Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .........! யுவனின் அற்புதமான பாடல்களில் ஒன்று, எனக்கு மிகவும் பிடிக்கும் . ........! படம் : புதுப்பேட்டை .....! இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது…. மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்….. அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும் ஆண் : ஹோ ஒவ் வோவ் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஹோ ஒவ் வோவ் ஒரு வாசல் தேடியே விளையாட்டு…. ஹோ ஒவ் வோவ் கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஹோ ஒவ் வோவ் கண் மூடிக்கொண்டால்…. ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ….. ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும் ஆண் : தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் ஆண் : ஹோ ஒவ் வோவ் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே ஹோ ஒவ் வோவ் இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே ஹோ ஒவ் வோவ் மனம் வெட்டவெளியிலே அலைகிறதே ஹோ ஒவ் வோவ் அந்த கடவுளை கண்டால்… ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ….. யெஹ் எஹ்…எஹ்….எஹ் லாரா ரர ராரா…..ராரி ரர ஆண் : அது உனக்கு இது எனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் ஆண் : பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம் ஆண் : ஹோ ஒவ் வோவ்ஓஓ….. பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம் ஹோ ஒவ் வோவ்ஓஓ….. பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் ஹோ ஒவ் வோவ்ஓஓ….. கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம் ஹோ ஒவ் வோவ்ஓஓ….. மறுபிறவி வேண்டுமா…. ஆண் : ஆஹ்ஹ லாரா லாரா லாலல்ல லாரலா லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ் ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ…ஹோ ஓஒ….. ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ….வாவ் வாவு வாவ் யெஹ் எஹ் எஹ்…….! --- ஒரு நாளில் வாழ்க்கை ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
பல்லுக்குள் சிக்கிய பல்லியும் பாய்ந்து ஓடி வாழ வழி தேடுது ....... ! 😃- குட்டிக் கதைகள்.
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Sujatha Jaganathan ·teonSpodsr 0au5ug3221739g036h5cg8392fh9af7l5f665f4uuhc1h7ial · படித்து ரசித்த ஒரு அருமையான கதை. ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் . ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, "அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு." அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான். ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? " அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா?" அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு." ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝" Voir la traduction- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேத வியாசரின் தீர்க்க தரிசனம் ..........!- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
நானும் பகிடிக்குத்தான் எழுதினேன் சிறியர் . ........ ! ஒரு தகவலுக்காக . ..... எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே எங்கள் வீதியால் நாய் பிடிக்கிற கூண்டு வண்டியும் கூடவே நாலு , ஆறுபேர் கையில் கம்பி வளையம் கொண்ட தடியுடனும் வந்து தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள் . ..... சிலசமயங்களில் வீடுகளில் வளர்க்கும் நாய்களும் அம்பிடுவதுண்டு , அதை உரிமையாளர் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு போவார்கள் ...... சுமார் ஆறுமாதம் ஒருவருடத்துக்கு தெருநாய்த் தொல்லை இருக்காது ........ இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் .......நீங்களும் பக்கத்து வீதிதானே ........ ஆனால் இப்ப அப்படியில்லை . ...... மிருக அமைப்புகள் அப்படி இப்படியென்று பல அவற்றைக் காப்பாற்றி அதனால் அவை வீதிகளில் பெருகி மனிதர்கள் சிறுவர் எல்லோருக்கும் பயத்தைக் கொடுத்துக் கொண்டு திரிகின்றன . ..... அதையும் தாண்டி முன்பு ஒரு கதை பிரபலம் . ......"சங்கானை சந்தையில் வசித்து வந்த நாய் ஒன்று இந்த பஸ்சுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறதையும் போறதையும் பார்த்து தானும் ஒருக்கால் யாழ்ப்பாணப் பார்க்க வெளிக்கிட்டு தனது சொந்தபந்தத்துக்கெல்லாம் சொல்லி முதிய நாயன்மார் தடுக்கவும் கேளாமல் கிளம்பிச்சுது . ..... முதல் சண்டிலிப்பாயில் ஒரு தாக்குதல் அடுத்து மானிப்பாய்த் தாக்குதலில் மருதடி வயலுக்குள்ளால் விழுந்து எழும்பி ஒருமாதிரி ஆணைக்கோட்டையில் வந்து நிமிர்ந்தால் அங்கு அகோரமான தாக்குதல் ...... இனித் தாங்கேலாது என்று யாழ்பாணக் கனவும் கலைந்து நடுநிசியில் மீண்டும் தட்டுத் தடுமாறி சங்கானை சந்தைக்கே வந்து படுத்து அனுங்கிக் கொண்டு கிடந்தது . ......