Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குண்டலினி சக்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குண்டலினி சக்தி

குண்டலினி சக்தி

குண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள்.

குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது . அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாதாரம், சுவதிஸ்டானம், மணிப்பூரகம்,

அனாகதம், விசுக்தி, ஆக்ஞை, வழியாக சகஸ்ராரத்தில் கொண்டு வந்து மேலே நிறுத்தி விட்டால் யோகம் முடிந்து விட்டது, பின் அபூர்வ சித்திகளும் படைக்கும் ஆற்றலையும் பெற்று விடலாம் என்பது தற்கால யோக நெறி ஆசிரியர்களின் போதனையும் யோக நூலில் முடிவாகும். ஆனால் இது கற்பனை.

திருமூலர் மற்றும் பல சித்தர்கள் கூறுவதை மறுத்து கூறுவது மடத்தனம் என்று பலர் நினைக்க கூடும். அவர்கள் மூலாதாரத்தை பற்றி பரிபாசையாக புரியாத புதிராக மறைத்து கூறினார். பலபல பெயர்களில் மறைத்து கூறினார். வெளிபடையாக கூறவில்லை.

மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் ஆறும் மேலே இருந்து இயக்கும் குண்டலினி சக்தியிடம் இருந்து சக்தி பெற்றுக் கொண்டு உடலை இயக்க வைக்கிறது

குண்டலினி சக்தியல் இருந்து ஆதாரங்களுக்கு சக்தி வரவில்லை என்றால் உடல் செயல் நின்று விடும் என்பது உண்மை.

குண்டலினி என்பதன் உட்பொருளே குண்டம்+ ஒளி அல்லது குண்டு + ஒளி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். குண்டலினியில் தான் ஒளி மண்டலம் உள்ளது. இந்த குண்டலினி சகதிக்குள் மனம் இலயமாகி கரைந்து விட்டால் மனம் செயல் படாது. அதனுடய உலக தொடர்பு துண்டிக்க பட்டு விடுகிறது. மனம் செயல் படாத போது புத்தியும் அகங்காரமும் சித்தமும், சிந்திப்பதும், செயல் படுவதும் நின்று விடுகிறது. பின்பு அவன் புலன் கடந்து ஆன்மாவை தரிசிக்கும் ஞானி ஆகி விடுகிறான். ஆன்மாவை தரிசிக்கும் ஞானி ஆகிவிடுகிறான். ஆன்மாவாகிய தன் பரிசுத்த தன்மை கண்டு ஆனந்திக்கிறான். அவனது மனம் உள்ளும்ன் புறமும் செயல் படாததினால் அவனுக்கு உலகத்தில் காரியம் செய்ய வேண்டிய போக்குவரத்து தேவை இல்லாததினால் அவனது மூச்சு காற்று இயங்குவதில்லை. அது குண்டலினியில் லயமாகி குண்டலினியை சுடர் விட செய்கிறது. அந்த சுடர் தேகத்தில் பரவி தேகத்தை ஒளி விட செய்கிறது, முகத்தில் ஞான வெளிச்சமும் பொலிவையும் ஏற்படுகிறது.

குண்டலினி இருப்பிடம்

எண்சான் உண்டபிற்கு சிரசே பிரதானம். குண்டலினி சக்தி இடபக்க சிரசில் இருக்கிறது. இது ஹைபோதலாமஸ், பிட்யுட்டரி பினியல் சுரப்பிகளுடன் தொடர்பு உடையது. சிவ பெருமானின் இடது பக்க முடியில் தரித்திருக்கும் இளம் பிறை குண்டலினியின் குறியீடு. மேலே உள்ள குண்டலினி சக்தியில் இருந்து கீழே உள்ள ஆதாரங்கள் வேண்டிய சக்தி பெறுகிறது. அந்த ஆதர கமலங்களில்இருந்து காரணங்களான மனம் சித்தி புத்தி அகங்காரம் சித்தம் ஆகியன செயல் படுகின்றது. ஆக உயிரை செயல் படுத்தும் ஆதர கமலம் வேறு உடலை செயல் படுத்தும் ஆதர கமலம் வேறு. உயிரை செயல் படுத்தும் ஆதர கமலமே மூலாதாரம், அதுவே குண்டலினி வட்டம்.

