Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் திராவிடவாதியாக இருந்தாலும் அவர் கருத்து திராவிடத்தின் கருத்தல்ல. ஆனால் சோவும், சுப்பிரமணிய சுவாமியும் ஒட்டுமொத்த ஒரு மக்களின் அடையாளம். அவர்களை வைத்து, அச் சமூகத்தை தாறுமாறக வசைபாடலாம்... நல்ல நியாயம்??

  • Replies 165
  • Views 17.5k
  • Created
  • Last Reply

இங்கே எழுதியன் பிற்பாடு எழுத்துப் பிழை திருத்துவது கடினமாக இருக்கிறது.

நாரதர் மற்றும் நெடுக்காலபோவானுக்கு!

இப்படி நீண்ட கட்டுரைகளை இணைத்தால், அவற்றை பொறுமையாக இருந்து வாசிக்க முடியாது. உண்மையில் ஒவ்வொரு கட்டுரையும் தனித் தலைப்புக்களாக இணைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை.

பல நல்ல கட்டுரைகள் ஒரு விவாதத்திலேயே வருவதால் கவனிக்கப்படாமல் போகின்றது.

நீங்கள் அந்தக் கட்டுரைகளை படித்து, அதேலே உள்ள கருத்துக்களை சுருக்கமாக உங்கள் மொழியில் தருவது பயன் மிக்கதாக இருக்கும்.

எம்ஜிஆருக்கு என்று எந்த ஒரு தனிச் சிந்தாந்தமும் இருக்கவில்லை. எஸ் எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் எல்லாம் திமுகவிற்கு வந்த பல ஆண்டுகள் கழித்தே, தன்னுடைய வளர்ச்சி மற்றும் நட்புக்களின் அடிப்படையில் திமுகவிற்கு வந்தார்.

அவருடைய கதாநாயக விம்பத்தின் அடிப்படையேலேயே அவருடைய தொண்டர்களும் சேர்ந்தார்கள். அன்றைக்கு எம்ஜிஆரை வழிபட்டவர்கள் இன்றைக்கு ஜெயலலிதாவை வழிபாடுகிறார்கள்.

அதிமுகவை எந்தக் கோணத்தில் ஒரு திராவிடக் கொள்கைகளை கொண்ட கட்சியாக நோக்க முடியாது. நாம் இங்கே திராவிட இயக்கங்கள் என்று பார்க்கின்ற பொழுது திராவிடர் கழகம் மற்றும் அதிலிருந்து நேரடியாக பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பெரியார் திராவிட கழகங்களையே நோக்க முடியும்.

இதன் தலைமைகளோடு தொண்டர்களையும் கணிப்பிட்டே நாம் திராவிட இயக்கங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

என் மொழி தமிழ். ஆதலால் தமிழ் பேசும் அனைவரையும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு என்னால் நேசிக்க முடிகிறது,அவர்கள் வலியையும் என்னால் உணர முடிகிறது நாட்டின் எல்லைகளை கடந்து. அவர்கள் சாதீய சண்டைக்குள் சிக்கும்போதும் /கொல்லப்படும்போதும் கடுமையான கோபம் வருகிறது. அதைக் களைய நானும் பங்கெடுக்க வேண்டுமானால் திராவிட என்ற அடை மொழியுடனே சேர வேண்டி இருக்கிறது. நான் சாதாரணமானவன். சித்தாங்களும் வேதாதங்களும் தெரியாது. நான் ஏன் "திராவிடன்" என்று என்னை அடையாள படுத்த வேண்டும்? தமிழன் என்று சொன்னால் போதாதா ? இந்த "திராவிடன்" என்ற பதம் என் உணர்வுகளை மழுங்கடிக்கிறது. என் சக தோழர்களும் இதையே உணர்கிறார்கள். வரலாறு நிரம்பத் தெரிந்தால்தான் போராட வேண்டுமோ ? இது புரிதலில் உள்ள கோளாரா? என் புரிதலின் திறனை இன்னும் மேம்படுத்த வேண்டுமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆருக்கு என்று எந்த ஒரு தனிச் சிந்தாந்தமும் இருக்கவில்லை. எஸ் எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் எல்லாம் திமுகவிற்கு வந்த பல ஆண்டுகள் கழித்தே, தன்னுடைய வளர்ச்சி மற்றும் நட்புக்களின் அடிப்படையில் திமுகவிற்கு வந்தார்.

அவருடைய கதாநாயக விம்பத்தின் அடிப்படையேலேயே அவருடைய தொண்டர்களும் சேர்ந்தார்கள். அன்றைக்கு எம்ஜிஆரை வழிபட்டவர்கள் இன்றைக்கு ஜெயலலிதாவை வழிபாடுகிறார்கள்.

