல்லாவற்றின் பின்னும், சுவர் ஓரமாக இந்திய மொழிகளில் புத்தகங்களும், சஞ்சிகைகளும் அடுக்கியிருந்தார்கள். தமிழ் என்று ஒரு பிரிவும் இருந்தது. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. எட்டோ அல்லது பத்துக் கோடி தமிழ் மக்களில் மொத்தமாகவே ஒரு ஆயிரம் பேர்கள் தான் இவற்றையெல்லாம் வாசிக்கின்றார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியாயின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த சிற்றூர் வாசிகசாலையில் இந்தப் புத்தகங்கள் எதற்காக. எங்களை நாங்களே குறைவாக மதிப்பிட்டிருக்கின்றோம் போல. மௌனமாக இருப்பவர்களின் குரல்கள் கணக்கில் சேருவதில்லை போல. ஆனால் அந்த நாவல்களும், கதைகளும் அங்கே வாசிக்கப்படுகின்றன என்பது திண்ணம். நான் அங்கே நிற்கும் நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஒரு சில மணி நேரமாவது அங்கே போவேன். சில நாட்களில் பகல் பொழுதின் பெரும் பகுதியை அங்கேயே செலவழித்திருக்கின்றேன். அந்தப் புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.சில புத்தகங்கள் இல்லாமல் போகின்றன, மீண்டும் தோன்றுகின்றன. சிலவற்றில் சில பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் வாசிக்கும் ஒரு தமிழ் சமுதாயம் அங்கே இருக்கின்றது. நெல்சன் குடாவிலிருந்து திரும்பி வந்த பின் அடுத்த நாள் காலையிலேயே வாசிகசாலைக்கு கிளம்பினேன். அது அங்கே இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். இரண்டு இரண்டு வீட்டுக் காணிகளை இணைத்து வரிசை வரிசையாக மாடிக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் அந்த ஊரில் வாசிகசாலையை அப்படியே விட்டு விடுவார்களா என்ற பயம் மனதில் இருந்தது. வாசலில் நின்ற மலை வேம்பு அங்கே இல்லை. அதற்குப் பதிலாக சவுக்கு மரம் ஒன்றை புதிதாக வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு கடும் மழையிலோ அல்லது காற்றிலோ அந்த விருட்சம் தளர்ந்து போயிருக்கலாம். கூரையின் மேல் அது விழ முன் அதை அப்புறப்படுத்தியிருப்பார்கள். நீ முந்தினால் நீ, நான் முந்தினால் நான் என்று காலம் போய்க் கொண்டிருக்கின்றது, மரமானாலும் மனிதர்களானாலும். மற்றபடி நூலகம் தோற்றத்தில் அப்படியே இருந்தது. அதே நடு, வலக்கை, இடக்கை பிரிவுகள். ஆனால் இடைக்கைப் பக்கம் இருக்கும் இருக்கைகள் எல்லாம் இந்திய மக்களால் நிரம்பி இருந்தது. சில ஆண்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். பலரிடம் மடிக்கணினி இருந்தது. அவர்கள் அந்தக் கணினிகளில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு இலவச இணைய வசதி கிடைக்கின்றது என்று பின்னர் அறிந்துகொண்டேன். தமிழ் பகுதி அதே இடத்தில் இருந்தது. ஆனால் அங்கே இருந்த நாவல்களும், கதைகளும் மாறியிருந்தன. தமிழின் ஆகச் சிறந்த நாவல் அல்லது நாவல்கள் எது என்றால் பலருக்கும் பல தெரிவுகள் இருக்கும். மிகவும் மதிக்கப்படும் சில விமர்சகர்களால் தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது ப. சிங்காரம் அவர்கள் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' என்னும் நாவல். இந்த நாவல் இன்று வரை தமிழில் ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது. அது அங்கே இருந்தது. புலம் பெயர்ந்தவகளுக்கும், இந்த நாவலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உண்டு. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட புலம்பெயர் நாவல் அல்லது கதை இதுவே. இந்த நாவலை 60ம் ஆண்டுகளில் எழுதிய சிங்காரம் அவர்கள், அதை 70ம் ஆண்டுகளிலேயே வெளியிட முடிந்தது. பத்து ஆண்டுகளாக பதிப்பகங்களாலும், நிறுவனங்களாலும் இவரது எழுத்து நிராகரிக்கப்பட்டது. 'ஒன்றுமே விளங்கவில்லை................' என்று தூக்கி எறிந்துவிட்டனர். சிங்காரம் அவர்கள் அப்படியே ஒதுங்கி தனியாகிப் போனார். அதன் பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லை. 90ம் ஆண்டுகளில் தனியே இறந்த பொழுது கூட எவருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைத்த ஒரு கதிரையில் அவரது நாவலுடன் அமர்ந்தேன். அட்டையில் அவரது படம். அப்படித்தான் நினைக்கின்றேன். இணையத்தில் கிடைத்த திருட்டுப் பதிப்பில் இந்த நாவலை முன்னர் வாசித்திருக்கின்றேன், ஆனால் அதில் அவரது படம் இருக்கவில்லை. முன் தலை முழுவதும் தலைமுடி இல்லை. காதுகளில் நீண்ட முடி வளர்ந்திருந்தது. அது அவருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மலை வேம்பும் ஊர் வேப்ப மரம் போலவே பூக்கும், காய்க்கும் என்று பின்னர் தேடி அறிந்துகொண்டேன். இனி அந்த விருட்சத்தை எங்கே தேட. (தொடரும்.................. )
