Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது சொந்த சகோதர்களுக்கு தனி அலகு கொடுத்து எம்மிடம் இருந்து பிரிக்கும்

விசம தனத்தை கண்டிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு எம்மை தள்ளி உள்ளமை மன உளைச்சலை எமக்கு தந்துள்ளது என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

(ஒரு வேலை எனக்கு பகிடி வெற்றி புரியவில்லையோ என்பது தெளியவில்லை)

  • Replies 153
  • Views 10.9k
  • Created
  • Last Reply

அது பொய், இது உண்மை என்று தாக்குதல் நடத்தியவன் சொல்வதை விட, தாக்கப்பட்டவன் என்ன சொல்கின்றான் என்பது முக்கியமானது.

இங்கு நீங்கள் எந்த பகுதியில் தாக்கப்பட்டீர்கள்? நீங்கள் கருத்து சொல்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.

நீங்கள் தாக்கப்படாமல் தாக்கப்பட்டவர்களின் கருத்தை கேட்டு உண்மை பொய்யை கதைக்கும் போது நாங்களும் தாக்கப்படாமல் தாக்கப்பட்டவர்களின் கருத்தை வைத்து உண்மை பொய் கூற முடியும். இதில் உங்களுக்கொரு நியாயம் எமக்கொரு நியாயம் ஏன்?

இங்கு முஸ்லிம்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் எம்மை புறக்கணிக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகள் சிங்களவர்களுடன் பயணிக்கிறது.

சிங்களவர்களுடன் பயணிக்கும் முஸ்லிம்கள் சிங்களத்துடன் சேரட்டும். எம்முடன் பயணிக்கும் முஸ்லிம்கள் இருந்தால் நாம் ஏற்றுக்கொள்வோம். இதை தான் அனைவரும் கூறுகிறோம்.

ஆனால் எம்மை வீழ்த்த சிங்களத்திற்கு உதவி செய்து விட்டு தமிழீழம் கிடைத்தவுடன் எம்பக்கம் சேர்பவர்களால் நாளை எமக்குள் மீண்டும் பிளவுகளும், காட்டிக்கொடுப்புகளும் தான் உருவாகும். அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் சொன்னது போல் தமிழ பேசும் அனைவருக்கும் உரிய தேசம் தமிழீழம். அங்கே யாரும் வாழலாம், சாதி,மதம் அப்பாற்பட்டது. மொழிக்கு தான் முன்னுரிமை. தமிழ் மொழி பேசுபவர்கள் சேர்ந்து வாழ முடியாவிட்டால் அல்லது விருப்பம் இல்லை என்றால் சிங்கள தேசத்தில் வாழலாம்.

இது இந்து, கிறிஸ்தவம் ,இஸ்லாம் எல்லாருக்கும் பொருந்தும்.

வடக்கு ,கிழக்கு தமிழர் தேசம் முஸ்லீம்களும் தமிழரே அவர்களும் தமிழராக தான் கணிக்கப்படுவார்கள் .தாய் மொழி எது என்றால் தமிழ் தான், சிங்கள முஸ்லீம்கள் கிடையாது.

எனவே தீர்வின் போது ஒன்றாகதான் சேர்ந்து நிற்கனும்.

எரித்திரியா பிரிந்த போது, முழு எரித்திரியர்களும் எரித்திரியாவுக்குள் வந்து விடவில்லை ,எரித்திரிய்ர்கள் பலர் எத்தியோப்பியாவில் தங்கி விட்டார்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்று. பிற்பாடு எத்தோப்பிய அரசால் அவர்களது சொத்துகள் எல்லாம் பறிக்க பட்டு எரித்திரியாவுக்கு கலைக்க பட்டார்கள்.. இது எரித்திரியாவுக்கு போகாமல் எத்தியோப்பியாவில் இருந்து எல்லாவற்றையும் இழந்து அகதியாக நோர்வே வந்த எனது எரித்திரிய நண்பியின் வாக்கு மூலம்.

அவரவர் எங்கு இருப்பது என்று விரும்பிய படி முடிவு எடுக்கட்டும்

அந்த முடிவை அவர்கள் ஒருபோதும் எடுக்க மாட்டார்கள்......

எங்கே எப்போ எதை புடுங்கலாமோ

அதை சார்ந்துதான் அவர்கள் இருப்பார்கள். கடந்த முப்பது வருடமாக அதைதான் செய்தும் வந்துள்ளார்கள்.

புடுங்குவது எடுப்பது என்பது காலத்திற்கு காலம் மற்றம் அடைந்துகொண்டுதான் இருக்கும்.

செழித்து வாழ்ந்த தமிழன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை வேண்டி சிங்களவனிடம் கையளித்தான். அப்போது தமிழனோடு ஒட்டி சிங்களவனிடம் புடுங்குவதட்கு எதுவாக தமிழ் மொழியை தற்காலிக மொழியாக கொண்டார்கள்.

இப்போ சிங்களவன் தமிழனின் கோமணத்தையும் புடுங்கிவிட்டான் அதை தெரிந்து சிங்களவனுடன் கூடி நின்று அவர்களும் புடுங்கினார்கள். இனி சிங்கள மொழியை தமது மொழியாக கூட அவர்கள் கொள்ளலாம். இளைய தலைமுறை அப்படிதான் உள்ளதாக மேலே சபேசனே எழுதுகிறார்.

இதுவரையில் எந்த தமிழனும் சிங்களவைனை அடிக்கவில்லை......... தங்களை பாதுகாத்துக்கொண்டு பேசி தீர்ப்பதில்தான் தீவிரம் காட்டினார்கள்.

இனி ஒருதமிழன் சிங்களவனை அடிக்க தொடங்கினால்? முடிவு தெளிவில்லாதது. அந்த நேரம் எந்த தொப்பியை போடுவார்கள் சகோதரர்கள் என்பது. அரு அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். ஏழாம் அறிவு திரை அரங்கிட்குள்ளேயே குடியிருந்தால் எப்படி?

சபேசன் அண்ணா,

நாம் சில விடயங்களில் முஸ்லிம்களை குறை கூறினாலும் அவர்கள் எம்முடன் ஒழுங்காக பழகுகிறார்களோ இல்லையோ நாம் அவர்களுடன் மரியாதையாக தான் பழகி வருகிறோம்.

உங்கள் திரி மூலம் முஸ்லிம்களுக்கும் எமக்குமான விரிசல்கள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அதற்கு உங்கள் கருத்துகளுக்கு நீங்கள் கூறும் நியாயங்களும் விளக்கங்களும் ஒரு காரணம்.

முள்ளிவாய்க்காலில் நான் தமிழர்களின் வாக்குமூலத்தைத்தான் கேட்பேன். சிங்கள அரசு சொல்வதை அல்ல. அதே போன்று காத்தான்குடியில் என்ன நடந்தது என்று முஸ்லீம்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.