அதிமுகவை எந்தக் கோணத்தில் ஒரு திராவிடக் கொள்கைகளை கொண்ட கட்சியாக நோக்க முடியாது. நாம் இங்கே திராவிட இயக்கங்கள் என்று பார்க்கின்ற பொழுது திராவிடர் கழகம் மற்றும் அதிலிருந்து நேரடியாக பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பெரியார் திராவிட கழகங்களையே நோக்க முடியும்.

இதன் தலைமைகளோடு தொண்டர்களையும் கணிப்பிட்டே நாம் திராவிட இயக்கங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

அட...

விடிய, விடிய.... ராமாயணம்.

விடிஞ்சாப் பிறகு, ராமன் சீதைக்கு என்ன.. முறை எண்டு கேட்டானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.. தமிழர்களை ஆளும்.. திராவிடம் தமிழர்களை அடிமையாக்கி அடிமையாக்கி தன் வாழ்வை வளத்தை வளர்த்துக் கொள்ளும் கொடுமை.. உலக அளவில்.... தெரிய வருகிறது.

_60635090_familyofwomanwhoescapedoverhostelwall_edit.jpg

Samathi (second from right) says that even after working extensive overtime she earned less than £1.50 a day in a textile factory

http://news.bbc.co.uk/today/hi/today/newsid_9725000/9725455.stm

மனிதர்களை பல கூறுகளாக பிரித்து அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தி, தாழ்த்தப்பட்டவர்களை அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பை சுரண்டுவதை கொள்கையாகக் கொண்டு அதற்கான விதிகளையும் வகுத்திருப்பது பார்ப்பனியம் ஆகும். சீமானின் மொழியில் இதை மனுவியல் என்றும் சொல்லலாம்.

இத்தகைய அடக்குமுறைகளையும் சுரண்டல்களையும் ஆரியர்கள் செய்தாலும் சரி, தமிழர்கள் செய்தாலும் சரி அதற்கு எதிராக குரல் கொடுத்தது அடக்கப்படுபவர்களின் சுயமரியாதைக்காக போராடுவது திராவிடம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் பின்.. தமிழகத்தை ஆண்டது பார்பர்னியத்தை விட திராவிடமே. திராவிடம் பார்பர்னியத்திற்கு எந்த வகையிலும் சளைக்காமல்.. பிரிவினைகளையும்.. சாதியக் கூறுகளையும் வளர்த்தே வந்துள்ளது. ஏன் இன்னும் சொல்லப் போனால் பார்பர்னியக் கூட்டு வைத்து.. திராவிடம் தமிழர்களை ஆளும் உக்திகளையும் வகுத்தே செயற்பட்டு வந்துள்ளது.. வருகிறது. ஆனால் அதற்கு அது இட்டுக் கொண்ட நாமங்களும் அதனை முன்னெடுத்த வடிவங்களுமே வேறு.

தமிழ் தேசிய உணர்வு ஒன்றே தான் ஈழத்தைப் போன்று தமிழகத்திலும் மக்களை சாதி.. மத.. வகுப்புக் கடந்து.. இணைக்கவல்லதும்.. தமிழின இருப்புக்கு அவசியமான ஒன்றுமாகும். திராவிடம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழர்களை நாதியற்று நிற்கச் செய்துவிட்டது. இதில் ஆரிய - திராவிட கூட்டுச் சதிகளும் பார்பர்னிய - திராவிட கூட்டுச் சதிகளும்.. பார்பர்னிய - ஆரிய கூட்டுச் சதிகளும்.. அடங்கும்..!

திராவிடம்.. பார்பர்னியத்தின் காலில் விழுந்து வணக்கியதும் உண்டு. சத்திய சாய் பாபாவை கூப்பிட்டு வைத்து மனைவியரை காலில் விழவைத்து.. பார்பர்னிய உதவியில்.. தன் அரசியல் செய்யக் கூட திராவிடம் தயங்கியதில்லை. அதேபோல்.. திராவிடம் பார்பர்னிய தலைவியை.. அம்மா என்று கொண்டு.. தனது தலைவியாக்கி.. தமிழர்களை ஆளவிட்டு ஊழலால் சீரழிக்கவும் தவறவில்லை. ஈழத்தில் ஒரு தமிழினப்படுகொலையை கைகட்டி வேடிக்கை பார்க்கவும் அது தவறி நிற்கவில்லை.

முள்ளிவாய்க்காலுக்காக ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத திராவிடமும்.. பார்பர்னியமும்.. ஆரியமும்.. வெவ்வேறல்ல..! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே...!

