Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வகுப்பறை 11 B ( சிறுகதை)

Featured Replies

எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் ஒட்டு மொத்தமாக தன்னைப் போல வெளியிலை ஓடி தொலைந்திட்டாங்களாக்கும் என்று நினைத்து கொண்டு அந்த கோயில் வாசலின் உள்ள தூணுக்கருகில் அப்பாடா என்ற குரலுடன் வந்த நீண்ட மூச்சை வெளியில் விட்ட படி காலாற குந்தினான். .

கோயிலில் யாரும் இல்லை .அப்பிடி ஒரு தனிமை அங்கு அப்பப்ப இடைக்கடை எங்கிருந்தோ வாற .இதமான காற்று வந்து அவனை தழுவி செல்ல அப்படியே அந்த வாறந்தாவில் புரண்டு படுத்தால் என்ன சந்தோசமாக இருக்கும் என்று ஒருமுறை நினைத்து பார்த்தானே ஒழிய அப்படி செய்ய அவனால் முடியவில்லை.என்னதான் காசுவலாக உள்ளுர் வாசி போல வேசம் போட்டாலும் உள் மனம் வெளிநாட்டு வாசியாகவே போலி கெளவரத்துடன் உருவமைப்பதை நினைத்து வெட்க பட்டு கொண்டான்.

அவனது தனிமையை மட்டுமல்ல அங்கு மூலஸ்தான மூடிய அறையில் அம்மனோ காளியோ கல்லாக இருக்கும் அவளின் தனிமை கூட குலைந்தது. தரிசனம் என்ற போர்வையிலும் பூஜைக்கான ஆயத்தம் என்ற போர்வையிலும் வந்தவர்களின் பிரச்சன்த்தால் .அவற்றில் அங்கு பூஜை செய்ய வந்த ஜயரும் ஒருவர் .பூஜைக்கான ஆயத்தங்கள் செய்வதில் அக்கறை, படபடப்பு அவரின் முகத்திலும் அசைவிலும் தெரிகிறது .காலம் காலமாக உந்த கடவுள்களுக்கு அலங்கரித்து ஆலாவனம் பண்ணி பூஜை புனகாரம் எல்லாம் செய்து அங்கிருந்து இங்கு சக்தி பெற்று கொடுக்க முனையும் சராசரி பூசாரி போல ஒருவர் தான் இவரும் என்று மேலோட்டமாக பார்க்கும் பொழுது கூட அவனுக்கு எழவில்லை ...எங்கையோ.. எங்கோ .. அருகில்.. மிக அருகில் இன்னும் எனது உணர்வுகளை பகிர்ந்த ஒருவர் தான் உறுதி செய்தாலும் முழு விவரங்களை தேடி மூளை வெகு வேகமாக இயங்கி கொண்டிருந்தது.அட மையிக் சுந்தரம் அவரா ...நீங்கள் என்று சொல்லாமால் அவனா நீ அவனை அறியாமால் வாய் உளறியது ,என்னமாய் மாறி விட்டான் அதை விட ஜயன் என்று இவ்வளவு காலமும்தெரியாதே என்ற ஆச்சரியுமும் மேலோங்கியது.

.உந்த கல்லுக்கு இனிமேல் செய்ய போகும் அலங்காரத்தை ஏற்கனவே அவன் தனக்கும் செய்து தன் மேல் மற்றவர்களுக்கு பக்தியும் பரவசமும் வரும் கோலத்தில் நிற்கிறான். என்னதான் ஓரே வகுப்பில் பக்கத்து வாங்கில் இருந்து படித்தவன் என்றாலும் நீ ..அவன் என்று கூப்பிட்டால் என்ன நினைப்பார்கள் என்று மட்டுமின்றி அதுக்கு மேலும் எதுவும் நடந்து விட்டால் என்று அஞ்சி அவருக்கு அருகில் சென்று ஜயா என்னை ஞாபகமிருக்கிறதா என்று ஒரு வாஞ்சையுடன் ஆவலுடன் கேட்டான் ...

