Everything posted by ஏராளன்
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் தொடர்பான நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளது. https://thinakkural.lk/article/248573
-
கொஞ்சம் சிரிக்க ....
Couple Challenge - A Fun Vlog கணவன் மனைவி கேள்வி பதில் போட்டி
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
மடு மாதா தலத்திற்கு எல்லா மதத்தவரும் செல்கிறார்கள் அக்கா. சுவி அண்ணாவின் கதையில் உண்மைச் சம்பவங்களும் கலந்திருக்கலாம். நன்றி சுவி அண்ணா.
-
யாழ் களமே நீ வாழ் நலமே !
கருத்தாளம் மிக்க கவிதை. நன்றியும் வாழ்த்துகளும்.
-
சிரிக்கலாம் வாங்க
நானே பாதிக்கப்பட்டவன் என்பதால் அவனைப் புரிந்துகொண்டேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணை கடல்நீர் மட்டம் காலம் தோறும் உயர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
வர்ணனைகள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் சுவி அண்ணை, தொடருங்கள்.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
ஏன் இப்படி நடந்தது? Doller Today, Sri Lanka Tamil News | Rj Chandru Reports
-
கொஞ்சம் சிரிக்க ....
பார்த்தேன் சிரித்தேன்...
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
கதை அருமை சுவி அண்ணை. எனக்கு ஒரு விடயம் பிடிபட்டிருக்கு, அவசரக்குடுக்கையா மூக்கை நுழையாது பொறுமையா இருப்பம், நான் நினைச்சது சரியோ என்று கதை முடிவில் சொல்றன்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையை தீர்மானிக்க முடிகிறது, எல்லோரும் கைவிடும் போது. தொடருங்கள் சுவி அண்ணா.
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
அசிங்கப்பட்டார் ஆல் இன் ஆல் அழகு ராஜா!
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அதுவும் உண்மை தான்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அண்ணை அது நன்மை தானே. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்களா எனும் சான்றிதழ் தானே?
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்க சுவி அண்ணா. (இனி மருத்துவச் சான்றிதழ் பெற்றுத் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் போல!)
-
கொஞ்சம் ரசிக்க
மனைவி ஊரில் இல்லாதபோது..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
படித்ததில் பகிர ஆசைப்பட்டது...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தீர்ப்பு சரி தானுங்களே?!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பில் தவறான தகவல் கொடுத்தால் வழக்கு நலன்புரி நன்மைகளை பெற தகுதியானவர்களைக் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைவதால், அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதனிடையே, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு சிலர் தவறான தகவல்களை வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகள் கிடைக்காது எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று சட்டத்தை அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/245190
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
1.1 மில்லியன் நலன்புரி உதவி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவு: சேமசிங்க நாடளாவிய ரீதியில் உள்ள 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 1.1 மில்லியன் நலன்புரி நல விண்ணப்பங்களின் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். “1.1 மில்லியன் நலன்புரி உதவி விண்ணப்பங்களில் அதிகபட்ச சரிபார்ப்பு விகிதம் களுத்துறை மாவட்டத்தில் 46% ஆகவும், பதுளை மாவட்டத்தில் 34% ஆகவும், காலி மாவட்டத்தில் 32% ஆகவும் உள்ளது. நாடளாவிய ரீதியில் 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் கூறியுள்ளார். . நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியானவையா என்பதை சரிபார்க்கும் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். தகவல் கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும், காலக்கெடுவிற்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறினால் நலன்புரி நலன்களை இழக்க நேரிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தகவல் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார். https://thinakkural.lk/article/245136
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு! Published By: DIGITAL DESK 5 14 MAR, 2023 | 01:14 PM ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (14) உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று நீதிமன்றில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/150484
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அது கள் இல்லை பதனியாம்.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
Two boys in Madagascar scratch the back of a habituated lemur (Via National Geographic)