Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் ஒரு இந்தியனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு இந்தியனும்

என்னுடன் கடந்த 6 வருடங்களாக ஒரு இந்தியர் வேலை செய்துவருகிறார். அவருக்கு சுமார் 55 வயதிருக்கலாம், திருமணமாகி ஒரு ஆண்பிள்ளையும் இருக்கிறது. இந்தியாவின் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் கூப்ளி எனும் நகரைச் சேர்ந்தவர். இதுவரை காலமும் என்னுடன் ஈழப்பிரச்சினை தொடர்பாக அவ்வளவாகப் பேசியது கிடையாது. பல வேளைகளில் நானும் வேறு சிலரும் எமது பிரச்சினை பற்றிப் பேசும்போது மெளனமாகக் கேட்டுக்கொண்டிருப்பார், ஏதும் சொல்வது கிடையாது.

சென்றவாரம் அவருடன் நீண்டநேரம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பல சுவாரசியமான விடயங்களை நான் அறிந்துகொண்டேன்.

இந்தியாபற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அவரது கேள்வியுடன் எமது சம்பாஷனை ஆரம்பமானது. எனக்குத் தெரிந்த இந்தியா பற்றி அவருக்குச் சொன்னேன். லால் பகதூர் சாஷ்த்திரி பற்றித் தெரியுமா என்று கேட்டார், எனக்கு சிறிமாவுடன் சாஷ்த்திரி செய்துகொண்ட மலையகத் தமிழர் தொடர்பான ஒப்பந்தம் நினவிற்கு வரவே, ஓம், தெரியும், அவர் 1970 களில் இருந்த இந்தியப் பிரதமர் தானே என்று கேட்டேன். ஆம, அவர் மிகச்சிறந்த ஒரு இந்தியத் தலைவர் என்பது உனக்குத் தெரியுமா?? அவரது காலத்தில்தான் நாம் பாக்கிஸ்த்தான் இராணுவத்தை சண்டையிட்டுச் சரணடைய வைத்தோம் என்று பெருமை படக் கூறினார். உடனே நான், ஆனால் அவர் தனது ஒரு இன மக்களான இந்திய வம்சாவளித்தமிழரை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி மீண்டும் இந்தியாவுக்குக் கள்ளத்தோணியேற்ற சிறிமாவுடன் ஒப்பந்தம் செய்து காட்டிக்கொடுத்தாரே என்று கேட்டேன், அவரது முகம் மாறிப்போனது.

சரி, பங்களாதேஷ் எப்படித்தோன்றியது என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டார். நானும், ஆம், கிழக்குப் பாக்கிஸ்த்தான் முஸ்லீம்கள் மேற்குப் பாக்கிஸ்த்தானுடன் இருக்க விரும்பாததினால், இந்தியா சந்தர்ப்பத்தைப் பாவித்துப் பலமான பாக்கிஸ்த்தானைக் கூறுபோட்டு உடைத்தது என்று கூறினேன். அந்தபோர்ரில் நாம் பாக்கிஸ்த்தான் இராணுவத்தை கராச்சிவரை விரட்டினோமே தெரியுமா உனக்கு என்று கேட்டார், எனக்கு அதுபற்றி அறியும் விருப்பம் இருக்கவில்லை என்று நான் கூறினேன்.

பின்னர், மகாத்மா காந்தி செய்த மிகப்பெரும் தவறு இந்தியாவை உடைத்து பாக்கிஸ்த்தானை உருவாக்கியதுதான் என்று சொன்னார். நானோ, அப்படிச் செய்யாதிருந்தால் இன்றுவரை நீங்கள் இந்து முஸ்லீம் என்று அடிபட்டுக்கொண்டிருப்பீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர், நாடு பிரிந்ததால், பல இந்துக்களின் வீடுகள், சொத்துக்கள் அன்று முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டன, பாக்கிஸ்த்தானிலிருந்த பல இந்துக்கள் பலாத்காரமாக விரட்டப்பட்டனர் என்றார். நானோ, அப்படியானால், அன்று இந்தியாவில் முஸ்லீம்கள் இருந்த பகுதிகளில் இன்று இந்துக்கள் வாழவில்லையா?? அவர்களது சொத்துக்களையும் வீடுகளையும் இன்று அனுபவிப்பது இந்துக்கள் அல்லவா என்று கேட்டேன், அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற முன்னர் பல சிற்றரசுகளாகவும், முடியாட்சி உடைய சிறு நாடுகளாகவும் இருந்தது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் நேரு அவர்கள் இந்த சிற்றசுகளையெல்லாம் கலைத்துவிட்டு இந்தியா எனும் பாரிய தேசத்தை கட்டவேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மன்னர்களும், தேசங்களும் கட்டாயமாக இந்தியப் பெருந்தேசியத்துக்குள் உள்வாங்கப்பட்டன என்று கூறினார். அப்போது நான், அப்படியானால் நீங்கள் வேறுபட்ட மொழிபேசும் சிறிய தேசங்களைக் கட்டாயப்படுத்தி உங்களுடன் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் அப்படித்தானே? என்று வினவினேன். அதற்கு அவர், பலமான இந்தியா அமைவதற்கு அப்படிச் செய்வது அவசியமானது என்று கூறினார். ஹைதராபாத் போன்ற இடங்களில் சுதந்திரத்துக்குப் பின்னர் இடம்பெற்ற இந்தியத் தேசியத்துக்கெதிரான கிளர்ச்சி பற்றித் தெரிவித்த அவர், அக்கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவம் அழைக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர், இந்திய தேசியம் காக்கப்பட்டது என்று பெருமை பேசினார்.

