Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil Women's Conference - Thaimai

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


    • Saturday, June 9, 2012
    • 9:30am until 6:00pm

    [*]

    The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

    The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

    We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

    We hope to see you there.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Saturday

9:30am until 6:00pm

கனடாத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு வழங்கும் 'தாய்மை'

-தாயகப் பெண்கள் குழந்தைகள் நலன்பேண் காப்போம்-

இது முற்றுமுழுதாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் வலுவிழந்தோரை பராமரிக்க புலம் பெயர் தமிழ்ப் பெண்கள் ஆற்றவேண்டிய கடமைப்பாடு பற்றிய கலந்துரையாடலும் கருத்தரங்கும்.

இடம்: மார்க்கம் நகரசபை மண்டபம்:இல 101 Town Centre Blvd, Markham, Warden & Hy7 சந்திப்பில் அமைந்திருக்கும் Markham Town Centre இல் யூன் 9ம் திகதி சனிக்கிழமை காலை 9:30-மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

தாயகத்து உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கவும் உங்கள் கருத்துக்களையும் பரிமாற்க்கொள்ளவும் அனைவரையும் குறிப்பாக கனடா வாழ் எம் தமிழ்ப் பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கனடாத் தமிழ் பெண்கள் அமைப்பினர்.

_______________________________________________________

The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

We hope to see you there.

நன்றி முகநூல்

https://www.facebook.com/events/362706163795463/

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆரோக்கியமானதும், அவசரமானதுமான ஒரு முன்னெடுப்பு, இது!

கனடாப் பெண்கள் அமைப்பின், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், நல்லாசிகளும்!

இணைப்புக்கு நன்றிகள், சகோதரி!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள் அக்கா..தாயகத்து உறவுகளுக்கு பிரியோசனமான நிகழ்வாக அமையும் நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி வெற்றிகர‌மாக நட‌க்கவும்,தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் இவ் அமைப்பினால் உதவி கிடைக்கவும் எனது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பெண்கள் அமைப்பின், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், நல்லாசிகளும்!

இணைப்புக்கு நன்றிகள், சகோதரி!

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் நிகழ்வுக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முற்று முழுதாக பெண்கள் முன்வந்து தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறார்கள், பெண்கள், வலுவிழந்தோர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உதவிகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை காலமும் தனித்தனியாக பலராலும் பலவழிகளாலும் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கனெடிய தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினரால் உத்தியோக பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. திறந்த கருத்தரங்காக இன்றைய தினம் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்ட கருத்தாளர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் நம்பிக்கை ஒளியூட்டுவதாக ஆரம்பித்திருக்கும் இவ்வமைப்பு மிகவும் பலம் வாய்ந்ததாக வளர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்களை இணைக்க முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை.

மூடு மந்திரமாக இல்லாமல் வெளிப்படையாக ஒரு உதவி அமைப்பு அதுவும் கூட்டாக தனியே பெண்கள் மட்டும் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது...கனடாவைப் போல மற்றைய நாடுகளிலும் இந்த "தாய்மை" அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு'

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை நிகழ்வின் புகைப்படங்களை வேறு ஓர இடத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..அதனையும் விட இந்த நிகழ்வானது தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு பிரியோசனப்படும் நிகழ்வாக அமைந்திருப்பது என்பது இன்னும் இரட்டிப்பு சந்தோசத்தை தருகிறது..எல்லோரும் ஒரு மித்து நின்று இயன்றளவு ஒற்றுமையாக ஒத்துளைத்து நின்று பாதிக்கபட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேணும் என்பதே என் விருப்பம்..மற்றும் நாடுகளி;ல் உள்ள பெண்களின் அமைப்புக்களும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை முன் எடுத்து செல்லவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

கனடாத் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் முயற்சிக்கு வாழ்த்துகள்

உலகமெங்கும் பரவி ஈழ்த்து அவலங்களுக்கு உதவட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

