Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அநேக தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் தமிழக அரசியல் வாதிகளுக்கு அல்லது கொழுத்த பணக்காரர்களுக்கு சொந்தமானது எனச்சொல்கிறார்கள். கொள்ளை வருமானம் வந்தால் உரிமையாளருக்கு. கொலை, அடி, உதை என்றால் அப்பாவி தொழிலாளருக்கு. ஆகவே இந்திய தமிழக அரசு கண்டுகொள்ளாது. மற்றைய பக்கம் இந்த இடைவெளியில் சிங்கள மீனவர் எங்கள் வளங்களை அரசாங்க உதவியோடு சுரண்டிக்கொண்டு போகிறார்கள். எங்களுக்காக வாதாட, கதைக்க யார் இருக்கிறார்கள்?
  2. ம், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமென பயமுறுத்துவார். ரஷ்யாவும் அதைச்சொல்லி களைத்து விட்டது. உலகப்போர் மூண்டால்; முதல் சிதறுவது அமெரிக்காதான்.
  3. ஐயோ! நான் சீமானுக்கு வக்காலத்து வாங்கவில்லை, எனக்குத்தெரிந்த இந்திய குடும்பவியல் சட்டம், நடைமுறை பற்றியே பேசினேன் கனம் கோட்டார் அவர்களே!
  4. மாலை மாற்றி திருமணம் செய்திருந்தால், அந்த உறவில் குழந்தை இருந்தால் குழந்தைக்குரிய தந்தையாரின் சொத்தில் சட்டப்படி பிறந்த குழந்தைக்குரிய உரிமை பங்கு இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி அந்த திருமணம் செல்லாது. சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமணமே சட்டப்படி செல்லும், அதிலிருந்தே சட்டப்படி விவாகரத்து பெற முடியும். அது போக, இருவரும் மனமொத்து உடலுறவு வைத்துக்கொண்டால், அது குற்றமில்லை என இந்திய சட்டம் ஏற்றுக்கொள்கிறது. தற்போது இந்தியாவில் adultery குற்றமில்லை என்று சட்டம் சொல்கிறது.
  5. மற்றையோருக்கு எதுவும் தெரியாது, அவர்களுக்கு எந்த அனுபவமுமில்லை, தாம்தாம் எல்லாம் தெரிந்தவர்கள், அனுபவசாலிகள் எனும் நினைப்பில் மற்றயோரை மட்டந்தட்டி எழுதுவோருடன் வாதாடி நேரம் இழப்பதைத்தவிர, நமக்கு தெரிந்ததை எழுதி விட்டு விலகி விடவேண்டும். அவர்கள் தாங்களே கெட்டிக்காரர் என மகிழ்வதில் நமக்கு என்ன பிரச்சனை?
  6. இங்கு எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் சீமான் காவற்துறை குறிப்பிட்ட காலத்தில் தான் வரமுடியாமைக்கான காரணத்தை நேரடியாகவும், தனது சட்டத்தரணிகள் மூலமாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கு மதிப்பளித்து உடன்பட்டிருக்கவேண்டும். சரி, சட்ட அடிப்படையில் ஒட்டினார்கள், சாட்சியாக ஒளிப்பதிவு செய்தார்கள் அவர்களது கடமை நிறைவேறியது. அவர்கள் கிழிக்கிறார்களா, வாசிக்கிறார்களா என்பதை ஏன் ஒட்டுப்பார்க்கவேண்டும்? சரி கிழித்தது தவறென்றால் அதற்கு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் போலீசார், இராணுவத்தினர் ஆட்சியாளரின் கூலிகளாக செயற்படுகின்றனர். பின்னர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அவர்களே. இங்கே அமலராஜ், பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை தாக்க முயன்றார் போலீசார் உடனடியாக செயற்பட்டு அவரை சுட்டுக்கொன்றார் அல்லது சிறையில் தற்கொலை செய்து கொண்டாரென செய்தி வராமலிருந்தால் சரி. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை அனுபவித்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் அல்லர் என்று தெரிந்தும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்த கொடிய பாவிகள், அவர்கள் தங்கள் இறுதிக்காலத்தை கூட வெளியில் அனுபவிக்க விடாமல் அவர்களின் விடுதலையை எதிர்த்து கூப்பாடு போட்டவர்கள், தமிழருக்கு ஆதரவாக கதைக்கும் சீமானை பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருப்பார் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கடந்து போக முடியாது. வற்புறுத்தி செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைத்து தண்டனையளிப்பதும், பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை கைது செய்வதும் கொலை செய்வதும் ஒன்றும் இவர்களுக்கு புதிதில்லை. நாட்டில் அமைதி சமாதானம் நிலவவேண்டுமானால்; அரசியல் அடாவடிகள், துணைபோகும் நீதிமன்றம், காவற்துறை, ஊடகத்துறை பொறுப்போடு செயற்படவேண்டும். விஜய லட்சுமி பாதிக்கப்பட்டிருந்தால்; சீமானின் கலியாணத்தை நிறுத்தி அப்போதே பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம், சட்டத்துறையை நாடியிருக்கலாம், நட்ட ஈட்டை பெற்றிருக்கலாம், இல்லை அவரையே திருமணம் செய்திருக்கலாம் விரும்பினால். இதுவெல்லாம் நடக்காத காரியமா இந்தியாவில்? வேறென்ன செய்ய எதிர்பார்க்க முடியும் இச்சந்தர்ப்பத்தில்? அதை விட்டு காலம் காலமாக இந்த விடயத்தை நீட்டுவது ஏதோ பின்னணியில் என்பது தெளிவாக தெரிகிறது.
  7. ம், நரி தனது பிரித்தாளும் வேலையை தொடங்குகிறது போலிருக்கு.
  8. மதவாத கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சிறை சென்ற ஞானசார தேரரா இவர்? நம்பமுடியவில்லையே இவரின் கூற்றை. இதுவரை இதுபற்றி இவர் வாயே திறக்கவில்லையே? கோத்தாவின் விசிறியாய் இருந்தவர், இப்போ அனுரா பக்கம் தாவுகிறாரா தன்னை காப்பாற்றிக்கொள்ள? பலருக்கு இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி தெரிந்திருந்தது, முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு. அவர்கள் தமிழ் கிறிஸ்தவரை குறிவைத்து அரங்கேற்றியதால் வேண்டுமென்றோ, உதாசீனமாகவோ காத்திருந்திருக்கிறார்கள். மல்க்கம் ரஞ்சித் தனக்கு தெரியவே தெரியாது என்றது மட்டுமல்ல, கோத்தாவின் அபிமானியாகவும் இருந்தார்.
  9. சாதாரணமான நாட்களில் செய்ய முடியுமென்றால், அசாதாரண நாட்களில் செய்வதற்கு தக்க காரணம் இருக்கிறது. அதுதானே அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார், கேள்வி கேட்க்கும் போது இடம் மாறி அமர்ந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியது. வேறு ஆசனங்கள் காலியாக இருந்தது என்கிறார், அவற்றில் ஒன்றை அவர்கள் இறந்தவரை அமரவைக்க முடியாமைக்கான காரணத்தையும் ஏற்றுக்கொள்கிறார், அதே நேரம் இவர்களுக்கு உயிரிழந்தவரின் அருகில் அமர்வதால் அசௌகரியம் ஏதும் இல்லையோ என்றும் பாதிக்கப்பட்டவரென கூறுபவரையும் கேட்டுள்ளனர். அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி இடம் மாற்ற முடியாது. ஆகவே இதில் குறை கூறுபவரிற்தான் ஏதோ தவறு. அதுதான் அவரருகில் இறந்த ஒருவரின் உடல் இருந்ததே. ஏதாவது பயங்கரவாத செயல் நடந்திருந்தால், சக பயணி தாக்கப்பட்டிருந்தால் இந்த கேள்வி கட்டாயம் கேட்கப்படவேண்டியது, கேட்க்கப்படும்.
  10. அவருக்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது, அதற்கு புலம்பெயர்ஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டுமாம்.
