Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டனியை தோற்கடிக்க கிழக்கில் தேர்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத் தேர்தலை வைக்கும்படி சர்வதேசமும் இந்தியாவும் தொடர்ந்து மகிந்த ராசபக்ச அரசை வற்புறுத்தி வருகிறது. ஆனால் மகிந்த ராசபக்சவின் அரசோ 2013ல் நடக்க வேண்டிய கிழக்குமாகாண சபையை அவசரம் அவசரமாகக் கலைத்து புதிய தேர்தல் வைக்கிறார்கள். மகிந்த ராஜப்கசவின் நோக்கம் என்ன?

வடமாகணசபைத் தேர்தலை நடத்தினால் தமிழ் தேசிய கூட்டமைபு நிச்சயம் வெற்றிபெறும். ஆனால்.கூட்டணியின் வெற்றிச் செய்தியை அல்ல தோல்விச் சேதியை மட்டுமே சர்வதேச சமூகத்துக்கு அனுப்ப மகிந்த அரசு விரும்புகிறது. திருநிறை நவிப்பிள்ளை அவர்களின் வருகையின்போது அத்தகைய ஒரு சூழல் பயனுள்ளது என மகிந்த நினைக்கக்கூடும். மகிந்த ராஜபக்ச அரசின் சூட்ச்சிக்கு கூட்டமைப்பு துணைபோகக்கூடாது. இந்தச் சமயத்தில் கிழக்கு மாகாணத்தில் தோல்வியைத் தழுவிக்கொள்வது தமிழர் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதாகவே முடியும். மகிந்த ராஜபக்சவின் சதியை முறியடிப்பதனூடாக மட்டுமே தமிழ் தேசிய கூட்டாமைப்பு சர்வதேசத்துக்கு சரியான சமிக்ஞையை அனுப்ப முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் முஸ்லிம்காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. அதுதான் வெற்றிக்கான வரலாற்றுத் தெரிவாக அமையும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து போட்டியிடவே விரும்புகிறது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு UNP யுடன் கூட்டுச் சேர்வதன்மூலம் மட்டுமே வெற்றிபெற முடியும். ஆனால் அது தமிழர் விடுதலை முயற்சிகளுக்கு எதிரானதாகவே அமையும். அதனால் UNP யுடன் கூட்டுச் சேரும் அரசியல் வாய்ப்புகள் இல்லை. தனித்து போட்டியிட்டு சில ஆசனங்களைக் கைப்பற்றிய பின்னர் UNP போடு பேசி அரசை அமைக்கலாம் என்று கூட்டமைப்பினர் கருதினால் அதுவும் தப்பான முடிவாகவே அமையும்.அத்தகைய ஒரு அரசு அமைவதர்க்கான வாய்ப்புகளும் அதிகமில்லை.

முஸ்லிம் காங்கிரசின் முடிவு கவலை அளிக்கிறது. சுழற்ச்சி முறை முதலமைச்சர் என்கிற ஏற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்புள்ளபோதும் அவர்கள் அந்த தெரிவை நாடவில்லை. ஒரு புதிய ஆட்டத்தில் இறங்க அவர்கள் தயாராக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் என்றாவது ஒருநாள் இந்தத் தெரிவை அவர்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தனித்தோ அல்லது கூட்டமைப்போடு இணைந்தோ போட்டியிடாத சூழலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கக்கூடிய புதிசாலித்தனமான முடிவு மகிந்த ராசபக்ச அரசிடன் தோற்றுப் போவதைத் தவிர்ப்பதுதான். அதற்கான ஒரே மார்க்கம் தேர்தலைப் புறக்கணிப்பது மட்டுமே. . ”சர்வதேச சமூகத்துக்கு செவிகொடு, வடமாகாணத் தேர்தலையும் நடத்து” என்கிற கோசத்துடன் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் வாய்ப்புகளை காலம் தாழ்த்தாது தமிழர் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும்.. கூட்டமைப்பினர் தேர்தலைப் பகிச்கரித்தால் மகிந்த ராஜபக்ச அரசு தேர்தலை நடத்தும் அடிப்படை நோக்கமே பிசுபிசுத்துவிடும்.

ஆனால் கிழக்குமாகானத் தேர்தலே சர்வதேசத்துக்கு கூட்டமைப்பைத் தோற்கடித்துக் காட்டுவதற்கான மகிந்த அரசின் ஒரு சூட்சிதான்.என்பதை கூட்டமைப்பு இன்னமும் புரிந்துகொண்டுள்ளதாகத தெரியவில்லை.

தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெறும் வாய்ப்புகள் இல்லை. போட்டி இடுவதன் மூலம் பிள்ளையான் கட்சியினரின் வாக்குகளை வேண்டுமானால் உடைக்கலாம் ஆனால் இறுதியில் படுதோல்வி நிச்சயம்.

வரலார்ரித் திருப்புமுனையான இந்த சமயத்தில் கூட்டணி படுதோல்வி அடைவது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தையும் சந்தவ தேச நிலைபாட்டையும் நிச்சயம் பாதிக்கும்..

கூட்டமைப்பினர் சிந்தித்துச் செயல் படுவார்களா?.

Edited by poet

தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் வெளிநாட்டு ஆதரவை பெற முடியாது. ஒற்றுமையாக செயற்படுதலே சரியானது. முஸ்லீம்காங்கிரஸ் அல்லாத மற்றைய முஸ்லீம் அமைப்புடன் கூட்டு வைத்தல்,, மூஸ்லீம் பிரதிநிதிகளை அவர்களது சமூகத்தில் பிரதிநிதிகளாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் பங்கு பெற சேர்த்தல்.

எல்லா தமிழ்கட்சிகளும் சேர்ந்து ஒத்துழைத்தல், கயேந்திரன்,பத்மினி சிதம்பரம் கட்சியும் காலம் கருதி தமிழ்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க முன் வர வேண்டும்.. கிழக்கில் அவ்ர்கள் தேர்தலில் பங்கு பற்றும் நோக்கம் இல்லை.......

இதுவே வெற்றிக்கான சில முன்னெடுப்புக்களாக அமையும்.

விபரம் சம்பந்தபட்ட வெளிநாடுகளுக்கு நன்கு தெரியும். அதனால்த்தான் மகிந்தா தேர்தலை நடத்துகிறார் என்பதும் தெரியும். அதுவே அவர்கள் வடக்கில் தேர்தலை வைக்க சொல்லுவதும். மேலும் அரசு இடையில் சிலரை கிளறிவிட்டு கூட்டமைப்பு தேரதலில் பங்கு கொள்ள கூடாது என்று பிரச்சராம் செய்ய வைப்பது தனது வெற்றியை நிச்சயம் செய்து கொள்ளவே.

கூட்டமைப்பு கிழக்கில் வெல்வதோ அல்லது தோற்பதோ வெளிநாட்டவருக்கு எதையாது பற்றி நின்று ஒரு தீர்வை புகுத்த உதவப்போவதுமில்லை. இந்தியாவில் காங்கிரஸ் தோற்றால் BJP யுடன் மகிந்தா இந்தமாதிரி கூட்டு வைத்து இயங்க முடியாது. அது நம்மீது அக்கறையுள்ள் நாடுகளுக்கு மனித உரிமைகள் சபையில் முன்னேற்றம் கிட்டவிடும். அதிலேயே நமக்கென ஏதாவது தீர்வு கிடைக்கலாம். அல்லது அது மேலே பாதுக்காப்பு சபபை வரை போய் அங்கேயும் ஒரு தீர்வு கிடைக்கலாம்.

