Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

----விலைமாது விடுத்த கோரிக்கை-----

Featured Replies

----விலைமாது விடுத்த கோரிக்கை-----

ராமன் வேசமிட்டிருக்கும்

பல ராட்சசனுக்கு

என்னை தெரியும்.

...

பெண் விடுதலைக்காக போராடும்

பெரிய மனிதர்கள் கூட

தன் விருந்தினர் பங்களா

விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்

கடன் சொல்லிப் போன

கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்

எவரும் என்னிடம்

சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்

என்னை தீண்டியவர்கள் யாரும்

திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!

விபச்சாரிகள் கைது என்றுதானே

விற்பனையாகிறது..

விலங்கிடப்பட்ட ஆண்களின்

விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட

ஆண்களின் புனிதம்

அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு

காட்டில் இரை தேடும்

குருவியைப் போல்

என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்

இன்னொரு கருவியைப் போலத் தான்

என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்

பகலில் அது பணமாக மாறும்.

பின்தான்

என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்

நிரந்தர உடையானல்தான்

சேலை எதற்கென்று

நினைத்ததுண்டு.

சரி

காயங்களை மறைப்பதற்கு

கட்டுவோம் என்று

கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்

தழும்புகளைப் பார்த்தால்

வரி குதிரைகள் கூட

வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத

எனக்கு

விற்பதற்க்காவது இந்த

உடம்பு இருக்கிறதே!

நாணையமற்றவர் நகங்கள்

கீறி கீறி என்

நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்

நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை

என்னை கொடுமைப் படுத்திய

கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்

வெளியில் சிந்தும் வேர்வையை

என்னிடம் ரத்தமாய்

எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.

கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று

ஏசும் எவரைப் பற்றியும்

கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்

விதவை - விபச்சாரி

முதிர்கன்னி - மலடி

ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்

இதில் ஏதேனும்

ஒரு பட்டம்

அநேக பெண்களுக்கு

அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.

எப்போதும்

இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை

முத்தமிடுவதற்க்குள்

என் மகளை மருத்துவராய்

ஆக்கிவிட வேண்டும்.

என் மீது படிந்த தூசிகளை

அவளை கொண்டு

நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்

இந்த சமூகம்

இவள்

மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு

மாதவியின் மகள் என்பதை மட்டுமே

ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக

இரு கோரிக்கை.

என்னை

மென்று தின்ற ஆண்களே!

மனைவிடமாவது கொஞ்சம்

மென்மையாக இருங்கள்.

எங்களுக்கு இருப்பது

உடம்பு தான்

இரும்பல்ல.

என் வீதி வரை

விரட்டிவரும் ஆண்களே!

தயவு செய்து விட்டுவிடுங்கள்.

நான் விபச்சாரி என்பது

என் வீட்டுக்கு தெரியாது.

----தமிழ்தாசன்---

via facebook

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் பெண்களால் பாவிக்கப்படும்.. male escorts ம் இருக்கிறாங்க..! அவங்களும்.. இப்படி எழுத வெளிக்கிட்டால்.....???!

விபச்சாரிகள் அந்தத் தொழிலை விட்டு வேறு தொழில் தேடிக் கொள்வதே பாதுகாப்பு..! அதேபோல் ஆண் விபச்சாரிகளுக்கும் இது பொருந்தும்..! இருந்தும்.. இவர்கள் இதை விடுவாங்க என்று நினைக்கிறீங்க..

போதைப் பொருள் வியாபாரத்துக்கு அடுத்தபடியாக இலகுவாக பணம் சம்பாதிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று..! சில escorts கால்பந்தாட்ட வீரர்கள் போல மில்லியனர்களாகவும் உள்ளனர்..! இது குறித்த விபரணம் ஒன்றை பிபிசியின் பார்த்திருக்கிறேன்..!

இப்படியே தான்.. பல காலமா கவிதை எழுதிட்டு இருக்கிறாங்க.. மாறி மாறி.. ஆனால் மாற்றம் என்பது மட்டும் அங்கு இல்லை..!

இவர்களால் அரசுகளுக்கு இரட்டைச் செலவு.. ஒன்று.. இவர்களைக் கண்காணிப்பது. இரண்டு.. பால்வினை நோய்கள் பரவாமல் இருக்க இவர்களுக்கு வழங்கிற மருத்துவ வசதிகள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என் மேனியில் இருக்கும்

தழும்புகளைப் பார்த்தால்

வரிக் குதிரைகள் கூட

வருத்தம் தெரிவிக்கும்.