  11. நான், ஒருதடவை பயணம் செய்தபோது எனக்கு அருகில் ஒரு பயணிக்கு ஆசனம் நியமிக்கப்பட்டிருந்தது. எனக்குப்பின்னால் மூன்று ஆசனங்கள் காலியாக இருந்தன. அருகில் இருந்த பயணி பின்னால் சென்று, அந்த மூன்று ஆசனங்களையும் ஆக்கிரமித்து, கால் கையை நீட்டி ஆசுவாசமாக தூங்கியெழுந்தார். அவருக்குரிய உணவும் அங்கேயே பரிமாறப்பட்டது. யாரும் கேள்வி கேட்கவில்லை. அதிலும் இது ஒரு தவிர்க்க முடியாத அசாதாரண நிலை. காலியாக இருந்த ஆசனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்பர்
  12. சுமந்திரன் தமிழரின் பிரதி என்று சொல்கிறார், மக்களுக்காக அவர் செய்த சேவை என்ன? கடந்த காலத்தில் மக்களே அவரை தெரிவு செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். புலம்பெயர் தமிழரல்லர். அப்படியிருக்கும்போது புலம்பெயர்ந்தோருக்கும் சுமந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? அவர் எதுவும் மக்களுக்கு செய்யாததினால் மட்டுமல்ல விரோதமான செயலில் ஈடுபட்டதினாலேயே மக்கள் சுமந்திரனை நிராகரித்தனர். அதிலிருந்து அவர் திருந்தவேயில்லை, இன்னும் இன்னும் மோசமான செயலிலேயே ஈடுபடுகின்றார். அதை மறைக்க புலம்பெயர்ந்தோர் அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் என்று பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார். ஏன் அந்தபுலம்பெயர்ந்தோருக்கு அல்லது அந்தப்பணியை செய்ய காத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புலனாய்வாளரால் முடியவில்லை?அவருக்குரிய சன்மானத்தை மக்கள் கொடுத்துவிட்டனர். இதற்குள் புலம்பெயர் வரக்காரணம் என்ன? ஏன் அவர்களை இவர் சந்தேகிக்கிறார்? அவர் அரசியல் செய்யலாம், ஆனால் மக்கள் தங்களுக்கு இவர் வேண்டாமென்கின்றனர், முடிந்தால் முயற்சித்து பார்க்கட்டும். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பகிரங்கமாக திரிகிறார், கூட்டங்களில் கலந்து கொள்கிறார், கொலைசெய்ய நினைத்தால் முடியாதா என்ன? இவரை கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? அவரை தெரிந்தனுப்பியவர்களே நிராகரித்து விட்டனர். அது அவரது செயலுக்கு கிடைத்த சன்மானம். அதை மறைக்க கதையை திசை திருப்பினால் நாங்கள் இல்லாத ஒன்றுக்கு யாரை கண்டிப்பது? சிறிதரனுக்கு அல்லது வேறு பிரதிநிதிகளுக்கு இல்லாத அச்சுறுத்தல் இவருக்கு ஏன் வந்தது?
  13. தலைவர் ஒரு அறிவிப்பு, பொதுச்செயலாளர் வேறொரு அறிவிப்பு. இதற்கு ஜனநாயக கட்சி என்று அழைப்பு. என்ன, கஜேந்திரன் சிறிதரனின் முயற்சியை குழப்பி மக்களை அலைய வைக்கும் திட்டம். இவர்களின் தந்திரம் இவர்களையே குழப்புகிறது. "அவதந்திரம் தனக்கந்தரம்." சிவஞானம் சொல்கிறார், தாங்கள் கூட்டிணைவதுபற்றி பல அரசியற் கட்சிகளுடன் பேசியிருக்கிறாராம், அவர்கள் யார் என்பதை இப்போது சொல்லமாட்டாராம், ஏனென்றால் திட்டங்கள் குழம்பி விடுமாம், தான் தன் வாயால் ஒருபோதும் யாரையும் ஒட்டுக்குழு என்று சொல்லவில்லையாம், ஏனென்றால் அவர்களும் விடுதலைக்காக ஒருகாலத்தில் போராடியவர்களாம். சிவஞானத்தின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்! கட்சியை அழிக்க, சிறிதரனை கட்சியிலிருந்து விரட்ட எந்த அரக்கனோடும் கூட்டுசேர்வார்கள். தேர்தலில் சிறிதரனை விரட்ட எடுத்த தந்திரம், அவரையே வீட்டுக்கனுப்பியது. பரவாயில்லை முயற்சித்துப்பார்க்கட்டும். மூடர் சேர்ந்து தமக்கே ஆப்பு இறுக்குகிறார்கள். இவர்களோடு கூட்டுச்சேர்வதோ அல்லது கூட்டிணைவதோ அவர்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
  14. சுமந்திரனின் எதேச்சாதிகாரத்தை மூடி மறைத்து, ஏதோ அவர் தமிழருக்கு காவலன் போல் எழுதுவதையே விமர்ச்சிக்கிறோமேயொழிய, அவரது சாவு பற்றி யாரும் இங்கு எழுதவுமில்லை, மற்றவர் செத்தால் நமக்குத்தான் பதவியென காத்திருக்கவுமில்லை. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அவருக்கு யாரிடமிருந்து, ஏன் உயிரச்சுறுத்தல் வரவேண்டும்? அப்படி இருந்தால்: அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போய் இருக்கவேண்டும். அவரை அரசியல் செய்யச்சொல்லி யார் வற்புறுத்தினார்கள்? அவர் என்னதான் மக்களுக்கு சாதித்தார்?