குண்டலினியில் இருந்து இந்த ஆதாரங்களுக்கு தேவை படும் சக்தியை கீழே இறக்காமல் துண்டித்து விட்டு குண்டலினி யாகிய சோதியில் மனதை நிறுத்தி கொள்ள உடற் கருவிகளும் மனம் முதலிய அந்த காரணங்களும் செயல் படுவதில்லை. ஆன்ம தனித்து

குண்டலினி சோதியில் தன்னை நிறுத்தி வியப்புடன் பராக்கு பார்ப்பது போலே செயல் மறந்து ஒளியில் கலந்து ஒளியாகி நிற்கிறது. இந்த காட்சியை கண்டு கண்டு ஆனந்த்திக்கிறது . இந்த காட்சியை காண்பதற்கு கண்கள் தேவை இல்லை. இது புலன் கடந்த காட்சி.

ஆன்மாவானது தத்துவங்களில் இருந்து நீங்கி தான் தானாக ஆனந்தபடும் போதுதான் ஆன்மாவின் உள்ளதாரம் எனும் உயிரை இயக்கும் ஹைபோதலாமஸ், பிட்யுட்டரி பினியல் செரிபெரம் ஆகிய பகுதிகள் கிளர்ச்சி அடைந்து அமிர்த கலைகலாக மாரி தேகத்தை

வேதியல் செய்கிறது .இந்த அனுபவம் முதிர உடலில் நிற மாற்றம் ஞானவொளி சந்தம் பிறரை ஊடுருவி பார்க்கும் திறன் ஏற்படுகின்றது.இது தான் உண்மையான குண்டலினி தவமாகும்.

http://sagakalvi.blogspot.ca/2010/10/blog-post_26.html

பகிர்வுக்கும் இணைப்பிற்கும் மிக்க நன்றிகள் நுணாவிலான் .

  • கருத்துக்கள உறவுகள்

    குண்டலினி சக்தி

<span style="color: #AA9988">

திருமூலர் மற்றும் பல சித்தர்கள் கூறுவதை மறுத்து கூறுவது மடத்தனம் என்று பலர் நினைக்க கூடும். அவர்கள் மூலாதாரத்தை பற்றி பரிபாசையாக புரியாத புதிராக மறைத்து கூறினார். பலபல பெயர்களில் மறைத்து கூறினார். வெளிபடையாக கூறவில்லை.

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

  • 3 weeks later...

குண்டலினி தலையில் இருப்பதாக கூறும் கட்டுரையாளர் அதற்கான ஆதாரம் ஏதும் தராமல் வெறுமனே விட்டுச் செல்வது மிக நம்பிக்கையீனத்தை தருவதாகும்.

குண்டலினி மட்டுமல்ல, சீனாவில் தோன்றிய “தாய் சீ” கூட சக்தி பரிவட்டத்தை கூறுகின்றது. குண்டலினி பற்றி அனுபவித்த யோகிகள் எல்லோரும், ஒரே மாதிரி தம் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஔவைப் பிராட்டியும் “மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்று பகர்கிறார்.

யோகி சிவானந்தா தன் அனுபவத்தில், எப்படி மூலாதார சக்தி கட்டுக்களை உடைத்து காட்டாற்று வெள்ளமாக கண்டத்தை கடந்து நெற்றி பொட்டை அடைந்தது என தன் நூலில் விளக்குகின்றார். மூலாதாரத்தில் இருந்து புறப்படும் சக்தி ஒவ்வொரு சக்கரத்திலும் தங்கும் போது என்னென்ன குணமாற்றம், புலன்மாற்றம் ஏற்படுமென விலாவாரியாக ஏற்கெனவே பலர் எழுதிச்சென்றுள்ளனர்.

தத்தம் பதிவு தளங்களில் எப்படியும் எழுதலாம் என்பதால் தற்காலத்தில் தரமான விடயங்கள் வருவது மிகக் குறைவு. முன்பெல்லாம் ஒரு கட்டுரை எழுதுபவர் அத்துறையில் துறைபோக கற்றிருக்க வேண்டும். இப்பொழுது எதைச் சொல்லுவது? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமகன் உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாமே??

http://www.facebook.com/note.php?note_id=196718793689131

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு இணைப்பு , நுணா!

பொதுவாகப் பலர் பேசத் தயங்கும் விடையங்களைத் தொடர்ந்து இணையுங்கள்!

ஆனால், குண்டலினி என்பது, மிகவும் மறை பொருளானது!

