Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இவரை பொதுமக்கள்தான் பிடித்தார்கள், போலீசார் ஒன்றும் பிடிக்கவில்லை. இப்படி பொதுமக்கள் பிடித்து கொடுத்தவர்களிடம் வாங்கிக்கொண்டு மறுபக்கத்தால் ஓட விட்டவர்களும் உண்டு. இனி இவர் சிலரை காட்டிக்கொடுப்பர், அவர் வேறொரு பெயரை வெளியிடுவார், மொத்தத்தில் யூ ரியூபர்களின் அலட்டல் குறையும். மடக்கிப்பிடிக்கப்பட்டவரும், சர்ச்சைக்குரிய காணொளியில் இருப்பவரும் ஒரே ஆள்.
  2. ஹிஹி..... உண்மையில் தெரியவில்லையா? அல்லது குசும்பு பண்ணுகிறீர்களா? ஒருவேளை தனிப்பட்ட இடம் என்று நான் எழுதி விட்டதால் குழம்புகிறீர்கள் போலிருக்கிறது. அந்தரங்க பகுதியில்!
  3. ம், கிழக்கில் இருந்து ஒரு பெண் இவரிடம் உதவிகேட்டு ஒரு மேலதிக தேவையுடைய பிள்ளையுடன் வந்திருந்தார். அவரை இவர் சி. ஐ. டி. மாதிரி விசாரணை செய்கிறார். அவர் உண்மை சொன்னாரா பொய் சொன்னாரா என்று ஆராய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கக்கூடியதாக இருந்தது. அதனையும் பலர் பாராட்டியிருந்தனர். இவரே ஒரு ஏமாத்து, அதில விசாரிக்கிறாராம். ஏமாற்றுகிறவனுக்கு தான் தெரியும் அதன் நுணுக்கங்கள். தான் ஏமாற்றுகிறாராம் மற்றவர்கள் ஏமாற்றக்கூடாதாம், கற்றுக்கொடுப்பவரே இவர்தான். இன்னும் விட்டிருந்தால் அரசியல் ரவுடியாக வளர்ந்திருப்பார். எத்தனைபேரை அவமானப்படுத்தியிருப்பார், தலைகுனிய வைத்திருப்பார், பகட்டாக சுற்றியிருப்பார், செலவழித்திருப்பார், புலம்பெயர்ந்தோரை இழிச்ச வாய்களாக நினைத்திருக்கிறார். ஆனால் அவர்களின் காசில் இவருக்கு எகத்தாளம். எதை பாவித்து அதை செய்தாரோ, அதனாலேயே தாக்கப்படுகிறார். வேஷம் கலைந்தது.
  4. பொலிசார் கடமை செய்வதில்லை, தம் தொழிலை விஸ்தரிக்கிறார்கள். ஒவ்வொரு போலீசையும் சோதனையிட்டால் புரியும். விநியோகம் அல்லது யாரையாவது குற்றவாளியாக்குவதற்கு பயன்படுத்துகிறார்கள் தங்கள் சட்டைப்பையுள் இருப்பதை. போலீசாரே இதன் சூத்திரதாரிகள், அதிலும் தம்மை கேள்வி கேட்க்கும், தமக்கு எதிராக செயற்படும், தமக்கு வேண்டியவர்களுக்கு ஆகாதவர்களை பழிவாங்கவும், போலீசார் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் புலிகளோடு தொடர்பு, ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று குற்றம் சுமத்தி பழிவாங்கினர். இப்போ, போதைப்பொருள். உண்மையிலேயே போதைப்பொருள் விற்பனையாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் போலீசாரே. இவர்களாலேயே வடக்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது போதைப்பொருள், வாள்வெட்டு. தங்களுடைய விநியோகஸ்தர் பிடிபட்டால்; மனநோயாளி, மதுவுக்கு, போதைக்கு அடிமையானவர் என்று காரணாம் வேறு சொல்வார்கள். போலீசாரே முதல் கிரிமினல் குற்றவாளிகள். அண்மையில் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் அதற்கு சான்று!
