Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தட்டியும் திறக்காத கதவுகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1995 இதே காலப் பகுதி... மாதகல் பக்கமா ஒரே கன்போட் அடி... குரும்பசிட்டி.. சண்டிலிப்பாய்.. அளவெட்டிப் பக்கமா.. ஒரே செல்லடியும்.. துப்பாக்கிச் சண்டையும்...

ஆமி முன்னேறி வந்திட்டானாம்.. சனங்கள் எல்லாம் உடுத்த உடுப்போட கத்திக் கொண்டு ஓடுதுகள்... !

ஓடிறதுகள் ஓட.. இன்னும் கொஞ்ச சனம்.. காலாற.. கோயில் வழியவும்.. சேர்ச் வழியவும் அடைக்கலம் தேடுதுகள்... என்ன கொடுமை இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா..??!

கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்த நான்.. மக்கள் வீதி ஓரங்களில் களைப்பு மிகுதியில் மரங்களுக்கு கீழ நின்று ஓய்வெடுக்கிறதை கண்டிட்டு எனக்குள்ள அங்கலாய்த்தும் கொண்டன்.

பலாலில இருந்து.. அச்சுவேலிக்கால வெளிக்கிட்டு முன்னேற முயன்ற ரத்வத்த அங்கிள் அங்க அடி அகோரம் என்ற உடன.. குரும்பசிட்டி.. மாதகலுக்கால வெளிக்கிட்டு முன்னேறிப் பாய்ஞ்சு கொண்டிருந்தார்...

ஆமி.. அராலி வரைக்கும் வந்திட்டாங்களாம். யாழ்ப்பாண ரவுனுக்க இன்னும் அரை மணித்தியாலத்தில நிற்பாங்கள் போலக் கிடக்கு.. எல்லாரும் ஓடுங்கோ.. என்று ஓடிற சனம் கத்த... எங்கையோ தூரத்தில சண்டை நடக்கு என்றிட்டு.... ரவுனுக்க..நிம்மதியா இருந்த சனம் பதட்டத்தில... செய்வதறியாது திகைக்க..... கொஞ்சச் சனம் சுதாகரித்துக் கொண்டு.. பெட்டி படுக்கையோட தென்மராட்சிப் பக்கம் ஓட வெளிக்கிட்டுது.

இப்படி ஊரே பதட்டமாக.. இருக்கிற நேரம்.. வான்வெளி அதிர பறந்து வந்தன.. ஆர்ஜென்ரீன தயாரிப்பு புக்காரா இயந்திரக் கழுகுகள். வந்தவை இரண்டும் அதிகம் வட்டம் அடிக்கல்ல.. ஒரே ரொக்கெட்டா.. அடிச்சுத் தள்ள.. பெரிசா குண்டுகள் வெடிச்சு முழங்கிற சத்தங்கள் மட்டும் கேட்டன.அதோட அகோரச் செல்லடியும்.

புக்காரா போய் ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்.. சாரை சாரையா மக்கள் உடுத்த உடுப்போட இன்னும் இன்னும்.. ஓடி வருகினம். மக்கள் உடைகளில் இரத்தம் தோய்ந்திருந்தன.

என்ன ஆச்சுது.. என்ற வியப்போடு.. நாங்கள் பதில் தேடி அலைய...

ஐயோ.. ஐயோ.. என்ர பிள்ளையை கொன்றிட்டாங்களே.. என்று ஒரு தாய் கதறி அழும் கோரக் காட்சி. அண்ணாமாரின் வாகனங்கள்.. அடுக்கடுக்கா ஓடிக்கொண்டிருந்தன. அம்புலன்ஸுகளும் ஓடுகின்றன. வீதிகள் எங்கும் ஒரே பரபரப்பு. யாழ் வைத்தியசாலையில் இரத்தப் பற்றாக்குறை.. இரத்த தான அழைப்புக்கான.. ஒலிபெருக்கி அறிவிப்பு வேற.

நவாலி சேர்ச்சில குண்டு போட்டு.. நூறுக்கு மேல சனம் செத்திட்டாம். நூற்றுக் கணக்கில காயமாம். ரேடியோவில.. சேர்ச்சுக்க.. கோயிலுக்க போய் அடைக்கலம் தேடச் சொல்லிட்டு இப்ப அதுகளுக்கு எல்லோ குண்டு போடுறாங்கள். அறுவாங்கள்.. இவள் சந்திரிக்கா.. உருப்படுவாளே. அடி பாதகத்தி.. ஏண்டி சமாதானம் செய்யுறன் என்று வந்து இப்படிக் கொல்லுறா... மக்களின் ஒப்பாரிகள் வீதிகள் எங்கும்.. முழங்கத் தொடங்கின.