  20. யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை. அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது. நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது. அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம். முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர். அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள். பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் - கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன். குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி. நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம். அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது. https://www.virakesari.lk/article/216581
  21. தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை ------------------------------------------------------- பிள்ளையார் மாம்பழம் பெற்றது போல இப்படி ஒரு தலைப்பு வைத்தே பிரபஞ்சம் முழுவதையும் இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். இங்கே ஆக மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன என்று சந்தேகமற தோன்ற ஆரம்பித்து சில காலம் ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகள் நடப்பதும், அவை முன்னரே தெரிந்த முடிவுகளை அடைவதும் ஏற்படுத்தும் சலிப்புகளினாலேயே மூன்று கடகத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய ஒரு மனநிலையை உண்டாகியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். சதிக் கோட்பாடுகள் போன்றவற்றில் அல்லது இதுவரை நடக்காத ஒன்று நடந்து விடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் காலம் கொஞ்சம் சுவாரசியமாக ஓடும் போல. வீட்டில் மூன்று பூனைக் குட்டிகள் நிற்கின்றன. நான்கு பூனைக் குட்டிகள் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதியிருக்கின்றேன். பின்னர் அவை மூன்றாகின. மூன்றும் வீட்டிலேயே தங்கிவிட்டன. சகோதரங்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குமா என்று அவை ஆச்சரியப்பட வைக்கின்றன. மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று துணை என்பது போல ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளுகின்றன. தெய்வங்கள் - மனிதர்கள் - மற்றயவை என்றும் மூன்று மட்டுமே இருந்தாலும், இவை பல சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருப்பதில்லை, மாறாக ஒன்றுக்கு இன்னொன்று துன்பமாகவே ஆகின்றன என்றும், இன்னும் ஒரு படி மேலே போய், ஒன்றே தனக்கு பெரும் துன்பமாக ஆகின்றது என்றும் தான் எனக்கு கிடைத்த வாழ்க்கை எனக்கு காட்டியிருக்கின்றது. 1. தெய்வத்தின் பாவம் --------------------------------- இங்கு வந்த பின் சில வருடங்களாக கோவில் எதற்கும் போகவில்லை. போகவில்லை என்றால் தெய்வத்துடன் கோபம் என்று அர்த்தம் இல்லை. இங்கு நாங்கள் இருந்த இடங்களில் கோவில் எதுவும் இருக்கவில்லை என்பதே ஒரேயொரு காரணம். அத்துவானக் காடு என்ற சொல்லைப் புரிய வைத்த சில வருடங்கள் அவை. அங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மனிதர்கள் இருக்கவில்லை. இருபது வருடங்கள் ஊரில் வாழ்ந்திருந்தேன். அங்கே எல்லோரும் எங்களின் மனிதர்களே, ஒருவர் கூட எவ்வகையிலும் வித்தியாசமானவர் கிடையாது. முழு இலங்கையிலுமே அதிக கோவில்கள் கொண்ட ஊர் என்றால் அது நான் வளர்ந்த ஊரே. கும்பகோணமா அல்லது நான் வளர்ந்த ஊரிலா கோவில்கள் அதிகம் என்ற சந்தேகம் காரணமாகவே முழு இலங்கையுடன் முழு இந்தியாவையும் சேர்த்து உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் கூட கோவிலுக்கு போகவில்லை. அங்கே அந்த இருபது வருடங்களில் ஏன் போகவில்லை என்றால், சரியாகத் தெரியவில்லை, 'ஏனடா போகவில்லை...............' என்று கேட்கின்றேன். பின்னர் வேலை எடுத்து வந்த இடத்தில் இருந்து ஒரு ஐம்பது மைல்கள் தொலைவில் ஒரு கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். மைல்கள் என்று அளவைப் பார்த்த உடனேயே இது எந்த நாடு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அடியும், அங்குலமும், இறாத்தலும், மைலும் என்று தான் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு உருண்டைக்குள் இரண்டு உலகங்கள் போல இந்த நாடும், மற்றைய உலக நாடுகளும் பிரிந்து இருக்கின்றன. நாங்கள் மூவரும், அப்பொழுது மகள் பிறந்திருக்கவில்லை, அந்தக் கோவிலுக்கு போய் வந்த பின்னர் அந்தக் கோவில் தமிழ் படங்களில் வர ஆரம்பித்தது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் அந்த கோவிலுக்கு வந்து போனார்கள். வேறு இந்திய மொழிப் படங்களிலும் பளிங்கு வெள்ளை நிறத்திலான அந்தக் கோவில் வந்தது. அந்தக் கோவிலின் உள்ளே கடும் கருமை நிறத்திலான வெங்கடேசப் பெருமாள் இருந்தார். அவருக்கு பரிவாரங்களாக வேறு தெய்வங்களும் உள்ளே அவருடனும், வெளியே பிரகாரத்திலும் இருந்தார்கள். சைவம், சாக்தம், வைஷ்ணவம், இன்னும் மூன்று அடங்கலாக மொத்தமாக இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன என்று சமயப் பரீட்சைக்காக தெரிந்து வைத்திருந்ததைத் தவிர வேறு எந்த தரிசனமும் எனக்கிருக்கவில்லை. இன்றும் அவை கிட்டவில்லை. ஆனால் இவை ஆறு தரிசனங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப துறைக்கு அவர்களின் வல்லுனர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். வெங்கடேசப் பெருமாளிடமும் கூட்டம் அதிகமாகியது. 