Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசின் ஆதரவில் நியூயோர்க் விளையாட்டுப் போட்டி

Featured Replies

யாயினி துளசி விசுகு ஜீவா மற்றும் உறவுகளுக்கு

இங்கு உறுப்பினராக இருக்கும் சுபா சுந்தரலிங்கம் என்ற உறுப்பினர் நேசக்கரத்தினூடாக சாந்தி செய்யும் அதே வெலைகளை சுபாவும் செய்து கொண்டிருக்கின்றார்.அதைவிட இன்னும் அவரின் செயல்பாட்டை கீழே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்

நன்றி அண்ணா, நான் அவர்கள் உதவி செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு செலவழிக்கும் பணத்தையும் மக்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தான் சொல்கிறேன். :) :) :)

அதை நடத்தும் நேரத்தில் வேறு தமிழீழத்திற்கு அவசியமான முக்கிய அலுவல்களை பார்க்கலாம் என்றும் கூறினேன். :)

Edited by துளசி

  • Replies 120
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி விசுகு அண்ணா, ஆனால் எனக்கும் பதில் தெரியாது. அவர் அகதியா வந்தவரா ஸ்டுடென்ட் விசாவில் வந்தவரா என்று நெடுக்ஸ் அண்ணாவிடம் தான் கேட்க வேண்டும். :D உருத்திர குமார் அண்ணாவுக்கு அல்லது நாடுகடந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக கதைத்து கொண்டு அகதிகளை கொச்சைப்படுத்தும் நெடுக்ஸ் அண்ணா மாட்டி விட்டார். :lol: :lol:

அகதிகளாக வந்தவர்களை கொச்சைப்படுத்தும் எண்ணம் எமக்கு இல்லை. அகதிகளாக வந்தவர்கள் தாங்கள் தேசத்திற்கு இழைத்த துரோகங்களை மறைத்து.. தேசத்தின் நலனிற்காகவும்.. தேசத்தின் விடிவிற்காவும் உழைப்பவர்களை கேள்வி கேட்கும் பாணி தான் எனக்கு பொருத்தமாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி.. அகதிகள் என்போர்.. ஏதோ தாங்கள்.. தாயகத்தில் இருந்து போராட அனுப்பட்டவர்கள் என்ற கணக்கில் கதை அளப்பதும் வெறுப்பை தூண்டத்தக்கதுடன்.. அகதிகள் என்போர் மற்றவர்களை மதிக்கும் குணம் குறைந்து.. விடயங்களை அலசி ஆராயும் திறன் இழந்து செயற்படுவதையுமே வெறுக்கிறோம்..! மற்றவர்களுக்கு புத்திமதி சொல்ல முதல்.. தாங்கள் என்ன செய்கிறார்கள்... என்று ஒவ்வொருவரும் முதலில் தம்மை நோக்கி கேள்வியை கேட்டு விடை கண்டுவிட்டு.. அடுத்தவர் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

அகதிகள் என்போர்.. தங்களின் வருகையின் பின்னால் உள்ள.. உண்மைகளை.. ஏற்றுக் கொண்டு.. மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைக்காமல் தேசத்தின் நலனிற்காக விடாமல் தொடர்ந்து பாடுபடவும் முன்வர வேண்டும். தேசத்திற்காக உழைப்பவர்களை மதிக்கவும்.. கற்றுக் கொள்ள வேண்டும்..! அதைவிடுத்து.. மக்களிடையே குழப்பங்களையும்.. பிளவுகளையும் ஏற்படுத்தி.. ஒற்றுமையைக் குலைத்து.. எதிரிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..! :):icon_idea:

உருத்திரகுமாரன் அண்ணாவின் தனிப்பட்ட விடயங்களை ஒரு ஜனநாயக அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதே சிறப்பு. நாலு பேர் நாலு மாதிரி கதைப்பினம். அதனை எல்லாம் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை..! இல்லை.. அதுதான் உண்மை என்று நம்பிறவை.. நம்பிட்டு இருங்கோ. அதற்காக அவற்றை மற்றவர்கள் எந்த ஆராய்ந்தலுக்கும் இடமில்லாமல் நம்பனும் என்றில்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா இவ்வளவு நாள் நெல்லையன் அண்ணா நாடுகடந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பான ஆள் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். (அது பற்றி எனக்கு தெரியாது)

ஆனால் நீங்கள் நாடுகடந்த அரசாங்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை இனி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி தவறான வழிக்கு செல்ல கூடாதென்று தான் நாங்கள் இங்கு கருத்து வைக்கிறோம். அவர்கள் என்று தமிழீழத்திற்கு எதிராக நடக்கிறார்களோ அன்று அவர்களுக்கான மக்கள் பலரின் பங்களிப்பும் நிறைவுக்கு வரும். புரிந்து கொள்ளுங்கள். இனி இவர்கள் அரசுடன் டீல் பண்ணி எந்த பிரயோசனமும் கிடைக்க போவதில்லை.

அது சரி, நாடுகடந்த அரசாங்கத்தில் உள்ள ஒருவர் கூடவா அகதியாக வந்தவர்களாக இல்லை?

-----------------------------------------------------------------------------------------------------------

என்னை பொறுத்தவரை இன்று நாடுகடந்த அரசாங்கம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயம்,

ஐ.நா மனித உரிமை குழுவின் இந்தவருடம் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது பற்றி அடுத்தவருடம் நடக்கும் 22 ஆவது கூட்டத்தில் மீண்டும் விவாதிப்பார்கள்.

தீர்மானத்தில் கூறப்பட்ட எதையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த போவதில்லை. எனவே அதற்கெதிராக மீண்டும் ஏதும் ஒரு நடவடிக்கை கொண்டுவர பார்ப்பார்கள். அதனையும் ஒரு சாட்டாக வைத்து சர்வதேச விசாரணையை நடத்துமாறு நாம் கோர வேண்டும். (இதற்கு பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்காது என்பதும் தெரியும் - ஆனாலும் முயற்சிக்க வேண்டும்.)

அல்லது அரசாங்கம் சாக்கு போக்கு சொல்லி ஏதும் கடத்த பார்ப்பார்கள். அதையும் முறியடிக்க வேண்டும்.