ஒருவாறு எமது சம்பாஷனை காஷ்மீர் நோக்கித் திரும்பியது. பல இந்தியர்கள் என்னுடன் எதிரிகளாகக் காரணமான அதே சம்பாஷனையை அவருடனும் நான் தொடங்கினேன். காஷ்மீர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரைக் கேட்டேன். அது இந்தியாவின் ஒரு பகுதியென்று சட்டென்று அவரிடமிருந்து பதில் வந்தது. எப்போதிருந்து என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். சுதந்திரத்துக்குப் பின்னர் என்று சொன்னார். அதற்கு முதல் அந்த நாடு ஒரு சுதந்திரத் தேசம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். பதில் பேசவில்லை. மீண்டும் நானே, இந்துக்குடியரசான காஷ்மீர் பாக்கிஸ்த்தானிடமிருந்து தன்னைப் பாதுகாக்க இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இந்தியா இன்று அடாத்தாக அதை ஆக்கிரமித்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று அவரைக் கேட்டேன். அவரது குரல் மாறியது. காஷ்மீரிகள் இந்துக்கள், அதனால் காஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தமானது என்று தத்துவம் பேசினார். காஷ்மீரில் இருக்கும் மக்களில் முஸ்லீம்களின் விகிதாசாரம் என்னவென்று அவரிடம் தெரியாதவன் போலக் கேட்டேன். அதற்கு அவர், பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்றார். அதற்கு நான், பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களாக இருக்க, காஷ்மீர் இந்துக்களுடையது ஆகவே இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவது எப்படி நியாயம் என்று கேட்டேன். அதற்கு அவர், காஷ்மீரிகள் எல்லோருமே ஒரு காலத்தில் இந்துக்கள், ஆனால் பாரசீகத்திலிருந்து வந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டவர்கள் என்று கூறினார்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகும் பாக்கிஸ்த்தானும்தான் காஷ்மீர் பிரச்சினையை ஊதிப் பெருப்பிக்கிறார்கள்.அங்குள்ள மக்களுக்கு விடுதலையும் தேவையில்லை, பிரிவினையும் தேவையில்லை, அவர்கள் இந்தியாவுடன் இருப்பதத்தான் விரும்புகிறார்கள் என்று கூறினார். அவர்கள் இந்தியாவுடன் இருப்பதைத்தான் விரும்புவதாக எப்போது உங்களிடம் சொன்னார்கள் என்று கேட்டேன். அதற்குப் பதில் வரவில்லை. அவர்களின் விருப்பத்தை அறிய இதுவரை சர்வஜன வாக்கெடுப்பொன்றினை காஷ்மீர் மக்களிடம் மட்டும் இந்தியா இதுவரை நடத்தியிருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை, அங்கு அப்படியொன்றைச் செய்வது கடிணமானது, தேர்தலில் தில்லுமுள்ளுகள் நடக்கலாம், எங்களுக்கு அந்த மக்களின் உண்மையான விருப்பத்தை அறியமுடியாமல்ப் போகும் என்று சாட்டுச் சொன்னார். நானோ, தில்லுமுள்ளு நடக்கும் எனும் காரணத்தை வைத்தே அந்த மக்களின் விருப்பை அறியாமலிருக்கிறீர்கள், அல்லது அவர்களின் விருப்பு என்னவாக இருக்கும் என்பதை இந்தியா அறிந்துள்ளதனால்த்தான் இன்றுவரை அங்கே ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவில்லை என்று கூறினேன். அதற்கு அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை யார் இல்லையென்று சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். காஷ்மீரைப் பிரிக்க எந்த இந்திய அரசியல்த்தலமையாவது முடிவெடுத்தால் இந்தியாவில் பிரளயம் நடக்கும், இந்துக்களுக்கிடையே சிவில் யுத்தம்ஆரம்பமாகும் என்றார். அப்படியானால் 1947 இல் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பிரிந்தபோது அப்படி ஏதாவது சிவில் யுத்தம் நடந்ததா என்று கேட்டேன். ஆம், பலர் கொல்லப்பட்டார்களே என்றார். நானோ, அப்படி நடந்தது முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்குமிடையிலான இனக்கலவரமேயன்றி, இந்துக்களுக்கிடையிலான சிவில் யுத்தம் அல்லவே என்று கேட்டேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

எதற்காக காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை ஆக்கிரமித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் உங்களது பிரச்சினையையும் காஷ்மீர் பிரச்சினையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், நீங்கள் காஷ்மீர் பிரிவதற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் என்று என்னிடம் சொன்னார். நானோ, இல்லை, நான் உள்ள நியாயத்தைத்தான் சொல்கிறேன், அம்மக்களின் விருப்பிற்கு மாறாக ஆக்கிரமித்துக்கொண்டு உங்களுடைய நாடு என்று வீண்வாதம் செய்கிறீர்கள், நீங்கள் செய்வதைத்தான் சிங்களவன் சுதந்திரத்திலிருந்து இன்றுவரை எங்களுக்குச் செய்துவருகிறான் என்று சொன்னேன்.

அதற்கு அவர், நீங்களும், சிங்களவரும் ஒரே நாட்டிலிருந்தே (இந்தியாவிலிருந்தே) அங்கு சென்றீர்கள், ஆனால் இன்றுமட்டும் அடித்துக்கொள்கிறீர்கள், ஏன் உங்களால் ஒருவர் செய்ததை இன்னொருவர் மறந்து ஒரே நாட்டில் இருக்க முடியவில்லை என்று கேட்டார். அதுமட்டுமல்லாமல், இந்தியா சுதந்திரத்துக்குப் பின்னர், பல சிறிய அரசுகளை ஒன்றுசேர்த்து பலமான இந்தியாவாக மாற்றியதுபோல சிங்களமும் செய்வது தவறல்ல என்று சொன்னார். அதற்கு நான், அப்படிச் செய்வதிலும் ஒரு சிக்கலிருக்கிறது, இந்தியாவில் நீங்கள் மராட்டியர் என்பதற்காகவோ, இன்னுமொருவர் தமிழர் என்பதற்காகவோ இனரீதியாகத் தண்டிக்கப்பட்டீர்களா என்று கேட்டேன். இல்லை, ஆனால், ஆங்கிலேயரின் காலத்தில் தமிழர்கள் பலர் உயர் பதவிகளை அலங்கரித்துக்கொண்டு சிங்களவரை கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்று அவர்கள் சொல்கிறார்களே என்று என்னிடம் கேட்டார். நானோ, படித்தவனுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை, தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களவர்கள் கூட பல உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். தமிழரை இன்று அழிக்கச் சிங்களம் கூறும் நொண்டிச் சாட்டை நீங்களும் கூறுகிறீர்கள் என்று சொன்னேன்.

சிங்களவருடன் ஒரே நாட்டில் வாழ்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்னிடம் கேட்டார். நானோ, சரி, உங்களிடம் ஒன்று கேட்கிறேன், உங்களிடம் பாக்கிஸ்த்தானைச் சேர்ந்தவர்கள் வந்து, எங்களுடன் வந்து வாழுங்கள், நாங்கள் இந்தியாவையும், பாக்கிஸ்த்தானையும் இணைத்து பெரிய முஸ்லீம் நாடான பாக்கிஸ்த்தானை உருவாக்குவோம், நீங்கள் இந்தியர்கள் என்கிற உங்களின் அடையாளத்தைத் துறந்து, மறந்து வந்தால் மட்டுமே உங்களை ஏற்றுக்கொள்வோம், அதற்குப்பிறகு இந்தியா, தேசியம், ஜெய்கிந்த் என்று எதுவுமே இருக்கக் கூடாது என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று உடனேயே மறுத்தார். அப்படியிருக்க எங்களை மட்டும் சேர்ந்து வாழுங்கள் என்று ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் திருப்பி கேட்டேன், பதில் இல்லை.

