Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இதை நான் வாசிக்கவில்லை அல்லது தவற விட்டுள்ளேன் எனில் சுட்டவும். இலங்கையில் வீதி, கட்டிடங்கள் என்பன 2003 இல் தான் வந்தபோது இருந்ததை விட இப்போ அபிவிருத்தி அடைந்துள்ளன என்கிறார். இது சரியான கூற்றுத்தானே (அதற்காக கடன்பட்டனர் என்பது வேறு). ஆனால் இலங்கை பொலிஸ் திறம் என நற்சான்றிதழ் கொடுத்தாரா? அப்படியாயின் எமது கனடிய அமைப்புகள் இதை கையில் எடுக்கலாம். ஏனெனில், 1. இவ்வாறு சர்வதேச அரசியல் பேசுவது ஒரு பிராந்திய பொலிஸ் அதிகாரி தொழில் அல்ல, அவரின் தொழில் முறை கட்டுப்பாட்டை மீறுவதாய் ஆகலாம். கூடவே இவரின் கண்காணிப்பில் வரும் இலங்கை பூர்வீக கனடிய தமிழர்கள் பலர் இலங்கை பொலீசின் கொடுமைக்கு உள்ளானோர் என்ற வகையில், இவரின் பக்கசார்பின்மை பற்றிய நம்பிக்கையீனத்தை இவர் இப்படி சொல்வது ஏற்படுத்தலாம். 2. கூடவே இப்படி சொல்வது இலங்கையின் பொறுப்புகூறல் இன்மை பற்றிய கனடிய அரசின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிராக அமையும். ஒரு அரச உத்தியோகத்தாராய் இவர் இதை செய்வதும் கூடாது. ஆனால் அதற்கு இவர் இப்படி இலங்கை பொலிசை பற்றி சொல்லி இருக்க வேண்டும். இல்லாமல் - கட்டிடம், ரோடு போட்டுள்ளார்கள் என சொன்னதை வைத்து எதுவும் செய்யவியலாது. ஆனால் - சகல காவல்துறையும் ஏதோ ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கட்டுப்பட்டே இருக்கும். அந்தவகையில் parliamentary select committee for home affairs அல்லது இதை ஒத்த பிராந்திய அலகுக்கு, மக்கள் பிரதிநிதிகள் மூலம் இவரை அழைத்து, விஜயம் பற்றியும், கனேடிய அரசுக்கு அறிவித்தா போனார், வெளிவிவகார கோணத்தில் தலையிட்டாரா என்பதையும் கேள்விக்கு உள்ளாக்கலாம்.
  2. 1. நிஷான் துரையப்பா, 1973 இல் கொழும்பில் பிறந்து, கனடா சென்று, யூனிவர்சிட்டியில் இளமானியாகி, 1995 இல் பொலிஸ் கான்ஸ்டபிளாகி, பலவருட சேவையின் பின் 1.6 மில்லியன் மக்கள் வாழும் மிசுசுகா, பீல் பிராந்தியத்தின் பொலிஸ் தலைமை அதிகாரியாகியுள்ளார். 2. முன்னர் கனடாவில் தமிழ் குழுக்களை அடக்க, இலங்கை பொலிஸ் அதிகாரி, சுந்தரலிங்கம் என நினைக்கிறேன், உதவியை பெற்றது கனடா. இதுபோல் பொலிஸ் பிரிவுகள் தமக்கிடையே ஆட்களை, நடைமுறைகளை, தகவல்களை பரிமாறுவதும், விஜயங்கள் செய்வதும் வழமையே. இப்படி வரும் உயரதிகாரிகளுக்கு இப்படி மரியாதை கொடுப்பதும் வழமையே. 3. ஆனால் அல்பிரட் துரையப்பா - சரியாகவோ அல்லது பிழையாகவோ - தமிழின விடுதலை போரினை எதிர்க்கும் தமிழர்களின் முகமாக, தமிழர், சிங்களவரால் நோக்கப்படுகிறார். ஆகவே இந்த வகையில் இவரின் வருகை கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. 4. நிஷான் - இதுவரைக்கும் இந்த துறைசார் வருகையை மீறி எதுவும் சொல்லவில்லை. 5. பார்ப்போம். சொல்வதை, செய்வதை வைத்து இதில் நாம் முடிவு எடுக்கலாம். தனியே துறைசார் நடவடிக்கையுடன் மட்டுப்பட்டால் - அலட்டிகொள்ள வேண்டியதில்லை. இல்லை எனில் எதிர்வினையாற்றலாம்.