'வெங்கடேசப் பெருமாள் அவர்களின் தெய்வம், எங்களின் தெய்வத்திற்கு எங்கே கோவில்.......' என்று அங்கே இருந்த பளிங்கு நிறக் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலை சிலர் கட்டினார்கள். வெங்கடேசப் பெருமாள் உயரத்திலும், சிவபெருமான் தரையிலும் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளிடம் போய் விட்டு, அந்தக் கோவிலின் வடக்கு பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி சிவபெருமானிடம் போய் விட்டு, அங்கிருந்து தெற்குப் பக்கமாக வெளியேறினால், வெங்கடேசப் பெருமாள் இருக்கும் தளத்திற்கு கீழே ஒரு மண்டபமும், கோவிலின் சிறிய உணவுச்சாலையும் இருந்தன. இங்கு மிக மலிவு விலையில் சில உணவுகள் கிடைக்கும். அக்ரஹாரத்து சமையல், கண் முன்னேயே சமைப்பார்கள். அங்கேயே ஆறுதலாக இருந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் வீடு போவோம். கோவிலுக்கு போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிவாசலை அடைந்த போது, அங்கே சிலர் கூட்டமாக நின்றார்கள். மெல்லிய குரல்களில் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலரின் கைகளில் பதாதைகள் இருந்தன. அச்சடித்த ஒரு காகிதத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் கோவிலுக்குள் போய்விட்டோம். ஆனாலும் காதில் விழுந்தவை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோவில் தலைவரையும், பொறுப்புக்குழுவையும் மாற்றும் போராட்டமே அது. தேர்தல்கள் இல்லாமல் தலைவரும், குழுவும் பல வருடங்களாக இருக்கின்றனர், கணக்கு வழக்கு எங்கே என்பது போன்ற பல கேள்விகளை பதாதைகளில் பல மொழிகளில் கேட்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து இங்கு பல காலம் முன்னரேயே வந்து பெரும் செல்வந்தர் ஆகிய ஒருவரே தலைவராக, அறங்காவலராக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். பெரும்பாலான வட மற்றும் தென் இந்தியர்களின் இடையே ஒரு ஈழத்தவர் அறங்காவலராக இருப்பது ஆச்சரியமான விடயம் என்றாலும், கீழ் தளத்தில் சமைக்கும் ஶ்ரீ வைஷ்ணவரின் நிலை என்னவாகும் என்றே என் மனம் சஞ்சலப்பட்டது. அவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் தமிழும் மிக நன்றாகவே அவருக்கு தெரிந்திருந்தது. பின்னரும் சில நாட்கள் அந்தக் கோவிலுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். வெளிவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சமையல் இருக்கும், சில நாட்களில் இருக்காது. அவர்கள் எல்லோர் முகங்களிலும் அமைதியின்மை நன்றாகவே தெரிந்தது. ஒரு நாள் ஶ்ரீ வைஷ்ணவர்கள் பூசைகள் எதுவும் செய்யாமல் கோவிலின் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் அங்கு போகாமல் நின்றுவிட்டோம். சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார். ஒரு விஷேச நாளில் என்னையும் கூட்டிச் சென்றார். வெளியில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தேவாலயம் போன்றே தெரிந்தது. ஒரு நீண்ட ஊசிக் கோபுரம் அதன் கூரை மேல் நின்று கொண்டிருந்தது. அந்த ஊசிக் கோபுரத்ததை அகற்றுவது மிகச் செலவு அதிகமான ஒரு விடயமாக இருந்திருக்கக்கூடும். உள்ளே வெள்ளைப் பளிங்குகளால் ஆன கடவுளின் சிலைகள் இருந்தன. ராமபிரானும், சீதாபிராட்டியும் நடுநாயகமாக இருந்தார்கள். கறுப்பு நிறத்திலான ஒரு பெரிய சிவலிங்கம் முன்னே இருந்தது. அங்கிருந்த ஐயர் நாங்கள் முன்னர் போய்க் கொண்டிருந்த கோவிலில் இருந்த ஒருவரே. அவர் ஒரு தமிழர் என்றும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அன்று தான் எனக்கு தெரிந்தது. இந்தக் கோவிலில் எந்த தடையும் இருக்கவில்லை. எவரும் எவ்வளவு அருகிலும் சென்று வரலாம் என்றே இருந்தது. மல்லிகையும், கனகாம்பரமும், இன்னும் பல பூச்செடிகளையும் வீட்டைச் சுற்றி வளர்த்து, மாலைகளை கட்டிக் கொண்டு மனைவி இந்தக் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தார். வீட்டுக்கு மிக அருகிலேயே கோவில் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சில வருடங்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பின்னர் இங்கேயும் மெதுமெதுவாக அதிகமானோர் வர ஆரம்பித்தனர். 