Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகன காப்புறுதி மோசடியில் ஈடுபட்ட கனடிய தமிழருக்கு தண்டனை

Featured Replies

கனடாவில் வாகன காப்புறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் இவ்வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவருக்கு மூன்று அரை வருடங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, $375,000 குற்றப்பணமும் செலுத்துமாறு நீதி மன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது மோசடியால் ஒன்று அரை மில்லியன் கனேடிய டாலர்கள் காப்புறுதி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறுவயதில் தனது பெற்றோரும், சகோதரியும் கொல்லப்பட்டதை தான் நேரில் பார்த்ததாகவும், இதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புக்களிற்காக ஆறு வயது தொடக்கம் சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் இவர் கூறியுள்ளார்.

[media=]

Fraudster who staged collisions gets 3.5 years

5c77714c44bcb930c31a25dfb790.jpg

Uthayakanthan Thirunavukkarasu leaves the University Avenue courthouse in Toronto after pleading guilty to fraud on Jan. 13, 2012. CITYNEWS

A 38-year-old Scarborough man who staged more than a dozen car crashes and defrauded insurance companies of $1.5 million has been sentenced to three and a half years in a federal prison.

Uthayakanthan Thirunavukkarasu, also known as Max or Mano, was also was ordered to pay $375,000 in restitution during a court appearance in Toronto on Thursday.

Earlier this year, he pleaded guilty to 17 counts of fraud, being a member of a criminal organization and assault causing bodily harm.

During his sentencing, Justice John McMahon called Thirunavukkarasu's organization “sophisticated.”

His organization cruised salvage yards for wrecked vehicles that had been written off. Then a licensed mechanic would supply fraudulent safety certificates and members would crash the cars into each other on city streets.

Insurance companies wrote cheques to replace the cars and provided medical benefits to 46 passengers, whose health assessments came from people who worked for Thirunavukkarasu.

Thirunavukkarasu purchased cars that were written off and had them fraudulently certified He recruited drivers to insure them and participate as drivers or passengers in the fake collisions.

In court, Thirunavukkarasu said he had witnessed his parents and sister being killed when he was just a child, and had been treated for depression since he was six years old.

Credit: http://www.citytv.co...-gets-3-5-years

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தண்டனை இது?

தண்டனைப்பணம் போக ஒரு மில்லியன் மிச்சம் இருக்கே....? :( :(

  • தொடங்கியவர்

எமது மொழிபெயர்ப்பில் சிறிய தவறு. மன்னிக்கவும்.

இவரது மோசடியால் ஒன்று அரை மில்லியன் கனேடிய டாலர்கள் காப்புறுதி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

என வரவேண்டும். திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒன்று அரை மில்லியன் டாலர்களில் இவருக்கு எவ்வளவு கிடைத்தது என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் இணையம் ஒன்றில் செய்தி பார்க்கும் போது இந்த இளைஞனின் செயல் பற்றி வந்திருந்தது...ஆனால் இவர் தனியாகத் தான் செயல்பட்டு இருப்பார் என்பது நம்ப முடியாத ஒன்று..தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மன உளச்சலுக்காக மற்றவர்களையும் அப்படி ஆக்க வேணும் என்று இருக்கா..அதுவும் எங்கள் நாட்டு இளைஞர்கள் புலம் பெயர் மண்ணிற்கு வந்து இப்படி எல்லாம் நடந்து கொள்வது மிகவும் கவலை அளிக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பார்த்தால்.. இங்க இங்கிலாந்தில அநேக தமிழர்கள் ஜெயிலிலதான் வாழ்க்கை நடத்தனும்.

வருவாய் காட்டாமல்.. அரச பணம் எடுப்பது.

அரச உதவி வீட்டை வாடகைக்கு விட்டு பணம் பண்ணுவது.

சரியான சட்ட ஆவணங்கள் வழங்காமல் வீட்டை வாடகைக்கு விடுவது.

வீட்டை வாடகைக்கு விட்ட பின்.. குடியிருப்பாளரின் உரிமையை மறுப்பது. சண்டித்தனம் பண்ணுவது..!

அரச உதவி பெறுவதற்காக மட்டும் வேலை செய்ய வாய்ப்பிருந்தும் குறிப்பிட்ட நேரம் மட்டும் வேலை செய்வது.

வாகன காப்புறுதியில் எக்கச்சக்க குளறுபடி.

வாகன தர நிர்ணயத்தில் (எம் ஓ ரி) காசை கொடுத்து சரிக்கட்டி.. சான்றிதழ் பெறுவது.

வருவாய் இல்லாமலே வீடு வாங்க கடன் எடுப்பது.

