Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் ஆவி! அலறிய சிங்களவர்...: அ.மார்க்ஸ் இன் ஈழப் பயணம்>

Featured Replies

சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள்...

சிரித்தபடி நிற்கும் மகிந்த 'கட்-அவுட்'கள்...

அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்!

ழத் தமிழர்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாம் முறையாக அந்தப் பகுதிக்குச் சென்று பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இம்முறை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர். அந்தக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும், அந்தச் சங்கத்தின் பொருளாளராக இருந்து சென்ற ஆண்டு மறைந்தவருமான பேராசிரியர் சிவத்தம்பி குறித்து p13b.jpgநினைவுப் பேருரை ஆற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டு இருந்தேன். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த ஜூலை 8 அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. மிகப்பெரிய அளவில் அங்கு தமிழ் மக்கள் திரண்டு இருந்தது சிவத்தம்பி மீதும் தமிழ் அடையாளத்தின் மீதும் அவர்கள் கொண்டிருந்த பற்றை வெளிப்படுத்தியது!

இலங்கை வருவதை ஒட்டி நண்பர்கள் மன்னார், யாழ்ப்பாணம், மட்டகளப்பு, ஓட்டமாவடி, மருதமுனை ஆகிய பகுதிகளிலும் சந்திப்புகள் ஏற்பாடு செய்திருந் தனர். இம்முறை என்னால் மலையகம் செல்ல இயலவில்லை. எனினும் மலையக நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர். சென்ற முறையைப் போல முள்வேலி முகாம்களுக்கும் என்னால் செல்ல இயலவில்லை. எனினும் செட்டிகுளம் முகாம்களை சாலையில் இருந்து பார்க்க முடிந்தது. சற்றே இருள் கவிழ்ந்த நேரமது. கட்டுநாயகா விமான தளத்தில் இருந்து நண்பர் தேவா ஒரு வாடகைக் காரில் தலைமன்னாரில் உள்ள தன் வீட்டை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார். நீர்க்கொழும்பு, புத்தளம், சிலாபம், அனுராதபுரம், செட்டிகுளம், மடு, மன்னார் தீவு வழியாகத் தலைமன்னாரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் செட்டிகுளம் முகாம்கள் கண்ணில் பட்டன.

p12.jpg

அனுராதபுரத்தை ஒட்டிச்சென்ற அந்த நெடுஞ்சாலைப் பகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ள இடம் என்கிற எச்சரிக்கை ஆங்காங்கு காணப் பட்டது. நாங்கள் சென்றபோது கூட ஓரிடத்தில் யானைக் கூட்டம் சாலையைக் கடந்தது. வண்டியை நிறுத்தி அவை கடந்த பின்னரே எங்களால் நகர முடிந்தது. அப்படியான ஒரு காட்டுப் பகுதியில் ராணுவ முகாம்களை ஒட்டித் தெரிந்த மங்கிய மின் ஒளி விளக்குகள் இன்னும் முள்வேலி முகாம்களில் சிலர் எஞ்சியிருப்பதை உறுதி செய்தன. அவர்களின் நிலங்கள் ஒருவேளை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கலாம். 'உயர் பாதுகாப்பு வளையங்கள்’ அல்லது 'அபிவிருத்தி’ என்கிற காரணம் காட்டி அரசால் பறிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிங்களக் குடியேற்றம் கூட காரணமாகக்கூட இருக்கலாம். அல்லது ஊர் திரும்பித்தான் என்ன செய்வது என்று இங்கேயே இருந்திருக்கலாம். இறங்கி விசாரித்திருந்தால் ஒருவேளை அவர்கள் சொல்லியிருக்கக்கூடும்.

சென்ற முறை நான் சென்றபோது போர் முடிந்து சுமார் 10 மாதங்கள் ஆகி இருந்தன. அதன்பின் சுமார் இரண்டேகால் ஆண்டுகளுக்குப் பின் சென்றபோது மிகச் சில வித்தியாசங்களையே காண முடிந்தது. 2009-ல் சென்றபோது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் செல்ல இயலாது. ஓமந்தையிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமானால் அயலுறவு அமைச்சக அனுமதி பெற வேண்டும். இப்போதும் ஓமந்தையில் ராணுவ அதிகாரிகளால் நமது பாஸ்போர்ட்கள் பரிசீலிக்கப்படுகின்றன. என்றாலும் பதிவு செய்துகொண்டு மேலே செல்வதற்கு அனுப்பி விடுகின்றனர். மன்னார், மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இந்தச் சோதனையும் செய்யப் படுவதில்லை.

p13.jpg

நகரங்களுக்குள்ளும் ஆங்காங்கு ஆயுதங் களுடன் கூடிய ராணுவ வீரர்கள் பங்கர் அல்லது சிறு காவல் 'போஸ்ட்’களில் நின்று கண்காணிப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும் ஏ32 சாலை வழியாக மன்னாரிலிருந்து பூநகரி, பின் அங்கிருந்து கிளிநொச்சி... பின் அங்கிருந்து ஏ34 சாலை வழியாக பரந்தன், முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் ஊடாக முல்லைத்தீவு வழியாக நாங்கள் சென்றபோது அப்பகுதியில் மட்டும் ஆயுதம் தாங்கிய சிங்கள வீரர்கள் சுமார் 100 மீட்டருக்கு ஒருவர் நின்று கொண்டிருந்தனர். சில முக்கிய இடங்களில் 'செக் போஸ்ட்’ அமைத்து ஓட்டுனரை இறங்கச் சொல்லி வண்டி எண்ணைப் பதிவு செய்து கொண்டு அனுப்பினர். இங்கும் கூட வண்டியில் உள்ளவர்களை இறக்கி விசாரிப்பது கிடையாது. கடல் புலிகளின் நீச்சல் பயிற்சிக் குளமும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடும் காட்சிப் பொருளாக்கப்பட்டு, இங்கு உல்லாசப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் நிலையில்... கடும் சோதனைகளைத் தவிர்க்கின்றனர்.

p13c.jpgஇவற்றின் பொருள் - ராணுவக் கெடுபிடிகள் குறைந்து விட்டன என்பதல்ல. போரின்போது இருந்த ராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் நிரந்தரமாகக் குடி கொண்டுள்ளது. தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்கு உள்ளும்தான் உள்ளன. 'இந்தப் பகுதி இத்தனையாவது பிரிகேடின் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றோ, 'இத்தனையாவது பிரிகேட் உங்களை வரவேற்கிறது’ அல்லது, 'இத்தனையாவது பிரிகேட் உங்களுக்கு விடை சொல்கிறது’ என்றோ ஆங்கில வாசகங்கள் அடங்கிய பலகைகளை தமிழ் பேசும் மக்கள் வாழும் பூமியெங்கும் காண முடிகிறது. மன்னார் தீவுக்குள் நாங்கள் நுழையும் ஒவ்வொரு முறையும் ராணுவ அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு, 'எங்கே போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று ஓட்டுனரிடம் விசாரித்த பின்னரே அனுப்பப்பட்டோம்.

யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் 50,000 படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய தெரிவித்திருந்த செய்தி, நான் அங்கிருந்தபோது பத்திரிகைகளில் வந்திருந்தது. யாழ்ப்பாணத்தின் இன்றைய மக்கள் தொகை 5 லட்சம் என்கின்றனர். ஆக 50 பேருக்கு ஓர் ஆயுதம் தாங்கிய சிங்கள வீரன்! உண்மையில் இன்னும்கூட அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள் உள்ளனர் என்றொரு கருத்தும் உண்டு. இது போன்ற நிலைகளில் அரசும், ராணுவமும் உண்மைகளைச் சொல்வதில்லை. காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் மொத்தம் எவ்வளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என இந்திய அரசு சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ முகாம்களுக்குள் வீரர்களுக்கும், அதிகாரி களுக்கும் எல்லாவிதமான வசதிகளும் உள்ளன. சில முகாம்களில் வசதியான குவாட்டர்ஸ்களில் அவர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். ஒவ்வொரு முகாம் வாசல்களிலும் பிற முக்கிய இடங்களிலும் ராணுவம் நடத்தும் கேன்டீன்கள் உள்ளன. குளிர்பானங்கள், பிஸ்கட் முதலியன விற்கப்படுகின்றன. 'மக்கள் சேவை’ முதலான கவர்ச்சிகரமான பெயர்களும் சில இடங்களில் உண்டு. அல்லப்பட்டி தீவில் உள்ள சர்ச் ஒன்றில் ராணுவம் நடத்திய படுகொலை குறித்த செய்தி ஷோபா சக்தியின் நாவல் ஒன்றில் இடம் பெறும். அந்தப் பக்கம் போயிருந்தபோது, அந்த மாதா கோயிலைப் படம் எடுக்க முயற்சித்தேன். அங்கிருந்த ராணுவ வீரன் கையைத் தட்டிக் கூப்பிட்டு, யார் என சிங்களத்தில் கேட்டான். சர்ச்சில் பிரார்த்தனை செய்ய வந்தோம் என தேவா பதில் உரைத்தார். 'பள்ளி?’ (சிங்களத்தில் ஆலயம்) எனக் கேட்டுவிட்டு, போய் வணங்கி வருமாறும், ஆனால் படம் எடுக்கக்கூடாது எனவும் சொன்னான். ஆனாலும் நாங்கள் பின்புறமாக வந்து அவன் கண்ணில் படாமல் படம் எடுத்துக் கொண்டுதான் வந்தோம்.

இப்படியான ஒரு சூழலில் முழு நேரமும் நாம் ராணுவக் கண்காணிப்பில் இருப்பதாகவே உணர நேரிடுகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் கண்காணிக்கப்பட்ட சமூகமாகவே வைக்கப் பட்டுள்ளனர். தாங்கள் ஒரு தோற்கடிக்கப்பட்ட சமூகத்தினர், என்றென்றும் கண்காணிக்கப்படுபவர்கள் என்கிற உணர்வு ஓர் மிகப்பெரிய உளவியல் சிக்கல் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.

சென்ற முறை யாழ்ப்பாணம் சென்று வந்தது குறித்து நான் ஆனந்த விகடனில் எழுதிய 'ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை’ எனும் கட்டுரையில், திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் கீழ் சிங்களக் கடைகள் போடப்பட்டிருந்தது படத்துடன் வெளியாகி இருந்தது. பின்னாளில் அந்த நினைவுச் சின்னமே தகர்க்கப்பட்டது. கோப்பாயில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மாவீரர் கல்லறையும் அவ்வாறு இன்று தகர்க்கப்பட்டு, அவ்விடத்தில் ராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம். என்னால் போக இயலவில்லை.

யாழ் குடா பகுதியிலுள்ள சாட்டி தீவில், மாதா கோயில் அருகிலிருந்த ஒரு மாவீரர் கல்லறை தகர்க்கப்பட்டிருந்ததை எழுத்தாளர் யோ.கர்ணன் சுட்டிக்காட்டினார். பூநகரியிலிருந்து கிளிநொச்சி செல்லும் வழியிலும் அவ்வாறே ஒரு மாவீரர் கல்லறை இடித்து நொறுக்கப்பட்டு அதன்மீது சாலை போடுவதற்கான மண் குவிக்கப்பட்டிருந்தது.

மாற்று மதத்தவர்கள் ஆயினும் தோற்றோர்கள் ஆயினும் இறந்தோரை மதிப்பது என்கிற குறைந்தபட்ச மானுட மரபையும் கூட ராஜபக்ஷே அரசு கடைபிடிக்கத் தயாராக இல்லை. தோற்கடிக்கப்பட்டபோதும் எல்லாளனின் வீரத்தை மெச்சி அவனது கல்லறையைக் கடந்து செல்லும் எல்லோரும் வணங்கிச் செல்ல வேண்டும் என, துட்டகைமுனு ஆணையிட்டிருந்த கதையை நண்பர் தேவா நினைவூட்டினார். இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ராஜபக்ஷேவின் 'கட்-அவுட்’கள் 'நீடூழி வாழ்க’ எனும் முழக்கங்களுடன் வைக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்களால் பெரிதும் வெறுக்கப்படக்கூடிய அம்முகம் வாழ்த்துகளுடன் தங்கள் முன் கட்டாயமாக நிறுத்தப்படும்போது அது எத்தகைய கையறு நிலையை அவர்களுக்குத் தோற்றுவிக்கும் என நினைத்துப் பார்த்தேன்.

தமிழர்களை நோக்கி 'நீங்கள் தோல்வியடைந் தவர்கள்' என ஒவ்வொரு கணமும் சொல்லிக்காட்டும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பயணத்தின்போது இதை எங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது!

வேதனைகள் தொடரும்...

vikatan.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

றுதிப் போர் நடைபெற்ற கிளிநொச்சி, பரந்தன், முள்ளிவாய்க்கால், புதுக்குடி​யிருப்பு முதலான இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் இப்போது தாராளமாகச் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள் என்ப​தைப் பத்திரிகைகளில் படித்திருந்தபோதும், தயக்கத்​தோடுதான் புறப்பட்டோம்.

மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு முதலான பகுதிகளுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. வவுனியா, புளியங்குளம் வழியாகச் சென்றால், சாலை நன்றாக இருக்கும். ஆனாலும் நாங்கள் மன்னார் யாழ்ப்பாணம் செல்கிற ஏ-32 சாலையில் தள்ளாடி, கத்தளம்பிட்டி, தேவன்பிட்டி, முழங்காவில், நாச்சிகுடா, பல்லவராயன்கட்டு வழி​யாகப் பூநகரிக்குச் சற்று முன்பாக வலப்புறம் திரும்பி கிளிநொச்சி செல்லும் பாதையைத் தேர்வு செய்தோம். சாலை படு மோசம் என்பதால் வாகன ஓட்டிகள் இரட்​டிப்பு வாடகை கேட்டனர். இருந்தபோதும் நாங்கள் இந்தப் பாதையைத் தேர்வு செய்ததற்குக் காரணம், இந்த வழியேதான் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவத்தின் ஒரு பிரிவு பேரழிவுகளை விதைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. அந்த அழிவுகளையும், ராணுவ முகாம்களின் மத்தியில் இன்றும் தொடரும் மக்களின் அவலங்களையும் இந்தப் பாதையில் சென்றால்தான் புரிந்துகொள்ள முடியும் என்றார் தேவா.

p40.jpg

யாழ்ப்பாணம் வரை செல்லும் அந்த நெடுஞ்சாலையை 'வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் புதுப்பித்துக்கொண்டு உள்ளனர். அந்த அதிகாலை வேளையில் சாலைப் பணிகளுக்காக மக்கள் சாரி​சாரியாகச்சென்று​​​​கொண்டிருந்​தனர். கடினமான பணியில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்​டிருந்​தது எனக்கு வியப்பாக இருந்தது. அரசாங்கம் பெரிதாகப் பேசுகிற மீள் குடியேற்றம் இப்படியான நிலைமைகளைத்தான் ஏற்படுத்தி உள்ளது.

மீள் குடியமர்த்தப்​படுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையே உதவித் தொகை வழங்கப்படுகின்றன. அதற்குப் பின் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் இல்லை. சொந்தத் தொழிலுக்கும் சாத்தியம் இல்லை. கோழிப் பண்ணை முத​லானவற்றுக்கு இலங்கைப் பணம் 50 ஆயிரம் ரூபாய் வரை உதவி செய்த அமைப்புகள், அதில் 30 ஆயிரத்தை ஒரு வருடத்துக்குள் பிடுங்கிவிட்டன. கால்நடை மருத்துவமனை, மருத்துவர்கள் போன்ற வசதிகள் இல்லாததால் கோழிகளும் செத்துப்போயின. மக்​களுக்கான மருத்துவ​மனைகளும் போதிய வசதி​களும் மருத்துவர்களும் இல்லாமல் உள்ளன. கிளிநொச்சியைத் தாண்டி அமைந்துள்ள இன்னொரு பெரு நகரமாகிய தருமபுரம் மருத்து​வமனையில்தான் கல்மடு, வட்டகச்சி, உடையார்கட்டு, விஸ்வமடு முதலான பகுதி மக்களும் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் ஆறு மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் ஒருவர்தான் உள்ளார் என்றார், நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த சிறு கடையின் முதலாளி. கிணறுகள் தூர் வாரப்படாமல் தூர்ந்து கிடப்பதால் தண்ணீர்ப் பஞ்சம் வேறு. ஒரு கிணறைப் புதிதாகத் தோண்ட இரண்டு லட்ச ரூபாய் தேவை என்​றார் ஒருவர்.

p40a.jpg

இந்திய அரசு பெரி​தாய்ச் சொல்லிக்​கொள்ளும் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. நாங்கள் சென்ற பாதையில் கிளிநொச்சிக்கு அருகில் ஒரே ஓர் இடத்தில்தான் கொஞ்சம் வீடுகள் கண்ணில்பட்டன. ஆஸ்திரேலிய அரசின் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றும் நாச்சிகுடா அருகில் கண்ணில் பட்டது. கண்ணி வெடிகளை அகற்றும் பணி​யும் ஆங்காங்கு நடைபெற்றுக்​கொண்டுள்ளது. அகற்றிய பகுதிகள் எனவும், அகற்றும் பணிகள் நடக்கும் பகுதிகள் எனவும், போகக் கூடாத பகுதிகள் எனவும் எழுதப்பட்ட பலகைகள் ஆங்காங்கு கண்ணில் பட்டன. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 'டேனிஷ் டீமைனிங் குரூப்’ எனும் அமைப்பு இந்த மனிதாபிமானப் பணியைச் செய்துவருகிறது.