547572_10150848278971551_516745964_n.jpg

392540_10150848274766551_1455078580_n.jpg

182172_10150848286611551_460138238_n.jpg

598390_10150848289746551_838668601_n.jpg

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

165921_10150848281396551_1677843809_n.jpg

579976_10150848283786551_118265323_n.jpg

428566_10150848282536551_208162185_n.jpg

536007_10150848280156551_517368616_n.jpg

577598_10150848285746551_728027654_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னது தனியே பெண்களுக்கான அமைப்பு என்று சகாறா அக்கா சொன்னார் ஆனால் இதில் ஆண்களும் இருக்கிறார்கள்...மண்டபத்தில் கூட்டத்தையே காணவில்லை குறிப்பாக பெண்களைக் காணவில்லை :unsure:

பி;கு;அந்த இரு குழந்தைகளும் சகாறா அக்காவின் குழந்தைகளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

இது தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருத்தரங்கு, இது ஆரம்ப நிகழ்வு இங்கெல்லாம் கிலுக்கிட்டான்களுக்கு இடமில்லை அதனால் அதிகமான மக்கள் வருகை தரமாட்டார்கள். அத்தோடு ஆக்க பூர்வமான கருத்துப்பகிர்வுகளுக்கும் பொறுப்பேற்பதற்கும் இன்றைய நிலையில் பலரை உடனடியாக ஆரம்ப நிகழ்வில் எதிர் பார்க்க முடியாது. முகநூலிலும் வானொலிகளிலும் சவடால் அடிப்பவர்கள் அத்தோடு சரி செயல்வடிவம் கொடுப்பது என்பது எல்லோராலும் இயலாது.. அதுவும் இன்றைய காலத்தில் தட்டிக்கழித்து எட்டப்போவதற்கு ஆயிரம் சாட்டுக்களை சொல்லக்கூடிய நிலையில் இப்படி ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல... கனெடியச் சட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் இடத்தில் கனெடிய அரசியலில் வெற்றியாளர்களாக இருக்கும் நம்மவர்களின் உதவிகளையும் பெறவேண்டும் அல்லவா... அவர்கள் ஆண்களாக இருந்தால் எப்படி தவிர்க்க முடியும்?.... அத்தோடு இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் வந்து கருத்துத் தெரிவிக்கும் ஒரு பொது நிலையை கொண்டிருந்தது இந்த ஆரம்பம். கடந்த காலங்களில் 2009 இற்கு முன்னான காலங்களில் மகளிர் சக்தியை கனெடிய தமிழ் மக்கள் நன்கே உணர்ந்திருந்தார்கள் பின்னரான காலப்பகுதி மிகுந்த குழப்பங்களுக்கும், பிரிவினைகளுக்கும், தாயக உறவுகளுடனான நேரடித் தொடர்பின்மையாலும் மகளிர் சக்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இப்போது குழப்பங்கள் , பிரிவினைகள் கடந்த மகளிராக தாயக உறவுகளைத் தாங்கும் தாய்களாக மகளிரின் "கனெடியத் தமிழ்பெண்கள் மேம்பாட்டு அமைப்பு" கருக் கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் எண்ணிக்கையால் கணக்கிட்டுப்பார்க்காமல் எவ்வகையில் மீண்டும் எழுந்தார்கள் என்று எண்ணமிட்டுப் பாருங்கள். ஒன்று மட்டும் நேற்றைய நிகழ்வில் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பிரிவினைகளையும் குழப்பங்களையும் பிள்ளைகளுக்குள் நிரந்தரமாக இருக்காதபடி தாய் ஒருத்தியால்தான் அகற்ற முடியும். கடந்த ஓரிரு வருடங்கள் ஏற்பட்ட கருத்துப் பிறழ்வுகளும், குழப்பச்சூழல்களும் நீடிக்காதபடி தாய்மையால் பலர் இணைந்து விட்டார்கள். நிட்சயமாக ஒன்று பத்தாகும் பத்து நூறாகும். அதை ஆக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இருக்கிறது. இங்கு விலகி நின்று குழப்ப எவராலும் முடியாது. அம்மா என்பவள் குழப்பவாதியாகவோ, தத்தாரியாகவோ ஆனதாய் எந்தச் சரித்திரத்திலும் இல்லை. நிட்சயமாக இந்தப் பெண்கள் அமைப்பு மிகப் பாரிய பங்கை புலம் பெயர்ந்த தேசத்திலும், தாயகத்திலும் உருவாக்கும். அப்படியொரு உருவாக்கத்திற்கு நானும் நீங்களும் எல்லோரும் முழுமையான ஆதரவுக் கரங்களைக் கொடுப்போம்.