இன்று இவர்கள் விளையாட்டுப்போட்டிகளை நடத்தி அதில் கவனத்தை செலுத்தாமல் ஐ.நா.மனித உரிமை குழுவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுடன் சந்திப்புகளை ஒழுங்கு செய்து அடுத்த வருடம் எமக்கு தேவையான ஆதரவை இப்பொழுதே திரட்ட வேண்டும். தலைவர்கள் என்று இருப்பவர்கள் தமிழீழத்திற்கு தேவைப்படும் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்க வேண்டும்.

உங்களிடம் ஒரு கேள்வி.. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் நீங்கள் வாக்களித்துள்ளீர்களா..???!

உங்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி இருக்கிறீர்களா..???!

நான் இது இரண்டையும் செய்துள்ளேன். எனது நம்பிக்கைக்கு பலமான காரணங்கள் என்னிடம் உண்டு. அதை நீங்கள் கண்மூடித்தனம் என்று வரையறுப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய உங்கள் புரிதல் தான்.. தவறானது.

நாடு கடந்த தமிழீழ அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்க்க பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. அபிப்பிராயங்களை உள்வாங்கிறது. ஆனால் அவர்களிடம் இதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. அதை அவர்கள் தான் நிலைமைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளிடம்.. இதைத்தான் நீங்க செய்யனும் என்று சொன்னால்.. அதை அவர்கள் செய்திருக்கவே மாட்டார்கள். ஒபாமாவிடம்.. போய் இதைச் செய் என்றால் அவர் செய்யமாட்டார். அப்படித்தான் இதுவும். மக்களின் அபிப்பிராயங்களை செவிமடுப்பது வேறு மக்களின் கட்டளைக்கு இயங்குவது வேறு. மக்கள் கட்டளை இட்டு ஒரு அமைப்பை.. ஒரு அரசை.. இயக்கவோ நிர்வகிக்கவோ முடியாது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

உங்களிடம் ஒரு கேள்வி.. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் நீங்கள் வாக்களித்துள்ளீர்களா..???!

உங்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி இருக்கிறீர்களா..???!

நான் இது இரண்டையும் செய்துள்ளேன். எனது நம்பிக்கைக்கு பலமான காரணங்கள் என்னிடம் உண்டு. அதை நீங்கள் கண்மூடித்தனம் என்று வரையறுப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய உங்கள் புரிதல் தான்.. தவறானது.

தேர்தல் நடக்கும் போது இலங்கையில் இருந்தேன். :) போன வருட நடுப்பகுதியின் பின் தான் வெளிநாடு வந்தேன். இன்னும் எனக்கு விசா கிடைக்கவில்லை. (இது ஏற்கனவே உங்களுக்கு கூறியிருக்கிறேன் :))

ஆனால் இது இரண்டையும் செய்தவர்கள் பலரும் கூட என்னை போல் தான் யோசிக்கிறார்கள். உங்களால் தான் அவர்களை விட்டு வெளியே வந்து யோசிக்க முடியாமல் இருக்கிறது. அதற்கு பெயர் தான் கண்மூடித்தனமான நம்பிக்கை. :)

எனவே மக்கள் பலரின் ஆதரவை இழந்து கொண்டிருக்கும் நாடுகடந்த அரசாங்கம் மீண்டும் மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். :rolleyes:

நாடுகடந்த அரசாங்கம் இன்று என்ன செய்ய வேண்டும் என்று பலரும் சொல்லி விட்டார்கள். அதனை அதன் உறுப்பினர்கள் யாராவது பாருங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட தாயக மக்களுக்கு எது தேவை என்று யோசித்து நடவுங்கள். :)

இப்பொழுதும் என் நிலை இது தான்.

[size=5]நான் நாடுகடந்த அரசாங்கத்தை விரும்பியோ விரும்பாமலோ [/size][size=5]ஆதரிப்பவள். ஆனால் அவர்கள் செயற்பாடுகள் தாயகத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தால் அல்லது தமிழீழ விடுதலைக்கான பாதையில் சென்றால் எனது மற்றும் என்னை சார்ந்தோரின் பங்களிப்புகள் நிச்சயம் இருக்கும். அதுவே தேவையற்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அவற்றில் எனது மற்றும் என் சார்ந்தவர்களின் பங்களிப்பு இருக்காது. இது தான் இங்குள்ள பலரின் நிலையும். [/size][size=5] :)[/size]

இனி இந்த திரியை விட்டு விலகுகிறேன். நன்றி. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடக்கும் போது இலங்கையில் இருந்தேன். :) போன வருட நடுப்பகுதியின் பின் தான் வெளிநாடு வந்தேன். இன்னும் எனக்கு விசா கிடைக்கவில்லை. (இது ஏற்கனவே உங்களுக்கு கூறியிருக்கிறேன் :))

ஆனால் இது இரண்டையும் செய்தவர்கள் பலரும் கூட என்னை போல் தான் யோசிக்கிறார்கள். உங்களால் தான் அவர்களை விட்டு வெளியே வந்து யோசிக்க முடியாமல் இருக்கிறது. அதற்கு பெயர் தான் கண்மூடித்தனமான நம்பிக்கை. :)

எனவே மக்கள் பலரின் ஆதரவை இழந்து கொண்டிருக்கும் நாடுகடந்த அரசாங்கம் மீண்டும் மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். :rolleyes:

நாடுகடந்த அரசாங்கம் இன்று என்ன செய்ய வேண்டும் என்று பலரும் சொல்லி விட்டார்கள். அதனை அதன் உறுப்பினர்கள் யாராவது பாருங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட தாயக மக்களுக்கு எது தேவை என்று யோசித்து நடவுங்கள். :)

இப்பொழுதும் என் நிலை இது தான்.