இத்தனை துயரங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் மக்கள் வாழ்ந்துதானே ஆக வேண்டும்? சீருடை அணிந்த குழந்தைகள் சைக்கிள்களிலும் நடந்தும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் கோயில் ஒன்றில் ஒருவர் அலகுக் காவடி எடுத்துத் தொங்கிக்கிடந்தார்.

பூநகரிக்கு முன்னதாக நாங்கள் வலப்புறம் திரும்பி வன்னேரிக் குளம், ஆனைவிழுந்தான் குளம், மணியன் குளம் வழியாக அக்கராயன் குளத்தை அடைந்தோம். இறுதிப் போரில் இது ஒரு முக்கியமான இடம். 2008 அக்டோபர் 18 அன்று இலங்கை ராணுவத்தின் 57-ம் படைப் பிரிவு இந்தப் பகுதியைக் கைப்பற்றியது. இன்னொரு படைப் பிரிவு பூநகரியில் இருந்து நகர்ந்து வந்து நவம்பர் 15 p40b.jpgஅன்று பரந்தனைக் கைப்பற்றியது. புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சியை ஒரே நேரத்தில் வடக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் தாக்குவதற்கு இந்த வெற்றிகள் உதவின. வானில் இருந்து இலங்கை விமானப் படை குண்டு மழை பொழிந்தது. இந்தப் பின்னணியில்தான் 2009 ஜனவரி 2-ல் கிளிநொச்சிக்குள் இலங்கை ராணுவம் நுழைந்தது. எனினும் அக்டோபர் (2008) தொடக்கத்திலேயே புலிகள் அங்கிருந்து எல்லோரையும் வெளியேற்றி தருமபுரத்தைத் தற்காலிகத் தலைநகராக்கினர்.

அதே நேரத்தில் இன்னொரு பக்கமாக புலிகளின் மிக வலுவான ராணுவ மற்றும் கடற்​புலித் தளமான முல்லைத் தீவுக்குள் 2009 ஜனவரி 25-ல் இலங்கை ராணுவம் நுழைந்தது. சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் புலிகளும் முள்ளிவாய்க்கால், புது மாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிக்குள் முடங்க நேரிட்டது. தொடர்ந்த பேரழிவுகளை நாம் அறிவோம்.

அக்கராயன்குளத்தில் இன்றும் வலு​வான ராணுவ முகாம் உள்ளது. அங்கு எங்கள் வண்டி நிறுத்தப்​பட்டு ஓட்டுனர் அழைக்கப்​பட்டார். வண்டி ஆவணங்​களைப் பரிசீலித்த பின் நாங்கள் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.

வன்னிப் பகுதி ஏரிப் பாசனத்​துக்குப் பெயர் பெற்ற ஒன்று. மழை நீர் சிறு அணைகளில் தேக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இந்த அணைகளைத்தான் அவர்கள் குளம் என்கின்றனர். மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஊரிலும் இப்படி அணைகள் உள்ளன. சாலையின் இரு பகுதிகளிலும் மீண்டும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. எனினும் எல்லாப் பகுதிகளிலும் விவசாயம் நடக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில் அருகில் உள்ள திருமுறிகண்டியில் இன்னும் மக்கள் குடியேற்றப்​படவில்லை. நான் அங்கு செல்வதற்குச் சில நாட்கள் முன்புதான் தங்கள் நிலம் மீண்டும் தங்களுக்கே தரப்பட வேண்டுமென மக்கள் ராணுவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருந்தனர்.

தங்களின் நிலம் திரும்பக் கையளிக்கப்​படும் என்கிற ராணுவ வாக்குறுதியை நம்பி முகாம்களில் இருந்து வந்து முறிகண்டி பள்ளி ஒன்றில் குழுமிய மக்கள் ஒரு சிறு பகுதி நிலம் மட்டுமே தங்களுக்குக் கிடைக்கும் என அறிந்தபோது அதை ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சிப் பகுதி​யில் உள்ள சில முகாம்கள் நீக்கப்பட்டு முறிகண்டியில் பெரிய முகாம் ஒன்றை அமைக்க இருப்பதாகவும், அதற்கு அதிக அளவில் நிலம் தேவைப்படுவதாகவும் ராணுவத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ராணுவம் பல்வேறு வகைகளில் மிரட்டிப் பார்த்தும் மக்கள் மசியவில்லை. முறிகண்டி நிலப் பறிப்புக்கு எதிரான ஒரு போராட்டமும் அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு முதல் நாள் இரவு (ஜூன் 25) அந்த மக்கள் கட்டாயமாக ராணுவ லாரிகளில் ஏற்றப்பட்டனர். தப்பியோடிய மக்கள் பிடித்து இழுத்து ஏற்றப்பட்டனர். இறுதியில் மீண்டும் அவர்கள் முன்பிருந்த கதிர்காமர் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் ஆகியவற்றில் கொண்டுவிடப்பட்டனர்.

முறிகண்டி வழியாக நாங்கள் ஏ9 சாலையைப் பிடித்து கிளிநொச்சியை அடைந்தபோது 11 மணி ஆகிவிட்டது. வளர்ந்துவரும் முக்கிய எழுத்தாளரும் போர்ப் பகுதியில் இருந்தவருமான யோ.கர்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். அவரையும் ஏற்றிக்கொண்டு எங்கள் வாகனம் பரந்தனை நோக்கி நகர்ந்தது. புலிகள் அமைத்​திருந்த 'தமிழ்ப் பண்பாட்டு மையம்’ மற்றும் 'சேர, சோழ, பாண்டிய’ உணவு விடுதி இங்குதான் இருந்தது என ஓர் இடத்தைக் காட்டினார் கர்ணன். அந்த இடம் இடிக்கப்பட்டு மிகவும் நவீனமான ஹோட்டல் உருவாகியிருந்தது.

பரந்தனில் இருந்து முல்லைத் தீவை நோக்கிச் செல்லும் ஏ-35 சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது. தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு வழியாக முள்ளிவாய்க்காலை நோக்கிப் போகப் போகப் போரழிவின் எச்ச சொச்சங்கள் கண்களில் படத் தொடங்கிவிடுகின்றன. சாலை ஓரங்களில் வாகனங்கள் குவியல் குவியலாக எரிந்துகிடக்கின்றன. போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலை இடிபாடுகள் சீர்திருத்தப்பட்டு பேருந்துகளும் போய்வருகின்றன. அவ்வப்போது டூரிஸ்ட் பஸ்களும் எங்களைக் கடந்து சென்றன. உல்லாசப் பயணங்கள் செல்வதை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக்கொண்டுள்ள சிங்கள மக்களின் இப்போதைய பயண ஆர்வம் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களையும் நான்கு தளங்களில் பூமிக்குக் கீழே அமைக்கப்பட்ட பிரபாகரனின் வீடு, தேவிபுரம் நீச்சல்குளம், புலிகளின் போர்த் தளவாடங்களை வைத்து ராணுவம் அமைத்துள்ள அருங்காட்சியகம் ஆகியவற்றை நோக்கியுள்ளது. உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகள் விளையாடப் பூங்கா, கேன்டீன் முதலியனவும் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வாழ்ந்த இடத்தை சுற்றுலாத் தளம் ஆக்கிய சூட்சுமத்தின் பின்னணியில் எத்தனை உயிர்கள் பலியாகின என்பதை நினைத்தபடி சென்றோம்!

vikatan

  • தொடங்கியவர்

நாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் கர்ணன். கிளிநொச்சியை நோக்கி வரும் வழியில் கண்ட இரணமடு குளத்தில் இப்போது ராணுவம் ஏதோ விமான நிலையம் கட்டுகிறார்களாமே என்று கேட்டேன். 'ஆமாம். அதைக் காரணம் காட்டி குளத்தின் நீர்த்தேக்க உயரத்தைக் குறைத்து விட் டனர். அதனால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது' என்றார். இப்படியான பிரச்னைகளில் ராணுவத்​திடம் முறையிட்​டோ, எதிர்ப்பு தெரிவித்தோ எதுவும் ஆவதில்லை.

முந்தைய நாள், மன்னாரில் இருந்து தலை​மன்னார் செல்லும் வழியில் உள்ள பேசாலை வெற்றிமாதா கோயிலைச் சுற்றிப் பார்த்தபோது, 'தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் அந்த ஆலயத்​துக்குள் ஒடுங்கியிருந்தபோது கடற்படை வெளியில் இருந்து சுட்டது. எறிகுண்டு ஒன்றை சன்னல் வழியாக உள்ளே மக்கள் மத்தியில் வீசியது’ என்று காட்டினார் அந்தப் பகுதி கிறிஸ்துவ மீனவர்களின் வாழ்க்கையை களமாகக்கொண்டு நாவல்களைப் படைத்து வரும் எழுத்தாளர் உதயன்.

p18.jpg

எங்கள் வண்டி உடையார்கட்டு மகா வித்யாலயத்​தைக் கடந்த​போது கர்ணன் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். போரின்போது, தாக்குதல் மேற்கொள்ளப்படாத பாதுகாப்பு வளையம் என உடையார்கட்டை ராணுவம் அறிவித்திருந்தது. இந்த மகாவித்யாலயம் மருத்துவமனையாக மாற்றப்பட்டு, போரில் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால், ராணுவம் அதன் மீதே ஷெல் அடித்து ஏராளமான நோயாளிகளைக் கொன்றது.

சுதந்திரபுரத்தை வந்தடைந்தபோது நாங்கள் ஏ-35 பாதையில் இருந்து சற்றே விலகி, தேவிபுரம், இரணைபாலை, புதுமாத்தளன், அம்பலவான் கொட்டணை வழியாக மீண்டும் பழைய சாலையைப் பிடித்து, கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ளான் முள்ளிவாய்க்கால் என மெள்ள நகர்ந்​தோம். கடைசி நேரத்தில் உயிருக்கு அஞ்சி ஒடுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் ஷெல் அடித் தாக்குதல்களாலும், விமானக் குண்டு வீச்சுக்களாலும் கொல்லப்பட்ட இடங்கள் இவை.

ஆளரவமற்று நொறுங்கிச் சிதைந்துகிடக்கும் வீடுகள், எரிந்தும் வெட்டி வீழ்த்தப்பட்டும் கிடக்கும் பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பள்ளிக் கட்டடங்கள், எரிந்து குவியல் குவியலாகக் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும்​கிடக்கும் பங்கர்கள், அவ்வப்போது தென்படும் ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் என்பதாக அப்பகுதி முழுவதும் மரண சுவாசம்.

p18a.jpg

அவ்வப்போது எதேனும் ஒரு பயணிகள் பஸ் அல்லது டூரிஸ்ட் பஸ் எங்களைக் கடந்து சென்றது. தேவிபுரத்துக்கு அருகில் சிறு குடியிருப்பில் கொஞ்சம் மக்கள் இருந்தனர். அதற்கு அப்பால் முல்லைத்தீவு வரை மக்கள் குடியிருப்பு ஏதும் கண்ணில்படவில்லை. ஒரு சில பெரிய வீடுகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டு பூச்செடிகள் சூழ இருந்தன. அவற்றுக்கு அளிக்கப்​பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு, அவை ராணுவ அலுவலகங்​களாகவோ, அதிகாரிகளின் வீடுகளாகவோ இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது.

தேவிபுரத்தில் சாலை ஓரமாகப் பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து, 'நீச்சல் குளம் எங்கே இருக்கு?' எனக் கேட்டார் தேவா. அந்தப் பெண் கொஞ்சம் யோசித்துவிட்டு 'ஸ்விம்மிங் பூலா?' எனக் கேட்டு, அந்தத் திசையைக் நோக்கிக் கை காட்டினார். அருகே சென்றபோது டூரிஸ்ட் பஸ்கள் நான்கைந்து இருந்தன. இரணபாலைக் காட்டுப் பகுதியில் சிறிது தூரம் வரை மரங்கள் வெட்டப்பட்டு நல்ல சாலை அமைக்கப்பட்டு இருந்தது. பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு அருகில் இருந்த ராணுவ நிலையம் ஒன்றில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நின்றிருந்தனர். எனினும் அவர்கள் யாரையும் கண்டுகொள்ளவில்லை. சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்த சிங்கள டூரிஸ்ட்டுகளோடு நாங்களும் சேர்ந்து கொண்டோம்.

p19.jpg

மிகப்பெரிய புலிகளின் முகாம் ஒன்றும், கடற்புலிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆழமான நீச்சல் குளம் ஒன்றும் அமைந்திருந்த இடம் அது. போர் விமானங்களைக் கண்காணிக்க புலிகள் அமைத்திருந்த ராடார் ஒன்று காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் முகாம் இன்று இலங்கை ராணுவத்தின் 68-ம் படைப் பிரிவுத் தளமாக மாற்றப்​பட்டுள்ளது, அதிகாரிகளுக்கான மெஸ், படை வீரர்கள் பிரிவு என்றெல்லாம் அறிவிப்புப் பலகைகளுடன் மிக வசதியாக உள்ளது. சுழன்றுகொண்டிருக்கும் அந்த ராடாரைப் பார்த்தவாறே மேலே சென்றோம். அதைத் தாண்டிக் குறுகலாகச் செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் மிகப் பெரிய ட்ரில்லர்களை வைத்து ஆழமாகப் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். இதற்குச் சற்றுத் தொலைவில் மரங்கள் வெட்டப்பட்டு குழந்தைகள் பூங்கா ஒன்றும், உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு விசாலமான கேன்டீன் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. கேன்டீனை ஒட்டி இருந்த கடற்புலிகளுக்கான பயிற்சிக்குளம், நீர் அகற்றப்பட்டு காட்சியளித்தது. படிப்படியாக நான்கு தளங்களில் அமைக்கப்பட்ட அந்த நீச்சல் குளம் தண்ணீர் வரும் வழி, போகும் வழி, பயிற்சி முடித்தவர்கள் குளித்து, உடை மாற்றிச் செல்ல அறைகள் எனப் பக்காவாகக் கட்டப்பட்டு இருந்தது. மேலே கம்பிகள் வேயப்பட்டு, அவற்றின் மீது கொடிகள் பரவி வானில் இருந்து பார்க்கும்போது கீழேயுள்ள நீச்சல் குளம் தெரியாத வண்ணம் அடர்ந்த காடு என்று தோற்றம் அளிக்கும் வகையில் அதைப் புலிகள் அமைத்திருந்தனர்.

இப்போது, கம்பிகளின் மீது பரவியிருந்த கொடிகள் அகற்றப்பட்டு இருந்தன. அருகில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும், 'பயங்கரவாதிகளின் நீச்சல் குளம்’ என்று தலைப்பிட்டு விவரப்பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. 83 அடி நீளம், 22 அடி ஆழம், கடற்படைக்கு எதிரான தற்கொலைப் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென 2001-ல் கட்டப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இருந்தன. 'உடை மாற்றுவதற்கு அறைகள் அருகில் அமைக்கப்பட்டு இருப்பதில் இருந்து, தலைமையில் இருந்தவரும் அவருக்கு நெருக்கமானவர்களும்கூட இதைப் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது’ என அந்த வாசகங்கள் முடிந்திருந்தன.

p20.jpg

கேன்டீனில் வாங்கிய பண்டங்களைச் சுவைத்த​வாறே குளத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டும் படங்கள் எடுத்துக்கொண்டும் மக்கள் கூட்டம். ஒரு பெருமூச்சுடன் வெளியேறிப் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள், மீண்டும் பேரழிவுகளின் ஊடாக புதுமாத்தளன், அம்பலவான் கொட்டணையைத் தாண்டி முள்ளிவாய்க்காலை வந்தடைந்தோம்.

ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மரண அமைதியுடன் காட்சி​யளித்தது. அந்த ஊரின் சந்தை சிதைந்துகிடந்தது. கொடிய போர்க்குற்றங்களுக்கு ஆளாகி எந்த ஆதரவுமற்று நம் கண்முன் செத்து மடிந்த மக்களுக்கு மனசுக்குள் அஞ்சலி செலுத்திய வண்ணம் முள்ளிவாய்க்காலையும் முல்லைத் தீவையும் இணைக்கும் வெட்டுவாகல் பாலத்தை வந்தடைந்தோம். நந்திக் கடலையும் வங்கக் கடலையும் இணைக்கும் குறுகலான நீர்வழி மீது அமைந்த அந்தப் பாலத்தின் வழியாக வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களைத்தான் இரக்கமின்றிச் சுட்டுத் தீர்த்தது இலங்கை ராணுவம். மரண அழிவுகளைப் பற்றிய நினைவுகள் மட்டும் இல்லாதிருந்தால் மிக அழகான இடம்தான் அது.

முல்லைத்தீவின் நுழை வாயிலில் 59-வது படைப் பிரிவின் பெயர்ப்பலகை வரவேற்புக் கூறுகிறது. அருகில் உள்ள கோயிலில் ஏதோ வழிபாடு. முல்லைத் தீவு பேருந்து நிலையத்தைத் தாண்டிச் சென்று ஒரு முஸ்லிம் ஹோட்டலில் கிடைத்ததைச் சாப்பிட்டோம். 1996-ல் இங்கே மிகப்பெரிய ராணுவ முகாம் ஒன்றைப் புலிகள் வெற்றிகொண்டதை நினைவுகூர்ந்தார் தேவா. சுமார் 1,600-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்தத் தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் ஆகக் குறைந்த மக்கள் தொகையுள்ள மாவட்டம் என முல்லைத் தீவை அறிவித்துள்ளது இலங்கை அரசு. 'இதன் பொருள் வளமிக்க இந்த மாவட்டத்தில் மிகச்சமீபத்தில் சிங்களக் குடியேற்றம் நிகழப்போகிறது என்பதுதான்’ என்று பேராசிரியர் ரவீந்திரன் சில நாட்கள் முன் சொன்னது நினைவுக்கு வந்தது.