கண் மட்டத்தில் கை மட்டத்தை வைத்து அவனது உருவத்தை குளோசப்பில் கொண்டு வந்து கூட அவனை அவர் யார் என்று தெரிந்து கொள்ளாமால் தவித்தார் .காலம் என்ற வில்லன் தொடர்ந்து ஞாபக நினைவுகளை தொடர்ந்து கடத்தாமால் தவிர்ப்பதற்க்காக ஒரு துணிந்த கதாநாயகனாக விரைந்து ..அட மையிக் சுந்தரம் நான் தான் டா ,,,என்று தொடங்கி பள்ளிக்கால நினைவுகளை சொல்லி ஞாபக படுத்துவது மட்டுமில்லை ...வகுப்பறை நினைவுகளான மற்றவர்களுடைய டிபன் பொக்சில் இருந்து முட்டை பொரியல் திருடி சாப்பிட்டதில் தொடங்கி ,,,அவன் அந்த சிறிய வயதில் செய்த ஹிப்னொடிசம் சாகசங்கள் பலவற்றை சொல்லி பள்ளிக் கால உருவத்தை கொண்டு வந்த மறு கணமே ,தனது ஜயர் வேசத்தை கூட மறந்து அவனை இறுக அணைத்து கொண்டார். அங்கு அவர்கள் காதலாகி கசிந்து கண்ணீர் உருகும் காட்சியை ,,அங்கு அம்மன் தரிசனம் பெற வந்தவர்களுக்கு வழங்கி கொண்டிருந்தனர்.

தூரத்தில் தெரிகிற அந்த கடலின் அலை சத்தத்தையும் மீறி உங்களுக்கு ஓரே அலை வரிசையில் ஒரு சத்தம் கேட்டு கொண்டிந்தால் அது தான் அந்த பள்ளிக்கூடம். காலனித்துவ கல்வியாளனோ நிறுவனமோ அல்லது மதம் மாற்றி வலை பிடிக்க வந்த கூட்டமோ யாரோஅந்த பள்ளிக்கூடத்தை நிறுவியதானால் என்னவோ அந்த தன்மைகளில் சிறிதும் நழுவ முயற்சி செய்யமால் இன்று வரை அவற்றை அடியொற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறது.,அதில் ஒரு தற்பெருமை அதுக்கு.இந்த பள்ளியின் அருமை பெருமைகளை சொல்ல தேவை இல்லை அந்த நூற்றாண்டு கால பெருமையை அப்பள்ளி வாசலுக்குள் காலடி வைக்காதவன் கூட கதை கதையாக கூறுவான் .ஏதோ தட்டு தடுமாறி இந்த மையிக் சுந்தரத்துக்கும் அவனுக்கும் கூட இந்த பள்ளிகூடத்திற்க்குள் காலடி வைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அதனால் அந்த பள்ளிக்கு பெருமை சேர்த்தார்களோ பள்ளியால் இவர்கள் பெருமை பட்டாரகளோ என்று சொல்லுவதற்க்கு ஒன்றுமில்லை ,சொல்ல முனைந்தாலும் பெரிய சுவராசியமாக ஒன்றும் இருக்காது .நிச்சயம் சுவராசியமாக ஏதும் சொல்லலாம்.பான பட அந்த றோட்டை பார்த்தபடி இருக்கிற கட்டிடத்தின் அந்த பழமையான மரத்துக்கு அண்மையில் ஒரு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதே கொஞ்ச கால மாக அதை 11B என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே அதை பற்றி.

அந்த வகுப்புக்கு கெமிஸ்ட்டிறி மாஸ்டர் வருவார் பிசிக்ஸ் மாஸ்டர் வருவார் அப்படி அதில் பொட்னி டீச்சரும் வருவார் ..பாடம் நடக்கும் ..நாளைய டொக்டர்களும் என்ஜீனியர்களும் முன் வருசையை பிடித்து வைத்துருப்பார்கள் தெரிந்த விடயம் தானே ...முன் வரிசை இருந்தால் பின் வரிசை இருக்கும் தானே ..அதில் தான் நம்ம மையிக் சுந்தரமும் அவனும் இருப்பார்கள் என்று சொல்லாமால் உங்களுக்கு தெரிந்திருக்கும் .அதை மீறி ஒருவன் 16 வயதில் வயதுக்கு மீறிய பரம் பொருள் ரகசியத்தை சொல்வது மாதிரிஅங்கிருந்தவர்களுக்கு எப்பவும் ஏதேனும் சொல்லிக்கொண்டிருப்பான். ..அதில் எல்லாம் சினிமா இருக்கும் இலக்கியம் இருக்கும் கவிதை இருக்கும் காதல் இருக்கும் களவியல் இருக்கும் ,எல்லாம் பாடம் நடந்து கொண்டிருக்கும் மாறிக்கொண்டிருக்கும் இடைவெளியில் தான் என்றது தான் ஆச்சரியமான விடயம் .முன் வரிசை மாணவர்களுக்கு இவன் சொல்வது விளங்காது .தங்களுக்கு மட்டுமே என விளங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கின்ற தாவரவியல் சூத்திரங்களிலும் பாரக்க ஏதோ விளங்காத ஒன்றை சொல்லுகிறான் என்று அதிசையத்தாலும் தேவை இல்லாத விடயம் என்று தான் அலட்சியமாக பார்ப்பார்கள்.

