Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம் .......! --- பூப்பூக்கும் ஓசை ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மண்ணை நம்பி மரம் இருக்கு ........! 😍
-
குட்டிக் கதைகள்.
pdSonetsoruaiuhm1:m05uf38156t26i00u4e8nt7235 t 4a9,v72frh9ij · சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல... சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்". என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது. அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும். யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும். தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது, அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற, அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு, பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல. என்னைப் பாத்ததும், 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா?' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன். நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான். எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி. அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன். அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான். நான் உடனே கிச்சனுக்குள்ள போய், பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து, பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு, அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு, அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம்". என்றது. அவன் போன சற்று நேரம் கழித்து, இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற, அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம். அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க. திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன், பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ்யை என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்". அவன் பேசி முடித்ததும், தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது. அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா. நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான். அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா. நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
பார்க்க மனசு தவிக்குது . ......! 😉
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் .......! --- கண்ணாளனே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் . .......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அத விடுங்க ....... தப்பு நடப்பது சாதாரணம் கந்தப்பு ........ நீங்கள் சுட்டிக்காட்டியதால் தான் நானும் கவனித்தேன் அவ்வளவுதான் . .......இல்லையென்றால் கிருபன் ஏதோ தான்தான் கண்டுபிடித்ததுபோல் பெரிய பில்டப் குடுத்திருப்பார் .......! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஸ்கொட்லாந்து அணியைப் போடவும் கிருபன் ........! VARRUN......! நன்றி பையா .........! 71 வது கேள்விக்கு இந்தியா என்றும் , 72 வது கேள்விக்கு இங்கிலாந்து என்றும் எழுதியுள்ளேன் கந்தப்பு . ......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றி நமதே ........! 🙂- ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,
ஓம் . .....இதை பார்க்கும்போது எனக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது . ......! 🥲- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ.......! --- வெண்மேகம் பெண்ணாக ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றல் உறங்கிய போதும் . ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…ம்ம்ம்…. பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆ…. பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல .......! --- ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் . .......! 😍- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
"வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது" , பொல்லை குடுத்து அடி வாங்குவது " இரண்டில் ஒன்று நடக்கப் போகுது .....! 😗- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
