குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜேர்மனியில் இன்று அதியுச்ச வெப்ப நாளாக சொல்கிறார்கள். இதே நிலை தொடராது. அப்படி ஒரு மாதம் தொடர்ந்தால் ஜேர்மனியின் பாதி சனத்தொகை குறைந்து விடும் போல் உள்ளது.🤣 பல பாடசாலைகளை மூடியே விட்டார்கள்.😉
-
யாழ். செம்மணி மனித புதைகுழி விவகாரம் : விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – அரசாங்கம்
சிங்கள விசுவாச தமிழ் இணக்க அரசியல் தலைவர்கள் மாட்டுப்படுவார்களாக....
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் போது மன்னர் ஷா அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பதுக்கி வைத்த சொத்துக்கள் சொல்லில் அடங்காதவை.அந்த பணத்தை(தங்கம்) கொடுத்துதான் அமெரிக்க தூதரக பயணக்கைதிகளை மீட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்த பயணக்கைதிகள் அதிரடி மீட்பு விடயத்தில் அமெரிக்கா தோல்வியடைந்து சேறு பூசிக்கொண்ட விடயம் பெரிய அவமானம்.இன்று பழி தீர்த்து விட்டார்கள். அந்த அரச பரம்பரைகள் ஒழுங்காக இருந்திருந்தால் இஸ்லாமிய புரட்சிகள் வந்திருக்கவே மாட்டாது. அந்த மன்னர் பதுக்கி வைத்த சொத்துக்களை வைத்து தான் மன்னர் பரம்பரை மேற்கு நாடுகளில் இன்றும் உல்லாசமாக வாழ்கின்றார்கள்.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
நான் ஊரை விட்டு வெளியேறியதலிருந்து இன்னும் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. மானஸ்தன் குமாரசாமி 😎
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
தம்பியருக்கு ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது 🤭
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தற்போது அணு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள நாடுகளுக்கு என்ன பிரச்சனை என்பதையும் சிந்திக்க வேண்டும். ஏன் மேற்குலகு மீது அஜாரகங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதையும் ஆராய வேண்டும். தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்தித்தால் இவர்கள் செய்வதெல்லாம் சரியாகத்தான் தெரியும். எனது பார்வையில் மேற்குலகு அவர்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே முக்கிய காரணம் என நினைக்கின்றேன். கியூபா இன்று என்ன பாவம் செய்தது? மாறுபட்ட அரசியல் கொள்கையை தவிர.....
-
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்
என்ரை குஞ்சு,தங்கம் மெதகொட சாமி! இஸ்ரேல் ஆசியாவிலதான் இருக்கு சாமி 😎
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
சீனாக்காரன் அமெரிக்க வான் வெளியில் பலூன் விட்டு விளையாடியதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றீர்கள்.🤣
-
வணக்கம்
வணக்கம் வாருங்கள். 🙏 உங்கள் பழைய பெயர் என்னவாக இருக்கும்? 🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடவுள் இல்லை என்று சொன்னால் நாத்தீக விழிப்பு கூட்டங்களை நடத்துங்கள். ஓம் நமச்சிவாய.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
அணுகுண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது. மக்கள் நலனை சரியாக கவனிக்கணும். வெளி நாட்டிற்கு வந்து படித்தால் மட்டும் போதாது. வெளிநாட்டில் படித்ததை சொந்த நாட்டிற்கு பிரயோசனப்படுத்தணும்.😁 சுந்தர் பிச்சை மாதிரி விலை போகக்கூடாது. 🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேன் விடயத்தில் அமெரிக்கா அடக்கி வாசிக்கின்றது. அது இஸ்ரேல் விடயத்திலும் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது. அடுத்த அதிர்ச்சி வைத்தியம் உக்ரேனுக்கு என நினைக்கின்றேன். பொதுவாக சொல்லப்போனால் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பெரிய பிரித்தானியாவுக்குமானதாக இருக்கலாம். ஆக்கிரமிப்பும் அழிவும் மேற்குலகிற்கு கைவந்த கலை.அதன் விளைவுதான் இன்றைய உலக நிகழ்வுகள்.
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளான இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் ஐரோப்பிய அமெரிக்க நலன்புரி நிறுவனங்களால் இன்றும் பஞ்ச நிவாரண உதவிகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இந்தியாவிற்கு என பிரத்தியேக சிறுவர் வறுமை என இன்றும் ஜேர்மனியில் நிதி சேகரிக்கின்றனர். அம்பானியின் ஆடம்பரமான திருமண நிகழ்வின் பின்னரும் இந்த உதவிகள் தொடர்வது அதிசயத்திலும் அதிசயம். உலகில் தன்னை புதிய வல்லராசாக காட்டிக்கொள்ள முனையும் சீனாவிற்கு மேற்கத்திய நாடுகள் செய்த உதவிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் அதை செய்து கொண்டே இருக்கின்றன. கூட்டிக்கழித்து பார்க்கப்போனால் சந்ததி சந்ததியாக இனப்படுகொலை /இன அழிப்பு செய்துவரும் சிங்கள ஸ்ரீலங்கா எனும் இனவாத நாட்டிற்கு சென்றுவரும் வெள்ளை உல்லாச பயணிகளுக்கு செங்கம்பளம் விரிப்பது பற்றி யாரும் பேச மாட்டார்கள். நல்ல காலம் தனி நாடு அமையவில்லை. அதுவும் வந்திருந்தால் தமிழர்களுக்கு தமிழர்களே முற்று முழுதான எதிரிகள் ஆகியிருப்பர்.