'வேதா சர்க்கிள்' என்று ஒன்று அங்கே ஆரம்பிக்கப்பட்டது. வேதம் தெரிந்தவர்கள் என்றில்லை, எவரும் இணையலாம் என்று யாரோ சொன்னார்கள். இவர்களில் சிலரை நான் வாலிபால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் சந்திப்பதுண்டு. இவர்களின் சில நடவடிக்கைகள் உள்ளும், புறமும் வேறு வேறாக இருக்கின்ரது என்பதே என்னுடைய அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது. அப்படியான சில நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இவர்கள் என்ன தான் சொன்னாலும், வேத வட்டத்தின் பின்னணி என்னைப் போன்ற பலருக்கும் தெளிவாக இருந்தது. அடுத்த தடவை இந்தக் கோவிலுக்கு போகும் போது, சிவலிங்கத்தின் முன்னால் கோவில் மண்டபத்தின் குறுக்காக ஒரு தடித்த இரும்புச் சங்கிலி இருந்தது. அது இன்றும் அங்கே இருக்கின்றது. அந்த இரும்புச் சங்கிலியை தாண்டி நாங்கள் போகக் கூடாது என்ற விதி வந்திருந்தது. அங்கிருக்கும் தெய்வங்களை வட்டங்களுக்குள் நிற்பாட்டியிருந்தார்கள். சில தெய்வங்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் வீட்டில் கட்டப்பட்டனவே. அதன் மூலம் அறிந்த மனிதர்கள் அங்கே கிடையாது. வட்டங்களை ஊடறுத்து ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். இந்தக் கோவிலில் வட்டங்கள் வர ஆரம்பித்து இருந்த அதே காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு துணையாக இன்னும் சிலர் சுற்றியிருக்க, கோவில் ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கோவில் என்னுடைய வீட்டிலிருந்து இன்னொரு திசையில் ஒரு நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தது. அங்கு முன்னர் ஒரு முன்பள்ளிக் கூடமே இருந்தது. அதை அவர்கள் கோவிலாக மாற்றினார்கள். அங்கு முன்னுக்கு நின்ற சிலர் எனக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்களே. எவ்வகையிலும் இப்படியான ஒரு அக்கறையோ அல்லது ஒரு ஆன்மீகத் தேடலோ அவர்களிடம் இருப்பதாக எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் ஒரு கோவில் ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்களின் செயலும் எனக்குத் தோன்றியது. ஆனாலும், நம்மவர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருப்பது நான் அறிந்ததே. முன்பாடசாலையில் சில தெய்வ விக்கிரகங்களை வைத்திருந்தார்கள். அது ஒரு பிள்ளையார் கோவில் என்றே நினைக்கின்றேன். என் நினைவு தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் போயிருந்த முதல் நாள் அன்றே பூஜை மிகவும் நீண்டு கொண்டு போனது. அவ்வளவு நீண்ட பொழுது முழுவதும் மௌனமாக இருந்து எதையாவது நினைத்துப் பார்க்கும் அல்லது சிந்திக்கும் திறமை எனக்கில்லை. இலங்கை முறைப்படி பூசை செய்வதாக அங்கு பலர் சொல்லிக் கொண்டார்கள். மிகவும் அருமை என்றார்கள். யார் சொல்வதையும் நான் பொருட்படுத்தவில்லை, மனைவி என்ன சொல்லப் போகின்றார் என்றே நான் காத்துக் கொண்டிருந்தேன். 'சரியான நீட்டுப் பூசை.............' என்று நானே ஆரம்பித்தேன். 'இவ்வளவு தூரம் வர வேண்டும் என்றில்லை................. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே நாங்கள் போகலாம்.................' என்றார் மனைவி. கணவர்மார்களைப் பற்றி மனைவிமார்களுக்கு நன்றாகவே தெரியும் தானே. (தொடரும்....................)
  22. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  23. ஏ எல் சோதனை முடிச்சு போட்டு, ஒரு இரெண்டு மாசம்… வெறும் இரண்டே மாசம்… அடுத்து என்ன செய்யலாம் (செகண்ட் ஷை எடுப்பதில்லை, விரும்பாத யூனி டிகிரியும் படிப்பதில்லை என தெளிவாக முடிவு எடுத்த பின்) என நினைக்கும் காலப்பகுதியில்…. வழமையாக கிரிக்கெட் அடிக்கும் கிரவுண்டில்/தெருவில்…. கடற்கரை கல்லு கும்பத்தில்…. கதிரேசன் கோவில் முற்றத்தில் என எல்லா இடத்திலும்… வழமையாக வரும் தோஸ்துகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது… மச்சான் ஒஸ்ரேலியா ஸ்டூடன் விசா ஓகே டா…. பவளோ ஸ்கொல் கிடைச்சிட்டுடா… கனடாவுக்கு ஏஜென்சி நாளைக்கு ஏத்திறாண்டா… யூனிக்கி போக முன் கெல்ட் கோர்ஸ் போய் இங்கிலீஸ் படிக்கோணும்டா… வாப்பா பெட்டா ஷொப்ப என்னிய பார்க்க சென்னார்டா… தினுசு தினுசான காரணங்களுடன் ஒவ்வொருவராக போய் விட… கடைசியில் நானும் என நண்பன் கிசோவும் ஒரு கடற்கரை கல்லில்… மச்சி இனி இங்க வாறேல்ல…எதாவது செய்யோணும்டா… என முடிவெடுத்து கொண்டோம். சற்றேற குறைய 30 வருடங்கள் ஓடிவிட்டன… ஒரே மாற்றம்… அன்று நானும் கிசோவும்… இன்று…. நானும் வாதவூரனும்😂 பிகு அன்று எதிர்காலம் எம் கையில் இருந்தது, இன்று 8 நாடுகளின் கையில்😂 கதையின் சூழமைவுக்கு 👇
  24. பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
  25. குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?
  26. மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.
  27. போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉
  28. ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.
