Everything posted by யாயினி
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அல்வாயன் அய்யா..ஏன் இந்த கொலை வெறி.🤭
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
வெளிவாரி பட்டதாரியாக இருக்கலாம் ..அந்த அடிப்படையில் பார்த்தால் குறைந்த வயதில் படித்து முடித்தாரோ ..?
-
வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
அங்குள்ள மக்கள் எப்போதும் கஸ்ரம் என்று சொல்லிக் கொண்டே தானே இருக்கிறார்கள்..அண்மையில் ஒரு பெண்மணியோடு பேசும் போது பல தரப்பட்ட உதவி கோரல்களை முன் வைத்தார்...உங்களுக்கு யாரும் வெளி நாட்டில் இல்லயா.... உதவி செய்வதில்லையா என்று கேட்டேன்...இருக்கிறார்கள் ஆனால் உதவி செய்ய முன் வாறார்கள் இல்லை என்றார்..எதனால்........ஒரே உதவி கேட்பதால்...அப்படி என்றால் தற்போதைய முக்கிய உதவியாக என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று கேட்கும் போது..........தனது தேவைக்கு ஒரு ஒன்றரை லட்சம் ...மகனது படிப்புக்கு உதவி தேதை மற்றும் அவருக்கு கணணியோ அல்லது கைப் போணோ வேணும்.அதை விட யூருப் செய்ய விருப்பம் அதற்கும் முடிந்தால் அல்லது யாராவது ஸ்பொன்ஸர் செய்தால் நன்று...இப்போ சொல்லுங்கள் அய்யா..மக்கள் எதை நோக்கி போகிறார்கள்..
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
Ragulan Subramanijam 1h · 04.01.2025 #சட்ட ரீதியாகவே நாங்கள் #சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகிறோம்!! #இளங்குமரனுக்கு சட்டத்தை கையில் எடுக்க முடியாது - #தொழிலதிபர் பரபரப்பு #குற்றச்சாட்டு!! சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம் – இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்றார் - சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர்(jaffna #city #hardware)தெரிவிப்பு! சட்டரீதியாகவே நாம் சுண்ணக்கல் “சல்லி” வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாடுகள் தொழில் முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றும் செயற்பாடாக இருப்பது போன்று உணர்வதாக வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (04.01.2025) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சட்டரீதியான தரவுகளை அறியாது, உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுதும் வகையில் செயற்பட்டுள்ளார். இதனால் நேரடியாக பயன்பெறும் 180 தொழிலாளர்களுடன் 68 ஆண்டுகள் பாரம்பரியத்தை கெண்டுள்ள எமது வியாபார நிறுவனத்தின் நற்பெயருக்கு திட்டமிட்ட வகையில் சேறுபூசப்பட்டுள்ளது. இதையடுத்து நாம் நாளுடன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். கடந்த வியாழனன்று சாவகச்சேரி பொலிஸ் எல்லைக்குள் சுண்ணக்கல் சல்லியை திருமலைக்கு கொண்டுசென்ற தமது பார ஊர்தியை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குறுக்கான நிறுத்தி இடைமறித்திருந்தார். அத்துடன் எமது நிறுவனத்தின் வாகன சாரதியிடம் ஆவணங்களை கேட்டு மிரட்டியதுடன் கொண்டு சென்ற பொருளை மூடியிருந்த போர்வையையையும் கிழித்து அடாவடித்தனம் செய்துள்ளார். ஆனால் சாரதி தம்மிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் காண்பித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கறித்த சுண்ணக்கல் சட்டடரீதியாகவெ கொண்டு செல்லப்படுகின்றது என எடுத்துக் கூறியும் நாடாளுமன்ற உறுப்பினர் அது சட்டவிரோதம் என கூறி எமது பார ஊர்தி கொண்டுசென்ற சுண்ணக் கல்லுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதேநேரம் குறித்த வியாபாரத்தை நாம் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் இந்த சுண்ணக்கல் சல்லிகளை கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக கறித்த சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்தும் வருகின்றோம். கடந்த காலங்களிலும் எமது நிறுவனத்தின் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவாரால் சுமத்தப்பட்டது. ஆனாலும் அன்றிருந்த ஒருங்கிணைப்பு குழு நிர்வாகம் எமது வியாபார நடவடிக்கைகள் சரியானதென்று ஏற்றுக்கொண்டு அதை சட்டரீதியாக முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்தது. இதேநேரம் நாம் அகழப்படும் சுண்ணக்கல்லை நேரடியாக வியாபாரம் மேற்கொள்ளவில்லை. வலிவடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியில் இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களை தற்போது மக்கள் மீளவும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிலங்களில் இந்த சுண்ணக்கல் பாறைகள் அகழப்பட வேண்டியதும் கட்டாயமாக இருக்கின்றது. இதனால் குறித்த நிலங்களின் உரிமையாளர்கள் அனைத்து துறைசார் திணைக்களங்களிலும் அனுமதியை பெற்று கனரக வாகனங்கள் கொண்டு அனுமதியளிக்கப்பட்ட வரையறைக்கு ஏற்ப சுண்ணக் கற்களை பெரும் செலவு கொடுத்து அகழ்ந்து வருகின்றனர். இதேநேரம் இந்த சுண்ணக்கல் அகழ்வை அப்பகுதிகளை சேர்ந்த பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாகவே காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றார்கள். அவ்வாறு அகழப்படும் சுண்ணக் கற்களை காணி உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றார்கள். அதை அப்பகுதியில் இருக்கும் 65 இற்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள் (“கிறெசர்”) தமது தொழில் நடவடிக்கைக்கான அனைத்து அனுமதிகளையும் துறைசார் தரப்பினரிடம் பெற்று தமது ஆலைகளுக்கு கொண்டு சென்று உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்கின்றார்கள். இவ்வாறு விற்பனை செய்யும் சுண்ணக்கல் சல்லிகளையே நாம் கொள்வனவு செய்து திருகோணமலையிலுள்ள சிமெந்து ஆலைக்கு விற்பனை செய்து வருகின்றோம். அத்துடன் குறித்த சுண்ணக்கல் சல்லியை வீதியால் கொண்டு செல்லவோ அல்லது வியாபாரம் செய்யவோ எதுவித அனுமதியும் பெற தேவையில்லை என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக எமது வாகனங்கள் இரு தடவை நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட்டு அது சட்டரீதியானதென உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விடயம் தொடர்பில் ஆராயாமால் அல்லது ஏதொவொரு காரணத்தை முன்னிறுத்தி இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார் என உணர முடிகின்றது. இவரது இந்த செயற்பாடானது யாழ் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களையும் முதலீட்டாளர்களையும் அச்சுறுத்துவது போன்றும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் தரப்பினர் கைவிட்டு முதலீடுகளையும் முதலீட்டாளர்களையும் ஊக்குகவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது All reactio
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
அத்தனை பிள்ளைகளுக்கும் நினைவு நாள் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு அவர்களது குடும்பத்தினருக்கும ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
-
பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு Published By: Vishnu 01 Jan, 2025 | 01:47 AM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகத்தெரிவித்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த போலியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி சார்பில் முறைப்பாட்டை பதிவு செய்த சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவராலேயே இவ்வாறான பொய்யான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியுடன் பல்வேறு விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பொய்யான தகவல்களே பகிரப்பட்டுள்ளன. இதில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது. அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்கள் இவ்வாறான மிக மோசமான போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அரசியல் பழிவாங்கலுக்காக தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மிக மோசமான செயற்பாடாகும்.எனவே குறித்த நபரின் முழுமையான தகவல்களை நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம்.இது குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும்.அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/202674
-
மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா
மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா Published By: Vishnu 01 Jan, 2025 | 01:38 AM (இராஜதுரை ஹஷான்) மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படவில்லை.பயங்கரவாதிகள் எவரும் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவும், குண்டுத்தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கவில்லை.இவர் தனியாக சென்றா யுத்தக் களத்தில் போரிட்டார். நாங்கள் போரிடவில்லையா, யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவ தளபதியான எனது பாதுகாப்பு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது. அப்போது எமக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா, என்னை வெலிகடை சிறைச்சாலையில் அடைத்த போது அங்கும் விடுதலை புலிகள் அமைப்பினர் இருந்தனர். பயங்கரவாதிகளுடன் இருந்த எனக்கு சிறைச்சாலையில் மேலதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது என்னை படுகொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஸ் என்ற பயங்கரவாதி என் அருகில் அமர்ந்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த ராஜபக்ஷ 'பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்'என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை அனுமதிக்க போவதில்லை. யுத்தம் தீர்வல்ல என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டது. விடுதலை புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது வைராக்கியம் இருக்கவில்லை.2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை புலிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்டது. ஆகவே மஹிந்தவுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. ட்ரோனர் கருவி ஊடாக மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பைத்தியம் கிடையாது.ஏனெனில் மிக் விமானத்தை காட்டிலும் ட்ரோனர் கருவி ஊடாக தாக்குதலுக்கு அதிக நிதி செலவாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரபுக்கள் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். ஆகவே அவருக்கு 30 பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது போதுமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/202673
