Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

எனக்கு பரிசோதனை வைக்கிறீர்கள் போல் இருக்கிறது. விடுதலைப் பலிகள் பூட்டினார்கள் என்பதுதான் எனக்கு தெரியும். இதற்காக அவர்கள் திறப்புவிழா போன்று ஒரு பூட்டு விழா நடத்தி அதை ஒரு தளபதி நடத்தி வைத்தார் என்பது எனக்குத் தெரியாது.

சபேசன் உங்களை கிண்டல் அடிக்கவுமில்லை உங்களது பொது அறிவுக்கான பரிசோதனையும் இல்லை நான் கேட்ட கேள்வி.

இராணுவ அமைவிடங்களையே வரைந்த உங்களால் மாவிலாறு பூட்டப்பட்டது ஏனென்றதும் எவரால் என்றதும் நிச்சயம் தெரிந்திருக்குமென்று நினைத்து கேட்டேன். அப்போ நீங்கள் ஆய்வு செய்தது குறுட்டு வாக்கிலா ?

  • Replies 137
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியுமா என்று பொதுஅறிவு பரீட்சை வைக்கிறாரா? இதற்கு சீரியசாக பதில் சொல்வதா? அல்லது கிண்டல் அடிப்பதா? தவிர்த்து விட்டு விவாதத்தை தொடர்வதா? இப்படி நிறைய யோசித்துக் கொணடிருக்கிறேன்.

1) ஒரு ஆய்வாளர் கலாநிதி ஆகிய நீங்கள் சாதாரண பாமரர்களான எங்களை கிண்டல் அடிப்பதையும் புத்திசாதுரியமாக ஆய்வதையும் புரியாத ஏமிலாந்திகள் நாங்கள்என்பது உண்மைதான்.

2) உங்களுக்கு ஏன் பரீட்சை வைக்க வேணும் ? நீங்கள் பாலபாடமா கற்பிக்கிறீங்கள் ?

ஒரு இராணுவ ஆய்வை எழுதுகிற நீங்கள் பூட்டப்பட்ட மாவிலாறு அதன் உள்தரவு சண்டையின் ஆரம்பம் இவைபற்றி எவ்வித அறிதலும் இல்லாது எழுந்தமானமாக எழுதியதற்கு இன்று பதில் சொல்லவோ கேள்வி கேட்கவோ ஆட்களில்லை.

ஆயினும் சாகாத சாட்சியங்கள் பல இன்னும் உயிருடன் வாழ்கிறது. இதோ அதோ என்ற ஆய்வுகளைச் செய்தது நீங்களும் உங்கள் போன்ற ஆய்வாளர்களும் ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் யான் அப்படி மொழிந்தேன் என் மாற்றுக்கருத்து நண்பர் இப்படி வழிந்தார் என்றதெல்லாம் திரும்பவும் நமது பாமர மூளைகளை புதைகுழிக்கு அனுப்பவே என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

சிக்கோயினார் என்றொரு இனம் இருக்கு...அதன் குணம்குறிகள் யாருக்கும் தெரியுமா?

யாமறியோம் பராபரமே ஒருக்கா விளக்குங்கோ குமாரசாமி எல்லாருமா ஒருக்கா கேப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஏன் எமது போராட்டம் அழிவுற்றது?" என்பதற்கு ஆயிரம் கட்டுரைகள் பதில் சொல்கின்றன. ஆனாலும் படிப்பினைகளை சீர்தூக்கிப் பார்க்காமலேயே போராட்டத்தைத் தொடர்வதனால் திக்கற்றவர்களாகியுள்ளோம். மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் காலத்திலேயே வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நிலை இல்லாமல்போய் எங்கும் பெளத்தவிகாரைகளும் சிங்களக் குடியேற்றங்களும் நிரம்பியதாக இருக்கும். ஆனால் அதையும் நாங்கள் தலைவரின் தீர்க்க தரிசனம் என்று சொல்லி எங்களை நாங்களே மெச்சிக்கொண்டிருப்போம் :(

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே ஒரு தகவல். அன்றைக்கு மாவிலாறை ஏன் பூட்டினார்கள் என்பதற்கு விடுதலைப் புலிகள் தரப்பு விளக்கத்தை திரு எழிலனிடம் பெற்று பதிவு செய்த முதலாவது இணையத் தளம் என்னுடையதுதான். அதை வைத்துத்தான் மற்றைய தளங்கள் பின்பு எழுதின.