தெருவோரத்து வேசிகளைத்,

தேவ தாசிகளாக்கிய கூட்டம்!

சீதையின் தூய்மையைக் காட்டச்,

சிதையில் ஏற்றிய கூட்டம்!

சிறந்த மனைவி வீட்டிலிருக்கச்,

சின்ன வீடு தேடுகிற கூட்டம்!

தாசி பொன்னிக்கு நான் அடிமை!

தூசி தட்டிப் பார்க்கிறேன், கம்பன்!

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் இவர்களை நான் இங்கு சந்திப்பேன்.

ஒரு வகையில் பாவப்பட்ட யென்மங்கள் என்று தான் தோன்றும். காசுக்காக உடலை விற்பது என்பது மிகவும் கொடுமையானது என்னைப்பொறுத்தவரை.

நேற்று இரவு கூட ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஒருவருக்காக காத்திருந்த இடத்தில் இவர்கள் சிலர் நின்று போவோர் வருவோருடன் விலைபேசி நின்றது மிகவும் கவலைக்குரியதாகவே எனக்குப் பட்டது. அதேநேரம் பலர் நெடுக்கு கூறியது போல் பழக்கப்பட்டு இதை வியாபாரமாக்கி பலரின் அழிவுக்கும் காரணமாகியுள்ளதும் உண்மை.

திருடராகப்பார்த்து திருந்தாவிட்டால்......???

மற்றும்படி நெடுக்கு சொன்னதற்கு மறு பக்கமும் உண்டு.

இது கொஞ்சம் காவல்துறைக்கும் அரசுக்கும் தலையிடிகளைக்குறைக்கக்கூடியது. இவர்கள் இல்லாவிட்டால் வல்லுறவுகளும் சீர்கேடுகளும் அதிகரிக்கும் என்பதால்தான் அரசு இவற்றை மனமின்றி அனுமதித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் இவர்களை நான் இங்கு சந்திப்பேன்.

ஒரு வகையில் பாவப்பட்ட யென்மங்கள் என்று தான் தோன்றும். காசுக்காக உடலை விற்பது என்பது மிகவும் கொடுமையானது என்னைப்பொறுத்தவரை.

நேற்று இரவு கூட ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஒருவருக்காக காத்திருந்த இடத்தில் இவர்கள் சிலர் நின்று போவோர் வருவோருடன் விலைபேசி நின்றது மிகவும் கவலைக்குரியதாகவே எனக்குப் பட்டது. அதேநேரம் பலர் நெடுக்கு கூறியது போல் பழக்கப்பட்டு இதை வியாபாரமாக்கி பலரின் அழிவுக்கும் காரணமாகியுள்ளதும் உண்மை.

திருடராகப்பார்த்து திருந்தாவிட்டால்......???

மற்றும்படி நெடுக்கு சொன்னதற்கு மறு பக்கமும் உண்டு.

இது கொஞ்சம் காவல்துறைக்கும் அரசுக்கும் தலையிடிகளைக்குறைக்கக்கூடியது. இவர்கள் இல்லாவிட்டால் வல்லுறவுகளும் சீர்கேடுகளும் அதிகரிக்கும் என்பதால்தான் அரசு இவற்றை மனமின்றி அனுமதித்துள்ளது.

நானும் இவர்களைக் கண்டிருக்கிறேன். பார்க்கப் பாவமாத்தான் இருக்கிறது. அநேகம் பேர் பெற்றோர்களை விஞ்சி வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலும்.. கிழக்கு ஐரோப்பியர்கள் தான் அதிகம். இவர்களை எல்லாம்.. எப்படித்தான்.. ஆண்கள் மிஸ்யூஸ் பண்ண மனம் வருகுதோ..???!

நான்னா.. கூப்பிட்டு காசைக் கொடுத்து.. போய் வாழ்க்கைல செற்றிலாகுங்க என்று சொல்லி விட்டிட்டுவன். பட் அவங்க தான் கேட்க மாட்டாங்களே என்றிட்டு போயிடுறது. அப்புறம்.. இவங்க கூட கதைக்கிறதே ஒரு மாதிரியான ஆண்கள் தான். கொஞ்சம் கெளரவமான ஆண்கள்.. இவங்க கூட கதைக்கிறதுமில்ல கண்டுக்கிறதுமில்ல.!