  15. குழப்பத்தை உருவாக்கி, ஆட்சி பிடித்து குழப்பத்திலேயே ஆட்சியை நடத்துபவர்கள் இவர்கள். இப்போ, உருவாக்கிவிட்டு காத்திருக்கிறார் ஜனாதிபதியாக. உருவாக்கிய குழப்பத்தில் இவரே பலியாகப்போகிறாரோ தெரியவில்லை. அனுரா ஆட்சியில் இருக்கும்வரை பயங்கரவாத சட்டம் தேவையில்லை என்பார், காரணம் தாங்கள் பகிரங்கமாக இனவாத சொல், செயலில் ஈடுபட்டு நாட்டை எரிக்கவோ தமிழரின் குருதியில் குளிக்கவோ முடியாது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாத சட்டம் தேவை என்கிறார் சர்வாதிகார ஆட்சிக்கு. தமிழர்மீது ஒன்றும் அக்கறையில்லை. இவர்களுடைய ஆட்சியிற்த்தானே பயங்கரவாத சட்டம் தமிழர் மேல் காரணமின்றி பாய்ந்தது. ஏவிய அம்பே அவர்களை தாக்கப்போகிறது. இதற்குத்தான் பயங்கரவாத சட்டம் இப்போதைக்கு நீக்கப்படாது என்று ஏற்கெனவே நான் கூறியது. இது மட்டும் இல்லையென்றால் இந்த இடைவெளியில் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்திருப்பார்கள்.
  16. பிறகு ஏன் இவருக்கு இந்தக்கேள்வி, இரட்டை நிலைப்பாடு? நீங்கள் தமிழரை என்ன செய்தீர்கள்? அது என்ன திடீரென்று தமிழர்மேல் இவ்வளவு பாசம், கரிசனை, கவலை, முதலைக்கண்ணீர்? அனுரவை பிழையானவர் என விமர்சித்தால், நீங்கள் செய்தவைகள் மறந்து, மறைந்து விடும் என்கிற நினைப்போ? அனுரா தமிழருக்கு அதிகாரம் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னால் அல்லது திஸ்ஸ விகாரையை எடுக்கப்போகிறேன் என்று சொன்னால் போதும், உங்கள் சுய ரூபம் வெளிப்படும். அதுவரை நீலிக்கண்ணீர் வடியுங்கள், நாங்கள் அதை நம்பப்போவதில்லை.