இந்த நான் முதலில் போட்டேன். என்னை பார்த்தே மற்றவர்கள் எழுதிச்சினம் என்ற நான்களே 35வருடக்கனவு முள்ளிவாய்க்காலில் சிதையக்காரணம். சமாதான காலத்துக்கு முதல் வரையும் ஒரே தேசம் ஒரே தலைவன் ஒரே கனவுடன் கட்டப்பட்ட தாயகம் என்று சமாதானம் என்ற சொல் எங்களுக்குள் புகுந்ததோ அன்றிலிருந்து குழுவாதக் கனவைக்கட்டினோம். அதுவே நான்களை உருவாக்கி அழிவைத் தந்தது.

புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயாவாத்தியார் , புலிகளின் குரல் தவபாலன் என சிலரது கைகளில் போன ஊடகத்தொடர்பு சரியான ஊடகங்களை வளர்க்காமல் வால்பிடிகளையும் சந்தர்ப்பவாத ஊடகர்களையும் தாராளமாய் தந்தது. அதன் பிரதியுபகாரம் உலகமயமாக வேண்டிய தமிழ் ஊடகவெளியை குறுக்கி தவபாலினின் முடிவோடும் ஜவானண்ணாவின் மறைவோடும் பாதுகாக்கக்கொடுத்த ஆவணங்களே தனிமனித சொத்தான சாபம் என எங்களது சாபகங்களை எழுத நேரம் போதவில்லை.

மாவிலாறு ஆரம்பம் அடுத்த சண்டைகள் பற்றியெல்லாம் ஒரு பதிவு எழுத வேணும். அதற்கான தருணம் இதுவல்லை. காலமும் நேரமும் கைகூடுகிற போது இவையெல்லாம் கட்டாயம் எழுதப்படும்.

ஆனால் எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. „புலிகள் அழியப் போகிறார்கள், சரணடையப் போகிறார்கள்' என்றெல்லாம் சரியான எதிர்வுகூறலை செய்த ரிபிசி ராம்ராஜ் மற்றும் ஆனந்த சங்கரியை ஏன் யாரும் போற்றிப் புகழ்வதில்லை??

அது அவர்களது தீர்க்கதரிசனமும் இல்லை எதிர்வுகூறலும் அல்ல. அவர்களது அவர்கள் ஆதரித்து அவர்களை ஆதரித்து ஊட்டிவளர்த்தவர்களின் ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராடி உயிர் துறப்பார்கள். மற்றைய புலிகள் எல்லோரும் சரணடைவார்கள்.

2003 இல் என நினைக்கிறேன்.. நீங்கள் மேலே எழுதியவையுடன் மேலும் சிலவற்றையும் சேர்த்து கேள்விப்பட்டுவிட்டேன்.. ஆனால் வழக்கம்போல என்ன பேத்தல் இது என்று கண்டும் காணாமலும் விட்டுவிட்டேன்.. ஆனால் அவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

இதற்கு மேல் என்ன நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்.. :rolleyes:

இதற்கு மேல் என்ன நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்.. :rolleyes:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

அதைச் சொல்லமாட்டன்.. பிழைச்சுப்போனால் சபேசனின்ர நிலமையல்லோ.. :lol:

அதைச் சொல்லமாட்டன்.. பிழைச்சுப்போனால் சபேசனின்ர நிலமையல்லோ.. :lol:

:rolleyes: :rolleyes:

- எனக்கு தெரியாத விடயம் தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

--------

காதலின் கருத்து நீக்கப்பட்டதால், நீக்கப்பட்டது..

Edited by இசைக்கலைஞன்

சபேசன் அண்ணா, channel 4 இல் போர்குற்றங்கள் வெளிவருமெண்டும் சொன்னவையோ???? சொல்லேல்லை தானே???? ஏன் சொல்லேல்லை????