இதைக் கண்ட நான்..மனம் நெகிழ.. எங்கட சாரண முதலுதவிப் பெட்டியையும் தூக்கிக் கொண்டு.. நண்பன் வீட்ட ஓடினன். அவனும் நானுமாய் சைக்கிளில வீதி வீதியா வலம் வந்தம். காயப்பட்ட ஆக்கள் வந்தா ஏதாச்சும் உதவுவம் என்று.

நாங்கள்... யாழ் இந்து மகளிர் கல்லூரி வீதியால வாறம்.... ஒரு குடும்பம்.. அதில் ஒரு இளம் பெண். கையில் பச்சிளம் குழந்தையோட வந்து கேற்றடி நின்று.. அம்மா.. ஐயோ..அக்கா.. இந்தப் பிள்ளைக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்கோ. அழுது அழுது களைச்சுப் போய் மூச்சுப் பேச்சில்லாமல் கிடக்குது..... களைப்பும்.. சேர்வும் தாக்க.. கத்த முடியாமல் கத்திக் கொண்டிருந்தார் அந்தத் தாய்.

ஆனால் அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பதிலும் வரல்ல... அடுத்த வீட்டு கேற்றடியிலும் அதே குரல் தண்ணி கேட்டு குரல் எழுப்புது... ஆனால் உள்ள ஆக்கள் இருந்தும்.. பதில் இல்லை.

அட.. இதுகள் எல்லாம் ரவுன் சனங்களாம்.. ஆபத்துக்கு தட்டிற கதவுகளை கூடத் திறக்கமாட்டாத கூட்டம்... உள்ளூர கோபம் கொப்பளிக்க..

இதை அவதானிச்ச நானும் நண்பனும்...... அந்த மக்களை அணுகினம். அவையை அழைச்சுக் கொண்டு போய்... யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகில இருந்த எங்கட இன்னொரு நண்பனின் வீட்டில கொண்டு போய் விட்டம். அவையட்ட வீட்டுக் கிணறு இல்ல. பக்கத்து வீட்டில போய்.. வெள்ளைக் கான்களில.. தண்ணி நிரப்பி கொண்டு வந்து கொடுத்திச்சினம்.

அப்ப தான் அந்த தாயின் முகத்தில் ஒரு உயிர் இருப்புக்கான தெம்பே வந்திச்சு. இருந்தாலும்.. யாரையோ பறிகொடுத்த தவிப்போடு.. அவர் வாங்கின தண்ணிக் கானையும் கொண்டு.. பிள்ளையையும் தூக்கிக் கொண்டு.. ஓட்டமும் நடையுமாய் எங்கேயோ ஒரு திசை நோக்கி..ஓடியே போனார்.

இந்த ஆரவாரங்கள் அடங்க முதல்....மாலை... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வாசிக்குது...

"நவாலிப் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது முப்படையினரும் வெற்றிகர தாக்குதல். நூற்றுக்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலி. பயங்கரவாதிகள்.. கோவில்கள் தேவாலயங்களில் இருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். படையினரும் பதில் தாக்குதல் நடத்தி பல பயங்கரவாதிகளைக் கொன்றனர். இந்தச் சண்டையில் படையினர் தரப்பில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன...!"

இது நடந்து...17 ஆண்டுகள் கழிஞ்சு போச்சுது. அந்தச் சாவுகளுக்கு.. நீதியும் இல்ல விசாரணையும் இல்ல.. தீர்ப்பும் இல்ல தண்டனையும் இல்ல. மனித உரிமைகளும் பேச அங்க வழியுமில்ல ஆக்களும் இல்ல..! இந்தப் பாதகத்தை செய்தவங்களில சிலர்.. இயற்கையா வாழ்க்கையை நல்லா அனுபவிச்சிட்டு செத்திட்டாங்கள்..! இன்னும் சிலர்.. அதில.. சந்திரிக்கா என்றவள்.. இப்பவும் சமாதான தேவதையாக உலக அரங்கில்.. மதிப்பு மிக்க தலைவியாய்.

இதோட.. இன்றொரு செய்தி...

அதே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வாசிக்குது..

"முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகளுடனான இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதில் அநேகர் பயங்கரவாதிகள். சிலர் மட்டுமே பொதுமக்கள். பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தகவல்..!"

