Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் ஈழ வாக்கெடுப்பு கோரவே டெசோ அமைப்பு"

Featured Replies

தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுப்பதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டிருப்பதாக டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப வீரபாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

1980களில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டெசோ என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு திடீரென மீண்டும் திமுக தலைவர் மு கருணாநிதியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எண்பதுகளில் தனி ஈழத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்கள் இலங்கைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான தமிழ்நாட்டின் ஆதரவை ஒன்று திரட்டும் முகமாக உருவாக்கப்பட்ட டெசோ அமைப்புக்கு இன்றைய தேவை என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த சுப வீரபாண்டியன், ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் தொடரும்வரை டெசோவுக்கான தேவையும் இருக்கிறது என்றார்.

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இறுதிப்போரின்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதன் தலைவருமான மு கருணாநிதியும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், இப்போது எதிர்கட்சி வரிசையில் இருக்கும்போது மட்டும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அதி தீவிர நிலைப்பாடு எடுப்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகாதா என்கிற கேள்விக்கு பதிலளித்த சுப வீரபாண்டியன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திமுக எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக்கூடாது என்கிற உள்நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தான் இப்படியான குதர்க்கமான கேள்வியை எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனித்தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் மற்ற கட்சிகள் மற்ற இயக்கங்களும் போராடுவதை தாங்கள் தடுக்கவில்லை என்றும், அதிமுக உள்ளிட்ட மற்ற தமிழ்நாட்டு கட்சிகளும் அவரவர் மட்டத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk...8_tesodmk.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எவர் குத்தியும் அரிசியானால் சரி

அது திமுக என்னும் போது சில சந்தேகங்கள் தமிழர் மனங்களில் வருவது தவிர்க்கமுடியாதது.

கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது எழுந்த தமிழகத்தின் எழுச்சியை அடக்கி, இனப் படுகொலைக்குத் துணை போன கொலைஞன் கருணானிதியை ஈழத் தமிழினம் மறவாது.

ஆட்ச்சிக்கு வர மட்டுமே இந்த மைப்பு பயன் படும்

தமிழக மக்களிடம் எழுச்சசியும் தெளிவும் ஏற்பட்டுவிட்டது

இனி அவர்கள் நினைப்பதைத்தான் இவர்கள் செய்யமுடியும்.

அதன் பிரதிபலிப்பே இது.

ஆனாலும் எம்மைவிட கலைஞர் மீது அன்பும் மரியாதையும் நம்பிகக்கையுயும் வைத்து ஏமாந்தவர்கள் தமிழக உறவுகள். அவ்வளவு எளிதில் இவரது நாடகங்கள் இனி எடுபடா.

  • தொடங்கியவர்

எவர் குத்தியும் அரிசியானால் சரி

அது திமுக என்னும் போது சில சந்தேகங்கள் தமிழர் மனங்களில் வருவது தவிர்க்கமுடியாதது.

உண்மை. இந்த பழைய அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது, அன்று அதில் இருந்த பலர் மீண்டும் சேரமாட்டார்கள்.

அதேவேளை முடிந்தால் இவரை நாமும் அதியுச்சம் பயன்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை நோக்கிக் கருணாநிதியும் சுப வீரபாண்டியனும் கையிலெடுத்திருக்கும் டெசொ என்ற ஆயுதம் சீமான் போன்ற உண்மையான ஈழ உணர்வாளர்களுக்கு எதிரானது.

சீமானின் அரசியல் வளர்ச்சியையும் தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் ஆதரவையும் சீர்குலைக்கும் ஒரு முயற்சியே இது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எனது தம்பி

அவருக்கு தெரியும் இவர்களால் தன்னை இனி எதுவும் செய்துவிடமுடியாது என்று.

சீமான் அந்தளவுக்கு எம் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ஆனால் திமுக என்பது பெரும் ஒரு அமைப்பு

அத்துடன் அதன் தொண்டர்கள் எமக்கு வேண்டப்பட்டவர்கள். தலைவரது சுயநலப்போக்குக்காக அத்தனை கோடி தொண்டர்களை நாம் தூக்கி எறிய முடியுமா?