சபேசன் அண்ணாவுக்கு அது தெரியாமல் நீங்கள் சொல்லி தெரிந்து அது நடந்தால் அல்லது நடக்காவிட்டால் சபேசன் அண்ணா அதனையும் தான் எதிர்பார்த்தனான் என்று சொல்லி தனதாக்கி கொள்ளுவார். :lol: :lol:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் எங்களின் (தமிழர்களின் ) எதிகாலம் என்ன என்பதினை கொஞ்சம் சொல்லுங்கோவேன் . :D

Edited by தமிழரசு

[size=5]இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப -வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை,இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான ,புரட்சிகரமான படைப்புக்ககளை சிருஷ்டிக்க வேண்டும்.இந்தப்படைப்புக்கள் எமது புனித விடுதலைப்போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும்.சமூகப்புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்....... [/size]மே.த.கு தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய சிந்தனையில் இருந்து.

இந்தக்

[கதை ]

கட்டுரையை இணைத்ததற்காகவும்.இத்திரியில் உள்ள கருத்துக்களுக்காகவும்....

Edited by தமிழ்சூரியன்

இன்று நீ நாளை யாரோ?

யாழில் மற்றுக் கருத்தாளர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் வசம்பு, சுகுமாரன், சமாதாணம், லக்கிலுக், அவர்களோடு தவறான தகவலோடு இணைந்த அஜீவனோடு இறுதி நேரத்தில் வன்னியில் நடக்க போகும் அழிவுகளையும் அதன் பின் விளைவுகளையும் சொன்ன குறுக்காலபோனவ்ரின் பட்டியலில் சபேசனும் இணைந்துள்ளார்............இதுக்க கிருபன் , நிழலி ,ரதி போன்ற மதில் மேல் பூனை போன்ற கவனக் கருத்தாளர்களும் அடங்கும், ஆனால் சபேசன் தொடர்ந்து யாழில் தாக்குப் பிடிப்பாரா என்ற ஒரே ஒரு கேள்வியுடன் , யாழ்கருத்துக் களத்துக்கு வந்து இருக்கேன்,.

புலம் பெயர்ந்தவர்கள் விரைவில் துவக்கால் முடியாதைதை கொடியால் எடுத்துவிடுவார்கள் .

புலம் பெயர்ந்தவர்கள் விரைவில் துவக்கால் முடியாதைதை கொடியால் எடுத்துவிடுவார்கள் .

அதை எங்களிடம் இருந்து பட்டுவேட்டியை பறித்து எரிச்ச எதிரிக்கு மிச்சிய கோவணத்தையும் கழட்டி கொடுத்த தமிழன் சொல்ல கூடாது :D:lol::icon_idea:

புலம் பெயர்ந்தவர்கள் விரைவில் துவக்கால் முடியாதைதை கொடியால் எடுத்துவிடுவார்கள் .

ஏற்கனவே துவக்கால் முடியாத ஒன்றை கொடியால் எடுத்துள்ளோம். அதாவது வன்முறையாளர்கள் இல்லை என்ற பெயரை. :)

வெளிநாடுகளை பொறுத்தவரை துவக்கு பிடித்தால் வன்முறையாளர்கள். கொடியை ஏந்தினால் சாத்வீக போராட்டம் நடத்துவோர்.

எனவே துவக்கு பிடித்தவர்களின் ஆசீர்வாதத்துடன் கொடியை பிடித்து முடியக்கூடிய அனைத்தையும் எடுப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்

.இதுக்க கிருபன் , நிழலி ,ரதி போன்ற மதில் மேல் பூனை போன்ற கவனக் கருத்தாளர்களும் அடங்கும்.

மதில் மேல் பூனை.. சோத்துக்கும் சுதந்திரத்திற்கும் நடுவில்.. பச்சோந்தி.. விலாங்கு மீன்.. இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு போகலாம்.

ஆனாலும் எனக்கு விளங்காதது ஒன்று என்னவென்றால் எப்படி ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதி ஒரே நாளில் மோசமான தமிழினத் துரோகி ஆகின்றார்/ ஆக்கப்படுகின்றார் என்பதுதான். ஒருவேளை தீவிர தமிழ்த் தேசியவாதிக்கும் மோசமான தமிழினத் துரோகிக்கும் காற்றுக்கூடப் புகமுடியாத இடைவெளிதான் இருக்கின்றதா?