ஆண்டுகள் 17.. ஒரே அழிவு.. ஒரே கதறல்.. ஒரே கூக்குரல்.. ஒரே அபயக் குரல்.. எல்லாம்.. எம்மண்ணில் இருந்து எமது மக்களிடம் இருந்து மட்டுமே. அதே 17 ஆண்டுகளாக.. அதே இறுமாப்பு.. அதே விசமச் செய்தி.. அதே உண்மை மறைக்கும் குணம்.. மனிதம் இழந்த செயல்கள்.. அவங்களும் சிங்களவங்களும்.. மாறவே இல்லை.

இன்றும்.. அதே தட்டத் தட்ட திறக்காத கதவுகள்... ஊரில..! எங்கட சனத்தில கொஞ்சம்.. அதுகளும்.. மாறல்ல..!

ஆனால் அழிவுகளும் துன்பங்களும்.. அளவுக்கு மிஞ்சி.. மனசில்.. சுமக்க முடியாத பாரமாய்... எனக்குள்.. இன்றும்..! அது மட்டும் அளவில் மாறிக்கிட்டே இருக்குது. பெருத்துக்கிட்டே போகுது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]எல்லா மக்களும் போராட முன்வராததால் [/size][size=1]

[size=5]சொற்ப மக்களில் போராட்டசுமை ஏற்றப்பட்டது [/size][/size][size=1]

[size=5]மிகக்கவலையானது.[/size][/size][size=1]

[size=5]உண்மைப்பகிர்விற்கு நன்றி [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவ் விடயம்...இந்த திரி சம்பந்தப் பட்டது அல்லது என்றாலும்....மனக் கஸ்டத்தை உங்களிடம் கொட்டி ஆறுதல் தேட..இதனை எழுதுகிறேன்...யாழ் களத்தில்..இந்த குழுமத்தில் உள்ள யாரவது இருந்தால்...விளக்கம் தரவும்....கடந்த sunday நடைபெற்ற பேரா ஒன்று கூடலில் அதிகமான சிங்களவரும் கலந்து கொண்டதாகவும்..எம்மவர்கள் தோழின் மேல் கைபோட்டு எடுத்த படங்களை அவர்கள் முகபுத்தகத்தில் போட அதிமேதாவிகளான எம்மவர் அதனை பகிர்ந்து தங்கள் முகப்புத்தகத்தில் போட்டு...எம்மிடையே பிரிவினை இல்லை...நாங்கள் ஒரு ரத்தம் என்று தம்பட்டமும் அடித்ததை ,,,அறிந்தேன்....அதைவிட ஒருபடி மேலே போய்...அயலில் துடுபெடுத்து விளையாடிய....கயனாக்காரன்..இவர்கள் தமிழர் என நினத்து...புலகளே ..எம்மிடம் மோத வருங்கள் என கேட்க..சிங்களவன்..சொன்னபதில்...சிங்கமும் புலியும் சேர்ந்து விளையாட வாறன் எனசொல்ல..கயானாக் காரன் வயடைத்துப் போனானாம்....பின்னர் எமதுளதிமேதாவிகள்...சேர்ந்து கும்மாளம் அடித்து கிரிக்கட்டு ..விளையாடினதாம்.......சிலரிடம் னான் இதுபற்றி கேட்டபொழுது..சேர்ந்து படித்த பொடியள்...என்று சொல்லுகினம்...அப்ப தமிழரிலை இவைமட்டும் தான் படித்தவைபோலா...மற்றவை மண்கிண்டிவை போல...அதுவும் போராடப்போனவை...இவயின்டை ஆக்கள் இல்லை....செத்த சனம் இவையோடை உறவு இல்லை...அவங்கள் பரிக்கிற காணி..இவையோடதில்லை....புத்த பெருமான் இவையோடை குல தெஇவம்...ராசபக்க்ச குடும்பம்..இவையோடை நெருங்கிய சொந்தம்.....தமிழினம்..இவையோடை எதிரி.....நான் சொல்வது சரிதானே......படித்த கனவான்களே.....தர்சமயம்...உலகம் எமது பிரச்சனயை உற்று நோக்கிறது..இவ் வேளையில்.....காயானாக்காரன் வாயடைத்தது போல..மர்றவர்களும் யோசித்தால்..னாடில் உள்ள உரவுகளையும்...எம் மினத்தின் அழிவுக்கும் வழி வகுக்காதீர்....தனிப்பட்ட ரீதியில் நட்பு பாராட்டுவது வேரஐ..பொது இடத்தில் இவ்வாரு செய்யாதீர்கள்...இதை பொது இடங்களில்..பார்வைக்கு விட்டு தம்பட்டம் அடியாதீர்கள்..உங்கள்...மனச்சாட்சியை...தட்டி எழுப்புங்கள்...சிங்களவனின்..சதிவலையின்.முதல் படிதான்....உங்களுடன் சேர்ந்த இந்த ஒன்றுகூடல்......இனிவரும் காலங்களில் யோசித்து செயற்படுங்கள்.....அற்ப ஆசைகள்..அனைத்தையும் அழித்துவிடும்....யாழ் களத்தில்..இந்த குழுமத்தில்..பங்கு கொள்பவர் யாராவது..இருந்தால்.....தயவு செய்து..கவனத்தில் கொள்ளவும்....படுக்க போன நான்..மனவேதனையில் வந்து இதனை பதிவு செய்தேன்....மேலே குரிப்பிட்ட திரியிலும்...எம்மவர் மனப்போக்கைத்தான் குறிபிட்டுள்ளீர்கள்...அவ்வாறானதொரு செயற்பாடுதான்..இந்த னிகழ்வும்.....