K. V. Balan · Suivre pdStoosenr7787tui0 àitH112hhrgg211i ggf55f0e2:h9,1fh725787mm · மருத்துவமனையில் இறுதி மூச்சி வாங்கும் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..." "அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?" "இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?" "நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.." " ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'" "சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி" "அது எப்படி?' "நான் சேர்த்தது 9ஐ......." 😳" (இது யாருக்காவது "என்னைப்போல" கடந்த காலத்தை நினைவூட்டினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல).......! 😃- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Siva Raj pnSsderoot3h:0863tfl11,76772ej74 c7gaac0u3vniu0 0f3rfhu2l72i · உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு டென்மார்க்...கார் விலை மிக அதிகம். அதனால் மக்களில் பெரும்பாலும் பேருந்து & மிதிவண்டியில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான். பள்ளியை பொறுத்தவரை மிக தாமதமாகத்தான் படிக்க துவங்குவார்கள். ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக தாமதமாக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள். படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள். எதாவது திட்டத்தை (project) எடுத்து செய்வார்கள். கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூட கொடுக்கும். அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள். 68% வரி. பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் இருதய மருத்துவ நிபுணர் வேலைக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்ட்ட வேலைக்கு போகலாம். மருத்துவர்கள் ஆக விரும்பாதவர்கள் சம்பளத்துக்காக மருத்துவர்களாக ஆகவேண்டியது இல்லை. வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்துவிடலாம். மதிய உணவை கம்பனிகளில் தனியாக உண்ணமாட்டார்கள். அலுவலகத்தில் முதலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாக கூடி ஒரே அறையில் உண்ணுவார்கள். பாராளுமன்றத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர் அனைத்து கட்சி எம்பிக்கள் என அனைவரும் இப்படித்தான் ஒன்றாக கூடி உணவை உண்ணுவார்கள். மக்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும் என்பதால் அரசு பல கிளப்புகளை ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளன.. மாலைகளில் சதுரங்கம் பொம்மை செய்வது இப்படி பல கிளப்களில் சேர்ந்து கலைகளை கற்றுக் கொள்ளலாம்/கூடி பேசலாம். அரசு பல கூட்டுறவு வீடுகளை ஒன்றாக கட்டியுள்ளது. Bofaellesskap என பெயர். 30 குடும்பங்களை குடியமர்த்துவார்கள். இங்கே விதியே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்பதுதான். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடிவருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கமில்லாமல் போகலாம். வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள். பணம் ஆடம்பரம் ஆகியவற்றை சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம்.டபிள்.யூவில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனை கூடுதலாக மதிக்கும் நாடு. அதனால் பணக்காரன் என சொல்லிக்க கொள்ளவே பலரும் கூச்சபடுவார்கள். தன் வளமையை பொருட்களை வாங்கி காட்டமாட்டார்கள். காட்டினால் மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்... ஆனால் இந்தியாவின் பார்வையோ எதை நோக்கி.♥️"- சிரிக்கவும் சிந்திக்கவும் .
உண்மை உரைகல் · பணக்காரர்களின் உண்மை குணம் 🌟 பில்கேட்ஸ் தனது 2017 ஆம் ஆண்டு “Gates Notes” வருடாந்திர கடிதத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பில் கேட்ஸும், வாரன் பஃப்பட்டும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதன்மையானவர்கள் மட்டுமல்ல, மிக நெருங்கிய நண்பர்களும் கூட. ஒருமுறை இவர்கள் இருவரும் ஹாங்காங் சென்றிருந்தபோது, நடந்த சம்பவத்தை பில்கேட்ஸ் விவரிக்கிறார். ஹாங்காங்கில் மதிய உணவுக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம். மெக்டாலன்ட்ஸுக்கு போகலாம் என வாரன் பஃப்பட் சொன்னார். சரி என சொல்லி அங்கே சென்றோம் உலகின் ஆகச்சிறந்த கோடீஸ்வரர்கள் இருவர், சாதாரணமாக ஒரு மெக்டொனால்ட்ஸில் நுழைவதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. உணவு ஆர்டர் செய்து முடித்ததும், "பில்லை நான் கொடுக்கிறேன்" என்று வாரன் பஃப்பட் முன்வந்தார். அதன்பின் அவர் தனது பாக்கெட்டில் கைவிட்டு கிரடிட் கார்டை எடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் வாரன் பஃப்பட் வெளியே எடுத்தது கிரிடிட் கார்டோ அல்லது கட்டுக் கட்டான பணமோ அல்ல; மாறாக, பத்திரிகைகளில் வரும் இலவச உணவுக்கான கூப்பன்களை கத்திரித்து எடுத்து வைத்திருந்தார். அதைத் தேடி எடுத்து கவுண்டரில் கொடுத்து இலவசமாக உணவை வாங்கிவிட்டார்.. "ஹாங்காங்கில் இவர் இப்படி கூப்பன்களை தேடி சேகரித்ததே எனக்கு வியப்பாக இருந்தது..." பல்லாயிரம் கோடிகளை கொண்ட ஒருவர், ஒரு சில டாலர்களைச் சேமிக்க கூப்பன்களைப் பயன்படுத்துவது எனக்கு விந்தையாக இருந்தது. வாரன் பஃப்படிடம் இதைப்பற்றி கேட்டேன் "ஒருவர் பணக்காரர் ஆவது அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதில் இல்லை, தேவையற்ற இடங்களில் எவ்வளவு குறைவாக பணத்தை செலவு செய்கிறார் என்பதில்தான் இருக்கிறது." என்றார் ஆடம்பரத்தை விட எளிமையையும், வீணாக்குவதை விடச் சேமிப்பையும் மதிக்கும் குணத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.....!- குட்டிக் கதைகள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.