  • தொடங்கியவர்

என்னுடைய நேரம் அனுமதிக்கும் வரை நான் யாழ் களத்தில் தாக்குப்பிடிப்பேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இடையிடை வந்து போயிருக்கிறேன். தொடர்ந்து எழுத சில காரணங்களால் (நேரம், மனநிலை) முடியவில்லை. தற்பொழுது எனக்கு நேரம் இருக்கின்றது.

நான் நம்புவதை, எனக்கு சரி என்று படுவதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற வேகமும் இருக்கிறது.

கல்லெறிகள் பற்றிக் கவலை இல்லை.

தமிழ் தேசியவாதி மற்றும் துரோகி என்பதை இன்று யார் வரையறுக்கிறார்கள்? ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகளை விமர்சித்த அனைவரையும் துரோகிகள் என்றோம். பின்பு அதே "துரோகிகள்" பாவமன்னிப்புப் பெற்று தேசியவாதிகளாக ஆனார்கள்..

என்னுடைய பார்வையில் யதார்ததத்தை உணர்ந்த ஒருவன், அதை சொல்ல மறுத்தால், மறைத்தால் அவன் தன்னுடைய இனத்திற்கு துரோகம் செய்கிறான். இதிலே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.

சபேசன் அண்ணா,

இங்கு உங்களுக்கு யாரும் கல்லெறிவதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தேவையில்லாத திரிகளை தொடங்காமல் தமிழீழம் அமைவதற்கு உங்களால் முடிந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள். அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும் பட்சத்தில் நாமே உங்களை கிண்டலடிக்காமல் அதனை ஏற்றுக்கொள்ளுவோம்.

என்னுடைய பார்வையில் யதார்ததத்தை உணர்ந்த ஒருவன், அதை சொல்ல மறுத்தால், மறைத்தால் அவன் தன்னுடைய இனத்திற்கு துரோகம் செய்கிறான். இதிலே ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும்.

எனக்கு தெரிய எல்லாமே அழிந்து போனது எண்று சொல்வதுக்கு இல்லை...

அதை பிறகு பார்க்கலாம்... இங்கை தலைவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில் சாத்தியமானதாக இருந்ததா என்பதை ஒரு சில நிமிடங்கள் அவரின் நிலையில் இருந்து பாருங்கள்... உங்களுக்கே விளங்கும்...!

எனக்கும் குற்றச்சாட்டு தலைவர் மீது தான் ... ஆனால் அது வேறு விதமானது... !

இந்த இறுதிபோர் இறுதிப்போர் எண்று சொல்கிறார்களே அந்த பகுதியில் இருந்து தலைவர் 2008 மாவிரர் நாள் உரை முடிய கிளிநொச்சி வீழ்வதுக்கு முன்னர் வெளியேறி இருக்க வேண்டும்... குறைந்து வெளியேற்ற பட்டதாக புலிகள் அறிவித்து தன்னும் இருக்க வேண்டும்... இல்லை தேவிபுரத்தை பாது காப்பு வலையமாக அரசாங்கம் அறிவிக்கும் போது ஒரு தாக்குதலை கேப்பாவில் பக்கமாக வந்த 53 வது படை அணி மீது நடத்தி முடித்த போது வெளியேறி இருக்க வேண்டும்... இல்லை ஆனந்த புர சண்டையின் முடிவிலாவது வெளியேறி இருக்க வேண்டும்... அதுவும் இல்லை எண்றால் மக்கள் சாலையில் இருந்து வட்டுவாகல் வரை உள்ள பிரதேசத்துக்குள் அடைக்க பட்ட போதாவது வெளியேறி இருக்க வேண்டும்...

அப்படி வெளியேறி இருந்தால் எண்று உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறதா...?? அப்படி வந்தால் அவர் வெளியேறி இருந்தால் இறுதி போர் எனும் இலங்கை அரசின் அழிவுக்கான காரணம் அடிபட்டு போய் இருக்கும், புலிகளின் தலைமையை அழிக்க தான் என்பதால் சும்மா இருந்த உலக நாடுகள் கொஞ்சமாவது வாயை திறந்து இருக்கும் , தலைவரை சுற்றி இருந்ததால் எப்போதும் இருக்கும் போராட்டமும் இருந்து இருக்கும்... மக்களை பணயக்கைதிகளாக புலிகல் வைத்து இருந்தார்கள் எனும் பழியும் அற்று இருந்து இருக்கும்... மக்களில் அழிவும் இல்லாமல் இருந்து இருக்கும்...