இன்று தமிழ் தேசியம்.. நாம் தமிழர் என்ற உணர்வுகள் தான் இந்திய தேசியம்.. திராவிடம்.. ஆரியம்.. பார்பர்னியம் இவற்றின் எல்லாம் சவால்களையும் சந்தித்து.. தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி.. தமிழின இருப்பை அதன் சொந்த பூர்வீக நிலங்களில் நிறுவப் பாடுபடுகிறது. அதனை திராவிட சித்தாந்தத்தால் பலவீனமாக்க நினைக்கிறார்கள்.. பெரியார் விசுவாசிகளாய் திராவிட சித்தாந்தம் மறக்க மறுக்கும்.. மிகப் பிற்போக்குவாதிகள்...! இது தமிழின இருப்புக்கே ஆபத்தான ஒன்றாகும்..!

இத்தனை சவால்களையும் கடந்து நாம் தமிழராக அண்ணன் சீமான் தலைமையில் தமிழினம் அணிவகுத்து.. சாதி.. மத.. வகுப்பு பேதமற்ற தமிழின எழுச்சியையும் மீட்சியையும் அடுத்த நூற்றாண்டிலாவது தமிழகத்தில் சாத்தியப்படுத்த தொடர்ந்து உழைக்க வேண்டும். ஈழத்தமிழினமும்.. உலகத்தமிழினமும்.. இதில் பங்காளிகளாவது காலத்தின் இனத்தின் தேவையும் ஆகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இப்படிப் பார்த்தால் தமிழ் தேசியத்தில் இருந்து பிறந்த கருணாவை எதில் சேர்ப்பது? தனி நாடு கேட்ட கருணா இன்றைக்கு காவல்துறை, காணி அதிகாரம் கூட வேண்டாம் என்கிறார். இவரை தமிழ் தேசியம் என்ன மண்ணாங்கட்டி வளர்ப்பு வளர்த்தது? இப்படி எத்தனை பேர்கள்?

தமிழ் தேசியம் பொங்கிய ஈழத்தில் இன்றைக்கு வேறு சாதியில் திருமணம் செய்ததால் உறவினர்களால் ஒதுக்கப்படும் போராளிகளையும் குழந்தைகளையும் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

தலைவர்களும் தனிமனிதர்களும் செய்கின்ற தவறுகளுக்கு திராவிடத்தையோ, தமிழ் தேசிய சிந்தனையையோ குறை கூற முடியாது.

ஆனால் விதிகளிலும் அடக்குமுறையையும், தீண்டாமையையும், பேதங்களையும் மற்றும் பல மனித குல விரோத சிந்தனைகளையும் கொண்டு அதன்படி நடக்கின்ற பார்ப்பனியர்களையும் (மனுவியலாளர்கள்) பார்ப்பனியத்தையும் நாம் திராவிடத்தோடும், தமிழ் தேசியத்தோடும் ஒப்பிட முடியாது.

தமிழ் தேசியத்தை அடைவதற்கான சிறந்த வழிமுறை திராவிட சிந்தனையை பின்பற்றுவதே ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தமிழ் தேசியத்தால் வளர்க்கப்பட்ட ஒருவரல்ல. விடுதலைப்புலிகள் என்ற போராட்ட அமைப்பைச் சேர்ந்தவர். விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் தேசிய அமைப்பல்ல. தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்ட அமைப்பு. அது தமிழீழ விடுதலை அமைப்பு. இந்த அடிப்படையையே சிலர் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை..!

போராளிகள் துரோகிகள் ஆவதும்.. பணத்திற்கு விலை போவதும்.. ஒன்றும் புதிதும் அல்ல. அதற்கு நிகரானதா திராவிடத்தின் ஒட்டுமொத்த கூட்டமும். திராவிட ஒட்டுமொத்த கூட்டமுமே ஏதோ ஒரு கட்டத்தில்.. பார்பர்னிய பாதம் தொழுதிருக்கின்றன. அப்போ.. அவை எல்லாமே தமிழின துரோகிகள் தானே. கருணாக்கள் தானே. அப்படியான பொய்யான மாயையான திராவிடம் தமிழர்களுக்கு.. தமிழ் தேசியத்திற்கு ஏன்..????????!

திராவிடத்தின் தூண்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே.. திராவிட சித்தாந்தத்தை கையில் எடுத்திருப்பவர்களே.. பார்பர்னியத்தோடு.. ஆரியத்தோடு தோழமை கொண்டு செயற்படுவதானது.. கருணாவின் துரோகத்திற்கு நிகரானது. அதுமட்டுமன்றி.. கருணா.. போராட்ட அமைப்பின் விதிகளை மீறிய நிமிடத்தில் இருந்து அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்ட ஒருவர்.

அப்படி திராவிடம்.. செய்யுமா..???! கருணாநிதியை அடித்து விரட்டுமா..??! ஜெயலலிதாவை விரட்டுமா..????! ஏன் சாத்திர சம்பிரதாயங்களால் மூட நம்பிக்கைகளை ஊட்டும் சுகி சிவம் போன்ற பேச்சாளர்களை வைத்துக் கொண்டு திராவிடம் வளர்க்கும் சித்தாந்தம் தான் என்ன..???!