நல்ல பயிற்றப் பட்டவர்களால்,மட்டுமே சரியான வகையில் நெறிப் படுத்த முடியும்!

சரியான முறையில், சாதகம் பண்ணப் படாதவிடத்து, மிகவும் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டு வரும்! நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியால் குண்டலினி பயிற்றப்பட்ட ரஞ்சிதா சரியான துள்ளலினி.. :D

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குண்டலினி வாங்கலையோ குண்டலினி....!

ஆன்மீகம் வியாபாரமாக மாறி கடைவீதிக்கு வந்ததும் முதன் முதலில் வியாபார பொருளான விஷயமும் அதிகம் விற்கும் பொருளின் பெயர் என்ன தெரியுமா? - குண்டலினி.

ஹேமாமாலினியையும், ஜெயமாலினியையும் தெரியாதவர்கள் கூட நம் ஊரில் இருப்பார்கள். ஆனால் குண்டலினியை பற்றி தெரியாதவர்கள் மிகக்குறைவு.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது.

ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது.

குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண பெட்டகத்தில் இருக்கிறது. பாம்பின் வடிவில் மூன்று சுற்று சுற்றி மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்ரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது குண்டலினி யோகத்தின் அடிப்படை.

kundalini.jpg

பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது. குண்டலினியை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் பதஞ்சலியை துணைக்கு கூப்பிடுவார்கள். அவரின் சிலையை வைத்து வழிபடுவார்கள். இதில் வேடிக்கையான விஷயம் பதஞ்சலி விக்ரஹத்தை பாம்பு வடிவில் சித்தரித்து இருப்பார்கள். குண்டலினி பாம்பு வடிவில் இருப்பதாக நம்புவதால் அச்சக்தியை குறிக்கும் வகையில் பதஞ்சலி பாம்பாகிவிட்டார். உண்மையில் பதஞ்சலி நேரடியாக குண்டலினியை பற்றியோ ஆதார சக்ரங்களை பற்றியோ கூறவில்லை...!

முன்பு ராஜயோகத்தை பயில்பவர்கள் குருவை நாடி தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதால் இதற்கு ராஜயோகம் என பெயர். மேலும் ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது ராஜயோகம் என பெயர் பெற்றது. அரசாங்க (ராஜாங்க) விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல ராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் நடைபாதையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது.

எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? ஏதாவது ஜாதி சார்ந்த கட்டுப்பாடுகள் உண்டா என நினைத்தால் அது தவறு..!

குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு கற்று தரும் விஷயமல்ல. இது குரு சிஷ்யன் என்ற இருவருக்கும் ஏற்படும் அனுபவம். அதனால் அவர்களால் அதை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.

ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர் பல நூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக எடுப்பது வியாபாரத்தின் அடையாளம் எனலாம்.

பல்வேறு ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவி இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் தாம்பத்திய உறவு இயல்பானது இதற்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை. இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தை படிப்படியாக கூறுங்கள் என கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும் என்பது என் கருத்து.

மேலும் கணவனோ மனைவியோ பொது இடத்தில் தங்களுக்குள் நிகழ்ந்ததை ஒவ்வொன்றாக விளக்கினால் நாம் முகம் சுளிப்போம் அல்லவா? அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது.

தற்சமயம் ஒரு எழுத்தாளர் கூட தன் குரு தனக்கு கொடுத்த குண்டலினி அனுபவத்தை மேடைக்கு மேடை விளக்குகிறார். இவரை பார்த்து பிற ஆன்மீகவாதிகள் நெளிவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்கள் உண்மை. ஆனால் அதற்காக தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.

சில யோக கழகங்கள் கார்ப்பரேட் மேனேஜர்களுக்கான குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கான குண்டலினி யோகம் என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?

தினமும் வீட்டிலும், வாரம் ஒரு முறை கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களுக்கும், தங்களின் உடலை சிறு அசைவு கூட செய்யாமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகள். இவர்களுக்கு ஏழு நாளில் குண்டலினி உயர்த்திகாட்டுகிறார்களாம் இந்த யோக கழகங்கள்.

இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் எவரும் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என கூற மாட்டார்கள். பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என கூறுவார்கள். இது எப்படி நிகழ முடியும்?