குறிப்பு: யாழ் களத்தை தமிழக உறவுகளே தற்போது அதிகம் பார்ப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. எனவே பொறுப்போடு எழுதுவோம். நன்றி.

அப்படியானால் அத்தனை தாய்த் தமிழ் உறவுகளுக்கும் சொல்லக்கூடியது ஒன்று தான்கருணாநிதியெனும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிக்குப் பின்னே செல்லாமல்உணர்ச்சித் தமிழன் தம்பி சீமான் அவர்கள் பின்னே அணிதிரளுங்கள்.அப்போது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும்

தெற்கு சூடான் போன்று ஒரு வாக்கெடுப்புக்கான முயற்சியில் பல புலம் பெயர் தமிழ் அமைப்புகள் ( நா.க.த, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு) ஏற்கனவே இறங்கிவிட்டன.அமெரிக்காவும் சாதகமான நிலைப்பாட்டில் உள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால் அதை இந்தியா ஏற்றுதான் ஆகவேண்டும். காரணம் இந்தியாவால் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படமுடியாததன் காரணமாகவே மத்திய அரசு தி.மு.கவை ஏவிவிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா வரவிருக்கும் பொது தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் பயன் பெற நினைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் இந்த நிலைப்பாட்டை நாம் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.எமக்கு எவர் குத்தியம் அரிசியானால்சரி.அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இந்த நடவடிக்கையை எடுத்தால் நாங்கள் அதற்குள் எங்களுக்குள்ள சுயநலத்தைப் பாவிக்க வேண்டும்.கலைஞர் சர்வசன வாக்கெடுப்பைக் கோரும்போது ஜெயலலிதாவால் மற்றைய கலைஞரின்அரசியலுக்கெதிரான நடவடிக்கைகளைப் போல இதனைப் பார்க்க முடியாது. ஏனெனில் இது தமிழர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயம்.ஆக ஜெயலலிதாவும் இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பார்.இப்போதைய ஜெயலலிதா முன்னைய ஜெயலலிதா அல்ல. ஏனெனில் கலைஞர் இந்த வாக்கெடுப்பை வைத்து வாக்குகளை அள்ளுவதை மற்றைய கட்சிகள் விரும்ப மாட்டா.ஆகவே அவர்களது உள் அரசியலில் நாங்கள் தலையிடாமல்(புலிகளைப் போல்) எமக்கு ஆதரவான நிலைப்பாட்டை யார் எடுத்தாலும் ஆதரவைக் கொடுப்போம்.கலைஞரின் இந்த நிலைப்பாட்டை எமது அமைப்புக்கள் (நா.க.த.அரசு.உ.த.பே,த.ம.அ) எல்லோரும் ஆதரித்து அறிக்கை விட வேண்டும்.ஈழத்தமிழருக்கு யார் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னிலை வகிக்கிறார் என்ற போட்டி தமிழக அரசியல் கட்சிகளிடையே உருவாக்கப்பட வேண்டும்.(எல்லாம் அவர்களின் சுயநலத்திற்காக இருந்தாலும்) கொஞ்ச நாட்களாக கலைஞர் இந்த விடயத்தில் உறுதியாக நிற்கிறார்.தவறு விடுவது எல்லோருக்கும் இயற்கை .அகவே கலைஞரின் தற்போதைய நிலைப்பாட்டை ஆதரிப்போம்.

கலைஞரின் தற்போதைய நிலைப்பாட்டை ஆதரியுங்கள்.அதனால் அவரும் தி மு காவும் வாக்குக்களைப் பெறும்.தி மு கா ,காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வரும்.ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சிங்களவன் சொல்வதைக் கேளுங்கள் அவன் குடுப்பதை வாங்குங்கள் என்பார். நாம் அதே நிலையில் தான் இருப்போம் அவர் ஆட்சியில் இருப்பார்.

