Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று வந்தவர்கள் மீது ஒட்டுக்குழு ஈபிடிபி தாக்குதல்.(படங்கள்)

Featured Replies

வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய trans.gifபருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டுக்குழு ஈபிடிபியினர் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர்.

சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பின் கண்ணாடி உடைந்துள்ளது.

இதனையடுத்து பஸ்ஸினுள் இருந்தவர்கள் மீது ஒயில் ஊற்றப்பட்மையால் பத்துக்கும் மேற்பட்டவர்களின் உடைகள் சேதமடைந்துள்ளது.

News-4.jpgNews-3.jpgNews-2.jpgNews-1.jpg

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/

இந்த நக்கு தண்ணி குடிக்கிறதுகளை திருத்தவே முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

valikamam-190612-pro-413-150.jpg

[size=4]வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ். தெல்லிப்பழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.[/size]

[size=4]மக்கள் மீது கழிவு ஒயிலும் ஊத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை என்பவற்றுக்கு எதிராக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப்போராட்டம் இன்று காலை நடைபெற்றது.[/size]

  • [size=4]valikamam-190612-pro-001.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-002.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-249-008.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-307-006.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-377-007.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-378-004.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-413-003.jpg[/size]
  • [size=4]valikamam-190612-pro-459-005.jpg[/size]

http://youtu.be/n1W1AyoM0yY

[size=4]இதில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி என்பனவும் கலந்துகொண்டிருந்தன. இந்தப் போராட்டம் இடம்பெற்ற போது பெருந்தொகையான பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவுக்கு ஆயுதபாணிகளாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். குண்டாந்தடிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.[/size]

[size=4]போராட்டத்தின் இறுதியில் அருகேயுள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]அப்பகுதியில் வீதிக்கு குறுக்காக வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் செல்வதை பொலிஸார் தடுத்தனர். ஊர்வமாகச் செல்வதை பொலிஸார் தடுத்த போது ஊர்வலத்துக்குத் தலைமைதாங்கிய மாவை சேனாதிராஜாவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.[/size]

[size=4]ஊர்வலமாகச் சென்று மகஜர் சமர்ப்பிப்பதை பொலிஸார் தடுக்க முடியாது என மாவை கடுமையாக வாதிட்டபோது சீற்றமடைந்த பொலிஸார் கடுமையான வார்த்தைகளால் மாவையை திட்டித் தீர்த்ததாக அருகில் நின்றவர்கள் தெரிவித்தனர்.[/size]

[size=4]இருந்த போதிலும் குழுக்குழுவாகச் சென்று மகஜர் சமர்ப்பிக்க பொலிஸார் இறுதியில் அனுமதி வழங்கினார்கள். அதன் பின்னர் பொதுமக்கள் பஸ்களில் திரும்பிச் சென்ற போதே மோட்டார் சைக்கிளில் ஆயுத தாரிகளாக வந்த படையினர் பஸ்களை மறித்து பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியதுடன், அவர்கள் மீது பழைய ஒயிலை ஊற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் தொடர்கின்றது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதோ யுத்த முடிந்தவுடன்.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ற பிரணாப் முக்கர்சியும்.. கருணாநிதியும் இதை எல்லாம் பார்க்கிறாங்களோ...????! சிங்களவனுக்கு ஆயுத உதவி வழங்கி தமிழர்களை தோல்விக்குள் தள்ளியதன் விளைவு இது..! இதற்கு ஒத்துழைத்த இணைத்தலைமை நாடுகள்.. இந்தியா.. போன்றவை தான் தமிழ் மக்களின் குரலுக்கு பதில் சொல்ல வேண்டியவை..! ஆனால் அவர்களோ...???! இன நல்லிணக்கம் என்று அறிக்கை விடுவதோடு சரி. ஐநா சபை.. தூர நின்று வழமை போல சிங்களவன் செய்வதெல்லாம் நியாயம் என்று சாதிக்கிறது..!