இனி இந்த திரியை விட்டு விலகுகிறேன். நன்றி. :)

நீங்கள் சந்தித்தவர்களின் அரசியல் அனுபவம் என்ன..???! அவர்கள் எந்தவொரு அரசியல் அல்லது சமூக அமைப்பையாவது நடத்திக் கொண்டிருக்கிறார்களா..??! அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு உயர் மட்டம் அல்லது பிரதிநிதிகளோடு தொடர்புள்ளதா..???! நாடு கடந்த தமிழீழ அரசின் கொள்கை.. பற்றி அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறதா..???! நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டு நோக்கங்கள் என்ன..???! அவர்களின் செயற்படு தளங்கள் என்ன..???!

இது பற்றி எதுவுமே சொல்லாமல்.. ஒரு சில செயற்பாடுகளை மேலோட்டமாக நோக்கிக் கொண்டு அவர்கள் விமர்சிப்பது என்பது அறிவுபூர்வமான ஒன்றல்ல..!

நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலுக்கு முன்னிருந்து அதன் தோற்றத்தில் இருந்து அதனோடு தொடர்புள்ளவர்களோடு ஓரளவுக்கு உண்மையாக அதற்காக உழைப்பவர்களோடு தொடர்புகளைப் பேணி அவர்களின் உள்ளக்கிடக்கைகளை நேரில் அறிந்தவன் என்ற வகையில் எனக்கு அவர்களின் செயற்பாட்டு வியூகத்தில் சந்தேகம் இல்லையே தவிர.. அறிவுபூர்வமற்ற வகையில்.. ஆராயாமல்.. கண்மூடித்தனமான ஆதரவாக அது என்னிடம் இல்லை..! நாடு கடந்த தமிழீழ அரசு நடவடிக்கைகள் மக்களின் உரிமையை பறிக்கும் என்று காணின்.. அதனை அவர்களுக்கு சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டோம். ஆனால்.. இன்றைய நிலையில் அவர்களின் செயற்பாடு முழுமையாக இல்லாவிட்டாலும்.. திருப்தி தரும் படி உள்ளமை.. போற்றுதற்குரியதே..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதில் வர ஒரு தகுதி வேணும். இல்லாதவர்கள் எல்லைகளை.. ஆட்களை ஏமாற்றி.. கள்ளக்கடத்தலால் தான் வர முடியும்..! அதுவே மொத்த இனத்திற்கும்.. சர்வதேச அவமானமுமாகியுள்ளது..! மனித ஆட்கடத்தல் குற்றம் உட்பட பல குற்றங்கள் எமது போராட்டம் மீது விழ அகதிகளாய் ஓடி வந்தவர்களே காரணம். இதனையும் அவர்கள் உணரத்தலைப்பட வேண்டும். :):icon_idea:

நான் இனிமேல் தேவையில்லாமல் நடைமுறை யதார்த்தம் தெரியாதவர்கள்,உலக அனுபவமில்லாதவர்கள்,உலகத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை விட‌ சொன்னதையே திரும்ப,திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைகளுக்கு பதில் கருத்து எழுதுவதில்லை என யோசித்திருக்கிறேன் :lol::D:icon_idea:

ஒரே சப்பைக் கட்டை திருப்பி திருப்பி கட்டிக்கிட்டு இருக்கிறதிலும்.. அக்கா தங்களின் இந்த முடிவை வரவேற்கிறேன். எத்தின நாளைக்கும் தான்.. ஒன்றையே கீறல் விழுந்த சீடி போலச் சொல்லிக்கிட்டு இருப்பீங்க. உங்க கஸ்டம் விளங்குது..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்....எனக்கு உங்கள் அமைப்பு என்ன செய்கிறது,செய்யப் போகின்றது பற்றி எல்லாம் விளக்கம் தேவை இல்லை.நான் அவற்றைப் பற்றி கேட்கவும் இல்லை..ஓரளவுக்கு நல்லது,கெட்டதுகளை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவத்தோடு தான் இந்தக் கழத்திற்குள் உலாவிக் கொண்டு இருக்கிறம்.. மேலே எனது ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்தினேன்...அதைக் கூட யாரும் நியாயமற்ற விவாதம் என்று சொல்லி விட முடியாது..காரணம் ஊரில் மக்கள் இவ்வளவு அவல வாழ்வு வாழ நாங்கள் இங்கு உண்டி சுருங்குவதற்கு உடல் பயிற்சி செய்வதில் அதுவும் பணத்தைக் கொட்டி எந்தவிதப் பிரியோசனமும் இல்லை..அல்லது நான் எனது குடும்பம்,எனது குடும்பம் சார்ந்தவர்கள் வாழ வேணும் என்பதற்காக பண விரயம் செய்து எது செய்ததிலும் பிரியோசனம் இல்லை..சமர்கொலிடேசுக்கு பண் அடிக்கனும் என்றால் நல்லா அடியுங்கோ..ஒட்டு மொத்த மக்களையும் அவல வாழ்வில் இருந்து ஏன் மீட்க முடியாது இருக்கிறது என்பது தான் என் ஆதங்கம் எல்லாம்..எத்தனையோ தேவை அற்ற வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது..அவற்றுக்கு எல்லாம் பணம் இருக்கிறது தானே...மக்களுக்கு உதவத் தான் யாராச்சும் செயத்தால் சரி இல்லாட்டி இல்லை..அதற்காக அவர் செய்யிறார்,இவர் செய்யிறார் என்ற விளக்கம் எல்லாம் வேணாம்..ஒரு,இருவர் செய்தால் போதும் என்று நினைத்தால் நினைத்து கொண்டே இருங்கள் பிரச்சனை இல்லை....இத்தோடு எனது கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எங்கு வரையும் பாய்கிறான் என்பதை.........

நாட்டுக்காக நீங்கள் சிறு வேர்வையாவது சிந்தி உழைக்க தொடங்கினால்தான் புரியும்.

எதிரியும் துரோகி இந்திய நாய்களும் புலத்தில் கூட சில கழுத்தில் கத்தி வைத்திருக்கிறார்கள். இவற்றை கடந்துதான் நாம் பயணிக்க முடியும்.

நாடுகடந்த அரசின் பெயரால் எதையும் நாட்டில் இப்போது செய்யமுடியாது. அதை சிங்களவன் ஒருபோதும் விடமாட்டன். வணங்கா முடி கப்பலில் வெறும் உணவும் மருந்தும் இருந்தும் அதன் முடிவு உங்களுக்கு தெரியும். எமது எதிரியாக அவனே இருக்கிறான் மிருகத்திலும் கேவலமானவர்களுடந்தான் நாம் போராடிகொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஆயுத போரில் இல்லை பதில் தாக்குதால் செய்யமுடியாது..........

