Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நல்ல பகிர்வு [/size]

  • Replies 102
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற அமிதாப் பச்சன் - ரசிகர்கள் உற்சாகம்.

AmitabhBachchan-1.jpg

AmitabhBachchan-2.jpg

AmitabhBachchan-3.jpg

AmitabhBachchan-4.jpg

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை (27.07.2012) நடைபெறுகிறது. இப்போட்டியை பிரபலப்படுத்துவதற்காக ஒலிம்பிக் ஜோதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது லண்டனை அடைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றனர்.

அந்த வகையில் 69-வது நாளாக இன்று (26.07.2012) லண்டனில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு, ஜோதியை ஏந்திச் சென்றார். அவர் வெள்ளை நிற உடை அணிந்து சவுத்வார்க் சாலையில் 300 மீட்டர் தூரம் வரை சென்றார். அப்போது அங்கு உற்சாகமாக திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடியே சென்றார். ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக அமிதாப் கூறினார்.

நன்றி நக்கீரன்.

Edited by தமிழினி

[size=5]ஒலிம்பிக்ஸில் விற்போட்டியில் இரண்டு உலக சாதனைகள்[/size]

[size=4]லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஆரம்ப வைபவங்களுக்கு முன்னதாகவே கடுமையான பார்வைக் குறைபாட்டை உடைய தென்கொரிய வீரர் ஒருவர் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.[/size]

[size=3][size=4]தனி நபர்களுக்கான விற்போட்டியில் உலக சாதனையை ஏற்படுத்திய இம் டொங்- ஹையுன் என்னும் அந்த வீரர் மற்றுமொரு உலக சாதனையை நிகழ்த்திய தென்கொரிய வில்லாளர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.[/size][/size]

[size=3][size=4]''இம்'' அவர்களுக்கு இடது கண்ணில் 10 வீதமான பார்வைத் திறனும், வலது கண்ணில் 20 வீதமான பார்வைத் திறனும் மாத்திரமே உள்ளது.[/size][/size]

[size=3][size=4]ஆனால் அவர் கண்ணாடியை அணிய மறுத்துவிட்டார். தனது இலக்கை தான் பார்க்கும் போது அவற்றில் நிற வரிகள் தெளிவற்று தனக்கு தெரிந்ததாக அவர் கூறியிருக்கிறார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sport/2012/07/120727_firstworldrecord.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்... சிறப்பாக நடக்க வேண்டிய ஒலிம்பிக் பந்தயத்தை...

லண்டன் திருடி விட்டது, என்பது இங்குள்ள பத்திரிகைச் செய்தி.

இதனை, இங்கு நடத்தியிருந்தால்.... பல நிறுவனங்கள் ஸ்பொன்சர் பண்ணி...

புதுவித விளையாட்டு அரங்குளை நிர்மானித்திருப்பார்கள்.

ஹ்ம்ம்... எல்லாத்திலையும் அரசியல் செய்ய வெளிக்கிட்டால்.... சொதப்பல் தான் மிஞ்சும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும், 15 நிமிடத்தில்....

லண்டன் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகின்றது.

உங்கள் ஊர் தொலைக்காட்சிப் பெட்டியில்... பார்த்து மகிழுங்கள்.

ப்ளீஸ்... தவறவிடாதீர்கள். நான்கு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி இது.

[size=5]ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவிலிருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் சென்ற விவசாயி[/size]

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சென் குவான்மிங் (வயது 57) விவசாயி. அவர் கடந்த 2008ஆம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துவிட்டு 2012இல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளையும் கண்டுகளிக்க ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விஸா மற்றும் பணம் உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கிராமத்தில் இருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் புறப்பட்டடுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 16 நாடுகளைக் கடந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி லண்டனை அடைந்துள்ளார்.

27-chen-guanming-rickshaw300.jpg

இது குறித்து நரைத்த குறுந்தாடியும், குடுமியுமாக இருக்கும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் இதுவரை சீனாவை விட்டு வெளியேறியதே இல்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தான் நான் சீனாவில் இருந்து லண்டன் வந்துள்ளேன்.

வரும் வழியில் தாய்லாந்து வெள்ளத்தையும், துருக்கியின் கடுங்குளிரையும் தாண்டி வந்துள்ளேன். நான் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வந்துள்ளேன். விருதை எதிர்பார்த்து இவ்வாறு செய்யவில்லை.

