Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா? – கோத்தாவுடன் இணைந்து வரிந்துகட்டுகிறார் மேதானந்த தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ellawala-medhananda-1.jpg

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பாதுகாப்புச்செயலர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை.

இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும்.

இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு அவர்களுக்கு எந்த சான்றோ அல்லது ஆதரவுக் காரணமோ கிடையாது.

நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் வேலகந்த சாஸ்திரி தனது நூலில், தமிழர்கள் ஏனைய இடங்களில் இருந்தே தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதைபடிமங்கள், தென்னிந்தியாவின் புதைபடிமங்களை விடவும் தொன்மையானது என்று அவர் தனது நூலில் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்?

வடக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.

கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது.

நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கல்வெட்டு தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் இந்தக் கல்வெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது.

அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகம் சிங்களவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வடக்கைத் தமிழர்கள் தமது தாயகம் என்று எப்படி உரிமை கோரமுடியும்?

துணுக்காய் கல்வெட்டில் அனுராதபுர ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறபட்டுள்ளது.

பொல்கந்துகம என்ற கிராமத்துக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை அதிகாரிகள் திருகோணமலை கல்லம்பற்றுக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், அங்கு பிக்குணி ஆச்சிரமத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியது குறித்தும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள், சிறிலங்காவில் எந்தப் பகுதியுமே தமிழர்கள் தமது தாயகம் என்று உரிமை கோர முடியாது என்பதை நிரூபிக்கின்றன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120530106298

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது.

நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது.

அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது.

நயினாதீவும் இடிக்கப்படுமா???

:( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது பூர்வீக பூமியில் கௌரவமாக வாழ்வதற்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல கோவில்களின் இருப்பும்கூட நிரந்தரமாக இருக்கவேண்டுமானால் மிக விரைவில் தமிழ் ஈழத்தை மீட்டே ஆகவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் இருக்கட்டும்.. புத்தர் சிங்களவன் என்றதற்கு முதலில ஆதாரத் கொண்டு வாங்கைய்யா. வரிஞ்சு கட்டுறது இருக்கட்டும்..!

தமிழர்கள்.. புத்த மத நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். மணிமேகலை என்ற தமிழ் காப்பியம் இதற்கான சான்று. புத்தர் சிங்களவரோ.. கோத்தாவின் வாரிசோ அல்ல..! புத்தர் சிங்கள மொழி பேசியவரும் கிடையாது. அவர் அடிப்படையில் ஒரு இந்து தத்துவவாதி..!

அந்த வகையில் நோக்குகின்ற போது.. முழு இலங்கையும் தமிழர்களுக்கே உரித்தானது. தமிழர்கள் இன்னென்ன காலத்தில் இன்னென்ன மதத்தைதான் பின்பற்றினார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழகத்திலும் புத்த சின்னங்கள் உள்ளன. பூம்புகார் என்ற கடலுக்கு அடியில் நயினாதீவை ஒட்டி உள்ள இடத்திலும் புத்த சின்னங்கள் உள்ளன. காரணம் அந்தக் காலத்தில் சமணமும் புத்தமும் தழைத்தோங்கி இருந்தன.

ஆக மொத்தத்தில்.. சிறீலங்கா என்ற ஒரு நாடே இருக்கவில்லை. அது தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக.. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தீவு. தமிழர்களின் மத வழிபாடு என்பது காலத்துக்கு காலம் வெவ்வேறு நிலைகளில் செழிப்புப் பெற்றிருந்துள்ளது.

எங்கிருந்தோ வந்த சிங்களவர்கள்.. புத்த மதத்தை பின்பற்றுவதால்.. புத்த மதம் பரவி இருந்த இடமெல்லாம் சிங்களவர்களுக்கு சொந்தம் என்பது முழு முட்டாள் தனமான படிப்பறிவற்ற.. பேரினவாத பயங்கரவாதப் பாசிசக் கருத்தியலாகும்..!