இங்கெல்லாம் இரவில் சேவிஸ் ஸ்ரேசன் வழிய.. பெற்றோல் ஸ்ரேசன்.. இரவு பெரிய சுப்பர்மார்க்கெட் மற்றும் நிலக்கீழ் இரயில் நிலையங்களில தான் நின்று ஆட்பிடிப்பார்கள்..! பொலிஸ் கண்டும் காணாமலும் போகும். இவர்களுக்கு விருந்தாவது.. பெரும்பாலும்.. கனரக வாகனமோட்டிகள்.. கடின வேலை செய்வோர்.. மற்றும்.. போதைக்கு (மது.. போதைப்பொருள்) அடிமையான கூட்டம். இவர்களின் நடமாட்டம் மாலை 9:00 பிறகு தான் இருக்கும்.. அநேகம்..! குறிப்பாக மத்திய லண்டனில்.. நல்ல வியாபாரம் செய்வதாகக் கேள்வி..! சாதாரணமானவர்களில். வெளிநாடுகளில் இருந்து வரும்.. காப்பிலிகள் தான் அதிகம்.. இவர்களை அணுகுவது.

இதைவிட மசாஜ் பார்லர்.. பப்..கிளப் என்றும் கொஞ்சப் பேர் போய்.. இப்படியான பெண்களோட தொடர்பு வைக்கினம். யுனி வழிய படிக்கிறவை... இப்படியான இடங்களில தான் பிடிக்கிறவை...! அதுக்காக நாங்க எல்லாம் அப்படியில்ல. நாங்க எப்பவும் நல்ல பிள்ளைங்க..! கெட்ட பழக்கம் பழகிறதில்ல..! இதுதான் கெட்டதுன்னு தெரியிறதால அதுகளைச் செய்யுறதில்ல. பலர் இது கெட்டதென்னே புரியாம.. செய்யுறாங்க. அவங்களையும் குறை சொல்ல முடியாது தான். பெற்றோர் சமூகம் அவங்கள சரியா வழிநடத்தாதது தான் அவங்க தவறு செய்யக் காரணம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில்

எங்கேயோ போயிற்றீங்க தம்பி...

உங்க பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"களவும் கற்று மற"

என்று, ஔவையாரோ... திருவள்ளுவரோ சொன்னதாக, சின்னனில் படிச்ச ஞாபகம். :)

  • கருத்துக்கள உறவுகள்

"களவும் கற்று மற"

என்று, ஔவையாரோ... திருவள்ளுவரோ சொன்னதாக, சின்னனில் படிச்ச ஞாபகம். :)

கற்று கொள்ளலாம்...........

மறக்கலாமா என்பதுதான் கேள்விக்கு உரியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் இவர்களை நான் இங்கு சந்திப்பேன்.

ஒரு வகையில் பாவப்பட்ட யென்மங்கள் என்று தான் தோன்றும். காசுக்காக உடலை விற்பது என்பது மிகவும் கொடுமையானது என்னைப்பொறுத்தவரை.

நேற்று இரவு கூட ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஒருவருக்காக காத்திருந்த இடத்தில் இவர்கள் சிலர் நின்று போவோர் வருவோருடன் விலைபேசி நின்றது மிகவும் கவலைக்குரியதாகவே எனக்குப் பட்டது. அதேநேரம் பலர் நெடுக்கு கூறியது போல் பழக்கப்பட்டு இதை வியாபாரமாக்கி பலரின் அழிவுக்கும் காரணமாகியுள்ளதும் உண்மை.

திருடராகப்பார்த்து திருந்தாவிட்டால்......???

மற்றும்படி நெடுக்கு சொன்னதற்கு மறு பக்கமும் உண்டு.

இது கொஞ்சம் காவல்துறைக்கும் அரசுக்கும் தலையிடிகளைக்குறைக்கக்கூடியது. இவர்கள் இல்லாவிட்டால் வல்லுறவுகளும் சீர்கேடுகளும் அதிகரிக்கும் என்பதால்தான் அரசு இவற்றை மனமின்றி அனுமதித்துள்ளது.

அரசாங்கம் எனும்போதும் ஆணதிக்கம் எட்டிபார்க்கும்.

ஆணாதிக்கத்தின் ஒரு நிழலாகவே விபச்சாரம் தொடர்கிறது.

மேலை நாடுகளில் தந்திரமாக அழகு பொம்மைகளாக பெண்களை நடமாட விட்டுவிட்டு அதற்கு சுதந்திரம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

எமது காலம் கடின உழைப்போடு போரின் துயரங்கள் காயங்களுடனும் போய்விட்டது.

அடுத்த சந்ததி...........

கார்டூனில் இருந்து கடைவீதி விளம்பர பலகை வரை காமத்தையே கண்டு அதனோடு போராடி வளர்கிறது.