  17. அதேதான்! போனதடவை உள்ளூராட்சி தேர்தல் என அறிவிக்கப்பட்டபோது, தமிழரசு தனித்து போட்டியிடும், மற்றயவர்கள் தாம் போட்டியிட்டு தேர்தலின் பின் ஒன்று சேரலாம் என சட்டாம்பி பத்திரிகைகளுக்கு வஞ்கமாக அறிவித்தார். ஆனால் கூட்டுக்கட்சிகளுக்கு அறிவிக்காதது ஏன்? உண்மையிலேயே பிற கட்சிகளுக்கு விழும் வாக்கை தடுப்பதாக இந்த முடிவு எடுத்திருந்தால், அதை மற்றவர்களுக்கு விளக்கி கூறுவதில் என்ன தப்பு இருக்கிறது? தமிழரசுக்கு அதிக வாக்கு விழும், மற்றய கட்சிகளை கழற்றி விடவே இந்த முடிவு எடுத்தார் சுமந்திரன். இப்போ அவர்களை சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். தங்கள் முன்னைய முடிவை தவறாக புரிந்து கொண்டார்களாம் என இந்த சிவஞானம் கருத்து சொல்கிறார். பிரச்சாரங்களில் தங்களை விமர்ச்சிக்க கூடாதாம். தலைமை கட்சிக்கு கட்டுப்பட்டு செயற்படவேண்டுமாம். எதற்கு? மற்றயவர்களை தேர்தலின் போது விமர்ச்சித்தவர் யார், சுமந்திரன்தானே? இப்போ மற்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இவர்கள் யார்? நிற்க, கஜேந்திரன், செல்வத்தையும் சிறிதரனையும் சந்தித்து ஒன்று சேர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். கஜேந்திரனோடு சேர்வதையோ அல்லது கஜேந்திரனை இணைப்பதையோ சுமந்திரன் விரும்ப மாட்டார். காரணம் தன்னை விட திறமையானவர் வந்தால் தான் சர்வாதிகாரம் பண்ண முடியாது. அதே நேரம் சிறிதரனையும் ஓரங்கட்ட வேண்டும். எல்லோரும் இணைந்தால், தாங்கள் தனித்து விடப்படுவோம் என்பது நன்றாகத்தெரியும். ஆகவே அவர்களை தவிர்த்து மற்றவர்களை இணைக்க முயற்சிக்கிறார். சிவஞானம் எந்த முடிவும் எடுக்க வல்லமையற்றவர், சுமந்திரனின் ஊதுகுழல். அவர் சொல்வதை, தான் சொல்வதுபோல் வாயசைக்கிறார். பத்திரிகையாளர் கேட்ட பல கேள்விகளுக்கு மறுமொழி இப்போ கூற முடியாது என்றுவிட்டார். டக்கிலஸை சேர்க்கிற எண்ணமுமுண்டு. இந்த கூட்டு ஊர்போய் சேராது. ஆகவே இவர்களோடு சேர்வதை பலமுறை யோசனை செய்யவும். சுமந்திரன், சிவஞானம், சத்தியலிங்கம் உள்ள கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.
  18. ஹி, ஹி. அதொன்றுமில்லை, சுமந்திரன் தமிழர்களால் ஒதுக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு போய் விட்டார். அதை தூக்கி நிறுத்த எடுக்கப்படும் முயற்சி. அப்படி தமிழருக்கு என்ன நன்மை செய்துவிட்டார் சுமந்திரன் மக்கள் அவரை தங்கள் பிரதிநிதியாக தெரிவதற்கு? அதற்கான கூலியை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரோ போக மாட்டேனென அடம்பிடித்து இனத்தை இரண்டு படுத்துகிறார். அவர் இனத்துக்கு எதிராக என்ன துரோகம் செய்கிறாரென அவருக்கும், நன்மை பெறுவோருக்கும் தெரியும். அதனால் அவர்கள் தாம் செய்வதை மற்றவர்மேல் பழிபோட்டு நிஞாயப்படுத்துகின்றனர். அவர் முறையிடவில்லையாம், பாதுகாப்பு கொடுத்தார்களாம். அவுஸ்ரேலியாவில் உள்ள ஒருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளாராம், ஆனால் சுமந்து அங்கே எந்த பாதுகாப்புமில்லாமல் போய் வந்திருக்கிறார். அப்போ இந்த புலனாய்வு அவரை போகவேண்டாமென்று தடுக்கவில்லை. நாட்டிலே இனத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார், கூட்டங்களில் கலந்துகொள்கிறார், தடுக்கவில்லை. ஏன் முஸ்லீம் படுகொலையாளிகள் சுட்டுக்கொன்ற போலீசாரை, புலிகள் சுட்டுக்கொன்றதாக அப்பாவி இளைஞரை கைது செய்தது புலனாய்வு. உயிர்த்த ஞாயிறு குண்டுச்சம்பவம் நடைபெறப்போகிறது என பல எச்சரிப்புகள் வந்தபோதும் தடுக்க முடியாத வகையறா புலனாய்வு, சுமந்திரனை பாதுகாக்கிறதாம். ஸீரோவான சுமந்திரனை கீரோவாக்க முயற்சிக்கிறார் பாவம் ஒருவர். சிங்களத்துக்கு கழுவ வேண்டும், அதற்கு தமிழர் வாக்களிக்க வேண்டும். அவர் வந்த வேலை, கொடுக்கப்பட்ட வேலை முடிந்து விட்டது, இனி ஓய்வு பெற வேண்டியவர் அவர். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால்: சிங்களவருக்கு பயம், வெறுப்பு வருகிறதாம் என்று சொல்லும் இவர், தமிழரசை தனது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கிறார்?
