Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் நீர் தடாகத்தில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவன் பலி! - தமிழரான வீட்டு உரிமையாளர் கைது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Black-rose150sadnews.jpg

[size=4]இரண்டு வயது சிறுவன் ஒருவன் அயலவரான தமிழர் ஒருவரின் வீட்டின் பின்வளவிலுள்ள நீர் தடாகத்தில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று காலை 10:20 மணியளவில் கனடா, ஸ்கார்பறோவில் பின்ச் கிழக்கு - டப்சகோர்ட் சந்திப்புக்கருகில் உள்ள கரிங்க் பிளேசில் நிகழ்ந்துள்ளது.[/size]

[size=4]வீட்டின் உரிமையாளரான 58 வயதான சிறிரங்கநாதன் அம்பலம் என்பவரை தடாகத்தை பாதுகாப்பற்ற வகையில் அலட்சியமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனை முதலில் ஸ்கார்பறோ சென்ரனரி மருத்துவமனைக்கும் பின் அங்கிருந்து ரொறன்ரோ "சிக் சில்ரன்" சிறுவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறிது நேரத்தின் பின் சாவடைந்துள்ளான்.[/size]

[size=4]இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது:[/size]

[size=4]சிறுவனின் தாயார் மற்றும் பாட்டியாரின் அழுகுரல் கேட்டு வீதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஒடிச் சென்று சிறுவனை தாடாகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து அவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிச் செய்தனர் என்றார்..[/size]

[size=4]முதலில் குழந்தையின் தாயாருக்கு கை விலங்கிட்ட காவல்துறையினர் பின்னர் அவரை விடுத்து வீட்டின் உரிமையாளரை தடாகத்தை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தார் என்ற குற்றத்தின் பேரில் கைது செய்தனர். வீட்டின் பின்வளவிலுள்ள இத்தடாகத்தில் உள்ள நீரை வீட்டு உரிமையாளர் தனது பூந்தோடட்த்தைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்.[/size]

[size=4]சிறுவன் பகல்வேளைகளில் அவனது பாட்டியரின் பாராமரிப்பில் இருந்து வருபவன் என்றும் அவரது கவனயீனமே இந்த சம்பவத்துக்குக் காரணம் என அயலவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். எனினும், இந்த தாடகம் நகரசபையிலிருந்து முறையான அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது என்று தடாக வீட்டு உரிமையாளரை காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.[/size]

[size=4]சிறிரங்கநாதன் அம்பலம் நீர்த் தாடகத்துடனே இந்த வீட்டை வாங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=4]- மாநகர சட்டத்தின்படி வேலி போடாததன் காரணத்தால் தமிழரான உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது (கைதாகவில்லை என எண்ணுகின்றேன்) [/size]

[size=4]- எவ்வாறு இந்த குழந்தை பக்கத்து வீட்டுக்குள் வந்தது என திட்டவட்டமாக தெரியவில்லை[/size]

[size=4]- 34 மில்லியன்கள் மக்களை கொண்ட கனடாவில் வருடம் 500 பேரளவில் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.[/size]

0ad0cb0343a693e5f8af7847e861.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் புரியவில்லை.

அத்துடன் இது போன்ற தண்ணி தங்கும் இடங்களை வீட்டில் வைத்திருப்பதற்கு அனுமதியுண்டா?

ஏனெனில் இதன் மூலம் நுளம்பு போன்ற பல சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டல்லவா??? :( :(

அதுதான் புரியவில்லை.

அத்துடன் இது போன்ற தண்ணி தங்கும் இடங்களை வீட்டில் வைத்திருப்பதற்கு அனுமதியுண்டா?

ஏனெனில் இதன் மூலம் நுளம்பு போன்ற பல சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டல்லவா??? :( :(

[size=4]அனுமதி பெற வேண்டும். உங்கள் வீட்டில் இல்லை வளவில் ஏதாவது ஒரு கட்டிட ரீதியான மாற்றம் செய்வதற்கு மாநகரசபையிடம் அனுமது பெற வேண்டும்.[/size]

[size=4]அதுபோல் உங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள நடைபாதையில் உள்ள பனியை அகற்ற வேண்டியதும் வீட்டுக்காரரின் பொறுப்பு. பாதசாரி விழுந்தால் அதற்கு அந்த வீட்டு உரிமையாளரே பொறுப்பு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்டோவில் இன்று என்ற செய்தி பகுதியிலும் இந்த குழந்தையின் இறப்பு பற்றிய விபரம் இணைக்கப்பட்டு இருக்கு பார்க்கலாம்..பூக்கன்றுகளுக்கு தண்ணீர் பாச்சுவதற்காக ஒரு பொன்ட் ( pond )போன்று தயாரிக்கபட்டு இருந்து இருக்கிறது.