மறுவழமாக, ஈழத் தமிழர்களும் தமிழ்னாட்டுத் தமிழரும் கொலைஞனின் சந்தர்ப்பவாத அரசிலைப் புரிந்து கொண்டு திமுக காங்கிரசு கூட்டணியைத் தோற்கடித்து, உண்மையான தமிழ் உணர்வாளர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். தமிழகம் , ஈழத் தமிழினத்துடன் கைகோர்த்து ,மத்திய அரசை மாற்றுகிறது.

இதில் எது எமக்கு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எது புத்தி உள்ளவன் செய்யும் காரியம்?

அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்த தீர்மானத்தை வலு விளக்கச் செய்தது, இந்தியா. தெற்காசியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் சொற்படியே அமெரிக்கா நடக்கும்.ஏனெனில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்.அதற்காக இந்தியாவின் தெற்காசியக் கொள்கையே அமெரிக்காவின் கொள்கை.இந்திய ஆட்ச்சிப்பீடம் இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் ஒன்று பட்ட இலங்கை என்பது இந்திய ஆட்சியாளர்களின் கொள்கை. அதனால் தான் கொசோவிலும் சூடானிலும் பலூச்சிஸ்தானிலும் ,பிரிந்து போகும் உரிமைகளை அங்கீகரிக்கும் அமெரிக்கா , ஈழத்திற்கு அதனை மறுக்கிறது.ஏனெனில் ஈழம் , இந்தியாவின் கொல்லையில் இருக்கிறது.இந்திய ஆட்ச்சியாளர்கள் ஒன்று பட்ட இலங்கையையே ஆதரிக்கிறார்கள்.

கொலஞனின் கட்சி , காங்கிரசுடன் கூட்டாச்சி செய்கிறது.அது உண்மையிலையே தமீழழத்தை ஆதரிக்கிறது எனில் அது செய்ய வேண்டிய வேலை அறிக்கை விடுவதும் டெசோவை மீள புனரமைப்பதுவும் அல்ல.இந்திய அரசின் ஒருமித்த இலங்கை என்னும் கோட்பாட்டை மாற்ற வேண்டும்.அதை மாற்றி விட்டு வா இல்லை , மாற்ற முடியாவிட்டால் இந்திய மத்திய அரசில் இருந்து இதை முன் வைத்து வெளியேறு உன்னை நம்புகிறோம். தமீழீழத்தைக் கொன்ற கொலைகாரருடன் கூட்டு ஆனால் , தமீழீழக் கோசம்.என்னங்கடா உங்கட அரசியல்?

இதையும் நம்பும் கூட்டம் இங்கும் இருக்கிறது என்றால் எமது மூளையைச் செருப்பால அடிக்க வேணும். ஏமாறுபவன் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர் ஏமாற்றிக் கொண்டே இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரின் கருத்தை ஆமோதிக்கிறேன்..

திமுக என்பது புரையோடிப்போய்விட்ட காயம்.. அகற்றுவதே சரியானது..

தெற்கு சூடான் போன்று ஒரு வாக்கெடுப்புக்கான முயற்சியில் பல புலம் பெயர் தமிழ் அமைப்புகள் ( நா.க.த, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு) ஏற்கனவே இறங்கிவிட்டன.அமெரிக்காவும் சாதகமான நிலைப்பாட்டில் உள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால் அதை இந்தியா ஏற்றுதான் ஆகவேண்டும். காரணம் இந்தியாவால் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படமுடியாததன் காரணமாகவே மத்திய அரசு தி.மு.கவை ஏவிவிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா வரவிருக்கும் பொது தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் பயன் பெற நினைக்கிறது.

இந்திய அரசின் நிர்ப்பந்ததால் ஜெனிவாவில் அமெரிக்கா தான் கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றியது.