அதேபோல வீரமுனை கோவிலில் என்ன நடந்தது என்பதையும் கேளுங்கள்.

எதையும் பகுத்தறிந்து எழுத வேண்டும்.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்

வீரமுனைக் கோவிலில் என்ன நடந்தது என்பதை தமிழர்களிடம்தான் கேட்பேன். பாதிக்கப்பட்ட தரப்பு சொல்வதைத்தான் நான் செவிமடுப்பேன். யுத்தம் ஒன்றில் உண்மைகளை ஓரளவு என்றாலும் அறிந்து கொள்வதற்கு இதுதான் வழி.

வீரமுனைக் கோவிலில் என்ன நடந்தது என்பதை தமிழர்களிடம்தான் கேட்பேன். பாதிக்கப்பட்ட தரப்பு சொல்வதைத்தான் நான் செவிமடுப்பேன். யுத்தம் ஒன்றில் உண்மைகளை ஓரளவு என்றாலும் அறிந்து கொள்வதற்கு இதுதான் வழி.

இவ்வளவுநாள் நீங்கள் செவிமடுத்த உண்மைகளை வைத்து தமிழர் தரப்பை மட்டும் தான் குற்றம் சாட்டியுள்ளீர்கள். முஸ்லிம் தரப்பு பற்றி குற்றம் சாட்டவில்லை. இந்த பாகுபாடு ஏன்?

இன்றைக்கு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. தமிழர் முஸ்லீம் விரோதத்தின் காரணமாக இந்தப் பிரிவு நிரந்தரம் ஆகி விட்டது.

சிங்களவர்கள் பிரித்தார்களே ஒழிய தமிழீழத்திலிருந்து தலைவர் அதனை பிரிக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைந்தது தான் தமிழீழம். தமிழர் முஸ்லிம் போய் இப்ப வடக்கு கிழக்கு என்று ஆரம்பித்து விட்டீர்களா? :o

இன்றைக்கு வடக்குக்கு உரிமைகள் வழங்குவது பற்றி மெது மெதுவாக பேச்சுக் கிளம்புகிறது.

பேச்சு கிளம்பியதற்கே புயல் வீசுகிறதென்றால் கொஞ்சமாவது நிறைவேற்றினால் சூறாவளி எல்லோ தாக்கும்.

ஆனாலும் சிங்கள அரசாங்கம் இப்போதைக்கு எதையும் நிறைவேற்றாது அல்லது நிறைவேற்ற விடாது. ஆனால் நிறைவேற்றுவது போல் பாசாங்கு செய்யும்.

தமிழீழப் போராட்டத்திற்கு பெரும் உயிர்க்கொடைகளை தந்த கிழக்கு வாழ் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி பெரும் கவலை கொள்கிறேன்.

கருணா பிரிய முன்னர் பலர் தமிழீழ போராட்டத்திற்காக தமது உயிரை கொடுத்திருந்தார்கள். கருணா பிரிந்த பின் பலர் கருணாவுடன் சென்று விட்டாலும் சிலர் பின்னரும் வன்னியில் இருந்தார்கள். சிலர் கருணாவுடன் சென்றுவிட்டு பின்னர் உண்மை நிலையறிந்து திரும்ப வன்னிக்கு வந்தார்கள். இவர்களை நாங்கள் யாரும் என்றும் மறக்க மாட்டோம்.

ஆனால் கருணாவுக்கு ஒரு நாள் அழிவு நிச்சயம். அது சிங்கள அரசாங்கத்தால் கூட நடக்கலாம்.

இங்கு கிழக்கு வாழ் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கொடுக்க மாட்டோம் என்று யார் சொன்னது? ஏன் நீங்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள்?

Edited by காதல்

அப்படியாயின், ஒருபக்கச் சார்பாக காத்தான்குடிப் படுகொலை மாத்திரம் பேசாமல் நடந்த விடயங்களை முழுவதுமாக அறிந்து கொண்டு எழுத வேண்டும். தெரியாவிடினும், அந்தக் காலத்தில் வீரமுனைப் பிள்ளையார் கோவிலில் நடந்த சம்பவங்கள் இணையங்களில் தேடிப் பார்த்தாலாவது கிடைக்கும். அந்த நேரத்தில் நடந்த படுகொலைகளை மறைத்து விட்டு ஒன்றை மாத்திரம் தூக்கிப் பிடிப்பது சரியல்ல.

  • தொடங்கியவர்

முஸ்லீம்கள் செய்த குற்றங்களை பட்டியல் இட்டுக் கொண்டு, அவர்களுடன் ஒற்றுமையாக இருங்கள் என்று எப்படி தமிழர்களைக் கேட்க முடியும்?

ஒரு தமிழனாக மற்றைய தமிழர்களுடன் உரையாடும் போது, எங்கள் தரப்பில் உள்ள தவறுகளை பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

நடந்தவற்றை மறந்து விடுங்கள் என்று சொல்லவில்லை. இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்பை வளர்க்காதீர்கள். எமது தாய் மொழியைப் பேசுகின்ற முஸ்லீம் சமூகம் பற்றிய இனவாத எழுத்துக்களை பொதுவில் வைக்காதீர்கள்.

சிங்களத்தின் செயற்பாடுகள் எங்களை ஒற்றுமைப்படுத்தும். சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்

சரி அண்ணா,

எங்கள் தவறுகளை நாங்கள் உணர்ந்து விட்டம். இனி நீங்கள் முஸ்லிம்கள் செய்த தவறுகளை உணர சொல்லி அவர்களுக்கு வகுப்பெடுங்கள். (அங்கு எங்கள் தவறுகளை சொல்ல கூடாது. சொன்னால் உங்கள் கூற்றை நீங்களே பொய்யாக்கி விடுவீர்கள்.)

அதுக்கு பிறகு அவர்கள் நிலைப்பாடு என்ன என்று இங்கு ஆதாரத்தோட வந்து எழுதுங்கோ. அதற்கு முன் நீங்கள் இங்கு ஏதாவது கருத்து எழுதினீங்கள் எண்டால் அவர்கள் தான் எம்முடன் சேர மறுக்கிறார்கள் என்று நாம் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று ஒத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

இங்கே,இதனால் ஈழத்தமிழரின் பிரச்சனைகள்,உரிமைகள் ஐதாக்கப்படுகின்றன.

முஸ்லீம்கள் செய்த குற்றங்களை பட்டியல் இட்டுக் கொண்டு, அவர்களுடன் ஒற்றுமையாக இருங்கள் என்று எப்படி தமிழர்களைக் கேட்க முடியும்?

ஒரு தமிழனாக மற்றைய தமிழர்களுடன் உரையாடும் போது, எங்கள் தரப்பில் உள்ள தவறுகளை பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

நடந்தவற்றை மறந்து விடுங்கள் என்று சொல்லவில்லை. இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்பை வளர்க்காதீர்கள். எமது தாய் மொழியைப் பேசுகின்ற முஸ்லீம் சமூகம் பற்றிய இனவாத எழுத்துக்களை பொதுவில் வைக்காதீர்கள்.