  5. நாடு முழுக்க பட்டி தொட்டி எல்லாம் இவரைப்பற்றி பேசுது, இவருக்கு இது தெரியாதது வினோதமே. வழக்கம்போல் முதலாளி உத்தியோகத்துக்கு போய் மாட்டுப்பட்டிட்டார். யார் யார் எவ்வளவு அனுப்பினார்கள், அதில் இவர் எவ்வளவு கையாடினார், எல்லாம் கக்குவார். என்னமாதிரி சுமுத்தா போன தொழில் இப்படியாகிச்சே.
  6. அது ரவுடிக்கூட்டம் இது நாலும் படிச்ச கூட்டம். ஒன்றை மறந்து விட்டீர்களோ, கேள்விப்படவில்லையோ? ஒருதடவை பிக்கு பாராளுமன்ற உறுப்பினரின், தனிப்பட்ட இடத்தில கூட கை வைத்தார்களாம்?
  7. இவருக்கு காசு அனுப்பினவையளையும் விசாரிப்பினமோ? கண்டிப்பாக அவர்கள் யாரென்று கிருஷ்ணா போலீசாரிடம் தெரிவிப்பார். அவைக்கும் கஸ்ரகாலந்தான்!
  8. வடக்கில் இருப்பது பயங்கரவாதமென எல்லோரும் சேர்ந்து ஒரு இனத்தை அழித்து வெற்றி விழா கொண்டாடினீர்கள், இப்போ அதன் விளைவை அனுபவிக்கிறீர்கள். மனம் வருந்தி, திருந்தி, மன்னிப்புக்கேட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும் உத்தரவாதமும் அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு, சம உரிமை வழங்காதவரை நல்லிணக்கமோ, சமாதானமோ, அமைதியோ நாட்டில் வர வாய்ப்பில்லை.
  9. யாரோ எடுத்தபடியாற்தான் நாமும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." இவர் தன் முதுகுச்சட்டையை கவனிக்க வாய்ப்பில்லை, களட்டிப்பார்க்கும் வரை.
  10. சத்தியமாய் பெருமாள்! இப்போ யாருக்கும் ஆதரவா கதைக்க பயமா கிடக்கு. இன்றைக்கு நமக்காக கதைக்கிறார் என்று ஆதரித்தா, அடுத்த நாள் எதிரா கதைக்கிறார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. எனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆசை, உண்மையாக, பணம், புகழ், பதவிக்கு எடுபடாத, நமக்காக கதைக்கக் கூடிய, நல்ல சட்ட நிபுணர் நம்மிடம் இருந்து தோன்ற மாட்டாரா என்பதுதான். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரையாம்." என்கிற மாதிரி. ஒரு அரைகுறை சட்ட மேதை, தானும் சாதிக்கிறார் இல்லை, யாரையும் விடுகிறாருமில்லை. எங்கே தன் போலித்திறமை வெளிக்கொணர்ந்து விடுவார்களோ எனபயப்படுகிறார். தேவையில்லாமல் யார் யாரையோ தனியாக சந்தித்து விட்டு பந்தா காட்டுகிறார். சகிக்க முடியவில்லை.
  11. அனுரா வீட்டை கண்டுபிடித்துப்போய், தேநீர் அருந்தி விட்டு புகழ்ந்த நபராக இருக்குமோ? மண்டை கழுவப்பட்டதுகள்.