முன் பின் பிறழ்வு வாதமே திராவிடத்தின் மாயைத் தனத்திற்கு சாட்சியாகவும் அமைகிறது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

மீண்டும் தனிமனிதர்களைக் கொண்டே ஒரு சித்தாந்தம் பற்றி முடிவு எடுக்கிறீர்கள்.

ஆனந்தசங்கரிக்குள் தமிழ் தேசிய சிந்தனை மிச்சம் இருக்கிறது. விடுதலைப் புலிகளால் பல ஆண்டுகளால் துரோகி என்று அறிவிக்கப்பட்ட சித்தார்த்தனுக்குள்ளும் அது இருக்கிறது.

ஆனால் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதியாகவும், பேச்சுவார்த்தைக் குழுவிலும் இருந்த கருணாவுக்குள் தமிழ் தேசிய சிந்தனையின் சிறு எச்சம் கூட எப்படி இல்லாமல் போனது?

தமிழ் தேசியத்தையும் தனி மனிதர்களையும், தலைவர்களையும் கொண்டு எடை போட்டால் அதையும் நிராகரிக்க வேண்டியே வரும்.

தமிழ் தேசியப் போராளிகளே தடம் மறுகின்ற பொழுது, திராவிடத் தலைவர்கள், அதுவும் அரசியல்வாதிகள் சில இடங்களில் நீக்குப் போக்காக நடப்பது இயல்பானதே.

என் மொழி தமிழ். ஆதலால் தமிழ் பேசும் அனைவரையும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு என்னால் நேசிக்க முடிகிறது,அவர்கள் வலியையும் என்னால் உணர முடிகிறது நாட்டின் எல்லைகளை கடந்து. அவர்கள் சாதீய சண்டைக்குள் சிக்கும்போதும் /கொல்லப்படும்போதும் கடுமையான கோபம் வருகிறது. அதைக் களைய நானும் பங்கெடுக்க வேண்டுமானால் திராவிட என்ற அடை மொழியுடனே சேர வேண்டி இருக்கிறது. நான் சாதாரணமானவன். சித்தாங்களும் வேதாதங்களும் தெரியாது. நான் ஏன் "திராவிடன்" என்று என்னை அடையாள படுத்த வேண்டும்? தமிழன் என்று சொன்னால் போதாதா ? இந்த "திராவிடன்" என்ற பதம் என் உணர்வுகளை மழுங்கடிக்கிறது. என் சக தோழர்களும் இதையே உணர்கிறார்கள். வரலாறு நிரம்பத் தெரிந்தால்தான் போராட வேண்டுமோ ? இது புரிதலில் உள்ள கோளாரா? என் புரிதலின் திறனை இன்னும் மேம்படுத்த வேண்டுமோ ?

சாதியத்துக்கு எதிரானது `திராவிடம்`.

பிறப்பின் அடிப்படையில் மனிதரைப் பிரித்து அவர்களை ஒடுக்குவதை எதிர்ப்பது திராவிடம்.

உங்களின் இயல்பான உணர்வை , ஒரு அரசியல் சிதாந்தம் ஆக்கி அதை ஒரு அரசியல் சக்தி ஆக்கியது.

உங்கள் மொழி தமிழ், அதன் அடிப்படையிலும் பொதுவான `தேசிய ` உணர்வின் அடிப்படையிலும், நீங்கள் உங்கள் தேசிய உரிமையைக் கோருவதையும், திராவிட சிந்தனை முன் நிறுத்தியது.

டு

ஒரே இன மக்களாக இருந்து `ஆரிய`ப் பண்பாட்டின் தாக்கத்தால் பிரிந்து சென்றவர்கள் `திராவிட` அடையாளத்தை ஏற்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட பெரியார், தமிழத் தேசியத்தையே வலியுறுதினார்.தமிழ் நாடு தமிழருக்கே என்று சொன்னார்.

சீமான் உண்மையில் பெரியார் விட்ட இடத்தில் இருந்து , தமிழ்த் தேசிய மீள் எழுச்சியைத் துவக்கி இருந்தால் அவரால் , மிகவும் பலமான சக்தியாக உருமாறி இருக்க முடியும்.ஆனால் அவர் குறுக்கு வழியில், இன வெறி, சாதி வெறியின் அடிப்படையில் தனது இயக்கத்தைக் கொண்டு செல்ல முற்படுவதாகத் தெரிகிறது,இது தவறான பாதை.

இதன் மூலம் நடக்கக் கூடியது, ஆரிய சக்திகள் உள் நுழைந்து , தமிழத் தேசிய இயக்கத்தைச் சிதைப்பதும். மதவாத சக்திகள் சாதிய சக்திகள் உள் நுழைந்து இயக்கத்தைச் சீரழிப்பதுமே நடக்கும்.