  19. இன்றைக்கு சி. வி. கே. ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் ,தமிழ் தேசியம் என்று சொல்லும் கட்சிகள் உள்ளூராட்சித்தேர்தலில் மற்றைய கட்சிகளை விமர்ச்சிக்காமல் தமிழ்த் தலைமைக்கு கட்டுப்பட்டு பிரச்சாரம் செய்து போட்டியிட்டு அதன்பின் ஒன்று சேர்வது பற்றி பேசலாமாம். இவர் ஒரு பூம் பூம். சுமந்திரன் சொல்வதை காவிக்கொண்டு திரிபவர். ஊடகவியளாரால் கேட்கப் பட்ட பல கேள்விகளுக்கு இப்போ பதில் சொல்ல முடியாதென மறுத்துவிட்டார். நன்றாக தெரியும், தமக்கு தோல்வி. அதனால சேர்வோம், தேர்தலுக்குப்பின், ஆனால் மற்றைய கட்சிகளை விமர்ச்சிக்க கூடாதாம். தாங்கள் விமர்ச்சிக்கலாம். தாங்கள் வென்றபின் மற்றைய கட்சிகளை அடக்கியாள்வதற்கு திட்டம். இவர்கள் வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளிகளோடு கூட்டுச்சேரட்டும். மக்கள் தமிழரசை கைவிட்டு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களோடு கூட்டு சேர்ந்தால்; சேரும் கட்சிகளுக்கும் அதுவே நிலைமை. இவர்களை விட்டு, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்தால், அதுவே மக்களின் விருப்புமாகும். அவர்கள் ஒட்டுக்குழுக்களோடு சேரும் திட்டமுமுள்ளது. ஆகவே அவர்களை அவர்கள் பாட்டில் விட்டு ஒதுங்குவது, ஒதுக்குவதே இனத்துக்கு நன்மை பயக்கும். "துஷ்டரை கண்டால் தூர விலகு." என்பது பழமொழி.
  20. அனுர நாட்டில் அமைதியாக ஆட்சி நடத்த வேண்டுமானால்; மஹிந்த கோஷ்டி, அதன் தளபதிகளை சர்வதேச பாதுகாப்பு நீதிமன்றத்திடம் கையளிக்க வேண்டும். இல்லையேல் இவரது ஆட்சிக்கு ஆப்புத்தான்.
  21. சரி, பொறுத்திருந்து பாப்போம். இவ்வளவு காலமும் இல்லாத குழு மோதல் ஏன் இப்போ? போலீசார் ஏன் அவர்களை அவசரப்பட்டு சுட்டுக்கொல்கின்றனர்? நீதிமன்றம் கொண்டு சென்று விசாரணை செய்வதற்கு முதல், போலீசாரே ஏதோ ஒரு வழமையான குற்றச்சாட்டை உருவாக்கி தண்டனையளிப்பது ஏன்?