  29. Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று. பல நாடுகளுக்குப் பயணித்திருந்தும், போர்த்துக்கல் மட்டும் எப்போதும் சாத்தியப்படவில்லை. ஆனால் கடந்த வருடம், இந்த வருடக் கோடைகாலத்தில் போர்த்துக்கலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். அந்த முடிவே இந்தப் பயணத்திற்கு வழிவகுத்தது. பயண நகரமாக போர்ட்டோ (Porto)வைத் தேர்ந்தெடுத்தேன். பறப்பதற்கு நேரம் 2 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. போர்ட்டோவிற்கு வந்ததும், உயரமாக வளர்ந்த மரங்களும், பழமையான கட்டிடங்களும்தான் முதலில் கண்களில் பட்டன. எங்கள் ஊரிலுள்ள பூவரச மரங்களின் உயரத்துக்கு இங்கு சிதம்பரத்தை மரங்கள் வளர்ந்து, பூத்து அழகாக நின்றன. சில இடங்களில் பனைமரங்களும் திமிராக நிமிர்ந்து நின்றன. வீதிகளில் நடக்கும்போது, அந்த நகர அமைப்பு எனக்கு கொழும்பு நகரத்தை நினைவூட்டியது. போர்ட்டோவில் இருந்த நாட்களில், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, மீன்களை மட்டுமே சாப்பிடுவது எனத் தீர்மானித்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது Corvina என்ற மீன். இவ்வளவு காலமும் நான் சாப்பிட்ட மீன்களில் இல்லாத ஒரு தனிச் சுவை அந்த மீனில் இருந்தது. ஏன் இந்த மீன் யேர்மனியில் கிடைக்கவில்லை என அறிய இணையத்தில் தேடியபோது, “Meerrabe” அல்லது “Koenigs-Corvina” என்ற பெயர்கள் வந்தன. ஆனால் சந்தைகளில் கிடைக்கவில்லை. தமிழில் அதன் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இனிமேல் மீண்டும் இந்த மீனைச் சாப்பிட விரும்பினால், போர்த்துக்கலுக்குத்தான் போக வேண்டும் போலிருக்கிறது. Corvina மீனை “போர்த்துக்கல் மீன்” என்றொரு பெயரிலும் அழைப்பார்கள் என்று தெரிந்தது. பழமையான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களால் நிரம்பிய தெருக்கள்... என்றிருந்த இந் நகரத்தின் மத்தியில் Livraria Lello என்ற ஒரு பிரபலமான சிறிய புத்தகக் கடை இருந்தது. 1906ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இன்று “உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குள் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடையின் வெளியே நீண்ட வரிசை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுமதிக்கின்றனர். வரிசையில் நின்றபோது, காலநிலை பாதுகாப்பிற்காக சிவப்புக் குடைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முன்னால் ஒரு யேர்மனியக் குடும்பம், இரண்டு பிள்ளைகளுடன் வரிசையில் நின்றனர். அவர்கள் பேசுபவை காதில் விழுந்தன. “முன்பு கடைக்குள் செல்ல இரண்டு யூரோக்கள் மட்டும் கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஐந்து யூரோக்கள் ஆகி, கொரோனாவுக்குப் பிறகு பத்து யூரோக்கள் ஆகிவிட்டது. ஆனால் உள்ளே புத்தகம் வாங்கினால் அந்தப் பத்து யூரோக்கள் கழிக்கப்படும். இல்லையெனில், அவர்களுக்குப் பத்து யூரோக்கள், எங்களுக்குத் திரும்ப வெறும் கைகள்தான்!” புத்தகக் கடைக்குள் சென்றபோது, என்னை மிகவும் கவர்ந்தது, நடுப்பகுதியில் இடது, வலது என இரண்டாகப் பிரிந்து வளைந்து செல்லும் சிவப்பு மரப் படிக்கட்டுகள். மேல்தளத்திலுள்ள வண்ணக் கண்ணாடிகள், அவற்றில் வரும் இயற்கை ஒளி, கடையை ஒரு கலை அரங்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கடையை, ஹரி போட்டர் புத்தகத் தொடர் எழுத்தாளர் J.K. Rowling, போர்ட்டோவில் தங்கி இருந்த போது பார்வையிட்டதாகக் கூறுகிறார்கள். இந்தக் கடையின் சூழலும் படிக்கட்டுகளும் தான் ஹரி போட்டர் கதையில் இடம் பிடித்திருக்கும் ஹோக்வோர்ட்ஸ் பள்ளியின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணம்தான், ஹரி போட்டர் ரசிகர்களையும், உலகளாவிய பயணிகளையும் இங்கே இழுத்து வருகிறது. என் முன்னால் நின்ற யேர்மனியப் பிள்ளைகளும் ஹரி போட்டர் ரசிகர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள். கடைக்குள் பல மொழிகளில் நூல்கள் இருந்தன. தமிழ் புத்தகங்கள் ஏதாவது இருக்குமா என்று தேடினேன். நீண்ட புத்தக அலுமாரியின் ஒரு பகுதியில் “Asian Literature” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சீன, ஜப்பான், கொரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இருந்தன. தமிழ் நூல்கள் எதுவுமே இருக்கவில்லை. “திருக்குறளை என்றாலும் வைத்திருக்கலாமே” என்ற ஏமாற்றம் மனதில் தோன்றியது. Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது. உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றான இந்தக் கடை, உண்மையிலேயே ஒரு வாசகப் பூங்காதான்.
  30. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  31. மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?
  32. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்! யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26 ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
  33. பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது அதுவும் இல்லை அடுத்த போட்டியில் சந்திக்க ஆ(அ)வலுடன் காத்து இருப்பார்கள் 😇
  34. கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.
  35. விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  36. கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK USA NED NAM போட்டியாளர் செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் IND PAK நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா IND PAK நிலாமதி IND PAK நந்தன் IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் PAK IND நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா PAK IND நிலாமதி IND PAK நந்தன் IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NAM ஏராளன் USA வசீ USA புலவர் NAM சுவைப்பிரியன் NAM அல்வாயன் USA ஈழப்பிரியன் NED நியூ பலன்ஸ் USA வாத்தியார் NAM கறுப்பி USA வாதவூரான் USA வீரப் பையன்26 NAM சுவி NAM கிருபன் NED கோஷான் சே NED அஹஸ்தியன் USA கந்தப்பு NAM நியாயம் NAM எப்போதும் தமிழன் USA ரசோதரன் NAM பிரபா NAM நிலாமதி NAM நந்தன் OMA 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!
  37. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!
