Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பூனையாயினும் ஒரு நல்ல ஆத்மா தான் நிம்மதியாய் வாழ்வை முடிக்க ஒரு இடத்தை தெரிந்துவைத்திருக்கும் . .......அதன் கணிப்பு வீண் போகவில்லை . .....நிஜமாகவே ஒரு நல்ல இடத்தைத்தான் தெரிந்தெடுத்து வைத்திருக்கு ......கதையும் மிக மிக நன்றாய் இருந்தது . ......! 👍
  2. அட . ......இதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை ........(41) வது கேள்வியை சரியாய் பார்க்காமல் கெத்தாய் பதில் போட்டு விட்டேன் ........ஒருவர் 200 ஓட்டங்கள் அடிப்பாரா என்று . .......அது தவறு , ஒரு அணி சுலபமாய் 200 அடிக்கும் . ........! அதுக்காக அதை திருத்த முடியுமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் .......ஏனென்றால் படிக்கும் போதும் சரி இப்பவும் சரி நான் எப்போதும் திருந்தப் போவதில்லை . .......! 😪
  3. நிமிசத்தில் சுலபமாய் வாழைப்பூவை சுத்தம் செய்யலாம் . .........! 😀
  4. ancient method of well water pumping |நாட்டுப்புற பாட்டு |folk song for agriculture |ஏற்றப்பாட்டு..........! 😃
  5. otsenSpdro:61t9u02,8tt 2u04fr80m4atm3eeseu7hhghgb1 7a27pm9cc · அம்மா செஞ்சா நூடுல்ஸ் Yellow கலர்ல இருக்கும் .. நான் இப்ப செஞ்சது கருப்பு கலர்ல வந்துருக்கு ..🙄"
  6. இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் வீழ்ச்சி மற்றும் எழுச்சி பற்றி நல்ல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன ...........! நன்றி ஏராளன் .......!
  7. வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் பெண் : மோனிகா பெலூஜி எதிர்த்தா எனர்ஜி தலையே சுத்தவீக்கும் சூரவளி பொண்ணாச்சு பெண் : பட்டுனு பாத்தாலே பல்ஸ் ஏத்தும் பாடி கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே இரவ கலராக்கும் ஜிலேபி லேடி சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே ஆண் குழு : மோனிகா மை டியர் மோனிகா மை டியர் மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சுமா சிக்கிகிச்சு மா ஹம்மிங் : ஜும் ஜும் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் ஜும் ஜம் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் லக லக லக லக லக ஜும் ஜும் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் ஆண் : டேய் ஊதுடா அதை ஜூம் ஜூம் ஜூம் ஆண் : என்ன தொலைய வைக்குறியே கொஞ்சம் கொலைய வைக்குறியே உன்ன அடைய வைக்குறியே என் பகல் கனவுலயே ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு ஒரு உண்மை சொல்லவா (வேணா வேணா) சரி கொஞ்ச சொல்லட்டுமா எனக்கு சொத்து சுகம் வந்தா மாத்திகுறேன் உன்தா பத்தலனா மாச மாசம் கட்டுறேன் சந்தா பெண் : உரசாம பத்திக்கவா உதட்டோரம் தித்திக்கவா இருக்காத ஒத்தையில ஒத்தையில ஒருவாட்டி சந்திக்கவா மயங்காட்டி தண்டிக்கவா தயங்காத மெத்தையில மெத்தையில பெண் : சாகும் நேரத்தில் பொலம்பி அழுவாத பூஜை ஆட்டத்தில் இன்னோசென்ட் நானா தொல்லை வறுமை கோலத்தில் நேர்மை பாக்காத இளமை காலத்தில் டீசென்சி நல்லா இல்ல பெண் : நிலவ செவப்பாக்கும் தஞ்சாவூர் காரி மனச ரெண்டாக்கி வரவா கிள்ள இரும்ப கரும்பாக்கும் பப்பாளி லாரி பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல.........! --- மோனிகா பெலூஜி ---
  8. என் ஆசை என்னோடு ...........! 😍
  9. எந்த வகையான நெத்தலி மீன் பொரியலுக்கும் அதிக சுவை தரக்கூடிய லெமன் ரைஸ் .........சொல்லி வேல இல்ல .........!😋
  10. ரசிக்கக் கூடியவர்களுக்கு ஏற்ராற் போல்தான் பாடல்களும் கிடைக்கின்றன கவி . ..... பக்கத்தில் உள்ளேன் ஐயாவின் பக்கத்திலும் நல்ல நல்ல பாடல் வரிகள் உண்டு . ..... பாடல் கேட்கும் போது இல்லாத சுகம் வாசிக்கும் போது கிடைக்கும் ..........இந்த பகுதியை ஆரம்பித்து வைத்த நிழலிக்கு நன்றி . ......! 😂
  11. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் பெண் : தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் .......! --- முதற்கனவே முதற்கனவே ---
  12. நித்திரையில் சித்திரக்கனவு ஒத்திகை பார்க்குது . .......! 😍
  13. நல்லதொரு தோட்டம் மலர்களின் சுரங்கம் ..........! 😍