இப்படியே, காஷ்மீர், பஞ்சாப், அசாம் என்று எங்களின் சம்பாஷனை விரிந்தது. அதுபற்றி பின்னர் எழுதுகிறேன்.

Edited by ragunathan

புழுதி வாரி தூற்றாமல் கழுவி கழுவி ஊற்றாமல் தனது கருத்துகளை முன்னிறுத்தி சிறந்த எழுத்தாக்கம் கொண்டு நிறுவ முற்படும் சிறந்த கட்டுரை . மிக சிறந்த எழுத்து நடை . வாழ்த்துக்கள் . எனக்கு கூட மறுப்பு தெரிவித்து எழுதலாம் என இருந்தேன் . ஏனெனில் நான் இந்தியன் ஆயிற்றே . ஆனால் எழுத்தாக்கம் கவர்ந்து இழுக்கிறது . எழுதுங்கள் . எழுதி முடித்ததும் நான் என் பங்குக்கு கழுவி கழுவி ஊத்துகிறேன் . அப்புறம் வச்சிக்கலாம் நம்ம சந்தையை .

நண்பரே ஆக்கிரமிப்பு சுய நிர்ணயம் என பல பேசும் உங்கள் கட்டுரையின் விசித்திரமான ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா ??? அந்த ஆள் இருக்கும் ஹூப்ளி இருப்பது கர்நாடகாவில் . ஆனால் பெரும்பான்மை மக்கள் ( முக்கால் வாசிக்கும் மேலே ) மராட்டியர்கள் . எங்க முன்னோர்களான சில பெரியவர்கள் எல்லை பிரிக்கும் போது சரியா பிரிக்காம இந்திய இனங்களிடையே சண்டை தொடர்ந்து இருக்க வேண்டும் அப்போதுதான் டெல்லிகாரன் பொழப்பு ஓடும் என்ற உயரிய எண்ணம் கொண்டு மாநிலங்களை பிரித்து மூட்டி விட்டு இருக்கின்றனர் . அதனால் வந்த வினை . இங்கே எங்கள் நாட்டில் எப்போது பார்த்தாலும் மாநிலங்களுக்குள் ஒரே புகைச்சல் . சரி எங்க பாடு கிடக்கட்டும் . உங்கள் கட்டுரையை தொடருங்கள் .

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்தியனின் பார்வை மிகவும் வித்தியாசமானது!

இவர்கள் தாம் வாழும் வட்டத்தை விட்டு, வெளியே வர விரும்புவதில்லை!

அதற்கான தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை!

உங்கள் முயற்சிக்கு நன்றிகள், ரகுநாதன்!

சிலரின் கண்களையாவது, அது திறக்குமெனில், உங்களுக்கு அது ஒரு மிகப் பெரிய வெற்றியே!

'மூத்திரம்' என்று ஒரு வார்த்தைக்குள் சாஸ்திரி, அடங்கி விடுகின்றார்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சம்பாஷனை பஞ்சாப்பை நோக்கிச் சென்றது.

அதற்கு முதல், சில வருடங்களுக்கு முன்னர் என்னுடன் வேறோரு இடத்தில் பணியாற்றிய இன்னொரு இந்தியருடன் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது. பஞ்சாப்பின் சண்டிகாரை பிறப்பிடமாகக் கொண்ட அந்த நண்பரின் பெயர் கெவின் சிங். தன்னை கெவின் என்றே கூபிடுங்கள் என்று எங்களிடன் கேட்டுக்கொள்வார். முண்டாசு போடாத தாடி வளர்க்காத சீக்கியர். படித்தவர் என்பதால் நிதானமாகப் பேசுவார்.

ஒருநாள், அவரிடம் பஞ்சாப்பின் இன்றைய நிலை பற்றிக் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் பேச்சுக் கொடுத்தேன். எல்லாம் நன்றாக இருக்கிறதே, எதற்குக் கேட்டீர்கள் என்று என்னிடம் திரும்பிக் கேட்டார். 1984 ஆம் ஆண்டின் ஒப்பெரேஷன் புளூ ஸ்டார் இன்னும் சீக்கியர்களின் மனதில் மாறாத வடுவாக இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டே அவரிடம், பொற்கோயில் பற்றியும், 1984 ஆம் ஆண்டின் அமிர்தசரஸ் நகர் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். ஆச்சரியமாக என்னைப் பார்த்த அவர், எதற்காகக் கேட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டே தொடங்கினார். அது ஒரு இருண்ட காலம், சில தவறானவர்களின் வழிநடத்தலினால் அந்த அழிவு ஏற்பட்டது என்று சொன்னார். எனக்குப் புரியவில்லை, யாரைத் தவறானவர்கள் என்று இந்தச் சீக்கியர் சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே, யாரைச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். பிந்தரன் வாலே என்று அவர் நிச்சயம் சொல்லப்போவதில்லை என்கிற எண்ணம் என் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்க அவர் தரப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தேன். அவர் பதில் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக பிந்தரன் வாலே என்று வந்தது. எனக்கு அதன்பிறகு எதுவுமே பேசத் தோன்றவில்லை. என்ன இவர், இப்படி முடித்துவிட்டாரே என்று எண்ணிக்கொண்டு, அவர் சீக்கிய மக்களின் தனிநாடான காலிஸ்த்தானுக்காகப் போராடிய வீரனல்லவா?? அவரைப் போய்த் தவறானவர் என்கிறீர்களே என்று ஏமாற்றத்துடன் கேட்டேன். யாருக்கு வேண்டும் தனிநாடு? எம்மை நிம்மதியாக இருக்கவிட்டாலே போதும் என்றார். அப்படியானால் பொற்கோயிலுக்குள் இந்திய காலாட்படை நடத்தியம் தாக்குதல் பற்றியும், உங்கள் மக்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டது பற்றியும் கவலைப்படவில்லையா?? அதை எவ்வாறு இவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது என்று நான் கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. மெள்னத்தை விடையாகத் தந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை சீக்கியர்களின் போராட்டம் பற்றியும் அவர்களது இலட்சியம் இடையே முடிவடைந்ததுபற்றியும் எனக்குள் நானே சில சமயங்களில் கேள்வி கேட்டு வருகிறேன். இந்திரா அம்மையார் கொல்லப்பட்டதும், அதன்பின்னரான சீக்கியப் பொதுமக்கள் மீதான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் தாக்குத்லும் அவர்களும் எங்கள் போல ஒரு அடக்கப்பட்ட இனம்தான் என்கிற எண்ணக்கருவைத் தோற்றுவித்திருந்தது. இன்றுவரை எந்தச் சீக்கியனைக் கண்டாலும் எங்கள் போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இந்தியன் என்கிற எனது எண்ணம் எனக்குள் இருந்துகொண்டேயிருக்கிறது.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, எனது இப்போதைய கதைக்கு வருகிறேன்.