மௌனித்து கொண்டு எரிவதில் மிஞ்சுவதை புடுங்கி கொண்டு இலக்கை நோக்கி நகர்வதை தவிர வேறு வழி இங்கு இப்போது இல்லை.

நா. அ. என்ன செய்கிறது? என்ன செய்கிறது? நாட்டில் என்ன செய்கிறது?

என்று கேட்க நீ என்ன முட்டாளா? என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க உன்னால் முடியாத?

தானும் படாது தள்ளியும் படாத கூட்டம் எதையோ சொல்லிக்கொண்டுதான் இருக்கும்.

அவன் என்ன செய்தான் இவன் என்ன செய்தான் என்று ஏன் கேட்கிறாய்?

நீ என்ன செய்தாய்?

அதை வந்து இங்கே எழுது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சாந்தியக்கா எத்தனையையோ செய்கிறா. அதை இங்கேயும் பதிகிறா. ஏன் உன்னால் முடியவில்லை?

செங்கல்பட்டி சிறையில் இருந்து ஆட்களை எடுக்க நீங்கள் போனால் நானும் வருகிறேன்.........

ஏன் இத்தனை சப்பு கொட்டுற உனக்கு போக வக்கிலையா? அதே நிலையில்தான் அடுத்தவனும் இருப்பான் என்பது ஏன் புரியவில்லை. எப்போதும் முன்வரிசையில் நின்று நாம்தான் சாக வேண்டும்?

தூற்றுதல் மட்டும் உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

மீண்டும் இந்த திரிக்கு வருவதற்கு மன்னிக்கவும். நெடுக்ஸ் அண்ணாவுடனான விவாதத்திலிருந்து விலகி விட்டேன். அவருக்கு இத்திரியில் இனி கருத்து எழுத மாட்டன்.

முதலில் ஒருவரை புகழ்வதென்றாலும் திட்டுவதேன்றாலும் ஒருமையில் கூறாமல் மரியாதையாக வார்த்தைகளை வையுங்கள். :wub:

நாடுகடந்த அரசை நாட்டுக்கு போக சொல்லி யார் சொன்னது? அல்லது அவர்கள் பெயரால் உதவ சொல்லி யார் சொன்னது? அவர்களால் வேறு முறையில் உதவ முடியாதோ? உதவியே செய்யமுடியாது என்றால் நாடுகடந்த அரசாங்கம் தாயக மக்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி வாங்கும் பணத்தை என்ன செய்கிறார்கள்? (இது உங்களுக்கான கேள்வி மட்டும் தான். நாடுகடந்த அரசாங்கம் உதவியே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. :))

இங்கு நாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? நான் நாட்டில் இருந்தவரை பொதுமக்களுக்கு என்ன செய்தனான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?(அரசியலில் ஈடுபடவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன் :)). இங்கு வந்து என்ன செய்கிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அல்லது இப்பொழுதும் இலங்கையில் இருக்கும் என் குடும்பத்தினர் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

அதெல்லாம் இங்கு சொல்லிக்காட்ட வேண்டுமோ? சொல்லி காட்டினால் தான் நாங்கள் செய்வது உதவியோ? இல்லாவிட்டால் நாங்கள் செய்வதற்கு என்ன பெயர்?

சாந்தி அக்கா ஒரு அமைப்பை நடத்துகிறார் தனது முகத்தை அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். இங்கு யாழில் அனைவரும் முகத்தை மறைத்து வேறு படம் போடுவதும் சொந்த பெயரை மறைத்து புனைவு பெயர் வைப்பதும் எதற்கு? அனைத்தையும் இங்கு சொல்ல முடியுமென்றால் எதற்கு இந்த நடைமுறை?

அனைத்தையும் இங்கு சொன்னால் நாட்டில் ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பு வராதா?

இங்கு நாடுகடந்த அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை வைத்தோமா தாயக மக்களுக்காக, தமிழீழத்துக்காக கருத்துகளை வைத்தோமா?

அங்கு மக்கள் இன்னும் அழுது கொண்டிருக்கும் போது இங்கு விளையாட்டுப்போட்டி வைப்பதும் மக்கள் விளையாட்டு பார்த்து ரசிப்பது, சந்தோசப்படுவது, கும்மாளமடிப்பதும் சரியா? அதை தானே கேட்டோம். இதுவே வேறொரு பிரயோசனமான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாராட்டி தானே எழுதுவோம்.

சரி தாயகத்திற்கு வழங்கும் பண உதவியை தான் விடுங்கள். நாடுகடந்த அரசாங்கத்தால் புலம்பெயர் தேசத்தில் வேறு எதுவும் பிரயோசனமாக செய்ய முடியாதா?

ஒவ்வொருவரும் என்னென்ன எழுதியிருக்கிறோம் என்று வாசியுங்கள்.

எதிரியும் துரோகி இந்திய நாய்களும் புலத்தில் கூட சில கழுத்தில் கத்தி வைத்திருக்கிறார்கள். இவற்றை கடந்துதான் நாம் பயணிக்க முடியும்.

:lol: :lol: :lol: :lol: :lol: :lol:

எங்களையும் கூட இப்படி நினைத்த உங்களை எப்படி பாராட்டுவது என்று தான் தெரியவில்லை. :icon_idea:

நன்றி !

நான் எழுத வேண்டிய பலவற்றை நீங்களே எழுதி உள்ளீர்கள்.

சில கேள்விகளாக முடிந்திருப்பதன் காரணம் எனது கருத்து உங்களால் முழுமையாக உள்வாங்க படாதது என்பதை என்னால் புரிய முடிகிறது.

ஒரு தனிமனித அடையாளத்தை நாட்டில் உதவி செய்வதால் மறைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கும்போது. அதை நாடு கடந்த அரசோடு சம்பந்தபட்டவர்களுக்கும் இருக்குமே என்ற கேள்வி மட்டும் உங்கள் கருத்தில் காண முடியாமல் இருக்கிறது.