இதை விட நடுவரிசை மாணவர்கள் ஒன்று இருக்கிறார்கள் தெரியுமா ..தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் ..அவர்கள் படிப்பிலும் கண்ணு இப்பிடியான விடயங்களிலும் ஒருஈர்ப்பு.இருக்கும்.அப்படி ஒருவன் தான் ராகவன் ..கிளுகிளுப்பாக நயம் பட இந்த விடயங்களை சொல்லும் பொழுது காதை பின்னுக்கு நீட்ட தவறுவதில்லை... ஒரு கட்டாக்காலி மாடு அசை போட்டு நடந்து கொண்டிருக்கும் அதன் பின் நடுத்தர பெண் ஒருத்தி வாழ்க்கை சுமையின் வலிகள் முகத்தில் தெறிக்க அந்த றோட்டில் கடந்து கொண்டிருப்பாள் ,,,பாடம் எவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருந்தாலும் அங்கு தான் எல்லார் கண்ணும் போகும் இதில் முன் வரிசை பின்வரிசை பேதம் இல்லாமால் ..என்ன தான் இருந்தாலும் அவனின் கருத்துகளை ரசித்து கேட்டாலும் ,அவனது குரு பக்தி ...ஆசிரியர்களை மதிக்காமால் இவர்கள் நடந்து கொள்வது துப்புரவாக பிடிப்பதில்லை ..மனதில் எத்தனை நாள் திட்டி இருப்பான் ...ஆசிரியர்களும் இவர்களை கண்டு கொள்ளுவதில்லை ...மனத்தளவில் இவர்களை ஒதுக்கியே வைத்து இருக்கிறார்கள் ...யார் கண்டார்கள் இவர்களில் நாளைய காலத்தின் பிரபல எழுத்தாளனும் இருக்கலாம் அல்லது பிரபல அரசியல் கட்சியின் தலைவனும் இருக்கலாம் ..இதை எல்லாம் ராகவன் யோசித்து பார்க்கவில்லை

..பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி வகுப்பு பிடிக்கும் ராகவனுக்கு .ஆனால் பலருக்கு பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி டீச்சரை பிடிப்பதில்லை ...இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமால் இருக்கிறதே என்ற தாழ்வு மனப்பான்மையால் பாடம் நடத்தும் நேரத்தில் ஒரு நிமிடத்தில் எத்தனை தரம் சீலை இழுத்து இழுத்து மூடிகொண்டே இருப்பா என்று சொல்ல முடியாது அப்படி அவ்வளவு தரம் இருக்கும் . ...சில வேளை அக்கறையோடு உற்று நோக்கி படிப்பவர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியமால் இருக்கலாம்.அதை பார்க்க ரஜனி செய்யும் மெனரிசம் ஒன்று போல இருக்கும்

நம்ம இலக்கியவாதி இருக்கிறானே ....சிலவேளை பாடம் நடக்கும் பொழுது கண்ணை முழித்து கொண்டே கனவு காண்பான் ..அப்படித்தான் முழித்து கொண்டு தனது கற்பனை பெண்ணை வைத்து கவிதை வடித்து கொண்டிருந்தானோ அல்லது எப்போதோ வாசித்த மோக முள் நாவலின் வசனங்களை இரை மீட்டு கொண்டிருந்தானோ தெரியாது ...நடந்த கொண்டிருந்த தாவரவியல் பாடத்தின் சிலபஸ் தீடிரென்று மாறியது ...பொட்னி டீச்சர்..சரமாரியாக இவனை நோக்கி ...தாக்குதல் கணைகளை வீசி கொண்டிருந்தா..குரு என்ற மதிப்பில்லை என்று ...தொடர்ந்து கொண்டிருந்தது ...தீடிரென்று நனவு உலகத்துக்கு வந்த அவனுக்கும் விளங்கவில்லை ...அந்த வகுப்பில் உள்ளவர்கள் எவருக்கும் விளங்கவில்லை..டீச்சருக்கு மட்டும் அப்படி விளங்கி இருக்கிறது தன்னை உற்று பார்த்து தன்னை சைட் அடிக்கிறான் என்று ...டீச்சரில் பார்க்க ராகவனுக்கு தான் கோபம் அதிகம் இவன் குருவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று ...