ஒரு ஏமாற்று பேர்வழி பலரிடம் பணம் பறிக்க கடவுளை காட்டுகிறேன் என அனைவரிடமும் பணம் வசூலித்து மலை உச்சிக்கு கூட்டு சென்றானாம். அங்கே கடவுள் தெரிகிறார். அவர் பத்தினி கணவனின் கண்களுக்கே தெரிவார் என சொன்ன கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போன்றதே இந்த குண்டலினி அனுபவமும். ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்கு வந்தாகிவிட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். நாம் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ என தங்களை தாங்களே பலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

ராஜ யோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவியோடு ஒப்பிட்டார்கள் என்றேன் அல்லவா? ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு கலவி பற்றி கற்றுக்கொடுத்தால் அவனால் அதற்குரிய அனுபவம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டும். அவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய கற்றது பயன்படாது. அது போன்றதே ராஜ யோகம் என்பதை உணருங்கள்.

ராஜயோகம் பயிலும் பொழுது பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகள் வரும். அதை சரியான குருவின் வழிகாட்டுதலால் மட்டுமே களைய முடியும். அப்படி என்ன உபாதைகள் வரும் என கேட்கிறீர்களா?

குண்டலினி பயிற்சியில் சில மாற்றங்கள் உடல் அளவிலும், மன அளவிலும் நடக்கும் என்றேன் அல்லவா?

ஜப யோகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் குரு கொடுக்கும் மந்திரங்களை தொடர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் சரியாக ஜபம் செய்யாவிட்டால் ஒன்றும் நிகழப்போவது இல்லை. கால விரயம் மட்டுமே ஏற்படும். சரியாக ஜபம் செய்தால் ஆன்மீக அற்றலில் மேம்பட்டு இறைநிலையுடன் இணைவீர்கள்.

பிற யோக முறைகளை விட குண்டலினி பயிற்சி குருவின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே பயில வேண்டும் என கூறுவார்கள். காரணம் இதை சரியாக பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் பின்விளைவுகள் உண்டு..!

இவ்விளைவுகளை தீர்க்கும் ஆற்றல் குருவுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவருடன் வாழ்ந்து அவரின் முன் இருந்து பயிற்சி செய்வது அவசியம். ஆனால் நடை முறையில் இவ்வாறு இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்றே பதில் கூற முடியும்.

ராஜ யோக சதனா செய்யும் பொழுது உடலின் வலிமை முதலில் முற்றிலும் இழந்து பிறகு பெற வேண்டி இருக்கும். உடல் தன் இயல்பை தொலைத்து புது வடிவம் பெற துவங்கும் பொழுது உடலின் வெப்பம் மிக அதிக அளவில் உருவாகும். அல்லது கடுமையான குளிர் உணர நேரும்.

சராசரி மனிதன் 105 டிகிரி உடல் வெப்பம் கண்டாலே உடனடியாக மருத்துவரை நோக்கி ஓடுவான். அப்படி இருக்க இத்தகைய பயிற்சியில் 116 முதல் 122 வரை உடல் வெப்பம் உயருவது சாதாரணமாக நடக்கும்.

இது மனித உணர்வால் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வெப்பம். அதே போல குளிரும் மிகவும் கற்பனைக்கு எட்டாத நிலையில் இருக்கும்.

தமிழகத்தில் சித்திரை மாதத்தில் -5 டிகிரி குளிர் என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அனேகமாக முன் தெளிவு இல்லாமல் இப்பயிற்சி செய்பவர்களுக்கு நிகழ்வது இதுதான்.

அதிக உடல் வெப்பத்தால் மூல நோய் மற்றும் ரத்த வாந்தி ஏற்பட்டு தொடர் ரத்த இழப்பு ஏற்படும் அல்லது அதிக குளிரால் உடல் இரத்தம் உறைந்து இருதய துடிப்பு நிற்கும் அபாயம் உண்டு.

மஹா ஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்து யோக முறைகளையும் முயற்சித்து அதன் உச்சியை அடைந்தவர். அவர் குண்டலினி யோகம் பயிற்சி செய்து அவரின் பற்களில் தொடர்ந்து ரத்தம் கசிய துவங்கியது. இடைவிடாமல் இரத்தம் வாய்வழியே வந்து கொண்டே இருந்தது. ராம கிருஷ்ணரின் குரு அச்சமயம் வந்து அவரை சரியாக்கி மேம்படுத்தினார். இச்சம்பவத்தை அவரின் சரிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் நிலையை யோசித்து நாமும் முயற்சி செய்வது நல்லது..!