எழுதுப் பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்...

  • கருத்துக்கள உறவுகள்

17 வருடங்கள் அல்ல... 35 வருடத்திற்க்கு முன்பும் இப்படித்தான் சொன்னவர்கள்....யாழ்ப்பாண ஆஸ்பத்திரி காவலாளியையும், சுன்னாக சந்தையில் மரக்கறி விற்கும் வயோதிப ஆச்சியையும் பொலிஸ்காரன் சூட்டுப்போட்டு .... வானோலியில் சொன்னவன் பயங்கரவாதியை சூட்டுப்போட்டம் எண்டு ....

சர்வேதேசமும் கதவை திறக்கிதில்லை...என்கன்ட சில சனமும் இன்னும் மாறவும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்வயான்.. எம்மவர்களில் ஒரு குறிப்பிட்ட வகையினரில் இந்த வெட்டி பந்தாவிற்கு குறைவில்லை. அவர்கள் சிங்களவனை ஏதோ.. தங்க எஜமானர்களாகவே கருதி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது சேர்.. பொன்.. இராமநாதன்.. பொன்னம்பலங்கள் காலம் தொட்டு.. டக்கிளஸ் தேவானந்த வரை தொடருது. ஏன்.. சம்பந்தன்.. சுமந்திரன் சொல்லேல்லையா.. ஐக்கிய இலங்கைக்குள்.. சிங்கக் கொடிக்குக் கீழ் தான் தீர்வென்று.

சுமந்திரனோ.. சம்பந்தனோ.. போரால்.. உறவுகளை.. சொந்தங்களை.. சொத்துக்களை.. உரிமைகளை இழந்தவர்ளாகத் தெரியவில்லை..!

உங்கள் உணர்வும் வேதனையும் பலரிடமும் உண்டு..! :icon_idea:

ஆண்டுகள் 17.. ஒரே அழிவு.. ஒரே கதறல்.. ஒரே கூக்குரல்.. ஒரே அபயக் குரல்.. எல்லாம்.. எம்மண்ணில் இருந்து எமது மக்களிடம் இருந்து மட்டுமே. அதே 17 ஆண்டுகளாக.. அதே இறுமாப்பு.. அதே விசமச் செய்தி.. அதே உண்மை மறைக்கும் குணம்.. மனிதம் இழந்த செயல்கள்.. அவங்களும் சிங்களவங்களும்.. மாறவே இல்லை.

[size=4]எங்களால நூறு பெர்ஸசன்ட் உதவி செய்ய முடியலீங்க அண்ணன் :( . எல்லாம் நாத்தம் பிடிச்ச அரசியலுங்க உங்கள எங்கிட்ட பிரிக்குது அண்ணன் :(:( . இந்த ஃபீலிங் எங்க கிட்ட எப்பவுமே இருக்குங்க அண்ணன் :( :( . நல்லாத் தான் கதை எழுதிறீங்க கொன்ரினியூ பண்ணுங்க :):) .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுகள் 17.. ஒரே அழிவு.. ஒரே கதறல்.. ஒரே கூக்குரல்.. ஒரே அபயக் குரல்.. எல்லாம்.. எம்மண்ணில் இருந்து எமது மக்களிடம் இருந்து மட்டுமே. அதே 17 ஆண்டுகளாக.. அதே இறுமாப்பு.. அதே விசமச் செய்தி.. அதே உண்மை மறைக்கும் குணம்.. மனிதம் இழந்த செயல்கள்.. அவங்களும் சிங்களவங்களும்.. மாறவே இல்லை.