மீண்டும் வெட்டுவாகல் பாலத்தைக் கடந்த நாங்கள் வந்த பாதையில் செல்லாமல் இறுதி உச்சப்போர் நடந்த புதுக்குடியிருப்பை நோக்கிச் சென்றோம். இங்கிருந்த மிகப்பெரிய புலிகளின் முகாம் இப்போது ராணுவத் தளமாக மாற்றப் பட்டுள்ளது. மிகப்பெரிய அரச வெற்றிச் சின்னம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி வழக்கம்போல கார் பார்க்கிங், கேன்டீன், பனை பொருள் விற்பனை நிலையம் ஆகியவற்றின் மத்தியில் புலிகளின் போர்த் தளவாடங்களை வைத்து அமைக்கப்பட்ட 'போர் அருங்காட்சியகம்’ காட்சி அளிக்கிறது. உள்ளே நிற்கும் ராணுவ வீரர்கள் அந்தக் கருவிகளின் செயல்பாட்டை சிங்களத்தில் விளக்கிச் சொல்கின்றனர். கண்களில் வியப்பு தொனிக்க அவற்றைப் பார்த்து அசந்துபோகிறார்கள் சுற்றுலா வந்திருக்கும் சிங்கள மக்கள்!

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சிறிதும் பெரிதுமான நீர்மூழ்கிப் படகுகள், பெரிய தாக்குதல் படகுகள், டாங்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள், பல்வேறு வகைத் துப்பாக்கிகள், ரவைகள், தற்கொலைத் தாக்குதலுக்காகக் குண்டுகள் பொருத்திக் காலால் மிதித்துச் செல்லும் மிதக்கும் ஸ்கூட்டர்கள், கப்பலில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின்கள் என அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட கட்டடத்துக்கு உள்ளும் வெளியிலும் போர்த் தளவாடங்கள் நிறைந்து இருந்தன. எங்கள் ஓட்டுனர் அந்த எஞ்சின்களைப் பார்த்துவிட்டு அவை எந்த வகைக் கார்களில் இருந்தவை எனச் சொல்லிக்கொண்டு இருந்தார். கார், பஸ்

எஞ்சின்களைப் பிரித்து நீர்மூழ்கிப் படகுகளுக்கு மாற்றி அமைத்திருந்தனர்.

நாங்கள் சென்றபோது இரு பவுத்த பிக்குகளும் பார்வையாளர்களில் இருந்தனர். ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்த்துச் சென்ற அவர்களோடு கூடவே சென்ற ராணுவ வீரன் ஒருவன் அவற்றை விவரித்துச் சொல்லிக்கொண்டு இருந்தான். புலிகள் தண்டனை கொடுப்பதற்காகப் பயன்படுத்திய இரண்டு கம்பிக் கூண்டுகளும் அங்கே இருந்தன.

அந்த இடத்தைவிட்டு நாங்கள் நகர்ந்தபோது மாலை 4 மணி ஆகி இருந்தது. புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில் சற்றுத் தொலைவில் இருந்த இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பங்கர் வீடு உள்ளது. இங்கும் அடர்ந்த காடு அகற்றப்பட்டு, பஸ்கள் நிற்க இடம், வீட்டின் அருகே வரை கார்கள் செல்வதற்கு சாலை முதலியன அமைக்கப்பட்டு உள்ளன. வீட்டின் அருகில் அதன் அமைப்பு குறித்த ஒரு பெரிய 'லே-அவுட்’ வைக்கப்பட்டு ஒரு ராணுவ அதிகாரி அங்கு நின்று, ஒவ்வொன்றையும் குச்சியால் சுட்டிக் காட்டி சிங்களத்தில் விளக்கிக் கொண்டிருந்தார். மக்கள் கூடி நின்று கேட்ட பின் வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு தளமாகக் கீழே இறங்கிப் பார்க்கின்றனர்.

p18a.jpg

வீட்டு அருகில் கார் பார்க்கிங் ஒன்று பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. காரை நேராக ஓட்டிச் சென்று கீழே பார்க் செய்யலாம். வீட்டைச் சுற்றி பயிற்சிகள் செய்யலாம். நுழைவாயிலின் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அரங்கம் உண்டு. அருகே சற்று நிதானமாக அமர்ந்து பேச இரும்புக் கம்பிகளால் வேயப்பட்ட மேசை, நாற்காலி கள் போடப்பட்டு உள்ளன.

வீட்டுக்குள் நுழைந்தால் நடுத்தரமான ஒரு ஹால், ஒரு சமையலறை, ஒரு பாத்ரூம் ஆகியவை அருகருகே நீளவாக்கில் அமைந்துள்ளன. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இதுவே முழு வீடும் எனத் தோன்றும். ஆனால், சுவரை ஒட்டி அமைந்திருந்த ரகசியக் கதவைத் திறந்தால் படிகளின் வழியாகக் கீழே இறங்கலாம். கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக நான்கு தளங்கள் உள்ளன. இன்று கதவுகள் எல்லாம் நீக்கப்பட்டு, தற்காலிக மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை, ராணுவம் இந்த வீட்டைக் கைப்பற்றியபோது கண்ணிவெடி முதலிய அச்சத்தின் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் நுழைந்து இருக்கலாம். அதனால், பெரும்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனினும் சேதங்கள் எல்லாம் மராமத்து செய்யப்பட்டு கீழே சிவப்புச் சிமென்ட் தரைகளுடன் இன்று அந்த வீடு காட்சி அளிக்கிறது.

p19a.jpg

இப்போது ஃபேன், ஏ.சி. முதலான வசதிகள் இல்லை. ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் அங்கு வாழ்ந்திருக்க இயலாது. கீழ்த்தளத்தில் இருந்து, அவசியமானால் தப்பிச் செல்ல சுரங்க வழி ஒன்றும் உள்ளது. இப்போது அது கம்பியால் மூடப்பட்டு உள்ளது. ஏனோ அதிக பவருடன் உள்ள விளக்குகள் போடப்படவில்லை. அந்தச் சற்றே மங்கலான ஒளியில் நாங்கள் வைத்திருந்த சாதாரணக் கைக் கேமராவால் கூடியவரை எல்லாவற்றையும் படம் எடுத்துக் கொண்டோம்.

வசதிகளைக் காட்டிலும் பாதுகாப்புக்கு முக்கி யத்துவம் அளித்துக் கட்டப்படிருந்த அந்தப் பங்கர் வீட்டைச் சுற்றிலும் ஆறு அடுக்குகளில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெய்க் காவலர்கள் நின்று பாதுகாப்பதற்கும், பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்கள் நிற்பதற்கும் வீட்டைச் சுற்றி ஆங்காங்கு ஏற்பாடுகள் இருந்தன. அவசரத்துக்குத் தப்புவதற்கான வழிகள் கடும் ஆயுதப் p19.jpgபாதுகாப்புடன் கூடிய பங்கர்கள், கிணறு, சமையற்கட்டு என்பதாக அமைக்கப்பட்ட ஒரு வலிமையான கோட்டை அது. மேலிருந்து நோட்டம் விட்டால் தெரியாதவாறு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அது அமைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் இருந்த தளங்களில் கலந்தாலோசிப்பு அறை, ஆபரேஷன் அறை, ஆயுதப் பாதுகாப்புடன் கூடிய கதவுகள் முதலிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நாங்கள் அந்த வீட்டுக்குள் இருந்தபோது ஒரு பெரிய வேடிக்கை நடந்தது. பூமிக்குக் கீழே இருந்த அந்த நான்கு அடுக்கு தளங்களில் கீழே செல்லச் செல்ல, அதுவும் அளவுக்கு அதிகமான கூட்டம் செல்லச் செல்ல ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுவிடக் கஷ்டமாக இருந்தது. நாங்கள் கீழ்த் தளத்தில் இருந்த சமயம் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிங்களத்தில் ஏதோ கத்திக்கொண்டே எல்லோரும் தாறுமாறாக மேலே ஏறத் தொடங்கினர். என்ன நடக்கிறது எனத் தெரியாமலும் ஏதும் நெரிசல் விபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்துடனும் நாங்களும் பின்தொடர்ந்தோம். ஏதோ ஒரு வகையில் மேலேறி வந்தவுடன் என்ன கத்திக்கொண்டு ஓடினார்கள் என்று தேவாவிடம் கேட்டேன். அரைகுறை சிங்களம் அறிந்த அவர் சிரித்துக் கொண்டே, 'ஒன்றுமில்லை. பிரபாகரனின் ஆவி வந்துவிட்டது... ஆவி வந்துவிட்டது எனக் கத்திக்கொண்டே ஒடினார்கள்’ என்று சொன்னார்.

சிங்களர்கள் ஆவிகளில் நம்பிக்கை உடைய வர்கள். உயிருடன் இருந்தபோது மட்டுமல்ல, 'ஆவியான’ பிறகும் கூட சிங்கள மக்களை அச்சுறுத்தக்கூடியவராகப் பிரபாகரன் இருப்பதை நினைத்துக் கொண்டே வெளியே வந்தபோது பொழுது சாய்ந்திருந்தது.

ஒட்டுச்சுட்டான், நெடுங்கேணி வழியாகப் புளியங்குளத்தை நாங்கள் அடைந்தபோது இருள் கவ்வத் தொடங்கியது. பயணக் களைப்பைக் காட்டிலும் இந்த அனுபவங்கள் ஏற்படுத்திய மனக்களைப்புதான் எங்களை அதிகம் சோர்வுறச் செய்திருந்தது.

யோ.கர்ணனுக்கு விடை சொல்லிவிட்டு வவுனியா, ஓமந்தை. மடு, மன்னார் வழியாக நாங்கள் தலைமன்னார் அடைந்தபோது இரவு மணி 10.

அடுத்த எட்டு நாட்களும் எனக்கு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டகளப்பு முதலான இடங்களில் இலக்கியக் கூட்டங் கள், அரசியல் உரையாடல்கள், சமூகப் பிரச்னைகளில் அக்கறையுள்ள நண்பர்களுடன் சந்திப்பு என்பதாகக் கழிந்தது. இந்தச் சந்திப்புகளில் பல தரப்பட்டவர்களும் இருந்தனர். யாழ் வாழ் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தவர், மலையகத்தார், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மன்னார் பகுதி கிறிஸ்துவ மீனவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கூத்துக்கலைஞர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் எனப் பல தரப்பினரும் இருந்தனர். இந்த உரையாடல்கள் போருக்குப் பிந்திய சூழலில் உருவாகியுள்ள பல்வேறு வகைப்பட்ட சிக்கல்களையும், இவற்றின் ஊடாக அங்கு எழுந்துள்ளள எதிர்பார்ப்புகளையும் விளங்கிக்கொள்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியது. இந்தச் சிக்கல்களின் முழுப் பரிமாணங்களையும் இங்குள்ள நாம் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம் என்ற கேள்வியையும் எழுப்பியது.

போருக்குப் பிந்திய ராணுவமயப்படுத்தல், நிலப் பறிப்பு, தொடரும் மனித உரிமை மீறல்கள், அரசியல் தீர்வு என்ற அம்சத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாதது, போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலவாழ்வு ஆகியவை குறித்து ஆங்காங்கே சொல்லி இருக்கிறேன். இதன்மத்தியில், கொஞ்சம் ஆறுதல் அளிக்கக்கூடியதாக எனக்குத் தோன்றியது நிலப்பறிப்பு, மதச் சின்னங்கள் தாக்கப்படுதல், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்குச் சிறிய அளவிலேனும் ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுவதுதான். திருமுறிகண்டியில் ஏற்பட்ட அப்படியான ஓர் எதிர்ப்பு குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தேன்.

இதுதவிர சம்பூர், மாதகல், இரத்தினபுரம், பொன்னகர், பரவிப்பஞ்சான், சாந்தபுரம் முதலான பகுதிகளிலும் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மன்னாரில் ராணுவம் இப்படியான ஒரு நில ஆக்கிரமிப்புக்கு முயற்சித்தபோது பெண்கள் இயக்கம் ஒன்று பெரியஅளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. சம்பூர், வலிகாமம் வடக்கு, திருமுறிகண்டி பகுதி மக்கள் நிலப்பறிப்புக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்துள்ளனர். புத்த பிக்குகள் முன்னின்று நடத்திய தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புக்கு எதிராக இலங்கை முழுவதிலும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தனர்.

வடக்குக் கிழக்கில் மட்டும் காணிகள் பதியப்பட வேண்டும் என்ற அரசு ஆணைக்கு எதிராக வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக உண்ணாவிரதம் ஒன்றும் நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட் போன்ற அமைப்புகளும் இதில் பங்குபெற்றன. சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அதே இடத்தில் மே 24 அன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

அதே நேரத்தில் பெருகிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக சிங்கள மக்களும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கி உள்ளனர். கொழும்பு ரயில் நிலையம், லிப்டன் சதுக்கம் முதலான இடங்களில் ஏதேனும் ஒரு ஆர்ப்பாட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

சிறிய அளவிலேனும் இத்தகைய எதிர்ப்புகள் உருவாவது வரவேற்கத்தக்கதாக இருக்கும். அதே நேரத்தில், கவலை அளிக்கத்தக்க சில அம்சங்களும் உள்ளன. சிங்களப் பெருந்தேசிய இன வெறிக்கு எதிராக சிறுபான்மைச் சமூகமாக உள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மத, பிரதேச அடிப்படைகளில் மேலெழுகிற சில வேறுபாடுகள்தான் அவை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முஸ்லிம் மற்றும் மன்னார் கிறிஸ்துவ மக்களிடையே ஏற்பட்டுள்ள சமீபத்திய பிளவு அவற்றில் ஒன்று.

vikatan

பேரா.அ.மார்க்சின் இலங்கை – இன்பச்சுற்றுலா – ஜூ.வி தொடரை முன் வைத்து.

Oleh: Arulezhilan

August 5, 2012

eelam-1-300x168.jpgபேரா.அ.மார்க்ஸ் இலங்கை செல்கிறார். சிவதம்பி நினைவுப் பேருரை நிகழ்த்துகிறார் என்பதை அவர் மூலமாக அறிந்த போது இதை யாரும் எதிர்த்தால் மார்க்சின் இலங்கை பயணத்திற்கு ஆதரவாக எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நல்ல வேளை தமிழகத்திலிருந்து அப்படி ஒரு எதிர்ப்பு உருவாகவில்லை என நினைக்கிறேன். இலங்கை செல்வது மார்க்சின் உரிமை இலங்கை அரசோடு இணைந்து வர்த்தக நோக்கங்களுக்காக செல்வதும், தமிழ் மக்களின் குருதியை வர்த்தக வெறிக்கான நல்வாய்ப்பாக பயன்படுத்துவோர் அவர் எவராக இருந்தாலும் அதை தடுக்கும் உரிமை நமக்கு உண்டு என்ற போதிலும். மார்க்சின் பயணம் அது போன்ற ஒன்றல்ல, இன்றைய சூழலில் நாம் ஒவ்வொன்றையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி இலங்கை சென்ற மார்க்ஸ். யாழ் வாழ் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தவர், மலையகத்தார், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மன்னார் பகுதி கிறிஸ்துவ மீனவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கூத்துக்கலைஞர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல தரப்பினரையும் சந்திக்கிறார். இது போக உரைகள், வாள் வீச்சுக்கள், பரிசுகளை வென்றவர்களுக்கு கேடயங்களை வழங்குதல், என இத்யாதி இத்யாதிகள் என எல்லாவற்றையும் முடித்து விட்டு. யாழ்பாணத்தில் அ.மார்க்ஸ் கலந்து கொண்டு தலித்தியம், தேசியம் தொடர்பாக ஆற்றிய உரையை தலித்துக்களே புறக்கணித்துள்ளனர். அக்கூட்டத்திற்கு 20 பேர் கூட வராத நிலையில் வந்திருந்தவர்களில் ஒருவர் கூட தலித் இல்லையாம். ஆனாலும் அவர் சென்னை திரும்பிய பின் முகநூலில் வெளியிட்ட படத்தில் அவர் கையில் சின்னதாக ஒரு கேமிரா இருந்தது. இலங்கை சென்ற பேராசிரியர் யாரைச் சந்தித்தார். அங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது அவரது பயணம் தொடர்பாக அவர் காட்டும் சித்திரங்களை மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஜூனியர் விகடனில் தொடர் எழுதப் போகிறார் என்பதை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஈழ விவாகரத்தில் அவரோடு நான் முரண்பட்டால் கூட அவர் கொல்லப்பட்ட மக்களின் பக்கம் நிற்பார். குறைந்த பட்சம் எல்லாம் பிடுங்கப்பட்டு நிராதரவாக வெட்ட வெளிகளில் வீசப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக எழுதுவார்.அன்றாடம் கேள்விகளுக்கிடமின்றி கொல்லப்படும் அப்பாவி தமிழ் மக்களுக்காக எழுதுவார். புலிகளை விமர்சித்து விட்டேனும் மக்கள் பிரச்சனையை எழுதினால் கூட அது நல்லது என்றுதான் நான் நினைத்தேன். இதோ அவரது தொடரின் 4- வது சேப்டர் ஜூனியர் விகடனில் / பிரபாகரனின் ஆவி! அலறிய சிங்களவர்…/ என்னும் தலைப்பில் வந்திருக்கிறது. முதல் பகுதிக்கு அவர் வைத்த தலைப்பு என்னவென்று தெரியவில்லை ஜூனியர் விகடன் வைத்த தலைப்பு…சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் .