இந்திய ஆட்ச்சியாளர்கள் மாற்றப்படும் வரை அவர்கள்,ஒன்று பட்ட இலங்கையைத் தான் ஆதரிப்பார்கள்.ஈழம் தொடர்பில், அமெரிக்கா மேற்குலகின் கொள்கை இதுவாகவே இருக்கும்.அதற்குச் சான்று ஜெனிவாத் தீர்மானம்.

அமெரிக்க ஒரு சிறிய இனமாகிய ஈழத் தமிழருக்காக, இந்திய ஆட்சியாளர்களைப் பகைக்காது.ஏனெனில் அமெரிக்க பூகோள நலங்களை இந்த பிராந்தியத்தில் பாதுகாக்க அமெரிக்காவிற்கு இந்திய ஆட்சியாளர்கள் அவசியம்.

நாம் தமிழகத்தில் நடக்கும் இந்த தேர்தலை மைய்யப்படுத்திய கொலைஞனின் மோசடியை அம்பலப் படுத்த வேண்டும்.

முன் வைக்க வேண்டிய கோசங்கள்.

இந்திய அரசே தமீழீழத்தை அங்கீகரி.

தமீழீழதிற்கான சர்வதேச வாக்கெடுப்பை ஈழத்தில் நடத்து.

இந்திய மதிய அரசே ஒன்று பட்ட இலங்கை என்னும் கோட்பாட்டைக் கைவிடு.

திமுகாவே தமீழத்தை அங்கீகரிக்க சர்வசன வாக்கெடுப்பை நடாத்த , காங்கிரசை உடன் படச் செய் அல்லது மத்திய ஆட்சியில் இருந்தும் காங்கிரசுடனான தேர்தல் கூட்டணியில் இருந்தும் வெளியேறு.

இதனைச் செய்யாத தி மு காவையும் ,கொலைஞனையும் தமிழினமே நம்பாதே, நிராகரி உனது வாக்கை வழங்காதே.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் இடம் தேவை.அதன் கூட்டுக்கட்சி தி.மு.கவுக்கும் தமிழ் நாட்டில் இடம் தேவை.எனவே தற்போது தமிழ் நாட்டில் வெற்றி பெற "தமிழ் ஈழம்" எனும் ஆயுதத்தை தூக்கியுள்ளார்கள்.மற்றும் படி எங்களில் உள்ள அக்கறையில் அல்ல.இதே கருணாநிதி வி.புலிகள் தமிழீழத்துக்கு போராடிய போது செக்குடியரசின் அரசியலமைப்பு தான் ஈழத்தமிழர்களுக்கு சரியானது என்றவர் எப்படி தமிழீழம் தான் தேவை என இப்போ மட்டும் சொல்கிறார்??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு இக்காலத்திற்குத் தேவையான பழமொழி.. :rolleyes:

Fool me once.. Shame on you..

Fool me twice.. Shame on me.. :D

அதாவது, நீ என்னை ஒருதரம் ஏமாற்றினால், உன்னில் களங்கம்.. இரண்டு முறை ஏமாற்றினால் என்னில் களங்கம்.. :lol:

  • தொடங்கியவர்

தமிழ் மக்களை பொறுத்தவரையில் தி.மு.க.வை நம்பி நடவாதே ஆனால் நம்ப நட.

தி மு க தமிழ்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் தான் நீக்கப்படக் கூடுமோ என்ற அச்சத்தில் தமிழீழத்தைக் கையிலெடுத்துள்ளது.

தமிழன் 'வீழ்ந்த இடத்திலேயே மீண்டும் விழுவான்' என்று எதிர்பார்க்கிறார்கள்.

