Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைகள் கட்ட பட்ட நிலையில் அழைத்துச்செல்லப்படும் ஆண் பெண் போராளிகளின் படங்கள்....

Featured Replies

அந்தப் பிள்ளைகள் உண்மையில் சரணடைந்தார்களா?

அவர்கள், உண்மையிலேயே.... விடுதலைப் புலி உறுப்பினர்களா?

இது கேள்வி. ஊகங்களை விடுத்து பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு ஏதாவது செய்யலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வருகுதில்லை

முடிந்தால்

உங்களுக்கு தெரிந்தவர் எவராவது

இதிலிருந்தால் ஆளைக்காட்டுமாறு வழக்குத்தொடருங்கள்.

சிங்களம் வெல்லவில்லை தமிழன் தோத்தான் அதுதான் உண்மை .

அதில் தங்கள் பங்களிப்பு அதிகம்

இதை செய்த சிங்களவன் புழுத்து சாவான் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்த லண்டனில் இருந்தவேளை புதிய போர்க்குற்ற ஆதாரம் அம்பலம்; பிரிட்டனின் இன்டிப்பென்டன்ட் நாளேடு வெளியிட்டது

1011.jpg

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் தங்கியிருந்தவேளை அவரது லண்டன் வருகைக்கு எதிராகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படைகளால் தமிழ்ப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டமை குறித்த புதிய காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளேடு.

பிரிட்டன் மகாராணி எலிஸபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவையொட்டி லண்டனில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த கலந்துகொண்டிருந்த நேரம் பார்த்து இந்தப் போர்க்குற்ற ஆதாரம் அம்பலப்படுத்தப்பட்டமை பெரும் பரபரப்பாக அமைந்தது.

தனக்குக் கிடைத்துள்ள காணொலி ஒன்று, வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புகள் வெளித் தெரியத்தக்கதாக ஆடைகள் களைப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100இக்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக இலங்கைப் படையினர் களிப்புடன் நின்பதைக் காட்டுகின்றது என இன்டிபென்டன்ட் நாளேடு தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இது தமிழர்கள் எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது எனவும் இந்தக் காணொலி இலங்கைப் படையினர் வழக்கமாகப் பயன்படுத்தும் இணைய நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரால் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

இன்டிபென்டன்ட் நாளேடு வெளியிட்டுள்ள இந்தப் போர்க்குற்றம் தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: இந்தக் காணொலி தமிழர்கள் இறந்த பின்னரும் எவ்வாறு இலங்கைப் படையினரால் நடத்தப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

கறுப்பு வெள்ளையிலான கைத்தொலைபேசிப் படங்கள் தார்பாய்களின் மீது 100இக்கும் அதிகமான சடலங்கள் போடப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.இவற்றில் சில ஆண்களின் சடலங்கள் விடுதலைப் புலிகளின் சீருடையில் காணப்படுகின்றன. பெரும்பாலான சடலங்கள் சாதாரண உடையுடன் இருக்கின்றன.

இவை போராளிகளா அல்லது பொதுமக்களா அல்லது இருதரப்பினருடையதுமா என்று சொல்வது சாத்தியமில்லை.விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.அதேவேளை இலங்கைப் படையினர் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழ்ப் பெண்களின் சடலங்கள் தனியாகக் கையாளப்பட்டுள்ளன என்பது மட்டும் தெளிவாகிறது.பெரும்பாலான ஆண்களின் சடலங்கள் முழுமையான ஆடைகள் அல்லது மேலாடை இல்லாமல் இருக்கின்றன.ஆனால் பெரும்பாலான பெண்களின் சடலங்கள் ஆடைகள் வேண்டுமென்றே முற்றிலும் களையப்பட்டு அவர்களின் மார்பகங்களும், பாலுறுப்புகளும் வெளியே தெரியத்தக்கதாகக் காணப்படுகின்றன.

