Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுகவின் சிறை நிரப்புப் போராட்டம் - சில கேள்விகள்

Featured Replies

இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக நடத்திய போராட்டம் ஆச்சரிய அலைகளை தோற்றுவித்திருக்கிறது. இத்தனை தோல்விகளுக்குப் பின்பு திமுகவின் தொண்டர்கள் போர்க்குணம் மாறாதவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டின் காவல்துறையினர் ஏறக்குறைய எழுபதினாயிரம் பேர் கைதாகியிருப்பதாகக் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிறை நிரப்புப் போராட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கின்றது.

திமுக இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தையும் இழந்து போய் நிற்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அது தவிர்க்க முடியாத கட்சி. ஜெயலலிதாவை விட அதிகமாக இன்றைக்கும் கலைஞரே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றார்.

இன்றைய போராட்டத்திற்கு திமுகவின் தொண்டர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதற்கு தயாராகவே வந்திருந்தார்கள். உடைகள் போன்ற தேவையான பொருட்களையும் பையில் எடுத்து வந்திருந்தார்கள்.

சில ஆயிரம் பேர் மட்டும் போராட்டத்திற்கு வந்திருந்தால், ஜெயலலிதா அத்தனை பேரையும் சிறையில் போட்டு வாட்டி எடுத்திருப்பார். அப்படித்தான் அவரும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் வந்தவர்களோ இலட்சக்கணக்கில் இருக்க, சிறையில் இடம் இல்லை என்று மண்டபங்களில் வைக்கப்பட்டு, மாலையே அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

யார் என்ன சொன்னாலும், திமுக தன்னுடைய பலத்தையும் போர்க்குணத்தையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இப்பொழுது சில கேள்விகள் எழுகின்றன. இந்த இலட்சக் கணக்கான திமுக தொண்டர்களை நாம் எப்படி அணுகப் போகிறோம்? அவர்களுடன் உறவினை எப்படி பலப்படுத்தப் போகிறோம்?

கலைஞரை தொடர்ந்தும் திட்டியபடியா? ஜெயலலிதாவோடு, அமெரிக்காவோடு, சரத்பென்சேகாவோடு உறவாடத் தயாராக இருக்கின்ற நாம் கலைஞரை தொடர்ந்தும் எதிர்தரப்பில்தான் வைத்திருக்கப் போகின்றோமா?

தமிழ் நாட்டில் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ ஆதரவுப் போராட்டத்தை நடத்துகின்ற பலம் திமுகவுக்கு மட்டுமே இருக்கின்றது என்பதை நாம் எப்படி இலகுவில் புறந்தள்ளப் போகின்றோம்?

  • கருத்துக்கள உறவுகள்

திமுக தொண்டர்களை எவரும் குறைத்து மதிப்பிடவில்லை

ஆனால் அந்த தொண்டர்களுக்கே தெரியும் கலைஞரின் ஈழம் சம்பந்தமான முடிவுகள் தப்பென.

அதனால்தான் கலைஞர் தற்போது விரும்பாவிட்டாலும் சில ஈழத்தவர் சம்பபந்தமான நகர்வுகளை மாற்றி வருகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா

திமுக வில் பலர் போராட்டத்துக்கு வந்து போட்டோக்கு போஸ் குடுத்ததும்வீட்டுக்கு போய் விட்டதாகவும்,

அழகிரி,பரிதி இளம்வழுதி உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்பதையும் செய்திகளில் படித்திருப்பீர்கள். அதை விட,

அடுத்துவரும் தேர்தல்களில் சிறை சென்றவர்களுக்குத்தான் தேர்தலில் சீட்டு என்ற கருணாநிதியின் மிரட்டலுக்கு பயந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தான் அதிகம். பதவிக்காக என்னவும் செய்பவர்களைப்போய் போர்க்குணம் மாறாதவர்கள் என்னும் போது இதே இவர்கள் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்?

கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,சீமான் வந்து தான் ஈழத்தமிழருக்கு விடிவுகிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

நாம் போராடாதவரைக்கும் யார் வந்தும் எதுவும் நடக்கப்போவதில்லை.

சும்மா இருந்து சுகம் காணும் வரைக்கும் கலைஞர் என்ன கடவுள் வந்தும் எதுவும் ஆகாது. ^_^:icon_idea:

போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் பதவிகள் பறிக்கபடும் என மிரட்டல்கள் விடபட்டதாகவும் எல்லா இடம்களிலும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு பணம்(5000-10,000 இடதிற்கு இடம் வேறுபட) கொடுக்கபட்டதாகவும் அத்துடன் 10kg அரிசி இலவசமாக வழங்கபட்டதாகவும் அப்பிடி பணம் இலவசம்கள் கொடுக்கபட்டதால் தான் இவ்வளவு கூட்டத்தினை சேர்க்க முடிந்ததாகவும் சொல்கிறார்கள்

Edited by அபராஜிதன்

[size=4]தி.மு.க கட்சியை பொறுத்தவரையில் அதை மறுசீரமைக்க அதன் தலைவர் முயன்றுவருகிறார். ஆனால், அடுத்த தலைமை(குடும்ப பிரச்சனை), தமிழக மக்களின் உண்மையான ஆதரவு, ஒரு மூன்றாம் தமிழக கட்சியின் வளர்ச்சி என்ற பல காரணிகளின் தெளிவில்லாத நிலையில் சற்று பொறுத்து இருப்பதே மேல் என எண்ணத்தோன்றுகின்றது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடந்தபோது உதாவாத தொண்டர்கள்... கருணாநிதி... எனி எங்களுக்குப் பாலும் தேனும் வார்க்கப் போகின்றார்.