பகுதி-1

சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் – என்னும் முதல் பகுதியில் சிங்கள இராணுவ வீரர்கள் தன்னை தடுக்காமல் சுதந்திரமாக அனுப்பியது தொடர்பாக துவங்குகிறார் இப்படி . // யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமானால் அயலுறவு அமைச்சக அனுமதி பெற வேண்டும். இப்போதும் ஓமந்தையில் ராணுவ அதிகாரிகளால் நமது பாஸ்போர்ட்கள் பரிசீலிக்கப்படுகின்றன. என்றாலும் பதிவு செய்துகொண்டு மேலே செல்வதற்கு அனுப்பி விடுகின்றனர். மன்னார், மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இந்தச் சோதனையும் செய்யப் படுவதில்லை.// ஏதோ ஒரு புரிபடாத பூமியில் போர் நடந்தது போலவும் அது பெரும் பாதிப்பை, அழிவை ஏற்படுத்தி விட்டது போன்றும் ஒரு சில வரிகளில் தொட்டுக்காட்டுகிறார், மீள் குடியேற்றம், நிவாரணம், போன்றவை நடக்கவில்லை என்பதை பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் நழுவிச் செல்கிறார் அ.மார்க்ஸ். அந்த சேப்டரின் இறுதியில், //தமிழர்களை நோக்கி ‘நீங்கள் தோல்வியடைந் தவர்கள்’ என ஒவ்வொரு கணமும் சொல்லிக்காட்டும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பயணத்தின்போது இதை எங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது!// நான் நினைக்கிறேன் முதல் சாப்டருக்கு அவர் வைத்த தலைப்பு ‘நீங்கள் தோல்வியடைந் தவர்கள்’ என்று . ஆனால் அதை ஜூனியர் விகடன் நீக்கி விட்டு தலைப்பை மட்டும் மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அதே தலைப்பை வைத்து அக்கட்டுரையை முகநூலில் வெளியிடுகிறார். நாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்றால் எப்படித் தோற்றோம். அந்த தோல்வியில் யாருக்கெல்லாம் பங்குண்டு. கிளஸ்டர் குண்டுகளை கொடுத்தவன் எவன்? கொத்துக் கொத்தாய் பாஸ்பரஸ் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது விசினார்களே அவைகளை கொடுத்தவன் எவன்? என்றல்லவா எழுதியிருக்க வேண்டும். கூடவே புலிகளையும் கடுமையாக செவுளில் அறைவது போன்று நான்கு கேள்வியை கேட்டிருக்க வேண்டமா மார்க்ஸ்? அதை எல்லாம் விட்டு விட்டு நீங்கள் தோற்றுப் போனவர்கள் என்கிற தலைப்பை வைப்பதன் மூலம் எதை உணர்த்த வருகின்றீர்கள் என்ன மாதிரியான மன நிலை இது ? ஏன் இத்தனை வன்மம்?

yarl-kootam-300x225.jpg

பகுதி-2

இரண்டாவது சாப்டருக்கு அவர் வைத்த்த தலைப்பு – இந்தியா கட்டியதாகச் சொல்லும் வீடுகள் எங்கே இருக்கிறது? இந்த தலைப்பில் இந்தியா கட்டிக் கொடுப்பதாகச் சொன்ன 50,000 வீடுகள் தொடர்பாக ஒரு பத்தியாவது எழுதுவார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த கட்டுரையிலும் இந்தியா கட்டிக் கொடுப்பதாகச் சொல்லும் வீடுகள் தொடர்பாக அவர் எழுதியிருப்பது இந்த ஒரே ஒரு வரியைத்தான் //இந்திய அரசு பெரிதாய்ச் சொல்லிக்கொள்ளும் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. // இந்த ஒரு வரியைத் தவிற வேறு எதுவுமே அந்த திட்டம் தொடர்பாக இல்லை, உண்மையில் அத்திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தமிழ் ஓன் மீடியா விடியோ ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. தவிறவும் இந்தியாவின் உதவிகள் என்பது சுத்த அயோக்கியத்தனமானது. இவர்கள் வழங்குவதாகச் சொல்லும் பொருட்களை வாங்கும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது சிங்கள இராணுவம், அவர்கள் யாரை அழைத்துச் செல்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவின் உதவிகள் கிடைக்கும். இதை எல்லாம் வளர்ந்து வரும் எழுத்தாளர் யோ. கர்ண்ணன் சொல்லவே இல்லையா மார்க்ஸ்?

அதே பகுதியில் // முல்லைத் தீவுக்குள் 2009 ஜனவரி 25-ல் இலங்கை ராணுவம் நுழைந்தது. சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் புலிகளும் முள்ளிவாய்க்கால், புது மாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிக்குள் முடங்க நேரிட்டது. தொடர்ந்த பேரழிவுகளை நாம் அறிவோம்// என்று எழுதுகிறார். ஈழத் தமிழர்களுக்கு நடந்த பேரழிவுகளை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள் மார்க்ஸ் உங்கள் தலித் முன்னணி நண்பர்கள் சொல்லியா அறிந்தீர்கள்? நாங்கள் இலங்கையில் கொத்துக் கொத்தாய் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது உங்கள் நண்பர்கள்தானே சொன்னார்கள் அங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. புலிகளின் வெற்றுக் கூச்சல் என்றல்லாவா 2009 -ல் சொன்னார்கள். அப்படுகொலைகள் பற்றி எதுவுமே எழுதாத நீங்கள் கொலை நடந்த இலங்கை சென்று வந்து //நாமறிவோம்// என்று எழுத வெட்கமாக இல்லையா?

பகுதி-3

மூன்றாவது தொடருக்கு காட்டின் நடுவே ஒரு நீச்சல் குளம் என்று தலைப்பிடுகிறார். வளர்ந்து வரும் எழுத்தாளர் யோ.கர்ணன் அவரை அடுத்து அழைத்துச் சென்றது கடற் புலிகளும் , அதன் தலைவரும் புலிகள் காலத்தில் முக்கிய பிரமுகர்களாக வந்து சென்றவர்களும் பயன்படுத்திய நீச்சல் குளத்திற்கு , வளர்ந்து வரும் எழுத்தாளர் , வளர்ந்த எழுத்தாளரை புலிகளின் நீச்சல் குளத்திற்கு அழைத்து வந்து விட்டார். கடந்த இரண்டு பகுதிகளிலும் வளரும் எழுத்தாளர் சில தன்னார்வக்குழுக்களின் மக்கள் தொண்டினை பேராசியருக்குக் காட்டுகிறார். கோழிகளும், ஆடுகளும் எப்படிச் செத்துப் போயின என்பதை விவரிக்கிறார். மக்கள் போரால் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை கண்களில் பயத்துடன் விவரிக்கிறார் அந்த வளர்ந்து வரும் எழுத்தாளர். கோழிகள், ஆடுகள் படுகொலைகளை பேராசிரியருக்கு உணர்த்திய பின்னர் புலிகளின் நீச்சல் குளத்தையும் யோ.கர்ணன் காட்டுகிறார் இப்படி,

//மிகப்பெரிய புலிகளின் முகாம் ஒன்றும், கடற்புலிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆழமான நீச்சல் குளம் ஒன்றும் அமைந்திருந்த இடம் அது. போர் விமானங்களைக் கண்காணிக்க புலிகள் அமைத்திருந்த ராடார் ஒன்று காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் முகாம் இன்று இலங்கை ராணுவத்தின் 68-ம் படைப் பிரிவுத் தளமாக மாற்றப்பட்டுள்ளது, அதிகாரிகளுக்கான மெஸ், படை வீரர்கள் பிரிவு என்றெல்லாம் அறிவிப்புப் பலகைகளுடன் மிக வசதியாக உள்ளது. சுழன்றுகொண்டிருக்கும் அந்த ராடாரைப் பார்த்தவாறே மேலே சென்றோம். அதைத் தாண்டிக் குறுகலாகச் செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் மிகப் பெரிய ட்ரில்லர்களை வைத்து ஆழமாகப் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். இதற்குச் சற்றுத் தொலைவில் மரங்கள் வெட்டப்பட்டு குழந்தைகள் பூங்கா ஒன்றும், உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு விசாலமான கேன்டீன் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. கேன்டீனை ஒட்டி இருந்த கடற்புலிகளுக்கான பயிற்சிக்குளம், நீர் அகற்றப்பட்டு காட்சியளித்தது. படிப்படியாக நான்கு தளங்களில் அமைக்கப்பட்ட அந்த நீச்சல் குளம் தண்ணீர் வரும் வழி, போகும் வழி, பயிற்சி முடித்தவர்கள் குளித்து, உடை மாற்றிச் செல்ல அறைகள் எனப் பக்காவாகக் கட்டப்பட்டு இருந்தது. மேலே கம்பிகள் வேயப்பட்டு, அவற்றின் மீது கொடிகள் பரவி வானில் இருந்து பார்க்கும்போது கீழேயுள்ள நீச்சல் குளம் தெரியாத வண்ணம் அடர்ந்த காடு என்று தோற்றம் அளிக்கும் வகையில் அதைப் புலிகள் அமைத்திருந்தனர்.இப்போது, கம்பிகளின் மீது பரவியிருந்த கொடிகள் அகற்றப்பட்டு இருந்தன. அருகில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும், ‘பயங்கரவாதிகளின் நீச்சல் குளம்’ என்று தலைப்பிட்டு விவரப்பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. 83 அடி நீளம், 22 அடி ஆழம், கடற்படைக்கு எதிரான தற்கொலைப் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென 2001-ல் கட்டப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இருந்தன. ‘உடை மாற்றுவதற்கு அறைகள் அருகில் அமைக்கப்பட்டு இருப்பதில் இருந்து, தலைமையில் இருந்தவரும் அவருக்கு நெருக்கமானவர்களும்கூட இதைப் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது’ என அந்த வாசகங்கள் முடிந்திருந்தன.//

523374_343596959048966_1827004662_n-300x225.jpg

என்று மிக நீண்ட பத்தியை நீச்சல் குளம் பற்றிய விவரணமாக எழுதுகிறார். மக்கள் படுகொலை தொடர்பாக, பாலியல் வன்முறை தொடர்பாக, கொல்லப்பட்ட பெண் போராளிகளின் முலைகள் அறுத்தெரியப்பட்டு. யோனிகள் பேனட் கத்திகளால் குதறப்பட்டது தொடர்பாக எழுதாத மார்க்ஸின் பேனா புலிகளின் நீச்சம் குளத்தைப் பார்த்து வியந்தபடியே கேண்டீனில் தின்பண்டங்களை வாங்கி இருவரும் மென்னத் துவங்கி விடுகிறது. அந்தக் கேண்டீன் பௌத்த பாசிச பயங்கரவாத இராணுவத்தால் நடத்தப்படும் கேண்டீன் என்பதை வளர்ந்து வரும் எழுத்தாளர் சொல்லியிருப்பார். கேண்டீனில் வாங்கிய தின்பண்டங்களைக் கொறித்துக் கொண்டிருந்த போது போரில் கொல்லப்பட்ட மக்களை வளர்ந்து வரும் எழுத்தாளர் நினைவு படுத்த அவர்களுக்காக மனசுக்குள்ளேயே அழுது அஞ்சலியும் செலுத்துகிறார் இப்படி //ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மரண அமைதியுடன் காட்சியளித்தது. அந்த ஊரின் சந்தை சிதைந்துகிடந்தது. கொடிய போர்க்குற்றங்களுக்கு ஆளாகி எந்த ஆதரவுமற்று நம் கண்முன் செத்து மடிந்த மக்களுக்கு மனசுக்குள் அஞ்சலி செலுத்திய வண்ணம் // என்று அழகான ஒரு நிலத்தை வர்ணிக்கிறார். மக்கள் மரணம் பற்றிய நினைவு மட்டும் இல்லாத போயிருந்தால் மிக அழகிய இடம் என்று வர்ணிக்கிறார். ஏன் நீங்க மனசுக்குள்ளயே அழலையா?

பகுதி-4

இயேசுவை சிலுவையில் அறையக் கொண்டு சென்ற நான்காவது ஸ்தலத்திற்கு வளர்ந்து வரும் எழுத்தாளர் பேராசிரியரை அழைத்துச் செல்கிறார். அந்த ஸ்தலத்திற்கு அவர் வைத்த தலைப்பு // பிரபாகரனின் ஆவி! அலறிய சிங்களவர்…// தொடரின் துவக்கத்திலேயே புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்கிறார் பேராசிரியர். அடுத்து பிரபாகரனின் பிரமாண்ட பங்கர் வீடு பற்றி அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார். வீட்டில் கார் பார்க்கிங் வசதி, ஃபேன், ஏ.சி. முதலான வசதிகள் இல்லை. ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் அங்கு வாழ்ந்திருக்க இயலாது. என்றெல்லாம் தனது அரசியல் அறிவால் பிரபாகரன் வீட்டை ஆய்ந்து //கிணறு, சமையற்கட்டு என்பதாக அமைக்கப்பட்ட ஒரு வலிமையான கோட்டை அது.// என்று தமிழ் சமூகத்திற்கு அந்த அதிகாரத்திற் கெதிரான உண்மையை அறிவிக்கிறார். மார்க்ஸ் கண்டு பிடித்த அந்த கோட்டையின் அடித்தளத்தில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட பிரபாகரனின் ஆவி வந்து விட்டதென்று சிங்களர்கள் பயந்து வெளியேறியதாகவும், // ‘ஆவியான’ பிறகும் கூட சிங்கள மக்களை அச்சுறுத்தக்கூடியவராகப் பிரபாகரன் இருப்பதை நினைத்துக் கொண்டே வெளியே வந்தபோது பொழுது சாய்ந்திருந்தது.ஒட்டுச்சுட்டான், நெடுங்கேணி வழியாகப் புளியங்குளத்தை நாங்கள் அடைந்தபோது இருள் கவ்வத் தொடங்கியது. // என்று அந்த வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு விடை கொடுத்து விட்டு……………… விடை கொடுத்து விட்டு……… நான் நினைக்கிறேன் இனி வரும் பகுதியில் விட்டுப் போன இலக்கியர்களின் பங்களிப்பை மிச்சப் பகுதியில் தொட்டுக் காட்டுவார் . அந்த வகையில் அவர் நான்கு பகுதிகளில் தன்னை அழைத்துச் சென்ற வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு விடை கொடுத்து விட்டார்.

யார் இந்த வளர்ந்து வரும் எழுத்தாளர் யோ.கர்ணன்?

முன்னாளில் புலிப் போராளிகளாக இருந்த பலரும் இன்று இலங்கை அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆட்காட்டிகளாக செயல்படுகிறார்கள். அப்படிக் காட்டிக் கொடுப்பதன் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றி சில சலுகைகளை அடைந்தவர்களும் உண்டு. முகாம்களில் வைத்து காட்டிக் கொடுக்கப்பட்ட போதிலும் இறுதிவரை பணியாமல் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களும் உண்டு. இவர்கள் பொதுவாகவே புலிகளை விமர்சிப்பதையும் தமிழர் தரப்பை விமர்சிப்பதையும் முதல் பணியாக கொண்ட போதிலும் ஒரு வார்த்தை கூட பேரினவாத அரசுக்கு எதிராகப் பேசுவதில்லை. வடக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாக இருந்த இவர்கள், கிழக்கு முஸ்லீம்களுக்கும் வடபகுதி தமிழ் மக்களுக்குமான முரண்பாட்டை கூர்மையடைச் செய்பவதெல்லாம் இவர்களின் தொடர்ச்சியான பணி. இதில் யோ,கர்ணன் போன்றோர் இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் அரசு ஆதரவாளராகத்தான் இருக்கிறார். இவர் ஏற்கனவே புலிகளை கொச்சைப்படுத்தி ஆனந்த விகடனில் இவரது கதை வந்த போது நான் வெளிப்படையாகவே கண்டித்து எழுதுதினேன். பிரபாகரனையும், அவரது மனைவி குழந்தைகளையும் மிக மிக கீழ்த்தரமாக சித்தரித்து புதுவிசை இதழில் ஒரு சிறுகதை எழுதினார். அக்கதையின் பெயர் நினைவில் இல்லை. முழுக்க முழுக்க அவர் விகடன் சிறுகதையில் கொட்டியிருந்தது புலிகள் மீதான வன்மத்தை. புதுவிசைக் கதையிலோ பிரபாகரனின் மனைவி குழந்தைகளை இழிவு படுத்தியிருந்தார். ஒரு எழுத்தாளனாக வளருவது இப்படித்தானா? இலங்கை இராணுவத்தோடும் இலங்கை அரசு ஆதரவாளர்களோடும் சேர்ந்தியங்கும். யோ கர்ணன்தான் பேராசிரியரை பயண வழித் துணைவனாக இனப்படுகொலை நடந்த ( மார்க்சின் வார்த்தையில் போர்ப்பகுதி) பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இப்படியானவர் புலிகளின் நீச்சல் குளத்தையும், புலிகளின் சித்திரவதைக் கூண்டையும், பிரபாகரனின் ஏசி வீட்டையும் காட்டாமல் கொல்லப்பட்ட காணாமல் போன மக்களையா காட்டுவார்?

ginarathanam.jpg

சரி உண்மையில் மக்களின் பிரச்சனைகளை எழுத யோ.கர்ணணின் உதவி அவசியமா? அது தேவையே இல்லை . இலங்கை அரசை எதிர்க்கும் எவரையும் இலங்கை இராணுவம் இனப்படுகொலை நடந்த பிராந்தியத்திற்குள் குறிப்பாக பாசிஸ்டுகளால் படுகொலைக்குள்ளான மக்களைச் சந்திக்க அனுமதிக்காது. இதை என்னிடம் நேரடியாகச் சொன்னவர் நிமல்கா பெர்னாண்டோ அது ஏன் ? 70- பதுகளில் சிங்கள இளைஞர்களிடையே செல்வாக்குச் செலுத்திய ஜேவிபி சிங்கள இனவாதக் கட்சியாக மாறிய பின்னர் அதிலிருந்து விலகி தனி அமைப்புத் துவங்கிய இடதுசாரியான குணரத்னத்தை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். அவரது முன்னிலை சோசலிசக் கட்சி வடக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் வேலை செய்கிறது. அவர்கள் ஒன்றும் புலிகளையோ, தனி ஈழத்தையோ ஆதரித்தவர்கள் அல்ல ஆனால் பேரினவாதிகளால் கொல்லப்பட்ட, இல்லாமல் ஆகப்பட்ட மக்களிடம் பணி செய்தவர் குணரத்னம். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டினார் என்பதற்காக குணரத்னம் கடத்தப்பட்டார். பின்னர் அவுஸ்திரேலிய அரசு தலையிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். புலிகளை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்ட் அவர் ஆனால் அதிகாரத்திற்கெதிராக பாசிசத்தின் குகைக்குள் நின்று உண்மைகளை பேச முயன்றார் என்பதற்காக அவர் கடத்தப்பட்டார். வவுனியாச் சிறையில் நிமலரூபன் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு நியாயம் கோரி குரல் கொடுப்போர் நசுக்கப்படுகிறார்கள். ஆக இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்கெதிராக எவன் ஒருவன் உண்மையைப் பேச எத்தனிக்கிறானோ அவன் கடத்திக் கொல்லப்படுவான். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கொல்லப்பட்டிருகிறார். காணாமல் போன யாரோ ஒருவரைத் தேடி ஒவ்வொரு ஈழத் தமிழ் குடும்பமும் யாரிடம் கேட்பதென்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு குடும்பத்தைச் சந்தித்திருந்தால் கூட எழுத உங்களுக்கு ஏராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களைச் சந்திப்பது அத்தனை எளிமையானதல்ல ஏனெனில் உங்களை அழைத்துச் சென்றவர்கள் அப்படி ஒன்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலைச் செய்யவில்லை.