எனக்குப் பஞ்சாப் பற்றியும் பிந்தரன் வாலே நடத்திய காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் பற்றியும் சொல்லுங்களேன் என்று அவரைக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே தொடங்கினார், காலிஸ்த்தானை எந்தவொரு இந்தியச் சீக்கியனும் கேட்கவில்லை என்பது உனக்குத் தெரியுமா என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். என்னால் நம்பமுடியவில்லை, என்ன சொல்கிறீர்கள்? அப்படியானால் எதற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் போரிட்டு மடிந்தார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், காலிஸ்த்தான் என்பது கணடா அரசாங்கத்தினதும், புலம்பெயர் வாழ் சீக்கியப் பணக்காரரகளினதும் கனவு மட்டுமேயன்றி உண்மை கிடையாது என்று கொச்சைப்படுத்தினார். எனக்குப் பொறுக்கமுடியவில்லை, எம்மைப் போன்றே தனிநாட்டிற்காகவும், சுய நிர்ணயத்துக்காகவும் போராடிய இனத்தின் தியாகங்களை இவர் நொடிப்பொழுதில் கனவென்று சொல்லியது என்னை ஆத்திரப்படுத்தியது. அப்படியிருக்காது, நான் நம்பமாட்டேன் என்று நான் சொல்ல அவர் தொடர்ந்தார்.

கணடாவில் பல ஆண்டுகளாகவே சீக்கியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பலர் பெரிய பணக்காரர்கள். பஞ்சாப்பில் வேற்றினத்தவர்கள் உயர் பதவிகளில் இருந்துகொண்டு விவசாயிகளான அந்த நாட்டு மக்களை அடிமைகள் போல நடத்தி வந்தார்கள். இது பல்லாண்டுகளாகவே சீக்கியர்மனதில் வெறுப்பை உருவாக்கியிருந்தது. ஆகவே தம்மிடம் பணமும் அந்தஸ்த்தும் வந்தவுடன், வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் உதவியோடு பஞ்சாப்பீல் கலவரத்தை உண்டுபண்ணினார்கள் என்று சொன்னார். அவர் சொல்லிய காரணத்துக்குள்ளிருந்த சீக்கியப் போராட்டத்தின் நியாயத்தை அவர் மறைக்க முயன்றாலும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, அவர்கள் வெறும் கனவொன்றிற்காகப் போராடவில்லை, அடக்கப்படுகிறோம், ஆளப்படுகிறோம் என்கிற உணர்வும், விடுதலைக்கான தேவையும் அவர்களைக் காலிஸ்த்தான் எனும் சீக்கியத் தேசம் நோக்கித் தள்ளியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். சரி, பரவாயில்லை, இவர் என்னதான் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினேன்.

இந்திரா அம்மையாராலேயே பிந்தரன் வாலே எனும் உருவம் அமைக்கப்பட்டது. பஞ்சாப்பில் அன்றிருந்த பலமான சீக்கிய அரசியல் கட்சியை உடைத்து அங்கே மீண்டும் காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டுவர இந்திரா அம்மையார் போட்டா திட்டமே இறுதியில் அவருக்கு எமனாகியது என்று சொன்னார். சீக்கிய அரசியல் கட்சியை உடைத்துப் பலவீனமாக்க அமைக்கப்பட்ட பிந்தரன் வாலே இறுதியில் கை மீறிப் போகவே அவர்களை அழிக்க அம்மையார் உத்தரவிட்டார்.

கட்சி மோதலினால் உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல் போக பிந்தரன் வாலேயும் அவனது தோழர்களும் ஓரம்கட்டப்பட்டார்கள். இதுவே இந்திய அரசுக்குச் சார்பாகப் போனது. அவர்களை முற்றாக அழிக்கக் காத்திருந்த இந்திய அரசு 1984 இல் சுந்தர்ஜி தலமையில் ஒப்பெரேஷன் புளூஸ்டாரை நடத்தி வெற்றி கண்டது என்று முழங்கினார். எனக்கு முள்ளிவாய்க்கால் நினைவில் வந்துபோனது. இவரால் எப்படி ஒரு இனத்தின் நம்பிக்கையையும், இலட்சியத்தையும், பல்லாண்டுக் கனவையும் ஒரே இராணுவ நடவடிக்கையில் அழித்ததை வெற்றியாகக் கொண்டாட முடிகிறது என்று என்னைக் கேட்டுக்கொண்டே அவர்களும் உங்களைப்போன்ற இந்தியர்கள்தானே, அவர்கள் மேல் இரக்கப்படமுடியவில்லையா உங்களால் என்று கேட்கவேண்டும்போல இருந்தது. ஆனால் நா வரவில்லை. அந்த மக்களுக்காக மனதில் இரங்கிக்கொண்டே எழுந்து சென்று விட்டேன். அவருடன் இன்னும் நிறையப் பேசலாம். எதற்கும் கோபம் கொள்ளாத மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். ஆகவே முடிந்தால் அவரை இன்னும் கேட்பேன்.

Edited by ragunathan

கட்டுரையின் நோக்கம் என்னவோ தெளிவாகவே புரிகிறது . ஆனால் இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தானே. எத்தனை மொழிகள் ??? எத்தனை இனங்கள் ??? எத்தனை மதங்கள் ??? எத்தனை கட்சிகள் ??? எத்தனை பிரிவுகள் ??? எத்தனை பேதமைகள் ??? இருந்தும் இந்தியா என்ற பூமாலையில் சேர்ந்து கதம்ப மனம் வீசுகின்ற மக்கள். யாரும் யாரையும் மதிப்பதில்லை. ஆளாளுக்கு நாட்டமை . துரோகங்கள், தியாகங்கள், பொய், பிரட்டு வதந்தி இன்னும் என்னன்னவோ .. எனினும் சுவை என்றால் அறுசுவை. அறுசுவை என்றாலே பிடித்தது பிடிக்காதது அனைத்தும் இருக்கும் . அறுசுவைக்கு இலக்கணம் எங்கள் இந்தியா.