  22. அனுரா அரசு, கடந்த அரசுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்தகாலத்தில் ஆயுததாரிகள் கலாச்சாரம், அவர்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உருவாக்கம், தண்டனை விலக்கு, எல்லாம் அளவுக்கு மிஞ்சி அளித்து, தமது அரசை கட்டியெழுப்பி, தம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து நாட்டை சூறையாடினார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேக்க யாருக்கும் முடியவில்லை. ஆயுத கலாச்சாரம், அச்சுறுத்தல், காட்டுச்சட்டங்கள், வடக்கில் பயங்கரவாதம் மீளெழுகிறது எனும் பிரச்சாரத்தின் மூலம் பிரச்னைகளை திசைதிருப்பல். இப்போ, அனுராவின் ஆட்சி மாற்றத்திற்கு தமிழரின் ஆதரவு, எல்லோரும் சமம் எனும் அவரின் கூற்று, கடந்த ஆட்சியாளரை கதிகலங்க வைத்துள்ளது. தமது அரசியல் மூலதனம் எனும் இனப்பிரச்சனை ஒழிக்கப்பட்டால்; தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் தமது ஊழல்கள் வெளிவந்தால் நிரந்தர சிறை அல்லது குடியுரிமை பறிப்பு நிகழலாம். பாதாள உலகத்தை வளர்த்து, போதைப்பொருள், வன்முறை கலாச்சாரத்தால் பயனடைந்தவர்கள், அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்படப்போகிறார்கள். அதனால் சாட்சிகளை அழித்தல், அரசாங்கத்தின்மீது பழிபோடல், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கல், இனக்கலவரத்தை ஏற்படுத்தல், ஜே .வி. பி .யை சாட்டி தாங்கள் அரங்கேற்றிய தமிழருக்கெதிரான கொடுமைகளை நேரடியாக அரசாங்கத்தின் தலையில் கட்டுதல். போன்றவற்றின் மூலம் அரசை கலைப்பது, ஆட்சியை கைப்பற்றுவது. முடிந்தால் அனுராவையே கொலை செய்வது போன்றன அரங்கேற ஒத்திகை நடக்கிறது. நாட்டில் அநேக ஆயுதப்படைகள் கடந்த ஆட்சியாளருக்கே விசுவாசமானவர்கள். காரணம்: அதிக சலுகைகள், லஞ்சம், ஊழல், தண்டனையிலிருந்து விடுதலை, விலக்களிப்புகள் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் எஜமானரையே ஆட்சிக்கு அமர்த்த விரும்புவார்கள். அனுர, சட்டங்களை கடுமைப்படுத்த வேண்டும், இராணுவம் போலீசை கண்காணிக்க வேண்டும். விசேடமாக கோத்தாவின் நன்மதிப்பைப்பெற்ற சவேந்திர சில்வா போன்ற தளபதிகள். மஹிந்த கோஷ்ட்டியின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படவேண்டும். எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தால் ஒரு சில மாதங்களில் இவற்றை அடக்கி சாதகமான நாட்டை உருவாக்கலாம். விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் அஞ்சினால், ஜனாதிபதி பதவி பறிபோவதுடன் கொலை செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம். கடந்த கால அரசுகளுக்கு கைகொடுக்க இந்தியா வந்தது. அனுராவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே.
  23. "நெல்லுக்கிறைத்த நீர் கசிந்துருகி புல்லுக்கும் அங்கே பாய்ந்தது." மனிதாபிமானம், இப்படியான சிக்கல்களை உருவாக்குகிறது. இவர்கள் எங்கே போனாலும் திருந்த மாட்டார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள், வடக்கில் ஆமி போலீசோடு முள்ளிவாய்க்கால் பேரழிவு நிறைவடையும் வரை நின்று சண்டித்தனம், சமூக சீரழிவு, களவு, சுகம் அனுபவித்தவர்கள் இன்று கலியாணம் என்கிற பெயரிலும், வேறு வழிகளிலும் கனடாவில் உள்ளனர். அதற்காக எல்லோரும் அப்படியானவர்கள் என்று நான் முத்திரை குத்தவில்லை. எத்தனையோ நல்ல உள்ளங்கள், தங்கள் வீடுகளை ஏழைகளுக்கு குடியிருப்பதற்கோ, சொந்தமாகவோ கொடுக்கிறார்கள். ஏழைப்பிள்ளைகளை பொறுப்பெடுத்து படிப்பிக்கிறார்கள். தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீடு பராமரிப்பதற்காக மாதாந்த வருமானமாக பணம் அனுப்புகிறர்கள். ஆனால் சில அற்பங்கள் தங்களை பிரபல்யப்படுத்த இப்படியான இழி வேலைகளை செய்து தங்களை முதன்மைப்படுத்துகிறார்கள். ஒரு முசுறு கடிக்க கூட்டோடு நசுக்கப்படுவது இயல்பு.
  24. வெளிநாட்டுப்பானம், உள்நாட்டுக்காரரை அப்படி செய்ய வைக்குதோ என்னவோ? எதுக்கு குடி வாங்கிக்கொடுக்கிறார்கள்? ஏதாவது பயனுள்ள, உள்ளளவும் நினைக்கத்தக்க பரிசை கொடுக்கலாமே? இவர்களால், அவர்கள் குடிகாரராகி, வீணான பிரச்சனைகளில் மாட்டி விடுகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.