[size=4]எங்களால நூறு பெர்ஸசன்ட் உதவி செய்ய முடியலீங்க அண்ணன் :( . எல்லாம் நாத்தம் பிடிச்ச அரசியலுங்க உங்கள எங்கிட்ட பிரிக்குது அண்ணன் :(:( . இந்த ஃபீலிங் எங்க கிட்ட எப்பவுமே இருக்குங்க அண்ணன் :( :( . நல்லாத் தான் கதை எழுதிறீங்க கொன்ரினியூ பண்ணுங்க :):) .[/size]

ஒரு சிறு திருத்தம் சகோதரி

அவர் எழுதியது கதையல்ல.

எம் வரலாறு.

அண்ணா,

எனக்கு 95 ஆம் ஆண்டு இடப்பெயர்வு முழுமையாக நினைவில்லை. ஆனால் நாங்களும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தோம். வாகன வசதி இருந்தவர்கள் அவற்றில் சென்றிருந்தார்கள். நாம் நடை தான். இடைக்கிட நின்று அம்மாவின் மடியில் தூங்கியதாக நினைவு. போகும் வழியில் தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை. இடையில் மழை பெய்தது. குடையை பிடித்து குடையிலிருந்து வழிந்த நீரை நாமும் ஏனைய பலரும் குடித்தார்கள்... ஒரு பெண்ணை ஆமி பிடித்து இழுத்துக்கொண்டு போனதாம் என்று யாரோ கதைத்தார்கள். பின்னர் என்ன நடந்ததென்று தெரியாது. வழியில் நடந்ததில் இவ்வளவும் தான் எனக்கு நினைவிருக்கு.

பின்னர் ஒரு வீட்டிற்கு சென்றோம். 5,6 குடும்பங்கள் ஒன்றாக தங்கியிருந்தோம். பக்கத்து வீட்டில் இயக்க அண்ணாமார், அக்காமார் இருந்தனர். எம்மை போன்ற சிறுவர்களை சந்தோசப்படுத்த பல முயற்சிகள் எடுத்தார்கள். வீட்டிற்கு முன் வயல்வெளி. பட்டம் கட்டி எம்மிடம் தந்து எம்மை கூட்டிக்கொண்டு போய் பட்டமேற்றி விளையாட சொல்வார்கள். அவர்களெல்லாம் இப்ப இருக்கினமா இல்லையா என்று தெரியேல்லை.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

எனக்கு 95 ஆம் ஆண்டு இடப்பெயர்வு முழுமையாக நினைவில்லை. ஆனால் நாங்களும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தோம். வாகன வசதி இருந்தவர்கள் அவற்றில் சென்றிருந்தார்கள். நாம் நடை தான். இடைக்கிட நின்று அம்மாவின் மடியில் தூங்கியதாக நினைவு. போகும் வழியில் தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை. இடையில் மழை பெய்தது. குடையை பிடித்து குடையிலிருந்து வழிந்த நீரை நாமும் ஏனைய பலரும் குடித்தார்கள்... ஒரு பெண்ணை ஆமி பிடித்து இழுத்துக்கொண்டு போனதாம் என்று யாரோ கதைத்தார்கள். பின்னர் என்ன நடந்ததென்று தெரியாது. வழியில் நடந்ததில் இவ்வளவும் தான் எனக்கு நினைவிருக்கு.

பின்னர் ஒரு வீட்டிற்கு சென்றோம். 5,6 குடும்பங்கள் ஒன்றாக தங்கியிருந்தோம். பக்கத்து வீட்டில் இயக்க அண்ணாமார், அக்காமார் இருந்தனர். எம்மை போன்ற சிறுவர்களை சந்தோசப்படுத்த பல முயற்சிகள் எடுத்தார்கள். வீட்டிற்கு முன் வயல்வெளி. பட்டம் கட்டி எம்மிடம் தந்து எம்மை கூட்டிக்கொண்டு போய் பட்டமேற்றி விளையாட சொல்வார்கள். அவர்களெல்லாம் இப்ப இருக்கினமா இல்லையா என்று தெரியேல்லை.

நீங்கள்.. ரிவிரெச (சூரியக்கதிர்) சிங்களப் படை ஆக்கிரமிப்பு நகர்வு பிரதான இடம்பெயர்வைப் பற்றிக் கதைக்கிறீங்க என்று நினைக்கிறேன். அது 1995 அக்டோபர் மாதப் பகுதியில் நிகழ்ந்தது.