முக்கிய குறிப்பு

ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பல உதவிகளை இப்பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா தகவலுக்கு மண்டபம் வெறுமையாக உள்ளது என்ட ஆதங்கத்தில் கேட்டேன்

இங்கே உள்ள பெண்கள் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெருத்த கேள்வி இருக்கின்றது. "பெண்கள் அமைப்பு" என்பதன் பொருள் சரியாக விளங்கப்பட்டிருக்கிறதா?

"பெண்கள் அமைப்பு" என்னும் பெயரில் அமைப்பின் மகளிர் பிரிவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சுயமாக இயங்க முடிவதில்லை. சுயமாக இயங்கும் திறன்படைத்தவர்களும் கவனமாக தவிர்க்கப்படுகின்றார்கள்.

ஒரு நகரத்தின் ஆண் பிரதிநிதி அந்த நகரத்திற்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினரை முன்மொழிகின்றார். ஆண்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிய சுயமான கலகக் குரலை குறிக்கின்ற "பெண்கள் அமைப்பு" என்னும் பெயர் கேலிக்கூத்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனடாவின் தாய்மை அமைப்பாவது சுயமாக இயங்கட்டும்

Edited by சபேசன்

'தாய்மை' யின் சேவை சிறப்புற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உள்ள பெண்கள் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெருத்த கேள்வி இருக்கின்றது. "பெண்கள் அமைப்பு" என்பதன் பொருள் சரியாக விளங்கப்பட்டிருக்கிறதா?

"பெண்கள் அமைப்பு" என்னும் பெயரில் அமைப்பின் மகளிர் பிரிவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சுயமாக இயங்க முடிவதில்லை. சுயமாக இயங்கும் திறன்படைத்தவர்களும் கவனமாக தவிர்க்கப்படுகின்றார்கள்.

ஒரு நகரத்தின் ஆண் பிரதிநிதி அந்த நகரத்திற்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினரை முன்மொழிகின்றார். ஆண்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிய சுயமான கலகக் குரலை குறிக்கின்ற "பெண்கள் அமைப்பு" என்னும் பெயர் கேலிக்கூத்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனடாவின் தாய் அமைப்பாவது சுயமாக இயங்கட்டும்

சபேசன்,

உங்களைப் போன்றே பலருக்கும் இது குறித்த சந்தேகம் இருக்கிறது. எனக்கும் இருந்தது ஆனால் இப்போது இல்லை

கடந்த காலங்களில் பெண்களின் திரள்வான சக்தியை வரம்புகளுக்குள் உள்ளடக்கி, அச்சக்தியை எல்லா முனைகளுக்கும் பாய்ச்ச வேண்டிய தேவை இருந்தது. அதன் நிமித்தம் செயற்படவேண்டிய நிலைப்பாடு பெண்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது முற்றிலும் மாறான சூழலில் பெண்களின் திரள்வான சக்தியை ஒரு திசையை நோக்கியதாகவே அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ்பெண்கள் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்கள் சமூகத்திற்கே நிமிர்வைக் கொடுத்த பெண்கள் ஆதரவற்றவர்களாகவும், அலங்கோலப்பட்டவர்களாகவும் சிங்களத்தால் திட்டமிட்டு அடக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு எங்கள் சமூகமும் பல இடங்களில் பலவான்களுக்கு முன்னால் நிற்கும் முடமாக, மௌனித்ததாக, உடந்தையாக நிற்க நிர்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தினை உலகில் எத்தனை அதர்மங்கள் இருக்கின்றனவோ அத்தனை அதர்மங்களைக் கொண்டும் நசுக்கிப் போட இந்த உலகமும் உடந்தையாகவே இருந்துவிட்டது. தீர்ப்புகளைத் தரக்கூடிய நீதி எந்த வல்லமைகளிடமும் இல்லை. நசுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்களாகவே இருக்கவேண்டும் என்னும் இனவாத எண்ணங்களுக்கு எம்மினம் இரையாகக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் பாதிக்கப்படக்கூடாது. நாங்கள் தாங்க வேண்டும்.