முன்னர் வெளியான காணொலிப் பதிவுகளில் தமிழ்ப்பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னரோ பின்னரோ ஆடைகள் களைப்பட்ட நிலையில் இருந்ததை வெளிப்படுத்தியிருந்தன. இதன் அடிப்படையில் இலங்கைப் படையினர் பாலியல் வன்புணர்வு அல்லது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டனர் என்ற் குற்றச்சாட்டுகளை உரிமை அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.

இசைப்பிரியா என்ற தமிழ்ப் பெண் ஊடகவியலாளர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடந்த காட்சியை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தப் புதிய காணொலி குறித்து ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜெயசேகரவிடம் தி இன்டிபென்டன்ட் நாளேடு கூறியபோது, இது இலங்கை அரசுக்கும் படைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதற்கான மேற்கொள்ளப்படும் முயற்சி என்று கூறியுள்ளார்.அதேவேளை லண்டனைச் சேர்ந்த சட்டவாளர் வாசுகி முருகதாஸ், இந்தக் காணொலி உண்மை என்றே தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.இந்தக் காணொலி இலங்கைப் படையினர் வழக்கமாகப் பயன்படுத்தும் இணைய நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெயர் வெளிப்படுத்தப்படாத தமது தரப்பாளர் ஒருவர் மூலமே இலங்கையில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைப் படையினர் தமது கைபேசிகளில் இருந்து படங்களையும் காணொலிகளையும் மின்னஞ்\ல் செய்வதற்காக தரவிறக்கம் செய்து தருமாறு அந்த இணைய நிலைய உரிமையாளரிடம் கேட்பது வழக்கம்.ஒரே கைபேசியில் எடுக்கப்பட்டுள்ள 32 காணொலிகளையும் 26 ஒளிப்படங்களையும் இன்டிபென்டன்ட் பார்வையிட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான படங்கள் அடையாளம் தெரியாத இடமொன்றில் கிடக்கும் பிணக்குவியல்களை காட்சிப்படுத்துகின்றன.கைது செய்யப்பட்ட புலிகள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பஸ் ஒன்றில் ஏற்றப்பட்டிருப்பதை ஏழு படங்கள் காட்டுகின்றன. அவர்களில் பலர் சிறுவர்கள்.

இந்தப் படங்கள் இலங்கைப் படையின் பெண் சிப்பாய் ஒருவராலேயே எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அவரது குரலும், அவர் பிற படையினருடன் சிங்களத்தில் உரையாடுவதும் இதில் பதிவாகியுள்ளது.மேலும் இரண்டு படங்கள் அவர், இராணுவ வாகனம் ஒன்றைச் செலுத்துவதையும், இறுதிக் காணொலி அந்தச் சிப்பாய் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருப்பதையும் காட்டுகின்றன.

1011.jpg

warcrime-picture.jpg

இவையெல்லாம் போலி என்று கூறுவது மிகவும் கடினமானது.இது இலங்கைப் பெண் சிப்பாயின் கதையை தெளிவாக கூறுகிறது என்று கூறியுள்ளார் வாசுகி முருகதாஸ்.இலங்கைப் படையினர் பெண்களின் சடலங்கள் நிர்வாணப்படுத்தியிருப்பதற்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கலாம்.அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்.அல்லது இறந்த பின்னர் நிர்வாணப்படுத்தியிருக்க வேண்டும்.மிருகங்கள் மட்டும் தான் இவற்றை விரும்பும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்என்று இன்டிபென்டன்ட் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பான புதிய ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளமை இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் மேலும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் உண்டுபண்ணும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.அத்துடன் போர்க்குற்றம் தொடர்பான விசாரனையை மேலும் வற்புறுத்துவதற்கான அழுத்தமாகவும் இது அமையும் என்று கூறப்படுகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=775441110908853188

கறுப்பு வெள்ளையிலான கைத்தொலைபேசிப் படங்கள் தார்பாய்களின் மீது 100இக்கும் அதிகமான சடலங்கள் போடப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.இவற்றில் சில ஆண்களின் சடலங்கள் விடுதலைப் புலிகளின் சீருடையில் காணப்படுகின்றன. பெரும்பாலான சடலங்கள் சாதாரண உடையுடன் இருக்கின்றன.