சிதாந்த ரீதியாக தெளிவானவர்கள் அன்னியப்பட, நேச சக்திகழுக்கு இடையே பகை முரண் ஏற்பட்டு, ஈற்றில் தமிழத் தேசிய எழுச்சி என்பது அழிந்து போகும்.

நாம் மீண்டும் தலைப்புக்குள் வரவேண்டும்.

சிங்களத்திடம் அடி பணிந்து போகும்படி தந்தை பெரியார் சொல்லவில்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கேட்டார். ஆயினும் தன்னால் முடிந்த பரப்புரைகளை செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதன்படி ஈழப் பிரச்சனையை தொடர்ந்து தன்னுடைய பத்திரிகை மூலம் பரப்பினார்.

இதுவே உண்மை. அந்த வகையில் சிங்களத்திடம் பணிந்து போகச் சொன்னதாக "நாம் தமிழர் இயக்கம்" செய்கின்ற பரப்புரை மிகவும் மோசடியானது. அருவருக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

திராவிடம் பணிந்து போகச் சொல்லவில்லை. மறாக சிங்களத்தோடு மோதச் சொன்னது. மோதுவதற்கான பயிற்சிகளை பெறுவதற்கு தங்களுடைய வளங்களையும் தந்து உதவியது. இந்தியாவோடு மோதிய போது, அதற்கான வல்லமையை தருவதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்தது.

சீமான் போன்றவர்கள் இப்படியான பொய்யான மோசடியான கதைகளை இன்றைய தலைமுறையிம் பரப்ப வேண்டாம் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை நேரடியாகவே எதிர் விமர்சனம் செய்த சங்கரி.. சித்தார்த்தன் போன்றவர்கள் உங்களுக்கு தமிழ் தேசிய வாதிகள்... ம்ம்ம்ம்...!

இப்படியே திராவிடக் கொள்கையின் போலித்தனத்தை எல்லாம் தனிநபர் விடயமாக பார்த்து திராவிடக் கொள்கையை பாதுகாப்பதன் ஆபத்தை இப்போ நான் உங்களுக்கு உணர்த்துகிறேன்.

பெரியார் என்ற தனிநபர் முன் வைக்கும்.. திராவிட சித்தாந்தம் மட்டும் எப்படி.. போலி.. மாயை அற்று.. தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க முடியும். நீங்கள் கருணாவை.. சங்கரியை.. சித்தார்த்தனை மையப்படுத்தி முன் வைத்த வாதப்படி.. திராவிடம் என்பதும்.. பெரியார்.. கருணாநிதி.. என்று நாலு தனியாள் சம்பந்தப்பட்ட சித்தாந்தமாக காட்டப்பட முடியும் தானே. அதனை ஏன் தமிழ் மக்களிடம்.. அவர்களின் இன அடையாள கருவியாக விளங்கும்.. தமிழ் தேசியத்துள் திணிக்க வேண்டும்...????! இப்படின்னும் கேள்வி எழும்.. பாருங்கோ..!

அந்தளவிற்கு உங்களின் திராவிட சித்தாந்தம்... மிகப் பலவீனமான.. ஆபத்தான.. மாயை அத்திவாரம் ஆகும். இதன் மேல்.. தமிழினத்தை கட்டி வளர்ப்பது மிகவும் சீரழிவாகும். இதனை கடந்த 60 ஆண்டு கால வரலாறு தமிழர்களுக்குச் சொல்லியே உள்ளது. எனி தமிழினத்திற்கு.. என்றே உள்ள தமிழ் தேசியம் பலமுறுவது மட்டுமே தமிழின இருப்பை இந்த உலகில் நிலை நிறுத்தும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

தமிழ் தேசியத்தை எப்பொழுது ஆனந்த சங்கரியும் சித்தார்த்தனும் எதிர்த்தார்கள்? தமிழர்களுக்கு ஒரு தாயகம் உண்டு என்பதையோ, அதை ஆவர்கள் ஆள வேண்டும் என்பதையோ எதிர்த்து அவர்கள் எப்பொழுது பேசினார்கள்?

நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் எழுத்தாலேயே சிலவற்றை சொல்லி விட்டீர்கள். ஆனந்த சங்கரியும், சித்தார்த்தனும் விடுதலைப் புலிகளை எதிர்த்தார்கள். அவர்களின் வழிமுறைகளை கண்டித்தார்கள். இவற்றையே நீங்கள் தமிழ் தேசியத்தை எதிர்த்தாக சொல்கிறீர்கள்.

ஆதாவது தமிழ் தேசியத்தின் உருவமாக விடுதலைப் புலிகளைப் பார்க்கின்றீhகள். ஆகவே அதில் இருந்து வந்த கருணா போன்றவர்கள் எப்படி தாயகமும் வேண்டாம், ஒரு உரிமையும் வேண்டாம் என்று போனார்கள்? தமிழ் தேசியம் எந்த இடத்தில் தவறு விட்டது?