தீடிரென்று ஏதோ காரணத்தினால் அவசர ஆசிரியர் கூட்டத்துக்கு அதிபர் அழைப்பு விட்டு இருந்தார்.எப்பொழுது வகுப்பு முடியும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கவா வேண்டும்.எல்லா வகுப்பிலும் கும்மாளம்

அப்படித்தான் 11B யிலும்

இந்த மையிக் சுந்தரத்தை பார்த்து இந்த இலக்கியவாதி.உசுப்பேத்தினான்..

என்னடா ஹிப்னாடிசியம் தெரியும் என்று சொல்லுறீயே ..செய்து காட்டு பார்ப்பம் என்று

யாராவது சம்மதித்தால் செய்து காட்டுறன் என்று கூறினான் சுந்தரம் கொலரை இழுத்து கொண்டு

யாருமே சம்மதிக்கவில்லை ...வீம்பு காட்டி கதைக்கும் இலக்கியவாதி முதற்க்கொண்டு

அறியும் ஆவலோ என்னவோ ராகவன் இதற்க்கு சம்மதித்தான்

உண்மையில் மையிக் சுந்தரம் திறமை சாலி தான் ..ஆழ்ந்த ஹிப்னாடிச தூக்கத்தில் ராகவன்

பல கேள்விகளை ..கேட்டு கொண்டிருந்தான் சுந்தரம் ஆழ்நிலையில் வைத்து க்கொண்டு

பதில்களை சரியாக சொல்லி கொண்டிருக்கிறான் ..பள்ளியில் முதல் சேர்ந்த முதல் திகதி கொண்டு

-------

------

-------

------

யாரோடு படுத்திருக்கிறாயா இவ்வளவு காலத்தில் ?

இல்லை என்று அனுங்கிய குரலில் பதில் வந்தது

யாராயாவது காதலித்து இருக்கிறாயா என்று கேள்விக்கு

ஓம் என்றான்

யாரை என்றதுக்கு

பொட்னி டீச்சரை என்று மகிழ்ச்சியுடன் பதில் வந்தது

அடுத்த பாடமும் பொட்னி பாடம் தான். இன்றைக்கு டபிள் பீரியட் எல்லோ

அப்ப வகுப்பறை 11B எப்படி இருக்கும் ஒன்று கட்டாயம் அவதானியுங்கோ ஒருக்கா ..என்ன?

(யாவும் கற்பனை)

http://mithuvin.blog...12/05/11-b.html

Edited by நாகேஷ்

காலம் காலமாக உந்த கடவுள்களுக்கு அலங்கரித்து ஆலாவனம் பண்ணி பூஜை புனகாரம் எல்லாம் செய்து அங்கிருந்து இங்கு  சக்தி பெற்று கொடுக்க முனையும் சராசரி பூசாரி போல ஒருவர் தான் இவரும்

நல்ல சிந்தனையோட்டம். வாழ்த்துக்கள்</p>

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் 'பின் வரிசை' பற்றிய விளக்கம் மிகவும் அருமை, நாகேஷ்!

முன் வரிசையில் உள்ளவர்கள், பின் வரிசையில் உள்ளவர்களைப் பார்க்கும் பார்வை இருக்கின்றதே!

அது மட்டுமே போதும், இது ஒரு தமிழ்ப்பள்ளிக் கூடம் என்று அதை அடையாளம் காட்ட!

வழக்கம் போல, உங்கள் தனித்துவமான எழுத்து நடை உங்களை அடையாளம் காட்டுகின்றது!

கதைக்கு நன்றிகள்!

  • தொடங்கியவர்

காலம் காலமாக உந்த கடவுள்களுக்கு அலங்கரித்து ஆலாவனம் பண்ணி பூஜை புனகாரம் எல்லாம் செய்து அங்கிருந்து இங்கு சக்தி பெற்று கொடுக்க முனையும் சராசரி பூசாரி போல ஒருவர் தான் இவரும்

நல்ல சிந்தனையோட்டம். வாழ்த்துக்கள்</p>

மணிவாசகன் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

உங்கள் 'பின் வரிசை' பற்றிய விளக்கம் மிகவும் அருமை, நாகேஷ்!