  38. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் டொக்ரலின் ஆட்டமிழக்காத விளாசலான 35 (09 பந்துகள்) ஓட்டங்களோடும் 5 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இதுவே அணியொன்றின் தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் ஆமிர் கலீம் அதிரடியாக 50 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஹம்மாட் மிர்ஸா 46 (37 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றபோதும் மற்றையோர் வேகமாகப் பின்தொடர நிலைத்து ஆடமுடியாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. முடிவு: அயர்லாந்து அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, அணித்தலைவர் றிச்சி பெரிங்டனின் அதிரடியான 49 (32 பந்துகள்), மைக்கல் ஜோன்ஸின் விரைவான 33 (20 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, டொம் பன்டனின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேக்கப் பெத்தெல்லின் நிதானமான 32 (28 பந்துகள்) ஓட்டங்களோடும் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, மார்க் சப்மனின் அதிரடியான 48 (26 பந்துகள்) ஓட்டங்கள், டரைல் மிற்செல்லின் விரைவான 32 (24 பந்துகள்) ஓட்டங்கள், பின் அலெனின் வேகமான 31 (17 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்கோ ஜன்சன் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்கம் முதலில் இருந்தே பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தொடர்ச்சியாக அடித்தவண்ணம் இருந்ததாலும், மற்றையோரும் தமது பங்களிப்பாக விரைவாக அடித்ததாலும், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் திணறிக்கொண்டிருந்தனர். இறுதியில் எய்டன் மார்க்கத்தின் மரண அடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 86 (44 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @alvayan முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். எனினும் @goshan_che அனைவரையும் தாங்கும் வலிமையுடன் தான் இருப்பதால் கீழே இறங்கிவிட்டார்,
  39. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மனுல்லா குர்பாஸினின் மின்னல்வேக 84 (42) ஓட்டங்களின் உதவியுடன் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடியும் கேஷவ் மஹராஜும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியான 45 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஜொஷ் இங்லிஸின் மின்னல்வேக 37 (17 பந்துகள்) ஓட்டங்கள், மற் றென்ஷோ 37 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணியில் ஜோர்ஜ் டொக்ரல் 41 (29 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாகப் பவிலியனுக்குத் திரும்பியதால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. நாதன் எலிஸும் அடம் ஸாம்பாவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். முடிவு: அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதாலும், ஷேர்ஃபான் ரதர்போர்ட்டின் புயல்வேக 76 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டரின் மின்னல்வேக 33 (17 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் வேகமாக அடித்தாட முயன்று ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டதாலும், பின்னணி வீரர்கள் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததாலும், சாம் கரனின் ஆட்டமிழக்காது எடுத்த 43 (30 பந்துகளில்) ஓட்டங்களுடன் 19 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்றைய முதல்வராக @வீரப் பையன்26 கதிரையில் வீற்றிருக்கின்றார்!
  40. உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல். அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது. அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது. ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள். ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம். மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்? “இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு. ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’
  41. மரப்பாவம் ----------------- 'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன். 'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................' 'ஆமாம்.............. அந்த மரம் முன்னர் இங்கிருக்கவில்லை.............. ஆனால் இப்பொழுது ஒரே இரவில் இப்படி வளர்ந்திருக்கின்றது.........' 'என் வீட்டிலா அல்லது உங்கள் வீட்டிலா..............' என்று உண்மையான சந்தேகத்துடன் கேட்டேன். 'என் வீட்டில் மரம் எதுவுமே இல்லை.............. உங்கள் வீட்டில் தான் ஏராளமான மரங்கள் நிற்கின்றன..........' என்றார் கொஞ்சம் கடுமையுடன். என்னுடைய ஆங்கிலத்தின் தொனி தான் அவரை சினமடைய வைத்திருக்க வேண்டும். நான் சாதாரணமாகவே தான் கேட்டேன், ஆனால் ஆங்கிலம் தான் அந்தக் கணத்தில் கையைவிட்டு விட்டது. இரவல் மொழியில் பணிவு இல்லாமல் போய் விட்டது என்று விளக்கம் கொடுக்கவா முடியும். நிறைய காய்களும் தன்னுடைய வீட்டுக்குள் விழுந்திருக்கின்றன என்றார் அவர். அதனால் அவர் வீடு ஒரே குப்பையாகக் கிடக்கின்றது என்றும் குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்தார். 'தேங்காய்களா.....................' என்றேன் ஆச்சரியத்துடன். இங்கு ஒரு டாலருக்கு விற்ற தேங்காய்கள் இப்பொழுது மூன்று டாலர்கள் ஆகிவிட்டன. ஆனால் என் வீட்டில் எந்த மரத்தில் தேங்காய்கள் காய்க்கின்றன என்று தெரியவில்லையே. 'இல்லை................... அவை மாதுளையின் காய்கள்......................' என்றார். மாதுளை இந்த வருடம் எந்த வருடமும் இல்லாதது போல காய்த்து நிற்கின்றது. நீலி என்ற ஒரு பெண் தெய்வம் பற்றி உங்களுக்கு தெரியுமா. நீலியை ஒரு கொடிய பேய் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மாதுளையும் ஒரு பெரும் நீலித் தெய்வம் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பிரமாண்டமாய் நிற்பது போல நிற்கின்றது. ஆகாயத்தின் ஒரு பகுதியையே மறைத்து அதன் கீழ் முழு நிழலை வைத்திருக்கின்றது. மாதுளை மரம் இப்படியும் வளருமா என்றே நம்ப முடியாமல் இருக்கின்றது. இது அமெரிக்காவில் நின்றாலும், இது அமெரிக்க மாதுளை இல்லை, ஆசிய மாதுளை என்றே ஒரு இடத்தில் விற்றார்கள். ஒவ்வொரு திசையிலும் நூற்றுக் கணக்கான காய்களுடன் ஆயிரம் கண்களுடைய நீலி போல நிற்கும் மாதுளையின் ஒரு பக்கம் பக்கத்து வீட்டுக்குள் சரிந்திருந்தது. 