உங்கள் கட்டுரை தொடரட்டும் . அவ்வப்போது நானும் இடையில் எழுதுகிறேன்

திட்டுபவனையும் கொட்டுபவனையும் யாராக இருந்தாலும் அமைதி ஒன்றையே கடை பிடிக்கும் மாபெரும் நாடு எங்கள் நாடு . கோழைகள் என்று ஏசினாலும் வீரம் என்பது தற்காப்புக்காக மட்டுமே என்ற உயர் கொள்கை உள்ள பண்புள்ள நாடு எங்க நாடு .

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

0.jpg0.jpg

வாரான்..வாரான் பூச்சாண்டி, இரயிலு வண்டியிலே..!

வாராணாசி கோட்டை தாண்டி, மெயிலு வண்டியிலே...

:(

.

Edited by ராஜவன்னியன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அந்த மராட்டியருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. வேலைத்தலத்தில் உணவருந்தும் பகுதியிலிருந்த மேசையொன்றில் நாங்கள் அமர்ந்திருந்தோம். நான், மராட்டியர் மற்றும் பிஜி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இன்னொரு இந்தியர் என்று மூன்று பேர் உணவருந்திக்கொண்டிருந்தோம்.

நான் அந்த மராட்டியரிடம், "நான் உங்களிடம் ஒன்று கேட்கப்போகிறேன், வெளிப்படையாகப் பதில் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு, " ஏன் இந்தியா ஈழத்தமிழரின் சுதந்திரத்திற்காக உதவக் கூடாது ?" என்று கேட்டேன். அதற்கு அவர், " எதற்காக ஈழத்தமிழர் சுதந்திர நாடு கேட்கிறார்கள்?" என்று என்னிடம் கேட்டார். இதற்கான பதிலை பலமுறை அவரிடம் நான் சொல்லியிருந்தும் அவர் மீண்டும் என்னிடம் கேட்டது எனக்கு எரிச்சலையூட்டியது. ஒருவாறு கோபத்தை அடக்கிக்கொண்டே, " அவர்கள் எங்களின் தேசத்தை அடாத்தாக ஆக்கிரமித்திருக்கிறார்கள், எங்கள் மக்களில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்று தள்ளியிருக்கிறார்கள்" என்று கூறினேன். அவரோ, "இந்தியாவிலும் மாநிலங்களுக்கிடையே பிணக்குகள் இருக்கின்றன, ஒவ்வொரு மாநில எல்லையிலும் மக்கள் அடிபட்டுச் சாகிறார்கள், அதற்காக அவர்களுக்கு தனிநாடு பிரித்துக்கொடுத்துவிட முடியுமா, என்ன?" என்று என்னிடம் கேட்டார். என்ன இந்த மனிதர், முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிடச்சுப் போடுகிறாரே என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே, " இந்தியாவில் ஒரு மாநிலத்தவன் இன்னொரு மாநிலத்திற்குள் ஊடுருவி அங்குள்ள மக்களைக் கொன்றுதள்ளிவிட்டு, அம்மாநிலத்தை தனது மாநிலத்துடன் இணைத்துக்கொண்டது எப்போதாவது நடந்ததா ?" என்று கேட்டேன். அதற்கு அவர்" இல்லை, ஆனால் இந்தியாவில் பல இனக் கலாச்சார மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள், ஆனால் இலங்கையில் ஒரே இனத்தவர்களாக இருந்துகொண்டு எதற்கு அடிபடுகிறீர்கள், இருவரும் இந்தியாவிலிருந்துதானே வந்தீர்கள் ?" என்று சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி கேட்டார். இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட நான், " இலங்கையில் யார், யார் இருக்கிறார்கள் என்கிற பொதுவான அறிவு கூட இல்லாமலா கதைப்பீர்கள்?, சிங்களவருக்கும் தமிழருக்கும், மொழி, மதம், கலாச்சாரம் என்று அனைத்து வழிகளிலும் 100 வீத வேற்றுமை இருக்க, எப்படி எங்களை ஒரு இன மக்கள் என்று உங்களால் கருத முடிகிறது ?" என்று கேட்டேன். அதற்கு அவரிடம் பதிலில்லை.

தீவிரவாத வழியினால் எதையுமே சாதிக்க முடியாது. உங்களை எந்த நாடுமே அங்கீகரிக்கப்போவதில்லை, இலங்கை அரசாங்கம் தனது நாடு துண்டாடப்படுவதையோ, அல்லது மக்கள் கலவரத்திலீடுபடுவதையோ பொறுத்துக்கொண்டிருக்காது, அதை முறியடிக்க சகல வழிகளிலும் முயற்சிக்கும்" என்று என்னிடம் கூறினார். அதுமட்டுமல்லாமல், "பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்று வாழ்ந்தால் அழிவுதான் மிச்சம், நீங்கள் கேட்கும் தனிநாடு சுடுகாட்டில்தான் அமையும், மக்களில்லாத தனிநாட்டை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்" என்னிடம் ஏளனமாக கேட்டார்.

"உங்களுக்கு என்னதான் வேண்டும்?" என்று அவர் கேட்க, "எங்கள் தேசம் எங்களுக்கு மீண்டும் வேண்டும், எங்கள் நாட்டில் எங்களை நாங்களே ஆள வேண்டும், கொல்லப்பட்ட எங்களின் லட்சக்கணக்கான உறவுகளுக்கு நீதி வேண்டும்" என்று நான் கூறவும் "யப்பான் மேல் அமெரிக்கா அணுவாயுதம் ஏவியதற்காக ஜப்பான் இன்னும் அமெரிக்காவுடன் குரோதம் பாராட்டியிருந்தால் இன்று நிலை எப்படியிருக்கும்?" என்று என்னிடம் கேட்டார். "நடந்தவை நடந்ததாக இருக்கட்டும், சிங்களவருடன் சேர்ந்து வாழப் பழகுங்கள், அவர்கள் தரும் சிறிய தீர்வைப் பெற்றுக்கொண்டு அதிலிருந்து முயற்சியுங்கள்" என்று உபதேசம் செய்தார். அதுமட்டுமல்லாமல், "குடியரசு யாப்பை ஏற்றுக்கொண்ட நீங்கள், ஒரு நாட்டின் எந்தவொரு குடிமகனும் அந்த நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சுதந்திரமாகச் சென்று வாழலாம் என்று சட்டமிருக்க தமிழர்கள் தங்களுக்கென்று தனிநாடு கேட்பது சட்டப்படி செல்லாது, அப்படி ஒரு இனத்துக்கென்று தனிநாடு அமைவதை எந்தவொரு அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று கூறினார்.