522051_373770636009148_100001286453235_1070734_618627594_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது கலைறரை நம்ப வேண்டும் என்பதால் அல்ல.அவரது தற்போதைய கோசத்தை எமக்குச் சார்பாக மாற்றுவதே அதே கோசத்தை ஜெயலிதா மேலும் உரக்கச் சொல்வதற்கான போட்டியை ஏற்படுத்துவதே!அதற்கு தமிழ் உணர்வாளர்கள் ஜெயலிதாவைத் தூண்ட வேண்டும்.கலைஞர் சொல்லி விட்டு பதவிக்கு வந்தவுடன் ஏமாற்றுவார்.ஆனால் ஜெயலிதா சொன்னதைச் செய்வார் தமிழீழம் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை நெருக்குவார் என ஜெயாவைதூண்ட வேண்டும்.மாறாக கலைஞர் காங்கிரசைக் கழட்டுவதற்காக இந்தக் கோசத்தை எழுப்ப ஜெயலிதா காங்கிரசை அரவணத்தால் என்ன செய்வதுஃஆகவே கலைஙரும் ஆதரிக்க வேண்டும்.ஜெயாவும் ஆதரிக்க வேண்டும்.தனிமைப்பட்ட காங்கிரஸ் வேறு வழியின்றி பதவிக்காக ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே.மற்றும்படி கலைஞரை நம்பும் அளவுக்கு தமிழ்மக்கள் முட்டாள்கள் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞரின் தற்போதைய நிலைப்பாட்டை ஆதரியுங்கள்.அதனால் அவரும் தி மு காவும் வாக்குக்களைப் பெறும்.தி மு கா ,காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வரும்.ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சிங்களவன் சொல்வதைக் கேளுங்கள் அவன் குடுப்பதை வாங்குங்கள் என்பார். நாம் அதே நிலையில் தான் இருப்போம் அவர் ஆட்சியில் இருப்பார்.

மறுவழமாக, ஈழத் தமிழர்களும் தமிழ்னாட்டுத் தமிழரும் கொலைஞனின் சந்தர்ப்பவாத அரசிலைப் புரிந்து கொண்டு திமுக காங்கிரசு கூட்டணியைத் தோற்கடித்து, உண்மையான தமிழ் உணர்வாளர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். தமிழகம் , ஈழத் தமிழினத்துடன் கைகோர்த்து ,மத்திய அரசை மாற்றுகிறது.

இதில் எது எமக்கு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எது புத்தி உள்ளவன் செய்யும் காரியம்?

அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்த தீர்மானத்தை வலு விளக்கச் செய்தது, இந்தியா. தெற்காசியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் சொற்படியே அமெரிக்கா நடக்கும்.ஏனெனில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்.அதற்காக இந்தியாவின் தெற்காசியக் கொள்கையே அமெரிக்காவின் கொள்கை.இந்திய ஆட்ச்சிப்பீடம் இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் ஒன்று பட்ட இலங்கை என்பது இந்திய ஆட்சியாளர்களின் கொள்கை. அதனால் தான் கொசோவிலும் சூடானிலும் பலூச்சிஸ்தானிலும் ,பிரிந்து போகும் உரிமைகளை அங்கீகரிக்கும் அமெரிக்கா , ஈழத்திற்கு அதனை மறுக்கிறது.ஏனெனில் ஈழம் , இந்தியாவின் கொல்லையில் இருக்கிறது.இந்திய ஆட்ச்சியாளர்கள் ஒன்று பட்ட இலங்கையையே ஆதரிக்கிறார்கள்.

கொலஞனின் கட்சி , காங்கிரசுடன் கூட்டாச்சி செய்கிறது.அது உண்மையிலையே தமீழழத்தை ஆதரிக்கிறது எனில் அது செய்ய வேண்டிய வேலை அறிக்கை விடுவதும் டெசோவை மீள புனரமைப்பதுவும் அல்ல.இந்திய அரசின் ஒருமித்த இலங்கை என்னும் கோட்பாட்டை மாற்ற வேண்டும்.அதை மாற்றி விட்டு வா இல்லை , மாற்ற முடியாவிட்டால் இந்திய மத்திய அரசில் இருந்து இதை முன் வைத்து வெளியேறு உன்னை நம்புகிறோம். தமீழீழத்தைக் கொன்ற கொலைகாரருடன் கூட்டு ஆனால் , தமீழீழக் கோசம்.என்னங்கடா உங்கட அரசியல்?