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
முன்னரெல்லாம் குப்பைகளை எரித்தார்கள் பாரதூர விளைவுகள் வரவில்லை. ஆனால் இன்றைய குப்பைகளோ மனித குலத்திற்கே பங்கம் விளைவிக்கும் குப்பைகளாக இருக்கின்றது. எமது முன்னோர்களை போல் இயற்கையோடு சம்பந்தப்பட்ட பொருட்களை பாவிக்க இன்றைய இளையோரை வழிநடத்தி செல்ல வேண்டும்.
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
எதிரிக்கு மட்டுமே தெரியும் தன் எதிரியின் பலம்.
-
அணுசக்தி மையங்களில் ஆய்வுக்கு அனுமதி மறுக்கும் இரான் - அமெரிக்காவின் கோபத்தால் நிகழப்போவது என்ன?
ஈராக்கில் வெறும் தார்ப்பீப்பாவை காட்டி சதாம் ஹுசையின் அணு ஆயுதம் தயாரிக்கிறார் எண்டு சேட்டை விட்டதெல்லாம் ஈரானோட சரிவராது எண்டு நினைக்கிறன். 😂 ஈரான் பலமாக இருக்கிறதோ இல்லையோ ....... சீனா தன் பலத்தை ஈரான் மூலம் காட்டும். ஹலோ இஸ்ரேல் மருந்து எவரெடி. எப்ப எண்டதுதான் தலையிடி. 😎
-
பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை
நேர பார்த்து ரசித்து விட்டு போயிருக்கலாம். போட்டோ எடுத்து வீட்டை கொண்டு போய் வைச்சு ரசிக்க நினைச்சது தான் தப்பு..😎 விசர் பொடியன்.🤣
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
இனவாத அரசுடன் சேர்ந்து அவர்களுக்காக தம் இனத்தவர்களையே கொத்துக்கொத்தாக கொலை செய்த டக்ளஸ்,சித்தார்த்தன் கும்பலை நியாயப்படுத்த முயல்கின்றீர்கள். முதலில் கொலைகள் ஏன் நடத்தப்பட்டன என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் சொல்வது இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு மட்டும் அல்ல.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
கொலை என்பதே தவறான விடயம். இதில்..... உலகில் கொண்ட கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களை கொலை செய்வது அதிசயமல்ல. ஆனால்.... நியாயமான கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களை / குறுக்கீடு செய்பவர்களை கொலை செய்வதற்கும்.......நியாயமான கொள்கையாளர்களை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து கொலை செய்பவர்களுக்கும் நிறைய வேற்றுமையும் வித்தியாசங்களும் உண்டு.
-
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
நான் இப்ப உந்த விளையாட்டுக்கு வரேல்லை.....ஒரு பக்க கிட்னி எடுத்தாச்சு....மற்றதை வைச்சு சமாளிச்சுக்குக் கொண்டிருக்கிறன்.🤣
-
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
நல்ல விடயம். அப்பாவி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடட்டும். இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் எதிரொலிதான் இது.
-
சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
நான் என் மண்ணின் மைந்தர்களை விவசாயம் சம்பந்தமாக அவர்கள் தலையில் அடித்து கொண்டாலும்..... யாழ்மாவட்ட விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளுக்கு நியாய விலை கிடைக்கா விட்டால்..... விவசாயம் செய்யும் நாட்டமும் குறைந்து போக காரணம் உண்டு. என் அனுபவத்தில் உழைப்பிற்கு ஆதாயம் இல்லாமலே பல மரக்கறிகளை விற்பனை செய்ய வேண்டிய கால கட்டமும் இருந்துள்ளது. உதாரணத்திற்கு எம்மூர் சந்தைகளில் சிங்கள மரக்கறி,தேங்காய் லொறிகள் வியாபாரம் செய்ய வந்தால் அவ்வளவுதான்..... எம்மவர்கள் வந்தவரைக்கும் லாபம் என ஏதாவது ஒரு விலைக்கு விற்று தள்ளி விட்டு தப்பி ஓட வேண்டியடியதுதான். சொந்த அனுபவங்கள்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
நான் லூசுத்தனமாக எழுதுறதால தான் பல இடங்களில் நல்ல தகவல்களும் கருத்துக்களும் பிறக்கின்றன.
-
பயந்தாங்கொள்ளி
கடுவன் பூனைகளிடமிருந்து தாய்ப்பூனை தன் குட்டிகளை சிறிது காலம் கவனமாக பாதுகாக்கும். கடுவன் பூனை சிறு குட்டிகளை கடித்து தின்பது உண்மைதான்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பலஸ்தீன் சமாதான விடயத்தில் யசீர் அரபாத்திற்கும் ராபினுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டது. தவறான தகவல் தந்ததிற்கு மன்னிக்கவும்.