எதற்காக இவருடன் பேசத் தொடங்கினோம் என்று என்னை நானே நொந்துகொண்டே, "சரி, சிங்களம் எங்களுக்கு எந்தவிதத் தீர்வையும் தரப்போவதில்லை என்பதை சுதந்திரத்திலிருந்தே கண்டுவருகிறோம், 1987 இல் இந்தியா தலையிட்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆம் சட்டத் திருத்தன்படியான வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபைக்கான அதிகாரங்களையே இன்று சிங்களம் தூக்கிக் குப்பையில் கடாசியிருக்கிறது, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே?" என்று நான் சொல்லவும், "ரஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டு எந்த துணிவில் வந்து இந்தியா உங்களுக்கு உதவ வேணடும் என்று எதிர்பார்ப்பீர்கள்" என்று என்னிடம் கேட்டார். அத்துடன் நின்றுவிடாமல், "தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோதான் மத்திய அரசு இலங்கை தொடர்பான தீர்க்கமான முடிவெடுப்பதைத் தடுத்துவருகிறார்கள். இவர்கள் மத்தியில் சில அமைச்சர்களை வைத்துக்கொண்டு மொத்த இந்தியாவின் அரசையே ஆட்டிப்படைக்கிறார்கள், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை இவர்கள் மாற்ற எத்தனிக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டினார்.( அவரின் குற்றச் சாட்டின் அடிப்படை என்னவென்று எனக்கு நனறாகவே தெரிந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னர், அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னைக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அவரின் பயண ஒழுங்குகளைக் கவனித்த பயண நிறுவனம் அவர் கேட்டிருந்த 4 நட்சத்திர ஓட்டலுக்குப் பதிலாக 3 நட்சத்திர விடுதியொன்றை கொடுத்திருந்தது. இதனால் வெறுப்படைந்த அவர் தானாகவே ஒரு வண்டியைப் பிடித்து ஓட்டல் தேடத் தொடங்கியிருக்கிறார். அப்படித் தேடும்போது ஆரம்பத்தில் ஹிந்தியில் பேசியிருக்கிறார், எவருமே கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார், ஒருவரும் பதில் சொல்லவில்லையாம் (!). அது அவரிக் கடுப்பாக்கியிருக்கிறது. என்னிடம் சுற்றுலா முடிந்துவந்து பொறிந்து தள்ளினார்." மதராசிக்காரனுக்குக்ச் சரியான பாடம் புகட்ட வேண்டும், ஹிந்தியில் பேச மாட்டேன் என்கிறான், ஆங்கிலமும் தெரியவில்லை, எனக்கு இந்தியாவில்தானா இருக்கிறோம் என்று கூட சந்தேகமாக இருந்தது. அவர்களுக்கு வட இந்தியர்களைப் பிடிப்பதில்லை, ஹிந்தி எதிர்ப்பு என்றெல்லாம் போராடியிருக்கிறார்கள்" என்று என்னிடம் பொறிந்து தள்ள, நானோ, "அவர்களின் மாநிலத்துக்குச் சென்றால் அவர்களின் மொழி பேச வேண்டும் அல்லவா? நீங்கள் தமிழன் ஒருவர் மஹாராஷ்ட்டிராவுக்கு வந்து தமிழில் பேசினால் பதில் சொல்வீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை, அவர்கள் ஹிந்தியில்தான் எங்களுடன் பேச வேண்டும், ஹிந்தியே இந்தியாவின் தேசிய மொழி, பெருவாரியான மக்கள் பேசும் மொழி" என்று கூறினார். "பெருவாரியான மக்கள் பேசுகிறார்கள் என்பதற்காக நான் எனது தாய்மொழியை விட்டுக்கொடுத்துவிட்டு உனது மொழியில் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களே, இது உண்மையாகவே எங்களது தாய்மொழிமீது நீங்கள் செய்கிற திணிப்பு இல்லையா " என்று நான் கேட்டேன். அன்றிலிருந்து தமிழ்நாடுபற்றி என்னிடம் அவர் பேசுவதுகிடையாது. ஆனால் எனக்கொரு விடயம் விளங்கியது, வட இந்தியர்கள் தமிழரை எப்படிப் பார்ரக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒருவரே சாட்சி. வெறும் ஆட்டோக் காரன் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசவில்லை என்பதற்காக மொத்த தமிழினத்தையுமே வெறுக்கும் இவர், தமிழகத் தமிழனின் உறவான ஈழத் தமிழனுக்கு ஒருபோது இரக்கம் காட்டப்போவதில்லை என்பது தெரிந்தது).

எனக்கு கோபம் தலைக்கேறியது, "2009 இல் செய்யாததையா இனிமேல் செய்யப்போகிறீர்கள்?, கருணாநிதியையும் வைத்துக்கொண்டுதானே நரவேட்டை ஆடினீர்கள்?" என்று சீறினேன். அதற்கு அவர், " சோனியாவின் இடத்திலிருந்து பார், உனக்குப் புரியும்" என்று என்னிடம் சொன்னார். அதற்கு நானோ, "சரி, சோனியாவின் கணவர் 1987 இல் என்ன செய்தார் என்று உனக்குத் தெரியுமா?" என்று அவரிடம் கேட்டேன். "ஆம், அவர் இலங்கையில் சமாதனம் கொண்டுவர இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்" என்று பதில் கூறினார். " சமாதானத்துக்கென்று வந்த இந்தியப்படை எங்களுக்குச் செய்த அக்கிரமத்தை நீ கேட்டதுண்டா, எங்கள் மக்களில் 10,000 பேரை இரண்டு வருடத்தில் கொன்றுதள்ளிய உனது இராணுவத்தின் சாதனை பற்றி அறிந்திருக்கிறாயா?" என்று அவரிடம் சீற்றத்துடன் கேட்டேன், "இல்லவே இல்லை, எங்கள் இராணுவம் சண்டை பிடிக்கவில்லை, எவரையும் கொல்லவில்லை, சமாதானத்தை நிலை நாட்டவே அங்கு சென்றது, புலிகள்தான் இந்திய அமைதிப்படைமேல் தாக்குதல் நடத்தினார்கள்" என்று அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறினார். எனக்கு இவர் நடிக்கிறாரா அல்லது உண்மையாகவே இவருக்கு எதுவுமே தெரியவில்லையா என்று ஒரே குழப்பமாக இருக்க, "உனது இந்தியப்படை ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்திற்கு நான் ஒரு சாட்சி, எனது உற்றார், உறவினர் , நண்பர்கள், எங்களது சொத்து என்று அனைத்தையுமே ஒரே இரவில் இழந்தவன் நான்" என்று நான் கூறவும் அவர் அமைதியானார்.