  3. சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.
  4. இனிய புத்தாண்டு வாழ்த்து💐
  5. நான் எப்பவும் அப்படித்தான்🤣. #சாப்பாட்டு இராமன்🤣 சாப்பாடும் பண்பாட்டின் ஒரு கூறுதானே?
  6. உண்மை…. ஆனால் ஆறுமுகம் தொண்டமானோடு அவரை வைக்காமல் விட்டதும் சரிதான்.
  7. எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை. பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம். இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை. சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள். வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது. அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர். டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை. உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.
  8. 🤣 ஒருமுறை @அக்னியஷ்த்ரா எழுதினார். இப்பவே புலம்பெயர்ந்த பலரின் பிள்ளைகள் கலப்பினத்திருமணம். இன்னும் இரெண்டு சந்ததி போக புலம்பெயர் தமிழ் சமூகம், ஒரு கலவை கலரில், கலவை பண்பாட்டுடன், செம்பாட்டு தலையுடன் நிக்கும் என்று. அது உண்மை. அதில் தப்பும் இல்லை. இதுதான் காலம் எனும் காட்டாறின் நியதி. தாங்கள் வெள்ளைகாரன் நாட்டில் அவன் பாணியில் வாழலாம். அங்க செண்டை அடிச்சாத்தான் தப்பு🤣. நாகரும், இயக்கரும், வேடரும், இப்போ மலையாளிகளாய் போய் விட்ட சேரரும், சோழரும், பாண்டியரும், இப்படி பலரும் கலந்த சாம்பாருதான் ஈழத்தமிழர். இனங்களுக்கு தனிதுவம் இருக்கிறது. ஆனால் எந்த இனமும் இந்த உலகில் தனியாக, சுயம்பாக, கலப்பில்லாமல் இருந்ததில்லை. இனகுழுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பண்பாட்டு கூறுகளை கடன் வாங்கி கொண்டே இருக்கும்.
  9. கேப்டன் …..விஜயகாந்த் பற்றி…..சாக முன்னம் நாற வாய்….செத்த பின்னர் வேற வாய்….🤣
  10. பிளீஸ் மீரா….நீங்களே ஐடியா போட்டு கொடுக்க வேண்டாம்🤣….நேற்று ஒராள் சாமம் 3 மணிக்கு கோல் எடுத்திருக்கு….
  11. இந்திய தீபகற்பத்தின் கிழக்குக்கரையில், வட-கிழக்கு பருவமழையை நம்பி பயிர் செய்யும் பல்வேறு பட்ட மக்கட் கூட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விளைச்சல் திருவிழா harvest festival வருவது அத்துணை ஆச்சரியமான விடயம் அல்லவே. அத்தோடு வானசாஸ்திரப்படியும் சூரியன் இடம்மாறும் நாள் இது. பல்வேறு ஐரோப்பிய குடிகள்கூட, summer solstice, winter solstice, harvest festival ஐ ஒன்றாக கொண்டாடுவதை காணலாம். மனித குலத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் வரலாறு மிக சிக்கலானது. காலத்தின் படி மாறககூடியது. தொடர்பு வெளி, உள் ஆளுமைகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர் பண்பாடு இப்போ இல்லை. அதை இப்போ கொண்டு வந்தால் யாழின் கலாச்சார காவலர்களுக்கு ஜன்னி கண்டு விடும்🤣. அதேபோல் இன்று எதை நாம் தமிழர் கலாச்சாரம் என கருதுகிறோமோ அது நாளை அப்படியே இருக்காது. எமது செண்டையை நாமே தொலைத்து விட்டு, இப்போ அது அந்நிய பண்பாடு என மாரடிக்க்கிறோம் - இதுவும் மேலே சொன்ன மாற்றத்தின் அங்கம்தான். இதை சொல்லியும் விளங்காவிடில் ஒரு விவேக் ஜோக்கை போட்டு கடந்து போகவேண்டியதே.