பிரான்சில் இருந்து படகு மூலம் இங்கிலாந்து வந்து சேர்ந்தேன். இந்த பயணத்திற்கு நண்பர்கள், அன்பான மக்கள், வழி நெடுகிலும் உள்ள சீன மக்கள் பண உதவி செய்தனர்' என்றார்.

அவரது ரிக்ஷாவில் பாரிசில் உள்ள ஈபில் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். கடந்த 9ஆம் திகதி அவர் லண்டன் தெருக்களில் செய்வதறியாது சென்றதாக இங்கிலாந்தைச் சேர்ந்த காப்புறுதி முகவர் ஜான் பீஸ்டன் தெரிவித்தார்.

அவருக்கு ஒலிம்பிக் போட்டியைக் காண டிக்கெட் வாங்கிக் கொடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளைக் காண அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தனது நீண்ட பயணம் பற்றி பெருமிதம் கொண்டுள்ளார் அந்த விவசாயி.

Edited by akootha

[size=5]செலவு எவ்வளவு?[/size]

[size=4]லண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்குக்கு தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்..ஆயிரம் கோடி? ஐயாயிரம் கோடி? ஸாரி, நீங்கள் ரொம்ப கஞ்சூஸ். ஏனெனில்செலவாகும் தொகை அப்படி.அமெரிக்க டாலரில் 14.5 பில்லியன் அளவிற்குச் செலவாகும் என்கிறது எகானாமிஸ்ட் பத்திரிகை. அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டும்தான். இன்னும் சிலர் 19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அவை மேலும் சில ஆயிரம் கோடிகள்.[/size]

[size=5]என்ன லாபம்?[/size]

ப[size=4]ல கோடி ரூபாய் பணத்தைப் போட்டு ஒலிம்பிக் நடத்துவதால் இங்கிலாந்திற்கு என்ன லாபம்? ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்துக் கொண்டிருக்கும் தம் நாடு, இதனால் மீண்டும் கம்பீரமாக தலைநிமிர வாய்ப்பிருக்கிறது என்று இங்கிலாந்து கருதுகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) போன்றவை மூலம் நேரடியாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும்.[/size]

[size=4]மறைமுகமான பல லாபங்களும் உண்டு. உதாரணத்துக்கு கிழக்கு லண்டனின் ஸ்ட்ராபோர்ட் பகுதி அவ்வளவாக வளர்ச்சியடையாத பகுதி. ஒலிம்பிக் போட்டிகளை சாக்காக வைத்து, இப்பகுதியை நவீனமாக கட்டமைத்திருக்கிறது லண்டன். இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இப்போது நேரடியாக கோடிகள் அனாயசமாக புழங்குவது கட்டுமானத்துறையில்தான். மைதானங்கள் கட்டுவது, சாலை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது என்று ஜரூராக வேலை நடந்து முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்குக்கு உருவாக்கிய கட்டமைப்பு நகருக்கு எதிர்காலத்தில் ஏராளமான அனுகூலங்களை ஏற்படுத்தித் தரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து,, ஐரோப்பாவில் இருக்கும் நாடு.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை.

அது, அமெரிக்காவின் கைப்பாவை.

மூன்றாம்... முறையும், லண்டனில் ஒலிம்பிக் வைக்க வேணும் என்ற முடியரசு நாட்டை என்னவென்பது.

இங்கிலாந்து,, ஐரோப்பாவில் இருக்கும் நாடு.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை.

அது, அமெரிக்காவின் கைப்பாவை.

மூன்றாம்... முறையும், லண்டனில் ஒலிம்பிக் வைக்க வேணும் என்ற முடியரசு நாட்டை என்னவென்பது.

ஒன்றியத்தில இருக்கம் மன்றத்தில இருக்கம் என்று, சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கெல்லாம் சோறு போட்டு ஜெர்மனியும் பிரான்சும் அழியுது. அதில இருந்து தப்பியிருப்பது தம்பிரான் புண்ணியம். :lol:

[size=6]ஒலிம்பிக் தலைமையகத்தில் உடற்பயிற்சி செய்யும் பேருந்து[/size]

main_12531.jpg

ஒலிம்பிக்போட்டிகளுக்காக பராகுவே நாட்டின் சிசெக் கலைஞர் David Cerny என்பவர் விஷேட பேருந்து ஒன்றை உருவாக்கியுள்ளார். சிவப்பு நிறத்தில் இரு பிரமாண்ட கைகளுடன் புஸ் அப் செய்து பார்வையாளர்களை அசத்துகின்றது.

