Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Sasi_varnam

  1. தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினம் இன்று. 10.01.1924 - 06.01.2010 தமிழர் வீரத்தின், தியாகத்தின் இலக்கணத்தை விதைத்தவரே உம்மை வணங்குகின்றோம். வீர வணக்கங்கள் ஐயா. 🙏💐🙏 https://imgur.com/3EFbTT1
  2. உயிருள்ளவரை மறவோம் உம்மை.. கண்மணிகளே வீரவணக்கம் 🙏💐🙏
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ஜி 💐
  4. ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்? எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் "இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை 😀
  5. ஓட்டம் ஓட்டம் என்று சொல்கிறீர்கள் சைக்கிள் ஓட்டம் எப்படி ? கொஞ்ச ஊர் பொடியன்கள் 4 , 5 பேர் செட் ஆகி சமர் நேரம் 10 கிலோமீட்டர் சைக்கிள் ஓடுவோம்... என்ன ஆளாளுக்கு கையில 4 பியர் கானையும் கொண்டல்லே வாறாங்கள். 😂
  6. ஓ ... அவசரமாக பார்க்கும் போது அதன் அமைப்பு, நிறம் இவற்றை வைத்து Trafalgar square என நினைத்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி. இணையவன் பாரிஸ் என்று அறிந்தும் கொண்டேன்🙂
  7. நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!! எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும். நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. ஸ்டெமினா காணாது என நினைக்கிறன். உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது 👌
  8. மிக்க நன்றிகள் பஞ் அண்ணா. 🙏
  9. எனது பிறந்தநாளுக்கு உளம்கனிந்து வாழ்த்திய சொந்தங்கள் தமிழ் சிறி அண்ணா, புங்கையூரன் அண்ணா, சகோதரர் நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, கிருபன் ஜீ, சகோதரி ஜெகதா துரை, புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணா, சுவீ அண்ணா, வாத்தியார் ஐயா, சகோதரர் நுணா, வாதவூரான் அண்ணா, சகோதரி ரதி, சகோதரர் நொச்சி, குமாரசாமி அண்ணர், சகோதரர் பெருமாள், நிலாமதி அக்கா , சகோதரர் துல்பென், சகோதரர் ஓணாண்டியர், சகோதரர் கந்தையா, சகோதரர் சுவைப்பிரியன், சகோதரர் சபேஸ், சகோதரர் எப்போதும் தமிழன், சகோதரர் கோஷன், சகோதரர் ஏராளன், நிழலி சாமியார் மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துக்களில் அகம் மகிழ்ந்து கரைந்து போகிறேன். 🙏
  10. அன்றைய காலங்களில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் சில, (கொழும்பு அல்லாத) சிங்களப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்கும் இவை பற்றி என நினைக்கிறன் 😃 👉 ஜில் போல (மார்பிள் ) - இதில் கூட பல ரகங்கள், விளையாடும் முறைகள் உண்டு யாருக்காவது இந்த இந்த வார்த்தைகளை ஞாபகம் இருக்கிறதா ? டொம்பா ச்சிக்கா (G)கப்பா 👉 தாராடி - ஒரு டின்னில் கூழாங் கற்களை போட்டு, அந்த டின்னின் திறந்த முனையை நசுக்கி அடைத்து விடுவார்கள். அதை கிலுக்கினால் சத்தம் வரும் இதன் பெயர் தாராடி ""ஹைட் அன்ட் சீக்" விளையாடுவதை போல ஒரு விளையாட்டு. தாராடியை தூற எறிய வேண்டும், தேடுவதற்கு பொறுப்பானவர் ஓடி சென்று அதை பொறுக்கிக்கொண்டு வருவதற்கிடையில் ஏனையவர்கள் எங்கேயாவது ஒளிந்து மறைந்துகொள்வார்கள். தாரடியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு எல்லோரையும் தேடி கண்டு பிடிக்க வேணும். ஒருவரின் மறைவிடத்தை கண்டு பிடித்தால் ஓடிச்சென்று அந்த தாரடியை எடுத்து கிளிக்கி அவரின் பெயரை சொல்லவேண்டும். உதாரணம் "கோஷன்வ தேக்கா தாராடி", ரதிவ தேக்கா தாராடி " இவர்கள் அவுட். அப்படி தேடும் பொழுது மறைந்து இருந்த யாராவது ஓடி வந்து தாராடியை உதைத்தாலோ, அல்லது கையிலே எடுத்து கிலுக்கினாலோ திரும்பவும் அவரே தேடுதலை முதலில் இருந்து ஆரம்பிக்க வேணும். 👉 ரப்பர் எட்ட - ரப்பர் கொட்டைகளை மாபிள் போல வைத்து விளையாடும் விளையாட்டு. 