  12. இப்படி எல்லாம் முழுதும் கோணலாக நினைக்கப்படாது. பார்கேல்லையோ….13 மைனஸ்…மைனஸ்..மைனஸ் ….அட அதுதான் இமாயலப்பேய்க்காட்டல்…. மார்ச்மாதம் 2024 க்கு பின்….வழுக்கையாற்றில் பாலும் தேனும் ஓடப்போது….. ரிக்கெட் போட ரெடியாகுங்கோ…. Raw1 என்ற டிஸ்கவுட்ன் கோர்ட்டை பாவித்தால், கனடாவில் இருந்து புக் பண்ணும் ஆக்களுக்கு 100% விலை கழிவு🤣
  13. Lohri, Lal Loi, Maghe Sankranti, Magh Bihu, Tusu Festival சோனமுத்தா போச்சா!
  14. இல்லை என்றே நினைக்கிறேன். நான் முதலில் சுனாமி என்ற சொல்லை கேட்டது ஜனவரி 2003 இல் அன்பே சிவம் படத்தில். அதில் தன் தந்தை இராட்சத அலையில் அள்ளுண்டு போனார் என கூறும் கமல் பாத்திரம், ஜப்பானில் 50 அடிக்கெல்லாம் அலைவரும், சுனாமி என்பார்கள் என சொல்லுவார். அதன்பின் கூகிளை நோண்டி என்னெவென்று அறிந்தேன். அண்ணளவாக இரு வருடத்தில் எல்லார் வாயிலும் சுனாமி, சுனாமி என்பதே பேச்சாக இருந்தது. ஆனால் இதுதான் தமிழர் தேசத்தின் முதல் சுனாமி அல்ல. ஐரோப்பிய ஆட்சியில் கூட அடித்ததாம். ஆனால் நூற்றாண்டுக்களுக்கு பின் வருவதால், பொது பிரக்ஞையில் சுனாமி மீதான பயம், அக்கறை இருப்பதில்லை. 2010 வரை கூட கரையோத்தில் இருந்து குறித அளவு தூரத்தில் கட்டுமானானம் கட்ட யோசித்தார்கள். ஆனால் இப்போ? துறைமுக நகரம்….தெஹிவளை, கல்கிசையில் கடலுக்குள் உணவங்கள் கட்டாத குறை.
  15. பல வருடங்களுக்கு முன்பே இதை ஒட்டி றோ செய்த ஒரு வேலைத்திட்டத்தின் ஆதாரத்தை உங்களுக்கு சமர்பிக்கிறேன் 🤣. இனி எண்ட மதர் டங் மலையாளம்…. எண்ட ஸ்டேட் கேரளா…. எண்ட சீப் மினிஸ்டர் பின்னராயி விஜயன்…. எண்ட பீடி மலபார் பீடி…. எண்ட நாதம் செண்டை….. எண்ட நடனம் கதகளி……
  16. செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது. செண்டை வாசிக்கும் கலைஞர்கள் செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது. https://ta.m.wikipedia.org/wiki/செண்டை பிகு எடுத்து அடிடா பாட்டன் பறையை…. தூக்கி அடிடா முப்பாட்டன் செண்டையை…
  17. 1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்சித்தனர். 2. அரசியல் என வந்து விட்டால் அதன் பின் சதிகளை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் தனியே சதிகள் மட்டும் அல்ல. உண்மையில் நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அதே கூர்மையோடு sharpness அரசியலில் இருந்திருப்பின் - இன்றைக்கு அவர் முதல்வராக கூட வந்திருப்பார். கட்சி தொடங்கிய சில காலத்திலேயே அவரின் sharpness அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. இந்த வீழ்ச்சியின் ஆரம்பம்தான் பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடக்க தொடங்கியது. இதை ஜெயும், கருணாநிதியும் கீழ்தரமாக பாவித்து