கோத்தாவின் கூற்றுப்படி பார்த்தால் நேபாளமும்.. புத்தகயாவும்.. புத்தர் வாழ்ந்ததால்... சிங்களவர்களின் பூர்வ ஜென்ம பூமி. இந்த தேரரும்.. கோத்தாவும் அதை சிங்களப் படைகளை அனுப்பி மீட்க நடவடிக்கை எல்லோ எடுக்கனும். ஏன் எடுக்காம இருக்கினம்..??????????????! வந்திட்டாங்கையா.. வரலாறு கூட முழுசா தெரியாத ஜென்மங்கள்..!

பேரினவாத வெறியில்.. இராணுவ வெற்றிக் களிப்பில் அறிவிலித்தனமாக இந்தச் சிங்களவர்கள் குரைப்பதை எமது இனத்துக்கு எதிரான இவர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. இதனை உலகிற்கு நிரூபித்து தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து சம உரிமையோடு எப்போதுமே வாழ முடியாது என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தி சர்வதேசம்.. தமிழர்கள் தங்கள் பூர்வீக மண்ணில் தனித்துவத்தோடு தன்னாட்சி உரிமையோடு வாழ உதவக் கோர வேண்டும்..! அதுவே தமிழ் மக்களின் இருப்புக்கும் விடிவுக்கும் வழிவகுக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இனி ஜப்பான் சீனாவின் புத்த சமயம் உள்ள பகுதிகளெல்லாம் சிங்களவர் இருப்பிடம் என்று சொல்ல வேண்டியது தானே?

நாங்கள் இதுகளை தமிழில் எழுதிக்கொண்டிருந்தால் போதாது. வெளி உலகுக்கும் எம் பக்க நியாயங்களையும் ஆதாரங்களையும் வெளியிடவேண்டும்.

அதெல்லாம் இருக்கட்டும்.. புத்தர் சிங்களவன் என்றதற்கு முதலில ஆதாரத் கொண்டு வாங்கைய்யா. வரிஞ்சு கட்டுறது இருக்கட்டும்..!

தமிழர்கள்.. புத்த மத நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். மணிமேகலை என்ற தமிழ் காப்பியம் இதற்கான சான்று. புத்தர் சிங்களவரோ.. கோத்தாவின் வாரிசோ அல்ல..! புத்தர் சிங்கள மொழி பேசியவரும் கிடையாது. அவர் அடிப்படையில் ஒரு இந்து தத்துவவாதி..!

அந்த வகையில் நோக்குகின்ற போது.. முழு இலங்கையும் தமிழர்களுக்கே உரித்தானது. தமிழர்கள் இன்னென்ன காலத்தில் இன்னென்ன மதத்தைதான் பின்பற்றினார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழகத்திலும் புத்த சின்னங்கள் உள்ளன. பூம்புகார் என்ற கடலுக்கு அடியில் நயினாதீவை ஒட்டி உள்ள இடத்திலும் புத்த சின்னங்கள் உள்ளன. காரணம் அந்தக் காலத்தில் சமணமும் புத்தமும் தழைத்தோங்கி இருந்தன.

ஆக மொத்தத்தில்.. சிறீலங்கா என்ற ஒரு நாடே இருக்கவில்லை. அது தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக.. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தீவு. தமிழர்களின் மத வழிபாடு என்பது காலத்துக்கு காலம் வெவ்வேறு நிலைகளில் செழிப்புப் பெற்றிருந்துள்ளது.

எங்கிருந்தோ வந்த சிங்களவர்கள்.. புத்த மதத்தை பின்பற்றுவதால்.. புத்த மதம் பரவி இருந்த இடமெல்லாம் சிங்களவர்களுக்கு சொந்தம் என்பது முழு முட்டாள் தனமான படிப்பறிவற்ற.. பேரினவாத பயங்கரவாதப் பாசிசக் கருத்தியலாகும்..!