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்; புலமைப் பரிசில் பரீட்சை குறித்து துரித நடவடிக்கை - பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்; புலமைப் பரிசில் பரீட்சை குறித்து துரித நடவடிக்கை - பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர Published By: Vishnu 01 Jan, 2025 | 01:30 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் இடம்பெறும் போதே அந்த பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பரீட்சை பெறுபேறுகளை துரிதமாக வெளியிட எதிர்பார்க்கின்றோம். முதலாம் கட்ட விடைத்தாள் திருத்த பணிகள் நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. மீண்டும் 10ஆம் திகதி, 18ஆம் திகதி, பெப்ரவரி முதலாம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இப்பணிகள் முன்னெடுக்கப்படும். ஏப்ரலில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். எனினும் தினத்தை எம்மால் தற்போது ஸ்திரமாகக் கூற முடியாது. புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முயற்சிக்கின்றோம். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆழமாக மதிப்பாய்வு செய்து வருகின்றோம். விரைவில் இது குறித்த தீர்மானமொன்றை எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம். தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு பரிந்துரையையும் எம்மால் முன்வைக்க முடியும். எதிர்வரும் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் 3000க்கும் மேற்பட்ட ஆரம்ப பாடசாலைகள் உள்ளன. அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் 6ஆம் தரத்துக்காக வேறு பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். எனவே இவ்வாறான காரணங்களை கவனத்தில் கொண்டு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண முயற்சிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/202672
-
தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது
தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது Published By: Vishnu 01 Jan, 2025 | 01:27 AM (செ.சுபதர்ஷனி) 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தும்புதடியினுள் மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (30) பார்வையிட சென்றிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு தனது கணவரை பார்வையிட சென்ற பெண் உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்று வழங்கியுள்ளதுடன், சிறைச்சாலை வளாகத்தை சுத்தம் செய்வதற்கென கூறி பிளாஸ்டிக் தும்புத்தடி ஒன்றையும் கொண்டு வந்து சிறைக்கைதியிடம் வழங்க முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தும்புத்தடியை பரிசோதித்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான போதைப்பொருள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின், ஐஸ், ஹசிஸ் மற்றும் ஹேஷ் ஆகிய போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் களுத்துறை வடக்குப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 35 வயதான பாணந்துறை அலுபோமுல்ல பகுதியை சேர்ந்தவராவார். மேலும் சிறைச்சாலையினுள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக போதைப்பொருளை கொண்டு வந்து வழங்க முற்பட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை கைதான சந்தேகநபர் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/202671
-
வருடச் செய்முறை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்தந்த ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்தோம், பார்த்தோம் என்ற தொகுப்பு ஒன்று வரும்.இப்போ ஒரு சில ஆண்டுகளாக அந்தப் பகுதி வருவதில்லை.உங்களின் வருடச் செய்முறையைப் பார்த்துட்டு மறுபடியும் வந்துட்டு என்று நினைத்தேன்.🖐️
-
சிரிக்கலாம் வாங்க
இந்தப் பகுதியை விவாத மேடை ஆக்க வேண்டாமே என்று பார்க்கிறேன்..ரம்பின் முடிவுக்கு நான் முழு ஆதரவு.ஒருவர் தன் திறமையை வளர்த்துக் கொள்வதற்கோ அல்லது வருமானம் ஈட்டுவதற்கோ நான் எதிர்ப்பு இல்லை.ஆனால் அடுத்த வீட்டு பிள்ளையை பாவாடை சேலைக்கு போடும் சட்டையோடு நிற்க வைத்து படம் மற்றும் வீடீயோ எடுத்து விளம்பரப்படுத்துவது மகா தப்பு.அப்படியானவர்ளிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.நன்றி.
-
சிரிக்கலாம் வாங்க
இந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம். இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..