கொண்டார்கள். அதன் பின் சுதீசும், பிரேமலதாவும் அவரை ஒரு பொம்மை போல முன்னிறுத்தி எந்த ஊழல் அரசியலை கேப்டன் வெறுத்தாரோ அதையே செய்தார்கள். இப்ராஹிம் ராவுத்தரை கேப்டன் பிரிந்ததில் ஆரம்பித்து, குடிப்பழக்கத்தை நிறுத்துகிறோம் என சிகிச்சை கொடுத்து அவரை மரத்துப்போக செய்தது, அவர் சேர்த்த எம் எல் ஏக்களை, கட்சியை சிதற அடித்தது என எதிரிகளை விட கூட இருந்தோரின் சுயநலத்துக்கு கேப்டன் பலியாகியதுதான் அதிகம். கேப்டன் வாழ்நாள் கனவாக தொடங்கிய கட்சி, கடைசியில் வெளிபடையாக பண பேரம் படியாததால் கடைசி நேரத்தில் கூட்டணி மாறிய அவலத்தை கண்டது. அதேபோல் எதை விடவும் கட்சிக்கு சுதீஸ் ராஜ்யசபா போவதே முக்கியம் என சுருங்கியும் போனது. கேப்டன் ஒரு அற்புதமான ஆத்மா. இப்போ அவருக்கு கிடைக்கும் புகழாஞ்சலி எல்லாம் அவர் சுயநினைவில், தன் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர் நடந்து கொண்ட விதத்துக்கு கிடைக்கும் கெளரவம், அங்கீகாரம். ஆனால் கடந்த 20-15 வருடங்களாக அவர் விஜயகாந்தாகவே இருக்கவிலை என்பதே உண்மை.
  18. பயணிகள் இல்லாதமையால் வாரம் 3 நாளாக குறைந்தது. இப்போ என்ன நிலையோ தெரியாது. என்னதான் நல்ல எண்ணம் இருந்தாலும் வர்த்தக சாத்தியப்பாடு commercial viability இல்லாவிட்டால் இழுத்து மூடவேண்டியே வரும். கப்பல் போக்கு வரத்து எனில் பயணிகள்+அவர்களின் வாகனங்கள், இலகு, கனரக வாகனங்கள், சரக்கு கெண்டெயினர்கள் போன்றனவற்றை சென்னை-காங்கேசந்துறை/தலைமன்னார்-தூத்துகுடி வழியில் நடத்தினால் மட்டுமே இலாபம் வரும் என நினைக்கிறேன். அதற்கும் கூட, இந்திய நம்பர் பிளேட்டுடன் இலங்கையிலும், இலங்கை நம்பர் பிளேட்டுடன் இந்தியாவிலும் தற்காலிகமாக வாகனம் ஓட கூடியவர் சட்ட மாறுதலை செய்ய வேண்டும். இப்போதைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமே சாத்தியம்.
  19. நீங்கள் இப்படியான திரிகளில், இப்படி எழுதத்தொடங்கி 14 வருடம் ஆகிவிட்டது.
  20. என்ன லந்தா 🤣 நான் இப்ப ரணிலின் மார்ச் தீர்வுக்கு வெயிட்டிங். மார்ச்சில் தீர்வு, சித்திரையில் சரக்கு கப்பலில் வரும் சரக்கை அடித்து விட்டு… சந்தோசமாக மட்டையாகி விடும் உத்தேசம்🤣
  21. வாழ்த்துக்கள். இவர் யாழ் செஞ் ஜோன்ஸ் கல்லூரி அணி வீரரும் 90ஆம் ஆண்டு சென்ரல்- சென் ஜோன்ஸ் போட்டியில் சதம் அடித்தவருமான சுரேன்குமாரின் மகளாவார்.
  22. விஜயகாந்த்துக்கு முழு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் இராஜாஜி மண்டபத்தில் அஞ்சலி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.
  23. உணவிட்டவர் என பலர் நினைவு கூறும் மனிதர். ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு அதிகம் உதவியவர். ஆத்மா சாந்தி அடையட்டும்🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.