  12. தென்னக்கோன், இந்தபதவிக்கு தகுதியற்றவர், இவரை நியமிக்க வேண்டாமென பல எதிர்ப்புக்குரல்கள் எழும்பின. ஆனால் அவை எவற்றையும் காதில் வாங்காமல் இவரை இந்தப் பதவிக்கு நியமித்தவர் மாண்புமிகு ரணில் எனும் தந்திரி. கோத்தபாய நாட்டுக்கு திரும்பி வந்தபோது தலைவராக இருந்த நீங்கள் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்ட போது, அவரில் எந்த தப்பும் காணவில்லை என்று இந்த நபர் குறிப்பிட்டார். போர்குற்றவாளியான சல்வேந்திர சில்வாவுக்கு ஏன் பதவி வழங்கினீர்கள் என்று கேட்டபோது, விசாரணை செய்ததில் அவர் குற்றவாளியல்ல என்று கூறினார். அப்போ; தமிழருக்கெதிரான போரில் கொலைகளில், கொள்ளைகளில் இவருக்கும் பங்குண்டு. ஓடி ஒளியும் குற்றவாளிகளில் குற்றமில்லை என நற்சான்று அளித்து பதவி வழங்கியிருக்கிறார் என்றால், அவர்களின் தலைவர் யார்? அது அமெரிக்கா குற்றம் சாட்டியது, புலம்பெயர்ந்தோர் குற்றம்சாட்டியது என்று அலட்சியம் செய்தவர், நாட்டு, விசேடமாக சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் குற்றம் சாட்டிய போதும் விடாப்பிடியாக இவரை ஏன் ரணில் நியமித்தார்? அப்போ, தென்னக்கோன் செய்த குற்றங்களில் ரணிலுக்கு பங்குண்டு அல்லது ரணிலுக்காகவே இந்த குற்றங்களை இழைத்தாரா தென்னக்கோன்? ஊழல்வாதிகள் ஊழலை ஒழிக்க முடியுமா? குற்றவாளிகள் குற்றத்தை ஒழிக்க முடியுமா, தண்டிக்க முடியுமா? முதலில் அவர்களின் தலைவரை கைது செய்து தண்டியுங்கள், அங்கே சோதனைகளை ஆரம்பியுங்கள்.
  13. வைத்தியர் என்றால் கணக்குத்தெரியக்கூடாது என்றில்லைதானே. அவரும் பல வகுப்புகளில், பல பாடங்களை கற்றுத்தேறித்தானே வைத்தியரானார். எமது முன்னாள், இந்நாள் தலைவர்களுக்கு கணக்குத்தெரிந்திருக்கவில்லை என்பது இவர் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தெரிந்திருந்தால்; ஏற்கெனவே ஒவ்வொரு வரவு செலவுத்திட்ட வாசிப்பு நேரம் இந்தக்கேள்விகள் எழுந்திருக்குமே
  14. ஞானசார தேரரின் நிலையை பாத்தீங்களா? அதனால மற்றைய மொட்டையள் அடக்கிக்கொண்டு இருக்குதுகள். ஒன்று புதுசா கிளம்புது, நாளடைவில் அடங்கும். ஞானசார தேரர் மற்றைய அரசியல் தலைவர்கள் போல் இவரிடமும் போனவர், இனவாதத்திற்கு இடமில்லை என்றதனால், தான் யாரோடு இருந்து, யாருக்காக ஆட்டம் போட்டாரோ, அவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்.
  15. ஆமா.... ரணில் சொல்வதை வாய்மூடி கேட்டுக்கொண்டிருப்பார்கள் என நினைத்திருப்பாரோ இவர்? அதைத்தான் பலமுறை கேட்டாயிற்றே. இனியென்ன புதுசா சொல்லப்போறார்? அலிசப்ரிக்கு கடுப்பை ரணில் மீது காட்டமுடியாது, உண்மையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் யுத்தக்குற்றம் நடைபெறவேயில்லை என்று சாதித்தவர்கள் வாயை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி இவரின் பதிலுக்கான விளக்கத்தை ஒவ்வொருவரும் கொடுத்தேயாக வேண்டும். அப்போ தெரியும் ரணிலின் முட்டாள்தனம். நாட்டில் பிரச்சனை இருக்கிறது, யார் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை, என ஒப்புக்கொள்கிறார். அப்போ, நான் பதவியில் இருக்கவில்லை என ஒப்புக்கொள்கிறார். ஆனா ஆறு தடவை நாட்டின் தலைமைப்பதவியில் இருந்திருக்கிறார், எதிர்க்கட்சித்தலைவராக இருந்திருக்கிறார், ஏன் இந்த முரண்பாட்டை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை, குரல் எழுப்பவில்லை? என கேட்டிருந்தால் இந்த ராஜதந்திரி என்ன பதில் சொல்லியிருப்பார்? பார்வையாளராக வந்தவர்களுக்கு ஏன் இலங்கை மீது பகையுணர்வு வரவேண்டும்? பாதிக்கப்பட்டவர்களுக்கே நிஞாயம் வேண்டும் மற்றவர்களுக்கல்ல. அங்கு கேள்வி கேட்டவர்கள் இலங்கை அரசின் பயங்கரவாதத்தால் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள், அவர்களுக்கு கேள்வி கேட்க்கும் அதிகாரம் இருக்கு. அதனாலேயே அவர் பதில் சொல்ல மறுத்து அமைதி காத்தார். அமைதி என்பது ராஜதந்திரமல்ல, பதில் சொல்லி மாட்டுப்பட விரும்பவில்லை. அவர் விரும்புகிறாரோ இல்லையோ உண்மை வெளிவரத்தான் போகிறது, ரணிலும் பதில் சொல்லியேயாகவேண்டும்.