வெளிநாடுகள் தமக்கு தேவையாய் இருந்தால் மட்டுமே கூட்டமைப்பை தமிழரின் பிரதிநிதிகளாக ஒதுக்கொள்ளுவார்கள். அல்லது போர்குற்ற விசாரணை நேரம் புலிகளின் முன் அடுக்கு என்று கூறி அவர்களை விசாரிப்பார்கள். இப்படியான ஒரு நிலையை வைத்துத்தான் ஜெயபாலன் பிரேரணை நேரம் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு போனால் அங்கே அவர்கள் புலிகளாகத்தான் கருதப்படுவார்கள் என்பது போல் விளக்கமளித்தவர். அதனால்தான் தான் கூட்டமைப்பு அங்கே போவதை எதிர்ப்பதாக கூறியவர். (இப்போது அதை மூடி மறைத்து தேர்தலில் கூட்டமைப்பு தோற்றல் தமிழ் மக்களின் மதிப்பை இழந்து விட்டத்தாக கருதுவார்கள் என விளகமளிக்கிறார். ) கூட்டமைப்பு முதலில் தன் காலில் நிற்க வேண்டும். நீண்டகாலத்தவணையில் முஸ்லீம்களை பிரதிநிதிப்படுத்த வேண்டும். தேர்தலில் பங்கெடுக்காமல் விடுவது அவர்கள் புலிகள் காலத்து தேர்தல் பகிஸ்கரிப்புக்ககலை தொடர்கிறார்கள் என்று விளங்க வைக்க செய்யும். அவர்கள் தமக்கென்று சில தொகுதிகளை வைத்திருந்தால் ஆளப்போபவர்கள் கூட்டாச்சிக்கு அவர்களிடம் வர நேரலாம். கிழக்கு மாகாண முஸ்லீம்கள் UNPகு வாக்களிபவர்கள். SLFP அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் கொண்டு போக முடியாது. மேலும் பிள்ளையான் வந்தால் தேவைப்படும் போது அவன் UNPகு மாறத்தயங்க மாட்டான். அப்போது கூட்டமைப்புக்கு கிராக்கி ஏற்படும்.

ஜயஜபாலன் தொடர்ந்து கூட்டமைப்பு எதையாவது செய்ய முயல்வதை வெறுக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகமூடி போட்டுக்கொண்டு தனிப்பட்ட விமர்சனங்கள் செய்யும் கோளமையை தவிருங்கள் மல்லையூரான். நான் பலதடவை மரணத்தைச் சந்திதபோதும் எப்பவும் கோழையாக இருந்ததில்லை. ஈழத்துக்கு உங்கலைப் போன்றவர்கள் ஏற்றுமதி செய்த ஒரு அனர்த்தம் போதும். போதும் மல்லையூரான்.

சர்வதேச நாடுகள் வடமாகான தேர்தலைத்தான் வலியுறுத்துகின்றன. கூட்டனியும் அதையே வலியுறுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்தேர்தல் தமிழர்கல் தன்னோடு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்க்கான மகிந்தவின் திட்டம். வடமாகாணத் தேர்தலை வலியுறுத்தி தேர்தலைப் பகிஸ்கரிப்பது சர்வதேச நாடுகளுக்கு எதிரானதல்ல. என்னுடைய ஆய்வுகள் பல கிழக்கு சார்ந்தது. கிழக்கில் போட்டியிட்டால் கூட்டணிக்குத் தோல்வி நிச்சயம். தேர்ட்தலின் பின் முஸ்லிம் காங்கிரசும் புறக்கணிக்கப் படல்லாம்.ஏனேனில் தமிழர்கள் தன்னோடு என்று காட்டுவதே மகிந்தவின் திட்டம். முஸ்லிம்களையும் தமிழர்களையும் வரலாறு ஒன்று சேர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில், ஸ்ரீலங்கா நடத்தும் தேர்தலை யாரும் பெரிதாக எடுக்கவில்லை.

அதன் காரணம்... வடக்கு மாகாணத்துக்கும் மிக விரைவில் பொருந்தும்.

கிழக்கில்... தமிழனின் காணிகளை அபகரிக்க முஸ்லீமுக்கு பச்சைக் கொடி காட்டிய சிங்களம்,

கருணாவையும், பிள்ளையானையும் பிரித்த சிங்களம்,

இன்று..பிள்ளையானையும் பிரித்து வேடிக்கை... பார்க்கும் வேளையில்,

தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில், மாநாடு வைத்தாலே... பஸ்ஸுக்கு கல்லெறி விழுகுது.

பிச்சை வேண்டாம்... நாயைப்பிடி, என்னும் அளவில் தான்... பல தமிழர் உள்ளனர்.

இதற்கு காரணம்... காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்கழும்,ஞானசூன்யமான தமிழ் அரசியல் வாதிகளும், பொயற்றை போன்ற கற்பனாவாதிகளும் தான்... காரனம்.

உங்கள் இழுப்பல், மழுப்பல் கொள்கைகளால்(?) பாழ் பட்டுப் போனது தமிழினம்.

அதை... இன்னும், உணரும் நிலையில்... நீங்கள் இல்லை என்பதே... யதார்த்தம்.

ப்ளீஸ்... இனியாவவது, கனவுலகில் வாழாதீர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வசதியா இருந்து கொண்டு.. சிறீலங்கா சிங்கள பெளத்த- சந்தர்ப்பவாத முஸ்லீம் உயர்மட்ட அரசியல் சக்திகளோடு பிணைப்புக்களையும் வைச்சுக் கொண்டு ஆயிரம் விமர்சனம் எழுதிறதிலும்.... தாயகத்தில் இருந்து செயற்படும் அரசியல் சக்திகளின் குரலைக் கேட்பது மேல்....

கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிடக் கூடாது: கஜேந்திரகுமார்

சனிக்கிழமை , யூலை 14, 2012

Gajan%2BGajan.jpg

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கூட்டமைப்பின் என்ற பெயரிலோ அதன் சின்னத்திலோ போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்காக பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

.

'தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சியாகிய இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் மக்கள் முன்னணியாக தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணம், கூட்டமைப்பு 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதாகும்.

.

தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதானது எங்களின் விலகலுக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிட்டது. 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் இனம் போராடி பல இழப்புக்களுக்கு முகம் பொடுத்து வந்திருக்கின்றது. தற்போது தமிழ் இனத்தின் மீது சர்வதேசத்தின் பார்வை திரும்பியிருக்கின்றது.

.

இந்த நிலையில் மாகாண சபைத்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமாக இருந்தால் தேசியம் தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்பற்றை இழந்தவர்களாக பார்க்கப்பட வேண்டும். இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் தரக்கூடியதாக அமைந்துவிடாது.

.

மாறாக தேர்தலில் போட்டியிடகின்றவர்களுக்கு பதவியும் சம்பளத்தை மட்டுமே இந்த மாகாண சபையினால் வழங்க முடியும். அதிகாரங்கள் யாவும் ஆளுனருக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின். இந்தக் காரணங்கள் யாவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அலல். அவை யாவும் பொய்யான காரணங்கள.

.

அதாவது அரசுடன் இணைந்து போட்டியிடும் கட்சிகள் வெல்லக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைப்பீடம் தெரிவித்து வருகின்றது. அவ்வாறு அந்தக்கட்சிகள் வெல்லக்கூடாது என்று நினைத்தால் சுயேட்சையாக போட்டியிட்டால் எங்கள் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக இறங்கிவேலை செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

.

இத்துடன் இந்தத் தேர்தல் மூலம் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு சாத்திக்கூறுகள் இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது.

.

மாகாண சபை இணைப்பை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்கின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மாகாணசபை இணைப்பு என்பது சாத்தியப்படாதா ஒன்று. எனவே தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலை சுயேட்சைக்குழுவாக பதிந்து போட்டியிடுமாறு கெஞ்சிக்கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.

