Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. அரைத்து குழம்பு வைக்க சிறந்தது வாளைமீன் .......நிறைய முள்ளு .....அனுபவமிக்கவர்கள் அதை சாய்வாக வெட்டி ஆக்குவார்கள்......அப்போது அந்த முட்களை சுலபமாய் பிரித்து எடுக்க முடியும்......! 😂
  2. தோழர் பாலன் · அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது. இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது. இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார். உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை. அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது. இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும். ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான். இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார். அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை. இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.....!
  3. செல்லக்கிளியே மெல்லப் பேசு ......! 😍
  4. வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த பெண் : காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தர வா வாத்தி என் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி பெண் : {அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நான் உன் ஆளு} (2) பெண் : உன் பேர தினம் கூவும் குயிலா ஆனேன் நான் நீ பாக்க புது மாரி ஸ்டைலா ஆனேன் நான் பெண் : பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா ஆனேன் நான் மனசார உன்னோட ஃபேனா ஆனேன் நான் பெண் : கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோர்க்கணும் ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக ஊர சுத்தணும் பேண்டு வாசிச்சு கிரேண்டா மேரேஜு கெட்டி மேளம் எங்கும் கேக்கணும் .......! --- ஒரு தல காதல தந்த ---
  5. Variety of images Jyothiselvan · · கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், “நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும். உனக்குஅவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்.” கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார் “நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்.” இதற்கு நாய் கூறியது, “கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்” கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் “நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.” இதற்கு குரங்கு கூறியது “20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்” கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார். கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார். ”நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.” இதற்கு மனிதன் கூறினான். “20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு” கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக. கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான். முடிவில்லா எண்ணங்கள்.........!
  6. நான் இந்நாவலை வாசிக்க வெளிக்கிட்டு ஒரு வருடமாக இப்பதான் நீலம் - 24 பகுதி எட்டு**: 2.** பொருள் ஒன்று யமுனைக்கரையில் அந்தணர்சேரியில் மதியவெயிலெழுந்த நேரம் திண்ணைகளிலும் அப்பால் ஆலமரத்து நிழல்மேடைகளிலும் ஆண்களெல்லாம் துயில பின்கொல்லைப் படிகளிலும் பசுக்கொட்டில்களிலும் பெண்கள் அமர்ந்து சொக்கட்டான் ஆடியும் சிறுசொல்பேசியும் சிரித்துக் கொண்டிருந்தனர். நெய்க்குடமேந்திய ஆய்ச்சியர் நால்வர் நடமிடும் இடையுடன் தெருவில் வரக்கண்டு “ஆய்ச்சியரே, இங்கு வருக!” என்று ஒருத்தி கூவினாள். “வெயிலெழுந்த பின்னர் நெய்கொண்டு வருகின்றாள். விடிந்தபின்னும் துயிலும் வீண்வழக்கம் கொண்டிருப்பாள்” என்றாள் ஓர் அந்தண முதுமகள். இதில் நிக்கிறேன்......வாசிக்கத்தொடங்கினால் நிறுத்த மனம் வராது.....அப்படி ஒரு எழுத்தின் ஆளுமை.....ஆனால் நேரம் இருக்காது.....கடந்த சில மாதங்களாக வாசிக்கவில்லை.....இனி வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.......அதற்கு முன் யாழுக்கு 26 அகவைக்கு ஒரு கதை எழுதவேண்டும் இன்னும் ஐடியா வரவில்லை .....பார்க்கலாம்......கிருபன்......ம்......சொல்லி வேல இல்ல .......ஜெயமோகனின் சிறந்த சிஷ்யன் ......வாழ்த்துக்கள் ......! 🙏