கோத்தாவின் கூற்றுப்படி பார்த்தால் நேபாளமும்.. புத்தகயாவும்.. புத்தர் வாழ்ந்ததால்... சிங்களவர்களின் பூர்வ ஜென்ம பூமி. இந்த தேரரும்.. கோத்தாவும் அதை சிங்களப் படைகளை அனுப்பி மீட்க நடவடிக்கை எல்லோ எடுக்கனும். ஏன் எடுக்காம இருக்கினம்..??????????????! வந்திட்டாங்கையா.. வரலாறு கூட முழுசா தெரியாத ஜென்மங்கள்..!

பேரினவாத வெறியில்.. இராணுவ வெற்றிக் களிப்பில் அறிவிலித்தனமாக இந்தச் சிங்களவர்கள் குரைப்பதை எமது இனத்துக்கு எதிரான இவர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. இதனை உலகிற்கு நிரூபித்து தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து சம உரிமையோடு எப்போதுமே வாழ முடியாது என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தி சர்வதேசம்.. தமிழர்கள் தங்கள் பூர்வீக மண்ணில் தனித்துவத்தோடு தன்னாட்சி உரிமையோடு வாழ உதவக் கோர வேண்டும்..! அதுவே தமிழ் மக்களின் இருப்புக்கும் விடிவுக்கும் வழிவகுக்கும்..! :icon_idea:

இந்ததிரிக்கு தேவையான அவசியமான ஆணித்தரமான கருத்து.

நன்றி நெடுக்ஸ் இணைப்பிற்கும், உங்கள் நேரத்திற்கும்.

இந்த சிங்களவனுக பண்றதெல்லாம் பார்த்தா ஒன்னும் உருப்படற மாதிரி தெரியல . ஏதோ இப்படியெல்லாம் பேசித்தான் புலிகளை உருவாக்கி விட்டனர் . தமிழ் ஈழம் எனும் கருத்தையே தமிழர் மனதில் விதித்தனர் . இவர்கள் போகிற போக்கை பார்த்தால் தமிழ் ஈழம் உருவாக்காமல் சிங்களர்கள் ஓய மாட்டார்கள் போல இருக்கிறது .

ஒரு பக்கம் நல்லிணக்கம் பேச்சு மறுபக்கம் போர் வெற்றி கொண்டாட்டங்கள்

ஒரு பக்கம் அனைவரும் இலங்கை மக்கள் பேச்சு மறு பக்கம் வந்தேறிகள் என பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் சிங்களவருக்கு முன் யாருமே இருந்ததில்லை என்கிறேன். நான்..

மகாயண குறிப்பு பக்கம் 84 , 2 பாராவில் குறிப்பு காணபடுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் சிங்களவருக்கு முன் யாருமே இருந்ததில்லை என்கிறேன். நான்..

மகாயண குறிப்பு பக்கம் 84 , 2 பாராவில் குறிப்பு காணபடுகிறது...

உலகின் முதல் குரங்கு சிங்களவன்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்களவனுக பண்றதெல்லாம் பார்த்தா ஒன்னும் உருப்படற மாதிரி தெரியல . ஏதோ இப்படியெல்லாம் பேசித்தான் புலிகளை உருவாக்கி விட்டனர் . தமிழ் ஈழம் எனும் கருத்தையே தமிழர் மனதில் விதித்தனர் . இவர்கள் போகிற போக்கை பார்த்தால் தமிழ் ஈழம் உருவாக்காமல் சிங்களர்கள் ஓய மாட்டார்கள் போல இருக்கிறது .

ஒரு பக்கம் நல்லிணக்கம் பேச்சு மறுபக்கம் போர் வெற்றி கொண்டாட்டங்கள்

ஒரு பக்கம் அனைவரும் இலங்கை மக்கள் பேச்சு மறு பக்கம் வந்தேறிகள் என பேச்சு

அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது :icon_idea: :icon_idea: :icon_idea:

உலகின் முதல் குரங்கு சிங்களவன்.. :icon_idea:

அப்ப முதல் குரங்காட்டி தமிழன் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான்.

அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர்.

புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது

தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு

இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன்

தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.கி.முன் (247-207)தேவ நம்பிய தீசன் அனுராத புரத்தை தலை நகராய்க்கொண்டு

ஆட்சிசெய்தான்.அப்பொழுதே பௌத்தம் முதன் முதலாய் இலங்கையிட்கு வந்தது . கி.பின் ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் என்ற நூல்

தாதுசேனன் அரசனின் சகோதரனான மகாநாம தேரரால்

பாளி மொழியில்தொகுக்கப்பட்டது.பௌத்தத்தில் இரு

பிரிவுகளான மகாயானம்,தேரவாதம் ஆகியவற்றிட்கிடையிலான

போட்டியினாலேயே அப்போது தமிழ் மொழியில் பௌத்த

போதனைகள் நடந்தபோது அதில் அதிக முக்கியத்துவம்

மகாயானத்திட்கு கொடுக்கப்பட்டதால் பாளிமொழி

பாவனையை தேரவாதம் எடுத்துக்கொண்டது.உண்மையில்

அப்போது சிங்களமொழி இல்லை. அதன் பின்பே சிங்கள மொழி உருவாக்கம் பெற்றது.

அதனால்சிங்கள மொழி அதிக தமிழ் சொற்களையும் அதன் எழுத்துவடிவங்களையும் உள்வாங்கிக்கொண்டது.

பௌத்த துறவிகள் இணைந்து தம்மதீப'க் கொள்கையை உருவாக்கினர்.

இதன்படி இலங்கைபெளத்தர்களுக்குரிய நாடு,

சிங்கள இனத்தவர் தேரவாத பெளத்தத்தின் பாதுகாவலர்கள்.என்ற

தோற்றம் உருவாகிற்று.அப்போது பல தமிழர்கள் மகாயானம்

பௌத்தத்தை தழுவி வாழ்ந்து வந்தார்கள்.ஆனால் சிங்கள ஆட்சி

மாற்றங்களுடன் அவர்கள் சிதைக்கப்பட்டார்கள் . பௌத்த

துறவியால் பௌத்தத்தை வளர்ப்பதற்காக புனையப்பட்ட

மகாவம்சத்திலேயே கி.முன் அனுராதபுரத்தை தலை நகராய்க்கொண்டு

இலங்கையை நல்லாட்சி செய்த எட்டு தமிழ் மன்னர்களின்

சிறு வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

சிங்கள வரலாற்றை கூறும் நூலானசூலவம்சத்தின் நாயகன்

மகாபராக்கிரமபாகு(கி.பி.1140-1173)இவன் ஈழத்தின் வடக்கில் உள்ள வல்லிபுரம் என்னும் ஊரில்பிறந்தவன் .

இவனது அரண்மனைப்புலவர் போஜராஜ பண்டிதர்

இவரேசரஜோதிமாலைஎன்ற சோதிட நூலை தமிழிலே எழுதியவர்.

வரலாற்றின்படி இயக்க நாகர்கள் திராவிடர்களாகவும் ,இந்துக்களாகவும்

கி.முன் ஐந்தாம் நூற்றாண்டில் தவறான செயல்களுக்காக இந்தியாவிலிருந்து

நாடுகடத்தப்பட்ட

விஜனும்,அவனது சகாக்களும் ஆரியராகவும் இந்துக்களாகவும் பின்

இவர்கள் இயக்கர்,நாகர் இனப்பெண்களை திருமணம் செய்து வந்த

பரம்பரையினர் சிங்களராக பரிணமித்துள்ளனர்.தமிழரில் இருந்து

சிங்கள இன,மொழி தோன்றியதும் இந்து சமயத்தில் இருந்து

புத்த மதம் எழுந்ததும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது.