ரிவிரெச தொடங்க முன்னர் சிறீலங்கா சிங்கள இராணுவம் பல மட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதில் ஒன்று முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கை. இது அளவெட்டிப் பக்கமா நிகழ்ந்தது. அதன் போதே நவாலி தேவாலயம் மீது புக்காரா போர் விமானங்கள் கொண்டு ரொக்ட் வீசி தாக்குதல் நடத்தி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர்.. புலிப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம்.. இந்த இராணுவ நடவடிக்கையை விடுதலைப்புலிகள் முறியடித்திருந்ததோடு.. ஒரு புக்காரா போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தி இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..! இந்த நடவடிக்கையின் போது மட்டும் 80 வரையான போராளிகள் தங்கள் இன்னுயிரை தேசத்துக்காக வழங்கி இருந்தனர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் இனி என்ன செய்யமுடியும்?.......

அவுஸ்திரெலியாவில் அபோரிஜினல் என்ற பலங்குடியினர் இருக்கிறார்கள். அது போல இனி வரும் காலங்களில் ஈழத்தில் பலங்குடியினராக தமிழர்கள் சிலர் வாழ்வார்கள். முற்று முழுதாக சிங்கள மயப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க வார்த்தை தான் நிஜமாகும் போலத் தெரியுது கந்தப்பு. ஆனாலும்.. கோவில்கள் இருக்கும் வரை நம்ம Diaspora தோப்புக்கரணம் போட போகும். அந்த அளவில சிங்களவனுக்கு குறைவில்லாத.. அந்நியச் செலவாணி வரும்..! அவன் பிழைச்சுக்குவான்..! நாம.. தோப்புக்கரணம் போட்டிக்கிட்டே இருக்க வேண்டியான்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தோப்புக்கரணம் கோவிலில் போடுவதால் இந்துதமிழன் வாழ்ந்தான் என்று சொல்லக்கூடும்...அப்படியாவது தமிழ் வாழட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

95இல் பிறந்தவர்களும் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கும் அடிமை வாழ்க்கையே பழகிவிட்டது.இன்னுமொரு வாழ்வு அதற்கு முன்னர் இருந்தது தெரியாது.

அதே மாதிரி இன்னும் ஒரு 10 வருடம் போனால் எல்லோருக்குமே அடிமை வாழ்வு பழகிப் போய்விடும் போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து

மனத்தை சோர்வடையச்செய்யும் கருத்துக்களை விதைக்காதீர்கள்

நன்றி :( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக விசுகு அண்ணா.. மனதைச் சேர்வடையச் செய்யும் பல நிகழ்வுகள் தாயகத்திலும்.. Diaspora விலும் நடந்து கொண்டு தான் இருக்குது.

போராட்டத்திற்கு 2000 பவுன் கேட்டு வந்த இடத்தில சண்டித்தனம் கதைச்ச ஆக்கள்.. கோவில் திருவிழா என்ற ஒரே காரணத்திற்காக.. ஆளுக்கு 800 பவுன் செலவு செய்து குடும்பமா.. எயார் லங்காவில பயணம் செய்து ஊருக்குப் போகினம். அதுமட்டுமில்லாம கிட்டத்தட்ட அவர்களுக்கு ஆகும் மொத்தச் செலவு 12,000 பவுன்கள்..! (7 பேர் கொண்ட குடும்பம்.. எயார் ரிக்கெட் போக.. மிகுது சிறீலங்காவில செலவு செய்ய உள்ள தொகை..!)

இப்படி எத்தனை குடும்பங்கள் போகினம்..?????! இதனால் சிங்களவனுக்கு வரும் வருமானம்.. வன்னி மக்களிடமா போகுது..???!

இஞ்ச எங்களை 20 கொடுக்கல்ல.. 50 கொடுக்கல்ல என்று கணக்குப் பார்க்கிறவை.. திட்டிறவை.. இப்படி சுளையா.. கொடுக்கிறதைப் பற்றி எதுவுமே கதைக்கிறதில்ல. ஏன்னா.. அவையளும் இதைச் செய்யினம்...! அநேகர் ஊருக்குத்தான் உபதேசம் அண்ணா.. தங்களுக்கு என்று வரும் போது சுயநலத்தை தான் அன்று தொட்டு இன்று வரை முன்னிறுத்துகிறார்கள்.