  16. இலங்கையில் அமைதி, சமாதானம் நிலவினால்; அது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அஞ்சுகிறார்கள். அதைவிட அனுர, சீனாவுடன் நெருங்குகிறார் என்பது வேறு பயம். அனுரவுக்கும் இது தெரியாததல்ல. தமிழரின் பிரச்சனையை தீர்த்துவிட்டால், நம் நாடு சமாதானமாக முன்னேறும். இந்தசகுனிக்கு வேறு வேலையில்லை இங்கு.
  17. இத்தனை பேர் இருந்தும், எச்சரிக்கை கொடுத்தும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை தடுக்க முடியவில்லை, குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. இவர்கள் இருந்தென்ன இல்லாமல் இருந்தாலென்ன? ஏதோ இந்த இராணுவந்தான் புலிகளை அழித்தது மாதிரி இன்னும் சிலர் கதை சொல்லிக்கொண்டு.
  18. மஹிந்த குடும்பத்தை கைது செய்ய வெளிக்கிட்டால், இந்த பொலிசுகள், இராணுவத்தினர் ஏதாவது கலகம் செய்து நாட்டில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி அனுராவை கைது செய்யலாம், கொலையும் செய்யலாம். மஹிந்தவோ அல்லது அவர் சார்ந்த கட்சிக்காரரே செவ்வந்தி, இப்படியான குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சந்தர்ப்பத்தை பார்த்திருக்கிறார்களோ யாரறிவார்? ஏதோ ஒரு அசம்பாவிதம் நிறைவேற காத்திருப்பதுபோல் தெரிகிறது. தமிழரை பருவத்திற்கு பருவம் அறுவடை செய்ததெல்லாம் இப்போ ஒரேயடியாக அவர்களுக்கெதிராகவே திரும்பலாம். போலீஸ் மா அதிபரும் அனுராவுக்கு எதிராக செயற்படுவதுபோல் தெரிகிறது. ஊழலுக்குள் நீந்தின அரசியல் வாதிகள், காவற்துறையினர், அரச உத்தியோகஸ்தர்களை அவ்வளவு இலகுவில் கட்டுப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது. தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை, ஏற்க தயாராகவுள்ளேன் என்று நாமல் சொன்னதன் பின்னணி என்ன? ஏன் அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை? சுமந்திரன் பாராளுமன்றம் போவேன் என்றும், அதற்காக கொடுத்த காரணம் போலுள்ளது. பல சந்தேகமான சமிக்கைகள்.
  19. இவர் என்ன சொல்ல வருகிறார்? நாள்முழுவதும் தனது நேர்காணலை ஒளி பரப்பி தன்னை பாராட்ட வேண்டுமென்கிறாரா? நாட்டிலே அதுதான் நடக்கிறது. ம், எழுபத்தாறு ஆண்டுகாலம் புரையோடிப்போன, எல்லா வீழ்ச்சிக்கும் காரணமான இனப்பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியவில்லையே, அது ஏன்? ஒருவர் பயங்கரவாதத்தை முறியடித்தேன் என பெருமை பேசுகிறார், சொந்த குடிமக்களை அழித்து விட்டு. இவர் வீழ்ந்துபோன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினேன் என்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆணிவேரான உண்மையான பிரச்சனையை இனங்காணவோ தீர்க்கவோ முடியவில்லை, விரும்பவில்லை. அதுவரை உங்கள் பெருமைகள் எல்லாம் தாற்காலிகமானவையே, நாட்டை கட்டியெழுப்புவதில் தோற்றுபோனவர்களே.