[size=4]லண்டனின் செக் ஒலிம்பிக் தலைமையகத்திற்கு வெளியே மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இப்பேருந்து மனிதர்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்றான புஸ் அப் பயிற்சியை இயந்திர உதவியுடன் செய்கின்றது.[/size]

Edited by akootha

நான் இதுவரை வாசித்து, பார்த்து அறிந்தவற்றில் அதிகம் எனது கவனத்தை ஈர்த்து உறையை வைத்த செய்தி, தென்னாபிரிக்கா நாட்டை சேர்ந்த செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட ஓட்டவீரன் Oscar Pistorius நூறுமீற்றர் அஞ்சலோட்டம், நாறு மீற்றர் ஓட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதுதான். இரண்டு செயற்கைக்கால்களுடன் அவர் வேகமாக ஓடுவதை நம்பமுடியவில்லை. செயற்கைக்கால்களுடன் ஒழுங்காக நடக்கமுடியுமா என்பதே சந்தேகமானபோது ஒலிம்பிக்கில் 100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும், 400 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் கலந்துகொள்வது என்பது பிரமிக்க வைக்கின்றது.

Oscar_Pistorius-2.jpg

Edited by கரும்பு

நான் இதுவரை வாசித்து, பார்த்து அறிந்தவற்றில் அதிகம் எனது கவனத்தை ஈர்த்து உறையை வைத்த செய்தி, தென்னாபிரிக்கா நாட்டை சேர்ந்த செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட ஓட்டவீரன் Oscar Pistorius நூறுமீற்றர் அஞ்சலோட்டம், நாறு மீற்றர் ஓட்டப்போட்டிகளில் கலந்துகொள்வதுதான். இரண்டு செயற்கைக்கால்களுடன் அவர் வேகமாக ஓடுவதை நம்பமுடியவில்லை. செயற்கைக்கால்களுடன் ஒழுங்காக நடக்கமுடியுமா என்பதே சந்தேகமானபோது ஒலிம்பிக்கில் 100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும், 400 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் கலந்துகொள்வது என்பது பிரமிக்க வைக்கின்றது.

[size=4]உண்மை. இவர் புலன்குறைந்தவர்களுக்கான மற்றும் சாதாரண வீரர்களுக்கான போட்டிகள் இரண்டிலும் கலந்து கொள்ளுகின்றார். [/size]

[size=1]

[size=4]அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், நீச்சல் வீரர், இன்னும் நான்கு பதக்கங்களை வென்றால், போட்டிகளின் சரித்திரத்திலேயே அதிகூடிய பதக்கங்களை வென்றவர் ஆவார். [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றியத்தில இருக்கம் மன்றத்தில இருக்கம் என்று, சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கெல்லாம் சோறு போட்டு ஜெர்மனியும் பிரான்சும் அழியுது. அதில இருந்து தப்பியிருப்பது தம்பிரான் புண்ணியம். :lol:

gtoaster.gif

ஜேர்மனியில்... சிறப்பாக நடக்க வேண்டிய ஒலிம்பிக் பந்தயத்தை...

லண்டன் திருடி விட்டது, என்பது இங்குள்ள பத்திரிகைச் செய்தி.

இதனை, இங்கு நடத்தியிருந்தால்.... பல நிறுவனங்கள் ஸ்பொன்சர் பண்ணி...

புதுவித விளையாட்டு அரங்குளை நிர்மானித்திருப்பார்கள்.

ஹ்ம்ம்... எல்லாத்திலையும் அரசியல் செய்ய வெளிக்கிட்டால்.... சொதப்பல் தான் மிஞ்சும்.

1972 இல் ஒலிம்பிக் நடத்திய ஜெர்மனி மீண்டும் நடத்த ஆசைபடலாம் ஆனால் 1948 இல் நடத்திய இங்கிலாந்து மீண்டும் நடத்த ஆசைப்படக் கூடாது எண்டிறது நல்லாய் இல்லை சிறி அண்ணா.