தமிழ் மக்களின் இன்றைய இந்த நிலைக்கு சர்வதேசத்தின் சிறீலங்கா மீதான.. கருசணையும்.. சிங்கள அரச பயங்கரவாதத்தை ஆதரித்து நிற்கின்ற நிலையும்.. ஐநாவின் பாராமுகம்.. இந்தியாவின் சந்தர்ப்பவாதமுமே மூல காரணம்..! :icon_idea::(

இவர்கள் முறைப்படி அநுமதி பெற்று செய்திருந்தால் ஏன் இந்த பிரச்சினைகள் வருகின்றது?

கேளாமல் செய்தால், (ஆனந்த) தேவன், விடிவெள்ளியின் தண்டணை கிடப்பிலை போட்டு கழிவோயில் ஊத்தி கல்லால் எறிகிறதுதான். இவர் இடை இடை வந்து முக்காலை விட்டிட்டு கால் வாசிக்கதை மட்டும் எழுதுபவர். அது எப்படி அனுமதி இல்லாத போராட்டம் தெல்லிப்பளையில் நடந்து கொண்டிருக்க சுன்னாகம் புகையிரத நிலையத்தடியில் போனவர்களுக்கு தணடனை கொடுத்தவர்கள்? அது எப்படி மாவை மனு ஒன்றை கையளிக்க விட்டவர்கள்.

ஆரிட்டை அனுமதி எடுத்து 146,000 தமிழரை சுட்டு பொசிக்கியவர்கள்?

கொலை வழக்கில் பிணையில் இருந்தவரை சென்னை பொலிஸ் கைது செய்ய போகிறது என்றவுடன் தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் ஓடிவந்தவரிடம் நாம் எந்த அனுமதியும் பெறத்தேவை இல்லை. காங்கிரஸ் பதவி போய், அவரை சென்னை பொலிசில் ஒருநாள் கையளித்த பின்னர் அது பற்றி கதைக்கலாம்.

Edited by மல்லையூரான்

முள்ளி வாய்க்காலில் முடிந்தது மீண்டும் முள்ளிவாய்க்காலில் இருந்து தான் தொடங்கும் என்று சுமா நடக்காத ஒன்றுக்கு வெறும் வாயை ம்ல்வதனால் தான் அவர்கள் படைகளை விலக்காமல் வைத்திருக்கின்றார்கள் போலும். 32 நாடுகள் புலிகளை அழிக்க ஆயுதங்கள் கொடுத்துதவியாதாக நீங்கள் தானே சில காலத்துக்கு முன் கூச்ச்ச்லிட்டீர்கள். அப்போ அந்த 32 நாடுகளும் தான் அதுக்கு ஆதரவு வழங்கின என்று நான் சொல்லுகின்றேன்.

[size=4]எத்தனை நாடுகள் உதவி செய்தாலும் உண்மையான நீதியான மக்கள் போராட்டத்தை வெல்ல முடியாது. இதை மேற்குலக நாடுகள் வியட்னாம் தொடக்கமும் உருசியா அப்கானிஸ்தானிலும் இந்தியா காஸ்மீரிலும் கண்டவை. [/size]

[size=4]சிங்களமும் இதை உணர்ந்தே ஆகும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு நல்லவிடயம் - தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுத்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் முறைப்படி அநுமதி பெற்று செய்திருந்தால் ஏன் இந்த பிரச்சினைகள் வருகின்றது?

முறைப்படி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கி நல்லா ஒத்துழைப்பும் கொடுப்பினமாக்கும்!!

இத்தகைய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்! பாராட்டுக்கள்!!!

அறிக்கை விட்டு சிங்களப் பயங்கரவாதிகளுக்கு சேவகம் செய்யும் பொறுக்கி சுமந்திரனைக் காணவில்லை.