இறுதியாக, " சிங்களவருடன் சேர்ந்து வாழுங்கள், நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்களுக்குள் எந்தவித வேற்றுமையையும் நான் காணவில்லை" என்று அவர் கூற, "நீங்களும் பாக்கிஸ்த்தானியருடன் சேர்ந்து வாழுங்கள், ஏனென்றால் பாக்கிஸ்த்தானியரும் பாக்கிஸ்த்தானும்கூட இந்தியாவகத்தானே முன்னர் இருந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர்கள் முஸ்லீம்கள், மதத்தால் வேறுபட்டவர்கள்" என்று கூறினார், அதற்கு நானோ, "அவர்களும் நீங்களும் மதத்தால் மட்டுமே வேறுபட்டவர்கள், உங்களது மொழியும் கலாச்சாரமும் ஒன்றுதான்.ஆனால் நாங்களோ, மதத்தாலும், மொழியாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்டவர்கள், உங்களால் பாக்கிஸ்த்தானியருடன் ஒன்றாக வாழ முடியாதென்றால், எங்களால் சிங்களவருடன் எப்படி வாழ முடியும்?" என்று கேட்டேன்.அற்குப் பதிலில்லை.

நான் இறுதியாக, "நீ பிறந்ததிலிருந்து எப்போதாவது அந்நிய நாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பில் வாழ்ந்திருக்கிறாயா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை எதற்குக் கேட்கிறாய்" என்று கேட்டார். "நாங்கள் பிறந்ததிலிருந்து அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளின் கீழ் அடிமை வாழ்வு வாழந்து வருகிறோம், எங்களின் அன்றாட வாழ்வு அடிமைத்தனத்திலிருந்தே விடிகிறது, பாலஸ்த்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் வாழும் மக்களைக் கேட்டுப்பார், எங்கள் வலி உனக்குப் புரியும், எங்களின் வாழ்க்கைய நீ வாழ்ந்தால் மட்டுமே உன்னால் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியும்" என்று கூறிவிட்டு, இனிமேல் எந்த இந்தியனுடனும் எனது போராட்டம் பற்றி பேசுவதில்லை என்ற முடிவுடன் அந்த மேசையிலிருந்து எழுந்து வந்தேன்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாக எழுதிய வரிகளை மிக மிக தாமதமாக எடுத்து இருக்கிறீர்கள். ஆனால் எடுத்த முடிவு மிகவும் சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

....சில மாதங்களுக்கு முன்னர், அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னைக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அவரின் பயண ஒழுங்குகளைக் கவனித்த பயண நிறுவனம் அவர் கேட்டிருந்த 4 நட்சத்திர ஓட்டலுக்குப் பதிலாக 3 நட்சத்திர விடுதியொன்றை கொடுத்திருந்தது. இதனால் வெறுப்படைந்த அவர் தானாகவே ஒரு வண்டியைப் பிடித்து ஓட்டல் தேடத் தொடங்கியிருக்கிறார். அப்படித் தேடும்போது ஆரம்பத்தில் ஹிந்தியில் பேசியிருக்கிறார், எவருமே கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார், ஒருவரும் பதில் சொல்லவில்லையாம் (!). அது அவரிக் கடுப்பாக்கியிருக்கிறது. என்னிடம் சுற்றுலா முடிந்துவந்து பொறிந்து தள்ளினார்." மதராசிக்காரனுக்குக்ச் சரியான பாடம் புகட்ட வேண்டும், ஹிந்தியில் பேச மாட்டேன் என்கிறான், ஆங்கிலமும் தெரியவில்லை, எனக்கு இந்தியாவில்தானா இருக்கிறோம் என்று கூட சந்தேகமாக இருந்தது. அவர்களுக்கு வட இந்தியர்களைப் பிடிப்பதில்லை, ஹிந்தி எதிர்ப்பு என்றெல்லாம் போராடியிருக்கிறார்கள்" என்று என்னிடம் பொறிந்து தள்ள, நானோ, "அவர்களின் மாநிலத்துக்குச் சென்றால் அவர்களின் மொழி பேச வேண்டும் அல்லவா? நீங்கள் தமிழன் ஒருவர் மஹாராஷ்ட்டிராவுக்கு வந்து தமிழில் பேசினால் பதில் சொல்வீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை, அவர்கள் ஹிந்தியில்தான் எங்களுடன் பேச வேண்டும், ஹிந்தியே இந்தியாவின் தேசிய மொழி, பெருவாரியான மக்கள் பேசும் மொழி" என்று கூறினார்.

வேற்றுமையில் ஒற்றுமை(????) காண, கதம்ப மாலையில் சுகந்தம் நுகர, நானும் சில நாட்கள் இந்தியை படிக்க முயன்று, நாற்றம் தாளாமல் தோற்றுப் போனேன்...! ஏனெனில் அடிப்படையிலேயே அந்நிய மொழி என்ற வெறுப்பாக இருக்கலாம்...

இந்தி தெரியாததால் வட இந்தியாவில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை சொல்ல விரும்புகிறேன்...

80களின் ஆரம்பத்தில், நேர்முகத்தேர்வு ஒன்றிற்காக புதுதில்லி செல்லவேண்டியிருந்தது..நேர்முகத் தேர்வு தில்லி ஆர்.கே.புரத்தில்.. நான் தங்கியிருந்தது கரோல்பாக்கில்...

'சரி, கோட்டின் மடிப்பு கலைந்துவிடுமே!' என எண்ணி அங்கிருந்து ஆட்டோவில் செல்ல எத்தனித்து, ஒரு ஆட்டோகாரரை நிறுத்தி, ஆங்கிலத்தில் "ஆர்.கே.புரம் செல்ல வருகிறாயா?" எனக் கேட்டேன்... அவன் இந்தியில் பதில் சொல்ல, இந்தி புரியாமல் நான் ஆங்கிலத்தில் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, இறுதியில் அவன் 'மதராசி பந்தர்' என மிகுந்த வெறுப்போடு திட்டிவிட்டுச் சென்றான்...அவன் சொல்லின் அர்த்தம் எனக்கொன்றும் புரியவில்லை..

அருகிலுள்ள கடையிலும் நிலைமையை ஆங்கிலத்தில் விளக்கி உரையாடினேன்.. உடனே அந்த கடைக்காரர், "Oh..you don't know Hindi...? Are you an Indain...?" எனக் கேட்டு, ஏதோ பாவப்பிறவியை பார்ப்பதுபோல் பார்த்தார்.. "இந்தி தெரியவில்லையெனில், அவன் இந்தியன் இல்லையா?" என மனக்குடைச்சலுடன் தேர்வுக்குச் சென்றேன்.