ஊழல் காரணமாகக் குடும்பத்தினர் சிறை செல்வதுஇ எதிர்க்கட்சி அந்தஸ்தினை இழந்தது போன்ற காரணங்களால் 3ம் நிலைக்குத் தள்ளப்பட்ட திமுக தன் நிலையை உயர்த்தவும்இ குடும்ப ஊழலை மறைக்கவும் போட்ட நாடகம் தான் இது... இதன் மூலம் அடிமட்ட மக்களும் எனிக் கனிமொழியும் திகாருக்குச் சிறைநிரப்பும் போராட்டத்துக்காகச் சென்றதாகவே உணரவைக்கப்படலாம்.

கட்டுரையாளருக்கு இந்த அதீன ஏற்பாடுகள் பற்றி விளக்கம் புரியவில்லை போலிருக்கின்றது. எந்தச் சிறைச்சாலையில் வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்களைப் பாவிக்க அனுமதி வழங்கப்படுகின்றது எனச் சொல்ல முடியுமா?

நான் அறிந்தவரை அனுமதி இன்றி வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் சிறையினுள் பாவிக்க அனுமதிக்கப்படமாட்டாது. இவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் ஏதாவது மண்டபத்தில் ஒரு சிலநாட்கள் தங்க வைக்கப்படலாம் என்று சொல்லிக் கூட்டிவரப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகத் தான் இந்த ஏற்பாடுகளோடு வந்திருப்பார்கள். சிறைக்கு என்றால் இப்படி வந்திருப்பார்களோ தெரியாது.

உண்மையில் இவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு நிறையவே திட்டங்கள் இருக்கின்றன. இருக்கவே இருக்கின்றது நில ஆக்கிரமிப்பு...

உண்மையில் நில ஆக்கிரமிப்பு என்ற குற்றாச்சாட்டு இவர்கள் மறைப்பதற்குத் தானே இப்படி ஆர்ப்பாட்டாம் செய்தார்கள்... அதை ஜெயலலிதா தன்னுடைய அரசியல் தேவைகளுக்கு பாவிப்பதால் தான் முழுமையான குற்றமாக அது வெளியில் தெரியவில்லை...

6 கோடிப் பேரில் வெறும் 70 000 பேர்... இதை விட தமிழரசுக்கட்சி செய்த ஆர்ப்பாட்டாட்டத்தில் துப்பாக்கிகளுக்குப் பயப்படாமல் வந்த நுாற்றுக்கணக்கானவர்கள் மேலானவர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் திரிக்கு சம்மந்தம் இல்லாத கேள்வி தான் என்டாலும் வெறேதில் கேட்கிறது என்று தெரியவில்லை எதற்காக அவாட்டரில் உள்ள உங்கள் படத்தை மாத்தினீர்கள் கோயிலுக்குப் போனால் எல்லோரும் கண்டு பிடிக்கிறாங்கள் என்டா :D

  • தொடங்கியவர்

பணத்துக்காகவோ, மிரட்டலுக்காகவோ இத்தனை இலட்சம் பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. பேராட்டத்தில் கலந்து கொள்ளாது விட்டால், கட்சிப் பதவி பறிக்கப்படும் என்று இரகசியமான மிரட்டல் இருந்ததாக சில ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் இதைக் கொண்டு சாதரண தொண்டனை வீதிக்கு வரவைக்க முடியாது என்றே நினைக்கின்றேன்.

நாங்கள் போரடாது விட்டால் எப்பொழுதுமே வெற்றி பெற முடியாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். மற்றவர்கள் போராடுவார்கள் என்று நான் காத்திருக்கவில்லை.

ஆனால் நாங்கள் போராடுகின்ற பொழுது எமக்கு நண்பர்கள் வேண்டாமா?

இன்றைக்கு ஆட்சியில் இல்லாத கலைஞரை திட்டித் தீர்த்து கட்டுரைகள் எழுதி எதைக் காணப் போகிறோம்? திமுக தொண்டர்களை நாம் வென்றெடுப்பதற்கு என்ன செய்யப் போகிறோம்?

80களில் டெசோ நடத்திய எழுச்சி மிக்க பேரணிகளே ஈழப் போராட்டத்தை பொதுவான மக்களிடம் கொண்டு சென்றன என்பதை நாம் மறக்கக் கூடாது.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

ரதி,

உங்கள் கேள்விக்கு பின்பு ஒருநாள் பதில் சொல்கிறேன்.

காட்டூனிஸ்ட் பாலாவின் ... திமுகவின் இக்கூத்து தொடர்பாக ..

ஹிஹி..

ஏ.. நான் ஜெயிலுக்குப்போறேன்.. ஜெயிலுக்குப்போறேன்..

(இனிமே திருடர்கள் முன்னேற்றக்கழக கம்பெனி எந்த போராட்டம் நடத்துனாலும் அது சிரிப்பு போராட்டம் தான்... `பாளையங்கோட்டை சிறையினிலே..’னு சீன் போட்டா நம்புறதுக்கு பழைய தலைமுறை இல்ல.. )

540801_3387268926842_2068315477_n.jpg

527914_3383384349730_1170021650_n.jpg

394642_3368162849202_357089479_n.jpg

428908_3359848921359_1746672535_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சியைப்பிடிக்க.... வேடம்போடுகின்றவர்களுடன் சேர்ந்து நான் தலையாட்ட விரும்பவில்லை. கருணாநிதியின் உண்மை முகம் நாம் அறிந்து பல காலம் சென்று விட்டது.

ஆச்சிக்காக... கருணாநிதி எதுவும் செய்வார் அல்லது செய்ய வைக்கப்படுவார்.

ஜீவாவின் கருத்துடன் நானும் சேர்ந்து கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.