Edited by யாயினி

[size=1]

[size=4]- குற்றவியல் சட்டத்தின் படி இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருபது வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் [/size][/size][size=1]

[size=4]- ஏற்கனவே கட்டியிருந்த சிறு குளத்துடன் தான் இந்த தமிழர் இந்த வீட்டை வேண்டியிருப்பதாக கூறப்படுகின்றது [/size][/size][size=1]

[size=4]- சிறுவனின் பெற்றோர் மீது ஏதும் தண்டனை விதிக்கப்பட்டதா? என தெரியவில்லை [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக செய்திகளுக்கு......

http://www.cp24.com/...0/?hub=CP24Home</p>

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கட்டப்பட்டிருந்த குளத்துடன் வாங்கியிருந்தால் தண்டனை குறைய வாய்ப்புள்ளது.. நல்ல வக்கீலைப் பிடித்தால் வெளியே வந்துவிடவும் சந்தர்ப்பம் உண்டு..

அவ்வாறு நிகழும் பட்சத்தில், முன்னர் இவ்வீட்டில் குளத்தைக் கட்டியவர் சிக்கலுக்கு ஆளாவார்..

வீடுகளிலோ அல்லது எமது சொத்துக்கள் எதுவாகினும் முன் அனுமதி பெற்றே மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.. நாங்கள் வீட்டை விற்றாலும், பிரச்சினை என்று வந்துவிட்டால் விடாது துரத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தை தாழும் அளவுக்குத் தண்ணீர் இந்தக் குளத்தில் இருந்திருந்தால், வீட்டுக்கு அல்லது குளத்திற்கு பாதுகாப்பு வேலி இல்லாமலிருந்தால், அல்லது எச்சரிக்கைப் பலகை (குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் விளக்கப் படங்களுடன்) இல்லாமல் இருந்திருந்தால், இவர் அவுஸ்திரேலியாவில் வாழ்பவராக இருந்திருந்தால், இவர் இப்போது உள்ளே இருப்பார். எவரது அனுதாபமும், இவருக்குக் கிடைக்கக் கூடாது!

இந்தக் குழந்தையின் நிலையில், எங்கள் குழந்தையொன்றை வைத்துப் பார்ப்பதே நியாயமாகும்!

அதை விட்டு, மனு நீதி கண்ட சோழனின் கதையை, ஆயிரம் பேருக்குப் பீற்றிக் கொண்டிருப்பதில், எந்த விதமான பிரயோசனமும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டு சிறுவன் எப்படி இந்த வீட்டை போனவன்?...சிறுவனின் பெற்றோரிலும் பிழை இருக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நீர்த்தடாகம் வைத்திருந்தவர் வீட்டுக்கு அந்தக்குழந்தை வருவதற்கு வழி இருந்திருந்தால் அதை அவர் அடிக்காது விட்டது தவறகாக இருந்தாலும் குழந்தை பெற்றோர் குழந்தையை அலட்சியமாக விட்டது மிகப்பெரிய தவறுதானே ....

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களில் நிச்சயம் தவறிருக்கின்றது!

ஆனால், குழந்தைக்கு அந்தக் குளம் ஒரு விளையாட்டுப் பொருளாகத் தெரிந்தது!

அந்தக் குளம், அடைக்கப் பட்டிருந்தால், பெற்றோர் கவனமின்றி இருந்தாலும், அந்தக் குழந்தை விளையாடி விட்டுத் திரும்பிப் போயிருக்கும்! அல்லது பெற்றோர் தேடி வந்திருக்கக் கூடும்!

அந்தக் குழந்தை, நிச்சயம் நீரில் மூழ்கி இறந்திருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த நண்பரொருவர், பூந் தோட்டத்தின் நடுவில்...

தங்கமீன் வளர்ப்பதற்காக... ஒன்றரை மீற்றர் ஆழத்தில், குளம் ஒன்று கிண்டி... மீன்களை வளர்த்து வந்தார்.

ஒரு நாள், இவர் தோட்ட வேலையில்.. கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது..

அங்கு நின்ற, இவர் மகள் அந்தக் குளத்துக்குள் விழுந்து விட்டார்.

சிறிது நிமிடங்களின் பின் தான், மகளைக் காணவில்லை என்று தேடிய போது...

தண்ணீரின் அடியிலிரிந்து, வித்தியாசமான அசைவுகள் வருவதைக் கண்டு...