சிங்களத்தின் செயற்பாடுகள் எங்களை ஒற்றுமைப்படுத்தும். சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்

தமிழர்களையே ஒரு இலக்கு நோக்கி ஒன்று சேர்க்க முடியவில்லை. ஆளாளுக்கு பிரிந்து நிற்கின்றார்கள். இந்தக்கேவலத்தில் முஸ்லீம்களுடன் கைகோக்கவில்லை என்று கவலைப்படுகின்றீர்கள்.

இந்த விவாதம் தனி அலகு பற்றி சுழல்வதை நான் அவ்வளவாக விரும்பவில்லை.(ஏன் கோத்தா கேள்விப்பட்டால் கொலை பண்ணி போடுவாரா?) தமிழீழம் என்கின்ற ஒன்று அமையுமாக இருந்தால் முஸ்லீம்களுக்கு தனி அலகு அவசியம் என்பதை மட்டுமே நான் சொன்னது. தமிழீழம் அமைவதற்கான சாத்தியங்கள் மிகத் தொலைவிற்கு சென்று விட்ட நிலையில், தனி அலகு பற்றி தொடர்ந்து பேச வேண்டி வந்தது நான் எதிர்பாராத ஒன்று (இந்த திரியை தொடங்கதக்க தகமை ஆரம்பம் முதல் தங்களிடன் இருக்கவில்லை ஆனால் அதை ஒத்துக்கொள்ளும் பெரும்தன்மையான மனநிலை இல்லை)..

தமிழீழம் கிடைக்காது என்பதால் கமீதும் மற்றைய முஸ்லீம் தலைவர்களும் தனியலகுக் கோரிக்கையை புறம் தள்ளிவைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டமைப்புடன் தீர்வுக்காக சேர்ந்து இயங்க சந்தர்ப்பம் ஏற்படுமா?

ஆனால் ஒரு பேச்சுக்கு தமிழீழம் கிடைக்கிற சந்தர்ப்பம் இருந்தால் தொடர்ந்து தனி அலகு வேண்டுமா? அப்போது தமிழீழம் கிடைக்க என்று தொடர்ந்து போராடுபவர்கள் தொடர்ந்து தனி அலகு பற்றிக்கதைக்க வேண்டுமா அல்லது அப்படி பேசக்ககூடாத?

ஒரு நோக்கத்துக்காக ஒரு புதிய திரி ஆரம்பித்தீர்கள். அதில் கனதியான வரைவிலக்கணத்துடன் தொடக்கத்தை வைத்தீர்கள். முஸ்லீம்களுக்கு தனி அலகு தேவையில்லையின் எதற்கு இந்த பிரிவினைத்திரி ஆரம்பிக்கபட்டது? கோத்தா தரும் பணத்திற்கு ஏதாவது செய்தால்த்தான் உயிர்வாழ முடியும் என்றா?

தொடர்ந்து சறுக்கி சறுக்கி பிரிவினை விதைக்காமல்

இலங்கை முஸ்லீகளுக்கு பிரச்சனை இருந்தால் அவற்றை தயவு செய்து

1.

2.

3.

...

என்று தரவும்.

இவற்றை ஏன் தமிழர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை

1.

2.

3.

.....

என்று தரவும்.

முஸ்லீம் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை

1.

2.

3.

..

என்று தரவும்.

தயவு செய்து தமிழீழம் கிடைக்காததால் முஸ்லீம்களுக்கு தனி அலகு தேவையில்லை என்ற

கருத்தை முஸ்லீம்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுடன் சேர்த்து விளங்கவைக்கவும். அதாவது முஸ்லீம்களுக்கு இனம் சம்பந்தமான பிரச்சனை தமிழருடன் மட்டும்தான் என்பதாலா தனி நாடு கிடைக்காதென்பதால் தனி அலகு தேவை இல்லாமல் ஆகிறது. அப்படியானால் வடக்கு மட்டும் பிரிந்து போனால் கிழக்கு அதில் சேர வேண்டுமா இல்லையா?

1.முஸ்லீம்கள் தம்மீது தழிழர்களின் மேலானண்மையை தெரிய வந்திருக்கிறார்கள். 2..தமீழம் கிடைக்காது, 3. முஸ்லீம்கள் தமிழரிடமிருந்து (தமிழர் பாடம் தெரியா வாத்தியார் என்று நினைக்கிறேன்) எப்படி ஆழும் வர்க்கத்தை அடிவருடி தமது அலுவல்களை செய்வது என்று கற்றுகொண்டிருக்கிறார்கள். 4. அவர்களுக்கு தனி அலகு தேவை இல்லை. 5. தமிழர்-சிங்களவர் விடையத்தில் தமிழர்களை நம்பலாம். 6. தமிழர்-முஸ்லீம் விவாகாரத்தில் தமிழர்களை நம்ப முடியாது. இந்த குழப்பகரமான தத்துவங்களினூடு எப்படி தமிழர்கள் தமது தேவைக்காக ஜனநாயக முறையில் தெரிவு செய்த கூட்டமைப்பு, முஸ்லீம்களைச்சேர்த்து அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்.

இன்றைக்கு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. தமிழர் முஸ்லீம் விரோதத்தின் காரணமாக இந்தப் பிரிவு நிரந்தரம் ஆகி விட்டது.

தயவு செய்து இதை விளக்கவும். ஏன் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது? யார் இணைத்தது? ஏன் பிரிக்கப்பட்டது?. யார் பிரித்தது? "யாராவது பிரிதலுக்கு தூபம் போட்டார்கள்? தமிழர்-முஸ்லீம் விரோதம் என்றால் என்ன? இதில் யார் நல்லவர்கள்; யார் கெட்டவர்கள். இதில் யாருக்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும்? இதில் யார் திரும்ப இணைவதைத் தடுப்பது?

இன்றைக்கு வடக்குக்கு உரிமைகள் வழங்குவது பற்றி மெது மெதுவாக பேச்சுக் கிளம்புகிறது. தமிழீழப் போராட்டத்திற்கு பெரும் உயிர்க்கொடைகளை தந்த கிழக்கு வாழ் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி பெரும் கவலை கொள்கிறேன்.