  7. இந்தக் கதையில் நல்ல நல்ல பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது.......! கடலில் மீன் பிடித்துக் கொண்டு அந்த முகத்துவாரத்துக்கு வாற வள்ளங்கள் பின் பிரிந்து கொழும்புத்துறை ஜெற்றி, பாஷையூர்,காரையூர் என்று போய் தரித்து நிக்கும்......அப்போது வள்ளங்களில் மறித்து நேரடியாக மீன்கள் வாங்குவது சிறப்பானது......ஒன்று ரெண்டு கூடைக்குறைய போடுவார்கள்.....! இது ஓரா மீனாகத்தான் இருக்கும்.....இடி முழக்கத்துடன் மேகம் கருத்து மழை பெய்யும்போது ஓராக்கள்தான் அடிப் பாறைகளில் இருந்து கூட்டம் கூட்டமாய் கிளம்பி நீருக்கு மேலால் குதித்து வருபவை. அந்நேரம் பண்ணைப்பாலத்தில் வெட்டுத் துண்டில் (இரை இல்லாமல்) போட்டுப் பிடிப்பார்கள்.....மீன் கூட்டங்களைப் பார்த்து வெடி எறிந்து விட்டு அதோடேயே குதித்து செத்து மிதக்கும் மீன்களை பைகளில் கட்டிக்கொண்டு வருவார்கள்.....இதில் சில ஆபத்துக்கள் உண்டு......வெடி பிந்தி வெடிச்சால் குதிப்பவர் மீனுக்கு முதல் போயிடுவார்......அடுத்தது கோட்டைக்குள் இருந்து சூடுகளும் நடக்கும்......மற்றது அந்நேரம் கடல் கொந்தளிப்பாய் இருக்கும். பாய்ந்து வரும் இந்த மீன்கள் வந்து கரையோரம் கல்லுகளில் அடிபட்டு கற்குவியலுக்குள்ளும் வீதியிலும் கூட வந்து விழும்......! நான் அப்போது அருகில் உள்ள கராஜில் வேலை செய்த காலங்களில் இவையெல்லாம் காணக்கிடைக்காத அனுபவங்கள்......! 😁
  8. இலங்கை தமிழ் என்டர்டெயின்மெண்ட் · அடேய் இது ரொம்ப ஓவர் டா! ......!
  9. இவர்கள் எவ்வளவோ உயரத்தில் இருக்கிறார்கள் ......அதை விடுங்கள்.......ஆனால் அவர்கள் பெற்றோரை போற்றுவதாலேயே அந்த உயரம்கூட அவர்கள் காலடியில் .......! 🙏
  10. போராளிகளின் போருக்குப் பின்னான வாழ்வில் ஒரு துளி இங்கும் தெறித்து விழுந்திருக்கு......! 😢 நல்லதொரு சம்பவம் "தனி".....பகிர்வுக்கு நன்றி......!
  11. துளித்துளியாக மண்ணில் விழும் நீர் வெள்ளமாகி அழகாக ஓடிச்செல்வதுபோல் "கோவிலாக்கண்டி" கிராமத்தின் வளர்ச்சி அடுக்கடுக்காக சொல்லப்பட்டிருக்கு......அதன் வளர்ச்சியில் திரு. வேலுப்பிள்ளை இராமர் ஐயாவின் சேவை அளப்பரியது.....அது இக் கிராமத்தின் வரலாற்றில் என்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கும்......இங்கு அவர்களது இணையப் பக்கத்தை இணைத்ததன் மூலம் மென்மேலும் பல தகவல்களை அறிந்து தெளியக்கூடியதாய் இருக்கின்றது.......! 🙏 இணைப்புக்கு நன்றி மோகன் ..........!
  12. கணவர்: கண்ணே எதிரில் ஒரு வட்டப் பாதை வரும், நீ நேராக செல்லவும்.......! மனைவி: சரி அன்பே.......! 😂
  13. மேலாடை காத்தாட மின்னலிடை கூத்தாட.......! 😍
  14. வணக்கம் வாத்தியார்......! பெண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் ஆண் : என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே பெண் : ஓ நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… ஆண் : உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும் பெண் : உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ஆண் : உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே .....! --- உன் பேரை சொல்லும் போதே ---
  15. போ கா போ ........ ஆங்காங்கே காட்டாறு போலும் சமதளத்தில் கரையை வருடிச் செல்லும் சிற்றாறு போலும் களிநடம் புரிகின்றது........! 17 ம் பகுதியில் அந்தக் கோடுகளால் ஆன (பிக்காசோ மாதிரி மார்டன்) ஓவியம் அருமை .......அதை வரைந்த கருப்பன் பாராட்டுக்கு உரியவர்......! நன்றி கிருபன் ......!