சிங்களக் பௌத்த காட்டுமிராண்டிகள் கழிவு எண்ணை, தடிகள் மூலம் தாகிய படங்களை கூட்டமைப்பினர் காலம் தாழ்த்தாது சர்வதேசமெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தொலைபேசிகளில் இது போன்ற நிகழ்வுகளை ரகசியமாக பதிவு செய்யும் வசதி இருப்பதால், மக்கள் உடன் விளித்து சிங்கள ராணுவ காட்டுமிராண்டிகளின் தமிழின விரோத, ஜனநாயக விரோத, மனித உரிமை விரோத செயல்களை ஆவணப்படுத்தி உரியவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். BBC இலும் சில பேட்டிகள் வந்தன!

நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் அவ்வப்போது ஏதாவது செய்துவிட்டு நித்திரை கொன்றுவிட்டு தீடிரென முழித்து இறை பிரார்த்தனைகள் செய்வதோடு நின்று விடாமல், இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தையும் திகதி, இடம், படம், போன்ற விலாவாரியான விபரங்களுடன் முறையாக ஆவணப்படுத்தி வர வேண்டும். சிறு கொள்ளைகள், கடத்தல், கொலைகளையும் கூட புறக்கணிக்கக் கூடாது! அனைத்தையும் சேகரிக்க வேண்டும்!!!

[size=5]இதை செய்தது சிங்கள பயங்கரவாதிகள்! [/size]

தண்டணையாக இடம் மாற்றம் பெற்ற இமெல்டா மாற்றப்பட்டு போனபின் படைகளை மீளபெற்றார் என்ற வெறுவாய் சப்பல் கதைகளை யார் எழுத வந்தது? இது வரையில் தேவானந்தா படைகள் வாபஸ் பெறவேண்டும் என்று எந்த மேடையிலாவது பேசியிருக்கிறாரா? பிருத்தானியாவிலும், அமெரிக்காவிலும் திரும்பத்திரும்ப செருப்படி வாங்ககாத (பிருத்தானியாவில் அவரின் கொடும்பாவி வாங்கியது) கேவலமாக ஒடிய மகிந்தா, இலங்கை போய், இமெல்டா சுகுமார் சொல்லியா ஈரானிடம் எண்ணை வாங்காமல் மற்றைய நாடுகளிடம் வாங்குகிறார்; தேவாந்தா சொல்லியா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பொன்சேக்காவை வெளியில் விட்டார். தனிய வராமல் ஜெனீவாவுக்கு தேவானந்தா இமெல்டாவுடன் வந்திருக்கலாமே. இருவரும் ஒன்றாக குந்தியிருந்து வாய்நிறைய புகையிலை போட்டு மென்றிருக்கலாம். அப்போது அவர்களில் ஒருவரான தாமாரவின் பதவி பறி போகாமல் காப்பாற்றியிருக்கலாம். மகிந்தாவை காப்பாற்ற போய் இப்போ தாமாரா நடுத்தண்ணிக்குள் விழுந்துகிடந்து தவிக்கிறார். இமெல்டா, தாமாராவின் கதை தமக்கும் தேவாந்தாவுக்கும் வராமலிருக்க யாழில் சிலர் இன்று புதிதாக இறுக்கி முக்கி பார்க்கிறார்கள். ஆனால் அது தவிர்க்க முடியாதது. உங்களை போல சிலர் வெறும் வாய் சப்பிகொண்டிருக்க மகிந்தாமீது போர்குற்றங்களுக்கு ஐ.நா. பிரேரணை வந்துவிட்டது. வெறுவாய் சப்பிகளை யாழுக்கு எழுத அனுப்பிவைத்தால் தான் தப்பிவிடலாம் என்று பகல் கனவு காண்டது பிழைத்து போகிறது மகிந்தாவுக்கு.

32 நாடுகள் புலிகளை அழிக்க ஆயுதங்கள் கொடுத்துதவியாதாக நீங்கள் தானே சில காலத்துக்கு முன் கூச்ச்ச்லிட்டீர்கள். அப்போ அந்த 32 நாடுகளும் தான் அதுக்கு ஆதரவு வழங்கின என்று நான் சொல்லுகின்றேன்.