'மன்னிக்க வேண்டும்............... நான் உங்களின் வீட்டுக்குள் வரும் அந்த மாதுளையின் பகுதியை இந்த வாரத்துக்குள் வெட்டி விடுகின்றேன்.............' 'தென்னை மரம்.................?' என்று கேள்வியாக நின்றார். தென்னை மரத்தை தயவு செய்து கொஞ்சம் காட்ட முடியுமா என்றேன். இந்த தடவை வந்த ஆங்கிலத்தில் பணிவு நன்றாகவே இருந்தது. வாருங்கள் என்று அவர் வீட்டின் ஒரு பக்க கதவைத் திறந்து உள்ளே கூட்டிப் போனார். அங்கே பாருங்கள் உங்களின் தென்னை மரத்தை என்று மேலே விரலை உயர்த்திக் காட்டினார். 'இதுவா................. இது தென்னை மரம் இல்லை............. இது வாழை மரம்...............' பல வருடங்களின் முன்னர் ஒரு நாள் இங்கு ஒரு செய்தி நிறுவனம் வட கொரியா எங்கே இருக்கின்றது என்று ஒரு உலக வரைபடத்தில் சுட்டிக் காட்டும்படி பலரை நேரலையில் கேட்டிருந்தார்கள். பல அமெரிக்கர்கள் கனடாவையே வட கொரியா என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள். எனக்கு வாழை தென்னை ஆகியது அதை விட பெரிய செய்தி. 'இந்த வாழை மரங்கள் என் வளவுக்குள் தானே நிற்கின்றது. இதில் நான் எதை வெட்ட வேண்டும்.................' 'இந்தப் பக்கம் வரும் இலைகள் எல்லாவற்றையும் நீங்கள் வெட்ட வேண்டும். இவை ஏன் என் வீட்டின் கூரையின் மேல் ஆடிக் கொண்டு நிற்கின்றன.......... என்ன பெரிய இலைகள்...................' என்று சலித்துக் கொண்டே அவரின் கூரைக்கு மேல் போயிருந்த வாழை இலைகளை காட்டினார். அங்கே பார்த்தேன். சமீபத்தில் வீசிய பெருங்காற்றில் வாழை இலைகள் கிழிந்திருந்தன. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று அவை அயல் வீட்டுக்கார பெண்ணின் கோபம் அறியாமல் அடுத்த வீட்டுக் கூரையின் மேல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சுற்று முற்றும் பார்த்தேன். மற்ற வீடுகளில் மரங்கள் எல்லாம் அடக்க ஒடுக்கமாகவே நின்று கொண்டிருந்தன. என் வீட்டில் எல்லா மரங்களிலும் நீலித்தெய்வம் குடியேறியிருந்தார். ஒரு பிரச்சனையும் இல்லை, வாழை இலைகளை வெட்டி விடுகின்றேன், ஆனால் இரண்டு வாழைகள் குலைகள் போட்டிருப்பதால் உடனடியாக வெட்ட முடியாது என்றேன். எப்போது வெட்ட முடியும் என்று ஒரே பிடியாகவே நின்றார். குளிர்காலம் முடிந்து, வசந்த காலம் வரும் போது குலைகள் மீண்டும் முற்ற ஆரம்பிக்கும் என்று வழக்குக்கு ஒரு வாய்தா கேட்டேன். காற்றும் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றது, இவை முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்தால் என்னவாவது என்று ஒரு காப்புறுதி நிறுவனப் பணியாளர் போல கேட்டார். சில வருடங்களின் முன்னர் ஒரு வாழை முற்றிய குலையுடன் அவர்களின் வீட்டுக்குள் விழுந்ததைச் சொன்னேன். வாழை முறிந்து விழுந்தாலும் அதனால் சேதம் எதுவும் ஆகாது என்று உறுதிப்படுத்தவே அதைச் சொன்னேன். அதைக் கேட்டு திடுக்கிட்டவர் அப்பா சொல்லவில்லையே என்றார். 'உங்களின் அப்பா மிகவும் நல்ல ஒரு மனிதர்..................' 'அவர் சரியான அப்பாவி................... மனிதர்கள் அவரை ஏமாற்றி விடுகின்றார்கள்...............' எந்தப் பக்கம் போனாலும் கல்லால் எறிவது என்று அவர் முடிவெடுத்து விட்டார் என்று தெரிந்தது. அப்பாவை எங்கே சில நாட்களாக வெளியே காண்வில்லையே என்று கேட்டேன். அப்பா குளியலறையில் வழுக்கி முன் பக்கமாக விழுந்து மிகவும் பலமாக அடிபட்டு, படுத்த படுக்கையாகவே கிடக்கின்றார் என்றார். முன்னர் வாழை ஒன்று முறிந்து அவர்களின் வீட்டுக்குள் விழுந்த போது, அவரின் அப்பா வாழைக்குலையை தான் எடுக்கவா என்று மட்டுமே கேட்டார். சந்தோசத்துடன் சம்மதித்தவுடன், குலையை எடுத்து விட்டு மிகுதியை அவரே வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினார். இது நல்ல குணமா அல்லது அப்பாவித்தனமா என்று ஏஐயிடம் ஒரு தடவை நான் கேட்டுப் பார்க்கவேண்டும். அந்த வாரமே மாதுளையையும், அவர்களின் வீட்டுக்குள் எட்டிப் பார்த்த வேறு சில மரங்களையும் வெட்டினேன். அந்தப் பெண் மிகவும் சந்தோசப்பட்டார். அந்த வீட்டின் சொந்தக்காரியாக ஆவதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிந்தது. பின்னர் ஒரு நாள் நான் வெளியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் காரை ஒரு கார் இழுக்கும் வாகனத்தில் கொண்டு வந்து அவருடைய வீட்டின் முன்னே இறக்கினார்கள். அவருடைய காரின் மேற்கூரை முற்றிலும் உள்ளே போயிருந்தது. கார் இழுக்கும் வாகனத்துக்குள் இருந்து அந்தப் பெண்ணும் இறங்கினார். 'என்ன............... விபத்து ஆகிவிட்டதா..............உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே.................' என்று கேட்டேன். 'ஆமாம்............. எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் காரை விட்டு விட்டுப் போயிருந்தேன்.............. காரின் மேல் ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழுந்து விட்டது.................' 'கடவுளின் அருள்......... நீங்கள் அங்கே இல்லாதது.................' 'ஆமாம்....................' 'பெரிய சேதமாக இருக்கின்றதே................ என்ன மரம் உங்களின் கார் மேல் விழுந்தது................' ''
  42. இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது. காட்சி 1: (ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.) தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது. பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே……………… தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம். (தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.) தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே………….. தலைவர்: அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும். பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது……….. உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்………. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ………….. பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது. உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே……………… தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே…………… பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்………… தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று. பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது…………. உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்……….. (தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.) தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்……….. தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம். உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது……… தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது. உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா…… தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா…………. தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்……………… உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ. (தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.) தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர் உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது. (உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)