வடக்கில் யார் இருக்கிறார்கள்? யார் வடக்கிற்கு உரிமைகள் வழங்குவதுபற்றி பேசுவது. அந்த பேச்சின் வடிவம் எங்கே காணப்படுகிறது. அவர்கள் உரிமை என்றால் என்னவாக வரையறுக்கிறார்கள்? இவர்கள் எப்போது மெல்ல மெல்ல உரிமை பேச்சை ஆரம்பிக்க தொடங்கினார்கள்? எதற்காக கிழக்கு வாழ் தமிழர் உயிர்கொடை கொடுக்க வந்தார்கள்? தமிழீழம் என்றால் அது கிழக்கா அல்லது வடக்கா அது வடக்கு-கிழக்கு இணைந்ததா? நீங்கள் இந்த கருத்தை கூறவருபவர்கள்(யாழ் உறவுகள்) கிழக்குக்கு உரிமை கிடைப்பதை தடை செய்கிறார்களா? சம்பந்தர், யோகேஸ்வரன் அரியனேந்திரன் போன்றோர் வடக்குக்கு மட்டும் உரிமை வேண்டும் என்கிறார்களா? இதுவரையில் யாருடன் முஸ்லீம்கள் தனியலகு பேச்சுவார்த்திகளை எடுத்திருக்கிற்றர்கள்?

எமக்கு கிழக்கு வேண்டும் என்றால், முஸ்லீம்களோடு இணைந்து போவதுதான் ஒரே வழி. இணைவதற்கு தேவையானது இரண்டு சமூகங்களும் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றின் உரிமையை மற்றைய சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

நாம் யார்? எமக்கு ஏன் கிழக்கு வேண்டும். முஸ்லீம்களுடன் இணைவது என்றால் என்ன? முஸ்லீம்களுடன் இணைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

இனம் என்பதை உலகம் இப்படி பொதுவாக வரையறுக்கிறது: ஒரு தனித்துவமான மொழியை பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட, தனித்துவமான ஒரு மக்கள் கூட்டத்தை "இனம்" என்று சொல்கின்றது.

குறிப்பிட்ட இனம் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியமான நிலப் பரப்பையும் கொண்டிருந்தால், அது ஒரு தேசிய இனம் என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகமைகளை கொண்டிருக்கும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசாது, பல மொழிகளைப் பேசுகின்ற தேசியங்களும் உலகில் இருக்கின்றன. இவர்களை ஒரே விதமான பிரச்சனையும், ஒன்றாய் கூடியதன் பயனாய் உருவாகும் தனித்துவம் மிக்க பண்பாடும் ஓரே தேசியமாக மிளிரச் செய்யும். உ-ம்: அமெரிக்க தேசியம்

எதற்கு இந்த தலைப்பும் வரவிலக்கணங்களும்? இதில் இருந்து முஸ்லீம் மக்கள் ஒரு சமூகமா, ஒரு இனமா அல்லது ஒரு தேசியமா? தனித்துவமான சமூகத்திற்கா, இனத்திற்கா அல்லது தேசியத்திற்கா தனி அலகு தேவைப்பட்டது. தனி அலகு என்றால் என்ன? தனி அலகு என்றல் அது தனி நாட்டுடன் எப்படி ஒப்பிடப்படும்.

சாதி என்பது மேலாண்மை நடத்தையா இல்லையா? சாதிப்பிரிவினை சமூக பாகுபாடா?, இனப்பாகுபாடா அல்லது தேசியப் பாகுபாடா? ஒரு சாதிக்குள் இன்னொருவர் மனச் சுதந்திரமாக திருமணம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்களா? தீவாருடன் உள்நாட்டவராக பேதம் காட்டுபவர்கள் சுதந்திரமாக திருமணம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்களா? தீவார் என்று பாகுபாடுகாட்டுவது சமூகத்தையா, இனத்தையா அல்லது தேசியத்தையா? இந்த வகை ஆராய்தலில் படி தீவார் என்பது சாதிப்பகுபாடா இல்லையா? சாதி மேலாண்மையை உணருவதாக கூறும் தீவார் (சமூக, இன, தேசியத்தினர்) தனி அலகு கேட்பது ஏன் பொருத்தமற்றது? உங்களால் அவர்கள் தாக்கப்படுபவர்கள் என்பதால் உங்களிடம் நான் அது சம்பந்தாமாக கருத்துக் கேலாமலும், உங்களை அதில் நான் நம்பாமலும், தமக்கு தனி அலகு வேண்டும் என்று கேட்கும் தீவருக்கு நான் ஆதரவு கொடுத்தால் என்ன தவறு?

கேள்விகள் நிறைய தொடந்து வர இருப்பதால் திரியை ஆரம்பித்து இலங்கை முஸ்லீம்கள் தனி (தேசியம், இனம், சமூகம்) என்று விளங்க வைக்க வந்த நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தந்து விளங்கவைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எழுதப்பட்டவைகளை முழுவதுமாக வாசித்திருந்தால் சில கேள்விகளை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஒரு தனியான மதமாக இருப்பதனாலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்து இருப்பதனாலேயோ, அனைவருக்கும் தனியான அதிகார அலகு கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.

"எங்க ஏரியா, உள்ள வராத" பிரச்சனை எல்லா இடங்களிலும் இருக்கும். அதற்காக தனி அலகு கொடுப்பது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். (ஆனால் "குழு ஜனநாயகம்" என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருவும் தன்னைத்தானே நிர்வாகிக்கலாம் என்கின்ற யோசினையை சில அரசியல் அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அது தனியான ஒரு விடயம்)

நாத்திகனான சாத்திரி தன்னை தமிழனாக, தமிழ் தேசியவாதியாக வெளிப்படுத்துகின்றார். தீவாராகிய விசுகுவும் தன்னை தமிழனாக, தமிழ் தேசியவாதியாக உணருகின்றார். இங்கே கருத்துச் சொன்ன மற்றைய சைவத் தமிழர்களும் அப்படியே உணர்கின்றார்கள். கிறிஸ்தவத் தமிழர்களும் தமிழ்த் தேசியத்தில் நிற்கின்றார்கள்.

முஸ்லீம்கள் மட்டும்தான் தமிழ்தேசியத்தை எதிர்கிறார்கள் என்கிறீர்களா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

முஸ்லீம்கள் செய்த குற்றங்களை பட்டியல் இட்டுக் கொண்டு, அவர்களுடன் ஒற்றுமையாக இருங்கள் என்று எப்படி தமிழர்களைக் கேட்க முடியும்?

ஒரு தமிழனாக மற்றைய தமிழர்களுடன் உரையாடும் போது, எங்கள் தரப்பில் உள்ள தவறுகளை பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

எதனால் தமிழர் மீது குற்றங்கள் முன் வைக்கப்பட்டது?