நேர்முகத் தேர்வு முடிந்தவுடன், அங்கே இந்தி தெரிந்த தமிழரிடம் விவரம் கேட்டபொழுதுதான் பொருள் தெரிந்தது...ஆகவே வேற்று மொழிகளை நாம் புரிந்துகொள்ளுமுன் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் அறிந்துகொள்வது நல்லதென தோன்றியது... :icon_idea:

ஏறக்குறைய ஒரு வாரம் தில்லியில் இருந்தபொழுது, பல நிலைகளில் தென்னிந்தியர்களை-குறிப்பாக தமிழர்களை நோக்கிய அவர்களின் வக்கிரம், வெறுப்பை நன்கு உணர முடிந்தது...

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

!

'மூத்திரம்' என்று ஒரு வார்த்தைக்குள் சாஸ்திரி, அடங்கி விடுகின்றார்! :D

மூத்திரத்திற்கு சொந்தக்காரன் மோராஜி தேசாய் .....மோரஜி கோலா என்று மூத்திரத்தை சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களும் ,சீனாக்காரனும் இவங்களுக்கு பாடம் புகட்டமட்டும் இவங்கள் திருந்த மாட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மூத்திரத்திற்கு சொந்தக்காரன் மோராஜி தேசாய் .....மோரஜி கோலா என்று மூத்திரத்தை சொல்வார்கள்

தகவலுக்கு நன்றிகள், புத்தன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரகு.. ஆரம்பத்தில் விட்டுக்கொடுத்துப் பேசினாலும் இறுதியில் பிடியை இறுக்கியிருக்கிறீர்கள்..! ஆனால் இத்தகைய மரமண்டைகளுடன் வாதிடுவது மிகவும் சிரமமான பணி.. :D

உங்கள் முயற்சிக்கு நன்றிகள், ரகுநாதன்!

.

பல இந்தியர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அரசியல் ரீதியாக யாருடனும் வாக்குவாதப் பட்டதே கிடையாது.

நான் கதைத்த அனேகம் இந்தியர்கள் ஈழத்தமிழர் நிலை குறித்து கவலைப் பட்டுள்ளார்கள். இந்தியாவைக் குறை சொல்வத்தைத் தவிர்த்து சோனியாவையும் காங்கிரசையும் குறைசொல்வேன். வட இந்தியர்களுக்கு சோனியாவைப் பிடிக்காது. சோனியா செய்யும் ஊழல்கள் பற்றி அவர்களும் சொல்வார்கள்.

திடீர் கோடீஸ்வரனாகிய சோனியாவின் மருமகன் பற்றியும், ராகுல் எப்பேர்ப்பட்ட வடிகட்டிய முட்டாள் என்றும் அவர்கள் சொல்வார்கள்.

சாதாரண இந்தியக் குடிமகனுக்கும் சோனியா காங்கிரசின் ஈழத்தமிழர் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

நாங்களும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். மொழி, கலாச்சாரம், மதம், வரலாறு என்று வேறு எந்த இனக்குழுமத்தோடும் இல்லாத அளவு எம்மோடு மிக நெருங்கியவர்கள் இந்தியர்களே.

இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இந்த அட்டூழியங்களை வரவேற்கப் போவதுமில்லை.

உலக சன‌த்தொகையின் ஐந்தில் ஒருபகுதியான இந்தியர்களின் நட்பு எங்களுக்கு பலமே. அவர்களின் பகை எங்களுக்குப் பலவீனமே.

பிரச்சாரம் மற்றும் ராஜ தந்திரம் என்பது மிக வலிமை மிக்கது . காங்கிரஸ் காரர்களின் பிரச்சாரமே பெருமளவு இந்தியர்கள் மனதில் குடி புகுந்து இருக்கிறது . அவர்களால் வெற்றிகரமாக முன்னெடுக்க பட்ட பிரச்சாரத்தை முறியடிக்க நம்மால் முடியவில்லை . அதற்கு காரணம் எதுவாயிருந்தாலும் சரி . பிரச்சார ரீதியாக ஈழம் என்பது தமிழகம் தவிர்த்த பிற இந்திய பகுதிகளில் சரியாக போய் சேரவில்லை என்பதே என் கருத்து . அதை சரிவர யாரும் முன்னெடுக்க வில்லை என்பதும் எனது கருத்து . நாம் எதை கூறினாலும் கத்தினாலும் தமிழில் மட்டுமே கத்துகிறோம் . வேறு மொழியில் பிற மக்களின் மொழியில் கத்தினால் தான் அவர்களுக்கும் புரியும் . நாம் அவர்களுக்கு புரிய வைக்காமலே அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறோம் . இப்போது புலம்பி பலன் எதுவும் இல்லை .

தமிழனுக்கு ஹிந்தி ஆகாது . ஹிந்தி காரனுக்கு தமிழ் ஆகாது . எதிர்வினை மற்றும் பதில் வினை .இது ஒரு சாதாரண நிகழ்வே. தமிழன் ஹிந்தியை நேசித்த பிறகு ஹிந்தி காரனுக்கு தமிழ் ஆகாதென்றால் தான் நாம் கேள்வி கேட்க முடியும் .

இந்தியனோடு ஈழ விடுதலை பேசுவதில் தவறு எதுவும் கிடையாது . இந்திய துவேசம் என்பது பிரச்சினைகுறியது. வெளிநாட்டில் நீங்கள் இந்தியனோடு வாதாடும் போது உங்களுக்கு சம உரிமை உண்டு . நான் வட மாநிலங்களில் தனியாளாக வாதாடி பலருக்கு ஈழத்தின் மீதான தவறான அப்பிராயத்தை போக்கி இருக்கிறேன் . ஆனால் வாதம் ஆரம்பிக்கும் போது சண்டையோடு ஒரு கை பார்க்கலாம் என ஆரம்பிப்பதை விட்டு விட்டு நான் என் இனத்திற்காக நாலு மனிதனை என் பக்கம் திருப்பவேண்டும் என்ற கொள்கையோடு விட்டு கொடுத்து வாதாடுங்கள் . வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும் இங்கு இந்தியாவிற்கு நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம் . எனது உறவுகளின் இப்படி பட்ட பிடிவாதத்தால் எங்கே ஈழம் எனும் லட்சியத்தில் மேன் மேலும் தடைகற்கள் பெருகி விடுமோ என்கிற ஆதங்கம் தானே ஒழிய இங்கு தவறாக புரிதல் வேண்டாம் . மேலும் கொடுப்பதை விடுங்கள் . தற்போதைய காங்கிரஸ் அரசு கெடுப்பதில் வல்லவராக உள்ளனர் என்பதே பெரிய பயம் . அதனால் தான் அடக்கி வாசியுங்கள் என அடிக்கடி கத்துகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.