பேராசிரியரின் தொடரை வாசித்து முடித்த பின்னர் எனக்கு தோன்றியதெல்லாம் இதுதான் வன்னிப் பெருநிலம் என்று அழைக்கப்படும் வட பகுதி நிலத்தில் சுமார் நான்கரை லட்சம் மக்கள் வசித்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இறுதிப் போருக்குப் பின்னர் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் காணவில்லை. ஆனால் கோழிகளுக்காக கண்ணீர் விடும். பேராசிரியர் மக்களை ஏதோ போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற தொனியிலேயே டீல் செய்கிறார். அந்த தொனியில் இருந்துதான் பிரபாகரன் ஆவி தொடர்பான எண்ணம் பிறக்கிறது, நொறுக்குத் தீனியை சுவைத்தபடியே படுகொலை நடந்த பூமியையும் கடக்கிறார்.

2002 -ல் குஜராத்தில் இந்துப் பாசிஸ்டுகளால் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதை இஸ்லாமியர் மீதான இந்து வெறியர்களின் தாக்குதல் என்று துல்லியமாக நாமும் சொல்கிறோம் பேராசிரியரும் சொல்கிறார். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் என்று கூட குந்தாங்குறையாக எழுதுவதில்லை. காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அத்துமீரல் என்கிறோம் பேராசிரியரின் குரலும் அழுத்தம் திருத்தமாக அப்படியே ஒலிக்கிறது. இங்கெல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் அ..மார்க்சின் குரல் ஈழம் என்று வந்தால் பம்பிப் பதுங்குகிறது. பேராசிரியர் மார்க்ஸ் இலங்கையை பௌத்தர்களுக்கான ஒரு நாடாகப் பார்க்கிறார் . வட பகுதியில் வாழும் தமிழ் மக்களை தனக்குப் பிடிக்காத தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகளாக நினைக்கிறார். சைவத்தாலும் வைணவத்தாலும் உருவாக்கப்பட்டதாக நினைக்கும் அவரது வழமையான வெறுப்பரசியலின் விளைவாக அவர் ஈழத் தமிழர்களை இந்துக்களாக பார்ப்பதும், கிழக்கு முஸ்லீம்களிடம் காட்டும் கரிசனத்தை வடபகுதி தமிழ் மக்கள் மீது காட்ட மறுப்பதாலும் வனமம் கலந்த எள்ளலாகவும் வெளிப்படுகிறது. பெரும்பான்மை அரசியல் பாசிசம் என்பது இந்தியாவில் இந்து வெறியாகவும், ஆப்கானில் முஸ்லீம் வெறியாகவும், இலங்கையில் பௌத்த வெறியாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்துக்கள் எனப்படுவோராக தமிழர்களை புரிந்து கொண்டால் கூட இலங்கையின் வட பகுதியில் அவர்கள் சிறுபான்மையினர் என்ற எண்ணமோ பார்வையோ அ.மார்க்சிடம் இல்லை. மிகவும் வறட்சியான அவரது பார்வையை பௌத்தம் மீதான பாசமும், இஸ்லாம் மீதான பற்றும் உருவாக்க அதையே தமிழ் மக்கள் மீது கொட்டுகிறார். அதுதான் அதிகாரம் சார்ந்த குரலாக ஒலிக்கிறது.

பேராசிரியரைப் பொறுத்தவரை இதை எழுதும் உரிமை அவருக்கு உண்டு. எழுதக் கூடாது என்று சொல்லவோ,. அதை ஜூனியர் விகடன் வெளியிடக்கூடாது என்றோ ஒரு ஊடகவியலாளனாக நான் சொல்ல முடியாது. ஆனால் அவர் ஈழத் தமிழர் விவாகரத்தில் அதிகாரத்திற்கெதிராக உண்மைகள் எதையும் பேசி விடவில்லை. எப்போதுமே அரசு ஆதரவாளர்களான அவரது பழைய, புதிய நண்பர்கள் மார்க்சின் குணமறிந்து தீனி போட்டிருக்கிறார்கள். அவர் அதை அனுபவித்து ருசிக்கிறார். ஈழம் தொடர்பான மார்க்சின் குரலை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பேரினவாதத்தின் கொடுங்கரங்களின் நீண்ட ரத்த வெறியில் அடுத்து பலியாகப் போகிறவர்கள் கிழக்கு முஸ்லீம்கள். அதன் ஆரம்ப குறி குணங்கள் தென்படத் துவங்கி விட்டன. இந்துக் கோவில்கள், சிறு தெய்வக் கோவில்களை இடித்து பௌத்த விஹாரைகளாக மாற்றியவர்கள் இப்போது மசூதிகளை குறிவைக்கிறார்கள். அப்போது உங்கள் குரல் என்னவாக ஒலிக்கப் போகிறது என்பதைக் காண காத்திருக்கிறேன்.

http://arulezhilan.com/?p=167

B547610_10150965259357881_1063069650_n.jpg

Ramanitharan Kandiah from Face Book.

  • தொடங்கியவர்

நாரதர், இந்த தொடரை இணைக்கும் போதே உங்களை கருத்தில் எடுத்தே இணைத்தேன். கண்டிப்பாக பதிவு இடுவீர்கள் என நம்பினேன்

அ.மார்க்ஸ் மிகத் தீவிரமாக ஈழ போரளிகளையும் ஈழப் போராட்டத்தினையும் விமர்சிப்பவர். ஆனால் இவரின் பெயரைக் கூட தெரியாமல் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர், இந்த தொடரை இணைக்கும் போதே உங்களை கருத்தில் எடுத்தே இணைத்தேன். கண்டிப்பாக பதிவு இடுவீர்கள் என நம்பினேன்

அ.மார்க்ஸ் மிகத் தீவிரமாக ஈழ போரளிகளையும் ஈழப் போராட்டத்தினையும் விமர்சிப்பவர். ஆனால் இவரின் பெயரைக் கூட தெரியாமல் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பலர்.

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மாக்ஸ்சை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் போல் உள்ளது உங்கள் கருத்து[எனக்கு அப்படித் தான் விளங்கிச்சு :) ]

  • தொடங்கியவர்

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மாக்ஸ்சை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் போல் உள்ளது உங்கள் கருத்து[எனக்கு அப்படித் தான் விளங்கிச்சு :) ]

ஒரு விதத்தில் நீங்கள் விளங்கிக் கொண்டது சரி தான் ரதி.

அ.மார்க்ஸ் எழுத்தில் விசம் வைத்து மார்க்சிசம் பேசுகின்றேன் என்ற போக்கில் மிக மோசமாக புலிகளையும் போராட்டத்தினையும் தமிழகத்திலும், இந்திய ஊடகங்களிலும் விமர்சிப்பவர். lobby செய்யக் கூடிய புத்திசீவிகளின் கூடாரத்தில் தன் கருத்துகளை விதைக்க முற்படுபவர். அவரது கருத்துகளுக்கான எதிர்வினையை ஈழத்து எழுத்தாளர்களும், தமிழ் தேசிய உணர்வாளர்களும் சரியான விதத்தில் வெளிப்படுத்துவதில்லை.

எதிரியை விட மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் தான். சிங்களம் செய்யும் படுகொலைகளுக்கான ஆதரவுத் தளத்தை அரசியல் வெளிக்கும் அப்பால் உருவாக்குபவர்கள்.

புரட்சி, போராட்டம், புண்ணாக்கு என்னவானாலும்

காற்றுள்ள போதே தூற்றிக் கொல்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]
துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் -யோ.கர்ணன்
[/size]

[size=3]

[size=4] இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்துவந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா டிவிகாரரும் தங்களின்ர தலைப்புச்செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித் தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சால்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் டிவியில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப்பேருக்கு சந்தோசமாகவும் இருந்திருக்கும். இதில இது இல்ல முக்கியம். முக்கியமான சங்கதி வேறொன்று. இவ்வளவு சங்கதிகளையும் எல்லா சனத்தையும் போலவே பிரபாகரனும் துவாரகாவும் டிவியில பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதுதான் சங்கதி. [/size][/size][size=3]

[size=4] [/size][/size][size=3]

[size=4]நீங்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்கவேண்டியதில்லை. முக்கியமாக, துவாரகா குறித்து ஏற்கனவே உலாவும் நான்குவிதமான கதைகளிற்கு அடுத்ததாக ஐந்தாவது கதையை அவிழ்த்துவிடுவதாக நினைக்கக் கூடாது. ஏற்கனவே நீங்கள் நான்கு கதைகளை அறிந்து வைத்திருக்கின்றீர்கள். இறுதி யுத்தத்தில் தப்பிய துவாரகா கனடாவில் இருக்கிறார், இலண்டனில் இருக்கிறார், ஐந்தாவது ஈழப்போரிற்காக காட்டிற்குள் தயாராகும் பிரபாகரனுடன் இருக்கிறார், யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசு காட்டிய வீடியோ என்ற கதைகள் போன்றதல்ல இது. [/size][/size]

[size=3]

[size=4] செட்டிக்குளம் ஆனந்தகுமாரசாமி முகாமின் ஞி பிரிவில் உள்ள 28வது இலக்க வீட்டிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த இருபத்தொரு இஞ்சி பனசொனிக் டிவியில இவ்வளவு விசயங்களை யும் ஆட்களுடன் ஆட்களாக குந்தியிருந்து பிரபாகரன் பார்த்துக்கொண்டிருக்கின்றார். தலையில ஒரு துவாய் போட்டு முகத்தை மறைச்சுக்கொண்டு பக்கத்தில் துவாரகா தகப்பன்காரனோட சாய்ந்து இருக்கிறா. [/size][/size]

[size=3]

[size=4] இந்த கன்றாவிகளைப் பார்த்த அன்று இரவுதான் ஆனந்தகுமாரசாமி முகாமிலிருந்து பிரபாகரன் தப்பித்தார். இதற்காக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயைச் செலவிட்டார். காசை வாங்கிக்கொண்டு ஆளை வெளியில் கொண்டு வந்தது ஒரு இராணுவப் புலனாய்வாளன். அவன் தனது மோட்டார் சைக்கிளிலேயே அவரை ஏற்றி வந்து, வவுனியா - மன்னார் வீதியிலுள்ள தனக்கு தெரிந்த ஒரு முஸ்லீம் வீட்டில் அன்றிரவு தங்கவைத்தான். அடுத்த நாள் விடியப்புறம் ஆறரைக்குப்போன மன்னார் பஸ்சை மறிச்சு, நூறு ரூபா ரிக்கற் எடுத்து மன்னார் போய் இறங்கினார். [/size][/size]

[size=3]

[size=4] இயக்கத்தின்ர சப்போட்டரான சம்மாட்டி ஒராள் இந்தியாவிலிருந்து ஐயிற்றம் கடத்திக்கொண்டு வாறவர். அவருக்கு ஐம்பதாயிரம் காசடிச்சார். அடுத்தநாள் விடிய ஆள் இராமேஸ்வரத்தில. இந்த இடத்தில உங்களுக்கு இயல்பாகவே ஒரு டவுட் வரும். உந்த நெடுமாறன் ஐயா, தம்பி இருக்கிறார் தம்பி இருக்கிறார், இப்பதான் ரெலி போன் கதைச்சவர் என்று இடைக்கிடை கதை விடுறவா. இது ரீல் என்றுதான் இவ்வளவு நாளும் நினைச்சம். உண்மை போல என. உண்மை என்னவென்றால், சீமான், வைகோ, ஐயா ஒருத்தருக்குமே பிரபாகரன் அங்க வந் தது தெரியாது. நம்பிக்கையான சொந்தக்காரப் பொடியன் ஒருவன்தான் சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போனான். [/size][/size]

[size=3]

[size=4] அடுத்தநாள் இரவு பிரபாகரனின் மிக நெருங்கிய ஒருவர் கிருஸ்ணா ஸ்வீட்டில் கொஞ்சம் ஸ்வீட் வாங்கிக் கொண்டு போய் பிரபாகரனைச் சந்திச்சார். அப்போது இரவு ஏழுமணியாக இருக்க வேண்டும். டிவியில செய்தி பார்த்துக்கொண்டு இருவரும் ஸ்வீட் சாப்பிட்டனர். அதில் தமிழ்நாட்டு காவல்துறை ஆணையாளர் சொல்லிக்கொண்டிருந்தார்- இறுதி யுத்தத்தில் தப்பிய புலிகளோ, பிரபாகரனோ தமிழகத்திற்கு வர முடியாதளவுக்கு பாதுகாப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக. [/size][/size]

[size=3]

[size=4] மூன்றாம் நாள் ஆள் தாய்லாந்தில் நின்றார். எப்பிடி எதால போன வர் என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. பணம் பாதாளம் மட்டும் பாயும். அவர் தாய்லாந்தில் நிற்கும் போதுதான் மகள் துவாரகாவை முகாமில் வைத்து ஆமி பிடித்த தகவல் வந்தது, அன்று முழுவதும் அப்செற்றாக இருந்தார். அடுத்தநாள் வெள்ளைக்காரன் இலங்கை யில் செய்துவிட்டுப்போன குழப்பங்களில் தொடங்கி முள்ளிவாய்க் கால் வரை விபரமாக எழுதி பிரித்தானியா எம்பசிக்கு ஒரு விசா விண்ணப்பம் அனுப்பினார்.[/size][/size]

[size=3]

[size=4]2 [/size][/size]

[size=3]

[size=4]இராணுவ புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் பேரில் செட்டிக்குளம் ஆனந்தகுமார சாமி முகாமிற்குப் போனார்கள். ஞி வலயத்தில் பழைய இலக்கம் 72/1. புது இலக்கம் 42. இது தான் ஸ்பொட். [/size][/size]

[size=3]

[size=4] கதவைத் தட்ட ஒரு பெண் மணி வந்தார். ஆள் பார்க்கிற துக்கு ஊரில இருக்கிற ஐயர்ப் பொம்பிளையள் மாதிரி நல்ல நிறம். ஆளை விசாரணை செய்து ஆரம்பக்கட்ட தகவல் களைப் பெற்றனர். அதாவது, அந்தக் குடும்பத்தில் ஐந்துபேர் இருந்திருக்கிறார்கள். மூத்த மகன் செல்லடியில் இறந்துவிட் டானாம். கணவன் பற்றி கேட்ட போது, சற்று தடுமாறி அவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லியிருக்கிறார். மகளது பெயர் துவாரகாவாம். [/size][/size]

[size=3]

[size=4] அனைத்தையும் உறுதி செய்தபின், துவாரகாவை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். துவாரகாவினது தம்பி மிகச் சிறுவனாக இருந்தமையினால் அவனை விட்டுவிட்டனர். வாகனம் முகாம் வாசலுக்கு வர முகாம் பொறுப்பதிகாரி ஓடிவந்து வாகனத்தை மறித்தான். இவ்வளவு நாளும் தனக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டி ருந்த துவாரகாவை பார்க்கும் ஆவலுடன் வாகனத்தினுள் எட்டிப் பார்த்தான். முகத்தைக் கைகளால் மூடியபடி ஒரு பெண்பிள்ளை அழுதுகொண்டிருந்தா. [/size][/size]

[size=3]