நுணாவிலான்: கைத்தொலைபேசிகள் கறுப்பு, வெள்ளை படங்கள் எடுக்கமட்டடா. வாசுகி, இவை உண்மையான படங்கள் எங்கிறா. அதாவது உரிமையாளர்களில் ஒருவர் நாகரிகத்துக்காக படங்களை கறுப்பு வெள்ளையாக மாற்றியிருக்கிறார் என்பது சந்தேகிக்க படக்கூடியது. இப்படியானவர் வெறுமனே அரசாங்கம் மீது ஏற்பட்டிருக்கும் கோபம் காரணமாக இல்லாமல் நல்ல காரணம் ஒன்றுக்காக இந்த படங்களை வெளிவிட்டிருக்கலாம். எனவே இவை தொடர்ந்து விசாரிக்க பட்டால் யாரால் இந்த படங்கள் வெளியிடப்பட்டன என்பதும், அவர்களின் உதவியை நாடி அவலம் நடந்த இடத்தை கண்டுபித்து உறவினரை கண்டுகொள்ள முடியும் என்பதும் உண்மை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தி வாசிப்பவரை விட...

செய்தி முன்னோட்டம் வாசிப்பவர், பினாட்டு மாதிரி இழுப்பதால்..

செய்தியை... முழுமையாக, கேட்க முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

600047_371657036228972_98511569_n.jpg

நேற்று வெளியிட பட்ட இந்த போராளிகளின் விபரங்களை அடுத்து சிலர் தொடர்பு கொண்டு பல விடயங்களை தெரிவித்தனர் என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் இதில் உள்ளவர் இம்ரான் பாண்டியன் படையணியை சேர்ந்தவர் என அவரை அறிந்த போராளிகள் தெரிவித்துள்ளதுடன் இவரது இயக்க பெயர் சிந்தி என தெரிவித்துள்ளனர் .

Edited by சுபேஸ்

போராட்டம் என்று ஒன்று இருந்தால் சரணடைதல் என்பது அகராதியிலேயே இருக்க கூடாது.

எல்லாரும் சயனைட் அடித்து செத்து இருக்கவேண்டும் என்ற பொருளிலா இதை எழுதினீர்கள் நுணா?

முழு இயக்கமே கண் முன் அழிந்து போகும் போது, சரணடைவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அத்துடன் தலமையின் உத்தரவாகவும் அதுவாகத்தான் இருந்திருக்கு. நடேசன் அண்ணை போன்றவர்களே சரணடைய முனைந்தமையும் இதனால் தான். சிங்களத்திடம் அல்ல, சர்வதேசத்திடம் அவர்களுக்கு இருந்த ஒரு சொட்டு நம்பிக்கையில் இந்த முடிவை அவர்கள் எடுத்து இருப்பார்கள். ஆனால் சிங்களும் சர்வதேசமும் சேர்ந்தே இவர்களை கொன்று குவித்துள்ளது. இன்று சர்வதேசம் இலங்கை அரசானது சீனத்திடமும், ஈரான் போன்ற தேசங்களிடமும் நெருங்குவதை தடுப்பதற்கு இந்த படுகொலைகளை போர்க் குற்றமாக கையிலெடுத்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை என்னால் நேர‌டியாக இணைக்க முடியவில்லை யாராவது முடிந்தவர்கள் இணைத்து விட‌வும் அதில் புலிகளின் முக்கிய உறுப்பினரான மாதவன் மாஸ்ட‌ர் இருக்கிறார்...இறந்த அவர‌து உருவம் இந்தக் காணொளியில் உள்ளது...கொஞ்ச மாதங்களுக்கு முன்பு நம்மட‌ சாஸ்திரி அவர் உயிரோடு இருப்பதாகவும்,அவரோடு கதைப்பதற்கு தொட‌ர்பு ஏற்படுத்தி தருவதாகவும் யாழில் சொல்லி இருந்தார்...நான் கூட‌ அவருட‌ன் தனி மட‌லில் தொட‌ர்பு கொண்டேன் பின் மாதவன் மாஸ்டர் இறந்து விட்டார் என எனக்கு நிச்சயமாக தெரிந்ததால் இடையில் தொடர்பை விட்டு விட்டேன்...சாஸ்திரி எதற்காக அந்த நேர‌ம் அப்படி ஒரு கதையை அவிட்டு விட்டார் என எனக்கு தெரிய வேண்டும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சயனைட் அடித்து செத்து இருக்கவேண்டும் என்ற பொருளிலா இதை எழுதினீர்கள் நுணா?