அந்த நாடுகள் அன்று சொன்னதை செய்த மகிந்தாவையும், தேவானந்தாவையும், இன்றும் அவர்கள் சொல்லவதை செய்ய வைக்க அவர்களால் முடியும் என்பதை அவர்கள் செய்து காட்டுகிறார்கள். மகிந்தா கேட்டுத்தான் ஆக வேண்டும். மகிந்தாவுக்கு அவர்கள் சொல்லவதை வெறுவாய் சப்பி கதையாக தட்டிவிட முடியவில்லை. அதானல்தான் அதே நாடுகளை தேடிச் சென்று நாம் எமது பிரச்சாரத்தை ஆரம்பிதோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தாம் விரும்பிய போதெல்லாம் மகிந்தாவின் மூக்குக்குள் விரலை விட்டு ஆட்ட முடியும் என்பதை நாம் விளங்கிக் கொண்டுவிட்டோம். எமது பாதையை சரியான திசையில் திருப்பியிருக்கிறோம். தேவானந்தாவும் இமெல்டாவும், மகிந்தாவும் அதை இன்னும் விளங்காததால்த்தான் அவர்களுக்கு கஸ்டம் தொடங்கியிருக்கு.

Edited by மல்லையூரான்

இந்தப் போராட்டங்களின் போது முதலைமைச்சர் பதவி ஆசை பிடித்த வித்தியாதரன் போன்றவர்கள் ஒப்புக்காக பார்வையாளர்கள் போல கலந்து கொண்டதையும், மாவை, சிவாஜிலிங்கம், கஜேந்திரன் போன்றவர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டதையும் காணக் கூடியதாக இருந்ததாக கலந்துகொண்ட மக்கள் சிலர் தெரிவித்தனர்.

எப்போது தேவானந்தாவும், துணை கூலிப்படையும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவர் என்பதை சர்வதேசமும் தமிழ் மக்களும் தொடர்ந்து கேட்டபடி இருக்க தேவானந்தா கோரி இராணுவம் வெளியேறுவதாக இலங்கை அரசும் அதன் கூலிகளும் நாடகம் நடத்திகொண்டிருக்கும் பொது, இந்த மகா நடிகரும் காட்டுமிராண்டி ராணுவமும் சேர்ந்து கூட்டம் போட்டு ஆடு நனைவதாக இந்த ஓநாய்கள் அழுதார்களாம்.

[size=5] இராணுவத்தினர் காணிகளை அபகரிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது! அமைச்சர் டக்ளசு அதிரடி நடிகர் திலககத்தை வென்றசெவாலியர் விருதுபெறும் அமைச்சர்.[/size]

20.06.2012-இராணுவத்தினர் கேட்கிறார்கள் என்பதற்காக எல்லா நிலங்களையும் கொடுத்துவிட முடியாது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளசு தேவானந்தா தெரிவித்துள்ளார்.காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குண்டு.

மேலும் சில பகுதிகளிலுள்ள தனியார் காணிகளையும் அரச காணிகளையும் இராணுவத்தினர் கேட்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் கேட்கின்றனர் என்பதற்காக எல்லாக் காணிகளையும் கொடுத்துவிட முடியாது. அத்தோடு தன்னிச்சையாக காணிகளை இராணுவத்தினர் அபகரிக்கவும் முடியாது.

இராணுவத்தினர் தமக்கு காணிகள் வேண்டும் என்றால் அதை விண்ணப்பித்து முறைப்படியே பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பித்துக் கேட்டாலும் காணிகளைக் கொடுப்பதா இல்லையா என்று மக்கள் நலன்களின் அடிப்படையில் வைத்து ஆராய்ந்தே முடிவு எடுக்கப்படும்.

தமக்கு இஷ்டப்பட்டபடி இராணுவத்தினர் காணிகளை அபகரிக்க நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

மேலும் தனியார் காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட மாட்டாது என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

எனவே மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் காணி அபகரிப்புத் தொடர்பிலும் கூடிய கவனம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

http://kumarinadu.ne...02-01&Itemid=71

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.