எங்கட சனம் திருந்தவே இல்லை...! இவர்களின் செயல்கள் நிச்சயமா போராட்ட மன உணர்வை எனித் தருமோ என்பது ஐயுறவே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

விசுகு, நெடுக்கு நீங்கள் அங்கலாய்போரும் தமிழர்கள் தான், அவைகள் தான் இப்போது பெரும்பான்மை, எங்களது தமிழீழம் அவர்களையும் சேர்த்துதான்..

அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு பொருத்தமானதாகவும் தான் எமது தமிழீழ போராட்டம் அமைந்திருக்கவேண்டும், அவர்கள்(என்னுடன் சேர்த்து) தங்களுக்கு பொருந்தாததால் வெளியில் இருந்தது வேடிக்கை பார்த்தார்கள்.

ஆயுத போராட்டம் நீண்டகாலத்துக்கு வேதனையையும், துன்பத்தையும் அழிவையுமே தரும்..

எங்களது போராட்டத்தை நாம் மீண்டும் ஒரு sustainable வழியிலேயே நடத்தவேண்டும் :(

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன வழி? கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் ப்ளீஸ் ......

ஆயிரம் வழி இருக்கு..

1 ) ஒன்னும் செய்யாமலே இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரத்வத்தையின் இந்த முன்னேறிப் பாய்ச்சலுக்கு எதிராக எங்கள் தேசிய தலைவரும் போராளிகளும் தொடுத்த புலிப் பாய்ச்சல் நிகழ்ந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் புலிப் பாய்ச்சலின் போதே நவாலி தேவாலயம் மீது குண்டு வீசப் பயன்படுத்தப்பட்ட புக்காரா போர் விமானம் விடுதலைப் புலிப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தப் புலிப்பாய்ச்சல் ஆலோசனையின் போது எங்கள் அருமைத் தளபதிகள்.. இன்று எல்லோருமே மாவீரர்களாகி..!

Pulippaychchal.jpg

படம்: ஈழநாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது....

1995 ம் ஆண்டு இடப் பெயர்வு, யாழ் குடாநாட்டு மக்கள் எல்லோருமே... ஆனையிறவைத் தாண்டியது என நினைக்கின்றேன்.

அதில் இடம் பெயராது விட்டவர்கள், மற்றைய வீடுகளைச் சூறையாடி... இன்று, பெரும் செல்வந்தர்களாக உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சிறியண்ணர்.

சூரியக் கதிர் முதலாம் கட்ட சிங்கள இராணுவ நடவடிக்கையின் போது. அநேக வலிகாமம் மக்கள் தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடம்பெயர்ந்தனர்.

அவர்களின் குறிப்பிடத்தக்க தொகையினர்.. கிளாலிக் கடல் வழியாக.. வன்னிக்கும் இடம்பெயர்ந்தனர். மிகுதி மக்கள் தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் வைத்து.. சூரியக் கதிர் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது.. ஆக்கிரமிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டனர். பின்னர் மக்கள் பகுதி பகுதியாக வலிகாமம் நோக்கி விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் சரத் பொன்சேகா தலைமையில் சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது.

வலிகாமம் பகுதியில் இடம்பெயராமல் இருந்த சிலரே கள்வர்களாக மாறினர்.. வீடுகளைச் சூறையாடினர். யாழ் நகரில் இருந்த எங்கள் சொந்த வீடுகள் இரண்டும்.. இராணுவத்தால்.. குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஏராளமான பொறுமதிமிக்க.. பொருட்கள் குண்டு வைக்கப்பட முன்னர் இராணுவத்தாலும் ஈபிடிபி ஒட்டுக்குழுவாலும் சூறையாடப்பட்டிருந்தன. மொத்தம் 4 அறைகள் கொண்ட ஒரு வீட்டில்.. அறைக்கொரு கொண்டு வைத்து இராணுவம் தகர்த்தெறிந்திருந்தது..! மற்றைய வீடு.. டாங்கிகள் கொண்டு தாக்கி அழிக்கப்பட்டிருந்தது. எங்கள் வீடு மட்டுமல்ல.. இன்னும் பல வீடுகளும் கூட..!

ஆனால் வெளியில் சொல்லப்பட்ட செய்தி.. ஓடுகின்ற புலிகள்.. வீடுகளை தகர்த்தனர் என்று. புலிகள் நின்று மிணக்கட்டு.. அறைக்கொரு குண்டு வைச்சு.. தகர்க்கக் கூடிய வாய்ப்பும் இருக்கவில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு அன்றிருக்கவில்லை..!