இதையும் மீறி சிலருக்கு தலைவர் போராட்டத்தை காப்பாத்தி அதனால் தொடரும் ஆயுதப்போர் எதை தமிழருக்கு கொண்டு வந்து இருக்கும் எனும் கேள்வி வரலாம்... தொடர்ச்சியான அழிவையும் ஆயுத போட்டியையும் தான் ஈழத்தில் கொண்டு வந்து இருக்கும் எண்று தோண்றலாம்... புலிகள் வேண்டி நிண்ட தமிழ் மக்கள் அபிவிருத்தி தடைப்படலாம்... பொருளாதார தடை தொடரலாம், அதோடு இறுதி சண்டை நடந்த பகுதியில் இருந்து காயம் அடைந்த போராளிகளும் இறுதிவரை அங்கு நிற்கும் போராளிகளும் சில தளபதிகளும் சரண் அடையலாம்... சரண் அடைந்தவர்கள் தலைமை மீது கோபமும் கொள்ளலாம்... அதனால் போராட்டத்துக்கு எதிராக செயற்படவும் செய்யலாம்...! அதனால் போரட்டம் இன்னும் ஒரு 30 வருடங்களுக்கு இழுத்தடிக்க படலாம்...ஆனந்த சங்கரியும் இன்னும் சிலருக்கும் அரசாங்க தரப்பில் நல்ல மரியாதையும் கிடைக்கலாம்...

இப்போ நான் சொன்னது போல தலைவர் முன்னமே வெளியேறி இருக்க வேண்டும், அது தான் தலைவர் விட்ட பிழை எண்று பலர் நினைத்தால் மகிழ்ச்சி.. அல்லது கடைசிவரை போராடிய ( இண்று வரை நிலை தெரியாத) தலைவரின் செயல் தான் சரி எண்று பல பேர் சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் தயா இக்களத்தில் இருக்க வேண்டும் என்கிறது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் தயா இக்களத்தில் இருக்க வேண்டும் என்கிறது.. :rolleyes:

ம்ம்ம்

இதற்கு மேல் என்ன நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்.. :rolleyes:

சாத்திரம் பார்ப்பவர்களும், நடந்தவற்றை நன்றாகவும் சரியாகவும் சொல்வார்களாம்! :unsure:

நடக்கபோவதை மட்டும் சொல்லாமல் முழிப்பார்களாம்!!

எனக்கு தெரிய எல்லாமே அழிந்து போனது எண்று சொல்வதுக்கு இல்லை...

அதை பிறகு பார்க்கலாம்... இங்கை தலைவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில் சாத்தியமானதாக இருந்ததா என்பதை ஒரு சில நிமிடங்கள் அவரின் நிலையில் இருந்து பாருங்கள்... உங்களுக்கே விளங்கும்...!

எனக்கும் குற்றச்சாட்டு தலைவர் மீது தான் ... ஆனால் அது வேறு விதமானது... !

இந்த இறுதிபோர் இறுதிப்போர் எண்று சொல்கிறார்களே அந்த பகுதியில் இருந்து தலைவர் 2008 மாவிரர் நாள் உரை முடிய கிளிநொச்சி வீழ்வதுக்கு முன்னர் வெளியேறி இருக்க வேண்டும்... குறைந்து வெளியேற்ற பட்டதாக புலிகள் அறிவித்து தன்னும் இருக்க வேண்டும்... இல்லை தேவிபுரத்தை பாது காப்பு வலையமாக அரசாங்கம் அறிவிக்கும் போது ஒரு தாக்குதலை கேப்பாவில் பக்கமாக வந்த 53 வது படை அணி மீது நடத்தி முடித்த போது வெளியேறி இருக்க வேண்டும்... இல்லை ஆனந்த புர சண்டையின் முடிவிலாவது வெளியேறி இருக்க வேண்டும்... அதுவும் இல்லை எண்றால் மக்கள் சாலையில் இருந்து வட்டுவாகல் வரை உள்ள பிரதேசத்துக்குள் அடைக்க பட்ட போதாவது வெளியேறி இருக்க வேண்டும்...