  43. இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah
  44. ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விடணும் கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி கழுத்தில வடம்போல சங்கிலிகள் கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன் கையை அகட்டியபடி ஒரு நடை கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன் காலில சேலில வாங்கின செருப்புகள் இடைக்கிடை என்ன வெக்கையப்பா இங்க மனுசர் வாழலாமோ என்றனும் இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும் இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும் கடை கடையா ஏறி இறங்கணும் காணாததை கண்டவன் போல கண்ணில் கண்டதையும் வாங்கி வைக்கணும் கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க கடையில மலியப்போட்ட சாமான்களை கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும் ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும் உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம் மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும் கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர் கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும் அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும் அப்படியே நாலு கடற்கரை போகணும் அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம் அப்படியே ஏலுமென்றால் சந்தையும் இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும் அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும் ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு உதுதான் எங்கட குலதெய்வம் என்று ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும் ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும் உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும் ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும் வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம் வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று எல்லாம் முடிய ஏக்கங்களோட மிளகாய் தூளும் அரிசி, வேற வகை மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும் மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும் வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂 உண்மை உரைகல்
  45. 1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.
  46. பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.
  47. இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண்டா என பஞ்ச டயலாக் அடிக்கிறார் நிரந்தர முதல்வர் கிருபன் ஜி. “எங்கிருந்தோ வந்தான்” ஈழப்பிரியன் அதிரடியாக மேலே வந்து துணை முதல்வராகியுள்ளார். இவர்களோடு பரிட்சையில் பாசாகியவர் என்ற தகுதியை பெறுகிறார் வாதவூரான். மிச்சம் எல்லாரும் மாடு, ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளாதாம். செம்பாவிற்கு ஒருவழியாக எவிக்சன் நோட்டீஸ் கொடுத்து, பெரிய வீட்டை தனதாக்கி கொண்டார் நுணா. போட்டியில் பங்கு பற்றிய, கலகலப்பாக திரியை கொண்டு போன அனைவருக்கும் நன்றிகள். டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டும் நான் யாழில் தனிமரம் அல்ல தோப்பு என அறியும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவையே வேறு. அது மிகவும் அலாதியானது. ஒரு மினி மனித வாழ்க்கை போன்றது. இதை ஒவ்வொரு வீரர்களினதும் test of character அதாவது, சுயத்தின் மீதான பரீட்ச்சை என்பார்கள். இந்த பரிட்சையில் தெ ஆ குறிப்பாக மார்க்கம் இன்று அதி விசேட சித்தி அடைந்துள்ளனர். இதுவரை இருந்த chokers என்ற பழியையும் தகர்துள்ளனர். பவுமா கிண்ணத்தை ஒருகையிலும், குழந்தையை மறு கையில் ஏந்தியபடி அணியின் lap of honour ஐ செய்ய, மனைவி, கேள்பிரெண்டுகள் சகிதம் அணி பின்னால் வர, கறுப்பு வெள்ளை தென்னாபிரிக்கர் ஒரே அணியாக நின்று ஆடியும் பாடியும் ஆரவரித்தத்து - நான் அங்கே இருந்தேன் என பேரப்பிள்ளைகளுக்கு சொல்லதக்க ஒரு மெய்சிலிர்க்கும் தருணம். 1992 இல் மெல்பேர்னில், மழை செய்த சதியின் பின், கெப்லர் வெசள்ஸ் அணி கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்ததை டிவியின் கண்டு மனம் வெதும்பி அழுத சிறுவன் கோஷானுக்கு, இது ஒரு சந்தோசமான முடிவுதான்❤️❤️❤️. கிருபன் 60🪑 ஈழப்பிரியன் 50 வாதவூரான் 40 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 பிரபா 30 செம்பாட்டான் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 புலவர் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 நுணாவிலான் 10 🏠
  48. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
  49. இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பிற்போக்குத் தனத்தின் இன்னொரு குணங்குறி தான் இந்த நல்லூர்க் கோவில் எல்லையை தனியார் காணிக்குள்ளும் நீட்டிக்கிற செயல். பரிஸ்ரா தன் வியாபார வெற்றி கருதி இவர்களுக்குப் பணிந்திருக்கிறது. இது அவர்களின் வியாபார முடிவு, அவர்கள் உரிமை. ஆனால், பரிஸ்ராவின் பணிந்து போதல் - compliance என்பது ஒரு தவறான முன்னுதாரணம்.எதிர்காலத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு இறைச்சிக் கடைக்கு அருகில் ஒரு கருங்கல்லைப் பொட்டுப் போட்டு, சரிகை கட்டி வைத்து விட்டு "இறைச்சிக் கடையை அகற்ற வேண்டும்" என்று வேலன் ரீம் பதாகை பிடிக்கக் கூடும். அந்தத் துணிவை பரிஸ்ராவின் வியாபார வெற்றி கருதிய முடிவு வேலன் ரீமுக்குக் கொடுத்திருக்கும். இவர்களுக்கும், அரச மரத்தைக் கண்டால் வேலி போட்டு "பௌத்த பூமி" என்று பிரகடனம் செய்யும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கும் இடையே எந்த வேறு பாடுகளும் இல்லை😂!
  50. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.