அண்மையில் இந்த வீடுகள் உடைந்தது தொடர்பாக சிறீலங்கா பொலிஸில் முறையிடச் சென்ற போது.. அவர்கள்.. போர் நடவடிக்கையில்.. ஏதோ காரணத்தால் உடைந்திருந்தமை தெரியவந்ததாகவே பதிவு செய்து கொடுத்துள்ளனர். அதென்ன ஏதோ காரணம்.. என்பது சிங்களவனுக்கும் ஒட்டுக்குழுக்களுக்குமே வெளிச்சம். இவை பற்றி உலகில் எவரும் எமக்காகப் பேசத் தயார் இல்லை. அழிஞ்சது அழிஞ்சது தான். ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு.. தூதரகங்களை மட்டும் திறக்கினம்...! ஆனால் மக்களை அழிவில் இருந்து மீட்சிப்படுத்த.. ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க ஆக்களில்ல..!

செம்மணியில் நூற்றுக்கணக்கான புலிச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

செம்மணிப் புதைகுழிகள்.. 1996 வாக்கில் இனங்காணப்பட்டது வரை அது நடந்தேறியது. அதன் பின்னர் புதைகுழிக் கலாசாரம் சற்று ஓய்ந்து.. சிங்களப் புலனாய்வாளர்களாலும்.. தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்..! இன்று வரை அவற்றிற்கு தண்டனையும் இல்லை.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் இல்லை. வெறும் கண்துடைப்பாகிப் போனது செம்மணி புதைகுழி விசாரணைகள். வந்தார்கள் தோண்டினார்கள்.. கிடப்பில் போட்டார்கள்.. மீண்டும் முள்ளிவாய்க்காலில் புதைக்க வழி செய்து கொடுத்தார்கள். இவர்கள் தான் சர்வதேச சமூகம் என்போர்.

இன்று.. தூக்கில் தொங்கவிடப்படும் நிலைக்கு தொடர்கிறது.. எமது மக்களின் போர்க்கால வாழ்வு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

வடமாகாணம் வெற்றி கொள்ளப் பட்டதாக... யாழ்ப்பாண கோட்டையில் வைத்து நந்திக்கொடியையையும், ஸ்ரீலங்கா கொடியையையும் பறக்கவிட்டது எப்போது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. 1995 இறுதிப் பகுதியில்.. அல்லது 1996 ஆரம்பத்தில்..! சூரியக் கதிர் நடவடிக்கைகள்.. 1995 ஒக்டோபர் வாக்கில் ஆரம்பமாகின. இந்திய வழிகாட்டலில்..! இந்தியப் படைகளும்... அதே காலப்பகுதியில் தான்.. யாழ்ப்பாண நகர்வை மேற்கொண்டிருந்தன.

இந்திய படைகள் முன்னேறிய வடிவில் தான்.. வன்னி இறுதிக்கட்ட நடவடிக்கையும் அமைந்திருந்தது..! இந்தியப் படைகளின் நேரடி வழிகாட்டல் இன்றி சிறீலங்கா இராணுவம் நிச்சயமாக எம்மை ஆக்கிரமிக்க முடிந்திருக்காது.

1987 இல் இந்திய இராணுவத்தை நாம் வரவேற்ற போதே எமது போராட்டத்திற்கு நாம் முடிவுரை எழுதிவிட்டோம்..! :icon_idea:

Operation Riviresa (Operation Sunrays)

http://en.wikipedia....ration_Riviresa

[size=4]Operation Pawan[/size]

http://en.wikipedia....Operation_Pawan

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

List of military operations of the Sri Lankan Civil War.

முள்ளிவாய்க்கால் வரையான பிரதான சமர்களின் பட்டியல்...!

http://en.wikipedia....s#Major_Battles

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தரவுகள், பிழையனவை நெடுக்ஸ்.

1995ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தான்... யாழ்ப்பாண இடப்பெயர்வு இடம் பெற்றது.

அதில்... எந்த மாற்றமும் இராது என நம்புகின்றேன்.

அந்நேரம்... அந்த இடப்பெயர்வை பதிவு செய்ய வந்த, வெளிநாட்டு நிறுவனங்களைக் கூட... சிங்களம் நய வஞ்சகமாக வெளியேற்றி விட்டது.

அதில்... ஒரு தமிழ் ஊடகவியலாளரும் இருந்தார் என, நினைக்கின்றேன். எல்லாம்... போச்சுது என்று பார்த்தால்... புலிகளால் கூட, அந்த இடப் பெயர்வை பதிவு செய்ய முடியவில்லையே... என்பது, அந் நேரத்து ஆதங்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.