  20. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திர தாரியை அறிவிக்கப்போவதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார். குற்றவாளி யார் எனத்தெரிந்தும் அதை வெளியிடாமல் மௌனம் காத்த இவரும் குற்றவாளியே. குற்றவாளிகளை காட்டிக்கொடுக்கும் யாவரும் கொலை செய்யப்படுவார்கள். தப்பினால் சிறை செல்லக்கூடும். எத்தனைபேரை கொன்றாலும் உண்மையை கொலைசெய்ய முடியாது, தண்டனை அதிகரிக்கும். இவர்களது ஆதங்கம் அவர்களது கொலை கொள்ளைகளில் அவர்களுக்கு ஆதரவாக நின்று உதவியவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படும்போதோ, சிறைச்சாலையில் இருக்கும்போதோ அவர்களை பயன்படுத்தியவர்கள் அவர்களை கைகழுவி அநாதையாக விட்ட கோபமே அவர்களை காட்டிக்கொடுக்க விழைகிறார்கள். அதை வெளிப்படையாக அறிவிப்பதால் கொலைசெய்யப்படுகிறார்கள். இதில், பல போலீசார் இராணுவத்தினரும் அடங்கும். தேசபந்து தென்னக்கோனுக்கு பாதுகாப்பு வழங்குபவர்களே அவரை கொலை செய்துவிட்டு அரசுமீது பழி போடலாம். தாம் தப்புவதற்காக எதையும் செய்வார்கள். ரணில், ஊடக சந்திப்பில் தான் அளித்த முக்கியமான, சிறப்பான பதில்களை அவர்கள் வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சுமந்திரனின் நண்பர்தானே ரணில், வேறு எதை சொல்வார். வளமாக மாட்டிக்கொண்டுள்ளார். நாமல் பிச்சு உதறப்போறார் ரணிலை. அந்தக்கலந்துரையாடலில் அம்பிகா சற்குணநாதன் கலந்து கொள்வாரென அறிவிக்கப்பட்டதாம், அதனால் தான் அதிக மகிழ்ச்சி கொண்டிருந்ததாகவும் ஆனால் அவருக்கு பதிலாக வேறு இருவரை நியமித்திருந்தார்கள் என்றும் அவர்கள் புலிகள் சார்பானவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். தானே அங்கு நடந்த கொடுமைகளை ஏற்றுக்கொண்டுள்ளார், ஆனால் உண்மையை ஆதாரங்களுடன் நிரூபித்து கேள்வி கேட்டவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்கிறார். இப்படித்தான் இவ்வளவு காலமும் தங்களையும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியவில்லை. இனியென்ன ஒன்றொன்றாக உண்மை வெளியில் வரும் காலம் அண்மையிலுள்ளது. "மூடர் தம் வாயாலேயே கெடுவர்."
  21. தமிழ் மக்கள், எல்லா மதமும் ஒரு மதம், மதிப்பிற்குரியதென வாழ்பவர்கள். எந்தவொரு இனத்துக்கோ, மதத்துக்கோ எதிரி கிடையாது. எந்த மத வழிபாடுகளையும் மதிப்பவர்கள். எல்லோரையும் அணைத்துபோபவர்கள். அதனாற்தான் சிங்களம் இலங்கையில் தழைத்து நின்று அணைத்த கையை அடிக்க முடிகிறது.
  22. ஐந்து நாடுகளை சேர்ந்த பிக்குகள், சமாதானம் வேண்டி கிளிநொச்சி, நாவற்குழி, யாழ்ப்பாணம் வருகிறார்கள் என்று ஏற்கெனவே ஒரு செய்தி வந்தது. கடந்த ஆண்டும் வந்ததுகளென நினைக்கிறன். இங்க இருக்கிறதுகள், இருக்கிற சமாதானத்தை அழிக்குதுகள். அதுக்கை இதுகள் வேறு. முற்றுந்துறந்துகளுக்கு இந்த மரியாதை. குடை பிடிக்க, கொடி பிடிக்க, கம்பளம் விரிக்க, சாமரம் வீச, பாதுகாப்புக்கு பரிவாரம் எல்லாம் கேலிக்கூத்தாகிப்போச்சு. அரசருக்குரிய மரியாதையைவிட மேல்.