Edited by Gajen

[size=1][size=4]அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், நீச்சல் வீரர், இன்னும் நான்கு பதக்கங்களை வென்றால், போட்டிகளின் சரித்திரத்திலேயே அதிகூடிய பதக்கங்களை வென்றவர் ஆவார். [/size][/size]

ஏதாவது மூன்று பதக்கங்களை வென்று அந்த சாதனையை நிலைநாட்டுவார் என்றே நானும் நினைக்கின்றேன். ஆனால், அவர் பீஜிங் போட்டியின் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பெரிதாக பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவில்லையெனவும், ஜாலி வாழ்க்கையில் அதிகளவு கவனம் செலுத்தினார் எனவும், அதனாலேயே தொடர்ந்தும் அவரினால் முன்புபோல் பிரகாசிக்கமுடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. தனக்கு வயது முப்பதை எட்டுகின்றது இதனால் முன்புபோல் வேகமாக துடிப்புடன் பிரகாசிக்க முடியாது எனும்வகையிலும் அவர் கூறியதை பார்த்தேன். நீச்சல் மிகக்கடுமையான போட்டியை உடையவிளையாட்டு. ஒவ்வொரு தனித்தன்மையாக போட்டியிலும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஒவ்வோர் சிறந்தவீரர்கள். மூன்று பதக்கங்கள் பெறுவதற்கு மைக்கேல் பெல்ப்ஸ் இம்முறை மிகக்கடுமையாக முயற்சிக்கவேண்டியிருக்கும்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி ஒலிம்பிக்கிலை கிறிக்கற் இல்லையோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் சென்ற மர்ம பெண்ணால் பரபரப்பு

போட்டி அமைப்பு குழுவிடம் புகார் செய்ய முடிவு

cni290710.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் அணிவகுப்பில் இந்திய அணியினருடன் மர்ம இளம்பெண் நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து போட்டி அமைப்பு குழுவினரிடம் புகார் செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அணிவகுப்பில் மர்ம இளம்பெண்

நேற்று முன்தினம் இரவு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு, பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல வீரர்-வீராங்கனைகள் மிடுக்கான நடையுடன் பின் தொடர்ந்தனர். இந்திய வீரர்கள் மஞ்சள் கலரில் தலைப்பாகையுடனும், புளூ கலரில் கோர்ட்டும் அணிந்து இருந்தனர். வீராங்கனைகள் மஞ்சள் கலரில் சேலை அணிந்து இருந்தனர்.

இந்திய அணியினரின் அணிவகுப்பின் போது சீருடை இல்லாமல் சிவப்பு நிற சட்டை மற்றும் புளூ கலரில் பேண்ட் அணிந்த இளம் பெண் ஒருவர் சுஷில் குமாரின் பக்கவாட்டில் நடந்து சென்றார். இந்திய அணிக்கு சம்பந்தமில்லாத ஒருவர் அணியினருடன் நடந்து சென்றதால் அனைவரது கவனமும் அவர் பக்கம் திரும்பியது. இந்திய அணியினருக்கு அவர் யார் என்று தெரியாமல் குழம்பினார்கள்.

பெரும் பரபரப்பு

அணி வகுப்பில் அந்தந்த நாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் இந்திய அணியுடன் தொடர்பு இல்லாத ஒரு பெண் அணிவகுப்பு முழுவதும் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய அணியின் செயல் தலைவர் பி.கே.முரளிதரன் ராஜா கூறியதாவது:-

அந்த பெண் இந்திய அணியினருடன் இணைந்து நடந்து வர எந்தவித வேலையும் கிடையாது. இந்த பிரச்சினையை நாங்கள் போட்டி அமைப்பு குழுவினரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அந்த பெண் யார் என்பதும், எங்களுடன் இணைந்து நடப்பதற்கு ஏன்? அனுமதிக்கப்பட்டார் என்பதும் எங்களுக்கு தெரியாது. அணி வகுப்பில் இந்திய அணியினருடன் அந்த பெண் வந்தது அவமானமாகும்.

தொடக்கத்தில் எங்களிடம் அந்த பெண் ஓடுபாதை வரை மட்டுமே வருவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் எங்களுடன் அணிவகுப்பின் முழு தூரமும் வந்தார். அவருடன் இருந்த இன்னொரு நபர் ஓடுபாதை வரை வந்து விட்டு திரும்பி விட்டார்.

கண்டனம்

அணிவகுப்பில் மர்ம பெண் வந்த சம்பவத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். அணிவகுப்பில் வீரர்களும், அணியினருடன் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் அநாகரீகமான முறையில் ஒரு பெண் அணிவகுப்பில் வந்தது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=747676&disdate=7/29/2012

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1972 இல் ஒலிம்பிக் நடத்திய ஜெர்மனி மீண்டும் நடத்த ஆசைபடலாம் ஆனால் 1948 இல் நடத்திய இங்கிலாந்து மீண்டும் நடத்த ஆசைப்படக் கூடாது எண்டிறது நல்லாய் இல்லை சிறி அண்ணா.