நீங்கள் செய்வதை இங்கே வந்து எழுதுங்கள் என்பதன்............. பொருள் உங்களால் தவறாக புரியபட்டிருகிறது என்று நினைக்கிறேன்.

நாடு கடந்த அரசிடம் நீங்கள் காசு கொடுத்தல் அதை என்ன செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு அறிய தரவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. காசு கொடுப்பவர்களோடு அதை பற்றி விவாதியுங்கள் அதற்கான விளக்கம் இல்லாமல் தொடர்ந்தும் கசுகொடுப்பதை உடனடியாகவே நிறுத்துவதே உத்தமம்.

திருவள்ளுவர்கூட திருக்குறளில் நீ நீ என்று எழுதியுள்ளார். அது ஒருமையை குறிக்கிறது நீங்கள் என்பது பன்மை ஆகி அதில் உங்களை வேறுபடுத்தி விடும் அபாயம் இருப்பதால் அப்படி எழுத பட்டுள்ளது. அதை யாரையும் தனிப்பட சுட்டி எழுதவில்லை எனது கருத்து பொதுப்படையானது. என்ன செய்தது என்ன செய்ததது? என்பவர்களுக்கு தனிப்படையானது. அதை தமிழில் வேறுவிதமாகமும் எழுத வழி இருக்கலாம். எனக்கு தெரிந்த தமிழ் இவளவுதான்.........

அது அறிஞர்கள் கூடுமிடத்து அநாகரீகம் எனில் நிர்வாகம் எனது கருத்தை அப்படியே தூக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை ஒருவரியில் எழுதுவதென்றால்.

ஏன் வெளியில் நின்று கேள்வி கேட்கிறீர்கள்? கதவை திறந்து நா. அ. வுக்குள் உள்ளே போக முடியாதா?

நன்றி !

நான் எழுத வேண்டிய பலவற்றை நீங்களே எழுதி உள்ளீர்கள்.

சில கேள்விகளாக முடிந்திருப்பதன் காரணம் எனது கருத்து உங்களால் முழுமையாக உள்வாங்க படாதது என்பதை என்னால் புரிய முடிகிறது.

ஒரு தனிமனித அடையாளத்தை நாட்டில் உதவி செய்வதால் மறைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கும்போது. அதை நாடு கடந்த அரசோடு சம்பந்தபட்டவர்களுக்கும் இருக்குமே என்ற கேள்வி மட்டும் உங்கள் கருத்தில் காண முடியாமல் இருக்கிறது.

நீங்கள் செய்வதை இங்கே வந்து எழுதுங்கள் என்பதன்............. பொருள் உங்களால் தவறாக புரியபட்டிருகிறது என்று நினைக்கிறேன்.

[size=5]அவர்கள் மக்களுக்கு பணத்தை எப்படி வழங்கினார்கள் என்று நாங்கள் கேட்கவில்லையே? இந்த விளையாட்டுப்போட்டியை ஏன் நடத்தினார்கள் என்று தானே கேட்டோம்?[/size]

நாங்கள் சொல்வது உங்களால் தவறாக புரியப்பட்டிருக்கா? அல்லது நீங்கள் சொன்னது என்னால் தவறாக புரியப்பட்டிருக்கா? வேடிக்கை. :o

அதனை நீங்கள் என்னை கேட்கவில்லை. பொதுவாக தான் கேட்டீர்கள். எனக்கும் நீ என்று தமிழில் பாவிப்பது தெரியும். (ஆனால் அப்படி பாவிப்பதை முடிந்தால் தவிருங்கள்.) ஆனால் அந்த சொல் உங்களுக்கு முதல் கருத்து எழுதிய யாயினி அக்காவை பாதித்து விடக்கூடாது என்று நினைத்து தான் நான் மீண்டும் திரிக்கு வந்து பதிலளித்தேன்.

ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்டு கூறிய கருத்து இந்த திரியில் எவர் எவர்க்கு பொருந்துகிறது என்று பாருங்கள்.

நன்றி :)

எனது கருத்தை ஒருவரியில் எழுதுவதென்றால்.

ஏன் வெளியில் நின்று கேள்வி கேட்கிறீர்கள்? கதவை திறந்து நா. அ. வுக்குள் உள்ளே போக முடியாதா?

என்னால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதற்குரிய இடத்திற்கு மேலே நான் போக முடியாது. முடிந்தவர்கள் தான் போயிருக்கிறார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் பயணம் சரியான பாதையில் போகிறது.......

அவர்கள் தேவையானதே செய்கிறார்கள்..........

இவை என்னுடைய கருத்தில்லை. இப்படி நான் சொல்ல முனையவும் இல்லை.

வெளியிலே நின்று கொண்டு குறை பிடிப்பது சுலபமானது. உள்ளே நின்று சேவை செய்வது உயிரோடு விளையாடுவது. கொள்ளை களவு தற்பெருமை இவைகள் இல்லாது தமிழனால் ஒரு அமைப்பை ........ ஏன் மனிதனால் ஒரு அமைப்பை உருவாக்க முடியாது. இதை பைபிளிலும் படித்ததாக ஞாபகம். ஆனால் தம்மை அற்பணித்தும் சிலர் உழைக்கிறார்கள் அவர்களையும் நீங்கள் சுடுகிறீர்கள் (வார்த்தைகளால்). எமது எதிரியும் இந்தியனும் அடிப்படை மனிதாபிமானம் தெரியாத மிருகங்கள். தொடர்ந்தும் ஒரு மக்கள் கூட்டத்தையே முன்னுக்கு தள்ளிவிட்டு விட்டு. தூற்றும் தொழிலை செய்து ஒரு கூட்டம் சிறப்புடன் வாழ்கிறது. அந்த கூட்டத்தை மரியாதை கலந்து எழுத எனக்கு முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா, நான் அவர்கள் உதவி செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு செலவழிக்கும் பணத்தையும் மக்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தான் சொல்கிறேன். :) :) :)

அதை நடத்தும் நேரத்தில் வேறு தமிழீழத்திற்கு அவசியமான முக்கிய அலுவல்களை பார்க்கலாம் என்றும் கூறினேன். :)