அது சரி . அந்த சனியனின் படம் பார்த்து கதை சொல் விடை தெரிந்ததா ???

என்ன ஐயா ஆட்டுக்க கொண்டு வந்து மாட்டை விடுறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் தமிழர் விடுதலை கூட்டனியை...."திராவிட விமுக்தி பெரமுன" ....எனத்தான் சொல்லுறாங்கள் "தமிழ்" என்ற சொல் பலருக்கு வேறுப்பாக இருக்கின்றது போல...

தமிழ் தேசியத்தை பலப்படுத்த வேண்டும் என்பதையே நானும் சொல்கிறேன். ஆனால் அதற்கான வழி திராவிட சிந்தனை பற்றிய தெளிவே ஆகும். அது இல்லை என்றால் முஸ்லீம்களை தொப்பி பிரட்டிகள் என்றும், மலையகத் தமிழர்களை வடக்கத்தையர்கள் என்றும் இழிவு செய்கின்ற "வேளாள யாழ்ப்பாணியமே" மிஞ்சும்.

நான் ஏன் "திராவிடன்" என்று என்னை அடையாள படுத்த வேண்டும்? தமிழன் என்று சொன்னால் போதாதா ? இந்த "திராவிடன்" என்ற பதம் என் உணர்வுகளை மழுங்கடிக்கிறது. என் சக தோழர்களும் இதையே உணர்கிறார்கள். வரலாறு நிரம்பத் தெரிந்தால்தான் போராட வேண்டுமோ ? இது புரிதலில் உள்ள கோளாரா? என் புரிதலின் திறனை இன்னும் மேம்படுத்த வேண்டுமோ ?

அதே... அதே..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை எப்பொழுது ஆனந்த சங்கரியும் சித்தார்த்தனும் எதிர்த்தார்கள்? தமிழர்களுக்கு ஒரு தாயகம் உண்டு என்பதையோ, அதை ஆவர்கள் ஆள வேண்டும் என்பதையோ எதிர்த்து அவர்கள் எப்பொழுது பேசினார்கள்?

நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் எழுத்தாலேயே சிலவற்றை சொல்லி விட்டீர்கள். ஆனந்த சங்கரியும், சித்தார்த்தனும் விடுதலைப் புலிகளை எதிர்த்தார்கள். அவர்களின் வழிமுறைகளை கண்டித்தார்கள். இவற்றையே நீங்கள் தமிழ் தேசியத்தை எதிர்த்தாக சொல்கிறீர்கள்.

ஆதாவது தமிழ் தேசியத்தின் உருவமாக விடுதலைப் புலிகளைப் பார்க்கின்றீhகள். ஆகவே அதில் இருந்து வந்த கருணா போன்றவர்கள் எப்படி தாயகமும் வேண்டாம், ஒரு உரிமையும் வேண்டாம் என்று போனார்கள்? தமிழ் தேசியம் எந்த இடத்தில் தவறு விட்டது?

விடுதலைப்புலிகளின் கொள்கை தான் தமிழ் தேசியம் என்ற நோக்கோடு.. அதனை இன்றும் எதிர்விமர்சனம் செய்பவர்களாகவே சங்கரி சித்தார்த்தன் போன்ற இனத்துரோகிகளும் அவர்களின் வால்பிடிகளும் உள்ளனர்.

சங்கரி.. ஐக்கிய இலங்கைக்குள்.. செளஜன்னியம் விரும்பும் மிதவாதி என்ற அடையாளப்படுத்தலை வெளிக் கொணரும் ஒருவர். தமிழ் தேசியத்தை உச்சரிப்பதை இயன்றவரை தவிர்த்தவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒதுங்கி ஓடிய நபர்..! அவர் உங்களுக்கு தமிழ் தேசிய வாதி.

சித்தார்த்தன்.. ஒரு அரசியல்வாதியே அல்ல. அவர் பராமிலிரரி குறூப் வைத்து தமிழினப் படுகொலை செய்யும் ஒரு சிங்கள அரச கூலி. அவரிடம் தெளிவான எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லை.. கொள்கையும் இல்லை. அவர் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதாக எப்ப சொன்னவர்..???! என்று நீங்கள் கேட்ட கேள்வியையே நான் திருப்பி உங்களிடம் கேட்கிறோன்.. அதற்கு பதில் சொல்லுங்கள்..!!

மீண்டும் கருணாவை மையப்படுத்தி தமிழ் தேசியத்தை கருணா அரசியலாக இனங்காட்ட முனைகிறீர்கள். ஈழக் களத்தில் தமிழ் தேசியம் தீவிரமாக கருக்கொள்ள முதலே தமிழீழ விடுதலைப் போராட்டம்.. கருக்கொண்டு விட்டது. தமிழ் தேசியம் என்பது தமிழர்களின் தேசிய இன அடையாளம் என்பதை தமிழீழத்தின் இருப்பின் பால் விடுதலைப்புலிகள் முன்னிறுத்தினரே தவிர கருணா சார்ந்து அதனை அவர்கள் முன்னிறுத்தவில்லை.

