Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 07.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
யாரை நம்பி நான் பிறந்தேன்?
வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான் உலகெங்கும் பரவலாக இருக்கிறது. யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது. தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம் முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவு’ என்று மகள் சொன்னதன் பின்னர், கோவம் கொண்ட தந்தை துப்பாக்கியை எடுத்து நான்கு முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் மகளின் தொடையிலும் ஒரு குண்டு அவளின் தோள்பட்டையிலும் பாய்ந்திருக்கின்றன. காயங்களுடன் அலறிக் கொண்டு ஓடிய மகளை அயலவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. மகளின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை அறிவித்திருக்கிறது. தந்தையிடம் துப்பாக்கி பாவிப்பதற்கான அனுமதி இருக்கிறது. இந்த வயதிலும் குறி தவறாமல் சுடும் அவரை எப்படி வீட்டுக்குள்ளே போய் கைது செய்வது என்று தெரியாமல் பொலிஸார் ஒன்றரை மணி நேரம் வீட்டைச் சுற்றி நின்றிருக்கிறார்கள். தந்தை தானாக வெளியே வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு வருமா அல்லது மனநல மருத்துவ மனையில் அவரை அனுமதிப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். பேசாமல் பெரிசு முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம். 96 வயதில் இந்த வீரம் அதிகம்தான். இந்தச் செய்தியை இங்கே வாசித்தேன் (யேர்மன் மொழி) https://www.n-tv.de/panorama/96-Jaehriger-schiesst-auf-Tochter-nach-Streit-um-Pflegeheim-article25209186.html
-
கருத்துப்படம் 06.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
ஜேர்மனியில் இஸ்ரேலின் துணைதூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்
இன்று (05.09.2024) காலை முதல் முனிச் (Munich) நகரத்தில் ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கை ஒன்று நடந்து வருகிறது என யேர்மனி தென் மேற்கு ஊடகம் அறிவித்திருக்கிறது. இன்று காலை 9 மணிக்குப் பிறகு, இஸ்ரேலிய துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் நாசி ஆவண மையத்திற்கு அருகிலும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. முனிச்சில் உள்ள நாசி ஆவண மையம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூதரகங்கள் இருக்கும் இடம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகும். இந்தப் பகுதியிலேயே ஆயுததாரி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.பாதுகாப்பு நிறைந்த இடமானாதால் அங்கிருந்த பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், துப்பாக்கிதாரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதம் ஏந்திய நபரின் அடையாளம் இன்னும் வெளிவரவில்லை. பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவங்களை யாராவது புகைப்படங்கள், அல்லது ஒலி,ஒளி பதிவுகள் எடுத்திருந்தால் அவற்றை புலனாய்வாய்துறையின் இணையத்தளத்தினூடாக அறியத்தரலாம் என புலானாய்வுத்துறை கேட்டிருக்கிறது. செப்டம்பர் 5, 1972 இல், முனிச்சில், பாலஸ்தீனிய தீவிரவாதிகள் ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெற வந்திருந்த இரண்டு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் ஒன்பது இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பணயக்கைதிகளும், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஐந்து கொலையாளிகளும் இறந்திருந்தார்கள். அவர்களுக்கான நினைவேந்தல் இருந்ததால் இஸ்ரேலிய தூதகரம் இன்று காலையில் திறக்கப்படவில்லை. அதனால் ஒரு அனர்த்தம் தவிர்க்கப் பட்டிருக்கிறது. https://x.com/RonenSteinke/status/1831597456032739359? https://www.n-tv.de/politik/Muenchen-Polizei-schiesst-bewaffnete-Person-nieder-article25206386.html
-
கருத்துப்படம் 04.09.2024
From the album: கிறுக்கல்கள்
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
- கருத்துப்படம் 04.09.2024
From the album: கிறுக்கல்கள்
- யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட்டு அதன் பிறகே சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறான். இப்பொழுது அவளது கணவனும் இன்னும் ஐம்பது ஆண்களும் நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்பார்த்து வரிசையில் நிற்கின்றார்கள். அந்த ஆணின் பெயர் டொமினிக்(71). அவரது மனைவியின் பெயர் கீசெலா (72). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றைய ஆண்கள் 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீயணைப்பு வீரர், செவிலியர், சிறைக் காவலர், பத்திரிகையாளர் என வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கிறார்கள் என்பது சமூகத்தின் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருந்து டொமினிக் பணமாக ஒரு ‘சென்ற்’ கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே. பிறகெதற்கு இந்த விளையாட்டு? நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து, தனது பாலியல் கற்பனைகளை திருப்திப்படுத்துவதே டொமினிக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. தானும் சளைத்தவன் இல்லை என்று டொமினிக்கும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றையும் வீடியோ எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இப்பொழுது மொத்தமாக 92 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொமினிக் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை பார்வையிட்டதில், சிலர் ஒரு முறையே போதும் என்று ஒதுங்கி விட்டிருந்தனர். சிலர் சும்மாதானே என ஆறு முறை கூட வந்திருந்தனர். வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, டொமினக்குக்கோ, வந்து போன ஆண்களுக்கோ உளவியல் பிரச்சினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக முழுமையான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விடயம். ஆனாலும் வீடியோவில் உள்ள 72 ஆண்களில் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி டொமினிக் மாட்டிக் கொண்டார் என இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். எல்லாம் ஆர்வக் கோளாறுதான். டொமினிக் பல் பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளரின் பாவாடையின் கீழ் கமாராவைப் பிடித்து வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வீடியா எடுக்கப்போய் மாட்டிக் கொண்டதில், சகலதையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டொமினிக்கின் கீசலாவுடனான ஐம்பது வருடக் குடும்ப வாழ்க்கை இப்போ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கும் டிசம்பர் 20ந் திகதி வரை நடக்க இருக்கிறது. அதன் பிறகு டொமினிக்குக்கு இன்னுமொரு வாழ்க்கை இருக்கும். அவர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த வீடியோக்களைப் பார்ப்பதற்குத்தான் முடியாமல் போகும். அநேகமாக இந்தச் செய்தி பல மொழிகளில் வந்திருக்கும். நான் வாசித்தது இங்கே, https://www.n-tv.de/panorama/Mann-liess-Ehefrau-von-72-Maennern-vergewaltigen-article25199233.html- உறவுகள் தொடர்கதை - T. கோபிசங்கர்
என் வீட்டிலே எனக்குத் தெரியாமல் Dr.T.கோபிசங்கர் கமரா மாட்டி இருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. கடைசி வரிகளை வாசிக்கும் போது ‘ பார் மகளே பார்’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை- தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
- கருத்துப்படம் 03.09.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 02.09.2024
From the album: கிறுக்கல்கள்
- நாலு வருடங்கள் தனிமைச் சிறையில்
கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்கிறது. இந்தப் பண்ணைத் தோட்டத்தில்தான், கிடைத்த எந்த வேலையையும் செய்யக்கூடிய தொழிலாளியான மேட்யூஸ், தனது வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தில் பயங்கரமான சூழ்நிலையில் ஒரு பெண் இருந்தது, அவனது பெற்றொருக்கும் தெரியவில்லை என்கிறார்கள். Gaika கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வந்தவள்தான் மால்கோர்ஸற்றா (Małgorzata). 