1908, 1948, 2012 என்று மூன்று தரம் அதுகும் லண்டனில் மட்டுமே நடத்துவது சரியல்ல. கஜன்.

ஜேர்மனி 1916ல் நடத்த வெளிக்கிட்டு முதலாவது உலகப் போரால்... விளையாட்டுக்கள் நடக்கவில்லை.

1972ல் முன்சன் நகரத்தில் ஒரு முறை தான்... நடந்தது. :)

Edited by தமிழ் சிறி

ஒலிம்பிக் போட்டி results களை இன்னொரு திரியில் ஆரம்பித்தால் நல்லது. அப்படி என்றால் தான் அந்த திரியையும் முன்னுக்கு கொண்டு வரலாம். முகப்புத்தகத்திலும் உடனுக்குடன் update பண்ணலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29-madhura-honey.jpg

ஒலிம்பிக் அணிவகுப்பில் நடை போட்ட மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்த மதுரா ஹனி!

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியினர் நடந்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஜீன்ஸ், டாப்ஸில் வந்த மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவர், அவரது பெயர் மதுரா ஹனி என்று தெரிய வந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஒவ்வொரு நாட்டு அணியினரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து அணிவகுத்து வந்தனர்.

இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமார் தேசியக் கொடியேந்தி தலைமை தாங்கி நடந்து வந்தார். அவருடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் உடன் வந்தனர். அப்போது சுஷில் குமாருக்கு அருகே, ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து ஒரு இளம் பெண் வந்தார். இது இந்திய அணியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

யார் இந்தப் பெண் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து இந்தியக் குழுவின் பொறுப்பாளரான மேஜர் முரளிதர் ராஜாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.

ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

இந்த நிலையில் அப்பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் மதுரா ஹனி என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் தனது தோழியுடன் ஊடுருவி உள்ளே புகுந்துள்ளார். முதல் வரிசையில் மதுரா வர தோழி பின்தங்கி அப்படியே நின்றுள்ளார்.

ஒலிம்பிக் பாஸ் பெற்று அவர் உள்ளே புகுந்துள்ளதாக தெரிகிறது. இந்த பாஸை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் கூட முதலில் பிரசுரித்திருந்தார். ஆனால் தான் அணியினரோடு நடந்து போனது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த பக்கத்தை எடுத்து விட்டார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29-beach-vollyeball.jpg

ஒலிம்பிக்: லண்டன் ரசிகர்களை ஈர்த்த பீச் வாலிபால்!!

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளிலேயே ஏகப்பட்ட கூட்டம். மகளிர் போட்டிகளைக் காணத்தான் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்தது.

விளையாட்டுப் போட்டிகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது என்ற பெயரைப் பெற்ற விளையாட்டு பீச் வாலிபால் போட்டிதான். அதிலும் மகளிர் போட்டிக்குத்தான் செம கூட்டம் கூடும். அதே போல லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பீச் வாலிபால் போட்டிக்குத்தான் நிறைய டிக்கெட் விற்பனையாகியிருந்தது.

தற்போது பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளிலேயே பெரும் கூட்டம் கூடியது. ஹார்ஸ் கார்ட்ஸ் பரேட் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிந்றன. 19 டிகிரி அளவுக்கு குறைந்த வெப்ப நிலை நிலவியபோதும், அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் வீராங்கனைகளை ரசிக்கவும், விளையாட்டைப் பார்க்கவும் கூடியிருந்தனர்.

நல்லவேளையாக வீராங்கனைகள் வழக்கம் போல குறைந்த ஆடைகளுடன்தான் ஆடினர். கடும் குளிர் காரணமாக அவர்கள் பிரேசியர், பாண்டீஸுக்குப் பதில், லெக்கிங்ஸ் அணியலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் லெக்கிங்ஸ் போடவில்லை.

முன்னதாக ஆண் பெண் நடனக்காரர்கள் இணைந்து நீச்சல் உடையில் டான்ஸ் ஆடி போட்டியைத் தொடங்கி வைத்ததை ரசிகர்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

:D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஒலிம்பிக்கிலை கிறிக்கற் இல்லையோ? :rolleyes:

இவ்வளவு நாடும்... கிரிக்கெட் ஆட வெளிக்கிட்டால்...

இன்னும் ஆறுமாதத்துக்கு, தொடர்ந்து... ஒலிம்பிக் நடத்த வேணும். :D:icon_idea:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.