முன் வரிசையில் உள்ளவர்கள், பின் வரிசையில் உள்ளவர்களைப் பார்க்கும் பார்வை இருக்கின்றதே!

அது மட்டுமே போதும், இது ஒரு தமிழ்ப்பள்ளிக் கூடம் என்று அதை அடையாளம் காட்ட!

வழக்கம் போல, உங்கள் தனித்துவமான எழுத்து நடை உங்களை அடையாளம் காட்டுகின்றது!

கதைக்கு நன்றிகள்!

புங்கையூரான் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயர் மாரும் எங்களைப்போல ஒரு சபலிஸ்ட் என்று எப்பதான் எங்கன்ட சனத்துக்கு புரியபோகுதோ?

டிச்சர்மாரை சைட் அடிப்பதிலும் ஒரு திரில் இருக்கு......யார் அந்த டீச்சர் மொரிஸ் மைனர் காரில் அப்பாவுடன் வந்த டிச்சரோ..

தொடருங்கோ நாகேஷ்....

  • தொடங்கியவர்

ஜயர் மாரும் எங்களைப்போல ஒரு சபலிஸ்ட் என்று எப்பதான் எங்கன்ட சனத்துக்கு புரியபோகுதோ?

டிச்சர்மாரை சைட் அடிப்பதிலும் ஒரு திரில் இருக்கு......யார் அந்த டீச்சர் மொரிஸ் மைனர் காரில் அப்பாவுடன் வந்த டிச்சரோ..

தொடருங்கோ நாகேஷ்....

நன்றி புத்தன் கருத்துக்கு..நீங்க வேற ..இது யாவும் கற்பனையுங்கோ,,,,யாருங்க அந்த மொரிஸ் மைனர் டீச்சர் ?,

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் கருத்துக்கு..நீங்க வேற ..இது யாவும் கற்பனையுங்கோ,,,,யாருங்க அந்த மொரிஸ் மைனர் டீச்சர் ?,

டிச்சரின் பெயர் ஞாபகமில்லை,உருவம் மட்டும் ஞாபத்தில் உண்டு...கி..கி

  • கருத்துக்கள உறவுகள்

தூரத்தில் தெரிகிற அந்த கடலின் அலை சத்தத்தையும் மீறி உங்களுக்கு ஓரே அலை வரிசையில் ஒரு சத்தம் கேட்டு கொண்டிந்தால் அது தான் அந்த பள்ளிக்கூடம்.

அந்தப் பள்ளிகூடத்தில் படித்துக் கொண்டு பொட்னி ரீச்சரை சைட் அடித்த உங்களுக்குக் கண்டிப்பான வாத்தியார் கெமிஸ்ற்றி படிப்பிக்கவில்லைப் போலிருக்கு.. :blink:

எனக்கு முன்வரிசை, நடுவரிசை, பின்வரிசை எல்லாவற்றிலும் சீற் இருக்கும். படிப்பிக்க வருகின்ற ஆசிரியருக்குத் தகுந்தமாதிரியான இடத்தில் அமர்ந்துகொள்வேன். எங்கள் அனுபவத்தைப் போல உங்களுக்கும் அனுபவம் உள்ளதை நினைக்க ஆச்சரியமாக இருக்கின்றது! :o

  • தொடங்கியவர்

அந்தப் பள்ளிகூடத்தில் படித்துக் கொண்டு பொட்னி ரீச்சரை சைட் அடித்த உங்களுக்குக் கண்டிப்பான வாத்தியார் கெமிஸ்ற்றி படிப்பிக்கவில்லைப் போலிருக்கு.. :blink:

எனக்கு முன்வரிசை, நடுவரிசை, பின்வரிசை எல்லாவற்றிலும் சீற் இருக்கும். படிப்பிக்க வருகின்ற ஆசிரியருக்குத் தகுந்தமாதிரியான இடத்தில் அமர்ந்துகொள்வேன். எங்கள் அனுபவத்தைப் போல உங்களுக்கும் அனுபவம் உள்ளதை நினைக்க ஆச்சரியமாக இருக்கின்றது! :o

நன்றிகள் கிருபன் கருத்துக்கு.....இதைப்போலத்தான் எங்கள் மூத்த தலைமுறையினரும் சொல்ல நானும் உங்களைப் போல ஆச்சரியப்பட்டிருக்கிறேன் :)

பள்ளிக் காலங்களை ஞாபகப்படுத்துகிறது. சம்பவங்களிலும் பெரிய வித்தியாசமில்லை. உங்களுக்கு 'பொட்னி ரீச்சர்' எங்களுக்கு 'கெமிஸ்ரி ரீச்சர்'.