இதையும் நம்பும் கூட்டம் இங்கும் இருக்கிறது என்றால் எமது மூளையைச் செருப்பால அடிக்க வேணும். ஏமாறுபவன் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர் ஏமாற்றிக் கொண்டே இருப்பர்.

திமுக என்ற கட்சிக்கு, ஈழத்தவர்களின் நலம் மட்டும் அல்ல தமிழ்நாட்டின் நலம்கூட கட்சிநலனுக்கு பின்னால்த்தான். இந்த வகையான கட்சி ஒற்றுமையே தமிழ்நாட்டின் ஒவ்வொரு கட்சியிடமும் கிடக்கின்றது.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு திமுக, கையைக் கட்டிக் கொண்டு தனது கட்சி நலனுக்கு கணக்கு பார்த்துக் கொண்டிருந்த போது அதிமுகவின் உதவி எம்மை தவிக்க விடாது காப்பாற்றியது என்ற வகையாக அல்லவா கதை போகின்றது.

நிட்சயமாக அதிமுககூட உண்மையான அக்கறை ஈழத்தின் மேல் எடுத்திருந்தால் திமுகவால் எது செய்யப்பட்டிருக்க முடியும் என்று நாம் நம்புகின்றோமே அதை அதிமுகவின் போக்காலும் சாதித்திருக்க முடியும்!

மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டு விளங்கும் கட்சியே வெல்லுகின்ற சூழ்நிலை தமிழ்நாட்டு தேர்தல்களுக்கு விதியாகவேண்டும் என்பதே எமது அவா ஆகும்!

384640_317899338228576_100000255360122_1196859_1383141979_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நறுக்கென்று நாலு வார்த்தையில் சொன்ன நாரதருக்கு நன்றி.

எத்தனை காலம்தான் எமாற்றுவார் எம்மை. ஏமாளிகளாக நாம் எப்போதும் இருக்கக் கூடாது

இதற்காக நாங்கள் தமிழக உறவுகளுடன் பலமான நட்பைப் பேணி முதலில் கலைஞரையும் அவர் வாரிசுகளையும் அரசியல் ரீதியாக பலமிழக்கச்செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்

தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம்: பேராசிரியர் க. அன்பழகன்

இலங்கையில் தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம் என்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.பொதுச் செயலாளர் பேராசிரியர் கா.அன்பழகன் நாட்டு மக்கள் சமவுரிமை பெற்று வாழ வழிவகுத்த இயக்கம், திராவிட இயக்கம், திராவிட இயக்க கொள்கை மற்றும் இலட்சியங்களை தி.மு.க. தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க. வின் விருப்பம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

உடனடியாக உத்தரவு போடும் இடத்தில் நாம் இல்லை. நமது வேண்டுகோளை இலங்கை அரசு மதிப்பதாக இல்லை. இந்திய அரசு நமக்கு அனுதாபம் காட்டுகிறது. அந்த அனுதாபத்தை பயன்படுத்தி எந்த அளவுக்கு நம்முடைய ஈழத் தமிழர்களை காப்பற்றலாமோ, பõதுகாக்க வழி செய்யலாமோ அதை செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய குறிக்கோளாக நோக்கமாக இருக்கிறது என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37833

  • தொடங்கியவர்

தி.மு.க. வின் இந்த அணுகுமுறையில் மத்திய காங்கிரசும் இந்திய உளவும் சம்பந்தப்பட்டுள்ளதா? என்பதும் அலசப்படல் வேண்டும். காரணம் அவர்கள் ஆதரவு இல்லாமல் தி.மு.க. இவ்வளவு விடாப்பிடியாக இதில் காலை விடுமா? இதன் மூலம் தமிழக, சர்வதேச ஆதரவுகளை திசைதிருப்பவா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இல்லை தி.மு.க. உண்மையாகவே ஒரு தீர்வை தர விரும்பினால் பல ஆக்கபூர்வமான செயல்வடிவங்களை நிறைவேற்றவேண்டும். அதன் பின்னரே தமிழர்கள் எதையும் நம்பக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.