ஆனால் கருணாநிதி அப்படியல்ல. அவர் இன்றும் சொல்லிக் கொள்வது.. திமுக.. திராவிடத்தின் தூண் என்று. இதனை வீரமணி போன்ற தீவிர திராவிட வாதிகளும் ஏற்றுக் கொண்டு தான் உள்ளனர். அப்படியான ஒருவர் ஆரியத்துடன்.. பார்பர்னியத்துடன் கூட்டு வைத்து தமிழினத்தை அழித்ததை.. சீரழித்ததை.. திராவிட சித்தாந்தமாக கொள்ளலாமா. அப்படியான திராவிடம்.. எனியும்.. தமிழர்களுக்கு அவசியம் தானா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை பலப்படுத்த வேண்டும் என்பதையே நானும் சொல்கிறேன். ஆனால் அதற்கான வழி திராவிட சிந்தனை பற்றிய தெளிவே ஆகும். அது இல்லை என்றால் முஸ்லீம்களை தொப்பி பிரட்டிகள் என்றும், மலையகத் தமிழர்களை வடக்கத்தையர்கள் என்றும் இழிவு செய்கின்ற "வேளாள யாழ்ப்பாணியமே" மிஞ்சும்.

ஒரு திராவிட கொள்கையாளரின் உள்மனதில் இருக்கும்.. பிரதேசவாதமும்.. சாதியமும் அப்பட்டமாக அப்படியே தெரிகிறது. இவர்களின் நோக்கம்.. தமிழ் தேசிய இன ஒற்றுமை அல்ல. திராவிடத்தை எப்படியாவது பயங்காட்டி நிலை நிறுத்துவது.

ஜேர்மனியர்கள்.. ஆரியவாதம் அல்ல பேசுகிறார்கள். யூதர் யூத இனம் பற்றியே பேசுகிறார்கள். தமிழர்கள் மட்டும் ஏன் அவர்களோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத மாயை வாதமான திராவிடத்தை மையப்படுத்தி தமிழ் தேசிய உணர்வு வளர்க்க வேண்டும். அது இல்லாமலே தமிழன் என்ற இன இருப்பின் அடிப்படையில்.. தமிழ் தேசியத்தை வளர்க்க வாய்ப்பிருக்கும் போது எதற்கு.. திராவிடம் என்ற மாயை நமக்கு.

நாம் தமிழர் கட்சியின்.. இந்த திராவிட மாயை களைதல்... தமிழகத்தில் ஆரிய இருப்பை நிரந்தரமாக முடித்து வைக்கவும் உதவும். தமிழ் தேசிய உணர்வு மிகப் பெரிய எழுச்சி பெறவும் உதவும். திராவிடத்தின் இருப்பு இன்னும் இன்னும் அனுமதிக்கப்பட்டால்.. தமிழினம்.. இந்த உலகில் மெல்லச் சாகும். வேறு எதுவும் தமிழனுக்கு திராவிடத்தால் தேறாது..! :icon_idea:

தமிழத் தேசிய அரசியலை சரியான பாதையில் நேர்மையாக செய்வார் என்னும் நம்பிக்கை சீமான் மீது இருந்தது.

அரசியல் வரலாற்றை, திராவிட அரசியலைப் புரிந்து கொண்டவர். என நினைதிருக்க ` நாம் தமிழரின் ` இந்த அறிக்கை என்பது , `தமிழ்த் தேசிய வெறியின்` சாதிய வெறியின் அடி ஒற்றியதாக வந்திருப்பது கவலை அழிக்கிறது.

எவ்வாறு தமிழத் தேசியம் , தூய தேசிய வெறியாக , இசுலாமியரை , தமிழர் என்னும் அடையாளத்தில் இருந்து விலத்தியதோ, அதே போல் நாம் தமிழரின் இந்த `இன வெறிப்` போக்கு, தமிழ்த் தேசிய விடுதலையை மேலும் சிதைக்கும்.இதனால் பாதிக்கப்படப் போவது, தமிழரின் போராட்டமே.

அதனைக் கவனித்தில் கொண்டு வர வேண்டியது எமது கடமை.

இதில் விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் இதற்கு பதில் சொல்வார்கள்.

தற்போது திராவிடம் என்பது ஒரு அரசியற் கோட்பாடு. தமிழர் என்பது தேசிய இனத்துவ அடையாளம்.

திராவிடர் என்பது தமிழ் மூதாதையரின் அடையாளம். எமது பழமையான அடையாளத்தைப் பேண வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை.