கீழை நாடுகளோடு ஒப்பிடும்போது "மேலை நாட்டில்தான் ஆண்மை குறைவு" அதிகமாக உள்ளது அடிப்படை காரணம் சதா அதே சிந்தனை அதே வாழ்கை என்று ஒரு குறிப்பிட்ட வயதில் பழைய இரும்புக்கு போகும் வண்டியாகி விடுகிறது. அதன் பிரதி பலிப்பாகவே பில்லியன் டொலர் வியாபாரமாக வயாகிரா வளர்ந்துள்ளது.

அரசனை நம்பி புருஷனை விட்ட நிலைதான்

[size=5]கவிதைக்கு நன்றி அபராஜிதன் ,[/size]

[size=5]பொதுவாக ஜரோப்பா தவிர்த்த மற்ற ஏனைய நாடுகளில் விபசாரத்துக்கு முக்கியமான காரணம் வறுமைதான் . கல்வி அறிவின்மை ,ஆண் துணையை இழந்திருத்தல், வாழ்வாதாரம் இன்றி இருத்தல் , சில சமூக புறகணிப்புக்கள் போன்றவற்றால் சாதாரண பெண்கள் கூட இந்த கடுமையான வாழ்க்கை சுழற்சியில் சிக்கி கொள்கிறார்கள் . இதுவரை காலமும் இருந்த வீரத்தின் விளைநிலங்கள் கூட இப்போது இந்த அரக்கனின் பிடியில் சிக்கி கொண்டுஇருக்கிறது .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கற்று கொள்ளலாம்...........

மறக்கலாமா என்பதுதான் கேள்விக்கு உரியது.

சரியான கேள்வி மருதங்கேணி.

கெட்ட வழியில் போகும் எவரும்... நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாது.

மற்றவர்கள் எம்மை, ஏமாற்ற நினைக்கும் போது.... நாம் களவையும் கற்றுருந்தால் தான்...

நாம் ஏமாறாமல்.. தப்பிக்க முடியும்.

இல்லாவிட்டால்.. எம்மை, அப்பாவியாக்கி... இழிச்சவாயர் ஆக்கிப் போடுவார்கள். :)

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்

விபச்சாரம் என்றால் என்ன , பாலுறவு என்றால் என்ன என்ற கேள்விக்கு இன்று யாராவது சரியான அர்த்தம்

சொல்லமுடியுமா என்று சிந்திப்போமானால் விடை மிகக் கடினமானதே. சரி வறுமையின் நிமித்தம்,குடும்ப சூழ்நிலைகளின் நிமித்தம் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கும், தனது ஆசையின் நிமித்தம் வாழ்க்கை கட்டுமானங்கள் ,எல்லைகளை மீறி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இங்கு நான் குறிப்பிட்டு கேட்பது பெண்களை மட்டுமல்ல.ஆண்களையும் சேர்த்துதான். தனது குடும்பத்தை காக்கும் பொறுப்புடைய ஒருவர் பணம் சம்பாதிப்பதற்கு வேலை தேடுகிறார்.....தேடித்தேடி ஒன்றுமே அவரால் அடையமுடியவில்லை........வறுமையில் வாடும் அந்தக்குடும்பம் பசியின் உச்சக்கட்டத்தில் இறக்கும் தருவாயில் வந்துவிட்டது என்று கொஞ்சம் உங்கள் மனதில் நினைத்து கற்பனை பண்ணிப்பாருங்கள் .......வறிய நாடுகளிலே இவர்களுக்கு யாரும் உதவ மாட்டார்கள்........இந்தநிலையில் அந்த நபர் எடுக்கும் முடிவு அதாவது விபச்சாரமா,கஞ்சா கடத்துவதா,கொள்ளைகளவு எடுப்பதா,என்னும் எத்தனயோ எத்தனையோ வழிகள். நாம் ஒட்டு மொத்தத்தில் இங்கு காண்பது பொருளாதார சிக்கலாலேயே இப்படியான ஓர் சூழ நிலை உருவாகிறது.எப்பொழுது ஒரு அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்காமல் தவறும் சந்தர்ப்பத்தில் இப்படியான பிரச்சனைகள் வருவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே போய் விடுகிறது. ஆனால் இரண்டாவதாக நான் கூறிய அனைத்து வசதிகள் இருந்தும்,ஆசையின் நிமித்தம் எல்லை வரம்புகளின்றி பாலியலில் ஈடுபடுவோரே உண்மையான விபச்சாரர் என்னும் பதத்தினுள் அடங்குவர் என்பதே என் கருத்து நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.