[size=4] வாகனம் நின்றது ஜோசப் காம்பின் நடுச் சென்ரரில். அதுதான் புலனாய்வுக்காரரின்ர இடம். அங்கயிருந்த 10க்கு10 அடி இரும்புக் கூண்டினுள் ஆளை அடைத்தார் கள். இரவுவரையும் பிள்ளை அழுத படியேயிருந்தது. இரவு ஒன்பதரைக்கு மேல்த்தான் விசாரணையை ஆரம்பித்தனர். [/size][/size]

[size=3]

[size=4] உண்மையைச் சொன்னால் இந்தக் கேஸ் இராணுவ புலனாய்வுத் துறையின் விசாரணையாளர்களிற்கு மிகுந்த சோதனையான ஒரு விடயமாகவேயிருந்தது, வெவ்வேறு விசாரணைக்குழுக்கள் வெவ்வேறு கோணங்களில் விசாரணையை நடத்திக்கொண்டிருந்த னர். எவரது விசாரணையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமில்லை. எந்தக் குறுக்குவழியினால் நுழைந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே இடத்திற்கே வரவேண்டியிருந்தது, மூன்று நான்கு கோணங்களில் விசாரணையை மேற்கொண்ட எல்லா விசாரணையாளர்களும் குறிப்பிட்ட இடத்தைக் கடக்க முடியவில்லை. [/size][/size]

[size=3]

[size=4]“பெயர்” [/size][/size]

[size=3]

[size=4]“துவாரகா” [/size][/size]

[size=3]

[size=4]“வயது” [/size][/size]

[size=3]

[size=4]“இருபத்தியிரண்டு” [/size][/size]

[size=3]

[size=4]“ம்... உமது அப்பா எங்கே? ” [/size][/size]

[size=3]

[size=4]“அவர் இஞ்சயிருந்து தப்பி வெளிநாடு போயிற்றார்” [/size][/size]

[size=3]

[size=4]“உண்மையாகவா?” [/size][/size]

[size=3]

[size=4]“ஓம்” [/size][/size]

[size=3]

[size=4]“ஸ்ஸ்.. ஆண்டவரே அப்படியெனில் நமது ஆட்கள் கைப்பற்றியது பிழையான சடலமா? சரி உமது அப்பாவை ஒத்த சாயலுடைய வேறு யாராவது அங்கிருந்தனரா..? ” [/size][/size]

[size=3]

[size=4]“தெரியாது” [/size][/size]

[size=3]

[size=4]“ம்.. நல்லது. உமது அப்பாவின் கீழிருந்தவர்கள் எத்தனை பேர்? எங்கேயவர்கள்?..” [/size][/size]

[size=3]

[size=4]“இருவர் இறந்துவிட்டனர். மூவர் முகாமிலுள்ளனர்” [/size][/size]

[size=3]

[size=4]“ஆக ஐந்து பேரா? ” [/size][/size]

[size=3]

[size=4]“ஓம்” [/size][/size]

[size=3]

[size=4]“ஐந்து பேரை வைத்தா உமது அப்பா இவ்வளவும் செய்தார்? யார் அவர்கள்? என்னென்ன வேலை செய்தனர்?” [/size][/size]

[size=3]

[size=4]“சிவமண்ணையும் மனோன்மணியக்காவும் பிழியிற, வறுக்கிற, பொரிக்கிற வேலையள் செய்வினம். வசந்தி யக்கா எல்லா செக்சனையும் ஒன்றாக்கிற வேலை செய்வா, குமார் அண்ணை வழமையாக வசந்தியக்கா வுக்கு கடலை போட்டுக்கொண்டிருப்பார். கடாபி அண்ணைதான் பைக்கற் பண்ணி ஸ்பொட்டுக்கு அனுப்புறதுஞ்.” [/size][/size]

[size=3]

[size=4] 3 [/size][/size]

[size=3]

[size=4] பிரித்தானியா எம்பசியிலயிருந்து பிரபாகரனுக்கு அவசரமாக ஒரு கடிதம் வந்தது, சில குழப்பங்களைத் தீர்க்குமாறு அதில் கேட்கப்பட்டிருந்தது. முக்கியமாக பெயர்க் குழப்பம். க்ஷி.பிரபாகரன் என சுருக்கமாக குறிக்கப்பட்டிருந்த பெயரை வாசிக்கும்போது வீரப் பிள்ளை பிரபாகரன் என வருகிறது. அவரது சரியான பெயர் வீரப் பிள்ளை பிரபாகரனா அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனா என்றும், நோர்வே அல்லது எரித்திரியா போன்ற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோராமல் பிரித்தானியாவை தேர்வு செய்தமைக்கு ஏதேனும் விசேடக் காரணங்கள் இருக்கின்றனவா எனக் கேட்டிருந்தனர். [/size][/size]

[size=3]

[size=4] அவர்கள் கேட்டிருந்த அத்தனை சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் மீண்டுமொரு விபரமான விண்ணப்பம் தயார் செய்து அனுப்பினார். வெள்ளைக்காரன் செய்துவிட்டுப்போன குழப்பங்களி லிருந்து ஆரம்பித்தது பிடிக்காமல் போயிருக்குமோ என நினைத்து விட்டு ஐம்பத்தாறாம் ஆண்டு கலவரத்திலிருந்து ஆரம்பித்தார். [/size][/size]

[size=3]

[size=4] 4 [/size][/size]

[size=3]

[size=4] தெடுத்தனையில முந்தி மீசை வீரப்பிள்ளை மீசை வீரப்பிள்ளை என்று ஒரு ஆள் இருந்தவர். ஆளின்ர பெயர் தெடுத்தனை கடந்து முழு வடமராட்சியிலும் பேமஸ். இதுக்கு இரண்டு காரணம். முதலாவது, அனேக தெடுத்தனையாரைப் போலவே ஆளும் பெரிய சண்டியன். இரண்டு, ஆள் வைத்திருந்த மொரிஸ் மைனர் கார். [/size][/size]

[size=3]

[size=4] மீசையரோட கொழுவிப் போட்டு யாராவது இரத்தக்காயம் படாமல் போகமுடியாது. அனேகமாக எதிராளியின்ர மூக்கைத்தான் உடைப் பார். பல்லுக்கழன்ற ஆட்களும் இருக்கினம். ஆள் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆரின்ர புதுப்படம் வந்தால் அவரின்ர மொரிஸ் மைனர் கொள்ளாத ஆட்களோட வின்சருக்கோ, சிறிதருக்கோ போவார். அந்த நேரத்து அனேக இளம்பொம்பிளையளும் வாத்தியார் ரசிகைகளாகவே இருந்தார்கள். பஞ்சவர்ணக்கலர் உடுப்போட ஒரு அரைக் கிலோ மீற்றர் தூரம் ஓடிவந்து மரத்தைச் சுத்தி வந்து பாடுறதில அப்பிடி என்னத்தைக் கண்டுதுகளோ தெரியாது. இப்பிடி எம்.ஜி.ஆர் ரசிகையான ஒருத்தியையே லவ் பண்ணி, எம்.ஜி.ஆர் பாணியிலேயே கூரை பிரிச்சு இறங்கி பெட்டையைக் கடத்திக்கொண்டுபோய், எல்லாரும் செய்யிறது மாதிரியே சன்னதி கோயிலில வைச்சு தாலி கட்டினார். [/size][/size]

[size=3]

[size=4] அது சிங்களம் மட்டும் சட்டம் வந்த நேரம். ஆரம்பத்தில் மீசை யருக்கு இதிலயெல்லாம் இன்ரஸ்ற் இருக்கயில்லை. ஆளுக்கு தமிழ் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். சிங்களம் மட்டும் சட்டம் வந்தா லும் ஒன்றுதான். துலீசணம் மட்டும் சட்டம் வந்தாலும் ஒன்றுதான். ஆனால், அவரது கூட்டாளியள் சிலருக்கு தமிழரசுக் கட்சியில நல்ல ஈடுபாடு. அவையளோட திரிஞ்சு திரிஞ்சு ஆளுக்கும் அரசியல் மெல்லப் பிடிபடுது. அந்த நேரம் பருத்தித்துறை முற்றவெளியில் நடந்த தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில, ஆர் என்ன என்று இல்லாமல், மேடையில் நின்ற அனைவருக்கும் இரத்தத் திலகமிட்டார். இப்படியாக மற்றையவர்களின் இரத்தத்தை சிந்த வைத்துக்கொண்டிருந்தவரின் இரத்தம் சிந்த ஆரம்பித்தது. [/size][/size]

[size=3]

[size=4] தலை போனாலும் பரவாயில்லை, சிங்களச் சிறீயுள்ள இலக்கத் தகட்டை காருக்குப் போடுவதில்லை என முடிவெடுத்தார். அப்ப பருத்தித்துறையிலதான் பொலீஸ் ஸ்ரேசன். இலக்கத்தகட்டில் தார் பூசியபடி மீசையரின் மொரிஸ் மைனர் கார் நெல்லியடிச் சந்தியில சுத்திக்கொண்டிருக்கும். ஒருநாள் இன்னும் கொஞ்சப்பேரைக் கூட்டிக் கொண்டு போய் நெல்லியடிச் சந்தியில நின்று போற வாற அரசாங்கப் பேருந்துகளின் இலக்கத்தகட்டிற்கு தார் பூசினார். இந்த அமளி துமளிகள் நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் மீசையருக்கு நல்ல வெறி. அன்று கள்ளுத்தவறணையில் சின்னப் பிரச்சினை. பிரச்சனைப்பட்டவரின்ர பெயரும் சிறீ. மீசையருக்கு சிங்கள சிறீதான் ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அடுத்து வந்த சில நாட்களை சிறீ மந்திகை ஆஸ்பத்திரிகையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. கடைசி மட்டும், சிறீயின் முறிந்த கை எலும்பு வெளியில் தள்ளிக் கொண்டேயிருந்தது. [/size][/size]

[size=3]

[size=4] ஆரோ ஒருத்தன் மீசையருக்கு நல்லா ஏற்றி விட்டிட்டான். இப்பிடி சிங்களச் சிறீக்கு மேலே தார் பூசிக்கொண்டு தமிழ் ஏரியாவில ஓடித் திரிஞ்சு என்ன பிரியோசனம் என. அடுத்த கிழமை இன்னும் நாலு பேரைக் கூட்டிக்கொண்டு அனுராதபுரம் போனார். கார் மதவாச்சி தாண்டயில்லை. போனதில ஒரேயொருத்தனைத்தான் குற்றுயிரும் குறையுயிருமாக எடுத்தினம். மிச்ச ஆட்களும் இல்லை. காரும் இல்லை. [/size][/size]

[size=3]

[size=4] இந்தக் காலத்தில கனபேர் இந்தச் சட்டத்தை எதிர்த்து தங்களின்ர அரசாங்க உத்தியோகத்தையும் கைவிட்டினம். தமிழ்ப் பகுதி கொந்தளிப்பாக இருந்தது. இதையெல்லாம் சின்ன ஆளாக இருந்த பிரபாகரன் பார்த்துக்கொண்டிருந்தார். ஆளுக்கு தார் பு+சப்பட்ட சிங்களச் சிறீதான் மனசுக்குள்ள நிற்குது. ஆளின்ர மாமனொருவர் வல்வெட்டித்துறையில இருந்து இந்தியாவுக்கு கடத்தல் வேலைகள் செய்யிறவர். பொடியன் ஏன் இஞ்சயிருந்து இந்தக் கன்றாவிகளைப் பார்ப்பான் என பிரபாகரனை இந்தியா கொண்டுபோய் தெரிந்த வீடொன்றில் விட்டார். தகப்பனைப் போலவே பிரபாகரனுக்கும் வாத்தியார் படமென்றால் உயிர். வாத்தியார் நடிக்கிற படங்களும் அப்பிடித்தானே. அனேகமான படங்களின்ர கதையை ஒரு வரியில் சொல்வதென்றால் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இருந்து ஆதிக்கச் சக்திகளை வீழ்த்தினார் என்றுதான் வரும். அவர் அனேக படங்களில் அணியும் சிவப்புச் சட்டைக்கும் ஒரு அர்த்தமிருப்பது மாதிரி பிரபாகரனுக்குப் பட்டது. [/size][/size]

[size=3]

[size=4] இந்தியாவில இருக்கும் போது ஆளுக்கு ஒரு லவ் வந்தது. பெட்டையின்ர பெயர் துவாரகா. நல்ல தமிழ்ப் பெயர். சொன்னால் வாய் மணக்கும். ஆளுக்கு லவ் வந்ததுக்கு முக்கிய காரணமே பெயர் தான். பெட்டைக்கும் பிரபாகரனில நல்ல பிடிப்பு. இதுக்குப் பிறகு, இலங்கையில நடக்கிற சத்தியாக்கிரகம், மறியல் செய்திகளை ஒன்றுக்கு இரண்டு தரம் வாசிக்கத் தொடங்கினார். சிங்களம் மட்டும் சட்டக் கொந்தளிப்பு கொஞ்சம் தணிய, பிரபாகரனை மீண்டும் இலங்கைக்கு கூட்டி வந்து விட்டுவிட்டனர். அந்த தமிழ்க் காதல் அற்ப ஆயுளுடன் முடிந்தது. [/size][/size]

[size=3]

[size=4] பிரபாகரன் யாழ்ப்பாணத்தில காலடி எடுத்து வைக்கும்போது, பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில வைச்சு துரையப்பாவின்ர தலையில வெடி விழுது. பிறகு கே.கே.எஸ் றோட்டில இரண்டு ஆமிக்காரர், முருங்கன் காட்டிற்குள் இன்ஸ்பெக் ரர் பஸ்தியாம்பிள்ளை என மரணங்கள் தமிழர்களை மகிழ்விக்கத் தொடங்கியது. பிரபாகரனுக்கும் இயக்கங்களோட தொடுப்பிருந்தது, தலைமறைவாக இருந்த சிவகுமாரனின் பொடியளில தொடங்கி, தாஸ், கிட்டு மட்டும் ஆட்களைத் தெரியும். நெல்லியடியில் நாலு ஆமிக்காரரைச் சுட்ட சம்பவம் அப்ப பெரிதாகக் கதைக்கப்பட்டது, டெலிக்கா வாகனத்தில போய்த்தான் வெடி வைச்சவையள். அந்த வாகனம் அன்று முழுவதும் பிரபாகரனின் வீட்டில்தான் நின்றது. கலியாணம் செய்ததுக்குப் பிறகும் இயக்கங்களோட இருந்த தொடுப்பை விடவில்லை. எப்பவும் மேலதிகமாக ஐந்து பத்துப் பேருக்கு சமைப்பதே அவரின் மனைவியின் தொழிலானது, உமா மகேஸ்வரனில தொடங்கி, தாஸ், பேபி, கிட்டு, பண்டிதர் வரை எல்லாரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்துப் போயினர். [/size][/size]

[size=3]

[size=4] பிறகு புலிகளின் கையில் முழுக் கொண்றோளும் வந்ததுக்குப் பிறகு, பிரபாகரனுக்கு ஒரு சிற்றூரவை தலைவர் போஸ்ற் கிடைச்சது. அந்த நேரம் கோயில், வாசிகசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளில் கண்டிப்பாக ஆளின் பேச்சிருக்கும். கண்ணில் தெரியும் தமிழீழம், கிழக்கு வானம் சிவக்கிறது, ஆண்ட பரம்பரை போன்ற வசனங்களை அடிக்கடி உச்சரித்தார். “போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்” என்ற ஜே.ஆரின் புகழ் பெற்ற வசனத்தை, ஜே.ஆருக்கு அடுத்ததாக தமிழர்தரப்பில் உச்சரித்ததென்றால் அது ஆளாகத் தானிருக்கும். களத்தில் காத்தான் முடிய, ஒரு நடுச்சாமத்தில் இந்த வசனத்தை உச்சரித்தார். [/size][/size]

[size=3]

[size=4] பிள்ளையளுக்கு வைச்சதெல்லாம் நல்ல நல்ல பெயர்கள். குறிப்பாக மகளுக்கு வாய் மணக்க மணக்க துவாரகா எனப் பெயரிட்டார். பின்னாளில் ஒரு மிக்சர் கொம்பனியை ஆரம்பித்து, ஐந்து வேலையாட்களுடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார். [/size][/size][size=3]

[size=4] 4 [/size][/size][size=3]

[size=4] மனிசியும், தானும் செல்லடியில் காயம்பட்டது, மகன் செத்தது, இதைவிட பல்லாயிரம் சனம் செத்தது என ஒரு பெரிய ஸ்ரோரியை எழுதிக் குடுத்தும் அவரது விசா விண்ணப்பத்தை பிரித்தானியா எம்பசிக்காரன் நிராகரித்தான். தனது பெயரை வீரப்பிள்ளை பிரபாகரன் எனக் குறிப்பிடாமல் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனக் குறிப்பிட்டிருந்தால் சிலவேளை விசா கிடைத்திருக்கலாமென எண்ணத் தலைப்பட்டார். [/size][/size][size=3]

[size=4] [/size][/size][size=3]

[size=4] தாய்லாந்தின் ஒதுக்குப்புற கிராமமொன்றில்தான் ஆள் தங்கியிருந்தவர். அன்று முழுப்போதையில் இருந்தார். இவரது அறையில் கூட இருந்த பொடியனுக்கு தெரிந்த யாரோ, ஒரு படகை ஏற்பாடு செய்திருந்தார்களாம். திடீரென கிடைத்த வாய்ப்பு. அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த அந்த படகிலிருந்த எழுபத்தி யிரண்டு பேரில் ஒருவராக இருந்தார். இடையில் அவுஸ்ரேலிய கடற்படையினர் படகை வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு போனார்கள். [/size][/size]