.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் மணிவண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டர்.

http://www.eelanatha...-கஜேந்திரகுமார்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் குரலை வரவேற்கின்றேன்.

சம்பந்தன் பென்சன் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

மாவை.. மதில் மேல், பூனையாக இருக்கப் படாது. :D

முகமூடி போட்டுக்கொண்டு தனிப்பட்ட விமர்சனங்கள் செய்யும் கோளமையை தவிருங்கள் மல்லையூரான். நான் பலதடவை மரணத்தைச் சந்திதபோதும் எப்பவும் கோழையாக இருந்ததில்லை. ஈழத்துக்கு உங்கலைப் போன்றவர்கள் ஏற்றுமதி செய்த ஒரு அனர்த்தம் போதும். போதும் மல்லையூரான்.

சர்வதேச நாடுகள் வடமாகான தேர்தலைத்தான் வலியுறுத்துகின்றன. கூட்டனியும் அதையே வலியுறுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்தேர்தல் தமிழர்கல் தன்னோடு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்க்கான மகிந்தவின் திட்டம். வடமாகாணத் தேர்தலை வலியுறுத்தி தேர்தலைப் பகிஸ்கரிப்பது சர்வதேச நாடுகளுக்கு எதிரானதல்ல. என்னுடைய ஆய்வுகள் பல கிழக்கு சார்ந்தது. கிழக்கில் போட்டியிட்டால் கூட்டணிக்குத் தோல்வி நிச்சயம். தேர்ட்தலின் பின் முஸ்லிம் காங்கிரசும் புறக்கணிக்கப் படல்லாம்.ஏனேனில் தமிழர்கள் தன்னோடு என்று காட்டுவதே மகிந்தவின் திட்டம். முஸ்லிம்களையும் தமிழர்களையும் வரலாறு ஒன்று சேர்க்கும்.

தேர்தலில் தோற்று போவார்கள் என்பதால் தேர்தலை விட்டு ஓடுங்கள் என்று புத்திமதி கூறுவதுதான் ஒரு சுத்த வீரனின் வீரமோ?

வெளியேவந்து எழுதினால்த்தால் வண்டவாளைங்களை உடைத்து வைக்க உரிமை கொடுக்கப்படும் இல்லையேல் அது மறுக்கப்படுமா? இது கருத்துக்களம். நிர்வாகம் புனைபெயரை பாவிக்கும் படியும், உண்மை பெயர் விலாசங்களை பாவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதை இதுவரையில் தங்களின் ஆராச்சிகளில் கண்டு பிடிக்க முடியவில்லையாயின், கூட்டமைப்பு தோற்கும் என்று நீங்கள கண்டு பிடித்த ஆராச்சியின் முடிவு சரியாக இருக்க வேண்டும் என நான் ஏன் ஏற்கவேண்டும் என்று நினைகிறீர்கள். அதாவது மறைந்திருந்து எழுதுவோர் தொடர்ந்து மேடைகளில் உண்மை போல நடிப்போரின் முகமூடிகளை கிளித்துவிடுகிறார்கள் என்பதாலா இந்தக்கவலை. எதற்காக எனது முகமூடிக்கதை இந்த திரிக்கு இழுக்கப்பட்டது? நான் புனை பெயருக்கு வெளி வந்து எழுதினால் எப்படி எனது மனச்சாட்சி மாறுபடும் என்பதை கூறமுடியுமா?

நான் முகமூடி போட்டுக்கொண்டு எங்கும் ஒழிந்திருக்கவில்லை. சில அரசின் வக்கலாத்துக்களுக்காகத்தான் முகமூடியாக இருக்க முடிகிறது. நான் எதற்கும் பயந்து செத்து நான் செயவேண்டிய வேலைகளிலிருந்து ஒதுங்கி போயிருப்பதாக கனவு காணத்தேவையில்லை. எனது சொந்த பெயரிலும் பலதடவைகளில் பிரசுரங்கள் வந்திருக்கு. என்னை சொந்த பெயரில் வந்து எழுத கேட்ட அழைப்புக்களை ஏற்று நான் இன்னமும் போகாமல் யாழில் இருப்பது பயத்தால் என்று நினைக்க வேண்டாம். புலம் பெயர்மக்கள் பலருக்கு தமது தனிப்பட்ட நிலமைகளால் முழுவதாக போராடத்தில் போக முடியவில்லை. இங்கிருந்துதான் பலவற்றை தான் கற்றதாக சொல்லி குளவி சென்றார். யாழ் களத்தில் மட்டும்தான் எழுதும் போது புனைபெயர் பாவிக்க வேண்டியிருக்கிறது. அதை விரைவில் நிவிர்த்தி செய்வேண்டும் என்றுதான் இருக்கிறேன். அப்போது உண்மை பெயரில் இருவரும் சந்தித்துக்கொள்ளலாம். அவசரம் வேண்டாம்.

மகிந்தா மிரட்டி கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு போகாமல் விட்டதை புலிகளாக கருத்துவார்கள் போனால் என்று யாழ்த்திரிகளில் விளக்கமளித்தவர் தாங்கள் என்பதை மறக்கவில்லை.

எப்படி ஜெனீவா சென்றால் புலிகளாத்தென்பட்ட கூட்டமைப்பு இப்போது தேர்தலில் தோற்றால் மக்களின் பிரதிநிதித்துவத்தை இழந்தவர்கள் போல் வெளிநாட்டவர்களுக்கு காணப்படுவார்கள் என்பதின் விளக்கம் என்ன? தேர்தலில் தோற்பார்கள் என்பதை பகிரங்கமாக எழுதி அதை விவாதித்து, பின்னர் தேர்தலை கையை விட்டால்மட்டும் வெளிநாடுகள் தேர்தலில் வென்று பிரதிநிதித்துவத்தை கூட்டமைப்பு தக்கவைத்து கொண்டதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதா இந்த விவாதத்தின் கருத்து?. இதை இரகசியமாக வைத்திருக்க முடியாவிட்டால் அவர் தன்னை எந்தவகை ஆலோசகர் அல்லது ஆராச்சியாளர் என்று மற்றவர்கள் நினைக்கட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எந்த ஒரு உண்மையான அரசியல்வாதி ஒரு சிறுபான்மை இனம் தேர்தலில் தோற்றால் தமது சிறுபான்மை தன்மையை இழந்து விட்டதாக கருதி இனி உரிமைமைகள் தேவை இல்லை என்று கூறுவார். கிழக்கு மாகாணத்தில் 50% மேலாக தமிழர்கள் இல்லாதபோது எந்த நாடு அங்கே கூட்டமைப்பு வென்றால்த்தான் மகிந்தா போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்பதை ஒத்துகொள்ளும் என்றிருக்கு. இது சிறுபான்மை விவகாரமில்லையா? வெளிநாடுகளுக்கு அப்படித்தான் நாம் விளங்க வைக்க வேண்டும் இல்லையா?

தேர்தலில் வெல்ல வேண்டியதின் முதல் தேவை ஆளும் கட்சியில் இருந்தோ அல்லது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டோ அங்கே இருக்கும் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே. அந்த தேர்தல் உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வெளிநாடுகள் எதிர்பார்க்கின்றன என்பதை விவரிக்க முடியுமா? புலிகள் காலத்தில் தமிழ்மக்கள் தேர்தலை பகிஸ்கரித்து மகிந்தாவை வெல்ல விட்டதால்தான் ரொபேட்பிலேக் போன்றவர்கள் தமிழருக்கு எதிராகத்திரும்பினார்கள் என்பதை அறியாதவர் யாராவது இருக்கிறார்களா? வடமாகாணதேர்தலை அரசு நடத்தாமல் இருப்பது தான் அங்கே வெல்லத்த சூழ்நிலையை உருவாகவே. அதாவது அதன் பின்னரே தேர்தல். அது வெளிநாடுகள் எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க அதைச் சாட்டி இதை பகிஸ்கரித்தால் வலிய கிழக்குமாகாணத்தையும் கொடுத்து வடக்குமாகணத்தில் பொல்லைகொடுத்து அடிவாங்கியதாகவும் தான் ஆகும்.