ஆனால் `பழமையான` திராவிட-ஆரிய பண்பாட்டுக் கூறுகளில் இருந்து வந்த மதமும்,சாதியமும், ஒடுக்குமுறையும் இருக்கும் நிலையில், `திராவிட` அரசியல் சமூக வரலாற்றில் இருந்தே , நாம் தமிழரின் அடையாளத்தை முன் நிறுத்த முடியும். தமிழர் மீதான ஒடுக்குமுறை, `ஆரிய`-திராவிட முரண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் போது, அந்த முரண்பாடே மாயை என்று சொல்வது, `எதிரியே` இல்லை என்பதாகவும், `எதிரிகள்` போராடும் இயக்கத்துக்குள்ளாகவே ஊடுருவி அதனை அழிக்கவுமே வழி வகை செய்யும்.

அதனாலயே சொல்கிறோம், தமிழ் தேசிய அரசியல் என்பது, தெளிவாக எதிரியை இனம் காணும், ஆரிய-திராவிட முரணில் இருந்தே முன் வைக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் இஸ்லாமியர்களை தமிழ் தேசியம்.. தமிழர்களாக இனங்காட்டுவதில் இருந்து துரத்தி விட்டுள்ளதாக கதையளக்கிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் தனி இனப் பிரிவாகவே சுதந்திர காலம் தொட்டு இனங்காட்டப்பட்டு வந்துள்ள நிலையில்.. தமிழ் தேசியம்.. இஸ்லாமிய மதத்தவரை தமிழர்கள் அல்லாது ஆக்கிவிட்டதாம்.. என்ற குற்றச்சாட்டையும் இப்போ.. தமிழ் தேசிய உணர்வை பலவீனப்படுத்தி.. திராவிட மாயையை நிலைநிறுத்த முன்வைக்கிறார்கள்...!

ஆரியமும்.. திராவிடமும்.. முஸ்லீம் மத சமூகக்கலவரங்களைத் தூண்டி குளிர்காய்ந்ததை மறந்துவிட்டார்கள் போலும்..!

திராவிடம் என்ற பதம் மட்டும் ஏதோ இஸ்லாமியர்களை கட்டிக்காத்து வருகிறதாக்கும்...???! ஏதோ இஸ்லாமியர்கள் தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளச் செய்யுறதாக்கும். சம்மந்தமே இல்லாத அரேபியர்களாகவே இஸ்லாமியர்கள் மத ரீதியான சிந்திக்க தூண்டப்படும் நிலையில்.. தமிழ் தேசியத்தின் மீதான இவர்களின் அபாண்டப் பழி.. இவர்களின் கேவலமான திராவிட வெறித்தனத்தை தமிழின தமிழ் தேசிய விரோத நிலைப்பாட்டை அப்படியே இனங்காட்டி நிற்கிறது.

மக்கள் இந்த திராவிட வெறித்தன தீவிர திராவிட மாயை வாதத்தை இல்லாதொழித்து.. மதங்களுக்கு அப்பாலான தமிழ் தேசிய உணர்வை வளர்ப்பதன் மூலமே.. இந்து.. கிறீஸ்தவம்.. இஸ்லாம் என்ற பாகுபாடுன்றி.. மொழியால் மக்கள் அனைவரும் இணைந்து வாழ ஒரு வழி பிறக்கும். இதற்கு தடையாக திராவிடம் அதன் பிழைப்பு கருதி இருக்கும். அதன் கீழ்த்தரமான பகுப்புவாதங்களை புகுத்தி.. தமிழ் தேசிய உணர்வையும்... அதன் பால் எழும்.. ஒற்றுமையையும் சிதைக்கவே திராவிடம் முனையும். மக்கள் இந்தச் சதிகாரக் கூட்டங்களில் இருந்து விலகி இருந்து.. தமிழ் தேசிய உணர்வோடு.. நாம் தமிழர்களாக மத வேறுபாடுகள் களைந்து ஒற்றுமைப்படுவதே.. தமிழின இருப்புக்கும் பாதுகாப்பிற்கும்.. விடிவுக்கும் வழி வக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழ் நாட்டில் இசுலாமியர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காட்டுவது, திராவிட அரசியலினால். ஈழத் தமிழருக்காக ஒரு தமிழ் நாட்டு இசுலாமிய உறவு தன்னைத் தானே அழித்துக் கொண்டது.

ஈழ விடுதலைப் போரின் ஆர்ம்ப காலகட்டத்தில் பல இசுலாமிய இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணியில் பல இசுலாமியத் தமிழர்கள் அங்கம் வகிந்தனர்.

குறும் தேசிய இனவாதம் தமிழத் தேசிய அரசியலைப் பலவீனப் படுத்தும். பலவீனப் படுத்தி இருக்கிறது.

நாம் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்க வில்லை என்றால், வரலாறு மீள எம்மைக் கொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.