இவர்கள் சுயமாக இயங்கும் சக்தி படைத்தவர்கள் என்பது நான் அறிந்த ஒன்று. கடந்த காலங்கள் போலல்லாது இவர்கள் தெளிவானவர்களாக இருப்பார்கள் என்று நம்புவோம். அநேகமாக கூடுமானவரைக்கும் இவர்களுடன் பேசியதில் யாரும் இவர்களிடம் எத்தீர்மானத்தையும் புகுத்த முடியாது என்பதை உணர முடிகிறது.

அப்படியே யாரேனும் இவர்களுடைய சக்தியை எழுந்த மானத்தில் தம்முடைய அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்த எத்தனித்தால் அதற்கு முதல் எதிரி கண்டிப்பாக நானாகத்தான் இருப்பேன் என்பதை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை நிறுவனம் தாய் நிறுவனமாக உரு பெற்று இருக்கிறது என்று நினைக்கிறன்..அனைவரது கருத்துக்களையும் உள் வாங்கிக் கொண்டு எவ்வளவு திறம்பட செயல் பட முடியுமோ அந்தளவுக்கு திறமையாக செயல் பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,

தாய்மை நிறுவனம் தாய் நிறுவனம் என்ற கருத்திற்கு இந்த இடத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இத்தகைய சொற்பிரயோகங்கள் வீணே பலரின் வெறுப்பிற்கு உட்படுத்தப்பட்டுவிடக்கூடியது. ஏனெனில் இந்தச் சொல் பல சூட்சுமப் பொருட்களை வெளிப்படுத்தக்கூடியது. ஆதலால் இத்தகைய சொற்பிரயோகத்தை நாம் உச்சரித்து அதனால் ஒன்றுபட்ட செயற்பாட்டில் இறங்கியிருக்கும் மகளிரின் பணிகளைக் கடினப்படுத்திவிடக்கூடாது.

இந்தத் திரியில் ரதி, சபேசன் போன்றோர் கேட்ட கேள்விகளை அவர்கள் பார்க்கும் வண்ணம் அவர்களுக்கு இந்த இணைப்பை அனுப்பியுள்ளேன். இந்தத்திரியில் அவர்களைச் செம்மைப்படுத்தும் கருத்துக்களைப்பதிந்தால் அது அவர்களைச் சென்றடையும்.

உங்கள் பார்வையில் உங்கள் கருத்துக்களை அவர்களை நோக்கிய உங்கள் எதிர்பார்ப்புகளை முன் வையுங்கள்.

உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

இதில் எந்த படத்தில் சகாறா அக்கா இருக்கிறார் என்று யாராவது சொல்லுங்கோப்பா.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சிற்கு வாழ்த்துக்களும்

நன்றிகளும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவில் பெண் தாதிகள் சங்கத்திற்கு புத்த பிக்கு தலைவராக இருந்தது போல் இருக்கிறது இந்த கூத்து

உலகத் தமிழர் இயக்கம் மீண்டும் தலை எடுக்க மகளிரை கொண்டு தொடங்கும் புதிய நாடகம் தான் இது.

தங்களின் சொந்த லாபத்திற்காக பெண்கள் செண்டிமெண்டை பாவித்து கஜானாவை மீண்டும் நிரப்பும் முயற்சியே இது . அமைப்பின் பெயரிலேயே இது தெளிவாக தெரிகிறது.

மூன்று வருடங்களுக்குள் கஜானா காலியாகி விட்டது போலும். இந்த நாட்டிலாவது பெண்களை மனிதர்களாக வாழ விடுங்களேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.