காலையில் மற்ற நாய்கள் வந்து இதன் நிலையைப் பார்த்து ஆங்காங்கே கிடந்த நாறின மீன்கள், எலும்புகளைக் கொண்டுவந்து இதுக்கு குடுத்து "ஏனனை நீ நேற்று போயிட்டு அதுக்கிடையில வந்திட்டாய் எப்படி இருக்கு யாழ்ப்பாணம் என்று குசலம் விசாரித்தன ...... அதுக்கு இது சொல்லுது நான் எங்கே யாழ்ப்பாணம் போனேன் ....... ஏன் மனுசர் உனக்கு அடிச்சு திரத்திப் போட்டினமோ என்று கேட்க . ......சீச்சீ ....அப்படியே அவங்கள் அடிச்சிருந்தால் கூட என் மனம் ஆறியிருக்கும் ......ஒருத்தரும் என்னைத் தொடேல்ல ஆனால் நம்ம இனம் இருக்கே அதுதான் நமக்கு எதிரியாய் இருக்கு . ....... காணுற இடமெல்லாம் கடி கடி என்று கடித்து உடம்பை ரணமாக்கிப் போட்டுதுகள் , ஆணைக்கோட்டையோட என் கொட்டமும் அடங்கி அங்கால போக முடியாமல் இங்கால வந்திட்டன்" .......அந்த மாதிரி இப்ப நாய்களே நாய்களுக்கு எதிரிகளாய் இருக்குதுகள் . ........! 😘- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிம்பிளா செய்கிறார் . ..... பார்க்கவே நல்லா இருக்கு . .......சாப்பிட்டால் எப்படி இருக்கும் . ......! 😃- தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை
அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு . ..... !- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஒரு ஐந்து பெட்டை நாயை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகாமாக மாறி மாறி ஐம்பது தரம் கொண்டு போனால் 30000 கிடைக்கலாம் ...... பிடிபட்டால் கம்பெனி பொறுப்பல்ல ......! 😃- யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
இவருக்கு நாக்குல சனிபகவான் . ....... ஏதோ வீட்டில நேரத்துக்கு ஒரு வாய் கஞ்சி என்டாலும் கிடைக்குது , அதுக்கும் ஆள் உலை வைக்குது . ......! 😃- இரசித்த.... புகைப்படங்கள்.
சாவின் விளிம்பில் மீன் ........... ! 🤭- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Wonders of Earthscape · Suivre ortdsopSenhm5834i1l74567672h0ggihi5586t7m0cf16a1 f02hlt3cu28 · In March 2022, the Felicity Ace caught fire and sank near the Azores, sending thousands of high-end cars to the ocean floor. Among its cargo were some of the world’s most coveted brands Porsche, Audi, Bentley, and Lamborghini a fortune in luxury swallowed by the sea. The wreck has since become one of the Atlantic’s most haunting modern shipwrecks, capturing imaginations with its mix of wealth, tragedy, and mystery. What lies inside the sunken holds now gleaming symbols of status or corroding relics of desire? But the story carries a darker side too: concerns about leaking fuel, batteries, and materials that could harm fragile marine ecosystems. The Felicity Ace stands as a reminder that even the pinnacle of luxury is no match for the power of the ocean and that human ambition always carries risks when set against the deep........!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- களைத்த மனசு களிப்புற ......!
Football JOE · In September 2009, an 8-year-old Dominik Szoboszlai lined up as a mascot for Hungary vs Portugal, standing just a few steps away from Cristiano Ronaldo, who he has openly described as his idol, then in his mid-20s... Now, 16 years later, Szoboszlai is in his mid-20s, captain of Hungary and set to take on Portugal in Tuesday evening’s World Cup qualifier… with Ronaldo still leading his country at 40 🙌"- அதிசயக்குதிரை
- குட்டிக் கதைகள்.
பல்லும் சொல்லும் போனது போனதுதான் . .......! 😃- இரசித்த.... புகைப்படங்கள்.
பார்வை ஒன்றே போதுமே பாய்ந்து விலங்குகள் ஓடவே ......! 😃- நான் தேடும் செவ்வந்திப் பூவிது...
நல்ல கவிதையுடன் வந்திருக்கிறீர்கள் ...... பாராட்டுக்கள் .......! 👍- உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி
ஆதர்சமான தம்பதிகள் . ........ அவர்கள் யாரிடமும் இரக்கத்தையோ கருணையையோ எதிர்பார்க்கவில்லை .......நடைமுறையில் சாதாரண மனிதர்போல் நடத்தினால் போதும் என்பதைத்தான் விரும்புகின்றார்கள் . ......! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.