[size=4] முஸ்லிம்களையும் தமிழர்களையும் வரலாறு ஒன்று சேர்க்கும்[/size]

[size=3]தேர்ட்தலின் பின் முஸ்லிம் காங்கிரசும் புறக்கணிக்கப் படல்லாம்[/size]

இந்த இரண்டு வசனங்களும் போதாத ஏன் கூட்டமைப்பு தேர்தலில் போட்டி போட்டு தனது இடத்தையும் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு.

[size=4].[/size]

இந்த தேர்தலில் வென்றால்த்தான் உரிமை பெற்றுத்தருவோம் என்று எந்த நாடு சொன்னதாக தெரியவில்லையே? இதுவரையில் கிழக்கு மாகாணத்தை அரசு பிடித்து வைத்திருப்பதை கொண்டு வெளிநாடுகள், தமிழர்கள் அங்கே வாழவில்லை என்றா சொல்கிறார்கள்? ஆராச்சியின் மூலம் தேர்தலில் வென்றால் என்ன தமிழ்மக்களுக்கு கிடைக்கக்காத்திருகின்றன என்பதை தெரிவிக்க முடியுமா?. கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாது விடுவது நடகாது; அதேபோல் அரசு வடமாகணத்தேர்தலை நடத்தாது; ஆனால் முஸ்லீம்காங்கிரசும் கூட்டமைப்பும் இணந்து போட்டியிட சில பேச்சு வார்தைகள் நடத்தியது. அது சாத்தியமானது. இது வரை முஸ்லீகளுக்காக வாதாடியவர்கள் முஸ்லீம் மக்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்று இதுவரையில் எங்கே எழுதி விவாத்தித்து இருக்கிறார்கள். அப்படி செய்ய வில்லையாயின் எதற்காக கூட்டமைப்பை தேர்தலை விட்டு விலகவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். இதுதான் கோளைத்தனம் இல்லாத சுத்த வீரமா? உண்மையாக முஸ்லீம் மக்களின் நனமையை நாடும் வீரர், உயிர் போகும் ஆபத்து வந்தாலும், அரசு தேர்தல் முடிய அவர்களை தூக்கி எறியும் என்ற உண்மையை அவர்களிடம்கொண்டு சேர்த்து அவர்களை காப்ற்ற வேண்டியது சுத்த வீரர்களின் கடமை அல்லவா?

நான் ஆராய முயல்வது வந்து: வேட்பாளர்களை பயமுறுத்தி விலக வைக்க பல வலோற்காரங்களை (வேட்பாளர்களின் வீடுகளின் முன்னால் நாய்களை எல்லாம் சுட்டுபோட்டது. சிங்கள குத்திகளையும் குண்டர்களையும் அங்கே கொண்டுபோய் வைத்திருந்தது) உள்ளூர் ஆட்சித்தேர்தலில் முயன்ற அரசு அதையே கிழக்கு மாகணத்தேர்தலிலும் ஆரம்பித்தது. மேலும் சில வேட்பாளர்களை கூட்டமைப்பு வேட்பாளர்கள் போலவும் நிறுத்தமுயன்றது. பின்னர் எதற்காக இந்த புதிய முயற்சியில் இறங்கி யிருக்கிறது எனபதுதான் புரியவில்லை.

இங்கே குறிப்பிட்ட ஆராச்சியானது ஏற்கனவே சில புள்ளிவிபரங்களுடன் சிலநாட்களுக்குமுன்னர் கணப்பட்டது ஒன்றுதான். அதை ய்ரோ இன்று முதன்முதல் கண்டு பிடித்ததாக கூறும் வாதாட்டத்தை ஏற்கமுடியாது.

புள்ளி விபரத்தில் இருந்த குறைபாடுகளை நான் அநத் நேரம் கவனித்துத்தான் இருந்தனான். அது யாரலும் யாழ்களத்தில் பெரிததாக எடுத்துகொள்ளப்படாததால் அவற்றை உடனே விவாதிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த புள்ளி விபரங்களின் போலித்தனங்களுக்கு திரும்பி வருவேன். இந்த திரியின் அடிப்படை நோக்கம் கூட்டமைப்பை தேர்தலில் இருந்து பின்வாங்க வைப்பது என்பதால் அத்தோடு நிறுத்திக்கொள்ள விரும்பிகிறேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் குரலை வரவேற்கின்றேன்.

சம்பந்தன் பென்சன் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

மாவை.. மதில் மேல், பூனையாக இருக்கப் படாது. :D

எனது கருத்தும் இதுதான். :D

செயபாலன் போன்றோர் அரசியலில் இன்னும் படிக்க வேணும்.இருபது வருடங்கள் முன் ஒப்புவித்ததையே திருப்பிச் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை.

அமெரிக்கா முதலிய மேற்குலகம் இன்று எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவக் கட்சியுடன் பேசுகிறது.ஒரு சில வருடங்கள் முன் அமெரிக்கா எகிப்திய இராணுவத்திற்க்கு மிகப் பெரும் ஆதரவைக் கொடுத்தது, முபாரக்கைக் கொண்டு இராணுவ ரீதியாக இசுலாமிய சகோதரத்துவக் கட்சியை அழிக்க விரும்பியது.ஆனால் இசுலாமிய சகோதரக் கட்சி தமது கொள்கையில் உறுதியாக நின்று மக்கள் போராட்டங்களை நடாத்தியது.ஈற்றில் அமெரிக்கா அவர்களின் காலடியில்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து இன்னொரு குரல்.................

முஸ்லிம் காங்கிரஸ் காட்டிக்கொடுத்துவிட்டது:

ஞாயிற்றுகிழமை, யூலை 15, 2012

தமிழ் பேசும் மக்களின் காணி, நிலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இருக்கவேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து, முஸ்லிம்களின் காணி, நிலம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளையும் பறிகொடுக்கப் போகின்றது.

.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் என்றோ ஒரு நாள் உணரத் தான் போகிறார்கள். இவ்வாறு அல்வாய் திக்கம் மத்திய சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கூறினார்.

.

சனசமூக நிலையத் தலைவர் க.நிதர்சன் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேலும் பேசுகையில் கூறியதாவது இன்று அரசியலில் சமகாலப் பிரச்சினை குறித்து சில விடயங்களை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

.

சிறுபான்மை இனங்களாக தமிழர், முஸ்லிம்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்த அரசு முயன்று கொண்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் நிலையை உணராமல் செயல்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்தவேளை அப்போது தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அஷ்ரப் அங்கிருந்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை ரவூப் ஹக்கீம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

.

தமிழ் பேசும் மக்களுக்காகச் செயலாற்றியவர் அமரர் அஷ்ரப் அன்னாரின் வழியைப் பின்பற்றாமல் பதவிக்காகவே ஹக்கீம் அரசுக்குத் துணைபோகின்றார். ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட்டு விட்டு, மற்றையவர்கள் அரசுடன் இணைந்து விட்டார்கள் என்று கூறியே அவரும் அரசுடன் இணைந்துகொண்டார்.

.