அதை விட மிக முக்கியாமாக தமது நிலப்பரப்பின் அயலில் வாழ்கின்ற தமிழர்கள் பற்றிய அச்சத்தையும் (எந்த வகையான அச்சம்? அது வர என்ன நடந்தது? அதில் தமிழ்ர் விட்ட தவறு என்ன?)கொண்டிருக்கின்றன . தமிழர்களும் முஸ்லீம்கள் பற்றிய தவறான எண்ணங்களையும், அச்சங்களையும்(இது அச்சம் இல்லை. உண்மை சம்பவங்கள். அவர்கள் நீங்களே அவர்களின் தவறுகளை நாம் பேசக்கூடாது என்று தட்டிக் கழிக்கிறீர்கள். ) அத்தோடு அவர்கள் தமக்கு கீழ் வாழ வேண்டும் என்கின்ற மேலாதிக்க மனப்பாங்கையும் கொண்டிருக்கின்றனர்(இதை எந்த ஆதரதுடன் நிறுவமுடியும். தமிழர் கூறும் குற்றங்களை தட்டிக்கழிக்கும் நல்ல மனிதர் இப்படி ஒரு பொய் வக்கீலாக எப்படி மாற முடியுமா? இட்டுக்கட்டாகா நம்மீது இப்படி குறை கூறாமல் இருக்க முடியுமா? ).

எமது தாய் மொழியைப் பேசுகின்ற முஸ்லீம் சமூகம் பற்றிய இனவாத எழுத்துக்களை பொதுவில் வைக்காதீர்கள்.

இந்த திரியை ஆரம்பித்த நோக்கம் இதுவா? இதை ஏன் இங்கே சொல்கிறீர்கள். இப்படி பொதுவில் குறை கூறாமல் சொல்ல வேண்டி வந்த சந்தர்பங்களை கூறி கூர முடியுமா?

முன் பின் தொடர்பில்லாமால் யாராவது ஒரு திரியை ஆரம்பித்து முஸ்லீம்கள் மீது இனவாத கருத்துகளை எழுதி இருக்கிறார்களா?

உதாரணத்திற்கு ஐ.நா பிரேரணையை முழு இலங்கை முஸ்லீம்களும் பலவிதமான போராட்டங்களை உள்நாட்டில் நடத்தி எதிர்த்தார்கள். இதன் போது முழு முஸ்லீம் சமூகத்தவர்களும் இன அழிப்பு இலங்கையால் செய்யப்படவில்லை என்று பொய் நிரூபணங்கள் வைத்தார்கள். அகில முஸ்லீம் நாடுகளின் பலத்தை(தமிழ் நாட்டு முஸ்லீம்களைத்தவிர) ஐ.நவிக்கு கொண்டு வந்திருந்தார்கள். இதை தமிழர் எதிர்க்கும் போது முழு முஸ்லீம் சமூகத்தையும் எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

Posted 10 June 2012 - 05:24 PM

முஸ்லீம்களுக்கு இரண்டு இனங்களாலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு தம்மை பாதுகாக்கின்ற உரிமை இருக்கின்றது

இது பொய் குற்றச்சாட்டு. மாறக தமிழரைத்தான் மற்றைய இரண்டு இனங்களும் ஒன்றாக சேர்ந்து ஒதுக்குகின்றன.

Edited by மல்லையூரான்

"எங்க ஏரியா, உள்ள வராத" பிரச்சனை எல்லா இடங்களிலும் இருக்கும். அதற்காக தனி அலகு கொடுப்பது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். (ஆனால் "குழு ஜனநாயகம்" என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருவும் தன்னைத்தானே நிர்வாகிக்கலாம் என்கின்ற யோசினையை சில அரசியல் அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அது தனியான ஒரு விடயம்)

முஸ்லிம்களுக்கு தனி அலகு என்றால், கிறிஸ்தவர்களுக்கும் அந்த உரிமையுண்டு. கிறிஸ்தவர்களுக்கும் தனி அலகு என்றால் ஒவ்வொரு தெருவில் வாழும் மனிதனுக்கும் அந்த உரிமையுண்டு. இதைத்தான் ஆரம்பத்திலிருந்தே கிண்டலாகச் எழுதினேன். இது உங்களுக்கு விளங்கியிருக்குமென நினைத்தேன்.

வன்னிப் போர் நடக்கும் பொழுது எதையும் பகுத்தறியாது இராணுவ / அரசியல் ஆய்வுகள் மேற்கொண்ட மேதைகள் எதிர்கால அரசியல் தீர்வு பற்றி ஆராயமுற்படும் பொழுது அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே பேசலாம்.

இப்பொழுது ஆராய முற்பட்ட விடயங்களைப் அப்பொழுதே பகுத்தறிந்து தேசியத் தலைவர் அல்லது புலத்து செயல்பாட்டாளர்கள் புரிந்து கொள்ளும் விதமாக கூறியிருக்கலாமே? ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கலாமே

  • தொடங்கியவர்

மல்லையூரான்,

உங்களிடம் ஒரு வேண்டுகோள். என்னுடைய கருத்துக்களை மேற்கோள்காட்டுகின்ற பொழுது அந்த மேற்கோளுக்குள் உங்கள் கருத்தை இணைக்காதீர்கள். என்னுடைய முதலாவாது கருத்தை வாசிக்காது மேற்கோளை மட்டும் வாசிப்பவர்கள் உங்கள் கருத்தையும் என்னுடையதாக நினைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

மற்றையபடி நிறைய கேள்விகள் கேட்டிருக்கின்றீர்கள். விவாதத்தை திசை திருப்பக்கூடிய விடயங்களை தவிர்த்து கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன். ஆரோக்கியமான முறையில் அனைவருடனும் உரையாடவே விரும்புகிறேன்.

கோத்தா தந்த பணத்திற்கு எழுதுகிறேன் போன்ற கருத்துக்கள் அரோக்கியமற்றவை. விவாதத்தை திசை திருப்புதலையும் சீண்டுதலையும் நோக்கமாக கொண்டவை. இவைகளை தவிர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்.

கோத்தா தந்த பணத்திற்கு எழுதுகிறேன் போன்ற கருத்துக்கள் அரோக்கியமற்றவை. விவாதத்தை திசை திருப்புதலையும் சீண்டுதலையும் நோக்கமாக கொண்டவை. இவைகளை தவிர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்.

எல்லாத்தடையங்களும் இது சீண்டவென்று ஆரம்பித்த திரி என்று சுட்டுவதால், இந்த தடவை தவிர்க்க முடியவில்லை. நிச்சயமாக இனிமேல் பார்த்துக்கொள்ளலாம்.