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்லைன் மூலமாக மேட்யூஸ்வைச் சந்தித்தபோது அவளுக்கு வயது 25. இருவரும் சில மாதங்கள் தொடர்பில் இருந்தார்கள். ஒருநாள் மால்கோர்ஸற்றாவை அந்த அறையில் வைத்து மேட்யூஸ் பூட்டிவிட்டான். அந்த நாள் எப்போது என்பது அவளுக்கு நினைவில் இல்லை. கடைசிவரை தான் எங்கே சிறைப்பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் கர்ப்பமாகி பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டிய தருணத்தில் மருத்துவ மனைக்கு அவளைக் கூட்டிச் சென்ற போதும் பல அச்சுறுத்ததல்களை விடுத்தே அவளை மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறான். யாருடனும் கதைப்பதற்கு அவளுக்கு மேட்யூஸ் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. பிறந்த குழந்தையையும் வைத்தியசாலையில் தத்துக் கொடுத்துவிட்டு அவளை அழைத்து வந்துவிட்டான். “பல்வேறு பொருள்களைக் கொண்டு மால்கோர்ஸற்றாவின் முகத்திலும் உடலிலும் மேட்யூஸ் தாக்கியிருக்கிறார். அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவளை பட்டினி போட்டிருக்கிறார், சித்திரவதைகள் செய்து வன் புணர்வு செய்திருக்கிறார். மிகவும் மோசமாக பலமைறை தாக்கப்பட்டிருக்கிறாள். கடந்த வாரம் மேட்யூஸ் தாக்கியதில் மால்கோர்ஸற்றா கைகள் மற்றும் கால்கள் உடைந்த நிலையில் அவள் இறந்துவிடுவாளோ என்ற பயத்தில் நோவா சோலில்( Nowa Sól )உள்ள மருத்துவமனைக்கு 27ந் திகதி மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறார்” என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார். நோவா சொல் மருத்துவமனையில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மருத்துவத் தாதிக்கு தனது நிலையை மால்கோர்ஸற்றா சொல்ல, கடந்த புதன் கிழமை (28.08.2024) மேட்யூஸ் கைது செய்யப்பட்டான். “எனது மகன் ஏறக்குறைய ஒரு துறவி போலவே வாழ்ந்தவன். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் இப்படி ஒரு சம்பவத்தைச் செய்திருக்க மாட்டான். அத்தோடு எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கட்டிடத்தில் ஒரு பெண் அடைக்கப் பட்டிருந்ததையோ, சித்திரவதை செய்யப்பட்டதையோ நாங்கள் பார்க்கவில்லை” என மேட்யூஸ்வின் தாய் பத்திரிகைகள் கேள்வி கேட்ட போது சொல்லியிருக்கிறார். இப்படியான குற்றச் செயலுக்கு 25 வருட சிறைத்தண்டணை கிடைக்கலாம் என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார். போலந்துப் பத்திரிகையில் வந்த செய்தி இந்தப் பக்கத்தில் இருக்கிறது. மொழி தெரியாவிட்டாலும் படங்களைப் பார்க்கலாம். https://myglogow.pl/pl/11_dzieje-sie/160049_zwyrodnialec-wiezil-kobiete-cztery-lata-byla-torturowana-i-gwalcona.html- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
- கருத்துப்படம் 01.09.2024
From the album: கிறுக்கல்கள்
- குரங்கு அம்மை: புதிய அச்சுறுத்தல்!
சின்னம்மையைத்தான் கொப்பளிப்பான்/கொப்புளிப்பான் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். ஊரில் யாருக்காவது கொப்பளிப்பான் வந்தால் ஒரு பனைக் கள்ளும், அரைக்கீரையும் முக்கியமான மருந்துகள். கொப்பளிப்பானை அம்மாள் வருத்தம் என்று சொல்வார்கள். இது குரங்குஅம்மை என்பதால் விஸ்ணுவும் சேர்த்தியோ தெரியவில்லை.- கல்லறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது யேர்மனியில் சாத்தியமா?
ஹிளவ்டியாவின் தந்தை பயிர்களை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். தான் இறந்து அடக்கம் செய்யப்படும் கல்லறையைச் சுற்றி எப்போதும் பச்சை பசேல் என காய் கறி மரங்கள் இருக்க வேண்டும், குறிப்பாக தக்காளி மரங்கள் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அவளது தந்தை இறந்த பின்னர் அவளால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம், யேர்மனியில் கல்லறைகளைச் சுற்றி காய்கறி மரங்கள் நடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கல்லறையில் காய் கறிகள், பழ மரங்கள் நடுவதை கல்லறைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இறந்தவர் அடக்கம் செய்யப்படும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். இறந்தவர் கல்லறையில் உறங்குகிறார். பயிர்ச் செய்கைக்காக, மண்வெட்டி கொண்டு நிலத்தைத் தோண்டுவது அவரது அமைதிக்கு ஊறு விளைவிக்கும். கல்லறைகளின் பாதுகாப்புக் கருதியும், இறந்தவர் அமைதியாக உறங்குகிறார் என்ற நினைப்பைக் கருத்தில் கொண்டும், ஒருவர் வளர்க்கும் பயிரானது அடுத்தவரது கல்லறைக்கு இடைஞ்சலைத் தரும் என்பதாலும் பயிர்ச் செய்கையை அனுமதிக்க முடியாது என யேர்மன் கல்லறைத்தோட்டக்காரச் சங்கத் தலைவர் மைக்கல் பலன்பெர்ஹர் (57) அறிவித்திருக்கிறார். யேர்மனியில் என்னால் முடியாவிட்டாலும் ஒஸ்ரியாவில், வியன்னாவில் என் தந்தையின் கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது. வியன்னாவில் எனது தந்தையின் கல்லறையில் தக்காளிச் செடிகளை வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறாள் ஹிளவ்டியா. இறந்தவர்கள் தங்கள் கல்லறைகளில் அமைதியாக உறங்க வியன்னாவில் முடியாதா? என்றால், அவர்கள் நாட்டுச் சட்டம் அப்படி.- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