கிருபன் சொன்ன மாதிரி மூன்று வரிசையிலும் இருப்பேன்.

  • தொடங்கியவர்

பள்ளிக் காலங்களை ஞாபகப்படுத்துகிறது. சம்பவங்களிலும் பெரிய வித்தியாசமில்லை. உங்களுக்கு 'பொட்னி ரீச்சர்' எங்களுக்கு 'கெமிஸ்ரி ரீச்சர்'.

கிருபன் சொன்ன மாதிரி மூன்று வரிசையிலும் இருப்பேன்.

நன்றிகள் தப்பிலி கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வகுப்பறையில் இருந்தது போன்ற அனுபவம்.

எழுத்து நடை மிகக் நன்று . பாராட்டுக்கள்.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

மீண்டும் வகுப்பறையில் இருந்தது போன்ற அனுபவம்.

எழுத்து நடை மிகக் நன்று . பாராட்டுக்கள்.

நிலாமதி ...நன்றிகள் கருத்துக்கு

நாகேஸ் அண்ணை!

கதையைப் இண்டைக்குத்தான் முழுமையாகப் படித்தேன். முதல்நாள் கீழுள்ள இணைப்பைப் பார்த்துவிட்டு இணைக்கப்பட்டதோ என்று நினைத்து... ஆறுதலா வாசிப்பம் என்று விட்டுவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது... அது உங்களுடைய சொந்தப் படைப்பென்று.

பள்ளி வகுப்பறைக்கு மீண்டுமொருமுறை என்னைக் கூட்டிச் சென்றது தங்களின் கதை. நன்றிகள் பல! :)

பின்னர் வந்த காலங்களில், நானும் அந்த 11B வகுப்பில் உட்கார்ந்திருக்கலாம். :rolleyes:

ஆனால் எந்த வரிசை என்று சொல்ல மாட்டனே!!! :lol:

  • தொடங்கியவர்

நாகேஸ் அண்ணை!

கதையைப் இண்டைக்குத்தான் முழுமையாகப் படித்தேன். முதல்நாள் கீழுள்ள இணைப்பைப் பார்த்துவிட்டு இணைக்கப்பட்டதோ என்று நினைத்து... ஆறுதலா வாசிப்பம் என்று விட்டுவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது... அது உங்களுடைய சொந்தப் படைப்பென்று.

பள்ளி வகுப்பறைக்கு மீண்டுமொருமுறை என்னைக் கூட்டிச் சென்றது தங்களின் கதை. நன்றிகள் பல! :)

பின்னர் வந்த காலங்களில், நானும் அந்த 11B வகுப்பில் உட்கார்ந்திருக்கலாம். :rolleyes:

ஆனால் எந்த வரிசை என்று சொல்ல மாட்டனே!!! :lol:

ஆஹா அப்படியா விசயம்

..பல பெயர்களில் நான் எழுதுவதால் இந்த குழப்பம் பலருக்கு ஏற்படுகிறது . அது என்னுடைய பிழை தான் ...நன்றி கவிதை உங்கள் கருத்துகளுக்கு

எங்கள் பள்ளியில் டீச்சர் மாரே இல்லை .பின் அக்கடமியில் படிக்கும் போது பொட்டனி,சூலஜி இரண்டும் டீச்சர்தான் ஆனால் பெட்டைகளும் வகுப்பில் இருந்ததால் டீச்சர்மாரில கண் போகல .

  • தொடங்கியவர்

எங்கள் பள்ளியில் டீச்சர் மாரே இல்லை .பின் அக்கடமியில் படிக்கும் போது பொட்டனி,சூலஜி இரண்டும் டீச்சர்தான் ஆனால் பெட்டைகளும் வகுப்பில் இருந்ததால் டீச்சர்மாரில கண் போகல .

நன்றிகள் அர்ஜூன்...கருத்துக்கு...நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள் ..காஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி.....கெற் கெதர் நடக்கக்கை ...காய்ஞ்சு கருவாடாய் ஆர் வந்தாலும் பரவாயில்லை அதுவும் வாறது ஒன்று இரண்டு..அதுகளின்ரை பக்கத்து கதிரையில் இருக்கிறதுக்கு இருபது பேர் அடிபடுவாங்கள்... :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.