  14. Creativity கிரியேட்டிவிட்டி · Anbu Anbu ·redonSospt450ut120t6ài44934437973fui3:c12r29i,g0941H72 eft2 · இராணித் தேனீ 🐝" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf8/1/20/1f41d.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.. இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான். எந்த குட்டி எதிர்கால இராணியாக மாறும் என்பதை தீர்மானிப்பது விதியோ ஜீன்களோ அல்ல. அது அவருக்குக் கொடுக்கப்படும் உணவாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு உணவான ராயல் ஜெல்லி (Royal Jelly) காரணமாகும். இந்த அடர்த்தியான, ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தான் மாற்றத்தின் அமிர்தமாக விளங்குகிறது. அதுவே ஒரு சாதாரண குட்டியை அசாதாரணமான இராணியாக மாற்றும் மாயாஜாலம். இங்கே முக்கியமானது விதியல்ல, ஊட்டச்சத்துதான். ராயல் ஜெல்லி என்பது தேனீகள் தயாரிக்கும் ஒரு தனிப்பட்ட திரவமாகும். இது வெண்மையான, கிரீம் போன்ற தோற்றம் கொண்டதாகும். தேனீ உலகில், இந்த ராயல் ஜெல்லி தான் இராணி தேனீயின் வாழ்க்கையும் வளர்ச்சியிலும் முக்கிய ரகசியமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நீர், புரதங்கள், சர்க்கரை வகைகள் (பிருக்டோஸ் மற்றும் கிளூகோஸ் உட்பட), கொழுப்புகள், B வகை வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்ட கலப்பாகும். இதில் உள்ள மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த சேர்க்கை 10-HDA (10-hydroxy-2-decenoic acid) எனப்படும். இது ராயல் ஜெல்லியில் மட்டுமே காணப்படும், சுகாதார நன்மைகளுக்குத் தோற்றம் தரும் தன்மை கொண்டது. ராயல் ஜெல்லி தயாரிக்கப்படுவது இளம் வேலைக்கார தேனீக்களால் (worker bees). அவற்றின் உடலில் உள்ள pharyngeal மற்றும் mandibular glands என்பவற்றின் ஸ்ராவங்களை கலப்பதன் மூலம் இந்த ஜெல்லி உருவாகிறது. குறிப்பாக 5 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் வேலைக்கார தேனீகள் இந்த பணிக்குத் தனிப்பட்டவை. அவர்கள் தங்கள் உடலில் உள்ள கொழுப்பு சுரப்பிகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, பின் அதை pharyngeal gland மூலம் ஜெல்லியாக மாற்றுகிறார்கள். ஒரு புதிய இராணித் தேனீ உருவாக்க வேண்டியபோது, வேலைக்கார தேனீக்கள் விசேட இராணி அறைகள் (Queen cells) கட்டுகிறார்கள். அவற்றில் முட்டை இடப்பட்ட பிறகு, அந்த குட்டிக்குத் தொடர்ந்து அதிகளவில் ராயல் ஜெல்லி வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண குட்டிகள் ராயல் ஜெல்லி பெறுவது வாழ்நாளின் ஆரம்ப 2–3 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அவர்கள் Bee Bread எனப்படும் தேன் மற்றும் மகரந்தக் கலவையை உண்ணுகிறார்கள். ராயல் ஜெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் போன்ற சேர்மங்கள் அந்த குட்டியின் மரபணு செயல்பாடுகளை மாற்றி, சாதாரண தேனீவைக் காட்டிலும் பெரியதாகவும், நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகவும், முட்டை இடக் கூடியதாகவும் மாற்றுகின்றன. இது ஊட்டச்சத்துக்களால் உயிரினரின் விதியை மாற்ற முடியும் என்பதற்கான அபூர்வமான எடுத்துக்காட்டாகும். ராயல் ஜெல்லி தொடர்ந்து பெறும் ஒரே குட்டி தான் இராணியாக மாறுகிறாள். அவள் பெரிதாக மாறுகிறாள், நீண்ட காலம் வாழ்கிறாள், கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறாள், அதை மறுபடியும் கட்டியெழுப்புகிறாள். குழப்பமிருந்த இடத்தில் ஒழுங்கும் ஒற்றுமையும் ஏற்படுத்துகிறாள். அவள் அதிகாரத்துக்காக பிறக்கவில்லை, ஆனால் அதற்கேற்ப உருவாக்கப்படுகிறாள்........! படித்ததில் பிடித்தது.. பகிர்வு பதிவு !!
  15. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·dprsotSone c2919ucu711i1iulm1u6ga1a6cg6790803mt52tt45h15cufa · 1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது. கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள். ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" . அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு. இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள். அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள். 1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும். சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள். சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது. அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது. இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம். எப்படி ஆயினும் ...... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன. படித்ததில் பிடித்தது.... Voir la traduction.....!
  16. உன் கண் உன்னை ஏமாற்றினால் .......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.