முழு இயக்கமே கண் முன் அழிந்து போகும் போது, சரணடைவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அத்துடன் தலமையின் உத்தரவாகவும் அதுவாகத்தான் இருந்திருக்கு. நடேசன் அண்ணை போன்றவர்களே சரணடைய முனைந்தமையும் இதனால் தான். சிங்களத்திடம் அல்ல, சர்வதேசத்திடம் அவர்களுக்கு இருந்த ஒரு சொட்டு நம்பிக்கையில் இந்த முடிவை அவர்கள் எடுத்து இருப்பார்கள். ஆனால் சிங்களும் சர்வதேசமும் சேர்ந்தே இவர்களை கொன்று குவித்துள்ளது. இன்று சர்வதேசம் இலங்கை அரசானது சீனத்திடமும், ஈரான் போன்ற தேசங்களிடமும் நெருங்குவதை தடுப்பதற்கு இந்த படுகொலைகளை போர்க் குற்றமாக கையிலெடுத்துள்ளது

இந்த முடிவு எமக்கு இப்படியான ஏமாற்றத்தை தந்ததாலும் எல்லோரும் சேர்ந்து எம்மை ஏமாற்றியதாலும் சரணடைந்தவர்களை பார்த்து கண்ணீர் வடித்ததாலும் இனிமேல் தமிழருக்கு ஒரு போராட்டம் என்று வருமாயின் அதில் சரணடைதல் என்பது இருக்கக்கூடாது என எழுதி இருந்தேன்.

உங்களுக்கு உயிருடன் சரணடைந்த போராளிகளை பார்க்கும் போது அப்படி ஓர் உணர்வு ஏற்படவில்லையா??

உங்களுக்கு உயிருடன் சரணடைந்த போராளிகளை பார்க்கும் போது அப்படி ஓர் உணர்வு ஏற்படவில்லையா??

ஆத்திரமும் எங்களின் இயலாமையின் மீதான வெறுப்பும் தான் வந்தது நுணா

அத்துடன், நாம் இருக்கும் பகுதியில் இப்படி கைதாகி, விடுதலையாகி பின் ஏதோ ஒரு வழியில் கனடாவுக்குள் நுழைந்து இன்று case நடக்கும் ஒருவரையும் என்னால் சந்திக்க முடிந்தது. அதே போல் என் ஒன்று விட்ட அண்ணையும் (மூத்த அண்ணன்) சரணடைந்து தப்பி இப்ப யாழ்ப்பாணத்தில் கடை நடத்தி வருகின்றார்.

எல்லாரும் சயனைட் அடித்து செத்து இருக்கவேண்டும் என்ற பொருளிலா இதை எழுதினீர்கள் நுணா?