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக அரசு தீர்க்கமான பதிலைக் கொடுத்ததா? புனித பிரதேச மாக்கப்பட மாட்டாது என அரசு சொன்னதா, இல்லவே இல்லை. அனுராதபுரத்தில் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. அதுவும் அரசினால் பூசி மெழுகப்பட்டு விட்டது. கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுற்றதும் தம்புள்ளையில் பள்ளிவாசல் இருக்காது.

.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிகளும் பறிக்கப்படும். இதனைப் பற்றி இணக்க அரசியல் பேசியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கிழக்கு முஸ்லிம்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

.

தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனமாக இருந்து உரிமைகள் இல்லாத நேரத்தில் ரவூப் ஹக்கீம் அரசுக்குக் கைகொடுக்கின்றார். முடிந்தால் இதற்கு அவர் பதில்கொடுக்கட்டும். காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ்கட்சி கேட்டது.

.

இதனை அரசாங்கம் கொடுக்குமா. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர்தான் தெரியும். சிறுபான்மையினருடன் சேர்ந்து தனி அலகு வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கேட்டது. அவர்கள் கேட்காமலேயே அரசியல் தீர்வு வரும் வேளை முஸ்லிம்களுக்கென தனி அலகு தருவோம் என நாம் உறுதி அளித்திருந்தோம்.

.

தனி அலகைப் பெற்றுக்கொள்ளாமல் அரசுடன் சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரசு எதனையும் கொடுக்காது என்றார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் பரிசில்களை வழங்கினார்.

http://www.eelanatha...கொடுத்துவிட்டது

Edited by nedukkalapoovan

கிழக்கு தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரும் வகையில், தமிழின விரோத சிங்கள, இஸ்லாமிய காடையர்கள் தோற்கடிக்கப்படும் வகையில் புத்திசாலித்தனமான முடிவை தமிழர் தரப்புக்கள் எடுப்பது நல்லது. சிக்கலான ஒரு சூழ்நிலை!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க கூடாது: மாவை

[size=3]சனிக்கிழமை , யூலை 14, 2012[/size]

tna-200_4.jpg

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்ற தமது உள்ளத் துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தை ஆதரித்தால் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதாக மட்டுமல்ல முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

.

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுக்கவிருக்கும் முடிவு என்னவென்பது குறித்து முஸ்லிம் மக்கள் இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அரசுக்கு ஆதரவை வழங்கக் கூடாது என்ற தமது உள்ளத்துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

.

கல்முனையிலுள்ள விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

.

நற்பிட்டிமுனை மணற்சேனையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

.

அரசாங்கம் திட்டமிட்ட முறையில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து எழுத்து மூலம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு முன் கூட்டியே மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்தவுள்ளது.

.

நாட்டில் பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சிறுபான்மை இனங்களை சீர்குலைத்து விடுவதற்கும், இச்சிறுபான்மை சமூகங்களுக்குப் பிரச்சினைகளே இல்லை என சர்வதேசத்திற்குக் காட்டவும் அரசாங்கம் இம் மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்றது.

.

எனவே சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மிக விழிப்புடன் இத் தேர்தலை அணுக வேண்டிய அவசியமுள்ளது.

.

வடகிழக்கு தமிழர் பிரதேசத்தில் அவர்களுக்கென்று தாயகம், அடிப்படை ஜனநாயக உரிமைகள், மத சுதந்திரம் இருப்பதை இல்லாமல் செய்து விட்டால் இந்நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை. இவர்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை என உலகுக்குக் காட்டுவதற்காக அரசும், அதன் பேரினவாதமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

.

இதே பேரினவாத அரசு நம் சகோதர இனமான முஸ்லிம் மக்களையும் நசுக்கி அவர்களுக்கும் அநீதி இழைத்து வருகின்றது. தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் எதிர்நோக்கி வரும் நில ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, திட்டமிட்ட குடியேற்றம் போன்ற ஒடுக்கு முறைகள் , முஸ்லிம் மக்கள் மீதும் திணிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தான் வஞ்சக நோக்கு கொண்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நம் முன்வந்துள்ளது.

.

முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்ற தமது உள்ளத்துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

.

தேர்தல் எப்படி முடியுமென்பது வேறு, ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசு பக்கம் போய் இத்தேர்தலில் அரசை ஆதரித்தால் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதாக மட்டுமல்ல, முஸ்லிம் மக்களையும் அது பலவீனப்படுத்துவதாகவே அது அமையும்.

.

முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

.

அவர்கள் அரசை இத்தேர்தலில் ஆதரிப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரசையும், முஸ்லிம் மக்களின் பலத்தையும் ,பலவீனப்படுத்துவது மட்டுமன்றி தமிழ் மக்களின் பலத்தையும் பலவீனப்படுத்துவதாகவே அமையுமெனக் கருத வேண்டியுள்ளது.

.

முஸ்லிம் மக்கள் இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசை ஆதரித்தால், முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென்ற கருத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் நிதானமாகத் தீர்மானத்தை எடுப்பதுடன், தமிழ் மக்களோடு செயற்படத்தக்கக் கூடியதாகவும், இத்தகைய தேர்தல் சந்தர்ப்பங்களில் கூட இந்த அரசுக்கு நாம் எதிர்ப்பைக் காட்டக் கூடிய நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டும்.

.

முஸ்லிம்களும், தமிழர்களும் தம் இலட்சியத்தை நோக்கி வெற்றி பெற இவை சந்தர்ப்பமாக அமையும்.

.

மக்கள் திடம்

.

அரசாங்கம் இன்று தமிழ் மக்கள் தோல்வி கண்டவர்களென்ற சித்தாந்தத்தைக் கொண்டுள்ள போதும் எமது மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடக்கம் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டு, எம் போராட்டம் நலிந்து விடவில்லை, முற்றுப் பெறவில்லை, நாம் தோல்வி கண்டவர்களல்லவென்ற செய்தியை உரத்துக் கூறியுள்ளனர்.

.

ஐ.நா.பேரவை

.

தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை காரணமாகவே சர்வதேசத்தின் முன்னால் அரசு குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கின்றது.

.

எம் மக்கள் எங்கிருந்து அகதிகளாக வெளியேறினார்களோ, அங்கு குடியேற்றப்பட வேண்டும். இராணுவம் தமிழ் மண்ணை விட்டும் வெளியேற வேண்டும். கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றி பொறுப்புக் கூற வேண்டும் என்பன ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாகவுள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

இதனடிப்படையில் உலகில் இராஜதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கின்றது. அரசு ஏமாற்றி விட முடியாது. நாம் விழிப்பாகவும், அமைதியாகவுமிருந்து நம் செய்திகளை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் ஆய்வு நடக்கவிருக்கின்றது. ஏமாற்றப்பட்டால் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தற்போதைய தீர்மானங்களை விடவும் மிகத் தீவிரமான தீர்மானங்களை அரசுக்கு எதிராகப் பேரவை எடுக்கும்.

.

இதற்காக நாம் சும்மா இருந்துவிடக்கூடாது, தமிழ் மக்கள் தெளிவாக திடமாக வெற்றி பெறும் வகையில் செய்திகளைச் சர்வதேசத்திற்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

.

இதற்கு மாகாண சபைத் தேர்தலை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். சுதந்திர ஆட்சி உரிமை, விடுதலை நாம் பெற வேண்டும். இதற்கு எமது இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெற வைப்பதோடு நம் மக்கள் வாக்குகளை அளிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

.