[size=3]

[size=4] அங்கு விசாரணை நடந்தது. எல்லோருடனும் சிடுசிடுத்துக் கொண்டிருந்த கிழட்டு வெள்ளையன் இவரது பெயரைக் கேட்டான். க்ஷி.பிரபாகரன் என்றார். அவன்திடுக்கிட்டு விறைத்து நின்றான். பிறகு, ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு கைலாகுக்காக தனது கையை நீட்டினான். [/size][/size]

[size=3]

[size=4] நயினாதீவுக்கு படகில போறது மாதிரி அந்த சீசனில அவுஸ்ரேலியாவுக்கு எங்கட ஆக்கள் சாரிசாரியாக போனார்கள். கடலில் மூழ்கி செத்தவையள் போக, எஞ்சியவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து பெருநிலப்பரப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் தொகுதியினரில் ஒருவராக பிரபாகரனுமிருந்தார். [/size][/size][size=3]

[size=4] [/size][/size][size=3]

[size=4] இந்த சந்தோசத்தை வீட்டுக்குச் சொல்ல ரெலிபோன் எடுத்தார். இதுக்கு முதல்நாள்த்தான் துவாரகாவை இராணுவம் விடுதலை செய்திருந்தது. தவறுதலாக கைது செய்து விட்டோம் என வருத்தம் வேறு தெரிவித்திருந்தார்களாம். பிள்ளை ரெலிபோனில ஒரு வசனம் கதைக்குதில்லை. அழுதுகொண்டேயிருக்குது. பிரபாகரனுக் கும் மனமுடைஞ்சுப் போயிற்றுது. அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு கதைச்சார். [/size][/size]

[size=3]

[size=4]“பிள்ளை அழாதையம்மா.. எல்லாம் சரிவந்து கெதியில உங்களையும் கூப்பிடலாமென்று நினைக்கிறன் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளம்மா..” [/size][/size]

[size=3]

[size=4] “இல்லையப்பா.. எனக்கு எங்கட நாட்டை விட்டிட்டு வர விருப்பமில்லை” [/size][/size]

[size=3]

[size=4] அவர் ஒரு நிமிசம் மௌனமாக இருந்தார். பிறகு- [/size][/size]

[size=3]

[size=4]“நாடும் மசிரும்” என்றார்.[/size][/size]

தங்களைப் புரட்ட்சியாளர்கள் போல் பாவனை செய்து கொண்டு , கருத்தியல் தளத்தில் போராட்டத்தைச் சிதைவுற வைக்கும் நுண்ணிய அரசியல் செய்பவர்கள் இவர்கள்.இவர்களை இனம் காட்டுவது வெகு கடினம். அதனை தமிழ் நாட்டில் அருள் எழிலன் போன்றோர் செய்து வருகின்றனர்.கண்ணில் இலகுவில் தெரியும் எதிரியை விட மிகவும் மோசமான எதிரிகள் இவர்கள் தான்.

ஒருவர் மனதை ஊடுருவி அறியும் பக்குவம் எனக்கில்லை.எனக்கு அருள் எழிலனை விட மார்க்கஸ் இல் மதிப்பு அதிகம் அ .மார்க்ஸ் கடைசி தனக்கென்று ஒரு கொள்கையை வைத்திருக்கின்றார் .அது மற்றவர்களுக்கு பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் விருப்பம் .

அருள் எழிலன் ஒரு சில்லறை .எமது போராட்டைதை வைத்து வயிறு பிழைக்க நினைக்கும் பல தமிழ் நாட்டு உறவுகளில் இவரும் ஒருவர் .

புலம் பெயர்ந்த தமிழனுக்கு புலிகளையும் ,அவர்தம் போராட்டத்தையும் எவர் பூசிக்கின்றார்களோ அவர்களை உலகெங்கும் ஊதுகுழல்களாக கொண்டுதிரிவதும் பின் அவர்களின்உண்மை முகம் தெரிய திட்டி தீர்ப்பதும் புதியவிடயமல்ல .

அருள் எழிலன் ஆனந்த விகடனில் பாலசிங்கத்தின் பேட்டியுடன் இவர்கள் மத்தியில் பிரபலமாகி இன்றும் பலருக்கு காதில் பூ சுற்றி வருபவர் .பாரிஸ் ஈழநாடு ஆசிரியருடன் இவர் பட்ட பிணக்குகள் ,குங்குமம் குழுமத்தில் இருந்தது எல்லாம் இவரின் மற்ற முகங்கள் .

கருணாநிதி கூப்பிட்டால் அடுத்த நாளே இவர் அவருடன் போய்விடுவார்.அப்ப இதே யாழில் வந்து வழக்கம் போல் வாய் குளிர திட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லாத காட்டில் எலிகளின் இராட்சியமாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும்[/size]

[size=3]

[size=5]கோவை வங்கி ஊழியர் சங்கக்கட்டிடத்தில் 13.6.2010 அன்று 'இலங்கை இன்று' என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் சிறப்புரை ஆற்றுகிறார் என்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. கூடவே அவரது இலங்கைப் பயண அனுபவங்கள் குறித்த கலந்துரையாடலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியோடு (சி.பி.அய்.) தொடர்புடைய 'சங்கமம்' என்ற அமைப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டணி வித்தியாசமாக இருக்கவே, சென்று பார்ப்பது என்று முடிவு செய்தேன்.[/size]

[size=5] A_Marx.jpgஅரங்கத்தில் சுமார் 40 பேர் இருந்தனர். வரவேற்புரை சடங்குகளெல்லாம் முடிந்த பிறகு அ.மார்க்ஸ் பேச எழுந்தார். உடனே கூட்டத்திலிருந்த ஒரு 15 பேர் எழுந்து “கோவை ராணுவ வாகன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் அத்துமீறல்களை ஆதரித்த, பாதிக்கப்பட்டவர்களைக் கிண்டல் செய்த அ. மார்க்ஸே பேசாதே” என்று முழக்கமிட்டனர். அ.மார்க்ஸுக்கு “ராஜபக்ஷேவின் நான்காவது சகோதரன்” என்ற பட்டமும் வழங்கினர். (அதுவரை கோவையில் அ. மார்க்ஸுக்கு “நோட்ஸ் வாத்தி” என்ற பட்டப்பெயர் மட்டும்தான் நிலவி வந்தது). “அ.மார்க்ஸ் ஒரு இலக்கியவாதியாக கூட்டம் நடத்த வரவில்லை. கொலைகார இலங்கை அரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார். எனவே அவரைத் தடுக்க எங்களுக்கு உரிமை உண்டு” என்று எதிப்பு தெரிவித்தவர்கள் கூறினர்.[/size]

[size=5] ஒரு சி.பி.அய் தோழர் எதிப்பு தெரிவித்தவர்களில் ஒருவரைப் பிடித்துத் தள்ளினார். ஒரு 20 நிமிடம் அரங்கம் அலோகல்லோலப் பட்டது. பின்பு காவல்துறை வரவழைக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அ.மாவையும் இலங்கை அரசையும் எதிர்த்து முழக்கமிட்டபடி வெளியேறினர்.[/size]

[size=5] நான் அ.மார்க்ஸ் பேச்சைக் கேட்பது என்று முடிவுசெய்தேன். என்னைப் போலவே புரட்சிகர இளைஞர் முன்னணி (பு.இ.மு.) தோழர்களும் அமர்ந்திருந்தனர்.[/size]

[size=5] அ.மார்க்ஸ் பேசத்தொடங்கினார். 'புத்தளத்திலிருந்து இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியது, காத்தான்குடியில் இஸ்லாமியர்களைக் கொன்ற‌து, இலங்கை அருந்ததியர்கள் தங்கள் வீடுகளில் பிரேமதாஸா படம் வைத்திருப்பது, பிரேமதாஸா அருந்ததியர்களுக்கு செய்த நன்மைகள், தற்போது தலித்துகள் இன்னொரு தலித்தான டக்ளஸ் தேவானந்தாவை ஆதரிப்பது(?) எப்படி, புலிகளால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள்' என்றெல்லாம் விலாவாரியாக சுமார் 1 1/2 மணிநேரம் பேசினார்.[/size]

[size=5] பின்பு கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.[/size]

[size=5] நான் எழுந்து பின்வரும் கேள்விகள் கேட்டேன்.[/size]

[size=5]1. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கும் நேரடிக் காரணமான கருணாவும் பிள்ளையானும் இன்னும் இலங்கையில்தான் இருக்கிறார்கள். இப்படுகொலைகள், அநியாயங்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பதுதானே நியாயம்? இலங்கை சென்றபோது இதை வலியுறுத்தி எங்காவது பேசினீர்களா?[/size]

[size=5]2. புலிகள் மீது அ.மார்க்ஸ் வைத்த விமர்சனங்கள் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய போராளி இயக்கங்களுக்குப் பொருந்தாதா? அப்பாவி மக்களைப் புலிகள் கொன்றார்கள் என்ற காரணத்தால் அவர்களை எதிர்ப்பதாகக் கூறும் நீங்கள், அப்பாவிப் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்த இஸ்லாமியப் போராளி இயக்கங்களை அப்படி அணுகுவீர்களா? கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அதற்கு அல்-உம்மாதான் காரணம் என்று எப்போதாவது கூறியிருக்கிறீர்களா?[/size]

[size=5]3. சிறைபிடிக்கப்பட்ட பல புலிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதும், இறந்த பெண்புலிகளின் உடல்கள் சிதைக்கப்படுவதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதும் வெளியாகியுள்ளது. ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்ற டப்ளின் டிரிபியூனலில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. நீங்கள் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இதுகுறித்துப் பேசியிருக்கிறீர்களா?[/size]

[size=5]4. ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்த காலகட்டத்தில் நீங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட இஸ்லாமியர் குறித்து ஒரு உண்மையறியும் குழு செல்லவேண்டும் என்று ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. சிபிசிஎல் (CPCL) அமைப்பை அக்குழுவில் பங்கு கொள்ள அழைத்ததாகவும் கூறுகிறார்கள். அவர்கள் அப்போதைய நிலையில் அதற்குப்பதிலாக வன்னி போர்க்களங்களில் அரசப்படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த மக்கள் குறித்து உண்மையறியச் செல்லலாம் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டதாகவும் தாங்கள் இதை உறுதியாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. (அ.மார்க்ஸ் இதை ம‌றுத்தார்.)[/size]

[size=5]5. கோவை ராணுவ வாகன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பல இயக்கத் தோழர்களும் சம்பவத்தோடு தொடர்பே இல்லாத பொதுமக்களும் போலீசாரால் கடும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். மனித உரிமைப் போராளி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் இச்சம்பவம் தொடர்பாக என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்?[/size]

[size=5]6. அந்த இராணுவ வாகனங்களில் இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்படவில்லை என்று கூறினீர்கள். ஏதாவது கள ஆய்வு செய்து இதைக் கண்டுபிடித்துச் சொன்னீர்களா? ஆம் எனில் ஏன் அந்த முடிவுகளை வெளியிடவில்லை? இல்லை எனில் ஆய்வு இல்லாமல் ஆதாரம் இல்லாமல் அப்படி சொல்வது சரியா? பேராசிரியர் பதிலளிக்க வேண்டும்.[/size]

[size=5]என் கேள்விகளைக் கேட்டுவிட்டு அமர்ந்தேன்.[/size]

[size=5]பு.இ.மு தோழர் ஒருவர் எழுந்து “சாதாரண மனிதர் ஒருவர் ‍ ஈழ ஆதரவாளர் - இலங்கையில் நீங்கள் சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்ல முடியுமா?” என்று கேட்டார்.[/size]

[size=5]கூட்டத்தில் அமைதி நிலவியது.[/size]

[size=5]பழைய படங்களில் சிவாஜி கணேசன் அடிக்கடி வேதனை, கையாலாகாத்தனம், பெரியமனிதத் தோரணை எல்லாம் கலந்த ஒரு முகபாவம் காட்டுவார். அது போன்ற ஒரு முகத்தோற்றத்தில் அ.மார்க்ஸ் வாய்திறக்காமல் உட்கார்ந்திருந்தார். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தோழர்களில் ஒருவர் அ.மா அருகில் சென்று அவர் முகத்தைக் குளோசப்பில் உற்றுப் பார்த்தார். எந்தப் பதிலும் தெரியாததால் அவரே மைக் பிடித்து பின்வரும் பதில்களை அளித்தார்.[/size]

[size=5]1. நேரம் ஆகிவிட்டதால் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.[/size]

[size=5]2. அ.மார்க்ஸின் புத்தகங்களைப் படித்து பதில் தேடிக் கொள்ளலாம்.[/size]

[size=5]இரண்டாவது பதிலைக் கேட்டு அ.மாவுக்கு என் மேல் ஏன் இத்தனை கோபம், ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்று மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.[/size]

[size=5]சிறுவயதிலிருந்தே கோனார் நோட்ஸ், உஷா கைய்ட் போன்ற நோட்ஸ்கள், கைடுகள் மீது எனக்கு அலர்ஜி உண்டு. அதே போன்று வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு அ. மார்க்ஸ் போடும் நோட்ஸ்கள் மீதும் அலர்ஜி உண்டு. சரி எனக்கு இருக்கும் நோட்ஸோபோபியா தோழர் அ. மார்க்ஸுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் அவரிடம் சில விளக்கங்கள் கேட்கத் தொடங்கினேன்.[/size]

[size=5]“மணி இப்போது 12.50 தானே ஆகிறது. நாம் இருப்பது வங்கி ஊழியர்சங்கக் கட்டிடம்தானே. கீதா ஹால் சந்திலிருக்கும் லாட்ஜுகளில்தானே நேரம் முடிந்த அடுத்த நிமிடம் பெட்டிப் படுக்கைகளை தூக்கி வெளியில் வீசி விடுவார்கள். வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் 3 மணிவரை கூட்டங்கள் நடைபெறுவதை நானே பார்த்திருக்கிறேன். அப்படியே நெருக்கடி இருந்தாலும் வெளியில் நின்றோ தேநீர் அருந்திக்கொண்டோ அவர் பதிலளித்தால்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். பு. இ. மு தோழரும் மற்ற தோழர்களும் இதை மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.[/size]

[size=5]நோட்ஸ்களைப் பொருத்தவரை மன்னிக்கவும் புத்தகங்களைப் பொருத்தவரை அ.மார்க்ஸ் புத்தகம் விற்க வரவில்லை. மேடையில்தான் பேசியிருக்கிறார். நீங்களும் கலந்துரையாடல் என்றுதான் அழைத்திருக்கிறீர்கள். இது உபன்யாசமும் அல்ல, கேட்டவுடன் பரவசமடைந்து திரும்பிச்செல்ல” என்றும் கூறினேன்.[/size]

[size=5]திரும்பவும் குளோசப், திரும்பவும் அதே முகபாவம் ....[/size]

[size=5]இப்போது இன்னொரு தோழர் தலையிட்டு கணீரென்ற குரலில் கூறினார். “தோழர் கார்க்கி அவர்களே! அவர் அவருடைய கருத்தைச் சொன்னார். நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். அதோடு விடாமல் யாரும் தன்னுடைய கருத்தை மற்றவர் மீது திணிக்க வேண்டியதில்லை. அது கருத்துச் சுதந்திரமல்ல‌”.[/size]

[size=5]நான் கூறினேன், "அ.மார்க்ஸுக்கு ஒன்றும் க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் குறைந்துவிட‌வில்லை. பிட‌ல் காஸ்ட்ரோவையும், சே குவேராவையும் கொச்சைப்ப‌டுத்தி லீனா ம‌ணிமேக‌லை எழுதிய‌ கவிதைக‌ளை ஆத‌ரித்து அவரால் பேசமுடிகிறது. அதே மார்க்சிய‌ மூல‌வ‌ர்க‌ளை த‌ங்க‌ள‌து வ‌ழிகாட்டிகளாக‌க் கொண்ட‌ தோழ‌ர்க‌ளின் கூட்ட‌த்திலும் அவரால் பேசமுடிகிறது. அ.மார்க்ஸுக்கு க‌ருத்து சுத‌ந்திர‌ம் இருப்ப‌தால்தான் இதை அவ‌ரால் செய்ய‌முடிகிறது."[/size]

[size=5]ஆனால் அதன்பின்பும் அ.மார்க்ஸ் அசையாததால், வேறு வழி இல்லாத நிலையில் கூட்டம் இனிதே சற்றேறக்குறைய முடிந்தது.[/size]

[size=5]அ மார்க்ஸ் பதிலளிக்க மறுத்ததற்கு “இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை” என்ற ஆணவம்தான் காரணம் என்றால் அவர் மெக்காலே கல்விமுறையின் அற்புதமான வார்ப்பு என்றாகிறது. அல்லது முறையான ஆய்வுகளோ தரவுகளோ இல்லாத காரணத்தால் பதிலளிக்கவில்லையென்றால் சக குடிமக்களிடம் “நான் பேசுவதைக் கேள்” என்று சொல்லும் தகுதி இல்லையென்றாகிறது.[/size]

[size=5]இது தவிர இன்னொரு காரணமும் தமிழ் உணர்வாளர்களால் சொல்லப்படுகிறது. “அ மார்க்ஸ் புலியெதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார். கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார்” என்கிறார்கள். இதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.[/size]

[size=5]இது தவிர கூட்டத்தில் நான் கேட்க அனுமதிக்கப்படாத மற்ற கேள்விகளையும் முன் வைக்கிறேன். மேற்குறிப்பிட்ட கேள்விகளோடு இவற்றுக்கும் ரிட்டயர்ட் பேராசிரியர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.[/size]