இலங்கை முஸ்லீம்களை தனிச் சமுதாயமாக காட்டி ஒரு திரியை ஆரம்பித்து அதில் இலங்கை முஸ்லீம்கள் மீது தமிழர் 100 வருடங்களாக மேலாதிக்க நிலைகளை கொண்டு இருக்கிறார்கள் என்று கட்டுக்கதை எழுதுவதின் தனி 0ஒரே நோக்கம் யாழில் ஆரோக்கியமில்லாத விவாதங்களை தூண்டவே என்றுதான் நியாயப்படுத்த தோன்றும். தமிழரசுக்கடசி எப்போதுமே முஸ்லீம் வாக்காளர்களை 65 வருடகாலமாக தனது நிரையில் வைத்திருக்கும் போது 100 வருடங்களாக தமிழர் இலங்கை முஸ்லீம்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவது என்பது வேண்டுமென்றே சீண்ட வைத்த கருத்து என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதைப்போலவேதான் ரிசாட் பதியுதின், மன்னார் ஆயர்மீதும் தாக்குதல் செய்துவிட்டு இப்போது ஏமாற்று பேச்சுக்கள் பேசியிருக்கிறார். மேலும் தனி அலகு பற்றி இங்கே எழுதி, அதன் மீது வாசகர்கள் கருத்து எழுதிய பின், மன்னிப்பு கேளாமல் அதை பின்னெடுப்பது, அதன் மீது கருத்து எழுதியவர்களை ஏமாற்றம் அடைய செய்து அலுக்கவைப்பதாகும். இது யாழின் விதியான எழுதிய கருத்தை மற்றவர்கள் கருத்து எழுதியபின் நீக்க முடியாது என்ற விதியை பின்வழத்தால் மீறுவது. திரியின் ஆரம்பத்தில் முஸ்லீமகளுக்கான தனி அலகு கோரிக்கை கட்டாயம் தமிழர்களால் பரிசீலிக்க படவேண்டும் (-அது மட்டுமல்ல முஸ்லீம்கள் சார்பில் பரிசீக்கப்படவேண்டும் என்று திரியின் ஆரம்பத்தில் கேட்கப்பட்டிருக்கிறது- விவாதம் தொடரும்போது ஒவ்வொன்றாக எடுக்க முடியும்) என்றபின், எழுதிய கருத்தின் மீது மற்றவர்கள் கருத்து எழுதவிடாமல் தடுப்பது சுத்த சர்வாதிகாரத்தனமாக பார்க்கப்படவேண்டுமும். சர்வாதிகார கருத்துக்கள் கருத்துகளத்திற்கு ஆரோக்கியமானவை அல்ல. அவற்றை செய்வோர் முன் வந்து மன்னிப்பு கேட்க தயங்க கூடாது.

சம்பந்தர், தான் ஐக்கிய இலங்கைக்குள் காணத்தக்க தீர்வு ஒன்றுக்காகவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபாட்டிருப்பதாக அரசாங்கத்துக்கு மட்டுமல்ல வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கும் தனது வாக்கை கொடுத்திருக்கிறார் . நான் சந்தோசமாக இந்த விவாதத்தை தொடர்வதற்கு, இறுதியாக சொல்லமுடியுமா, சம்பந்தருடன் முஸ்லீம்கள் பேச்சுவார்த்தையின் போது இனிமேல் தனி அலகு விவாகாரத்தை கொண்டுவந்தால் அது நிச்சயமாக வேண்டப்படாததுதான் என்று.

நான் உங்கள் கருதுக்கிடையில் எனது கருத்தை எழுதும் போது அதை வேறு படுத்திக்காடடியிருக்கிறேன். மேலும் விவாதத்தை வாசிப்போர், முழுதாக வாசிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் அபிப்பிராயம். அதுவே எனதும் கருத்து. உங்கள் கருத்தை வாசித்துவிட்டு வந்து என் அவதாருக்கு கீழ்வரும் கருத்துகளை உங்கள் கருதுக்களாக நினைக்கிறார்கள் என்பது குழந்தை பிள்ளைத்தனம். நிச்சயமாக உங்கள் கருத்தை தேடுவோர் உங்கள் அவதாருக்குகீழத்தான் படித்தாக வேண்டும். நான் எனது அவதாருக்கு கீழ் போடுபவற்றை உங்கள் கருத்துடன் ஒப்பிட்டு உண்மைகளை அலசிக்கண்டுபிடிப்பது வாசகர்களுக்கு தேவையான ஆய்வு ஆற்றல். அது இல்லோரால் உண்மைகளை காணமுடியாது.

இங்கே எழுதப்பட்டவைகளை முழுவதுமாக வாசித்திருந்தால் சில கேள்விகளை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஒரு தனியான மதமாக இருப்பதனாலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்து இருப்பதனாலேயோ, அனைவருக்கும் தனியான அதிகார அலகு கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.

"எங்க ஏரியா, உள்ள வராத" பிரச்சனை எல்லா இடங்களிலும் இருக்கும். அதற்காக தனி அலகு கொடுப்பது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். (ஆனால் "குழு ஜனநாயகம்" என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருவும் தன்னைத்தானே நிர்வாகிக்கலாம் என்கின்ற யோசினையை சில அரசியல் அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அது தனியான ஒரு விடயம்)

நாத்திகனான சாத்திரி தன்னை தமிழனாக, தமிழ் தேசியவாதியாக வெளிப்படுத்துகின்றார். தீவாராகிய விசுகுவும் தன்னை தமிழனாக, தமிழ் தேசியவாதியாக உணருகின்றார். இங்கே கருத்துச் சொன்ன மற்றைய சைவத் தமிழர்களும் அப்படியே உணர்கின்றார்கள். கிறிஸ்தவத் தமிழர்களும் தமிழ்த் தேசியத்தில் நிற்கின்றார்கள்.

இங்கே எதற்கு தனி அலகு?

திரி தொடங்கும் தலைப்பு "இலங்கை முஸ்லீம்கள் தனித்துவம் மிக்க சமுத்தாயம்" என்றுதான். அதை திரும்ப பெறாமல் சொன்னவற்றை மறுதலிப்பது விவதம் அல்ல. வசனங்களை கருத்து சேர்த்து எழுதவும். இங்கே சாத்தியார், விசு அண்ணா போன்றவர்கள் செய்தது இலங்கை முஸ்லீம்களுக்கு தமிழரின் மேலாண்மையால் துயரங்கள் நிகழ்கின்றதென்பது மிகைப்படுத்த பட்ட பிரச்சாரம் என்பதும் அதனால் அவர்களுக்கு தனி அலகு என்பது தேவையற்றதும் என்பதை உதாரணகள் காட்டி நிறுவ முயன்ற முயற்சி. ஆனல் அந்த விவாதத்தை திசை திருப்பி, இந்த பதிலில், அவர்களை குழந்தை பிள்ளைத்தனமாக எடுத்து அவர்களுக்கே அவர்களின் நிலைகளுக்கு தனி அலகு தேவை இல்லை என்று விளங்கப்படுத்த பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் சமய நம்பிக்கைக்கோ அல்லது சாதிப்பாகுபாட்டுக்கோ தீர்வாக தனி அலகை உண்மையில் கேட்கிறார்கள் என பொருள் கொண்டு பதில் அழிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல அவர்கள் திரியின் அடிப்படை நோக்கமாக எடுத்துக்கொண்ட கருதுகோளான " இலங்கை முஸ்லீம்கள் - தனித்துவமிக்க சமூகம், ஆகவே அவர்களுக்கு இலங்கையில் சிங்களவர்களிடமிருந்து தமிழர்களுடன் சார்பில்லாத தனித்துவம் மிக்க தீர்வான தனி அலகுத் தீர்வு தான் வேண்டும்" என்ற அனுமானம் விவாதத்தின் இடைநடுவில் கைவிடப்பட்டு திரி திசை திருப்பப்பட்டும்விட்டது. இப்போது தலைப்பு ஒரு பொறிக்கிடங்காகவே தொழில்படுகிறது.