இணைந்த மாகாணத்தில் வாழ வேண்டும். நம்மை நாம் ஆள வேண்டுமென்ற அடிப்படைக் கொள்கையை வெற்றி பெறச் செய்வோம்' என்றார்.

http://www.eelanatha...ங்க-கூடாது-மாவை

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசு வடமாகாண தேர்தலை தவிர்த்ததும் கிழக்கு மாகாண தேர்தலை அவசரப்பட்டு நடத்துவதும் அடுத்த ஐநா மனித உரிமைகள் கூட்டத்துகுமுன் கூட்டமைப்பை ஈழத்தில் தோற்கடித்தோம் என்கிற காட்ச்சியை உருவாக்குவதர்க்காகத்தான். இந்த அடிப்படை உன்மையை முனீலைப் படுத்தியே தேர்தல் பற்றி சிந்திக்க முடியும்.

இன்று நமக்குள்ள பலம் சர்வதேசம் ஏற்படுத்தி தருகிற அரசியல் வெளிதான்.மாகாணசபையில் போட்டியிட வேண்டும் என்கிற சர்வதேச எதிர்பார்ப்பு. வடமாகாணசபைத் தேர்தலையே சர்வதேசம் வலியுறுத்துகிறது. தேர்தலை பகிஸ்கரிக்காமல் வடமாகாணசபை தேர்தலுக்குப் பதிலாக கிழக்குமாகானசபையைக் கலைத்து தேர்தலை ஒருவருடத்துக்கு முன் நடத்துகிற சதிமுயற்சியை எதிர்த்து தேர்தலில் பங்குபற்ற மறுக்க வேண்டும் என்பதுதான் என் நிலைபாடு.

கஜேந்திரகுமார் அவர்களின் தனிமைப்பட்டுத்தும் அணுகுமுறையை மக்கள் நிராகரித்துள்லனர். கொழும்புத் தமிழரான அவர் புலம்பெயர் தமிழ் ஆர்வலர்களை மையப்படுத்தியே சிந்திக்கிறார். எனினினும் கூட்டமைப்பு சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடலாம் என்கிற அவரது ஆலோசனை சிந்திக்கத்தக்கதாகும்.

கூட்டமைப்பு தேர்தலில் கலந்து கொள்வது என்று தீர்மானிதிருக்கிறது. சம்பந்தரை சர்வதேச சமூகம் என்ன கேட்டிருக்கிறது என்று தெரியவில்லை.வடமாகானத் தேர்தலை நடத்தும்வரை பங்குபற்றுவதில்லை என்கிற முடிவோடு சுயேட்ச்சைக் குழுவாக பங்குகொள்ளுவது பற்றி ஆலோசிக்கலாம். நீண்டகாலமாக அரசுக்கு எதிராக இருக்கும் முஸ்லிம் பிரமுகர்களோடும் சிங்கள இடதுசாரிகளுடனும் மேற்படி குழு சேர்ந்து தேர்தலை எதிர் கொள்ளலாம். .

நாரதர் அவர்கள் சொல்வதுபோல நாட்டுக்கும் எனக்கும் 20 வருட இடைவெளியில்லை. 2006 வரை நான் கிழக்கு மாகாணத்தில் நேரடியாக ஆய்வுப் பயனங்களில் ஈடுபட்டிருந்தேன். தோழன் சிவராமின் மரனத்தின்பின் போனபோது விடுதலைப் புலிகளும் என் முஸ்லிம் நண்பர்களும் எனக்கு ஆபத்து இருப்பதாக எச்சரித்தனர். அதன்பின்னும் என் ஆய்வுகளைத் தொடர்கிறேன். 2006 அக்டோபர் தீராநதிப் பேட்டியை வாசிக்கவேணும். இந்திய இராணுவ புவியியல் நிலைகலை அடிப்படையாக்கி இந்திய பாதுகாப்புப்பற்றி நான் முன்வைத்த கோட்பாடுகள் பம்பாய் தாக்குதல், மதிய கேரளாவில் பயங்கரவாத பயிற்ச்சி வாய்ப்புகல், சிங்கள ஆழ்கடல் மீனவர் படகுகளில் வட இந்தியாவுக்குள் சீன பாகிஸ்தானிய ஆயுதக் கடத்தல் இடம்பெற வாய்ப்புள்ளமை உட்பட சரி வந்துகொண்டிருக்கிறது. பம்பாய் தாக்குதலின் போது குமுதமும் இதுபற்ரி எழுதியுள்ளது.

நான் வெறும் வார்த்தைகள் பேசவில்லை நாரதர் அவர்களே. ஒரு பெரும்பாண்மை இனத்தின் வெற்றிகரமான முஸ்லிம் போராளிகளை விழுந்துகிடக்கும் எங்களோடு ஒப்பிடவேண்டாம். அது மீண்டும் தப்பான முடிவுகளுக்கு வழிகோலிவிடும்.

கூட்டமைப்பு போட்டியிடுவதானால் கூட்டமைப்பும் UNP யும் உட்பட்ட எதிர்க்கட்ச்சிகள் 17 ஆசனங்களைக்கும் அதிகமாக வெற்றி பெறும் வாய்ப்பு அமைய வேண்டும். அதற்கான சிறு வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழலில் கிழக்கு மாகானத்தில் அரசு அமைக்கமுடியாத சூழல் ஏற்படும். ஆனால் கூட்டமைப்பு UNP யோடு சேர்ந்து அரசு அமைக்க முன்வராவிட்டால் UNP மற்றும் கூட்டமைப்பில் இருந்து சில அங்கத்தவர்கள் கட்ச்சி தாவிவிடுவார்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள்.. பொயட் இன்னும் அமிர்தலிங்கம் காலத்தில நிற்குது. போட்டியிடுவது கூட்டணியல்ல.. தமிழ் தேசியக் கூட்டுமைப்பு. தமிழர் விடுதலைக் கூட்டணி.. தமிழ் தேசியத்தைக் கைவிட்டே கன காலம்.

பொயட் கொஞ்சம் என்றாலும் நிகழ்காலத்துக்கு வாங்க. இறந்த காலத்திலேயே இருக்காம..! :icon_idea::lol:

இங்கு இன்றிரவு இடிமுழக்கத்தோடு கடு மழை. 2006ல் பொயடின் ஆராச்சியளை யாராவது படித்தீர்களா? குமுதம் என்ன சொல்கிறது இதைப்பற்றி?

பொயட் 2006ல் கிழக்கு மாகாண ஆராச்சிகளின் போது மும்பாயை தாக்குதல் பற்றியும் சில உண்மைகளை கண்டுபிடித்து எழுதியிருக்கிறாராம். அதாவது பலர் சந்தேகப்படுமாப்போல் இலங்கையில் பல ஜிகாடி திட்டங்கள் தீட்டப்பட்டு உலக நாடுகளில் அரங்கேற்றப்படுகின்றதென்பதை இந்தமுறை பொயட் ஒத்துகொள்கிறார் என்பதா இதன் கருத்து?

கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தல்களில் இனிவரும் காலங்களில் எதுவும் செய்ய இல்லை. இது பொயட் ஆராச்சி மேல் ஆராச்சி செய்த்து இன்னும் சரியாக கண்டு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் அங்கு தோற்று போவார்கள் என்ற காரணத்திற்கு தேர்தலைக் கைவிடும் படி பகிடி எழுதுகிறார். எப்படி முஸ்லீம் நாடுகளுக்கு மத்தியில் ஸ்ரேலுக்கு இடம் ஒதுக்கினார்களோ, விரும்பினால், அப்படி சர்வதேசம் கிழக்கு மாகாணதமிழ் மக்களுக்கு இடமொதுக்க முடியும்.