[size=5]ரிட்டயர்ட் பேராசிரியர் தான் தலித் ஆதரவாளரென்றும் இஸ்லாமியரின் காவலரென்றும் பிம்பங்களை கட்டமைக்க விரும்புகிறார்.[/size]

[size=5]1. பங்களாதேஷ் உருவாவதற்கு முன்பு லட்சக்கணக்கான அகதிகள் மேற்கு வங்காளத்துக்கு வந்தனர். உயர்சாதி அகதிகள் தங்கள் சாதியினரால் வரவேற்கப்பட்டு நல்ல இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். தலித்துகள் சட்டீஸ்கருக்கும் ஒரிசாவுக்கும் கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். 1978 தேர்தலின்போது சிபிஎம் கட்சியினர் தலித் அகதிகளுக்கு வங்காளத்தில் இடம் அளிப்பதாக பிரச்சாரம் செய்தனர். சிபிஎம் கட்சி வென்று ஜோதிபாசு தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்த உறுதிமொழியை நம்பிய பல்லாயிரம் தலித்துகள் மேற்கு வங்கத்துக்கு வந்து சுந்தரவனக்காடுகளில் உள்ள மொரிஜபி என்ற ஆளில்லாத தீவில் குடியேறினர். சிபிஎம் கட்சி மொரிஜபிப் தீவு சுந்தரவனக்காடுகள் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி, மக்கள் வெளியேறவேண்டுமென்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து எந்த ஆயுதமும் ஏந்தாமல் அமைதிவழியில் போராடிய மக்கள்மீது 1979 ஆம் ஆண்டு மே மாதம் தன் கட்சி குண்டர்களையும் போலீசையும் ஏவி பெரும் தாக்குதல் தொடுத்தது. பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். மிஞ்சியவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு படுமோசமான முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு வந்த இடங்களுக்கே திருப்பி அனுப்பட்டனர். நேரடியாக கொல்லப்பட்டவர்கள் மற்றும் முகாம்களில் நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4700க்கும் மேலிருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.[/size]

[size=5]வரலாற்றில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய படுகொலை இது. மொரிஜபித்தீவு படுகொலை அல்லது சுந்தரவனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது.[/size]

[size=5]ரிட்டயர்ட் பேராசிரியர், ஒரிஜனல் மார்க்ஸை கேவலப்படுத்தும் ஆபாசக் கவிதைகளை மேன்மைப்படுத்த சிபிஎம் கட்சியினரோடு இணைந்து போராடுகிறார். கூச்சமே இல்லாமல் அவர்களோடு மேடைகளில் வீற்றிருக்கிறார். சுந்தர வனப்படுகொலையைப் பற்றி எங்கேயும் எப்போதும் எதுவும் பேசியதில்லை. உங்களை தலித் ஆதரவாளர் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?[/size]

[size=5]2. நந்தி கிராமில் ஏழை விவசாயிகளின் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிபிஎம் பிடுங்கிக் கொடுத்தபோது பாதிப்பிற்கு ஆளானவர்களில் பலர் ஏழை இஸ்லாமிய விவசாயிகள். நீங்கள் உலகமயமாக்கலும் எஸ் இ இசட்டும் (SEZ) தலித்துகளுக்கு விடுதலை அளிக்கும் என்று இதே கோவையில் பேசினீர்கள். மேற்கு வங்கத்தில் சிபிஎம்மின் உலக மயமாக்கல் கொள்கையால் நேரடியாக பாதிப்பிற்கு ஆளான இஸ்லாமியர்களின் நிலை குறித்து வாயே திறக்கவில்லை. அப்படியானால் உங்கள் இஸ்லாமிய ஆதரவு என்பது புலிகளை ஒழிக்க ஒரு கருவி மட்டும்தானா?[/size]

[size=5]3. இயக்கங்கள் (இந்திய மாவோயிஸ்ட்டுகள், எல்டிடிஇ மட்டும்) முன்னிறுத்தும் ஆயுதப்போரட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அண்மைக்காலமாக பேசி வருகிறீர்கள். உள்நாட்டுப்போர் உருவாவதற்கான அரசியல் பொருளாதாரக் காரணிகள் குறித்து என்னவிதமான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளீர்கள்? மற்ற நோட்ஸ்களை அல்ல, களஆய்வுகளையும் ஆய்வுமுடிவுகளையும் எதிர்பார்க்கிறோம்.[/size]

[size=5]4. கோவை இராணுவ லாரி மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள் என்று அவதூறாக எழுதினீர்கள். அதை ஆதாரத்துடன் மறுத்து ச.பாலமுருகனும், இரா.முருகவேளும் எழுதியதற்குப் பிறகு, தவறான தகவலை எழுதியதற்காக எங்காவது மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தீர்களா?[/size]

[size=5]5. புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறீர்கள். ஒரு வீட்டில் நுழைந்த தீவிரவாதி, அங்கிருப்பவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கிறான். தீவிரவாதியைப் பிடிக்கவேண்டிய காவல்துறை, தீவிரவாதியையும் கொன்று, அவன் கேடயமாகப் பயன்படுத்திய பிணைக்கைதிகளையும் கொன்றால் அதை சரியென்பீர்களா?[/size]

[size=5]6.தெற்காசியாவில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்ததாகும். இதைக் கண்டிக்காதவர்கள் மனித உரிமை பற்றிப் பேச ஏதாவது தகுதியிருக்கிறதா?[/size]

[size=5]7.இலங்கையில் நுழைவதற்கு சுதந்திரமான மனித உரிமைவாதி எவரொருவருக்கும் அனுமதி மறுக்கப்படும் நிலையில் உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? இலங்கை அரசில் உங்களுக்கு இந்த செல்வாக்கு எப்படி ஏற்பட்டது?[/size]

[size=5]பேராசிரியர் இந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்றும் என் போன்றோரின் சந்தேகங்களைத் தீர்க்க உதவுவார் என்றும் எதிர்பார்க்கிறேன் [/size]

[size=5]- மு.கார்க்கி, வழக்குரைஞர், ஒருங்கிணைப்பாளர் - சமத்துவ முன்னணி ( a.garkey@gmail.com)[/size][/size]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9645&Itemid=139

  • தொடங்கியவர்

இறுதி அங்கம்

போர்க் காலத்தில் மன்னார் மாவட்​டத்தில் இருந்து புலிகளால் வெளியேற்​றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக, மன்னார்ப் பகுதி கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. கத்தோலிக்கக் கிறி ஸ்துவர்கள் அதிகம் உள்ள மன்னாரில் ஆயர் ராயப்பு யோசேப்புக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணை முதலானவற்றுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுப்பதிலும் ஆயருக்கு முக்கியப் பங்கு உண்டு.

தங்களுக்கு உரிய நிலங்களில் மீள் குடியேறுவதற்கும், மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் ஆயர் தடையாக இருக்கிறார் என்பது முஸ்லிம் தரப்பு வாதம். முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்களில் அல்லாமல் அரசாங்கக் காணிகளில் குடியேற்றப்படுகிறார்கள் என்பது ஆயர் தரப்பு வாதம். ராஜபக்‌ஷேவின் அமைச்​சரவையில் கேபினெட் அமைச்சராக உள்ளவரும், வன்னி, மன்னார் பகுதிகளில் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்து வருபவருமான ரிஷாட் பத்யுதீன், முஸ்லிம்களை அரசியல் லாபத்துக்காகத் தூண்டிவிடுகிறார் என்று கிறிஸ்துவர் தரப்பில் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின்போது மட்டும் ஏன் ஆயர் தடையாக இருக்கிறார் என்று முஸ்லிம்கள் திருப்பிக் கேட்கிறார்கள். இரு தரப்பிலும் ஆதரவுக் கூட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இந்தப் பிளவு கீழ் மட்டம் வரை புரையோடி இருப்பதை உணர முடிந்தது.

p19.jpg

இப்போது, கிழக்கு மாகாணத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழர்களின் தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்படும் 'தமிழ் தேசியக் கூட்ட​மைப்பு’ இந்த முறை தேர்தலில் பங்கேற்​கிறது. கடைசிப்போர் நேரத்தில் நடைபெற்ற சென்ற தேர்தலைக் கூட்டமைப்பு புறக்கணித்தது. எனினும், போருக்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்று ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அது தேர்தலில் பங்கேற்கிறது. ஆனால், கிழக்கு மாகாணத்தில், போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தும் உள்ளது. எனவே, முஸ்லிம்களின் ஆதரவை கூட்டமைப்பு வெளிப்படையாக வேண்டுகிறது.

இன்னொரு பக்கம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் வலுப்பெற்றுள்ள ராஜபக்‌ஷேவின் சுதந்திராக் கட்சி, தனது 'கிழக்கின் உதயம்’ முதலான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தனக்குச் சாதகமாக உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்கிறது. அப்படி வென்றால் வடக்கு கிழக்கு இணைப்புக்கும், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் என்ற கோரிக்கைக்கும் கிழக்குப் பகுதி மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்று, அது உலகத்துக்குக் காட்ட நினைக்கிறது. மருத முனையில் முஸ்லிம் இலக்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெற்ற விவாதம் ஒன்றின்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையேயான ஒற்றுமை குறித்துப் பேசினேன். தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது ஒரு நண்பர் சற்றுக் கோபமாக, 'கூட்டமைப்பு இதுவரை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து வாய் திறந்தது இல்லை. அரசியல் தீர்வு குறித்து அது அரசாங்கத்திடம் நடத்திய பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்​களுக்கு இடம் இல்லாததையும் அது கண்டிக்கவில்லை. இன்று தனித்து நின்று வெற்றி பெற இயலாததால்தான் எங்களிடம் வருகிறார்கள். எப்படி நாங்கள் அவர்களை நம்புவது?' என்றார்.

p18a.jpg

ஆனாலும் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பழைய கசப்பான அனுபவங்கள் மறந்து, பேரினவாத அரசியலுக்கு எதிரான தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்ற உணர்வு மேலோங்கி வருவதையும் உணர்ந்தேன். இந்த ஒற்றுமை கீழிருந்து உருவாக வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். முஸ்லிம்கள் மத்தியில் மாற்றங்கள் வேண்டும் என்ற நோக்குடன் சில இளைஞர் அமைப் புகள் கிழக்கில் உருவாகி உள்ளன. அமைச்சர் ஹிஸ் புல்லா போன்றவர்கள் காத்தாங்குடி முதலான முஸ்லிம் கிராமங்களின் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில் பேரீச்சை மரங்களை நட்டு இலங்கை முஸ்லிம்களை அரபுலகுடன் தொடர்புபடுத்துவதில் ஆர்வம் காட்டும் சூழலில், இவர்கள் இலங்கைச் சோனகர்களின் உள்நாட்டு வேர்களை, ஒரு வகையில் சொல்லப்போனால் தமிழ் வேர்களைத் தேடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

'நமக்கு அருகில் உள்ள எல்லாமே மாறிக்கொண்டிருக்​கின்றன. நாம் மட்டும் மாறாமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியை முஸ்லிம் சமூகத்துக்குள் எழுப்பும் இந்த இளைஞர்கள், ஈழத் தமிழ் இலக்கியவாதிகளுடன் நல்ல உறவைப் பேணுகின்றனர். மட்டகளப்பில் கவிஞர் மலர்ச் செல்வன் ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கூட்டத்தில் இரு தரப்பு இலக்கியக்காரர்களும் வெகு நாட்களுக்குப் பின் ஒன்றாகக் கூடியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார் பேராசிரியர் மௌனகுரு. ஆனால், இலக்கியத் தளத்தில் ஏற்படும் இந்த ஒற்றுமையை வரும் தேர்தல் குலைத்துவிடக் கூடாது என்றார் பேராசிரியர் சித்ரலேகா.

மதம், மொழி, சாதி அடிப்படைகளில் மக்களைத் திரட்டும் அரசியல் செயல்பாடுகளை இதுகாறும் அடை​யாளம் மறுக்கப்பட்டவர்களின் அரசியல் இருப்பை உணர்த்தும் முயற்சி என எல்லோரும் பாராட்டினோம். ஆனால், அடையாள அரசியல் இரு பக்கங்​களும் கூரானக் கத்தியைப் போன்றது என அமர்த்தியா சென் போன்றோர் எச்சரித்தும் வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டும்​போது அந்த அடையாளத்தைத் தாண்டி வேறு யாரும் தம்மிடம் வர மாட்டார்கள் என்பது உறுதியாகி விடுகிறது. இந்த நிலையில், தம்மிடம் வருபவர்களை அதிகபட்சமாக உறுதிப்படுத்தும் பொருட்டு மற்றவர்களிடம் இருந்து அவர்கள்பிரித்து நிறுத்தப்​படுகின்றனர். ஆக, அரசியல் என்பது'மற்றவர்​களுடன் வாழும் கலை’ (polity) என்பது போக, மற்றவர்​களை வெறுக்கும் செயல்பாடாக மாறிவிடுகிறது.

அரசியலின் இந்தப் பிரிக்கும் வேலைக்கு மாறாக இலக்கியமாவது நம்மை ஒன்றிணைக்கட்டும் என்றேன். அந்த வகையில் சமீபத்தில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற தமிழ் இலக்கிய மாநாடுகள் சாதி, மதம், பிரதேசம் இவற்றுக்கு அப்பால் தமிழ்பேசும் இலக்கியவாதிகளுக்கு இடையே உரையாடலை ஏற்படுத்துவதற்கு உதவியது எனவும், இதற்குத் தமிழகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு வருந்தத்தக்கது எனவும் பலர் குறிப்பிட்டனர்.

ஈழத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு​களுக்கும், தமிழகத்தில் இருந்து எழும் ஆதரவுக் குரல்களுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய இடை​வெளியைக் கிட்டத்தட்ட எல்லோரும் சுட்டிக் காட்டினர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் அதுவே முக்கியக் கேள்வியாக இருந்தது. 'நீங்கள் சொல்கிற இடைவெளி இருப்பது உண்மைதான். ஆனால், உங்கள் பிரச்னைகளில் தமிழக மக்களும் கட்சிகளும் கொண்டுள்ள அக்கறைகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆதரவுக் குரல்களை எல்லாம் ஒரே மாதிரியானவை எனக் கருத வேண்டாம்’ என்று சொன்னேன்.

30 ஆண்டுப் போர் அங்கு மிகப்பெரிய அவலங்​களை மட்டுமல்ல, பெரும் குழப்பங்களையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. ''இன்றும் நூற்றுக்​கணக்கான இளைஞர்கள் மாதந்தோறும் ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதாகச் சொல்லி கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விடுகிறார்கள் என்பதையும், அங்கே ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக நிற்கின்றனர் என்பதையும் இங்கு யாரும் சொல்வதில்லை. ராணுவத்தின் ஒத்துழைப்புடன் இது நடக்கிறது. ஒருவரைக் கடத்துவதற்கு இலங்கைப் பணம் ஒரு லட்சத்தை ராணுவ அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். ஊடகங்களும் இதுகுறித்து எழுதுவது இல்லை. அதேபோல, ரெடிமேட் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு எனச் சொல்லி சில நிறுவனங்கள் விளம்பரம் செய்து பெண்களை அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். ராணுவத்தினர், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர், புதிய முதலீடுகளைச் செய்துள்ள தொழில் முனைவோர் ஆகியோருக்கு இரையாகிறார்கள்' என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் தொண்டு நிறுவன ஊழியர். இப்படிப் பாதிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு உதவுவது இந்த நிறுவனத்தின் பணி.

இவர்களும் கூட உதவத்தான் முடியும். இதை அரசியலாக்க முடியாது. ராணுவம், அரசதிகாரம் எல்லாவற்றின் ஒப்புதலுடனும் நடப்பவை இவை. அரசியல் கட்சிகளும் இதுபோன்ற பிரச்னைகளைப் பேச முடிவது இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கதம்பக் கூட்டணியாக உள்ளது. அவர்களுக்குள் நடைபெறும் ஆதிக்கப் போட்டி, சமீபத்தில் நடைபெற்ற போராட்​டங்களில் வெளிப்பட்டது. உறுப்புக் கட்சிகள் சில அவற்றில் பங்கு பெறவில்லை. இந்திய அரசின் வழிகாட்டலில் செயல்படுகிறது என்ற விமர்சனமும் இதன் மீது உண்டு. தவிரவும், வடக்கில் கணிசமாக உள்ள தலித்துகள், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் கூட்டமைப்பு பெற இயலவில்லை. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்‌ஷே கூட்டணியில் உள்ள டக்ளஸ் கட்சி வடக்கில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது இந்தப் பின்னணியில்தான். 'தமிழர்’ என்ற பெரிய அடையாளத்தின் கீழ் தமிழர்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் கண்டுகொண்டு, அதற்குரிய மதிப்பளிக்காத அதே தவறைப் பழைய தமிழ்க் கட்சிகளைப் போலவே கூட்டமைப்பும் தொடர்ந்து செய்து வருகிறது.

இத்தனை அவலங்கள், சிக்கல்கள், நம்பிக்கை​யின்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தமிழர்கள் வாழ்வு உள்ளது. கொழும்பில் வாழும் தமிழ் மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் இதை வெளிப்படையாகவே சொல்கின்றனர். கௌரவமான அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே எமது கோரிக்கை என்கின்றனர். இத்தனைச் சிக்கல்களுடன்தான் ஈழத் தமிழர்களின் இன்றைய சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

ஜூனியர் விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.