அப்படி வெளியேறி இருந்தால் எண்று உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறதா...?? அப்படி வந்தால் அவர் வெளியேறி இருந்தால் இறுதி போர் எனும் இலங்கை அரசின் அழிவுக்கான காரணம் அடிபட்டு போய் இருக்கும், புலிகளின் தலைமையை அழிக்க தான் என்பதால் சும்மா இருந்த உலக நாடுகள் கொஞ்சமாவது வாயை திறந்து இருக்கும் , தலைவரை சுற்றி இருந்ததால் எப்போதும் இருக்கும் போராட்டமும் இருந்து இருக்கும்... மக்களை பணயக்கைதிகளாக புலிகல் வைத்து இருந்தார்கள் எனும் பழியும் அற்று இருந்து இருக்கும்... மக்களில் அழிவும் இல்லாமல் இருந்து இருக்கும்...

இதையும் மீறி சிலருக்கு தலைவர் போராட்டத்தை காப்பாத்தி அதனால் தொடரும் ஆயுதப்போர் எதை தமிழருக்கு கொண்டு வந்து இருக்கும் எனும் கேள்வி வரலாம்... தொடர்ச்சியான அழிவையும் ஆயுத போட்டியையும் தான் ஈழத்தில் கொண்டு வந்து இருக்கும் எண்று தோண்றலாம்... புலிகள் வேண்டி நிண்ட தமிழ் மக்கள் அபிவிருத்தி தடைப்படலாம்... பொருளாதார தடை தொடரலாம், அதோடு இறுதி சண்டை நடந்த பகுதியில் இருந்து காயம் அடைந்த போராளிகளும் இறுதிவரை அங்கு நிற்கும் போராளிகளும் சில தளபதிகளும் சரண் அடையலாம்... சரண் அடைந்தவர்கள் தலைமை மீது கோபமும் கொள்ளலாம்... அதனால் போராட்டத்துக்கு எதிராக செயற்படவும் செய்யலாம்...! அதனால் போரட்டம் இன்னும் ஒரு 30 வருடங்களுக்கு இழுத்தடிக்க படலாம்...ஆனந்த சங்கரியும் இன்னும் சிலருக்கும் அரசாங்க தரப்பில் நல்ல மரியாதையும் கிடைக்கலாம்...

இப்போ நான் சொன்னது போல தலைவர் முன்னமே வெளியேறி இருக்க வேண்டும், அது தான் தலைவர் விட்ட பிழை எண்று பலர் நினைத்தால் மகிழ்ச்சி.. அல்லது கடைசிவரை போராடிய ( இண்று வரை நிலை தெரியாத) தலைவரின் செயல் தான் சரி எண்று பல பேர் சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...

மிகவும் அருமையான பதில். பச்சை முடிந்து விட்டதே என்ற கவலை. கண்டிப்பாக நாளைக்கு தேடி வந்து குத்துவன்.

தலைவர் இதில் எந்த முடிவெடுத்திருந்தாலும் பழி போட நினைக்கும் மக்கள் பழி போட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களை திருத்த முடியாது.

தலைவர் முன்னமே வெளியேறி இருந்திருந்தால் தான் மட்டும் உயிருக்கு பயந்து தப்பி விட்டார் என்றும் கூறியிருப்பார்கள். :( :(

சாத்திரம் பார்ப்பவர்களும், நடந்தவற்றை நன்றாகவும் சரியாகவும் சொல்வார்களாம்! :unsure:

நடக்கபோவதை மட்டும் சொல்லாமல் முழிப்பார்களாம்!!

:lol: :lol:

இப்போ நான் சொன்னது போல தலைவர் முன்னமே வெளியேறி இருக்க வேண்டும், அது தான் தலைவர் விட்ட பிழை எண்று பலர் நினைத்தால் மகிழ்ச்சி.. அல்லது கடைசிவரை போராடிய ( இண்று வரை நிலை தெரியாத) தலைவரின் செயல் தான் சரி எண்று பல பேர் சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...

உலகமே ஒருவனை எதிர்த்து நின்ற போது, அவன் இனத்திலும் சிலர் எதிர்த்து நிற்கும் போதும், தன் உயிரையும் தன் குடும்பம் மற்றும் உறவுகளின் உயிரையும் விலை கொடுத்தான் அந்த மாவீரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.