பொயட் மும்பாய் தாக்குதல்களைபற்றி எச்சரிக்கை விட்டும் அந்த ஆபத்துக்களை பற்றி கவலைப்படாமல் ஈழத்தமிழரை தாக்கிய இந்தியக் காங்கிரஸ் தனக்கு மூக்கு போனாலும் தமிழருக்கு சகுனப்பிழையாவது வரட்டும் என்று நடந்துகொள்கிறது. இந்த காங்கிரஸ் போய்சேர்ந்தால் சர்வதேச மேசைகளில் நாம் சிறுபான்மை என்று வைத்து நமது தீர்வுக்கு வாதாடமுடியும். அதற்கு ஒரு ஆதாரமாக தமிழரின் பாரம்பரிய நிலமான கிழக்கு மாகாணம் பறிக்கப்பட்டு அங்கு முஸ்லீம் சிங்கள குடியேற்றங்களால் தமிழர் வெல்லமுடியாமல் இருப்பதை சாட்சியமாக வைக்கப்படும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் ஆராட்சியில் புலிகள் பதுளைக் காடுகளை

பிடிக்க வேண்டும் எனவும் எழுதி இருந்தார்.அதன் காரணம் தெரியவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய நுணவிலான்.

எரிக்கப் படிருக்கவேண்டிய ஆவணங்கள் இரகசியங்கள் எல்லாம் இன்று எதிரியின் கையில். ஆனபடியால் மறைக்க ஒன்றுமில்லை. எம் இளைய தலைமுறைக்காக நான் நமக்குத் தெரிந்ததை சொல்லவேணும். எழுதவுள்ளேன்.

ஜெயசுக்குரு வெற்றிக்குபின்னர் A9 கிழக்குபக்க பள்ளத்தாக்கால் முன்னேறி மாட்டுப் படாமல் A9 மேற்க்கு மேட்டுக்கையால் முன்னேறி சுற்றி வழைப்பார்கள் தப்ப இப்பவே திட்டமிடவேனும் என சொல்லியிருந்தேன்.

கெரிலாவாக காடுகளைத் தொடர்ந்து கட்டுப் படுத்தாமல் காடுகளில் இருந்து வெளியேறி காடுகளை எதிரிக்கு விட்டுவிட்டு நேரடி இராணுவமாக மாறி நகர்மைய ஆட்ச்சி அமைப்பை ஆரம்பிதமை இராணுவ தவறு என்பது என் விவாதமாக இருந்தது.

இறுதி யுத்தத்தில் சோழர் படைகலின் இராணுவ உத்திகலை வலியுறுத்தினேன். சுற்றி வழைப்புக்கு வெளியில் தேற்ச்சி பெற்ற சிறு குழுக்கள் ஊடுருவி ஏற்கனவே சிங்களக் காடுகளில் இருக்கும் போராளிகளின் அனுசரணையோடு பெரும் நீர்நிலைகள் ந்நீர்மின் திட்டங்கலை கைப்பற்றினால் மட்டுமே இறுதி யுத்தத்தில் சிங்கள அரசை முற்றுகையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு இறங்கிவர செய்ய முடியும் வெல்லமுடியும் என்கிற கருத்தை ஜெயசுக்குறுவின் பின்னரிருந்தே வலியுறுத்தினேன்.

அதனால் கருணா பிரிவின்பின் கிழக்கு மாகானத்தில் இருந்து போராலிகள் பின்வாங்கியபோது அவர்களை சுற்றி வழைக்கப் படவுள்ள வடக்குக்குள் கொண்டு வராமல் சிங்கள காடுகளில் சிறு குழுக்களாக சிதறும்படி கேட்டேன்.

கட்டு நாயக்கபோன்ற அவசியமற்ற தாக்குதலிலும் கொழும்பு தற்கொலைத் தாக்குதல்கலிலும் விரயமகும் தேர்ந்த போராளிகலை இறுதி யுத்தத்தில் நீர்நிலைகலைப் பிடிப்பதற்காக பயிற்றுவித்து சேமிக்கவேண்டும் என்பது என் விவாதம்.

இந்த விவாதத்தில்தான் கிழக்கு மாகானத்தில் இருந்து பின்வாங்கும் போராலிகள் யால் தேசிய வனத்தில் இருந்து சோமாவதி மொறவேவா வில்பத்து மற்றும் மாணிக்க கங்கை வடிநிலம் மொனராக்கல பிரதேசத்தில் இருந்து பதுளை திசையில் விரிவடையும் காடுகள் போன்ற முக்கிய முக்கிய நீர்நிலைகளுக்கு மார்க்கமான காடுகலில் சிறு குழுக்கள் நிலைபெற வேண்டும் என்றேன். அப்போதுதான் பதுழை காடுகள் பற்றிய பேச்சு வந்தது தோழரே.

பொயற் எங்களுக்கு நீங்கள் முகத்தில் அறைவது போல் சொன்னால் பிடிக்காது...நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் சாணி அடிப்போம்..சும்மா எங்களுக்கு அட்வைஸ் சொல்லாதைங்கோ ..எங்களுக்கு ஒத்து ஊதுங்கோ

இந்த ஆள் ஒவ்வொரு போரயும் வென்றுகொண்டு வந்த இயகத்திற்கு அட்வைஸ் கொடுத்ததாம். போரில் இலங்கையிடம் இயக்கம் தோற்கவில்லை. போருத்திகளில் இயக்கம் எப்போதும் குறைந்திருக்கவில்லை. போரில் இயக்கம் தோற்றது 20 நாடுகளின் கூட்டில் எனபதை பூசி மெழுகி தன் அட்வைஸ்சை கேட்டவில்லை என்று கதை அளக்கிறார்கள்.

அப்படியாயினும் தான் போரை தொடரும்படி எழுதிய அட்வைஸ்சுகளைத்தானே மறந்தவுடன் தான்தான் அதியுயர் சமாதான வாதி மாதிரி இப்படியும் எழுதுகிறார். "[size=4]ஈழத்துக்கு உங்கலைப் போன்றவர்கள் ஏற்றுமதி செய்த ஒரு அனர்த்தம் போதும். " [/size] தன்னைபற்றி பீத்துவதில் மட்டும் மகா பாண்டியத்துவம் காட்டுகிறாகள். முதல் திரியில் எழுதியதை மற்றத்திரியில் மறந்து போகிறார்கள்.

எல்லாம் போக முஸ்லீம் காங்கிரசைப்பற்றி எல்லவற்றையும் தெரிந்துகொண்டுவந்து இங்கே எழுத்தும் ஆட்கள் முஸ்லீம் காங்கிரஸ் நோர்வேயின் சமாதான முயற்சிகளை கூட ஒத்துக்கி தள்ளியிருக்கிறதென்பதை கண்டித்து ஒரு சொல்லு எழுதாமல் , அதை மூடி மறைத்துவிட்டு, எல்லவற்றையும் இழந்த தமிழனை தேர்தலை பகிஸ்கரித்து அதையும் முஸ்லீம் காங்கிரஸ் வெல்வத்தற்கு விட்டுக்கொடுக்கும்படி எழுதுகிறார்கள். எரிகிற வீட்டில் நெருப்பெடுத்து தமது புகையிலை பற்றும் தாழ்வான பழக்கங்களை காட்டுகிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் சாணிபூசுகிறவர்களைக்காண எனக்கு சிரிப்புத்தான் வருகுது. ஏனேனில் கோபப்படவேண்டியவர்கள் என்னோடு கோபப் படவில்லை.

அவர்கள் நான் அச்சமில்லாமல் நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தார்கள். அவர்களது ஒரே வேண்டுகோள் தயவுசெய்து எங்களிடம் மட்டும் சொல்லுங்கள் என்பதாகவே இருந்தது.