ஏற்கனவே இங்கே எழுதிய கருத்துக்களை விளக்கும்படிதான் நான் கேட்டிருந்தேன். அதற்கு தவணை போடுவது பதிலுக்காக யாரையாவது எதிர்பார்திருக்க வேண்டிய நிலையும் இருக்கா என்ற கேள்வியையும் நான் மேலதிகமாக கேட்க வேண்டிய இடத்திற்கு அழைத்து வருகிறது. உதாரணமாக இலங்கையில் இருந்து யாராவது பதில்களை அனுப்பி வைக்க வேண்டியிருக்கா என்பதையும் கூறவும். நான் அப்படி சந்தேகிக்கும் பதில்கள் மீது, எனது சந்தேகத்தை மட்டும் தான் வெளிப்படையாக கூறுவேனே அல்லாமல் அவற்றின் மீது கருத்து கூறுவதை தவிர்த்துக் கொள்வேன். அத்தாவது யாழில் அங்கத்துவம் இல்லாதவர் ஒருவருடனோ அல்லது ஒரு நிறுவனத்துடனோ கருத்துப்பரிமாற்றம் செய்ய நான் தயாரில்லை. இலனகை நிறுவனங்கள் தமது கேள்விகளை பாராளுமன்றத்திலோ அல்லது அல்லது கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தைகளின் போது மட்டும்தான் வைத்துகொள்ள வேண்டும். யாழில் அல்ல. யாழில் எழுதும் உறவு தனது தனித்துவத்தை கருத்துக்களில் வெளிக்காட்டவேண்டும். அதற்குத்தான் நான் பதில் அளிப்பேன். எனவே எனது கேள்விகளுக்கான பதில்கள் திரியின் நோக்கத்தை வெளிப்படையாக சொல்லி அதை நிலை நிறுத்த வேண்டும் என்பது கட்டாயம். 146,000 மக்கள் இலங்கை முஸ்லீம் மக்களின் துரோகத்தனமான புலனாய்வு சதிகளினால் துடிக்க பதைக்க கொல்லப்படிருக்கிறார்கள் என்று தமிழர்கள் ஆதங்கப்படும் போது அவர்களின் ஆதங்கத்தை உதைத்து தள்ளிவிட்டு, கொலையில் தமது பங்களிப்பை மறைப்பதற்காக தமது மூலாதாரங்களையெல்லாம் போட்டு, போர் குற்ற விசாரணை சம்பந்தமான ஐ.நா பிரேணையை தோற்கடிக்க முயன்றபின், சிங்களவரிடம் இருந்து பிரச்சனைகள் தோன்றத்தொடங்கிய பின், தழர்களின் மேலாதிக்கத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுவிட்டர்கள் என்றோ அல்லது அந்த பொய்யை ஏற்று தமிழர்கள், முஸ்ளீம்கள் இப்போது சிங்களவர்களிடம் படத்தொடங்கும் பாடுகளுக்கு தோள் கொடுக்க வேண்டுமென்ற வரட்டு சாமாதானங்களுக்கோ இடம் கொடுக்க வேண்டு மென்ற வாதங்களை நான் எதிபார்க்கவில்லை, அவற்றை சட்டைசெய்யப்போவதுமில்லை. இது கருத்துக்களம் என்பதால் மனச்சுத்தியாக வருகிறது என்று கருதாத கருதுக்களை மனம் நோகாத பாதைகள்தான் தேடி எதிர்க்க வேண்டும் என்ற வாதம் ஏற்க முடியாதது. இனிப்பு தந்து ஏமாற்ற வரும் பிள்ளைபிடிகாரனை கண்டால் பிள்ளைகள் பலபாதைகளையும் பாவித்து துரத்த வேண்டும் எனபதுதான் யாழ்ப்பாணத்தில் பள்ளிபோகும் வயதுகளில் சொல்லித் தந்த பாடம்.

Edited by மல்லையூரான்

மல்லையூரான்,

உங்களிடம் ஒரு வேண்டுகோள். என்னுடைய கருத்துக்களை மேற்கோள்காட்டுகின்ற பொழுது அந்த மேற்கோளுக்குள் உங்கள் கருத்தை இணைக்காதீர்கள். என்னுடைய முதலாவாது கருத்தை வாசிக்காது மேற்கோளை மட்டும் வாசிப்பவர்கள் உங்கள் கருத்தையும் என்னுடையதாக நினைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

மற்றையபடி நிறைய கேள்விகள் கேட்டிருக்கின்றீர்கள். விவாதத்தை திசை திருப்பக்கூடிய விடயங்களை தவிர்த்து கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன். ஆரோக்கியமான முறையில் அனைவருடனும் உரையாடவே விரும்புகிறேன்.

கோத்தா தந்த பணத்திற்கு எழுதுகிறேன் போன்ற கருத்துக்கள் அரோக்கியமற்றவை. விவாதத்தை திசை திருப்புதலையும் சீண்டுதலையும் நோக்கமாக கொண்டவை. இவைகளை தவிர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்.

மல்லையூரான் அண்ணாவுக்கு முன் நான் சொன்னதை நீங்கள் உரிய முறையில் செயல்படுத்தவில்லை. செவிமடுக்கவில்லை. இதிலிருந்து நாம் சொன்னது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்.

கேட்டுக்கொள்ளுங்கப்பா...

முஸ்லிம்கள் தான் எம்முடன் சேர மறுக்கிறார்கள் என்று நாம் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று சபேசன் அண்ணா மறைமுகமாக ஒத்துக்கொண்டு விட்டார். :lol: :lol:

சரி அண்ணா,

எங்கள் தவறுகளை நாங்கள் உணர்ந்து விட்டம். இனி நீங்கள் முஸ்லிம்கள் செய்த தவறுகளை உணர சொல்லி அவர்களுக்கு வகுப்பெடுங்கள். (அங்கு எங்கள் தவறுகளை சொல்ல கூடாது. சொன்னால் உங்கள் கூற்றை நீங்களே பொய்யாக்கி விடுவீர்கள்.)