நீரிலிருந்து மகளை, மீட்டெடுத்தார். சில வினாடிகள் தாமதித்திருந்தால்.. மகளை இழந்திருப்பார்.

அத்துடன் குளத்தை மண் போட்டு மூடி விட்டார்.

சிறிய பிள்ளைகள் இருக்கும் வீட்டில்... நீர், நெருப்புடன் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.

[size=4]குழந்தைக[/size]ள் [size=4]பொதுவாகவே அமைதியாக தண்ணியில் மூழ்கி விடுவார்கள் என சொல்லப்படுகின்றது. அத்துடன் கண்ணை மூடி திறப்பதற்குள் அசம்பாவிதம் நடந்துவிடும். பெற்றோரே அதிகம் கவனம் எடுக்கவேண்டும், ஏனெனில் பிள்ளை அவர்களுடையதே. [/size]

[size=1][size=4]இருந்தாலும் 'பார்ட்டிக்கு' கூப்பிடுபவர் தனது விருந்தாளிகள் 'வெறியில்' வாகனம் ஓட்டாமல் பார்க்கவேண்டும். அதுபோல் தான் தண்ணீர்தாடாகம் வைத்திருப்பவரும்.[/size][/size]

[size=1][size=4]எனவே பொறுப்பு எல்லோர் மீதும் உள்ளது. [/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த நண்பரொருவர், பூந் தோட்டத்தின் நடுவில்...

தங்கமீன் வளர்ப்பதற்காக... ஒன்றரை மீற்றர் ஆழத்தில், குளம் ஒன்று கிண்டி... மீன்களை வளர்த்து வந்தார்.

ஒரு நாள், இவர் தோட்ட வேலையில்.. கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது..

அங்கு நின்ற, இவர் மகள் அந்தக் குளத்துக்குள் விழுந்து விட்டார்.

சிறிது நிமிடங்களின் பின் தான், மகளைக் காணவில்லை என்று தேடிய போது...

தண்ணீரின் அடியிலிரிந்து, வித்தியாசமான அசைவுகள் வருவதைக் கண்டு...

நீரிலிருந்து மகளை, மீட்டெடுத்தார். சில வினாடிகள் தாமதித்திருந்தால்.. மகளை இழந்திருப்பார்.

அத்துடன் குளத்தை மண் போட்டு மூடி விட்டார்.

சிறிய பிள்ளைகள் இருக்கும் வீட்டில்... நீர், நெருப்புடன் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.

இந்தமாதியான வினையான வேலைகளை பார்ப்பவர்கள் தமது குழந்தைகளையும் கவனமாக பார்க்கவேண்டுமல்லவா ?

எனக்கு உங்கள் நண்பர் மேல்தான் கோபம் வருகின்றது நல்ல வேலையாக நான் அவ்விடத்தில் நிற்கவில்லை நின்றிருந்தால் உணர்ச்சிவசப்பட்டு கதப்பொத்தி ரண்டு கொடுத்திருப்பேன் .

*அதன்பின் அவர் எனக்கு திருப்பி அடித்திருப்பார் அது வேறு விடயம் .

  • கருத்துக்கள உறவுகள்

<p>

தங்க மீன் வளர்ப்புக்கு அமைக்கப்பட்ட குளம் என்றால் ஓரளவுக்கு தன்னும் சுத்தமானதாக இருந்திருக்கும்..ஆழம் குறைந்ததாகவும் இருந்திருக்கும்..அந்தப் பிள்ளையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சற்று இலகுவாக இருந்திருக்கும்..ஆனால் இங்கே இந்த இரண்டு வயது பிள்ளை விழுந்த இடத்தைப் பார்க்கும் போது மிகவும் அசுத்தமான குளமாக காணப்படுகிறது..ஊரில் உபயோத்தில் இல்லாத கிணறு எப்படி இருக்குமோ அப்படித் தானே காட்சி அளிக்கிறது..நம்மவாகள் சொன்னால் சண்டைக்கு வருவார்கள் ஆனால் சொல்ல வேண்டியும் இருக்கிறது.. முற்று முழுதான கவலையீனம் பெற்றோர் மீதே.பெற்றோர் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது ஒரு கண்ணாடிப் பொருளை எப்படி உடையாமல் பாதுகாக்கிறமோ அப்படித் தான் பாது காக்க வேணும்..அந்தப் பிள்ளையை பகலில் வைத்திருக்கும் அவரது பாட்டி தான் பொறுப்பு என்கிறார்கள்..அது அப்படி இல்லை அவர்களை நம்பி இந்தப் பிள்ளையை அவர்கள் வீட்டில் விடும் பெற்றோரே முழுப் பொறுப்புக்கும் உரித்தானவர்கள்..தாத்தாக்காரன் பணத்தைக் கட்டி அன்று மாலையே வெளியில் வந்துட்டார்.இனி தொடர்ந்தும் இந்தப் பணம் தான் விழையாடப் போகிறது போல் தெரிகிறது..தமிழ் பெற்றோர்களே தயவு செய்து இனிமேலாவது உங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த அக்கறையாக இருங்கள்..