  16. தூள் பறக்க வேலை நடக்குது......இவர்கள் போன்ற தொழிலாளர்களைத்தான் முதலாளிகள் விரும்புவார்கள்.....! 😂
  17. Ariful Islam · Suivre · Today's best photo Leo messi & Emiliano Martínez .....!
  18. வணக்கம் வாத்தியார்........! பெண் : நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது ஊரே கூத்தடிக்குது வாடா வாடா பெண் : ஹே உறக்கம் என்ன கூத்து கட்டு ஒத்தையில கூத்து கட்டு உழைச்சதெல்லாம் போதுமடா விடிய விடிய கூத்து கட்டு ஆண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு ஆண் : துன்பம் இந்த துன்பம் இது மனிதரோடு பிறந்தது உன் கையில் ரேகை போல அழியாமல் கூட வருவது இதை எண்ணி சோகம் என்றால் அட நாமும் என்று சிரிப்பது இது என்றும் முடியாது நம் கடைசி மூச்சில் கலந்தது பெண் : மரம் செடிக் கொடியும் கூட புயலில் வளைஞ்சு கிடக்குது மறுபடி தலை தூக்கி துன்பம் மறந்து சிரிக்குது அட ஏறுங்க வானத்துல ஏறுங்க நல்லா தேடுங்க நட்சத்திரம் தேடுங்க ஓஓ….. பெண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு ஆண் : உன் கண்ணில் ஈரம் கண்டேன் என் மனதில் எங்கோ வலிக்குது முகம் சாய விழி மூட இந்த நண்பன் தோள்கள் இருக்குது இந்த வானம் அது வந்து உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது அதற்காக அது விண்ணில் அடி வேடிக்கைகள் காட்டுது பெண் : சொத்து பத்து சேர்த்தவனும் பொகையாதான் போகுறான் சோகத்துல சிரிப்பு வந்தால் சொகமாக வாழுறான் வாழ்க்கையில் வரைமுறை ஏதடி அட காத்ததான் கட்டி வச்சது யாரடி ......! --- நெருப்பு கூத்தடிக்குது ---
  19. உலகமெங்கும் ஒரே மொழி .......! 😍
  20. சட்டம் ஒரு கோழை ......ஆமையைப்போல்தான் நகரும்.......அப்பவும் அடிக்கடி தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும்......" ஏன் ஜட்ஜ் ஐயா, அந்த நிரூபணமான இரண்டு கொலை வழக்குகளுக்கு முதல்ல சரியான தண்டனையைக் குடுங்க.......பிறகு வரும் குற்றங்கள் நிரூபணமானால் அந்தத் தண்டனைகளையும் குடுங்கள் .......குற்றவாளி இறந்திருந்தாலும் பிரச்சினை இல்லை" .......பல வழக்குகளில் ஒருத்தர் செய்த குற்றங்களைப் பிரித்து பிரித்து 150 வருடங்களுக்கு மேல் தண்டனை கொடுக்கிறார்கள்......அதெல்லாம் சட்டப்படி செய்யும் ஏமாற்று வேலை என்று குடுக்கிறவருக்கும் தெரியும், வாங்கிறவருக்கும் தெரியும்.......பார்க்கிற மக்களுக்கும் தெரியும்.......! 😴
  21. வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே பெண் : மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன் தினம் சொப்பனத்தில் மட்டும் தான் உன்ன நான் சந்தித்தேன் பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம் வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம் சோலி தேடி போன காணாத தூரம் கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம் காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும் ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும் பெண் : தூரமா போனது துக்கமா மாறும் பக்கமா வாழ்வதே போதும்னு தோணும் ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும் கோழி கூவும் போதும் தூங்காம வேகும் பெண் : அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும் உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன் பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே துணி காயுதே பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும் சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும் சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற.......! ---மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.