அதுக்கு பிறகு அவர்கள் நிலைப்பாடு என்ன என்று இங்கு ஆதாரத்தோட வந்து எழுதுங்கோ. அதற்கு முன் நீங்கள் இங்கு ஏதாவது கருத்து எழுதினீங்கள் எண்டால் அவர்கள் தான் எம்முடன் சேர மறுக்கிறார்கள் என்று நாம் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று ஒத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். :rolleyes:

Edited by காதல்

உங்களிடம் ஒரு வேண்டுகோள். என்னுடைய கருத்துக்களை மேற்கோள்காட்டுகின்ற பொழுது அந்த மேற்கோளுக்குள் உங்கள் கருத்தை இணைக்காதீர்கள். என்னுடைய முதலாவாது கருத்தை வாசிக்காது மேற்கோளை மட்டும் வாசிப்பவர்கள் உங்கள் கருத்தையும் என்னுடையதாக நினைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

அர்ஜுன் அண்ணாவாவது ஒரு திரியில் என்னை தான் குழந்தைப்பிள்ளையோ என்று கேட்டார். இங்கு நீங்கள் அனைவரையும் குழந்தைப்பிள்ளைகள் என்று நினைத்தது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. :lol: :lol:

மல்லையூரான் அண்ணா எழுதினதையும் நீங்கள் தான் எழுதியிருப்பீர்களோ என்று நினைத்து நீங்களே ஒரு நிமிடம் குழம்பி விட்டீர்களோ?????? :lol: :lol: :lol: :lol:

மல்லையூரான் அண்ணா எழுதினதையும் நீங்கள் தான் எழுதியிருப்பீர்களோ என்று நினைத்து நீங்களே ஒரு நிமிடம் குழம்பி விட்டீர்களோ?????? :lol: :lol: :lol: :lol:

நீங்கள் அவரை விட்டுவிடுங்கள்.

சபேசன் நான் எழுதிய கருத்தை தானா எழுதியது என்று குழம்புவது எனது இன்னொரு சந்தேகத்திற்கும் வலுச்சேர்க்கிறது. அதாவது எந்த கருத்தையும் சபேசன் சிந்தித்து எழுதவில்லை என்பதே. எல்லாமே யரோதான் எழுதுவது. இதில் அவர்மட்டுமல்ல, சபேசனுக்காக எழுதிக்கொடுப்பவரும் குழம்புகிறார் என்று வைத்துகொள்ளவும் முடியும்.

அவரால், இந்த திரியில், ஆறத்தேற ஆரம்பித்த முதல் வசனம் சம்பந்தமாக நான் கேட்ட கேள்வி பலநாட்களாகியும், அதற்கு பதில் சொல்ல தவணை கேட்டுவிட்டு, இதை விட மோசமான திரிகளை வேறு இடங்களில் ஆரம்பித்து எழுதுகிறார். அதானல்த்தான் எனது சந்தேகம் இவருக்கு பதில் வேறு இடங்களில் இருந்தா வந்து சேரவேண்டுமென்பது. அந்த சந்தேகத்திற்கு தூபம் போடுவதுதான் இந்த புதிய பிரச்சனை. சபேசனுக்கு எழுதிக்கொடுப்பவர்கள்(அப்படி இருந்தால்) தாம் கொடுத்தவற்றை இவர் சரியாக பதிகிறார் என்று வைத்துகொண்டு, இவரின் பதிவை தள்ளி வந்து எனது பதிவை மட்டும் வசிக்கும் போது, தாம் எழுதிக்கொடுத்ததை சபேசன் சிதைத்தாரா அல்லது நான் கருத்து சேர்த்தேனா என்று குழம்புகிறார்கள் என்றால் அவர்கள் சபேசன் மீது கோபப்பட நியாயமுண்டு. அப்படியாயின் சபேசன் என்னை தனது கருத்தோடு எனது கருத்தை சேர்க்க விட விரும்பமாட்டார். அது மட்டுமல்ல பலர் இந்த பழக்கத்தை உடையவர்களாக இருந்தும், சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சபேசன் உறவுகள் எல்லோரையும் ஒரு புதிய விதிக்கு கட்டுப்பட அழைக்காமல் என்னை மட்டும் அதை கைவிடும் படி கேட்பது இவற்றை எழுதுவோர்கள் எனது பதிலை தேடி வாசித்து ஆர்வம் காட்டியிருக்கிறார்களா என்றுதான் என்னை சந்தேகிக்க வைக்கிறது.

எதற்கும், சபேசன் தரும் விளக்கம் போதாமல் இருப்பதால் நான் எனது முறையை மாற்ற அவசரப்படமாட்டேன். அப்படி எழுதுவது பல பல தேவை இல்லாத வசனங்களை இலகுவாக விட்டுத்தள்ள உதவுகிறது. என்வே அதை இப்போதைக்கு தொடருவதுதான் என் எண்ணம்.

எழுத்துபிழை கருத்து பிழை எல்லாவற்றோடும், நாம் இது கருத்து களம்தானே என்று போடி போக்காக எழுதி தள்ளும் போது சபேசன் மட்டும் தனது பதிவுகள் பதிந்த விறுத்தியுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு கருத்து களத்திற்கும் வெளியே இன்னொரு உபயோகம் இருக்கலாமா?

:rolleyes: :rolleyes: :rolleyes:

சபேசன் அண்ணா,

முதலில் மல்லையூரான் அண்ணா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ. பிறகு மற்றையவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ. உங்கள் சொந்த கருத்தை பதிலாக முன்வைப்பதற்கு குறிப்பிட்ட தவணை எதற்கு? :unsure: :unsure:

இனியும் பதில்சொல்லாமல் விட்டால் மல்லையூரான் அண்ணாவின் சந்தேகம் பலரையும் ஆட்கொண்டு விடும். :D

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், உங்கள் நேரமின்மையால் கருத்துக்கள் சிலவற்றை மட்டுமே வாசித்தேன். நான் வாசித்தவரை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தமிழர்களின் மனச்சாட்சியின் குரலாக தொனிக்கிறீர்கள். உங்களை சதிதிருக்கிறேனோ தெரியாது. என் மினஞ்சல் visjayapalan@gmail.com. விஜய் டிவி விருதுக்கும் துபார் தென்னிந்திய திரைப்பட விருதுக்கும் என்பெயர் நியமிக்கப் பட்டதால் நேரமின்றிபோனது. விரைவில் முழுவதையும் வாசித்துத் தொகுத்து என் கருத்தை எழுதுவேன்.

http://siima.in/nominees.html

  • தொடங்கியவர்

அப்பாடா! ஒரு மனிதராவது எனக்கு ஆதரவாக எழுதி விட்டார். இந்தக் கருத்தாடலை ஆரம்பித்த பொழுது எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. முஸ்லீம்களை மனிதர்களாக, அயலவர்களாக, சொந்தங்களாக மதிக்கின்ற தமிழர்கள் யாழ் களத்தில் இருப்பார்கள், இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தால் போதும், அவர்களும் வந்து ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை நகர்த்திச் செல்வார்கள் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நான் மட்டுமே ஒரு தரப்பில் நிற்க, மறு தரப்பில் நிறைய பேர் நின்ற மாறி மாறி கேள்விகள் தொடுக்க...கொஞ்சம் நொந்துதான் போனேன்.

நேரமில்லை என்றாலும் கவிஞர் வந்து ஆதரவாக கருத்து எழுதி விட்டுப் போயிருக்கிறார். கவிஞருக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.