Edited by யாயினி

[size=5]15000 டாலர் பிணையில் விடப்பட்டார் தமிழர் ![/size]

[size=5]Ampalam was released on $15,000 bail. He was ordered to stay in the province and hand over any travel documents. He is also to report any change of address or occupation to police. Ampalam refused to comment as he left the courthouse. He is to appear in court again Aug. 2.[/size]

[size=5][size=4]http://www.thestar.com/news/crime/article/1214586--bail-granted-to-homeowner-charged-in-toddler-s-backyard-pond-drowning-death?bn=1[/size][/size]

[size=5] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதியான வினையான வேலைகளை பார்ப்பவர்கள் தமது குழந்தைகளையும் கவனமாக பார்க்கவேண்டுமல்லவா ?

எனக்கு உங்கள் நண்பர் மேல்தான் கோபம் வருகின்றது நல்ல வேலையாக நான் அவ்விடத்தில் நிற்கவில்லை நின்றிருந்தால் உணர்ச்சிவசப்பட்டு கதப்பொத்தி ரண்டு கொடுத்திருப்பேன் .

*அதன்பின் அவர் எனக்கு திருப்பி அடித்திருப்பார் அது வேறு விடயம் .

இந்த இடத்தில்... தங்கமீன் வளர்க்க, குளம் வைச்சால்...,

நல்லாயிருக்கும் என்று ஐடியா... கொடுத்ததே... நான் தான்.

அடியை... எனக்குத் தாருங்கள் தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

தங்க மீன் வளர்ப்புக்கு அமைக்கப்பட்ட குளம் என்றால் ஓரளவுக்கு தன்னும் சுத்தமானதாக இருந்திருக்கும்..ஆழம் குறைந்ததாகவும் இருந்திருக்கும்..அந்தப் பிள்ளையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சற்று இலகுவாக இருந்திருக்கும்..ஆனால் இங்கே இந்த இரண்டு வயது பிள்ளை விழுந்த இடத்தைப் பார்க்கும் போது மிகவும் அசுத்தமான குளமாக காணப்படுகிறது..ஊரில் உபயோத்தில் இல்லாத கிணறு எப்படி இருக்குமோ அப்படித் தானே காட்சி அளிக்கிறது..நம்மவாகள் சொன்னால் சண்டைக்கு வருவார்கள் ஆனால் சொல்ல வேண்டியும் இருக்கிறது.. முற்று முழுதான கவலையீனம் பெற்றோர் மீதே.பெற்றோர் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது ஒரு கண்ணாடிப் பொருளை எப்படி உடையாமல் பாதுகாக்கிறமோ அப்படித் தான் பாது காக்க வேணும்..அந்தப் பிள்ளையை பகலில் வைத்திருக்கும் அவரது பாட்டி தான் பொறுப்பு என்கிறார்கள்..அது அப்படி இல்லை அவர்களை நம்பி இந்தப் பிள்ளையை அவர்கள் வீட்டில் விடும் பெற்றோரே முழுப் பொறுப்புக்கும் உரித்தானவர்கள்..தாத்தாக்காரன் பணத்தைக் கட்டி அன்று மாலையே வெளியில் வந்துட்டார்.இனி தொடர்ந்தும் இந்தப் பணம் தான் விழையாடப் போகிறது போல் தெரிகிறது..தமிழ் பெற்றோர்களே தயவு செய்து இனிமேலாவது உங்கள் குழந்தைகளின் மேல் மிகுந்த அக்கறையாக இருங்கள்..

உங்கள், அக்கறையான நீண்ட கருத்துக்கு நன்றி யாயினி.

இங்கு.... பொது இடங்களிலோ, பாடசாலை அருகில் உள்ள குளங்களிலோ...

20 - 30 சென்ரி மீற்றர் அளவில் பலமான கம்பி வலை அமைத்திருப்பார்கள்.

செலவு கூடிய விசயம் என்றாலும்... மனித உயிர் முக்கியம்தானே..

கூழுக்கும், மீசைக்கும் ஆசைப்பட்டால்... கன செலவு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.