-
திருகோணமலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை சீனத் தூதுவர் வழங்கிவைப்பு
புழு , பூச்சியோடு குடுக்காமல் இருந்தால் சரி.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
அனேகமாக செய்யப் பட வேண்டியவற்றை வைத்தியர் அர்ச்சனாவிற்று சுட்டிகாட்டும் போது கவனத்தில் எடுக்கப்படுகிறது.ஆகவே இந்த சுகாதார கேடான களிப்பிடங்களுக்கும், கிணறுகளுக்குமான தூரம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் இதர விடையங்களையும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்வது நன்று..
-
மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்🙏
-
ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!
சரி செய்கிறேன்.நன்றி
-
வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு
வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு 29 Dec, 2024 (நமது நிருபர்) பல முக்கிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், திறன் இன்மை மற்றும் தவறான முகாமை காரணமாக சுமார் 1.44 பில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அண்மைய தேசிய கணக்காய்வறிக்கை இந்த விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த கணக்காய்வு அண்மையில் நிறைவுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் 38 நகர்ப்புற மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் பொது, உள்நாட்டு பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட கால அளவிலிருந்து ஏழுமடங்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுமானத்துறையில் ஒப்பந்ததாரர்களை முன்னகர்த்திச் செல்வதற்கு அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், 330 முதல் 2,158 நாட்கள் வரையிலான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சால் செயற்படுத்தப்பட்ட, முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களாக இவை காணப்படுகின்றன. குறித்த திட்டங்கள் நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களின் விரிவாக்கம், தேசிய சமூக நீர் வழங்கல் துறையின் திறன் மேம்பாடு, துறை பயிற்சி, நீர் தர அடையாளம், முகாமை ஆகிய நான்க கூறுகளாக காணப்படுகின்றன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 183.90 மில்லியன் டொலர்கள் (27,590 மில்லியன் ரூபா) ஆகும், இதில் 165 மில்லியன் டொலர்கள் (24,750 மில்லியன் ரூபா) சர்வதேச அபிவிருத்தி சங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது, மீதமுள்ள 2,840 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தாலும் சமூக அமைப்புக்களின் பங்களிப்புகளாலும் ஈடுசெய்யப்படுகின்றது. குறித்த திட்டமானது 2015 டிசம்பர் 7ஆம் திகதியன்று தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்று முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் 2023 டிசம்பர் 31, வரை ஒப்பந்தக்காரர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்களில் கோட்டியாகுமபுர மணல் வடிகட்டி தொட்டி பிரதானமானதாகும், அங்கு தொட்டிகள் பயன்படுத்தப்படாததால் 1.7 மில்லியன் ரூபா முதலீடு பயனற்ற நிலையில் உள்ளது. இதேபோல், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தில் முறையற்ற திட்ட துணைப்பிரிவுக்காக 599 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது, இது அரசாங்க கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் திட்ட காலக்கெடுவில் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று முழலங்காவில் நீர் வழங்கல் திட்டத்தில், கூடுதல் பணிச் செயற்பாடுகள் மற்றும் திட்ட முன்னெடுப்பு நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, செலவில் 267 மில்லியன் ரூபா மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களுக்கு சமூக பங்களிப்புகளில் 551 மில்லியன் ரூபா வசூலிப்பதற்கு தவறவிடப்பட்டுள்ளதால் நிதியில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக, கிளிநொச்சி மாவட்ட திட்டங்களுக்கான துணை ஒப்பந்ததாரர்களுக்கு 19 மில்லியன் ரூபா நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சிகைளால் மொத்தமாக 1,437.7 மில்லியன் (தோராயமாக 1.44 பில்லியன் ரூபா) நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகும். இந்த தாமதங்கள் மற்றும் திறமையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கணக்காய்வு அறிக்கையில் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://www.virakesari.lk/article/202456
-
ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!
ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு! 30 Dec, 2024 கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை - வட்ட எனும் வயல் பகுதியில் யானை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உயிரிழந்துள்ளது. இந்த யானை ஞாயிற்றுக்கிழமை (29) காலை எழும்ப முடியாத நிலையில் வயலில் விழுந்து கிடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இவ்வாறு எழும்ப முடியாமல் விழுந்து கிடந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் யானை உயிரிழந்துள்ளது. https://www.virakesari.lk/article/202501
-
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் கைது
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் கைது 30 Dec, 2024 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய திங்கட்கிழமை (30) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் உள்ளடங்களாக 8068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கடந்த 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (29) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 401 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 53 சாரதிகள், அதிக வேகத்தில் வாகம் செலுத்திய 48 சாரதிகள், விதி மீறல்களில் ஈடபட்ட 1350 சாரதிகள், அனுமதிபத்திர உரிமை மீறல் தொடர்பில் 865 சாரதிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுடன் தொடர்புடைய 5,351 சாரதிகள் உள்ளடங்களாக 8,068 சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரத்துக்கு இடைப்பட்ட தொகையில் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும். மேலும் பொது போக்குவரத்து வாகன சாரதிகள் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வதும் அவசியம். மது போதையில் வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து வாகன சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கிறேன். மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார். https://www.virakesari.lk/article/202502
-
இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அமைச்சர்வைக்கு வழங்கப்பட்டுள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அமைச்சர்வைக்கு வழங்கப்பட்டுள்ளது - நளிந்த ஜயதிஸ 30 Dec, 2024 இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை அறக்கட்டளைகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அறக்கட்டளைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இலங்கை அறக்கட்டளை ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மதிப்பிற்குரிய இலங்கை அரசின் அடித்தளத்தைத் திட்டமிடும், பணி மற்றும் தொலைநோக்கு பார்வையை வழிநடத்தக்கூடிய அறிவுசார் வளங்களை உருவாக்கி, அரசியல்வாதிக்கு சரியான வழிகாட்டலை வழங்கும் நிறுவனமாக இலங்கை அறக்கட்டளை நிறுவனம் மாற்றப்பட வேண்டும். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அறக்கட்டளை நிறுவனம் தற்போது முன்னணி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முதியோர் கல்வி மற்றும் பயிற்சி மையமாக இயங்கி வருகிறது. அறக்கட்டளை நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இங்கு பணிபுரியும் அனைவரும் அரசாங்கத்தின் திசையை தீர்மானிக்கும் மிக முக்கிய பிரஜைகளாகவும் அதிகாரிகளாகவும் இருப்பது அவசியம். அரசாங்கத்தின் எதிர்கால நோக்கை இனங்கண்டு அவர்கள் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்படும் புதிய அமைச்சரவை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கியுள்ளனர். இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேறாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம் எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது. புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவுப் பெற்றுள்ளது. அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவிவகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர். தற்போது நாட்டில் தேங்காய்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதற்கு குரங்குகள் மாத்திரம் காரணமல்ல. குரங்குகள் அவற்றை சேதப்படுத்துவதற்கு முன்னரே தேங்காய் விளைச்சளில் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. எனினும் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படு வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/202503
-
வடகிழக்கில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்கு உதவத் தயார் - ரவிகரன் எம்.பி
வடகிழக்கில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்கு உதவத் தயார் - ரவிகரன் எம்.பி 30 Dec, 2024 வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்தகாலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலைதெரிவித்துள்ளார். இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வியில் மீள் எழுச்சி தேவையெனவும், அதற்காக உதவுவற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருகோணமலை - பத்தாம்குறிச்சி, அறிவொளிமையம் கல்விநிலையத்தில், கல்விபயிலும் மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது, முல்லைத்தீவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த மாணவர்கள் வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குசென்றதுடன், கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் மாணவர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்தகாலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். எனவே அனைவரும் கல்விகற்கவேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெறவேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கவேண்டும். எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றிபெறவேண்டும். மாணவர்கள் சிறந்தமுறையில் கல்விகற்பதற்காக உதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருக்கின்றோம். இவ்வாறிருக்கும்போது வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசியரீதியில் முதல்நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்தமுடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது. அதேவேளை கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கவேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக்கொண்டுவரவேண்டும். இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்துவிளங்கும்போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/202504
-
16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.
16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. 30 Dec, 2024 மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29) மாலை கரைக்கு வந்தது. இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர். https://www.virakesari.lk/article/202505
-
எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு
எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு 28 Dec, 2024 (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 82(ஏ) பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து 3 மாத காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்தம் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை 2025.02.15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.
-
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு 28 Dec, 2024 (நமது நிருபர்) கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலி உத்தரவு கடிதங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதுகுறித்து கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், மோசடியைக் குறைப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கனடாவின் வெற்றிக்கு குடியேற்றம் எப்போதுமே ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது. கனடாவிற்கு சிறந்த மற்றும் பிரகாசமானவற்றை வரவேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் . இதன் மூலம் அனைவருக்கும் தரமான வேலைகள், வீடுகள் மற்றும் அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவைப் பெறலாம் என்றார்.