துளசி இங்கு விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரம் டொரல்களுக்கு உள்ளேயே முடிகிறது.போட்டி தொடங்க முன் இறந்த மாவீரர்களுக்கும் பொது மக்களுக்கும் இரண்டு நிமிட அஞ்சலி அடுத்து அமெரிக்க கொடி அடுத்துஏறுது பார் கொடி ஏறுது என்று எமது தேசிய பாட்டு முழங்கதேசியக்கொடி ஏற்றப்பட்டு தான் விளையாட்டு தொடங்கப்படுகிறது.இங்கு பிறந்து வளர்ந்த இளையோர்கள் குழந்தைகள் இன்னும் எத்தனை போர்களுக்கு எந்தக கொடி என்ன கொடி ஏன் ஏற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதற்குரிய இடத்திற்கு மேலே நான் போக முடியாது. முடிந்தவர்கள் தான் போயிருக்கிறார்கள்.

இதுதான்............ இதைதான் நானும் சொல்கிறேன்.

எமது உதவிகளுக்கு ஒரு எல்லையை போடும்போது......... எமது கேள்விகளுக்கும் ஒரு எல்லையை போடவேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது. அந்த எல்லையை சுலபமாக கடப்பவர்கள். உதவிக்காக அவர்களால் வரைய பட்ட எல்லைக்கு கூட சிலவேளைகளில் வர மறுக்கிறார்கள் என்பதே.

மரணத்தை பற்றி குறிப்பிட்ட அளவிற்கே விளக்கம் சொல்லலாம். அதற்கு மேலும் கேள்வி கேட்டால். "நீ செத்து பார்" இதை தவிர வேறு விளக்கம் இல்லை. ஒரு எல்லைக்குள் நின்றுதான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அடுத்தவனை எல்லைகளை கடந்து தள்ளிவிடுவதுதான் பிழையானது.

அவர்களால் முடியாத எதையும் செய்யும்படி எவரும் கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அங்குள்ள மக்கள் அழும்போது இங்கு தேவையில்லாத விடயங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் எழுதினேன்.... இதைவிட முக்கியப்படுத்தி செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கிறது. (எங்களால் முடியாது ஆனால் அவர்களால் செய்யக்கூடியது)

இதை புரிந்து நடந்தால் நாமே பாராட்டி எழுதுவோம். அவர்களுக்கான மக்கள் ஆதரவும் அதிகரிக்கும்.

சொல்ல வேண்டியதை பலர் சொல்லி விட்டார்கள். இனி நான் உங்களுக்கு பதிலளிப்பதிலிருந்து விலகுகிறேன்....... :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் சந்திப்போம்

1) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் யாழில் இணைக்கப்பட்ட ஓர் செய்தி ...

Posted 27 January 2011 - 09:48 PM

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார்.

seemaan_nagalingam.jpg

கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல்லாம் நா.க. தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.yarl.com/...showtopic=80988

கடந்த ஆண்டு இன்னொரு செய்தி ..

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது.

http://www.worldtamilweb.com/?p=4256

இந்தியா சென்று "ஒன்று சேர்ந்து தமிழீழம் அமைப்போம்" என்று அறைகூவல் விடுத்த மான்புமிகு தமிழீழ அமைச்சரை உள்விட்ட இந்தியா, பாதிரியார் இமானுவேல் அடிகளாரை இந்தியாவினுள் அனுமதியாது திருப்பி அனுப்பியது!!!!!!!! ... நாகதஅ வை உள்விட்டது என்ன காதலிலா????????

2) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் இன்னொரு செய்தி ..

புலிகளின் தலைமைச்செயலகம் என்ற பெயரில் ஐரோப்பா எங்கிலும் தோன்றியுள்ள கும்பலின் "சங்கீதன்" போன்ற முக்கியஸ்தகர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருகிறார்கள்

20120310-003728.jpg

.... இது ஊகங்களின் அடிப்படையில் திரிக்கப்பட்ட செய்திகளல்ல. இந்த சங்கீதனே ஒருபேப்பர் ஆசிரியரை ... மாவீரர்நாளை ஒன்றிணைந்து நடாத்த எடுத்த முயற்சிகளின் போது ... சந்தித்த போது ஒத்துக் கொண்டுள்ளார். "நாம் இந்தியா போய் வருவதில் என்ன தவறிருக்கிறது? யார் இந்தியாவோடு வேலை செய்வது? நீங்கள் நால்வர் எங்கள் இந்தியா தொடர்பான வேலைகளை பொறுப்பெடுங்கள். நாம் ஒதுங்குகின்றோம்!!" ... என்று திருவாய் மலர்ந்தாராம் மேஜர் ஜெனரல் சங்கீதன் மகத்தா!

... பிரித்தானியாவில் காலூன்றியுள்ள இந்த சங்கீதன் தலைமையிலான குழுவான புலிகளின் தலைமைச்செயலகத்துக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையே உள்ள தொடர்புகள் மறைக்க முடியாதவை!

... நாகதஅ இலுள்ள எல்லோரையும் நோக்கி விரல்களை நீட்ட முற்படவில்லை! அதில் சுபா சுந்தரலிங்கம் போன்ற நாட்டுப்பற்றாளர்களும் அடங்கும்! ஆனால் இந்த நாகதஅ இல் பல முகமூடிகள் பின்னிருந்து சில தலைகளை பொம்மைகளாக வைத்து இயக்குகின்றது! அது மறுக்கப்பட முடியாததவை

...கேபியின் அனைத்துலக பொறுப்பாளராக மலேசியாவில் இருந்து இயங்கும் இராமு சுபன், புனர்வாழ்வுக்கழக ரெஜி, சர்வே, மனோ, செல்வின், அமெரிக்க பாதிரி சந்திரகாந்தன் (நாகதஅ இன் லண்டன் தூண்வசந்தனின் முத்த சகோதரர்), ... போன்றோரின் நாகதஅ உடனான தொடர்புகளின் உண்மைகளை ... இவர்கள் ஒருவரும் நாகதஅ இன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல, அதற்கு மேல் நாகதஅ இனால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பிரதிநிகளும் அல்ல ... நாகதஅ உடனான தொடர்புகளை பகிரங்கப்படுத்துங்கள்!