👉 டொனிக் மூடி - ஆரஞ் பார்லி , பாண்டா போன்ற குளிர்பான போத்தல் மூடிகளை (சோடா மூடி) தேடி சேகரித்து அவற்றை வைத்து மாபிள் போல விளையாடுவோம். அதிலும் மூடியின் உள்புறத்தில் தார் வைத்தது அழுத்தி பாரமாக ஆக்கி அதனையே "ஸ்ட்ரைக்கராக" பாவிப்போம். 👉 டின் அடுக்கி விளையாடுவது - 👉 எல்லே - (வெளிநாட்டில் பேஸ் பால் போல ) 👉 பிள்ளையார் - விளக்கம் சொல்லவே கஷ்டமான விளையாட்டு. இரண்டு அணிகளாக பிரிந்து, ஒரு அணி ஓட , மற்ற அணி பிடிக்க (பந்தால் அடித்து ) அவுட் ஆக்க வேண்டும். பிடிக்கும் அணியில் உள்ள அனைவரும் (டென்னிஸ் பந்தை மார்பு பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு யாரிடம் பந்து இருப்பது என்று தெரியாமல் காட்டிக்கொள்ளாமல் எதிர் அணியின் ஆட்களை பந்தால் அடித்து அவுட் ஆக்க வேண்டும். எதற்கு பிள்ளையார் என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை. இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏
  11. இந்த விளம்பரத்தை பாருங்கள்... இதன் கீழே உள்ள வரிகள் வெள்ளை இனத்தவரின் இனவெறியை காட்டும் வரிகளாக அமைந்துள்ளது... "வெள்ளைக்காரனின் சுமை தூய்மை, நல்லொழுக்கம் போதிப்பதே... படத்திலும் கூட ஒரு வெள்ளை இனத்தவர் ஆதிகுடி/ பூர்வீக மகன் ஒருவனுக்கு சவர்க்காரம் தருவது போல போடப்பட்டு இருக்கிறது. 🤔 😠 சிகரெட் விளம்பரத்தில் "அப்பாவை போலவே " என்ற வரிகள் வேறு " just liek dad" 🤔
  12. சகோதரர் நன்னிச் சோழன் .. உங்களின் இந்த பெரும் பணிக்கு உதவியாக ஏதாவது பொருளாதார உதவி தேவை என்றால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள், என்னால் முடிந்ததை செய்வேன். 🙏
  13. தமிழர் வரலாற்று பொக்கிஷங்கள் 🙏
  14. தாயக விடுதலைய்க்கு தம்மை ஆகு தீயாக்கிய அனைத்து போராளிகளுக்கும் வீர வணக்கங்கள். உம்மை மறவாதிருப்போம்... 🙏 🌹🙏 🌹🙏 🌹🙏🌹 🙏 இந்த அறிய தகவல்களை திரட்டி இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் நன்னிச்சோழன் 🙏
  15. தக தகிட... தக தகிட... இதே தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌 தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை... தொடர்ந்தும் எழுதுங்கள்.
  16. பிள்ளைகள் சின்னதாக இருக்கும் பொழுது நாங்கள் சொல்லும் சாட்டுகள்; அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பின்னர் கூட தொடருதே அது ஏன்? 😀🤔
  17. பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அவர்களுடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!!
  18. ரதி , சுவி அண்ணா, குமாரசாமி அண்ணா, ஜெகதா துரை, உடையார் , கிருபன், பஞ் அண்ணர், புரட்ச்சிகர தமிழ் தேசியன், நுணாவிலான் , நில்மினி, நிலாமதி அக்கா, ஈழப்பிரியன் , நிகே, தமிழ் சிறி அண்ணர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
  19. நானே மறந்தாலும் கூட நாள் குறிப்பு பார்த்து நாடோடி என்னை நாயகன் போல் மதித்து நயம்பட நலம் வாழ வாழ்த்தும் நந்தவனம் பூப்போல இந்த வன நட்புகள் அனைவருக்கும் நந்தா விளக்காய் என் நன்றியையும் அன்பையும் நவிலுகிறேன் 🙏
  20. அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌
  21. கனடா மார்க்கம் (f )யார் கிரவுண்ட்-இல் நடைபெற்ற நேற்றைய மாவீரர் நாளும் அப்படியே தான் இருந்தது. இரவு 10:00 மணியை தாண்டியும் மாவீரர் கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக சாரி சாரியாக மக்கள் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் மிக மிக நேர்த்தியாக தங்கள் கடமைகளை செய்யும் மாணவ தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
  22. காவல் தெய்வங்களே ...வீர வணக்கங்கள் மறவாதிருப்போம்....
  23. ஒண்ணா இருக்க கத்துக்கணும் அந்த உண்மைய சொன்ன ஒத்துக்கணும் அந்த காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்துக்கொடுத்தது யாருங்க ஒண்ணா இருக்க கத்துக்கணும் அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.