  23. இந்த நேர்காணலை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேநேரம் ரணிலின் கால நேரத்தையும் நினைத்தேன். விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் கோத்தாவை சணல் நான்கு என நினைக்கிறன், நேர் காணலில் கேட்ட கேள்விக்கு உண்மைக்கு புறம்பான கருத்தை கோத்த சொன்னபோது, கேள்வி கேட்டவர் ரொம்ப கடுப்பாகிவிட்டார். அப்போ கோத்த அவரை பாத்து சொன்னது, நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்? பதற்றமடைய வேண்டியவன் நான், நானே அமைதியாக இருக்கிறேன் என்றார். திட்டமிட்டு செய்பவன் பதற்றமடைய மாட்டான், தேவையுமில்லை என்றே புரிகிறது. அதன் பின் மஹிந்தவை பல பத்திரிகைகள் நேர்காணல் கண்டன, அதில் அல் ஜெஸீரா, சணல் நான்கு கேட்ட கேள்வி ஒன்று. அதெப்படி உங்கள் அரசில் பல உங்கள் குடும்ப உறவுகள் பதவி வகிக்கின்றனர்? அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, மக்கள் வாக்களித்து தெரித்தெடுக்கின்றனர், அவர்கள் விரும்பாத போது அவர்கள் நம்மை வெளியேற்றுவார்கள் என்றார். கடந்த வருடமென நினைக்கிறன் இந்த நரியை ஒருவர் நேர்காணல் செய்து, உயிர்த்த ஞாயிறு பற்றி வினவிய போது. எப்படி அட்டகாசம் போட்டார்? சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டேன், நான் இலங்கை கத்தோலிக்க சபையோடு உறவில் இருக்கிறேன், கர்தினால் மட்டுமே பிரச்சனை செய்கிறார் என்று என்று படு பொய் சொல்லி தப்பித்துக்கொண்டார். இந்தமுறை வளமாக மாட்டினார். உயிர்த்த ஞாயிறு சம்பவம் பற்றி கேள்வி கேட்டவுடன் நான் கார்த்தினாலோடு உறவிலுள்ளேன் என பொய் சொல்லுகிறார். அதே நேரம் எல்லா குற்றங்களுக்கும் தான் பொறுப்பில்லை என்கிறார். மஹிந்த வீட்டில் கேக் வெட்டினாராம். இவரது கட்சி ஆட்சி செலுத்திய காலத்திலும் தமிழருக்கு அநிஞாயம் நடந்திருக்கு. பலதடவை இவர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். ஏன் இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண இவரால் முடியவில்லை? தாங்கள் பாடசாலைகளை திறந்து மக்களுக்கு உணவு வழங்கினார்களாம். அப்போ கப்பலில் மக்களை வடக்கிற்கு அனுப்பியது யார்? ஏன் அந்த கலவரத்தை உடனடியாக நிறுத்தவில்லை? இதே ஜே .ஆர் .சொன்னார், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். புலிகளை அழிப்பதற்கு எந்தப்பேயுடனும் பேசத்தயார் என்றார். பாவம், அவரது இறப்பு நாட்டில் பொதுவிடுமுறை விடவில்லை, நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவில்லை. இப்போ, கோத்த பாய, விமானப்படையே போருக்கு காரணம் என்பது மாதிரி சொல்லி தப்பி விட்டேனென நினைத்திருப்பார். ரணில் நாட்டுக்கு வர, எப்படியான வரவேற்பிருக்கிறது என்று பாப்போம். அப்படியானால், ஐநாவில் இவரது ஆட்சிக்காலத்தில் இவற்றை ஒத்துக்கொள்ளாதது ஏன்? ராஜ பக்சக்களை காப்பாற்றியது ஏன்? பாவம் ரணில்! ஆப்பிழுத்த குரங்குபோல டுமாட்டுப்பட்டு முழிப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையிலேயே ஹசனுக்கு ஒரு சலூட். பிச்சு உதறிட்டார். நிராஜ் தேவா என்பவரா அவர்? அவருந்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம், தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.
  24. கனக்க யோசிக்காதீங்கோ பிரோ! இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு, விரைவில் வெளி வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.