என் நிதி நெருக்கடியை உணர்ந்து சில காரியங்களை ஆற்ற அவர்கள் உதவ முன்வந்தபோதும்நான் ஒரு செப்புக் காசைக்கூட ஏற்றுக்கொள்லவில்லை.

வன்னியில் என்னுடைய விமர்சனங்களையும் கோபத்தையும் சகித்துக்கொண்டார்கள். அவர்கள் சாணிபூசவவில்லை. மாறாக பிபிசி பேட்டியின்பின் என்னை விமர்சித்த ஒரு புலத்து இணைய தளத்தில் இருந்தும் என்பற்றிய சாணிபூசலை அகற்றினார்கள்.

கருணா பிரிந்து மோதல் நிலை ஆரம்பித்தபோது குளோபல் தமிழ் குருபரனூடாக சூரியன் FM மில் மட்டக்கக்ளப்பு போராளிகளை தாக்க பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை. போராளிகளை வீட்டுகளுக்கு போக சொல்லாம் கருணா உட்பிரச்சினையை வெளியில் கொண்டுபோகக்கூடாது. வன்னியுடன் பேசி தீர்வுகாண வேண்டும் என அவசர அறிக்கை வெளியிட்டேன். வீரகேசரியிலும் அந்த அறிக்கை வெளிவந்தது. அடுத்த நாள் நான் வன்னிக்கு புறப்பட்டபோது என்னை தடுக்க முயன்று தோற்றுப்போன நண்பர்கள் எல்லோருமே அழுதார்கள். ஆனால் வன்னியில் என்னை அமைதியாக வரவேற்றுப் பேசினார்கள்.

ரஜீவ் காந்தி பைலை மூடி இணக்காத்தை ஏற்படுத்த விரும்பிய ஒரு சில அதிகாரிகள் ஒரு 2ம் கட்ட தலைமை போராளியை சரண் அடைந்து பொதுமன்னிப்பில் வெளிவரும் திட்டமொன்றை பிரேரித்தார்கள். அதை நான் அந்த 2ம் கட்ட தலைவரின் துறையிலேயே தெரிவித்தேன். அவர்கள் கோபப்படவில்லை.ஆலோசனையின்பின் சிலநாட்களித்து எங்கள் தலைவர் சரணடைந்தால் தலைவரை கேட்க்க மாட்டார்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டார்கள். அத்தகைய ஒரு உத்தரவாதம் கிடைக்கவில்லை.இது தொடர்புடைய என்னுடைய பேட்டி ஒன்று ஞானியின் தீம்தரிகட இதழில் வெளிவந்தது. அதன் பின் நான் வன்னிக்குப் போனபோது இப்படி ஒரு பேட்டிக்குப் பின் ஏன் வந்தாய் என திருமாஸ்டரும் நிலாந்தனும் என் பாதுகாப்புப்பற்றி அச்சப்பட்டனர்.

கொழும்பில் உயர்நிலையில் என் முஸ்லிம் நண்பர்கள் அதிகாரிகள் இல்லாமல் இருந்திருப்பின் என் கதையை எப்பவோ முடிதிருப்பார்கள். என்னை அறியாத முஸ்லிம் அதிகாரிகள்கூட என்னைக் காப்பாற்றி இருக்கிறார்கள். கொழும்பில் எப்பவும் அமரர் றிச்சாட் டீ சொய்சா பதிரிகையாலர் பாசன போன்ற சிங்கள நண்பர்கள் இருந்தார்கள்.

1970பதுகளில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டக் காலத்தில் இருந்து மரண அச்சுறுத்தல்களுடனேயே வாழ்ந்து வந்தேன். இது எனக்கு போணஸ் வாழ்வு. நான் அஞ்சவும் கோபப்படவும் ஒன்றுமில்லை. நான் விடுதலைமீதான காதலினால் மட்டுமே யாழில் எழுதவும் இவற்றை கூறவும் செய்கிறேன். மல்லையூரான் உட்பட சாணி அடிப்பவர்களும் விடுதலைமீது காதல் உள்ளவர்கள்தான் என்பதை அறிவேன்.நமக்குள் மோதி செயலற்றுபோவதுதான் இதுதான் தமிழரின் சாப ம் போலும்..

Edited by poet

நான்கள் சாணியடிக்க மட்டும்தான் போவோம். அதன் மேலே போய் "நாசமாகிபோக" என்று எதிரியை பார்த்துக்கூட கூட சாபம் போடுவது கிடையாது. தமிழ் இனத்தை பிரதிநிதிப்படுத்தும் கொடியை சபித்து அதன் இனத்தையே சபிப்பது கிடையாது. சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். நெஞ்சில் இருபதுதான் சொல்லில் வடிந்து வரும்.

[size=2]Posted 13 May 2012 - 06:17 AM[/size]

[size=4]நெடுக்ஸ் என்ன பேசுவது என்று தெரிந்துதான் பேசுகிறீங்களா?முஸ்லிம்களுக்கு புலிகள் செய்தவற்றை நீங்களும் உங்கள் கொடியும் என்றென்றும் அனுபவிக்க என் தமிழ் என் கவிதை என் தர்மம் என் தெய்வம் ஆணையாக வாழ்த்துகிறேன்[/size]

http://www.yarl.com/...90

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான். நெடுக்ஸ் தொடர்பாக நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். தப்பான வார்த்தைகள் நெடுக்ஸ் என்னை மன்னிக்கவேண்டும். . .

கொடி தொடர்பாக நீங்கள் சொன்னது தப்பு. நான் கொடியை அவமதிக்கவில்லை. விடுதலை வரலாறு புதிய காலக் கட்டத்துக்குள் பழைய கொடி சின்னங்களுடன் நுழைந்த உதாரணங்களைவிட புதிய காலக்கட்டத்துள் புதிய கொடி சின்னங்களை ஏற்றுக்கொண்ட உதாரணங்கள் அதிகமாக உள்லது. நான் இது தொடர்பாகவே விவாதிக்கிறேன்.

வரலாற்றில் இனங்கள் தமது தேசிய சர்வதேசிய ரீதியான survival and progress அடிப்படையிலேயே எதைத் தக்க வைப்பது எதைக் கடந்து செல்வது என்கிற முடிவை எடுக்கிறது.

நாமும் அத்தகைய ஒரு வரலாற்றின் திருப்புமுனையில்தான் நிற்க்கிறோம். இது நாம் மனந்திறடு நமக்கும் அத்தகைய ஒரு வி.

ஜோசே மாட்டியை தேசிய வீரனாக போற்றிய கஸ்றோ விமர்சனங்களோடு அவரது அரசியலை சின்னங்ளைக் கடந்து சென்று வெற்றிபெற்றார். அது வசைபாடலல்ல. சென் யட்சனை போற்றும் மாஓ அவரது அரசியலையும் சின்னங்களையும் விமர்சனங்களோடு கடந்து சென்றார். சண்டினிஸ்டாவை கொண்டாடும் நிக்கரக்குவா புரட்சியாளர்களும் விமர்சனங்களுடன் சண்டினிஸ்டாவைக் கடந்து சென்று காலத்தோடு நடந்துசென்றே அமரிக்காவின் தலைவாசலில் வரலாறு காணாத வெற்றியைப் வெற்றி பெற்றனர். இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினை. இதை அடியொற்றியதே. இது தொடர்பான விவாதம் வரலாற்று தேவை. நெஞ்சை நிமிர்த்தி வீழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமையாய் இருக்கலாம் ஆனால் நெழிவு சுளிவுகளை புரிந்துகொண்டு வென்றோம் என்பதே நம் இனத்துக்கு வாழ்வு. .

http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-31-17/reflections/138-globalization-and-transnational-tamils-recollecting-random-thoughts

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.