நடைமுறையில் குண்டலினி பயிற்சி அளிப்பவர்கள் ஏழு சக்கரங்களின் படங்களை பெரிதாக காண்பித்து இன்ன சக்கரம் இது செய்யும் என விளக்கி பிறகு பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால் மனித மனம் தன் நிலையிலிருந்து மேம்படாமல் கற்பனை எனும் பாழும் கிணற்றில் விழுகிறது. மந்திரம் சொல்லும் பொழுது குரங்கை நினைக்காதே கதையாகி விடும் அல்லவா?

அப்படியானால் இதை எவ்வாறு பயிற்சி கொடுப்பது?

எனக்கு தெரிந்த ஒரு யோகி தன் சீடனுக்கு பயிற்சி கொடுக்கிறார். அவர் சொல்லுகிறார் குண்டலினி என்பதில் இது எல்லாம் ஏற்படும் என்கிறார். சிஷ்யன் சரி நீங்கள் பல மணி நேரம் விளக்கியதை பார்த்தால் இதற்கு பல நாட்கள் அனுபவம் மேற்கொண்டால் மட்டுமே உணர முடியும் போல இருக்கிறது என்கிறார். அதை மறுத்த குரு தன் சிஷ்யனுக்கு முழு அனுபவத்தையும் ஆறு நிமிடத்தில் உணர்த்துகிறார்.

அனுபவம் கிடைத்ததும் சிஷ்யன் சொல்லுகிறான், குருவே நீங்கள் கூறியவிஷயம் எல்லாம் நான் அனுபவித்தேன் ஆனால் ஒரு குறிப்பிட்ட சக்கரத்தில் நீங்கள் கூறியது போல இல்லையே...அதில் சில விஷயங்கள் கூட இருந்தனவே என்கிறான். அதற்கு குரு கூறுகிறார், “நீ உண்மையாகவே அனுபவம் கொள்கிறாயா அல்லது கற்பனை செய்கிறாயா என காணவே அவ்வாறு முக்கிய சில கூறுகளை விட்டு விட்டேன். மேலும் நீ அதில் கண்ட காட்சி இப்படி இருந்ததா..” என நீள்கிறது அவர்களின் சம்பாஷணை. இவ்வாறு குரு சிஷ்யனும் ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டியதே ராஜயோகம்.

நம் உபயோகப்படுத்த ஒரு பொருளை கடைகளில் வாங்குகிறோம் என்றால் அது நமக்கு உபயோகப்படுமா? அல்லது நம் வாழ்க்கை முறைக்கு தொந்தரவு கொடுக்குமா என பார்ப்போம். இது தானே நடை முறை? ஆனால் குண்டலினி பயிற்சி பெறும் பலருக்கு இதன் அவசியம் தெரியாது. சிலர் எனக்கு முதுகு வலி உண்டு அதனால் இப்பயிற்சி செய்கிறேன் என்கிறார்கள். இது உடல் வலிக்கு யானையை அழைத்து மசாஜ் செய்வதை போன்றது.

சில யோக பயிற்சி கழகங்கள் முழுமையான அதிக சிக்கல்கள் கொண்ட பயிற்சியை சராசரி மனிதனுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் ராஜயோக பயிற்சியை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் முழு பயிற்சியையும் வருபவர்களுக்கு சுண்டல் வழங்குவதை போல வழங்கிவிடுகிறார்கள். ஏழு நாட்களில், மூன்று மணிநேர பயிற்சிக்கு பிறகு பயின்றவரும் வீட்டுக்கு வந்து கடுமையாக பயிற்சி செய்வார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவருக்கு தியரி முறையில் விமானத்தை பற்றி கூறிவிட்டு வீட்டுக்கு சென்றதும் விமானத்தில் கயிரால் உடலை கட்டிக்கொண்டு வானில் பறக்க முயல்வதற்கு சமம்.

குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார். வேதாந்த ரகசியம் என்ற அந்த நூலையே குருவாக கொண்டு பயிற்சி செய்யவும் கூறுகிறார். இவ்வாறு பலர் முயற்சிக்கிறார்கள். அதில் தவறு அல்ல. காரணம் அந்த புத்தகம் ஓர் அனுபவ வடிவம். இல்லையேல் குருவினை நாடி பயிற்சி செய்யுங்கள்.

