Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. குமாரசாமி அண்ணை, உண்மையில்… பல கட்சிகள் உருவாக தமிழரசு கட்சியின் செய்கைகளும் முக்கிய காரணம். ஆனால்… அதை பலர் இங்கு மூடி மறைத்துக் கொண்டு கருத்து எழுதுகின்றதை பார்க்க சிரிப்பாக இருக்குது. 😂 அது சரி…. வெள்ளை அடிக்கிற வேலையில் இறங்கியவர்களிடம் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். 🤣
  2. இம்முறை வியாழேந்திரன் மட்டுமல்ல…. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியில் இருந்த அங்கஜனும் அரசியல் அனாதை ஆகி… இப்போ கேள்விப்படாத ஒரு கட்சியில் தேர்தலில் நிற்கிறார். மக்கள் என்ன தீர்ப்பு வழங்கப் போகின்றார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.
  3. ஒருமுறை மகிந்தவிற்கு…. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைமை வந்த போது, இவர் போன்ற சிலரை விலைக்கு வாங்க வேண்டி வந்தது. அந்த நேரம் பல கோடிகளில் நல்ல விலைக்குப் போனவர்தான் இவர். 🙂
  4. இந்தத் தலைமுறை மக்கள், சென்ற தலைமுறை மக்களை விட மன அழுத்தத்துடன் அதிகமாக வாழ்கின்றார்கள். காரணம்… 25 வயது வரை கல்வி, பின் 30 வயது வரை நல்ல ஒரு வேலையில் கால் பதிக்க போராட்டம், பின் தனக்கென வீடு கட்டும் கனவு என்று அவர்களின் தேடல் விசாலமாகும் போது குடும்பத்துடன் இயல்பாக இருக்கும் தன்மை குறைவாக காணப்படுகின்றது. எல்லாவற்றையும் வெட்டி ஆடி…. தான் சாதித்து விட்டேன் என்ற நிம்மதி வரும் போது… அவன் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கின்றான். மிக முக்கியமாக மேலே குறிப்பிட்டவை…. அந்த அந்தக் காலத்தே அந்தந்த வேலைகளை திட்டமிட்டு செய்பவர்களுக்கானது. திட்டமிடாமல் வாழும் வாழ்க்கை… இறுதி வரை நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரப் போவதில்லை.
  5. முன்பு தேர்தல் என்றால்…. ஐந்து அல்லது ஆறு கட்சிகள்தான் போட்டியிடும். அவை மக்களுக்கு பழக்கமான கட்சிகள் என்ற படியால், மக்கள் குழம்பாமல் வாக்கு போட்டு விட்டு சென்று விடுவார்கள். இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣
  6. ஆள்…. ஆசைக்கு இராஜாங்க அமைச்சராகவும் இருந்திட்டார். 😁
  7. ராமலிங்கம் சந்திரசேகர் என்ற தமிழரின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. இவர் கடந்த முப்பது வருடத்துக்கு மேல் ஜே.வி.பி. மற்றும் அதன் வழி வந்த தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கின்றார்.
  8. வைத்தியர் அர்ச்சுனா தனது குழுவினருடன் சுயேச்சையாக போட்டியிடுகின்றார். சின்னம்: மருத்துவர் ஏற்றும் ஊசி 💉
  9. பொதுஜன பெரமுன (மகிந்தவின் கட்சி) கீதநாத் காசிலிங்கம்… (சின்னம்: தாமரை மொட்டு) நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்ற அருண் சித்தாத்தும் தனது குழுவுடன் போட்டியிடுகின்றான்(ர்)
  10. ஜனநாயக தேசிய கூட்டணி என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன், கண்டு பிடிக்க முடியவில்லை ஈழப்பிரியன்.
  11. ரஜனியின் "வேட்டையன்" படம் வெற்றி பெற வேண்டி, மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்.
  12. சட்டமானி அல்ல சட்டமாணி என்பதே சரி. தமிழ் proof reading கூட பார்க்க நேரமில்லாத தமிழரசு கட்சி.
  13. ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித் பிரேமதாசாவின் கட்சி) முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார் அவர்களை முதன்மை வேட்பாளராக கொண்டு வடக்கில் தேர்தலை சந்திக்கின்றது. (சின்னம்: ரெலிபோன்.)
  14. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.
  15. "ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? "ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். மக்கள் எப்படி, குழம்பாமல் வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.
  16. பல நாட்களுக்கு முன்பிருந்தே எச்சரித்துக் கொண்டு வந்ததால்... உயிர்ச் சேதம் ஒப்பிடடளவில் குறைவு என நினைக்கின்றேன்.
  17. அவர் நன்றாக உழைத்து விட்டதாக சொல்கிறார்கள். இனி தேர்தலில் நின்று வெல்லும் சந்தர்ப்பமும் இல்லை. அதனால்... பயந்து ஒதுங்கியது மாதிரி இல்லாமல், வேட்பு மனு தாக்கல் செய்த மாதிரி இருக்கட்டுமே என்று ஒரு நாடகம் ஆடி உள்ளார் என்றே நினைக்கின்றேன்.
  18. கல்வி கற்ற இளையவர்... அரசியலில் முன்மாதிரியாக இருப்பார் என்று பார்த்தால், ஆரம்பத்திலேயே சுத்துமாத்து செய்ய வெளிக்கிட்டு விட்டார். போற போக்கில் சுமந்திரனையே... தூக்கி சாப்பிட்டு விடுவார் போலுள்ளது. 😂
  19. நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பகிறது. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403716
  20. வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403789
  21. ஜப்பானைச் சேர்ந்த பிரபல அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியமைக்காக இந்தப் பரிசை பெற்றுள்ளனர். ஹிபாகுஷா என அழைக்கப்படும் குறித்த அமைப்பினர், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403766

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.