யேர்மனி, சோலிங்கனில் கடந்த வாரம் ஒருவர் கண்மூடித்தனமாக பொது மக்கள் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைத் தந்திருந்தாலும் நேற்று நடந்த சம்பவம் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டிருந்தாலும், அவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் உயிராபத்து இருக்கும் பட்சத்தில் அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று யேர்மனியில் நடைமுறை ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட பல புகலிடக் கோரிக்கையாளர்கள் யேர்மனியில் தொடர்ந்து தங்கியிருக்க வாய்ப்பு இருந்து கொண்டிருந்தது. இந்த நடைமுறையில்தான் தற்சமயம் ஒரு மாறுதல் வந்திருக்கிறது. கடந்த வாரம் சோலிங்கன் நகரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவரது புகலிடக் கோரிக்கை கடந்த வருடமே நிராகரிக்கப் பட்டு அவரது நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் நடைமுறையில் இருந்த சில அனுகூலமான விடயங்களால் அவரை அவரது நாட்டுக்கு யேர்மனிய அரசு திருப்பி அனுப்பவில்லை. நாடு கடத்தப்பட வேண்டிய அவரால், கடந்த வாரம் நடாத்தப்பட்ட அனர்த்தமானது யேர்மனிய அரசு மீது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “வெளி நாட்டவரைத் திருப்பி அனுப்பு” என்ற குரல்கள் இப்பொழுது இங்கு பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான AFD (Alternative for Germany) கட்சியின் வாக்கு வீதம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் Sachsen, Thueringen ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல்களில் AFDயின் வெற்றி ஏற்கெனவே உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படியான ஒரு நிலையில்தான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 28 பேர் நேற்று, யேர்மனி, லைப்ஸிக் விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள். இந்த 28 பேரும் பல விதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதுடன் யேர்மனிய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என உள்நாட்டு அமைச்சு அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் பொறுப்பேற்றதன் பின்னர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் யேர்மனியின் முதல் நிகழ்வு இதுவாகும். திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளருக்கு அவர்களது நாட்டில் உயிராபத்து இருந்தாலும், அவர்களால் யேர்மனிய மக்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்ற நிலையிலேயே அவர்கள் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் யூரோக்கள் கொடுக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. யேர்மனிய அரசின் இந்த நடவடிக்கை தொடருமாயின், புகலிடக் கோரிக்கையாளரின் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும், இந்த நடைமுறையை வரவேற்பதாகவும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுக் கிடைத்த செய்தி ஆறுதலைத் தந்திருந்தாலும் இன்று விடிந்த போது, “Ravensburg நகரில் 31 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் தாக்கியதில் 25 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்” என ஒரு செய்தியும், “Siegen நகரில் நடக்கும் விழாவுக்குப் பயணித்த பேரூந்தில், 32 வயதான யேர்மன் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் காயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்” என்ற செய்தியும் வந்திருக்கிறது.- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
- கருத்துப்படம் 31.08.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
- கருத்துப்படம் 30.08.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 30.08.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 29.08.2024
From the album: கிறுக்கல்கள்
- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
‘மூன்று பேர் ஒரு வேலைத் தளத்தில் இருந்தால், ஒருவர் தனிமைப் படுத்தப் பட்டு இருவர் குழுவாக இருப்பார்கள்’ என யேர்மனியில் சொல்வார்கள். ஒற்றைமையின்மை எல்லா நாட்டு இனத்திலும் இருக்கிறது.ஆனால் நாங்கள் எதிலும் தீவிரமாக இருப்போம். - கருத்துப்படம் 04.09.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.