முழு இயக்கமே கண் முன் அழிந்து போகும் போது, சரணடைவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அத்துடன் தலமையின் உத்தரவாகவும் அதுவாகத்தான் இருந்திருக்கு. நடேசன் அண்ணை போன்றவர்களே சரணடைய முனைந்தமையும் இதனால் தான். சிங்களத்திடம் அல்ல, சர்வதேசத்திடம் அவர்களுக்கு இருந்த ஒரு சொட்டு நம்பிக்கையில் இந்த முடிவை அவர்கள் எடுத்து இருப்பார்கள். ஆனால் சிங்களும் சர்வதேசமும் சேர்ந்தே இவர்களை கொன்று குவித்துள்ளது. இன்று சர்வதேசம் இலங்கை அரசானது சீனத்திடமும், ஈரான் போன்ற தேசங்களிடமும் நெருங்குவதை தடுப்பதற்கு இந்த படுகொலைகளை போர்க் குற்றமாக கையிலெடுத்துள்ளது

சர்வதேசமும் அல்ல, சர்வதேசம் சொன்னதை ஏற்கும் நிலையில் அவர்கள் இருக்கவில்லை. நாட்டில் போராடிய போராளிகளை உசுப்புப்பெத்தி உசுப்பேத்தியே தங்கள் வண்டியை வளர்த்த வியாபாரப் புலிகளே காரணம்.

தமிழன் தோற்றது தமிழனால்தான்.

சிங்களம் வெல்லவில்லை தமிழன் தோத்தான் அதுதான் உண்மை .

... உண்மையான வரிகள் ... பல காரணங்களினால் ...

எந்த ஒரு இனத்தையும் ஆயுதம் கொண்டு அவர்கள் உரிமைகளை அடக்கி ஆள இல்லை இன்றைய காலகட்டத்தில் அழிக்கவோ முடியாது.

சுயநிர்ணய உரிமைக்காப்போராடிய போராட்டத்தை 'இனவழிப்பு (genocide)' ஊடாக அழித்தமை தற்காலிக வெற்றியே, இறுதியில் தமிழர் தரப்பு வெல்லும்.

செய்தி வாசிப்பவரை விட...

செய்தி முன்னோட்டம் வாசிப்பவர், பினாட்டு மாதிரி இழுப்பதால்..

செய்தியை... முழுமையாக, கேட்க முடியவில்லை.

பினாட்டு மாதிரி இழுத்தது மட்டும் இல்லை... முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் கோரம் சம்மந்தமான தகவல் விடயத்தை விரிவுபடுத்தாது வாசுகி முருகதாசை வைத்து ஆலாபணை பண்ணுகின்றார். வாசுகி முருகதாஸ் அவர்களின் சேவை ஒருபுறம் அமைய, அதேசமயம் அவருக்கு குறிப்பிட்ட தகவல்களை இலங்கையிலிருந்து புத்திசாதுரியமாக எடுத்து அனுப்பி வைத்த உறவின், துணிவையும், சேவையையும் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். உண்மையாக அதிகளவு ஆபத்து அவருக்கே உள்ளது. நிச்சயம் இந்த தகவல்களுடன் சம்மந்தப்பட்ட உள்ளூர் இணைய நிலையத்தை மோப்பமிட்டு குறிப்பிட்ட உறவை, அவருடன் சம்மந்தப்பட்டவர்களை பந்தாடுவதற்கு சி.பு.து முயற்சிப்பார்கள். அந்த முகமறியாத உறவின் துணிவையும், செயலையும் மீண்டும் நினைத்துப்பாருங்கள்.

Edited by கரும்பு

இந்த காணொளியையும் கொஞ்சம் பாருங்கள்.

இதை இணைப்பமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தேன். ஆனால் இவர்களை மறந்திருக்கும் பல உறவுகளின் மனக்கதவை தட்டி எழுப்பும் என்ற நோக்கில் இணைக்கிறேன். பார்த்த பின்னும் ரத்தம் கொதிக்காவிட்டால் அவர்கள் மனிதர்களே அல்ல.

முடிந்தவர்கள் அனைவரும் படங்களை, இக்காணொளிகளை channel 4, வேறுபல ஊடகங்கள், இணையதளங்கள், மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றுக்கு அனுப்பி வையுங்கள். அசல் காணொளி எம்மிடம் இல்லாவிட்டாலும் இவற்றையாவது பார்க்கட்டும்.

[media=]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ySUPXdQ7SdU

- மூலம் முகநூல் -

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.