குண்டலினி பயிற்சி செய்வதாலும் தவறாக செய்வதாலும் கீழ்கண்ட உடல் மற்றும் மன ஏற்றத்தாழ்வுகள் நிகழும்.

  • கடுமையான மூல நோய்
  • எதிர்பாராத நிலையில் தன் நினைவு இழத்தல்
  • உடல் வெப்பம் அதிகரித்தல்
  • சுவாச கோளாருகள்
  • பக்க வாதம் போன்று ஒரு பக்க உடல் செயல்படாமல் இருத்தல்
  • கண்பார்வையில் ஏற்றத்தாழ்வுகள்
  • மன நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உங்களின் இயல்பு குணம் சென்று குழந்தை தன்மையோ அல்லது ஆழ்ந்த அமைதியோ ஏற்படுதல்.

மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருந்தால் குண்டலினி யோகம் பயிலலாம்.

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படித்து ஒருவருவர் என்னிடம் தனி மடலில் பின்வருமாறு கேட்டிருந்தார்.

“நான் ஒருவரிடம் எளிய முறை குண்டலினி பயிற்சி கற்றேன். அதில் எனக்கு நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..இதை நீங்கள் ஏன் தவறாக காண்கிறீர்கள்” என்கிறார். இவர்களை போன்று கேட்பவர்களுக்கு என் பதில் இதோ..

“ஐயா.. குண்டலினி என்ற பெயரில் நடப்பதெல்லாம் குண்டலினி பயிற்சி அல்ல. அப்பெயரை கொண்டு சாதாரண யோக ஆசனங்களை கொண்ட பயிற்சியே பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியை கற்று எனக்கு குண்டலினி ஒரு நாள் எழும் என கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அல்லது தினமும் பயிற்சி செய்யும் பொழுது என் குண்டலினி என் ஆக்னா சக்ரத்திற்கு ஏற்றி இறக்கினேன் என நீங்களே நினைக்கலாம்.

குழந்தைகள் ஓடத்துவங்கும் காலத்தில் கால்களை தரையில் உதைத்து வாயில் சப்தம் எழுப்பி பைக் ஓட்டுவார்கள். அவர்களுக்கு லைசன்ஸ் தேவையில்லை, ஹெல்மெட் தேவையில்லை. காரணம் அவர்களுக்கு விபத்து ஏற்படாது. அவ்வாறு அவர்கள் கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படும் அவ்வளவே.. நீங்கள் பெற்ற குண்டலினி பயிற்சியும் அத்தகையதே என்பதால் உங்களுக்கு எதுவும் நிகழவில்லை. பயிற்சியில் உங்கள் உடல் மற்றும் மனம் மாற்றம் ஏற்பட்டால் நம்மால் உணரமுடியாமல் இருக்கமுடியாது. அவ்வாறு ஏற்பட்டமல் போனால் அது எவ்விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள்.”

உங்களுக்கு ஏன் இந்த வேலை? யாரோ யாருக்கோ குண்டலினி பயிற்சி கொடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன இழப்பு என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். கோவையில் தவறான பயிற்சியாலும், தவறாக பயின்றதாலும் பலருக்கு உடலில் மற்றும் மனதில் ஏற்படும் நோய்களை யோக முறையிலேயே சரியாக்க என்னைத்தான் அழைக்கிறார்கள். இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வருத்தத்துடன் சொல்லுகிறேன்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் அதிகமாகிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களை கண்டு அவர்களுக்கு குணமளித்துவிட்டு சும்மா இருக்க என்னால் இயலவில்லை. பலருக்கு முன் தெளிவு கொடுக்கவே இந்த கட்டுரை எழுத தேவை ஏற்பட்டது.

இதையும் மீறி நான் முறையற்ற பயிற்சி செய்வேன்.. அந்தரத்தில் பறப்பேன், போன ஜென்மத்தை உணர்வேன் என நீங்கள் கிளம்பினால்.....

உங்களுக்கு என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்...!

http://vediceye.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியால் குண்டலினி பயிற்றப்பட்ட ரஞ்சிதா சரியான துள்ளலினி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

குண்டலினி, 'ஸ்பிரிங் ' போல இருக்குமோ?

நாலு 'ஜேர்மன்' பியர் உள்ள போக, எனக்கே இந்த ஆட்டம் வரும்போல இருக்கு!

நித்தி சுத்த வேஸ்ட்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.