அகதி இல்லாமலே அகதி என்று பொய்க் கதை எழுதி அகதி அந்தஸ்துப் பெறுவது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வயதையும் குறைத்துக் காட்டி குழந்தைகள் என்று..தந்தையோடு இணைவதாக ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெளி நாட்டுக்குள் கொண்டு வருவது.

என் ஐ நம்பர் காட்டாமல் குறைந்த கூலிக்கு வேலை செய்வது.

கள்ளக் கடனட்டை போடுவது.

பெற்றோல் நிலையத்தில் மீற்றரில் சுத்துமாத்து செய்வது.

தமிழ் கடைகளில் போலி விலைகளையும் காலாவதி லேபல்களையும் ஒட்டி பொருட்களை விற்பனை செய்வது.

காலாவதியான மரக்கறி வகைகளை மேற்பரப்பை வெட்டி தள்ளிட்டு.. விற்பது.

மல்ரி பக் பொருட்களை சட்டத்துக்கு மாறாக லூசாக விற்பது..!

கோவில்கள் என்று.. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்று வயிற்றோட்டம் வர வைப்பது.

பழுதடைந்த போன உணவுகளையும் உணவகங்களில் வைத்து விற்றல்..!

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்........................................... இதற்கு எல்லாம் ஜெயிலில போட்டா கிட்டத்தட்ட அநேக தமிழர்கள் உள்ள தான் இருப்பினம். :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத்துறையும் தெரியாது என்று சொல்வதற்கு இல்லை..ஆசை யாரை விட்டது எப்படியும் பணம் பண்ணலாம்...

Edited by யாயினி

இதற்கெல்லாம் யார் மேல் பிழை? இங்கிருக்கும் பொலிஸ், நகரசபை, அரச அலுவல்கங்கள். ஒழுங்காக செயற்படவில்லை என்றுதான் அர்த்தம். இந்த தமிழரே இவ்வளவு என்றால் இங்கிருக்கும் கறுப்பர், இந்தியர், பாக்கிஸ்தானியர் எவ்வளவு செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சமூக விரோதிகளுக்கும் கூடத், தமிழனின் பிரச்சனை தான், துணை போகின்றது! :o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சில்லறை திருட்டுக்களை செய்து பிடிபடுவார்கள்.அவர்கள் தான் ஊடகங்களிலும் போடப்படுவார்கள்.மில்லியனில் கொள்ளை அடிப்பவர்கள் பிடிபடவே மாட்டார்கள்.

சிறுவயதில் தனது பெற்றோரும், சகோதரியும் கொல்லப்பட்டதை தான் நேரில் பார்த்ததாகவும், இதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புக்களிற்காக ஆறு வயது தொடக்கம் சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் இவர் கூறியுள்ளார்.

சுய லாபத்துக்காக தன குடும்பத்தைப் பற்றி பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

கனடாவிலும் சரி, லண்டனிலும் சரி மோசடிப் பேர்வழிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சில்லறை திருட்டுக்களை செய்து பிடிபடுவார்கள்.அவர்கள் தான் ஊடகங்களிலும் போடப்படுவார்கள்.மில்லியனில் கொள்ளை அடிப்பவர்கள் பிடிபடவே மாட்டார்கள்.

இதுதான் உண்மை.. இது ஒரு செய்தியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப் படவேண்டும்.. கண்டிக்கப்படவேண்டியதும்தான்..!!

மற்றைய இனங்களில் மலைமுழுங்கிகள் சுதந்திரமாக உலவி வருகிறார்கள்.. :D ஒருசில பிடிபடுவார்கள்.. அவர்களும் பணத்தை இறைத்து நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து உலாவருவார்கள்.. :unsure:

கொன்ராட் பிளாக் மற்றும் லண்டன் நியூஸ்வீக் (?) அதிபர் போன்றவர்கள் நல்ல உதாரணங்கள்.. இன்றும் வானொலிகளில் வந்து அட்டகாசமாகப் பேட்டி குடுக்கிறார்கள்.. :D

Canadian Media Magnet பிளக்கின் நேர்காணல் சில தினங்களுக்கு முன்னர் சிபிசி தொலைக்காட்சியில் சென்றது. முழுமையாக பார்க்க

முடியவில்லை. மேலோட்டமாக பார்த்தபோது அவர் தான் குற்றம் அற்றவர் என்று கூறியதுபோல் விளங்கியது.

மனோ அண்ணையும் ஒரு நல்ல அப்புக்காத்தை பணத்தை பார்க்காமல் வைத்திருக்கவேண்டும் இந்த வெள்ளைக்கார காப்புறுதி நிறுவனங்கள் போன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.