வியாபார நோக்கோடு அவ்வப்போது இலங்கை வந்த அரபு முஸ்லீம் வர்த்தகர் மீண்டும் தாம் கடலில்

செல்ல வேண்டிய திசைக்கு செல்வதற்குத் துணையாகக் கூடிய காற்று வீசும் வரை

இங்கு தங்க வேண்டியேற்பட்டது. தமக்குத் தேவையான திரவியங்களை உள்நாட்டில்

இருந்து திரட்டிக்கொள்வதற்கும்,கொண்டுவந்த வர்த்தகப் பொருட்களை

உள் நாட்டில் விநியோகிப்பதற்கும் அரபு முஸ்லீம் வர்த்தகர்களில் சிலர் இங்கு தங்கினர்.

இவ்வாறு தற்காலிகமாகத் தங்கும் காலத்தில் வர்த்தகர்கள் துறைமுக நகர்களில் வாழ்ந்த

பெண்களை விவாகம் புரியும் வழக்கம் இருந்தது. இஸ்லாம் விபசாரத்தைத் தடை செய்து,

பலதார மணத்தை அங்கீகரித்திருந்ததால் இங்கு வந்த அரேபிய வர்த்தகர்கள் இஸ்லாத்தை ஏற்ற

பெண்களை திருமணம் செய்தனர். இதனால் முஸ்லீம் சமூகம் உருவாகிற்று.முஸ்லீம்கள்

இலங்கையில் முதலில் கி.பின் பத்தாம் நூற்றாண்டில் பேருவளை என்ற பிரதேசத்தில்

குடியேறியதாய் வரலாறு சொல்கிறது.

முதலில் யாழ்.கொம் சிங்கள மொழியிலும் வர வேண்டி உள்ளது நாம் சிங்களத்திலும் செய்திகளை இணைப்போம்

உலகில் பலமானவன் சொல்வதே ஏற்கப்பட்டு காலப்போக்கில் வரலாறாகிறது. இதுவே எமக்கும் நடக்கிறது. இதற்குரிய தீர்வு எம்மை நாம் பலமாக்குவதே.

தம்பி கொஞ்சம் விளக்கமான ஆள் போல கிடக்கு.எப்படி இந்த பக்கம் ?

ஊர்காவற்றுறை ஊரதோட்ட என்று எந்த சரித்திரப் புத்தகத்தில் உள்ளது.ஊறா துறை அதாவது பன்றிகள் வந்து இறங்கியதாக சரித்திரம் சொல்கின்றது. பின்பு லைடன் தீவு அதன் பின் கயிற்ஸ் காவலூர், இலங்கை சரித்திரத்தில் இப்படித்தான் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்லுவது முதற்தடவை இல்லை இதேபோல் சந்திரிக்கா ஆட்சிகாலத்தில் சந்திரிக்கா கூறி இருந்தார் பின்னர் ரட்னஸ்ரீ என நினைக்கின்றேன் அவர் கூறி இருந்தார் இப்படி இவங்கள் கால காலமாக சொல்லி வருகின்றார்கள் நாங்கள் வந்தேறு குடிகளாக இருந்தால் விஜயன் வரும்போது அங்கு இருந்தவர்கள் என்ன சிங்கவனா ? காலத்துக்கு காலம் வரலாற்றை மாற்றி எழுதும் மகாவம்சம் போன்ற நூல்களை வைத்தே சிங்களவன் காமடி செய்கின்றான் .

முதலில் யாழ்.கொம் சிங்கள மொழியிலும் வர வேண்டி உள்ளது நாம் சிங்களத்திலும் செய்திகளை இணைப்போம்

சிங்களத்தில் வந்தால் அதை படித்து விட்டு சிங்கள கொட்டியா சொன்னதாக சொல்வார்கள் இவங்களுக்கு இப்படி எல்லாம் எழுதி விளங்கப்படுத்த முடியாது ஏதாவது வேறு வழிகளை தேடவேண்டும் .

உலகில் பலமானவன் சொல்வதே ஏற்கப்பட்டு காலப்போக்கில் வரலாறாகிறது. இதுவே எமக்கும் நடக்கிறது. இதற்குரிய தீர்வு எம்மை நாம் பலமாக்குவதே.

இதத்தான் தேசியத்தலைவர் தனது மாவீரர் உரையின்போது அன்று குறிப்பிட்டிருந்தார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.