Edited by Nellaiyan

தேசிய தலைவர் கருணாவை அறிமுகப்படுத்தியது போன்று.. அவரின் நிலையையும் சொல்லிவிட்டார். மாத்தையாவின் நிலையும் அதே. பாப்பா.. பற்றி ஆதாரமில்லாமல் எதனையும் எடுகோளாக எடுக்க முடியாது..!

என்னைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர்களின் strategy ஐ என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

1988ல் தேசிய தலைவரும் பிரேமதாச அரசுடன் டீலில் இருந்தார். அது அன்றைய காலத்தின் கட்டாயமாகவும் இருந்தது. அதற்காக அவர் உரிமைகளை தாரைவார்க்கவில்லை. ஒட்டுக்குழு புளொட்டு.. ஈபிடிபி.. ஈஎன் டி எல் எவ்.. ஈபி.. கருணா குழு செய்வது போன்ற டீலை அல்ல தலைவர் கொண்டிருந்தார். இயக்கத்தையும் மக்களையும் பலப்படுத்தி காப்பாற்றி... போராட்டத்தையும் பெரும் பலம் வாய்ந்த படைகளிடம் இருந்து காப்பாற்ற அவர் அப்படிச் செயற்பட்டார்.

நாளை நாடு கடந்த தமிழீழ அரசும்.. மக்களை.. உரிமைகளை விட்டுக்கொடுக்காத அப்படி ஒரு டீலுக்கு எவரோடு போனாலும் அதனை விளங்கிக் கொண்டு ஆதரிக்கத்தான் வேண்டும். சம்பந்தன் போல.. சிங்கக் கொடிக்கு விசுவாசம் பேசி மக்களை காட்டிக் கொடுப்பதை விட.. இது எவ்வளவோ மேல்..! :):icon_idea:

அதில் வர ஒரு தகுதி வேணும். இல்லாதவர்கள் எல்லைகளை.. ஆட்களை ஏமாற்றி.. கள்ளக்கடத்தலால் தான் வர முடியும்..! அதுவே மொத்த இனத்திற்கும்.. சர்வதேச அவமானமுமாகியுள்ளது..! மனித ஆட்கடத்தல் குற்றம் உட்பட பல குற்றங்கள் எமது போராட்டம் மீது விழ அகதிகளாய் ஓடி வந்தவர்களே காரணம். இதனையும் அவர்கள் உணரத்தலைப்பட வேண்டும். :):icon_idea:

அகதிகளாய் வந்த தமிழர்களால் தமிழ் இனத்திற்கே சர்வதேச ரீதியில் அவமானம் என்கிறீர்கள்.......

உலகிலேயே தமிழர்கள் மட்டும்தானா அகதிகளாக வந்து அசைலம் கேட்கிறார்கள்????.........அகதி அந்தஸ்து வழங்கும் மனிதாபிமான நோக்கத்தை ,இரக்கத்தை கொண்டிருக்கும் நாடுகளிற்கில்லாத கவலை உங்களுக்கு.......

சரி அது இருக்கட்டும் படித்தவர்கள் ,படிப்பதற்காக இங்கு வந்தவர்கள் எல்லோரும் படித்தவர்கள் போலவா எம் இனத்திற்காக

செயலாற்றினார்கள்.படித்தவர்கள் என்று பார்க்கும்போது எம் இனத்தையும்,போராட்டத்தையும் எத்தனை பேர்

விற்றார்கள் என்று பார்த்தோமானால் .......அவர்களால் எவ்வளவு பெரிய அவமானங்களை எம் இனம் சந்தித்து இருக்கிறது

என்பதை ஒரு தடவையாவது சிந்தித்துப்பார்க்கவில்லையா .........நிச்சயம் சிந்தித்துப்பார்த்து இருப்பீர்கள்.ஏனனில்

நீங்களும் படிச்சவராச்சே.... அதை நீங்கள் தான் சொன்னீர்கள் ....மாண்புமிகு மதிப்பிற்குரிய தேசத்தின் புயல் பாலசிங்கம் அண்ணா படித்தவர் என்று தான் தன்னை சொல்லவில்லை .....நாங்களே அவர் படித்தவர் என்று

சொன்னோம்...........நன்றி ..... :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

1) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் யாழில் இணைக்கப்பட்ட ஓர் செய்தி ...

கடந்த ஆண்டு இன்னொரு செய்தி ..

இந்தியா சென்று "ஒன்று சேர்ந்து தமிழீழம் அமைப்போம்" என்று அறைகூவல் விடுத்த மான்புமிகு தமிழீழ அமைச்சரை உள்விட்ட இந்தியா, பாதிரியார் இமானுவேல் அடிகளாரை இந்தியாவினுள் அனுமதியாது திருப்பி அனுப்பியது!!!!!!!! ... நாகதஅ வை உள்விட்டது என்ன காதலிலா????????

2) ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் இன்னொரு செய்தி ..

... பிரித்தானியாவில் காலூன்றியுள்ள இந்த சங்கீதன் தலைமையிலான குழுவான புலிகளின் தலைமைச்செயலகத்துக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையே உள்ள தொடர்புகள் மறைக்க முடியாதவை!

... நாகதஅ இலுள்ள எல்லோரையும் நோக்கி விரல்களை நீட்ட முற்படவில்லை! அதில் சுபா சுந்தரலிங்கம் போன்ற நாட்டுப்பற்றாளர்களும் அடங்கும்! ஆனால் இந்த நாகதஅ இல் பல முகமூடிகள் பின்னிருந்து சில தலைகளை பொம்மைகளாக வைத்து இயக்குகின்றது! அது மறுக்கப்பட முடியாததவை

...கேபியின் அனைத்துலக பொறுப்பாளராக மலேசியாவில் இருந்து இயங்கும் இராமு சுபன், புனர்வாழ்வுக்கழக ரெஜி, சர்வே, மனோ, செல்வின், அமெரிக்க பாதிரி சந்திரகாந்தன் (நாகதஅ இன் லண்டன் தூண்வசந்தனின் முத்த சகோதரர்), ... போன்றோரின் நாகதஅ உடனான தொடர்புகளின் உண்மைகளை ... இவர்கள் ஒருவரும் நாகதஅ இன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல, அதற்கு மேல் நாகதஅ இனால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பிரதிநிகளும் அல்ல ... நாகதஅ உடனான தொடர்புகளை பகிரங்கப்படுத்துங்கள்!

இப்ப என்ன சொல்லவாறீங்கள்?

நா. அ. இந்தியாவால் உருவாக்க பட்டது என்கிறீர்களா?

அல்லது...... இந்தியா அதை செயல் படுத்துகிறது?

அல்லது......... அதற்குள் இந்தியாவின் ஆட்கள் ஊடுருவி உள்ளார்கள்?

என்ன சொல்ல விரும்புறீங்கள் என்பதை விளக்கமாக சொன்னால் நாங்களும் அறியலாம்.

மூன்றாவது நடக்க நிறைய வாய்ப்புள்ளது........ அதை கடக்க வேண்டிய தேவை எனக்கும் உங்களுக்கும் இருக்கிறது. அதை கடப்பதென்றால் நானும் நீங்களும் அவர்களைபோல் நா.அ வுக்குள் உடனேயே ஊடுருவ வேண்டும். கதவை திறந்து உள்ளே போக வேண்டியதுதான்.

முதல் இரண்டும் நடப்பதாக ஆதாரங்கள் இருந்தால் நா.அ. வை உடனடியாக கலைக்க வேண்டிய தேவை எனக்கும் உங்களுக்கும் இருக்கிறது. அதற்கும் ஒரே வழி நாம் அதற்குள் ஊடுருவுவதுதான்.

நானும் நீங்களும் வெளியில் நின்று புலம்புவதால் ஏதும் நன்மை இருந்தால்........... அது என்ன என்று அறியத்தரவும். நானும் புலம்ப தொடங்க வேண்டும். மக்கள் அறிவார்கள் என்றால் முள்ளி வாய்க்கால் பற்றியும்தான் மக்கள் அறிந்துள்ளார்கள். யாருக்கு என்ன லாபம்?

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக வர உருத்திரன் அண்ணா என்ன எங்களை போல அள்ளகையா ?

அவர் எல்லாம் அள்ளிவிட்டு அரசியலுக்கு வந்த ஆள் .

என்னுடன் வி.டி.கந்தசாமியிடம் இரசாயன டியூசனுக்கு வந்தார் .இந்துக்கல்லூரிக்கு சற்று தள்ளி இருக்கு அவரின் மேல்வீடு ஆனால் அவர் படித்து சென்றல்.சட்ட கல்லூரிக்கு சிவபாலனிடம் போகும் காலங்களிலும் சந்தித்திருக்கின்றேன் .சிவபாலன் யாழ் மேயராக வந்து கச்சேரியடியில் யாரோ சிங்கள் இராணுவ தளபதிக்கு வைத்த குண்டில் பலியானார் .இவருடன் படித்த சிவபாலன் ,ரவிராஜ் இவர்கள் நாட்டிலே இருந்து அரசியல் செய்தார்கள்,இவர் புலிகள் உச்சிக்கு வந்தபின் தொத்திக்கொண்டவர்.

இவர் போல தான் இன்னொருவரும் பெயர் செல்வகுமார்.ஆள் மிக படித்த இஞ்சினியர் ,குமார் பொன்னம்பலத்தின் ஊடாக புலிகளுடன் தொடர்பு வைத்து கொஞ்சநாள் பிரபலமாகினார் பின்னர் ஒரு மூச்சையும் காணவில்லை .

எழுதி வையுங்கள் இவர் அரசுடன் டீல் போடும் காலம் தொலைவில் இல்லை .

நீங்கள் பிரபாகரன் ஏன் பங்கருக்குள் இருக்கிறார் என்று கேட்ட ஆளல்லோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு என்னால் எழுதப்பட்ட கருத்துக்கள் நாடு கடந்த அரசை குற்றம் பிடிப்பதற்கோ

அவர்களுக்கு இடைஞ்சல் செய்யவோ

அல்லது

அவர்கள் மேல் வீண் பழி போடவோ அல்ல.

அவர்களுக்கு வாக்களித்தவன்

100 பேருக்கு குறையாமல் வாக்களிக்க தூண்டியவன்

அவர்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தவன் செய்பவன்

என்கின்ற ரீதியில்

[size=5]அவர்களது நிகழ்கால இருக்கும் அமைப்புக்களுக்குள் ஊடுருவும் மற்றும் நன்றாக நடப்பவைகளை சீரளிக்கும் செயல்களையே இங்கு குற்றம் சொல்கின்றேன். அத்துடன் புலிகள் ஆயுத ரீதியில் போராடும்போதும் கூட்டமைப்பை அரசியலுக்கு உருவாக்கி அதை பலப்படுத்தியதுபோல் நாடு கடந்த அரசும் தனது அரசியல் பணிகளில் மிகவுவும் காத்திரமாக பயணிக்கணும் என்பதே எனது விருப்பமாகும். இல்லாத விடத்து அடுத்த தேர்தல் என்பதே கேள்விக்குறிதான்.....???[/size]

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார்.

seemaan_nagalingam.jpg

கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல்லாம் நா.க. தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.yarl.com/...showtopic=80988

... பாவம் அங்கு போன அமைச்சர்வாழ் நல்ல மனுசனாக இருக்கும்? போகச் சொல்லி இருப்பார்கள்? அவரும் போயிருப்பார், என்ன ஏது என்றறியாமல்?????

... நாகதஅக்களை இந்தியாவினுள் அனுமதித்தது ..??? ..

1) இவர்கள் வெற்றுத்தோட்டாக்கள் என்பதை அவர்கள் அனுமானித்திருக்கக்கூடும்?

... இல்லையேல் ..

2) நம்மவர்கள் தானே வருகிறார்கள், என உள் விட்டிருக்கக்கூடும்?

... சரியான விடை?? ... யாமறியோம் பராபரமே!

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு இந்தியாவில் தடை செய்யப்பட்டதா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.